உலக அழகிகள் என்று தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் உள்ளூர் அழகிகள் இடம் பெறவில்லை என்று வருந்தினால் உலக அழகியை தனிப்பட்ட முறையில் ஓரக்கண்ணால் ரசிக்காமல் இருக்கலாம். அல்லது புறக்கணிக்கலாம். உலக அழகி என்று ஒருவரை தேர்ந்தெடுத்தால் இன்னொரு குழு பிரபஞ்ச அழகி (miss universe) என்று தேர்ந்தெடுக்கிறது, அதாவது வேற்று கிரகத்தில் இருந்து ஏலியன் கூட கலந்து கொள்ளாத ஒன்றை உலக அழகிகளே கலந்து கொள்ளும் ஒன்றை பிரபஞ்ச அழகி என்று முடிசூட்டுகிறார்கள். அவரவர் டைட்டிலுக்கு ஏற்றவாறு மிஸ் யுனிவர்ஸ் முதல் மிஸ் கூவாகம் வரையில் அழகி போட்டிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலக அழகி மட்டுமே அழகி (Miss World) என்று எவரும் சொன்னால் நகைப்புக்கு இடம் தான். உலக அழகி போட்டியே தேவையற்றது என்று சொல்பவர்களின் கருத்து உலக அழகி போட்டி வேண்டும் என்று நினைப்பவர்களின் கருத்துடன் ஒத்துவராதது தான். யாரோ ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களும் போட்டிகளை நிறுத்தப் போவதில்லை. பிடிக்காதவர்கள் அதைப்பற்றி விமர்சனத்துடன் நிறுத்திக் கொள்வது அல்லது கண்டு கொள்ளமல் புறக்கணிப்பது என்பது நல்ல அனுகுமுறை.
நாலு பதிவர்கள் ஒன்று சேர்ந்து விருதுவழங்க முடிவு செய்வது என்பது அவர்கள் விருப்பம், அவர்கள் இவர்களையெல்லாம் நடுவராக வைத்திருக்கிறோம் என்று சொன்னால் தங்களுக்கு நடுவர் பொறுப்பு வேண்டாம் என்று சொல்வது நடுவர்களின் தனிப்பட்ட விருப்பு. அதில் விமர்ச்சிக்க ஒன்றும் இல்லை. அதேபோல் சிறந்த பதிவர்கள் என்ற போட்டிப் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தால் விரும்பவில்லை என்றால் 'எனக்கு விருப்பமில்லை எனது பதிவு இடம் பெறவேண்டாம்' என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்துவிடலாம். ஆனால் அது தேவையற்றது என்று பொதுக் கருத்தை சொல்லும் போது இது எனது தனிப்பட்ட கருத்து என்று சொன்னால் நல்லது, அதிகப்படியான விமர்சனங்கள் தேவையற்றது. எல்லோரும் எல்லாவற்றையும் கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்ற சூழல் வீட்டிற்குள் கூட சாத்தியம் இல்லை. தமிழின் பெயரால் இணைந்திருப்பவர்களை ஒற்றை ஐடெண்டியில் கொண்டு வருவதோ, அவர்களின் கருத்து ஒன்றுபோல் இருக்கும் என்ற எதிர்ப்பார்பு பாசிட்டீவ் சிந்தனை என்ற அளவில் தவறல்ல. ஆனால் விருப்பமில்லாதவர்ளின் கருத்தை ஒத்த கருத்தாக பெற முயற்சிப்பது, நினைப்பது ஒருவகையில் அவர்களது கருத்து சிந்தனையை கட்டாயப்ப்படுத்துவது போன்ற தவறுதான்.
இண்டி ப்ளாக் என்ற விருது நிகழ்ச்சியை கூட பலர் புறக்கணித்தனர், பலர் ஏற்றனர். அதில் பலன் பெற்றவர்களை எவரும் இதய சிம்மாசனத்தில் ஏற்றிவைத்தோ, 'பதிவுலகம் காக்க வந்த படைப்புச் செம்மல்' என்றோ கொண்டாடவில்லை. அவர்கள் கொடுத்தார்கள் இவர் வாங்கிக் கொண்டார் என்ற அளவில் தான் பதிவர்கள் நினைக்கிறார்கள். இது போன்றுதான் பதிவர்களுக்கான விருது அறிவிப்புகள். இதில் நன்மை எதுவும் இல்லை என்று கருதும் பட்சத்தில் தீமையும் இல்லை என்றே கருதலாம்.
தமிழ்மணம் அல்லது மற்ற அமைப்புகள் தாம் தேர்ந்தெடுக்கும் பதிவர்களுக்கு விருது கொடுப்பது சரியான செயலா ?
ஒரு திரட்டி தன்னிடம் பதிந்துள்ள பதிவர்களை தேர்ந்தெடுத்து ஊக்கப்படுத்தலாம் என்று நினைப்பது அந்த திரட்டியின் உரிமை. அதில் கலந்து கொள்ள விருப்பம் உடையோர் ஓகே சொல்லலாம், மற்றவர்கள் டேக் ஆப் ஆகலாம். வெரி சிம்பிள். மற்றபடி இதில் அரசியல் இருக்கலாம், அல்லது அதை வைத்து அரசியலை உருவாக்கலாம், விளம்பரம் தேடிக் கொள்ளலாம் என்று நினைப்பதும் அவரவர் சுதந்திரமே.
ஜெண்டில் மேன்ஸ் இது என்னோட தனிப்பட்ட கருத்து. சக நண்பர்கள் இது தங்களுக்கும் ஏற்புடைய ஒத்த கருத்து என்று நினைதால் நான் பொறுப்பல்ல :)))
பின்பற்றுபவர்கள்
22 டிசம்பர், 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
8 கருத்துகள்:
ஊதியாச்சா? ஹ்ம்ம், வாங்க எல்லாரும் இந்த ஜோதியில ஐக்கியமாயிரலாம்.
Amen!
///நடுவராக வைத்திருக்கிறோம் என்று சொன்னால் தங்களுக்கு நடுவர் பொறுப்பு வேண்டாம் என்று சொல்வது நடுவர்களின் தனிப்பட்ட விருப்பு. அதில் விமர்ச்சிக்க ஒன்றும் இல்லை. ///
சரிதான் அவர்கள் கருத்தை அவர்கள் சொல்கிறார்கள்!
விருது வேண்டாம் என்பவர்கள் அவர்கள் கருத்தை சொல்கிறார்கள் நாம் எல்லாம் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையே!!! ஆரோக்கியமான விமர்சனம் நல்லதே!!!
:)
விருது கொடுப்பது, வாங்கரதெல்லாம் தப்பில்லை. யார் வேணா யாருக்கு வேணா விருது கொடுக்கலாம். வாங்கிக்கரது, வாங்கிக்காததும் அவங்கவங்க தனிப்பட்ட இஷ்டம். ஆகையால், கொடுக்கரவங்கள கொடுக்க விடுங்க, வாங்கரவங்கள வாங்கிக்க விடுங்க. ஸ்ஸ்ஸ்ஸ்
//ILA(a)இளா said...
ஊதியாச்சா? ஹ்ம்ம், வாங்க எல்லாரும் இந்த ஜோதியில ஐக்கியமாயிரலாம்.
//
இளா,
ஜோதி நல்லா சுடர் விடனும் எண்ணையை நிறைய ஊற்றுங்கள்.
:)
//நாகை சிவா said...
Amen!
//
அலைக்கும் சலாம்
//SurveySan said...
:)
விருது கொடுப்பது, வாங்கரதெல்லாம் தப்பில்லை. யார் வேணா யாருக்கு வேணா விருது கொடுக்கலாம். வாங்கிக்கரது, வாங்கிக்காததும் அவங்கவங்க தனிப்பட்ட இஷ்டம். ஆகையால், கொடுக்கரவங்கள கொடுக்க விடுங்க, வாங்கரவங்கள வாங்கிக்க விடுங்க. ஸ்ஸ்ஸ்ஸ்
//
நஒபி... 'நச்சினு ஒரு பின்னூட்டம்'
:)
//குசும்பன் said...
சரிதான் அவர்கள் கருத்தை அவர்கள் சொல்கிறார்கள்!
விருது வேண்டாம் என்பவர்கள் அவர்கள் கருத்தை சொல்கிறார்கள் நாம் எல்லாம் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையே!!! ஆரோக்கியமான விமர்சனம் நல்லதே!!!
1:55 AM, December 22, 2007 //
காமடி ஆசாமி, சீர்யஸ் ஆக பின்னூட்டம் போட்டால் உண்மையான்னு சந்தேகம் வந்துடும். இங்கே வரலை.
உங்க பின்னூட்டம் 'நச்'தான்.
:) நன்றி.
கருத்துரையிடுக