பின்பற்றுபவர்கள்

18 டிசம்பர், 2007

நஒக: ஆண்கள் மட்டும் தானா ?

'இன்னும் அரைமணி நேரத்திற்குள் எப்படியும் ஏர்போர்ட் போய்ச் சேர்ந்துவிட முடியும் ... காரணம் அன்று ஞாயிற்றுக் கிழமைதான். சீரான போக்குவரத்து இருக்கிறது ... இன்னும் பலவாறு எண்ணங்களுடன்...சென்னை நந்தனம் பகுதியை நெருங்கியதும்... போக்குவரத்து விளக்கில் சிகப்பு நிறம் வர காரை நிறுத்த வேண்டியதாகிவிட்டது திவ்யாவிற்கு. காரின் பின் இருக்கைப் பக்கம் பார்த்தாள்,

தூக்கக் கலக்கத்தில் எழுப்பியதால் பின் சீட்டில் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான் மூன்று வயது மகன் .

வலது பக்க கண்ணாடி வழியாக பார்த்தாள்... பக்கத்துக் காரில் அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியுற்றாள். அவன் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான் பக்கத்தில் நான்கு வயது பெண் குழந்தை...அவனது குடும்பமாகத்தான் இருக்கும்... அவன் வேறு யாருமல்ல...

*******

ஐந்து ஆண்டுகளுக்கு முன்

'டிஜிட்டல் ட்ரீம்ஸ்' என்ற விசுவல் கம்யூனிகேசன் நிறுவனத்தில் விற்பனை பணியின் உதவியாளராக (சேல்ஸ் அசிஸ்டெண்ட்) திவ்யா வேலைக்குச் சேர்ந்தாள்.

அலுவலகத்தில் விற்பனைப் பிரிவின் மேலாளாரான 'நரேன்' அவளை நேர்முகம் செய்து அந்த வேலைக்கு எடுத்திருந்தான். பார்ப்பதற்கு அவ்வளவு பர்சனாலிட்டி இல்லாவிட்டாலும், உடை மற்றும் நடவடிக்கையில் ஒழுங்கை கடைபிடிப்பவனாகவே இருந்தான்.

"மிஸ் திவ்யா...உங்களுக்கான வேலை தொடர்புடைய எல்லா டீடெய்ல்ஸ் இதுல இருக்கு...எதாவது புரியவில்லை என்றால் உடனே கேளுங்க..."

"ம் சரி சார்..."

"என்னது சாரா ? ...எனக்கு அதெல்லாம் பிடிக்காது...நரேன் என்று பெயரைச் சொல்லியே கூப்பிடுங்க...பேரண்ட்ஸ் பெயர் வைத்திருப்பதே கூப்பிடுவதற்குத்தானே..."

"ம் சரி சார்..."

"மறுபடியும் சாரா ... சரி அடுத்த முறை கூப்பிடும் போது பெயரைச் சொல்லியே கூப்பிட்டு பழகுங்கள்..."

அவளைவிட ஐந்து வயதாக அதிகம் இருக்கும் என்று நினைத்தாள்...இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்பதும் பிறகு தெரிந்தது

பத்து நாள் சென்று,

"மிஸ்டர் நரேன்....நான் அனுப்பிய கொட்டேசனில் ஒரு மிஸ்டேக்...க்வாண்டிட்டி தப்பாக எண்டர் பண்ணிட்டேன்...வெர்ரி சாரி"

"கொஞ்சம் கவனாமாக இருங்க...நான் பார்த்து சரி பண்ணி அனுப்பி இருக்கிறேன்...பரவாயில்லை...அடுத்து அடுத்து இருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்...போஸ்ட் வெரிபிகேசன் மிக முக்கியம்...தப்பாக இருந்தால் ஆர்டர் கைக்கு வராது..."

"கவனம் எடுத்துக் கொள்கிறேன் மிஸ்டர் நரேன்..."

"மிஸ்டர் கூட வேண்டாம் ... நரேன் என்று சொன்னால் போதும்...நமெல்லாம் ஒரே நிறுவனத்தில் ஒரு குடும்பமாக இருக்கிறோம்"

"ஓகே நரேன்..." சிரித்துக் கொண்டே சொன்னாள்

அவனது அணுகு முறை அவளுக்கு பிடித்திருந்தது..முன்பு வேலை பார்த்த இடத்தில் கொட்டேசனில் ஒரு சின்ன தவறு செய்திருந்தாள் கூட இவளது மேலாளர் இவளை அழவைத்துப் பார்த்ததையும் ... நரேன் நடந்து கொள்வதையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் மகிழ்வாக இருந்தது. ஒரு மேலாளரைப் போன்று இல்லாமல் நட்புடன் அவன் நடந்து கொள்ளும் விதம்...உணவு இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என செல்லச் செல்ல அவளுக்குள் அவன் நிறைந்துவிட்டான்.

'ஒரு ஆண் தான் சொல்லனும்... என்று எதிர்பார்க்கனுமா...என்னை அவருக்கு பிடித்து இருக்கு...எனக்கு அவரை...' மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அவன் விடுப்பு எடுத்தால் கூட சோர்ந்து போகும் நிலைக்கு அவனை நினைக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதை அவன் விடுப்பு எடுத்த அன்று தெரிந்து கொண்டாள்.

மறுநாள் காலையில்,

இன்னிக்கு எப்படியும் அவரிடம் தன் விருப்பத்தை முந்திக் கொண்டு வெளிப்படையாக சொல்லிவிடவேண்டியதுதான் என்று முடிவெடுத்தாள்.

வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் படபடப்பாக இருந்தது...அவன் அன்று கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தான், ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அவனது அறைக்குள் சென்று விட்டான்.

30 நிமிடங்கள் கடந்ததும் இண்டர்காமில் அழைத்தான்.

நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அவன் எதிரில் அமர்ந்தாள்

"திவ்யா...யாரிகிட்டேயும் இதுவரை சொல்லவில்லை"

'.....' உள்ளுக்குள் நடுக்கத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்

"உங்களிடம் தான் முதலில்... சொல்கிறேன்..."

"பலர் என்னுடன் வேலை பார்த்திருக்கிறார்கள்..."

"........"

"... கொஞ்சம் சகஜமாக பேசினால் கூட ... அவர்களிடம் வழிவதாகவும்... தப்பாக நினைச்சிடுறாங்க... நீங்க கிரேட்..."

'......'

'இந்தாங்க இன்விட்டேசன்...அடுத்த மாதம் திருமணம்...அப்பா அம்மா மற்றும் குடும்பத்தை கூட்டிவந்துவிடுங்கள்...முடிந்தால் உங்க வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழ் கொடுக்கிறேன்...'

உள்ளுக்குள் பிரளயம் நடந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளமால்

'கங்கிராட்ஸ் நரேன்.......' அவனுக்கு கைகுலுக்கிவிட்டு வெளியே வந்தாள்.'

அந்த உணர்வில் இருந்து விடுபட நினைத்தவளாக... அதன்பிற்கு அவளுக்கு அங்கு வேலை செய்யவிருப்பம் இல்லை ... எதோ காரணங்களைச் சொல்லி வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டாள்.

*********
கார் ஹாரன்ங்கள் பலமாக அடிக்க நினைவில் இருந்து மீண்டவள் மீண்டும் வலப்பக்கம் பார்த்தாள். அவனது கார் அங்கு இல்லை.

பின் சீட்டில் இருந்து குரல்...

"அம்மா...அம்மா....அப்பா இன்னேரம் ப்ளைட்டில் இருந்து இறங்கி நமக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாரா ?"

கண்விழித்து மழலைக் குரலில் கேட்டான் நரேன்.

பின்குறிப்பு : கதையில் வரும் பாத்திரங்கள், நந்தனம் சிக்னல், அலுவலகம்... கார் மற்றும் எல்லாம் கற்பனையே.

12 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

//
பின்குறிப்பு : கதையில் வரும் பாத்திரங்கள், நந்தனம் சிக்னல், அலுவலகம்... கார் மற்றும் எல்லாம் கற்பனையே.
//
புரியல்ல... தயவுசெய்து விளக்கவும்..
நந்தன்ம் சிக்னல் கற்பனையா??? அப்படின்னா நந்தனத்துல சிக்னலே இல்லையா??????

:))))

TBCD சொன்னது…

போன தடவை நான் போனது போது..சிக்னல் இருந்தது...அப்போ கற்பனை என்று சொன்னது கப்சா..

நரேனுக்கு ஆபிசியலாக இன்னோர் பேர் இருக்கு...அது தான்..கோவி. கண்ணன்

SurveySan சொன்னது…

பயங்கரமா ஏதோ போட்டு உடைப்பீங்கன்னு பாத்தா, ஒண்ணுமே பிரீலியே?

;)

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
பயங்கரமா ஏதோ போட்டு உடைப்பீங்கன்னு பாத்தா, ஒண்ணுமே பிரீலியே?

;)
//

அந்த கதையின் கடைசி சொல் எது என்று பார்த்திருந்தால் புரிந்திருக்கும்.
பொதுவாக ஆண்கள் தான் காதலியின் பெயரை மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு வைப்பார்களாமே.
:)

SurveySan சொன்னது…

//பொதுவாக ஆண்கள் தான் காதலியின் பெயரை மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு வைப்பார்களாமே.//

ஓஹோ. இப்ப புரிஞ்சது.

நான் ஏதோ, குட்டி நரேன் தான் வளந்து மேனேஜராயிட்டானோன்னு ஒரு பெரிய முடிச்சா போட்டுட்டேன். :)

TBCD சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிறைய கதை படிக்கிறதன் விளைவு....????????


//* SurveySan said...
பயங்கரமா ஏதோ போட்டு உடைப்பீங்கன்னு பாத்தா, ஒண்ணுமே பிரீலியே?

;)

1:21 PM, December 18, 2007

SurveySan said...
//பொதுவாக ஆண்கள் தான் காதலியின் பெயரை மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு வைப்பார்களாமே.//

ஓஹோ. இப்ப புரிஞ்சது.

நான் ஏதோ, குட்டி நரேன் தான் வளந்து மேனேஜராயிட்டானோன்னு ஒரு பெரிய முடிச்சா போட்டுட்டேன். :)*//

நாகை சிவா சொன்னது…

முயல் குட்டி வெளியே வந்துடுச்சா

மங்களூர் சிவா சொன்னது…

//
ஜெகதீசன் said...
//
பின்குறிப்பு : கதையில் வரும் பாத்திரங்கள், நந்தனம் சிக்னல், அலுவலகம்... கார் மற்றும் எல்லாம் கற்பனையே.
//
புரியல்ல... தயவுசெய்து விளக்கவும்..
நந்தன்ம் சிக்னல் கற்பனையா??? அப்படின்னா நந்தனத்துல சிக்னலே இல்லையா??????

:))))

நச் நச் நச் நச்

மங்களூர் சிவா சொன்னது…

//
TBCD said...

நரேனுக்கு ஆபிசியலாக இன்னோர் பேர் இருக்கு...அது தான்..கோவி. கண்ணன்

//
அவ்வ்வ் சொல்லவே இல்ல!!

மங்களூர் சிவா சொன்னது…

அப்புறம் 'முக்கியமான' டயலாக் இந்த கதைல இல்லை ரொம்ப 'சப்'னு இருந்திச்சு!!!!

ILA (a) இளா சொன்னது…

கோவி, ந.ஒ.க. பிடித்த கதைகளில் இந்தக் கதை முதன்மையாக எனக்குத் தெரிகிறது. அருமையான நடை. ஒரு வார்த்தைகூட மிகையில்லாமல் ரத்தின சுருக்கமாக அழகாக இருந்தது. என் வோட்டு இந்தக் கதைக்குத்தான்

ஜெகதீசன் சொன்னது…

//
ILA(a)இளா said...

கோவி, ந.ஒ.க. பிடித்த கதைகளில் இந்தக் கதை முதன்மையாக எனக்குத் தெரிகிறது. அருமையான நடை. ஒரு வார்த்தைகூட மிகையில்லாமல் ரத்தின சுருக்கமாக அழகாக இருந்தது. என் வோட்டு இந்தக் கதைக்குத்தான்

//
G.K,
இளா, பிறந்தநாள் அன்னைக்கு உங்கள சந்தோசப் படுத்தனும்ன்னுறதுக்காக இப்படி சொல்லுறார்...

இவர் சொல்லுறத நம்பி பரிசு கிடைச்சுருமுன்னு இதோட கதை எழுதுறத நிறுத்திடாதீங்க... நாங்க உங்க கிட்ட இன்னும் ரெம்ப எதிர்பாக்குறோம்..உங்க ரசிகர்கள்லாம் உங்க கதைகளைப் படிக்க ஆவலோட காத்துட்டு இருக்கோம்....தொடர்ந்து எழுதுங்க....
:)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்