பின்பற்றுபவர்கள்

6 டிசம்பர், 2007

அதெல்லாம் ஆம்பளைக்குத்தான் சரிவரும் ! (சிறுகதை)

"என்னங்க...இரண்டு குழந்தை ஆச்சு..."

"ஆமாம்... ஒரு பையன்... ஒரு பொண்ணு, இப்ப என்ன செய்யனும் ? மூன்றாவது வேண்டுமா ?" கண் அடித்தான்.

"ஆசையைப் பாரேன், நான் பத்து பெத்து போட ரெடி, வளர்த்து எடுக்கனும் முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்"

"ம் அதைச் சொல்லியே பயமுறுத்தாதே, வேறு என்ன சொன்னே அதைச் சொல்லு... சொன்னாதானே தெரியும் ?"

"ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுங்க !"

"பீடிகை போடாதே விசயத்துக்கு வா"

"சொன்னா கோவப்படாதிங்க"

"ம், சொல்லு"

"இரண்டாவது பெண் குழந்தைக்கு பிறகு, நாம யாரோ ஒருவர் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்ததை... இரண்டாவது பெண் குழந்தை ஆச்சு... ஒருவருசம் ஆகி போச்சு"

"ம்...புரியுது..."

"நீங்களே செய்து கொள்ளுங்கள், ஒவ்வொரு நாளும், ஏதாவது அசம்பாவிதமாக நடந்துடுமோன்னு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறேன்"

"...ம் ... பொம்பளைங்க எதையாவது நினைச்சு புலம்பிக்கிட்டு தானே இருப்பிங்க"

"ம்கும்... சந்தட்டி சாக்கில் பொம்பளைங்களை குறைசொல்லாவிட்டால் உங்களுக்கு ஆகாதே.....என் பயம் எனக்கு "

"சரி செஞ்சிடலாம், நீ ரெடியா ?"

"நான் மாட்டேன்...அதெல்லாம் ஆம்பளைக்குத்தான் சரிவரும், எனக்கு நிறைவேற்றினால் சரிவராது, எனது தோழிகள் கூட ஆம்பளைக்கு நிறைவேற்றுவது தான் சரி, மூன்று மாதத்தில் பழையபடி தலையை கோதிவிட்டு மைனார் போல நடப்பாங்க, என்று சொல்றாங்க, நான் செய்து கொண்டால் அப்பறம் வெளியில் தலையை காட்டவே வெட்க்கமாக இருக்கும்"

"இதுக்கெல்லாம் வெட்கப்படலாமா ? "

"ஒரு பெண்ணாக இருந்தால் உங்களுக்கு புரியும், அழகான கூந்தல் உள்ள எந்த பெண்ணும் தன் கூந்தலை இழக்க முன்வரமாட்டாள்..."

"உனக்கு மொட்டை அடித்தால் ... எனக்கே உன்னை பார்க்கப் பிடிக்காதுதான்"

"அப்பாடா...இப்போதாவது புரிகிறதே... கணவன் - மனைவி பேசுவதை ஒட்டுக் கேட்கிறவர்களுக்கு புரியனுமே, கு.க என்று நினைத்துட போறாங்க ...விளக்கமாக சொல்லுங்க பார்ப்போம்..."

"இதுவும் கு.க தான் அதாவது குட்டிக் கதை ... இரண்டாவது பெண் குழந்தை பிறந்தால் யாரோ ஒருவருக்கு மொட்டை போடுவதாக, குல தெய்வத்துக்கு வேண்டிக் கொண்டதை, நானே நிறைவேற்றிக் கொள்கிறேன்"

"அப்பாடா...உங்களுக்கு மொட்டை போட்டால் 'சிவாஜி த பாஸ்' மாதிரியே இருப்பிங்க"

"க்கும், இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை, இனியாவது தெய்வகுத்தம் வந்து அசம்பாவிதம் நடக்கும் என்று புலம்பாமல் இருந்தால் சரி...எப்பவும் மணிபர்ஸ்க்கு நடக்கும் மோசடிக்கு மாற்றாக இப்போ என் தலையை கொடுக்கிறேன்"

"சரிங்க...அப்படியே நம்ம பொண்ணுக்கும் முதல் மொட்டை போட்டு வந்துடுவோம்"

----------

பின்குறிப்பு : இது போட்டிக்கு அல்ல.

23 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

//போட்டிக்கு அல்ல//

அப்ப அடுத்து..... சீக்கிரமே உங்களுக்கு மொட்டைதானா? :-)))))

ஜெகதீசன் சொன்னது…

இப்படியெல்லாம் கணவன் - மனைவி பேசுறத ஒட்டுக் கேட்டு கதை எழுதுறது நல்லா இல்லை...
:))

மணியன் சொன்னது…

//பின்குறிப்பு : இது போட்டிக்கு அல்ல.//

ஏன் ?!

நாகை சிவா சொன்னது…

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
//போட்டிக்கு அல்ல//

அப்ப அடுத்து..... சீக்கிரமே உங்களுக்கு மொட்டைதானா? :-)))))
//

துளசி அம்மா,
அதுவும் நல்லதுதான், தலைக்கு முன்பக்கம் கொஞ்சமாக ஏறிக் கொண்டே செல்கிறது. மொட்டை அடித்தால் கொஞ்சம் காலம் உதிர்வதை தள்ளிப் போடலாம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
இப்படியெல்லாம் கணவன் - மனைவி பேசுறத ஒட்டுக் கேட்டு கதை எழுதுறது நல்லா இல்லை...
:))

11:27
//

என்ன பண்ணுவது குக எழுதவேண்டும் என்று நினைத்தேன்.ஐ மீன் குட்டிக் கதை மேட்டர் ஒன்னும் சிக்கல்ல...தயவு செய்து அட்ஜெஸ்ட் பண்ணிக் கொள்ளவும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மணியன் said...
//பின்குறிப்பு : இது போட்டிக்கு அல்ல.//

ஏன் ?!
//
மணியன்,
போட்டியை கொச்சைப்படுத்திடக் கூடாதேன்னு ஒரு நல்லெண்ணம் தான்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
:)

2:35 PM, December
//

தம்பி சிவா,
மேட்டர் புரிஞ்சுதுல்ல ...!
:))

குசும்பன் சொன்னது…

ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு:)))

(தயவு செய்து என் லேட்டஸ் பதிவை படிக்கும் முன்பு இதை பப்ளிஸ் செய்யவும்:)))))

ஜெகதீசன் சொன்னது…

சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!
(நன்றி: குசும்பன்)
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு:)))

(தயவு செய்து என் லேட்டஸ் பதிவை படிக்கும் முன்பு இதை பப்ளிஸ் செய்யவும்:)))))

4:54 PM, December 06, 2007 //

இதெல்லாம் ஓவரு ஆமா சொல்லிப்புட்டேன், நான் தான் உங்களுக்கு சோதனை எலியா ?
:))

குசும்பன் சொன்னது…

ஜெகதீசன் said...
சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!
(நன்றி: குசும்பன்)
:))///

என்ன ஜெகதீசன் சூதுவாது தெரியாத இம்புட்டு நல்ல பிள்ளையா இருக்கீங்க, நன்றி இங்க சொன்னா அவரை கலாய்பது போல ஆகிவிடாது, சும்மா அப்படியே போடுங்க...

இன்னும் பல டெம்ளேட் இருக்கு:))) (உள் குத்தாக இருக்கனும்)

குசும்பன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//குசும்பன் said...
இதெல்லாம் ஓவரு ஆமா சொல்லிப்புட்டேன், நான் தான் உங்களுக்கு சோதனை எலியா ?
:))///

என்ன கோவி உங்களிடம் அப்படி எல்லாம் சோதனை செய்ய முடியுமா? ஒரு கதாசிரியர் அனுபவம் உங்க எழுத்தில் தெரியும் பொழுது!
அதுவும் இல்லாமல் என்னை குசும்பன் சார் என்று சொல்லும் ஒரே பதிவர் நீங்கதான்:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
என்ன கோவி உங்களிடம் அப்படி எல்லாம் சோதனை செய்ய முடியுமா? ஒரு கதாசிரியர் அனுபவம் உங்க எழுத்தில் தெரியும் பொழுது!
//

குசும்பன் சார்,

நம்பிட்டேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said... கோவி. கண்ணன் சார், எப்டி இவ்ள அழகாக் குட்டியாக் கத... கோவி. கண்ணன் சார், எப்டி இவ்ள அழகாக் குட்டியாக் கதை சொல்றீங்களோ..நல்ல இரண்டாவது திருப்பம்...

//

பாச மலர்,

உங்கள் பாராட்டுக்கு நன்றி, உங்கள் பின்னூட்டத்தில் மின் அஞ்சல் முகவரி இருந்ததால், நீக்கிவிட்டு வெளி இட்டு இருக்கிறேன்.

மங்களூர் சிவா சொன்னது…

ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு:)))

(தயவு செய்து குசும்பன் லேட்டஸ் பதிவை படிக்கும் முன்பு இதை பப்ளிஸ் செய்யவும்:)))))

சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!
(நன்றி: குசும்பன்)
:))
கலக்கிட்டிங்க பின்னிட்டீங்க பொறட்டீட்டிங்க
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு:)))

(தயவு செய்து குசும்பன் லேட்டஸ் பதிவை படிக்கும் முன்பு இதை பப்ளிஸ் செய்யவும்:)))))

சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!
(நன்றி: குசும்பன்)
:))
கலக்கிட்டிங்க பின்னிட்டீங்க பொறட்டீட்டிங்க
:))
//

மங்களூர் சிவா,

நீங்களும் கும்மி பார்டியாமே ?

வீரமணி இளங்கோ பதிவில் கும்மி இருந்திங்களே !

மெய்யாலுமே கும்மி பார்டிதானா ?

மங்களூர் சிவா சொன்னது…

//
வீரமணி இளங்கோ பதிவில் கும்மி இருந்திங்களே !

மெய்யாலுமே கும்மி பார்டிதானா ?
//
நான் கும்ம வேண்டும் என்றால் அந்த பதிவுக்கு தனி தகுதி வேண்டும். அப்படி அந்த தகுதி இந்த பதிவுக்கு இருக்கிறது.

வீரமணி இளங்கோ பதிவும் தனி சிறந்த பதிவு!!!

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

"கதாசிரியன் சொந்த அனுபவங்களை எழுதுவதை விட, படித்தது பார்த்தது கேட்டதை எழுதுவதில் தான் திறமை வெளிப்படும்" என்று நீங்கள் ஓரிடத்தில் சொல்லி இருக்கிறீர்கள்.
இந்தக் கதை சிறப்பாக இருக்கிறது என்று எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

ஊருக்கு முந்தி, என் டாடி குதிருக்குள் இல்லை என்பது போல், // இப்படியெல்லாம் கணவன் - மனைவி பேசுறத ஒட்டுக் கேட்டு கதை எழுதுறது நல்லா இல்லை...:)) // என்று ஜெகதீசன் குதிப்பது . . . .

RATHNESH சொன்னது…

துளசி கோபால் மேடத்தின் மனப்பூர்வமான ஆசீர்வாதத்துக்குத் தாங்கள் ஏதும் மதிப்பளிக்கப் போகிறீர்களா இல்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

"கதாசிரியன் சொந்த அனுபவங்களை எழுதுவதை விட, படித்தது பார்த்தது கேட்டதை எழுதுவதில் தான் திறமை வெளிப்படும்" என்று நீங்கள் ஓரிடத்தில் சொல்லி இருக்கிறீர்கள்.
இந்தக் கதை சிறப்பாக இருக்கிறது என்று எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.//

இரத்னேஷ்,

கதையையும் படிக்கலை, பின்னூட்டத்தையும் படிக்கலைன்னு தெரியுது, யாருமே சிறப்பாக இருக்கிறது என்று சொல்லவில்லை. எல்லோரும் கூடி நின்னு கும்மி அடிச்சிருக்காங்க, துளசி அம்மா கலாய்ச்சிருக்காங்க.

பரவாயில்லை, நான் கூட 'நட்புக்காக' பலபதிவுகளை படிக்காமல் பின்னூட்டம் போடுவதுண்டு, உங்கள் பதிவெல்லாம் படித்துவிட்டுத்தான் போடுகிறேன். இங்கே போட்டிருக்கும் பின்னூட்டமெல்லாம் நட்புக்காக, அதில் உங்கள் பின்னூட்டமும் சேர்ந்திருக்கு.
:)

//ஊருக்கு முந்தி, என் டாடி குதிருக்குள் இல்லை என்பது போல், // இப்படியெல்லாம் கணவன் - மனைவி பேசுறத ஒட்டுக் கேட்டு கதை எழுதுறது நல்லா இல்லை...:)) // என்று ஜெகதீசன் குதிப்பது . . . .
//

ஜெகதீசன் படித்துவிட்டு தான் போட்டு இருக்கிறார்.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
துளசி கோபால் மேடத்தின் மனப்பூர்வமான ஆசீர்வாதத்துக்குத் தாங்கள் ஏதும் மதிப்பளிக்கப் போகிறீர்களா இல்லையா?
//

பதிவில் சொல்லியாச்சே...

/துளசி அம்மா,
அதுவும் நல்லதுதான், தலைக்கு முன்பக்கம் கொஞ்சமாக ஏறிக் கொண்டே செல்கிறது. மொட்டை அடித்தால் கொஞ்சம் காலம் உதிர்வதை தள்ளிப் போடலாம்.
:)/

அரை பிளேடு சொன்னது…

குமுதத்தில் வரும் ஒரு பக்க கதை படிப்பது போல் இருந்தது :))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்