"என்ன வளர்த்திருக்காங்க கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை..."
கல்யாணம் ஆகி ஒரே வாரத்துல கணவன் தினேஷ் இப்படி கேட்பான்னு வித்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை, அதிர்ச்சி கலந்த வியப்புடன்
"என்னங்க என்ன சொல்றிங்க..."
"வீட்டை கழுவுறேன்னு வீடு முழுவதும் தண்ணியா நிற்குது...அம்மா வழுக்கி விழுந்தாங்கன்னா ?" கேள்வியாக பார்த்தான்
"அவள ஏண்டா திட்டுறே...நான் தான் கொஞ்ச நேரம் ஊறவைத்து திரும்ப தேய்த்து கழுவி விட்டால் தரை பளிச்சென இருக்கும்னு சொன்னேன்..."
"அம்மா...உங்களுக்கு ஒன்னும் தெரியாதும்மா....கவனக் குறைவாக விழுந்துட்டிங்கன்னா ... என்ன செய்றது...அதெல்லாம் வேண்டாம் அத்தை நானே சோப் வாட்டர்... டெட்டால் லிக்விட் போட்டு தேய்த்து கழுவுகிறேன் என்று இவ சொல்லி இருக்கனும்...இன்னேரம் தரையெல்லாம் காய்ஞ்சிருக்கும்"
அடுத்த இரு நாள் சென்றதும், காலையில்
"வித்யா...இது என்ன ?"
பயந்து கொண்டே கேள்வியாக பார்த்தாள்
"இது என்ன சட்னி வாயில வைக்க சகிக்கலை...காரம் கம்மியாக இருக்கு...உப்பு குறைவாக இருக்கு...?"
நிஜமாகவே உப்பும் காரமும் குறைவாகவே இருந்திருக்கிறது
"என்னங்க நேற்று உப்பு ஜாஸ்தின்னு சொன்னிங்க..இன்னிக்கு கம்மின்னு சொல்றிங்க..."
"அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றியா...நீயே நாக்குல தொட்டுவச்சு பாரு.."
"டேய் அவளை ஏண்டா எப்போ பார்த்தாலும் குறை சொல்லிக்கிட்டே இருக்கே...நான் வயுறு கடுப்பாக இருக்கு காரம் கம்மியாக வையுன்னு சொன்னேன்..காரம் கம்மியாக இருக்கிறதால உப்பு கம்மியாக இருப்பதாக தெரியும்..."
"மருமகளுக்கு சப்போர்டா...என்னம்மோ போங்கம்மா"
********
இரவு 10:30 மணிக்கு அவன் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தும் பார்க்காதுபோல் வந்து முதுகுபக்கத்தைக் காட்டியபடி படுத்துக் கொண்டாள்
மெல்ல நெருங்கிய தினேஷ், அவள் முதுகை அசைத்து
"ஏய் வித்யா எம்மேல கோபமா ?"
சோகமாக அவனை ஏறிட்டு பார்த்துவிட்டு
"உங்களுக்கு இராத்திரி ஆனாதான் நான் ஒருத்தி இருப்பதே ஞாபகம் வரும்....கல்யாணம் ஆன 10 நாளைக்குள்ள உங்களுக்கு நான் கசந்துட்டேனா ?"
"இல்லே வித்யா..."
"பொய் சொல்லாதிங்க...எதைச் செஞ்சாலும் எதாவது ஒரு குறை சொல்லிக் கிட்டே இருக்கிங்க..." வருவதற்கு தயாரான அழுகையுடன் கோபம் காட்டினாள்
பக்கத்தில் இருந்த ஸ்விட்சை அழுத்தி..அறையின் வெளிச்சத்தைக் குறைக்க...இரவு விளக்கை மட்டும் போட்டுவிட்டு....மெதுவாக பேசு என்று அவளது வாயைப் பொத்திவிட்டு...மிக குறைவான குரலில்.. அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே
"வித்யா...எங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு முந்தி நானும் அம்மாவும் மட்டும் தான் இருந்தோம் அது உனக்கும் எல்லோருக்குமே தெரியும்...அக்கம்பக்கத்து அம்மாவோட செட் பெண்கள் எல்லாம்...ஒரு மருமக வந்துட்டா அப்பறம் மூலையில் தான் உட்காரனும் .. உன் மகன் உன்னை கண்டுக்க மாட்டான் னு சொல்லி சொல்லி வச்சிருந்தாங்க...அதை அம்மா ஒண்ணும் பெருசா எடுத்துக்கல...
"........" அவன் பேசுவதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்
"...இருந்தாலும் திடிரென்று அவங்க மேல இருக்கிற கவனம் குறைஞ்சு போச்சுன்னு அவங்க நினைக்க ஆரம்பிக்கலாம்..காரணம் கல்யாண தம்பதிகள் எல்லோருக்குமே அவங்க உலகம் மட்டும் தான் அவங்களுக்கு தெரியும்...பெரியவங்களுக்கு இதெல்ல்லாம் புரியாது..என்ன எதுக்குன்னே தெரியாமல் உள்ளே உண்டாகும் அந்த வெறுமையை கோபமாக மருமக பக்கம் திருப்புவாங்க...அதுக்கு இடம் கொடுத்தா அப்பறம் மாமியார் மருமகள் பிரச்சனை விஷ்வரூபம் எடுத்துடும்..."
"...ம்..." அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்
"... அப்பறம் தனிக்குடித்தனம் போ என்று வீம்புக்கு சொல்லுவாங்க..அவங்களால தனியா இருக்கிறது கஷ்டம் ... தனிமை இன்னும் வெறுப்பை வரவழைச்சிடும்... அதுக்குதான் நான் உன் மேல் பிடிப்பு இல்லாதது போல் அவங்க காதில, பார்வையில விழறமாதிரி நடந்து கொண்டேன்... அப்பெல்லாம் அவங்க உனக்கு எவ்வளவு சப்போர்டாக விட்டுக் கொடுக்காமல் இருக்காங்க ...புரிஞ்சிக்க ப்ளீஸ்"
அவன் பேச பேச உணர்வலைகள் மாறி மாறி வந்து அவனுடைய பெரும்தன்மையும், பொறுப்புணர்வையும் நினைத்து ....அவன் உள்ளங்கையில் தன் விரலால் கோலமிட்டுக் கொண்டே...
"சாரிங்க...இது எனக்கு புரியலைங்க.."
"நான் உங்கிட்ட சொல்லிட்டே அதுபோல் நடந்திருப்பேன்..நடத்துறது நாடகம் என்று தெரிந்த நீ 'களுக்' என்று சிரித்து காட்டிவிட்டால்... அப்பறம் அவர்களை ஏமாத்துவதாக தவறாக நினைத்துடுவாங்க...ஒரு இரண்டு மாசம் ஆனால் அப்பறம் இதெல்லாம் தேவைப்படாது...நம்ம இருவர் நடவடிக்கையின் மேல் உள்ள கவனம் குறைந்துவிடும்... ஒருவருசத்துல ...பேத்தியோ...பேரனோ பிறந்தால் அது கூடவே பொழுதை ஓட்டிடுவாங்க ..."
வித்யா வெட்கப்பட...
அதற்கு மேல் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது போர்வைக்கே கேட்டு இருக்காது... நமக்கு ஏன் அவ்வளவு அந்தரங்கமெல்லாம் ?
*****************
அடுத்த நாள் காலையில் குளியல் அறையில் இருந்து அவன் குரல்
"ஒரு வெந்நீர் கலக்கி கூட வைக்கத் தெரியலையே... உங்க வீட்டில் நிஜமாகவே மகாராணியாகத்தான் இருந்தியோ...?"
"என்னடா காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா அவளை கரிச்சு கொட்ட..." -ஹாலில் இருந்து அம்மா
சமையல் அறையில் இருந்த வித்யா சுற்றிலும் முற்றிலும் பார்த்து 'களுக்' என்று சிரித்துக் கொண்டு குளியலைறைக்குள் சென்றாள். எங்கு கிள்ளினாள் என்று தெரியவில்லை.
"ஆ...அம்மாடி...." என்று கத்தினேன்
"தினேஷ்...என்னடா ஆச்சு...?" பதட்டத்துடன் அம்மாவின் குரல்
"ஒண்ணும் இல்லைம்மா....வெந்நீர் பதமாக இருக்கான்னு பார்த்தேன் ...ரொம்ப சூடு கையை சுட்டுக்கிட்டேன்... நீங்க பதறாதிங்க..."
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
28 கருத்துகள்:
வரவர பையனுங்க(!!)தான் ரொம்ப உஷாரா இருக்காங்க போல:-))))
//துளசி கோபால் said...
வரவர பையனுங்க(!!)தான் ரொம்ப உஷாரா இருக்காங்க போல:-))))
//
ஆமாம்மா,
அப்பறம் இரண்டு பக்கமும் மண்டையிடி வாங்கி அனாசின் விளம்பர மாடலாக மாறிடுவாங்களே. எல்லாம் முன் எச்சரிக்கைதான்.
:)
கதை நல்லா இருக்கு....
:)
மறுநாள் வித்யா தன் அம்மாவுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்: "என்னம்மா, இப்படி இடமாப் பார்த்துக் கொடுத்திட்ட. உன் மாப்பிள்ளை நம்பகமானவர் இல்லைம்மா. கல்யாணம் ஆகி ஒரு வாரத்தில் தன் அம்மாவை ஏமாத்த இப்படில்லாம் நாடகம் ஆடறவர் என்னை ஏமாத்த மொத்த லைஃப்லயும் எத்தனை நாடகம் ஆடுவார். நான் எத்தனையைம்மா கண்காணிச்சிட்டிருக்க முடியும்? நம்பகமான ஆம்பளையே கிடைக்கலியாம்மா?" விம்மித் தேம்பி அழுவதைக் கட்டுப் படுத்த முடியவில்லை அவளால். . . .
//RATHNESH said...

RATHNESH ஏன் ஏன் ?
பெண்கள் மீது இப்படி ஒரு 'கொல' வெறி :)
கண்டிப்பாக நீங்கள் ஆண்களுக்கு எதிராக கருத்து சொல்லவில்லை என்று புரிகிறது.
:)))
//ஜெகதீசன் said...
கதை நல்லா இருக்கு....
:)
//
அச்சச்சோ...அடல்ட்ஸ் கதையை படிச்சிட்டுங்களா ?
சட்னிக்கு காரம் பத்தலைனு தினேஷ் திட்டும் போது... ஆமாடா இட்லிகூட கல்லு மாதிரி இருக்கு நல்லா திட்டுனு சைடுல இருந்து பதில் வராம இருந்தா சரி!
இதில் 'நச்' என்ன இருக்கு?
விதிகளின் படி 'நச்' இறுதியில் தானே வரணும்?
பாதியிலியே சொல்லிட்டப்புறம் 'நச்' எஃபெக்ட் வரலை சாமி!
:))
ம்ம்ம்ம். நெக்ஸ்ட் கதை நாளைக்கு பார்க்கலாம்!
:))
இதுல 'நச்' மீட்டர் கம்மி.
அப்படியே, தொபுக்கடீர்னு விழர மாதிரி எஃபெக்டு வரணும் ;)
மறுநாள் காத்தால ஹீரோ எழுந்து அம்மாவ தேடறான். டி.வி மேல ஒரு கடுதாசி இருக்கு.
"மகனே, என்னடா நீ, எதுக்கு எடுத்தாலும் உன் பொண்டாட்டிய இப்படி திட்டர. பொண்ணுங்கள வேலைக்காரி மாதிரி நடத்தறியே. வெக்கமா இல்ல உனக்கு? நான் உன்ன இவ்வளவு மட்டமாவா வளத்துருக்கேன். இனி உன் கூட இருக்க மாட்டேன். நான் எங்கயோ போறேன். என்ன தேடாத... "
:)
// RATHNESH ஏன் ஏன் ?
பெண்கள் மீது இப்படி ஒரு 'கொல' வெறி :)
கண்டிப்பாக நீங்கள் ஆண்களுக்கு எதிராக கருத்து சொல்லவில்லை என்று புரிகிறது.//
சரியான புரிதலுக்குப் பாராட்டுக்கள்.
வித்யாவுக்கு அந்த சதி பிடிக்கவில்லை என்றால் மாமியாரிடம் தானே சொல்லி இருப்பாள்? அம்மாவிடம் சொல்வது எதனால்? கட்டிக் கொடுத்த இடத்தில் தான் சந்தோஷமாக இருப்பதாக பிறந்த வீட்டில் நினைத்து நிம்மதி அடைந்து விடக் கூடாது. அவர்கள் எப்போதும் தன் மகளைப் பற்றிய கவலையில் டெண்டர் ஹூக்கிலேயே இருக்க வேண்டும். மாமியாரும் தனக்காக இரக்கப்படவேண்டும்; புருஷன், தான் கேட்காமலேயே வாலண்டரி சர்வீஸ் செய்யும் 'கே' ஆக ஏற்கெனவே அமைந்து விட்டான். ஆனால் சந்தோஷத்தை வெளிக்காட்டி விட்டால் இவ்வளவு அதரவும் போய் விடும் எனவே ரெடியாகக் கண்ணீர். . .
நச் கதையோ இல்லையோ; ஆழமான கதை.
பெண்களை பெண்களாக அவர்களுடைய இயல்புகளுடன் ஒப்புக் கொண்டு ரசிப்பவனுக்கா 'கொல'வெறி என்கிறீர்கள்? அவளைக் கண்ணே கலைமானே நிலவே மலரே என்று (அவள் எதுவெல்லாம் இல்லையோ; அல்லது அவளாக இல்லாமல் எதுவாக எல்லாம் இருந்தால் இவனுக்கு சுகமோ அவையாக மட்டுமே) உருவகித்துச் சொல்பவன் தான் 'கொலைஞன்' என்பது என் கருத்து.
Oh I came to a wrong post.
Rathnesh Kalakkunga!!
//கருப்பன்/Karuppan said...
சட்னிக்கு காரம் பத்தலைனு தினேஷ் திட்டும் போது... ஆமாடா இட்லிகூட கல்லு மாதிரி இருக்கு நல்லா திட்டுனு சைடுல இருந்து பதில் வராம இருந்தா சரி!
//
கருப்பன் சார்,
அப்படியெல்லாம் வந்தால் அப்பறம் சாப்பாட்டுலயோ, தலையிலேயோ கல்லு விழுந்துடாதா?
:)
//VSK said...
இதில் 'நச்' என்ன இருக்கு?
விதிகளின் படி 'நச்' இறுதியில் தானே வரணும்?
பாதியிலியே சொல்லிட்டப்புறம் 'நச்' எஃபெக்ட் வரலை சாமி!
:))
ம்ம்ம்ம். நெக்ஸ்ட் கதை நாளைக்கு பார்க்கலாம்!
:))
//
வீஎஸ்கே ஐயா,
இதெல்லாம் நச் போட்டிக்கு அல்ல. அப்படி என்றால் லிங்கி இருப்பேன். சொம்மா வெளம்பரம் தான். தலைப்பை பார்த்திங்கதானே. போட்ட உடனேயே 5 நிமிசத்தில் 15 பேர் ஆன்லைன் காட்டிச்சு.
:)
//VSK said...
இதில் 'நச்' என்ன இருக்கு?
விதிகளின் படி 'நச்' இறுதியில் தானே வரணும்?
பாதியிலியே சொல்லிட்டப்புறம் 'நச்' எஃபெக்ட் வரலை சாமி!
:))
ம்ம்ம்ம். நெக்ஸ்ட் கதை நாளைக்கு பார்க்கலாம்!
:))//
சாமியே சரணம் ஐயப்பா...கேட்க மறந்துட்டேன். தலைப்பில் எச்சரிக்கை கொடுத்தும் பதிவை படிச்சுட்டு கமெண்ட் வேறு ? ஐயப்பனுக்கு மாலை போட்டிருப்பதாக வேறு யாரிடமும் சொல்லவில்லை தானே ? நானும் சொல்ல மாட்டேன். ரகசியம்...கசியாது.
:)
//SurveySan said...
இதுல 'நச்' மீட்டர் கம்மி.
அப்படியே, தொபுக்கடீர்னு விழர மாதிரி எஃபெக்டு வரணும் ;)
மறுநாள் காத்தால ஹீரோ எழுந்து அம்மாவ தேடறான். டி.வி மேல ஒரு கடுதாசி இருக்கு.
"மகனே, என்னடா நீ, எதுக்கு எடுத்தாலும் உன் பொண்டாட்டிய இப்படி திட்டர. பொண்ணுங்கள வேலைக்காரி மாதிரி நடத்தறியே. வெக்கமா இல்ல உனக்கு? நான் உன்ன இவ்வளவு மட்டமாவா வளத்துருக்கேன். இனி உன் கூட இருக்க மாட்டேன். நான் எங்கயோ போறேன். என்ன தேடாத... "
:)
//
சர்வேசன்,
இதுதல் நச் மேட்டரே தலைப்புதான். பதிவை படிச்சு முடித்ததும்...முடிவு தொடர்பு இல்லாமல் இருக்கும், அது மனதில் ஏற்படும் நச் திருப்பம் தானே.
இந்த கதை போட்டிக்கு எழுதவில்லை.
//RATHNESH said...
சரியான புரிதலுக்குப் பாராட்டுக்கள்.
வித்யாவுக்கு அந்த சதி பிடிக்கவில்லை என்றால் மாமியாரிடம் தானே சொல்லி இருப்பாள்? அம்மாவிடம் சொல்வது எதனால்? கட்டிக் கொடுத்த இடத்தில் தான் சந்தோஷமாக இருப்பதாக பிறந்த வீட்டில் நினைத்து நிம்மதி அடைந்து விடக் கூடாது. அவர்கள் எப்போதும் தன் மகளைப் பற்றிய கவலையில் டெண்டர் ஹூக்கிலேயே இருக்க வேண்டும். மாமியாரும் தனக்காக இரக்கப்படவேண்டும்; புருஷன், தான் கேட்காமலேயே வாலண்டரி சர்வீஸ் செய்யும் 'கே' ஆக ஏற்கெனவே அமைந்து விட்டான். ஆனால் சந்தோஷத்தை வெளிக்காட்டி விட்டால் இவ்வளவு அதரவும் போய் விடும் எனவே ரெடியாகக் கண்ணீர். . .
//
RATHNESH,
இப்படி வெளக்கமாக சொன்ன பிறகு தான் பெண்களை நீங்கள் எந்த அளவு புரிஞ்சு வச்சிருக்கிங்கன்னு தெரியுது. யாரும் உங்களை ஏமாற்ற முடியது.
:)
அண்ணி பாவம் ... உங்க கிட்ட எப்படி சமாளிக்கிறாங்களோ.
//மங்களூர் சிவா said...
Oh I came to a wrong post.
Rathnesh Kalakkunga!!
//
சிவா,
வழக்கமாக வரும் 'எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான்' டயலாக்கை இதுல வைக்க முடியல...அதுனால உங்களுக்கு சலிப்பாக இருக்கும். என்ன செய்றது கதையில் வர்றவங்க திருமணமானவங்க... அதுல அப்படி சொல்லி இருந்தால் கதை அப்பறம் நீதிமன்றத்தில் தான் முடியும்.
:)
//
சிவா,
வழக்கமாக வரும் 'எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் தான்' டயலாக்கை இதுல வைக்க முடியல...அதுனால உங்களுக்கு சலிப்பாக இருக்கும்.
//
pulse அப்பிடியே பக்காவா தெரிஞ்சி வெச்சிருக்கீங்க!!!
இப்பிடி சொல்லி சொல்லியே என்னைய 'காலி' பன்னிடுங்க!!!!
//
கதையில் வர்றவங்க திருமணமானவங்க... அதுல அப்படி சொல்லி இருந்தால் கதை அப்பறம் நீதிமன்றத்தில் தான் முடியும்.
:)
//
வாய்தா மேல வாய்தா வாங்க வேண்டியதுதான்!!!
என்ன இருந்தாலும் நீங்க அந்த 'பஞ்ச் லைன்' வைக்காதது பெரும் குற்றம்தான்! குற்றம்தான்!! குற்றம்தான்!!! என சுத்தியல் தரமாக (எவ்ளோ நாளைக்குதான் ஆணித்தரமாவே சொல்லறது ஒரு சேஞ்சுக்கு) சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
//மங்களூர் சிவா said...
வாய்தா மேல வாய்தா வாங்க வேண்டியதுதான்!!!//
அண்ணே புரியுதுண்ணே,
சமீபத்தில் 'பாய்ஸ்' படம் க்ளைமாக்ஸ் காட்சியில் விவேக் சொல்லும் வசனத்தை கேட்டு வந்திருக்கிறீர்கள்.
:)
//மங்களூர் சிவா said...
pulse அப்பிடியே பக்காவா தெரிஞ்சி வெச்சிருக்கீங்க!!!
இப்பிடி சொல்லி சொல்லியே என்னைய 'காலி' பன்னிடுங்க!!!!
//
சிவா,
நாளைக்கு கதையே உங்களை வச்சித்தான்.
:)
//மங்களூர் சிவா said...
pulse அப்பிடியே பக்காவா தெரிஞ்சி வெச்சிருக்கீங்க!!!
இப்பிடி சொல்லி சொல்லியே என்னைய 'காலி' பன்னிடுங்க!!!!
//
சிவா,
நாளைக்கு கதையே உங்களை வச்சித்தான்.
:)
//
கோவி.கண்ணன் said...
சிவா,
நாளைக்கு கதையே உங்களை வச்சித்தான்.
:)
//
எங்கய்யா போய்ட்டீக 'பாடி கார்டுகளா' இவரை ரவுண்டு கட்டுங்கய்யா!!!!!!!
//
கோவி.கண்ணன் said...
//ஜெகதீசன் said...
கதை நல்லா இருக்கு....
:)
//
அச்சச்சோ...அடல்ட்ஸ் கதையை படிச்சிட்டுங்களா ?
//
ம்க்கும்... எனக்கு இந்த மே மாதத்திலேயே 18வயது முடிந்து 19 ஸ்டார்ட் ஆயிடுச்சு... நானும் அடல்ட் தான்....
:P
RATHNESH ஏன் ஏன் ?
பொய்மையும் வாய்மையிடத்து. நல்லதுக்குன்னா பொய் சொன்னாத்தப்பில்லைன்னு நல்லாப்படிச்சவங்க 4 பேரு சொல்லிருக்காங்க. இப்பெல்லாம் பசங்க, பொண்ணுங்க எல்லாருமே உஷார்தான்
//சின்ன அம்மிணி said...
RATHNESH ஏன் ஏன் ?
பொய்மையும் வாய்மையிடத்து. நல்லதுக்குன்னா பொய் சொன்னாத்தப்பில்லைன்னு நல்லாப்படிச்சவங்க 4 பேரு சொல்லிருக்காங்க. இப்பெல்லாம் பசங்க, பொண்ணுங்க எல்லாருமே உஷார்தான்
//
சின்ன அம்மிணி,
மிக்க நன்றி, இந்த குறளைத்தான் முடிவில் போடலாம் என்று இருந்தேன். அது குடும்பநலம் என்ற பிரிவில் வராது என்பதால் போடவில்லை.
கணவனின் மனோதத்துவ ரீதியான சமாளிப்பு...good...
ரத்னேஷ் சாரின் பொய் உருவகம் உவமை பற்றிய கருத்து அபாரம்...முடிந்த்வரை..ஏன் முற்றிலும் உண்மை பரஸ்பரம் பேசிக் கொள்வதுதான் நல்லது இருவருக்கும்...
கண்ணன்,
உங்க கதைமுடிவை விட பின்னூட்டத்திலே எல்லாரும் சொன்ன நச் திருப்பம் சூப்பரா இருந்தது.
கருத்துரையிடுக