//ரஜினி சொல்கிறார் : அண்டை மாநிலங்களில் சக நடிகர்கள் சிலர் கட்சி ஆரம்பித்திருப்பதும், அதன் விளைவாக என் ரசிகர்களுக்கும் அம்மாதிரி ஆசைகள் எழுவதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்போது அரசியலில் ஈடுபடும் ஆசையுள்ளவர்கள் அவரவருக்கு விருப்பமான கட்சிகளில் சேர்ந்து பணியாற்றுங்கள்.
அதை விடுத்து, என் பெயரில் கட்சி ஆரம்பிப்பதோ, என் உருவப் படத்தை அதில் பயன்படுத்துவதோ தவறு. இதை மீறினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியலுக்கு வருமாறு என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அதேநேரம், நான் அரசியலுக்கு வர முடிவு செய்தால் அதை யாரும் தடுக்கவும் முடியாது என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
//
ரஜினி நினைத்தால் விரலசைவில் ரசிகர்களை வைத்தே கோட்டையை பிடிக்க முடியும், செய்தாரா ரஜினி ? அவர் தான் ரஜினி. தனக்கு பதவி ஆசை இல்லை என்பதை இதைவிட எளிதாக யாராலும் சொல்ல முடியுமா ? நேற்று நடிக்க ஆரம்பித்த பிஸ்கோத்து பசங்களெல்லாம் நான் தான் நாளைய முதல்வர் என்கிறார்கள், கடந்த 30 ஆண்டுகளாக திரையுலகை ஆண்டுவரும் மன்னன் ரஜினி, தான் வருங்கால முதல்வர் என்று ஒரு படத்திலாவது சொல்லி இருக்கிறாரா ?
பக்கத்து மாநிலத்தைப் பார்த்து ரசிகர்கள் கட்சி ஆரம்பிக்க நினைப்பதன் உணர்வுகளைப் புரிந்து கொண்டே, ரசிகர்களுக்கு தெளிவாக புரியும் வண்ணம், மறைமுகமாக 'பதவிகள் இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும்' என்பதையே இப்போதும் புரிய வைக்க முயல்கிறார்.
தன்னுடைய ரசிகர்களின் அரசியல் ஆசையை நிராகரிக்கவில்லை, விருப்பமுள்ளவர்கள் விருப்பமான கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று ஆசிர்வதிக்கிறார், இதைப் போல் வேரறெந்த நடிகனும் தங்கள் ரசிகர்களின் விருப்பத்தை மதித்துப் பேசுபவர்கள் இருக்கிறார்களா ? தன்னை வைத்து கட்சி ஆரம்பித்தால் சட்டபடி நடவடிக்கை என்று சொல்வது கூட அன்பினால் தான். மென்மையாகச் சொன்னால் தன்மீது உள்ள அன்பினால் யாரும் கேட்கமாட்டார்கள் என்பதற்காகத் தான் சொல்கிறார் என்பதை நேற்று தான் ரஜினி ரசிகரான சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் உண்மையான ரசிகனாக இருந்தால் உடனே புரிந்து கொள்வான்.
முத்தாய்ப்பாக தனது பலம் தனக்குத் தெரியும், என்னைக் கட்டுப்படுத்த எவரும் பிறக்கவில்லை என்பதை எவ்வளவு தெளிவாகச் சொல்கிறார். அதே சமயம் தான் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பதையும் மிகத் தெளிவாகவே சொல்கிறார்கள். இது தான் ரஜினி. ஒரு சூப்பர் ஸ்டார் என்பதையும் தாண்டி, அவர் ஒரு சிறந்த ஆன்மிக வாதி என்பதையும் காட்டும் வரிகள். இது போன்ற தலைமையைத்தான் ஒவ்வொரு ரஜினி ரசிகனும் ரஜினியிடம் எதிர்ப்பார்க்கிறான். இப்பொழுது சொல்லுங்கள் ரஜினி பதவி ஆசைபிடித்தவரா ? ரஜினி ரசிகர்கள் கண்மூடித்தனமாக இருப்பவர்களா ?
பின்குறிப்பு : ரஜினியின் அறிக்கை அவரது ரசிகர்களால் (டிக்ஸ்னரி போட்டு) எப்படி புரிந்து கொள்ளப்படும் என்று கற்பனையாக நினைத்துப் பார்த்தேன், வெறொன்றும் இல்லை. சின்ன ரஜினி கிரி சிங்கை திரும்பியதைத் தொடர்ந்து இந்த பதிவை அவருக்கு அன்பாக அளிக்கிறேன்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
44 கருத்துகள்:
இது ரஜினிக்கும் அவரோட ரசிகர்களுக்கும் உள்ள உள் விவகாரம். ரசிகர்கள்னா கோயம்புத்தூர்ல கட்சியே ஆரம்பிச்சாங்களே அந்த மாதிரி ரசிகர்கள். அதனால நாங்க இதுல கருத்து சொல்ல ஒன்னும் இல்ல. ( நானும் எப்பதான் அரசியல்வாதி மாதிரி கருத்து சொல்றது). ஆனா எனக்கு ஒரு சந்தேகம், இப்ப தேனி மாவட்ட ரசினி ரசிகர்கள் தற்கொலை செஞ்சுப்பாங்களா மாட்டாங்களா?
// ஜோசப் பால்ராஜ் said...

பால்ராஜ்,
உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி, நீங்க கமலின் தீவிர விசிறிதானே அதான் ரஜினியை பிடிக்கல. :)
//இராம்/Raam said...
grrrrrrrr
//
:)
என்னடா! இன்னும் கோவிகண்ணன் இதை பற்றி பதிவு போடவில்லையே என்று நினைத்து இருந்தேன்
ஒரு சவரன் அன்பா கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் :-)
//கிரி said...
என்னடா! இன்னும் கோவிகண்ணன் இதை பற்றி பதிவு போடவில்லையே என்று நினைத்து இருந்தேன்
ஒரு சவரன் அன்பா கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் :-)
4:31 PM, October 14, 2008
//
கிரி,
சவர கத்தி வேண்டுமானால் வாங்கித் தருகிறேன். ஆனால் அதை தேனிக்கு அனுப்பக் கூடாது !
:-)))...
// கோவி.கண்ணன் said...
கிரி,
சவர கத்தி வேண்டுமானால் வாங்கித் தருகிறேன். ஆனால் அதை தேனிக்கு அனுப்பக் கூடாது ! //
எது...அந்த 1000 ரூபா ஷேவிங் கத்தியா???
:)))
தலைவர் இப்படி சொல்லிட்டாரே ! என்ன செய்யறதுன்னு தெரியாம நாங்க இருக்கும் போது உங்களுக்கு நக்கல் கேக்குதா ? வேண்டாம் கோவியாரே. லட்சக்கணக்கான ஆட்டோக்கள் தங்கள் வீட்டை நோக்கி வரும்.
கிரி,
முடிவு செய்யாத ஒன்றைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருந்த பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். மன்னிக்கவும் !
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//மணிகண்டன் said...
தலைவர் இப்படி சொல்லிட்டாரே ! என்ன செய்யறதுன்னு தெரியாம நாங்க இருக்கும் போது உங்களுக்கு நக்கல் கேக்குதா ? வேண்டாம் கோவியாரே. லட்சக்கணக்கான ஆட்டோக்கள் தங்கள் வீட்டை நோக்கி வரும்.
4:57 PM, October 14, 2008
//
மணிகண்டன் ,
அப்படியே பாட்ஷா விசிடி கொடுத்து அனுப்புங்க, ஆட்டோக்காரன் பாட்டைக் கேட்டு நாளாச்சு !
:)
//விஜய் ஆனந்த் said...
// கோவி.கண்ணன் said...
கிரி,
சவர கத்தி வேண்டுமானால் வாங்கித் தருகிறேன். ஆனால் அதை தேனிக்கு அனுப்பக் கூடாது ! //
எது...அந்த 1000 ரூபா ஷேவிங் கத்தியா???
//
ஆனந்த்,
1000 ரூபாய் ஷேவிங் கத்தி தான் மொட்டை அடிக்க வசதியாக இருக்குமா ?
//பரிசல்காரன் said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//
பரிசல்ஜி,
வாங்க !
//ஜெகதீசன் said...
:)))
4:48 PM, October
//
இ இ இ இ இ இ இ இ !
*********
மணிகண்டன் said...
தலைவர் இப்படி சொல்லிட்டாரே ! என்ன செய்யறதுன்னு தெரியாம நாங்க இருக்கும் போது உங்களுக்கு நக்கல் கேக்குதா ? வேண்டாம் கோவியாரே. லட்சக்கணக்கான ஆட்டோக்கள் தங்கள் வீட்டை நோக்கி வரும்.
4:57 PM, October 14, 2008
மணிகண்டன் ,
அப்படியே பாட்ஷா விசிடி கொடுத்து அனுப்புங்க, ஆட்டோக்காரன் பாட்டைக் கேட்டு நாளாச்சு !
****************
:) ------
நீங்க வீபூதிய பூசிகிட்டு டான்ஸ் ஆடினா பரவால்ல. ஆனா அதுக்கு விளக்க பதிவு போட்டு படுத்துவீங்களே !!!!!
கலக்கல்
மறுபடியும் சொதப்பியுள்ளார் ரஜினி காந்த்.
ஹி..ஹி.. ஒண்ணும் சொல்ல முடியல.. உண்மைய சொன்னா என்னால "முடியல".. அந்த அறிக்கை படி அவரு அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? யாராவது ரஜினி ரசிகர்கள் இருந்தா சொல்லுங்கப்பா..
அய்யோ... அய்யோ..
நான் கூட உண்மையோன்னு நெனச்சிபுட்டேன்...
வேறு ஒரு பதிவில் நான் இட்ட பின்னூட்டம்...
"யாருப்பா அது எங்க தலைவரைப் பற்றி தப்பா பேசரது??
டேய், சரவணா, சுரேஷ், மணி, செல்வம், செந்தில்.. ஸ்கூலுல என்னத்த படிச்சி கிளிக்க போறோம்?? இபொ தான 9ம்பு.. நம்ப தலைவரை தப்பா பேசிட்டு பதிவு போட்டுட்டு இருக்கானுவ.. வாடா போய் நாம யாரு, நம்ம தலைவர் யாரு, நம்ப கட்சி எப்பேர்பட்டதுன்னு இவனுங்களுக்கு காட்டிட்டு வருவோம்.. "
இது ஒரு கூட்டம்..
"டேய் எவன் என் தலைவன தப்பா பேசினவன்?? நாங்கல்லாம், ஒட்டு துணி இல்லாம புள்ள குட்டிங்க குடிக்க கஞ்சி இல்லாம இருந்தாலும், பால் அபிஷேகம் பண்ணுவோம்.. எங்க அப்பனே சாக கெடந்தாலும், எங்க தலைவன் படத்துக்கு முதல் மரியாதை செய்யாட்டி அப்புறம் ஊருல எங்க தலைவனுக்கு இருக்குற மரியாதை குறைஞ்சி போய்டும்"
இது ஒரு கூட்டம்..
"தலைவரே.. ரஜினி அரசியலுக்கு வந்துருவாரு போல.. அடுத்தவன் அறிக்கை விடறதுக்குகுள்ள, அரசியலுக்கு வரும் தங்க மகன் எங்கள் தளபதி வருக வருக னு அறிக்கை விட்டுடலாம்.. பின்னாடி கூட்டணி வைச்சுக்க வசதியா இருக்கும்"
இது ஒரு கூட்டம்..
"ரஜினி அரசிலுக்கு வரலாமன்னு என்கிட்ட கேட்டா.. யாரு வேணும்னாலும் வரலாம். அரசியலுக்கு வந்துதான் அவர் நல்லது செய்யனும்னு இல்ல.. வராமலும் செய்யலாம். ஆனா அரசியலுக்கு வந்து நல்லது செய்யறது வராமலேயே நல்லது செய்யறது என்பது அவரோட இஷ்டம். இதுல நான் சொல்ல என்ன இருக்கு?? இருந்தாலும் நீங்க கேட்டதுனால சொல்லறேன், இன்னைக்கு அரசியல் ஒரு சாக்கடை.. ரஜினி அதுக்குள்ள எல்லாம் குதிக்க மாட்டார். அப்படியே குதிச்சாலும் டூப் போட்டு தான் குதிப்பார்..
இது ஒரு தனி நபர் கூட்டம்.. (தனியா இருக்கவன பத்திஎல்லாம் நாம பேச வேண்டி இருக்கு...)
இதுங்களை பெருசா நம்பிகிட்டு, ரஜினி அரசியலுக்கு வந்து ஒன்னும் கிளிக்க போறது இல்ல.. அப்படி கிளிக்கற ஆளா இருந்தா இந்நேரம் ஏதவது கிளிச்சி இருக்கனும்..
அவருக்கும் மனசாட்சி இருக்கு.. அது குத்தும்.. குடையும்..
i hope this is not a robot/iyeanthiran trailer
ரஜினி பெயரில் கட்சி ஆரம்பித்தை 'நகைச்சுவை' என்று வகைப்படுத்தியுள்ளீர்கள் ! ஒரு வேளை ரஜினியே கட்சி ஆரம்பித்தால் பெரிய நகைச்சுவை என்று சுட்டிக்காட்டவா..!! :)
ஹைய்யோ...ஹைய்யோ... வடிவேலு கவனமாக இருக்கவும். உங்கள் இடத்தைப் பிடிப்பதற்கு ரஜினிகாந்த் ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்காரு...
நல்ல கற்பனை, கோவியாரே! நான் கூட நீங்க கட்சில சேந்திட்டீங்களோன்னு....ச்சே.. கட்சி மாறிட்டீங்களோன்னு நெனைச்சுட்டேன் சில நொடிகள் :)
என்ன கோவியாரே!
திடீர்னு என்ன ரஜினி மேல பாசம்?
ஐஸ்வர்யாராய் புகழ்ந்தது உங்களுக்கு எப்படி தெரிந்தது.
எப்படி இருந்தாலும், உங்கள் இடுகை சூடாகி ஹீலியம் பலூன் மாதிரி மேலேயே போய்கிட்டு இருக்கு.
//நீங்க வீபூதிய பூசிகிட்டு டான்ஸ் ஆடினா பரவால்ல. ஆனா அதுக்கு விளக்க பதிவு போட்டு படுத்துவீங்களே !!!!!//
மணிகண்டன்,
ரஜினி படம் போட்ட டி சர்ட் போட்டு படமெடுத்து போடுவோம் ! சும்மா இல்லை.
//சரவணகுமரன் said...
கலக்கல்
//
பாராட்டுக்கு நன்றி !
//பூச்சாண்டியார் said...
மறுபடியும் சொதப்பியுள்ளார் ரஜினி காந்த்.
5:33 PM, October 14, 2008
//
பூச்சாண்டியார்,
கவலைப்படாதிங்க அடுத்த அறிக்கையில் சரி செஞ்சிடுவார்
//வெண்பூ said...
ஹி..ஹி.. ஒண்ணும் சொல்ல முடியல.. உண்மைய சொன்னா என்னால "முடியல".. அந்த அறிக்கை படி அவரு அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? யாராவது ரஜினி ரசிகர்கள் இருந்தா சொல்லுங்கப்பா..
//
ஆண்டவன் சொல்றத்துக்காக அருணாச்சலம் வெயிட் சேஸ்தாரண்டி !
:)
// Ŝ₤Ω..™ said...
அய்யோ... அய்யோ..
நான் கூட உண்மையோன்னு நெனச்சிபுட்டேன்...
//
பெரியவங்க சொல்லி இருக்காங்கல்லே,
'கண்ணால் காண்பதும் பொய்' !
:)
//வேறு ஒரு பதிவில் நான் இட்ட பின்னூட்டம்...
"யாருப்பா அது எங்க தலைவரைப் பற்றி தப்பா பேசரது??
டேய், சரவணா, சுரேஷ், மணி, செல்வம், செந்தில்.. ஸ்கூலுல என்னத்த படிச்சி கிளிக்க போறோம்?? இபொ தான 9ம்பு.. நம்ப தலைவரை தப்பா பேசிட்டு பதிவு போட்டுட்டு இருக்கானுவ.. வாடா போய் நாம யாரு, நம்ம தலைவர் யாரு, நம்ப கட்சி எப்பேர்பட்டதுன்னு இவனுங்களுக்கு காட்டிட்டு வருவோம்.. "
இது ஒரு கூட்டம்..
"டேய் எவன் என் தலைவன தப்பா பேசினவன்?? நாங்கல்லாம், ஒட்டு துணி இல்லாம புள்ள குட்டிங்க குடிக்க கஞ்சி இல்லாம இருந்தாலும், பால் அபிஷேகம் பண்ணுவோம்.. எங்க அப்பனே சாக கெடந்தாலும், எங்க தலைவன் படத்துக்கு முதல் மரியாதை செய்யாட்டி அப்புறம் ஊருல எங்க தலைவனுக்கு இருக்குற மரியாதை குறைஞ்சி போய்டும்"
இது ஒரு கூட்டம்..
"தலைவரே.. ரஜினி அரசியலுக்கு வந்துருவாரு போல.. அடுத்தவன் அறிக்கை விடறதுக்குகுள்ள, அரசியலுக்கு வரும் தங்க மகன் எங்கள் தளபதி வருக வருக னு அறிக்கை விட்டுடலாம்.. பின்னாடி கூட்டணி வைச்சுக்க வசதியா இருக்கும்"
இது ஒரு கூட்டம்..//
:) தலைவன் தன் பலத்தை அறியாமல் இருப்பதை எந்த ரசிகர்கள் தான் பொறுத்துக் கொள்வார்கள் ?
//"ரஜினி அரசிலுக்கு வரலாமன்னு என்கிட்ட கேட்டா.. யாரு வேணும்னாலும் வரலாம். அரசியலுக்கு வந்துதான் அவர் நல்லது செய்யனும்னு இல்ல.. வராமலும் செய்யலாம். ஆனா அரசியலுக்கு வந்து நல்லது செய்யறது வராமலேயே நல்லது செய்யறது என்பது அவரோட இஷ்டம். இதுல நான் சொல்ல என்ன இருக்கு?? இருந்தாலும் நீங்க கேட்டதுனால சொல்லறேன், இன்னைக்கு அரசியல் ஒரு சாக்கடை.. ரஜினி அதுக்குள்ள எல்லாம் குதிக்க மாட்டார். அப்படியே குதிச்சாலும் டூப் போட்டு தான் குதிப்பார்..
இது ஒரு தனி நபர் கூட்டம்.. (தனியா இருக்கவன பத்திஎல்லாம் நாம பேச வேண்டி இருக்கு...)//
:) டூப் மேட்டர் சூப்பர் !
//இதுங்களை பெருசா நம்பிகிட்டு, ரஜினி அரசியலுக்கு வந்து ஒன்னும் கிளிக்க போறது இல்ல.. அப்படி கிளிக்கற ஆளா இருந்தா இந்நேரம் ஏதவது கிளிச்சி இருக்கனும்..
//
கிழிக்கச் சொல்லுவிங்க, அத நம்பி பேசிடுவார், அவருக்கு வாட்டாள் நாகராஜுக்கு பதில் சொல்லியாகனுமே !
//அவருக்கும் மனசாட்சி இருக்கு.. அது குத்தும்.. குடையும்..
//
மத்தவங்களெல்லாம் மனசாட்சியை மார்வாடிக் கடையில் வச்சிட்டாங்களா ?
:)))))
//Dr.Rudhran said...
i hope this is not a robot/iyeanthiran trailer
8:01 PM, October 14, 2008
//
Dr.Rudhran,
இது ரஜினி பட மேட்டரு இல்லை, படபடக்கும் மேட்டர்.
வருகைக்கு நன்றி ஐயா !
//குகன் said...
ரஜினி பெயரில் கட்சி ஆரம்பித்தை 'நகைச்சுவை' என்று வகைப்படுத்தியுள்ளீர்கள் ! ஒரு வேளை ரஜினியே கட்சி ஆரம்பித்தால் பெரிய நகைச்சுவை என்று சுட்டிக்காட்டவா..!! :)
//
குகன்,
அவர் திரைப்படத்திலும் காமடி கம் ஹீரோ தானே !
//தஞ்சாவூரான் said...
ஹைய்யோ...ஹைய்யோ... வடிவேலு கவனமாக இருக்கவும். உங்கள் இடத்தைப் பிடிப்பதற்கு ரஜினிகாந்த் ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்காரு...
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !
//நல்ல கற்பனை, கோவியாரே! நான் கூட நீங்க கட்சில சேந்திட்டீங்களோன்னு....ச்சே.. கட்சி மாறிட்டீங்களோன்னு நெனைச்சுட்டேன் சில நொடிகள் :)
//
தேர்தலுக்கு எனக்கு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யலாம் என்று இருக்கிறேன்.
:)))))))))
//ஜோதிபாரதி said...
என்ன கோவியாரே!
திடீர்னு என்ன ரஜினி மேல பாசம்?
ஐஸ்வர்யாராய் புகழ்ந்தது உங்களுக்கு எப்படி தெரிந்தது.
//
ஜோதிபாரதி ,
என்னது ஐஸ்வர்யாவைப் புகழ்ந்து பெரும் தன்மையைக் காட்டிய மேட்டரா ? அது இது அல்ல. இது வேற !
//எப்படி இருந்தாலும், உங்கள் இடுகை சூடாகி ஹீலியம் பலூன் மாதிரி மேலேயே போய்கிட்டு இருக்கு.
//
நீங்கள் சொல்வது போலவே போய் செட்டில் ஆகிவிட்டது !
ரஜினி சொல்றது இருக்கட்டும். நீ பெரிய யோக்கியவான் மாதிரி பேசறே
மூர்த்திக்கு கொட்டை பிடித்தவன் தானே நீ. விடாது கருப்பு மூர்த்தி இல்லை என்ரு சொன்னவன் தானே நீ. பெரிய அரசியல் விமர்சகர் இவரு பொத்திகிட்டு போடா பொறம்போக்கு .உன் மூஞ்சியும் சொட்டை விழுந்த மேல்மாடியும்.
உனக்கும் மூர்த்திக்கு உள்ள தொடர்பு அம்பலமானது போது பொட்டை மாதிரி ஓடி ஒளிந்தவன் தானே நீ. சாதி வெறி பிடித்த கொல்டி உனக்கு ப்ளாக்கு எழுதறதை விட்டா வேற வேலையே இல்லையா? வந்துட்டாரு புடிங்கி பெரிய கருத்து கந்தசாமி
என்னைக்கண்டு பயந்து விட்டார் என்றே எனக்கு தோன்றுகிறது
மூர்த்தி மேட்டர்ல பல்லிளித்து போன கொல்டி பெரிய நீதி மான் போல விமர்சனம் செய்கிறாராம. டேய் சொட்டை தலையா உன் கேவலமான பதிவுகளை பார்த்தால் உனக்கே அவமானக இல்லை. சாதி வெறி நாயுடு கொல்டி ரொம்ப சீன போடாதே
மீண்டும் மதில் மேல் பூனையா
போச்சடா போ
//நாரதர் said...
ரஜினி சொல்றது இருக்கட்டும். நீ பெரிய யோக்கியவான் மாதிரி பேசறே
மூர்த்திக்கு கொட்டை பிடித்தவன் தானே நீ. விடாது கருப்பு மூர்த்தி இல்லை என்ரு சொன்னவன் தானே நீ. பெரிய அரசியல் விமர்சகர் இவரு பொத்திகிட்டு போடா பொறம்போக்கு .உன் மூஞ்சியும் சொட்டை விழுந்த மேல்மாடியும்.
12:24 AM, October 15, 2008
//
அண்ணே,
நான் டென்சன் ஆகறதில்லே, இன்னும் 4 பின்னூட்டம் போடுங்கோ. பெங்களூரில் மழை பெய்யுதா ? ரொம்ப சூடாக இருக்கிங்க. நான் எதிர்வினை ஆற்றுவதில்லை, உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதிங்க.
இளாவின் பதிவு மூலமாக இங்கே வந்தேன், இந்த பதிவில் நான் எந்த பின்னூட்டமும் போடவில்லை...
உங்கள் பதிவுகள் படிப்பதோடு சரி..
பெங்களூர் ஐ.பி வந்தாலே அது நான் தான் என்று நினைப்பதை தயவு செய்து விட்டுவிடும்..
இந்த பின்னூட்டத்துக்கு எந்த ஐ.பி வருகிறது என்று பார்க்கவும், அது தான் என்னுடைய பர்சனல் ஐ.பி.
//குகன் said...
ரஜினி பெயரில் கட்சி ஆரம்பித்தை 'நகைச்சுவை' என்று வகைப்படுத்தியுள்ளீர்கள் ! ஒரு வேளை ரஜினியே கட்சி ஆரம்பித்தால் பெரிய நகைச்சுவை என்று சுட்டிக்காட்டவா..!! :)
//
//
கோவி.கண்ணன் said...
குகன்,
அவர் திரைப்படத்திலும் காமடி கம் ஹீரோ தானே !
//
ஆஹா.. ஆஹா.. ரஜினி வில்லன் கம் ஹீரோ... மறந்துவிட்டீர்களா !!
//ரஜினி நினைத்தால் விரலசைவில் ரசிகர்களை வைத்தே கோட்டையை பிடிக்க முடியும், செய்தாரா ரஜினி ?// :)
//செந்தழல் ரவி said...
இளாவின் பதிவு மூலமாக இங்கே வந்தேன், இந்த பதிவில் நான் எந்த பின்னூட்டமும் போடவில்லை...
உங்கள் பதிவுகள் படிப்பதோடு சரி..
பெங்களூர் ஐ.பி வந்தாலே அது நான் தான் என்று நினைப்பதை தயவு செய்து விட்டுவிடும்..
இந்த பின்னூட்டத்துக்கு எந்த ஐ.பி வருகிறது என்று பார்க்கவும், அது தான் என்னுடைய பர்சனல் ஐ.பி.
//
செந்தழல் ரவி,
பெங்களூர் என்று குறிப்பிட்டால் உங்களைச் சொல்வதாக பொருளா ?
'நாரதர்' பின்னூட்டம் யாருதுன்னு லக்கியாரிடம் கேட்டால் கூட சொல்லிவிடுவார், உங்களுக்கே கூட அது யாருடையது என்று தெரியும்.
நீங்கள் போடவில்லை என்பது எனக்கு நன்கு தெரியும். இங்கே பெங்களூர் என்று குறிப்பிட்டதும் உங்களை அல்ல.
உங்களைத் தான் குறிப்பிட்டேன் என்று நீங்களாக வந்து சொல்வதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும், நான் உங்கள் பதிவுகளுக்குக் கூட வருவதில்லை.
அந்த கோழை மனிதனை இப்படித்தான் அடிக்கடி சூடேற்று கிறார்கள் .
பாவம் அந்த ரஜினி
ஓட்டுக்குள் நுழைந்து கொள்ளும் நத்தை!
கருத்துரையிடுக