பின்பற்றுபவர்கள்

2 அக்டோபர், 2008

சிங்கத்தை அதன் குகையில் சந்தித்து...

ஒரு சிங்கம், சிங்கப்பூருக்கு சிங்கிளாக வரப் போவதாக கடந்த திங்கள் அன்று மின் அஞ்சல் வழி தெரிவித்திருந்தது.

அப்படியா ரொம்ப மகழ்ச்சி வந்து இறங்கியவுடன் போனைப் போடுங்க என்று தொலைபேசி எண்ணை தெரிவித்து இருந்தேன்.

வந்தவுடன் தொலைபேசியில் அலைத்தது. சிங்கத்தை தனியாளாக சந்திப்பதைவிட கூட்டமாக சென்று சந்திக்கலாம் என்று சிறு படையுடன் 'திடீர் சமையல் புகழ் ஜெகதீசன், ஜோசப் பால்ராஜ், விஜய் ஆனந்த், பாஸ்கர், புதுகை அப்துல்லாவின் உறவினர் ஆகியோ சென்றோம்.

சிங்கம் வேறு யாருமில்ல வவாசங்கத்துக்கு நீண்ட நாளைய சிங்கம் 'இராம்/Raam'



இராம் இளமைதுள்ளலோடு இருக்கிறார், கொஞ்சம் இயக்குநர் / ந்டிகர் சேரன் சாயல், 'மாப்பிள்ளை சிங்கப்பூரில் நல்ல வேலையில் இருக்கார்' என்று மதுரை திருமண தரகர்கர்கள் இவர் புகைப்படத்தை கையில் வைத்திருக்கக் கூடும். வேற ஒண்ணும் இல்லை, சிங்கத்துக்கு இன்னும் 6 மாதத்தில் திருமணம் நடக்க ஏற்பாடு நடக்குதாம், பொருத்தமான வரன் இருந்தால் சொல்லுங்கள்.

பேகேஜில் ஒன்று கைமாறிவிட்டதாம், இன்னிக்கு அதற்கு கொஞ்சம் அலைவார் என்று நினைக்கிறேன். யாரோ இந்திக்காரருடைய பேக்கேஜ் இவரிடம் வந்திருக்கிறது. இவரிடம் வந்தததில் குடமிளகாய் மாங்காய் இஞ்சி இன்னும் சில பொருள்கள் அந்த பையில் இருந்தது, இவருடையது பழைய துணிகள் உள்ள பையாம்.


பாஸ்கர்,விஜய் ஆனந்த், பால்ராஜ், ஜெகதீசன், இராம்


பால்ராஜ் மற்றும் தம்பி புதுகை அப்துல்லாவின்ன் உறவினர்


நானும் ஜெகதீசனும் அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு மாலை 5 மணி அளவில் சென்றோம், பிறர் 6 மணி வாக்கில் வந்தனர். அப்பறம் 8 மணி வரை மொக்கை.

மற்றதையெல்லாம் இராம் அவர் பதிவில் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுவார்.

*****

சிங்கைக்கு வேலைக்கு வந்து சிங்கை பதிவர்கள் ஜோதியில் கலந்த புதிய சிங்கப்பூர் சிங்கம் இராமுக்கு சிங்கை பதிவர் நண்பர்கள் சார்பில் உற்சாமாக வாழ்த்துகிறேன்.

36 கருத்துகள்:

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

புதிய சிங்கத்தை சிங்கப்பூர் சிங்கங்கள் பேரவை சார்பாக‌ வரவேற்கிறோம்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணே, அடுத்து நாம நடத்தப் போற அறிவிக்கப்பட்ட பதிவர் சந்திப்புக்கு மாபெரும் கூட்டம் கூடும்னு நினைக்கிறேன். எதுக்கும் இனிமே கொஞ்சம் அதிகமாவே வாழைக்காய் வாங்கிக்கங்க. அப்பத்தானே நிறையா பஜ்ஜி செய்ய முடியும்?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அப்துல்லாவின் உறவினர் என்று கோவியார் குறிப்பிட்டிருக்கும் நண்பரின் பெயர் வாசிம் ராஜா. இவரது சகோதரிதான் அப்துல்லாவின் மனைவி. இவரும் நானும் சிங்கப்பூரில் ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்தோம். என் நெருங்கிய நண்பர்.

பெயரில்லா சொன்னது…

தொல்லை சிங்கப்பூர் வரைக்கும் வந்துடுச்சா...

:(

Thamiz Priyan சொன்னது…

அப்ப மருத சிங்கமும் இனி சமையல் குறிப்பெல்லாம் போடும்ன்னு சொல்லுங்க... :)))))

மங்களூர் சிவா சொன்னது…

//
துர்கா said...

தொல்லை சிங்கப்பூர் வரைக்கும் வந்துடுச்சா...
//
:)))))))))))))))))))))))))))

MyFriend சொன்னது…

:-)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வலைஞர்களை வரவேற்கும் வலையுலகக் கலைஞர் திரு.கோ.வி.க!

cheena (சீனா) சொன்னது…

ஆகா - இனி சிங்கைன்னு ஒரு குழுமப் பதிவு ஆரம்பிக்க வேண்டியது தான் - சிங்கங்கள் எல்லாம் சீறட்டும்

நல்வாழ்த்துகள் ராம் - கோவி - ஜோசப் - ஜெகதீசன் - பாஸ்கர் - விஜய் .......

துளசி கோபால் சொன்னது…

ஆஹா.... அந்தக் குடமிளகாய் மாங்காய் இஞ்சியே இருந்துட்டுப்போகட்டும். அதான் சிங்கையில் துனிமணிகள் வாங்கிக்கிட்டாப் போச்சு:-))))

படங்களுக்கு நன்றி.

பார்த்துவச்சுக்கிட்டா ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் பயனாகும்:-)

துளசி கோபால் சொன்னது…

oops.

துணி'மணி'கள் :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
oops.

துணி'மணி'கள் :-)//

பழைய துணிகளாம் ! திருத்தி இருக்கிறேன்.

:)

தருமி சொன்னது…

//தொல்லை சிங்கப்பூர் வரைக்கும் வந்துடுச்சா... //

ஃ பெங்களூரு விடுதலை ஆச்சா?

விஜய் ஆனந்த் சொன்னது…

ஜெகதீசன் அய்யாவை வழிமொழிகிறேன்...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே, அடுத்து நாம நடத்தப் போற அறிவிக்கப்பட்ட பதிவர் சந்திப்புக்கு மாபெரும் கூட்டம் கூடும்னு நினைக்கிறேன். எதுக்கும் இனிமே கொஞ்சம் அதிகமாவே வாழைக்காய் வாங்கிக்கங்க. அப்பத்தானே நிறையா பஜ்ஜி செய்ய முடியும்?

10:17 AM, October 02, 2008
//

பால்ராஜ்,
சந்திப்புக்கு பக்கதில் பந்தல் போட்டு அடுப்பு மூட்டி அங்கேயே செய்வோம் அப்போது தான் பஜ்ஜியெல்லாம் ஜூடாக இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துர்கா said...
தொல்லை சிங்கப்பூர் வரைக்கும் வந்துடுச்சா...

:(
//

உனக்கு ஏன் நடுக்குது ?

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் பிரியன் said...
அப்ப மருத சிங்கமும் இனி சமையல் குறிப்பெல்லாம் போடும்ன்னு சொல்லுங்க... :)))))

10:33 AM, October 02, 2008
//

ஜகதீசனும் அவரும் சமையல் குறிப்பு குழும பதிவு போடப் போறாங்களாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
//
துர்கா said...

தொல்லை சிங்கப்பூர் வரைக்கும் வந்துடுச்சா...
//
:)))))))))))))))))))))))))))
//

என்ன மாப்ப்ளே, மங்களூர் திரும்பியாச்சா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//.:: மை ஃபிரண்ட் ::. said...
:-)
//
ஹிஹி


//ஜோதிபாரதி said...
வலைஞர்களை வரவேற்கும் வலையுலகக் கலைஞர் திரு.கோ.வி.க!
//

ஜோதிபாரதி நான் மட்டும் இல்லை, எல்லோரும் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
ஆஹா.... அந்தக் குடமிளகாய் மாங்காய் இஞ்சியே இருந்துட்டுப்போகட்டும். அதான் சிங்கையில் துனிமணிகள் வாங்கிக்கிட்டாப் போச்சு:-))))

படங்களுக்கு நன்றி.

பார்த்துவச்சுக்கிட்டா ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் பயனாகும்:-)

10:53 AM, October 02, 2008
//

நீங்கள் சிங்கை வரும் போது சொல்லிவிடுங்கள், போஸ்டர் அடித்து மாநாடு நடத்திடுவோம். ஜோசப் பால்ராஜுக்கு மாதம் ஒரு பதிவர் சந்திப்பு இல்லை என்றால் கையெல்லாம் நடுங்குமாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
//தொல்லை சிங்கப்பூர் வரைக்கும் வந்துடுச்சா... //

ஃ பெங்களூரு விடுதலை ஆச்சா?

11:26 AM, October 02, 2008
//

தருமி ஐயா,

உங்க ஊரு பையனை மலேசியா பொண்ணு அவமானப் படுத்துவதைப் பார்த்து வெகுண்டு எழாமல் நீங்களும் சேர்ந்து கிண்டல் அடிக்கிறிங்களே, அடுக்குமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
ஜெகதீசன் அய்யாவை வழிமொழிகிறேன்...

12:15 PM, October 02, 2008
//

டேய் தம்பி இது நல்லா இல்லே, ஜெகதீசனை வழி மொழியும் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தை நான் தான் எடுத்து இருக்கேன். நீ குறுக்கால வர்றாதே, அடுத்த ஆண்டு லக் இருந்தால் 'ஜெகதீசனை வழி மொழியும்' டெண்டரை நீ எடு.

ரிஷி (கடைசி பக்கம்) சொன்னது…

hi kovi,

can I join? mee too living in Singai

கோவி.கண்ணன் சொன்னது…

//hi kovi,

can I join? mee too living in Singai//

இதில் அனுமதி கேட்க ஒன்றும் இல்லை. :)

பதிவர் திண்டுக்கல் சர்தார் (எஸ்.கே.எஸ் ஐயா) சிங்கை வருவதை ஒட்டி பதிவர் சந்திப்பு நடைபெறும், அதற்கான அறிவிப்புகளை ஓரிரு நாட்களில் ஜோசப் பால்ராஜ் வெளி இடுவார். நீங்களும் கலந்து கொள்ளுங்கள்

ஜெகதீசன் சொன்னது…

//
டேய் தம்பி இது நல்லா இல்லே, ஜெகதீசனை வழி மொழியும் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தை நான் தான் எடுத்து இருக்கேன். நீ குறுக்கால வர்றாதே, அடுத்த ஆண்டு லக் இருந்தால் 'ஜெகதீசனை வழி மொழியும்' டெண்டரை நீ எடு.
//

கோவி, ஒப்பந்தத்தின் படி எனக்கு இன்னும் பணம் வந்து சேராததால் உங்கள் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது... புது ஒப்பந்தம் 10 ஆண்டுகளுக்கு விஜய்ஆனந்த்துடன் போடப்பட்டு விட்டது... நீங்கள் 10 ஆண்டுகள் கழித்து முயற்சிக்கவும்!

பெயரில்லா சொன்னது…

@தருமி
//ஃ பெங்களூரு விடுதலை ஆச்சா?//
ஆமா ஆமா :D
பெங்களூரில் இப்போ எல்லாருமே ரொம்ப சந்தோசமா இருக்காங்களாம்.ஆனா சிங்கப்பூரில் இருக்குற நாந்தான் ரொம்ப பாவம்

பெயரில்லா சொன்னது…

// கோவி.கண்ணன் said...

//துர்கா said...
தொல்லை சிங்கப்பூர் வரைக்கும் வந்துடுச்சா... //

உனக்கு ஏன் நடுக்குது ?.//


இருக்குற சிங்கப்பூர் தொல்லை போதாது என்று இன்னும் இன்னொரு தொல்லை பெங்களூரில் இருந்து வந்து இருக்கு இல்ல..அதான் நடுங்குறேன்..

SurveySan சொன்னது…

danks for the padam. போட்டாச்சு.

மேக்-அப் பிடிக்கலன்னா சொல்லிடுங்க ;)

http://surveysan.blogspot.com/2008/10/blog-post.html

Sanjai Gandhi சொன்னது…

//சிங்கைக்கு வேலைக்கு வந்து சிங்கை பதிவர்கள் ஜோதியில் கலந்த புதிய சிங்கப்பூர் சிங்கம் இராமுக்கு சிங்கை பதிவர் நண்பர்கள் சார்பில் உற்சாமாக வாழ்த்துகிறேன்.//

ராம் எனக்கு மெசேஜ் அனுப்ப்பினதும் வாழ்த்து பதிவு போட நெனைச்சேன்.. நேரம் இல்லாம போச்சி.. இங்கிட்டு சொல்லிகிடறேன்..

ராசா.. ராமு.. வாழ்த்துக்கள்யா.. ந்ங்க சிங்கப்பூர்ல நல்லா ஆஹா ஓஹோனு இருக்கோனும்.. அதே மாதிரி தான் சிங்கப்பூரும் வழக்கம் போல நல்லா இருக்கோனும்.. கொஞ்சம் மனசு வைய்யி ராசா.. :))

Sanjai Gandhi சொன்னது…

//சிங்கத்துக்கு இன்னும் 6 மாதத்தில் திருமணம் நடக்க ஏற்பாடு நடக்குதாம், பொருத்தமான வரன் இருந்தால் சொல்லுங்கள்.//

அது சரி.. அப்போ ஏற்கனவே பொருத்தி வச்சிருக்கிற அத்தை மகளுக்கு என்ன பதில் சொல்றதாம்? :))

Sanjai Gandhi சொன்னது…

சங்கம் ப்ரொடக்‌ஷன்ஸ் KTM சிங்கைல ரிலிஸ் ஆகுமா? :)

Thamira சொன்னது…

இளமைதுள்ளலோடு இருக்கிறார், கொஞ்சம் இயக்குநர் / ந்டிகர் சேரன் சாயல்// என்ன ரசனை பாஸ் உங்களோடது? இளமையாம்.. ஆனால் சேரன் மாதிரியாம்..

சே.. அசிங்கமாப்போச்சே ராம்.!

ILA (a) இளா சொன்னது…

சிங்கையில இருக்குற சிங்கத்தை டேமேஜ் பண்ணிறாதீங்கப்பூ

பரிசல்காரன் சொன்னது…

வழிமொழிய இன்னொருத்தர் சிக்கீட்டாருன்னு சொல்லுங்க!

வடுவூர் குமார் சொன்னது…

வாங்க வாங்க இராம்.

வடுவூர் குமார் சொன்னது…

Govi
This is my number 050-8539506

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்