ஈழவிடுதலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு தமிழக தமிழர்களிடம் பேராதரவு இருந்த பொழுது, அதைத் தன் புகழுக்காக பயன்படுத்திக் கொண்டதைத் தவிர்த்து வி.காந்த் ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தார் ? கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் நடித்தார். தமிழர்களுக்கு பிரபாகரன் மீது இருந்த பற்றினால் வி.காந்துக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது. முன்னாள் இந்திய பிரதமரின் படுகொலைக்குப் பிறகு பலரைப் போலவே இவரும் ஒதுங்கிக் கொண்டார். பலசோதனைகள் வந்தாலும் ஈழ விடுதலை ஆதரவை விலக்கிக் கொள்ளாத பழ.நெடுமாறன் ஐயா மற்றும் சுப.வீரபாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியவர்கள் போன்று தொடர்ந்து ஆதரவு அளித்தவர் அல்ல வி.காந்த்.
தற்போதைய சூழலில் தமிழர் தலைவர்களில் பெரும்பாலோனர் இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது வெளிப்படையாக தெரிந்த போது அதை எதிர்த்துவரும் வேளையில், இந்திய அரசின் நிலையை ஆதரித்தவர் தான் வி.காந்த். இந்திய ஆயுதங்களால் கொல்லப்படுபவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டும் அல்ல இராமேஷ்வரம் மீனவர்களும் தான் என்று கூட இவருக்குத் தெரியாதது போல் தொடர்ந்து அதே நிலையில் தான் இருக்கிறார். தற்பொழுது கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்கள் நசுக்கப்படுவதை எதிர்த்து தனது மைய அமைச்சர்களை பதவி விலகச் சொன்னது, வி.காந்துக்கு வேறு மாதிரி தெரிகிறதாம். அதாவது மைய அமைச்சர் ராஜாவின் மீது சொல்லப்பட்டுள்ள ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழல் புகார்களை மறைப்பதற்க்காக கலைஞர் ஈழத் தமிழர்கள் பக்கம் ஆதரவு காட்டுவதாக சொல்கிறார்.
பற்றி எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயம் என்பது போல் தனது கட்சி வளர்ச்சிக்காக தமிழன உணர்வோடு செயல்படுபவர்களையெல்லாம் இப்படி கண்டபடி தூற்றித்தான் வி.காந்த் அரசியல் செய்யவேண்டி இருக்கிறது போலும். கருணாநிதிதான் நாடகம் ஆடுகிறார், ஈழத்தமிழரின் நலம் விரும்பியாக தன்னைக் காட்டிக் கொண்டு வளர்ந்த வி.காந்த் இந்த இக்கட்டான வேளையில் அவர்களுக்காக எந்தவிதமான போராட்டம் அல்லது தீர்வைச் சொல்லுகிறார் என்று யாராவது சொல்லுங்களேன். கலைஞர் அரசின் மத்திய அமைச்சர்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று சொல்லவரவில்லை. ஆனால் அதையெல்லாம் மறைக்கத் தான் அவர்களின் ஈழ ஆதரவு என்று சொல்லும் வி.காந்தின் குற்றச் சாட்டுகள் படுகேவலமானது. இவற்றையெல்லாம் அரசியல் செய்து, தமிழர்கள் கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஆதரவுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயலும் இவரிடம் தெளிந்த அரசியல் செய்யக் கூடிய முதிர்ச்சி இருப்பது போலவோ, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவோ இருப்பதாக தெரியவில்லை.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
30 கருத்துகள்:
விஜயகாந்த் அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத ஒரு அரை வேக்காடு .இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதே தேவையில்லாதது.
He looks like over-confident and points finger on everyone without disclosing what's his stand. Just another politician. Nothing much.
//பழ.நெடுமாறன் ஐயா மற்றும் சுப.வீரபாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியவர்கள் போன்று தொடர்ந்து ஆதரவு//
பட்டியலில் சில பெயர்கள் விடுபட்டுள்ளது போலத் தோன்றுகிறது. எல்லாப் பெயர்களையும் போட முடியாது என்றாலும் சரிதான். பொதுவாக தமிழர்கள் (அரசியல்வாதிகள் அல்லாத) அனைவரும் தொடர்ந்து ஆதரவு தருபவர்களே! அரசியல்வாதிகளில்
ஏதோ ஒரு முக்கியமான பெயர் விடுபட்டுள்ளதாய் தெரிகிறது.
சரி பார்க்கவும். :-)
// பின்னூட்டம் பெரியசாமி.. said...
பட்டியலில் சில பெயர்கள் விடுபட்டுள்ளது போலத் தோன்றுகிறது. எல்லாப் பெயர்களையும் போட முடியாது என்றாலும் சரிதான். பொதுவாக தமிழர்கள் (அரசியல்வாதிகள் அல்லாத) அனைவரும் தொடர்ந்து ஆதரவு தருபவர்களே! அரசியல்வாதிகளில்
ஏதோ ஒரு முக்கியமான பெயர் விடுபட்டுள்ளதாய் தெரிகிறது.
சரி பார்க்கவும். :-)//
நீங்கள் கலைஞரை குறிப்பிட வில்லை என்று தெரியும். :)
விடுபட்டவரும் அதை வைத்து அரசியல் புகழடைந்தவர் தான், தற்பொழுது அவரது நிலை என்னவென்றே தெரியவில்லை, அதனால் நான் குறிப்பிடுவதைத் தவிர்த்தேன். :)
//ஜோ / Joe said...
விஜயகாந்த் அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத ஒரு அரை வேக்காடு .இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதே தேவையில்லாதது.
12:52 PM, October 20, 2008
//
:)
சரிதான். இவற்றிற்கான எதிர்ப்பை பதிந்து வைப்பதும் தேவைதானே.
//Rex said...
He looks like over-confident and points finger on everyone without disclosing what's his stand. Just another politician. Nothing much.
//
Rex,
தைரியசாலி என்பதற்கு பயமில்லாமல் நடிப்பவர் என்ற மற்றொரு பொருளும் உண்டு. தன்னை பலவானாகக் காட்டிக்கொள்ள வி.காந்த் கொடுக்கும் ஸ்டேட்மெண்ட்கள் உச்சகட்ட காமடியாகவே இருக்கிறது.
அவரு கொஞ்சம் சீரியசான கைப்புள்ளன்ணே :))
வணக்கம் கோவி கண்ணன் அவர்களே!
தங்களோடு நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அவா. ஆனால் எப்படி? தாங்கள் முடிந்தால் தங்களுடைய தொலைபேசி இலக்கத்தை தெரிவித்தால் நல்லது.
மேலும் எனது கிருத்திய வலைப் பதிவில் சில தகவல்களைத் தெரிவித்திருக்கின்றேன். சிலபேருக்கு கசக்கலாம் ஆனால் உண்மை. நாம் தமிழ்நாட்டு அரசுகள் செய்த உதவிகளையும் பாரத நாட்டால் ஏற்பட்ட திருப்பங்களையும் கொச்சைப்படுத்திய பெருமை கொண்டவர்கள். இதில் நான் எம்மவர்கள் செய்த தவறுகளைச் சொல்லிக் காட்டவேண்டிய நிலையில் இருக்கிறேன். தயவு செய்து உண்மைகளை எழுதவேண்டும். உங்களின் மீது குறையில்லை. கருத்துத் தெரிவிப்பவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக குறிப்பிடுகிறேன்.
நன்றி.
//அதையெல்லாம் மறைக்கத் தான் அவர்களின் ஈழ ஆதரவு என்று சொல்லும் வி.காந்தின் குற்றச் சாட்டுகள் படுகேவலமானது. இவற்றையெல்லாம் அரசியல் செய்து, தமிழர்கள் கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஆதரவுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயலும் இவரிடம் தெளிந்த அரசியல் செய்யக் கூடிய முதிர்ச்சி இருப்பது போலவோ, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவோ இருப்பதாக தெரியவில்லை.//
sariyaaka sonneergal. Nandri.
************* விஜயகாந்த் அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத ஒரு அரை வேக்காடு ***********
அவரோட பேட்டியெல்லாம் படிச்சா, நிச்சயமா இந்த எண்ணம் தான் வருது. கொஞ்ச நாள் முன்னாடி குமுதத்துல "நான் ஆட்சிக்கு வந்தா லட்சகணக்கான இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன்"ன்னு சொன்னாரு. அடுத்த கேள்வில இதுக்கான ப்ளான் என்னனு கேட்டதுக்கு "அது எல்லாம் ரகசியம்"ன்னு பதில் !!!!!
சூப்பரபரப்பு!
கொள்ளிமலை குப்பு கேக்குராப்புடி!
http://jothibharathi.blogspot.com/2008/10/blog-post_20.html
//பலசோதனைகள் வந்தாலும் ஈழ விடுதலை ஆதரவை விலக்கிக் கொள்ளாத பழ.நெடுமாறன் ஐயா மற்றும் சுப.வீரபாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியவர்கள் போன்று தொடர்ந்து ஆதரவு அளித்தவர் //
பலர் பழ நெடுமாறன் அய்யாவைக் கையாலாகதவர் என்று விமர்சிக்கிற இந்த நேரத்தில், அவருக்கு மதிப்பு கொடுத்து அவரில் பெயரை இட்டமைக்கு நன்றி, மற்ற இட்ட பெயர்களும் விட்ட பெயர்களும் ஒன்றே!
நேர்மையான கருத்து.. இப்போ அடக்கி வாசிக்கிறாரா? அல்லது ஆதரவை ரகசியமா கொடுக்கிறாரா என்பதை வரும் வாரங்களில் நாங்க பார்க்கலாம்..
கோவியாரை வன்மையாக கண்டிக்கிறேன். தேவையில்லாத ஒரு பதிவு.
விஜய்காந்த்தின் அரசியல் கணக்கு வேறு. அவர் கருணாநிதியின் செயலைத் தான் விமர்சித்திருக்கிறார்; ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஏதும் சொல்லவில்லை. சொல்ல மாட்டார். ஆதரவாகவும் சொல்ல மாட்டார். ஒரே நேரத்தில் மத்திய அரசு, மாநில அரசு, பிரதான எதிர்க்கட்சி எல்லாவற்றையும் எதிர்க்கவும் வேண்டும்; தன்னைப்பற்றி ஏற்பட்டு விட்ட "மாற்று" என்கிற இமேஜையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் போது இப்படித் தான் குழப்பமான நிலையில் அவர் இருக்க முடியும்.
தமிழ் உணர்வு அடிப்படையில் உங்கள் உணர்வுகள் நியாயமே. உங்களைப் போன்றோரை இப்படி எல்லாம் பேச வைத்தாவது தன்னுடைய இருப்பைத் தொடர்ந்து முன்னணியில் வைத்துக் கொள்வது தானே அவருடைய எண்ணமும்.
ஆதரவாகப் பேசி இருந்தால் உங்கள் பதிவின் தலைப்பில் வந்திருக்க முடியுமா; சூடான பதிவின் தலைப்பில் வந்து எல்லோர் கண்களிலும் பட்டிருக்க முடியுமா? பதிவின் நடுவே நெடுமாறன் பெயருக்குப் பக்கத்தில் தானே எழுதி இருப்பீர்கள் இவருடைய பெயரை? அவருடைய நோக்கம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை. அங்கே செல்வதற்கான குறுக்கு வழிச் சாலை கருணாநிதி எதிர்ப்பு; ஈழத் தமிழர் ஆதரவு சாலை அங்கே போகுமா என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை..
//புதுகை.அப்துல்லா said...
அவரு கொஞ்சம் சீரியசான கைப்புள்ளன்ணே :))
//
எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரா ?
//தங்க முகுந்தன் said...
வணக்கம் கோவி கண்ணன் அவர்களே!
தங்களோடு நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அவா. ஆனால் எப்படி? தாங்கள் முடிந்தால் தங்களுடைய தொலைபேசி இலக்கத்தை தெரிவித்தால் நல்லது.
மேலும் எனது கிருத்திய வலைப் பதிவில் சில தகவல்களைத் தெரிவித்திருக்கின்றேன். சிலபேருக்கு கசக்கலாம் ஆனால் உண்மை. நாம் தமிழ்நாட்டு அரசுகள் செய்த உதவிகளையும் பாரத நாட்டால் ஏற்பட்ட திருப்பங்களையும் கொச்சைப்படுத்திய பெருமை கொண்டவர்கள். இதில் நான் எம்மவர்கள் செய்த தவறுகளைச் சொல்லிக் காட்டவேண்டிய நிலையில் இருக்கிறேன். தயவு செய்து உண்மைகளை எழுதவேண்டும். உங்களின் மீது குறையில்லை. கருத்துத் தெரிவிப்பவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக குறிப்பிடுகிறேன்.
நன்றி.
//
தங்க முகுந்தன், தங்கள் கருத்துக்கும் அலோசனைக்கும் மிக்க நன்றி. கவனத்தில் கொள்கிறேன்.
சுரேஷ் ஜீவானந்தம் சார்,
மிக்க நன்றி !
//மணிகண்டன் said...
அவரோட பேட்டியெல்லாம் படிச்சா, நிச்சயமா இந்த எண்ணம் தான் வருது. கொஞ்ச நாள் முன்னாடி குமுதத்துல "நான் ஆட்சிக்கு வந்தா லட்சகணக்கான இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன்"ன்னு சொன்னாரு. அடுத்த கேள்வில இதுக்கான ப்ளான் என்னனு கேட்டதுக்கு "அது எல்லாம் ரகசியம்"ன்னு பதில் !!!!!
//
மணிகண்டன்,
வீரப்பன் காட்டுக்கு அழைச்சிட்டுப் போய் பயிற்சிக் கொடுப்பார் போல !
:)
// ஜோதிபாரதி said...
பலர் பழ நெடுமாறன் அய்யாவைக் கையாலாகதவர் என்று விமர்சிக்கிற இந்த நேரத்தில், அவருக்கு மதிப்பு கொடுத்து அவரில் பெயரை இட்டமைக்கு நன்றி, மற்ற இட்ட பெயர்களும் விட்ட பெயர்களும் ஒன்றே!//
ஜோதிபாரதி,
பழ.நெடுமாறன் ஐயாதானே, தமிழக ஈழ ஆதரவு இயக்கங்களின் ஒருங்கிணைப்புத் தலைவர், அவரைக் குறிப்பிடாமல் எழுதவும் முடியாதே.
//RATHNESH said...
விஜய்காந்த்தின் அரசியல் கணக்கு வேறு. அவர் கருணாநிதியின் செயலைத் தான் விமர்சித்திருக்கிறார்;
//
RATHNESH,
செயலை விமர்சித்தால் பரவாயில்லை, செயலைத் திரித்திருப்பதைத் தான் இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்.
மிகச் சரியாக சொல்லியிருக்கிறார் ரத்னேஷ்....
வி.காந்துக்கு ஈழ தமிழர்கள் மீது எந்த அனுதாபமோ இரக்கமோ ஆதரவோ இல்லை. எதிர்ப்பை காட்டினால் அரசியல் யாவரம் பண்ண முடியாது என்று கம்முனு இருக்கிறார். இது மாதிரி ஆட்கள் தான் நம்ம ஊரில் அரசியல் வாதிகளாக இருக்கின்றனர்.
இது மாதிரி அரசியல் வாதிகளுக்கு எத்தனையோ தமிழர்கள் குடை பிடிக்கின்றனர். நம்ம ஊரில் literacy ( எழுத்தறிவு...) கம்மின்னு நினைச்சீங்கன்னா, அது காரணமில்ல...ஏன்னா நூறு சதவீத எழுத்தறிவு பெற்ற கேரளாவிலும் இது தான் நடக்குது...அமெரிக்காவிலும் இது தான் நடக்குது...
இதை நீங்களும் நானும் மாற்ற முடியாது...
நல்ல பதிவு...
//நவநீதன் said...

நவநீதன்,
கருத்துக்கு நன்றி ! படித்தவன் அறிவாளி நல்ல முடிவெடுப்பான் என்று யார் சொன்னது ? ஐபிஎஸ் ஐஏஎஸ், நீதிபதிகள் இவர்களெல்லாம் ஓய்வு பெற்றதும் நாடுவது சாதிசங்கக் கட்சிகளைத் தானே ! :)
//படித்தவன் அறிவாளி நல்ல முடிவெடுப்பான் என்று யார் சொன்னது ? ஐபிஎஸ் ஐஏஎஸ், நீதிபதிகள் இவர்களெல்லாம் ஓய்வு பெற்றதும் நாடுவது சாதிசங்கக் கட்சிகளைத் தானே ! :)//
அருமை!
பதிவும் பின்னூட்டங்களும் நல்ல முறையில் செல்கின்றன
பலசோதனைகள் வந்தாலும் ஈழ விடுதலை ஆதரவை விலக்கிக் கொள்ளாத பழ.நெடுமாறன் ஐயா மற்றும் சுப.வீரபாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் மற்றும் தொல்.திருமாவளவன்
vaiko (e)ippavum aatharavai vilakkikollavillayae...!!!
நான் ஜோ அவர்களை வழிமொழிகிறேன்.
கண்ணன் சார், நான் புதுசா ப்ளாக் எழுத ஆரம்பிச்சு இருக்கேன். படிச்சு பாத்து உங்க கருத்த சொல்லுங்க.
thodar.blogspot.com
இப்பவெல்லாம் நிறைய பணமும் பெரிய பதவியும் இருந்தால் தான் மதிக்கிறார்கள். பழ நெடுமாறன் போன்றவர்கள் ஈழத்திற்கு ஆதரவு தெரிவிப்பது சில கழுவடைகளுக்கு கையாலாகாத்தனமாகத் தெரிகிறது. இவரு ஏன் அலையுறார் இவரால என்ன ஆகும் என்பது போன்ற இன்னும் மட்டரகமான விமர்சனங்களை வைக்கிறார்கள். அப்படிப்பாத்தா நம்ம காந்தி கூடத்தான் வேட்டியமட்டும் கட்டிக்கிட்டு எங்கும் போனார். அவரை ஏன் இந்த உலகமே மதிக்கிறது. உகாண்டாவிலேருந்து,அமெரிக்காவிலிருந்து, சீனா வரைக்கும் எல்லாருக்கும் அவரைத் தெரியுது.
விஜயகாந்தின் ஈழத்தமிழர்கள் பற்று கேள்விக்குறி என்பது சரியானதே?
ஆனால் வைகோவின் நிலையை எழுதாமல் கவனமாக நீங்கள் தவிர்த்திருப்பதைப் பார்த்தால்,
விஜயகாந்த் உங்களைவிட தேவலாம்.
ஈழப்பிரச்சனையில் விடாமல் ஆதரவு தருபவர்கள் பழ.நெடுமாறனும் வைகோவும் தான்.
தொல்.திருமாவளவனையும் சேர்க்கலாம். ஆதரவு என்பது உண்மையாக செயல்படுவது.
மற்றவர்கள் சீசனுக்கு வந்து போகிறவர்கள்.இதில் முக்கியமாக கருணாநிதி என்பவர்.
கருத்துரையிடுக