பின்பற்றுபவர்கள்

27 அக்டோபர், 2008

சிங்கைப் பதிவர் நண்பர்களுடன் தீபத்திருநாள் !

இந்த தீபத்திருநாள் எங்கள் வீட்டினருக்கு ஒரு மாறுபட்ட தீபாவளியாக இருந்தது, பதிவர் நண்பர்களின் (அன்புத் தம்பிகள்) வருகை தந்து தீபாவளியை சிறப்பித்தனர். சில பல காரணங்களினால் பல ஆண்டுகளாக களை இல்லாத தீபாவளியாக இருந்த தீபாவளி இந்த ஆண்டு மாறுபட்ட ஒன்றாக அமைந்தது. வெளிநாடுகளில் / தொலைவில் இருப்பவர்களுக்கு நண்பர்களே உறவுகள் என்பதை மெய்ப்பிக்கும் பண்டிகை நாளாகவும் அமைந்தது. எல்லா மக்களும், குறிப்பாக நம் அன்பு ஈழ தமிழ்மக்கள் சாந்தியும் சமாதனம் பெற்று இன்னல் தீர வேண்டும், அவர்கள் வாழ்வில் புத்தொளி பிறக்கவேண்டும் என்பதைத் தான் இந்நாள் திரும்ப திரும்ப நினைக்க வைத்தது. தீராத பகையோ, மாறத சினமோ என்றுமே இருக்க முடியாது. விரைவில் விடிவு பிறக்கும் என்பதை உங்களைப் போல் நம்புகிறேன். அன்பு தமிழர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.













32 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ஆஹா, உங்க வீட்ல சாப்பிட்டுட்டு நாங்க வீட்டுக்கு வந்து சேர்ந்து கணிணிய திறந்தா, அதுக்குள்ள பதிவா?

மின்னல் வேக பதிவர்ணே நீங்க.

மிக அருமையான காலை உணவும், மதிய உணவும் படைத்து, பலகாரங்களும், புத்தகங்களும், அதோடு சுப்ரமண்யபுரம் பட ஒரிஜினல் சிடியும் கொடுத்து மிக அருமையாய் உபசரித்த உங்களுக்கும், அண்ணிக்கும் எங்கள் நன்றிகள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஆகா அற்புதம்!
பதிவுலகப் பிதாமகன் கோவியார்!!
உங்க வீட்டுப் பால்கனியில் பட்டாசு வெடிக்கும் பாக்கியமும் கிடைத்தது அருமை.

விஜய் ஆனந்த் சொன்னது…

// ஜோசப் பால்ராஜ் 5:59 PM, October 27, 2008
ஆஹா, உங்க வீட்ல சாப்பிட்டுட்டு நாங்க வீட்டுக்கு வந்து சேர்ந்து கணிணிய திறந்தா, அதுக்குள்ள பதிவா?

மின்னல் வேக பதிவர்ணே நீங்க.

மிக அருமையான காலை உணவும், மதிய உணவும் படைத்து, பலகாரங்களும், புத்தகங்களும், அதோடு சுப்ரமண்யபுரம் பட ஒரிஜினல் சிடியும் கொடுத்து மிக அருமையாய் உபசரித்த உங்களுக்கும், அண்ணிக்கும் எங்கள் நன்றிகள். //

ரிப்பீட்டேய்!!!!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//சில பல காரணங்களினால் பல ஆண்டுகளாக களை இல்லாத தீபாவளியாக இருந்த தீபாவளி இந்த ஆண்டு மாறுபட்ட ஒன்றாக அமைந்தது. வெளிநாடுகளில் / தொலைவில் இருப்பவர்களுக்கு நண்பர்களே உறவுகள் என்பதை மெய்ப்பிக்கும் பண்டிகை நாளாகவும் அமைந்தது//
வரும் ஆண்டுகளில் இதே போல் அமையட்டும்...... ஆனால் அமைதியான ஈழம் உருவாகட்டும்

தருமி சொன்னது…

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், சிங்கை பதிவுலக நண்பர்களுக்கும்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

cheena (சீனா) சொன்னது…

கோவி கண்ணன்,

அருமையான பதிவர் சந்திப்பு - தீபாவளிக் கொண்டாட்டம் - ம்ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள்.

தங்களைப் பற்றி ஒரு கற்பனை வடிவம் வைத்திருந்தேன். பொய்த்து விட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
கோவி கண்ணன்,

அருமையான பதிவர் சந்திப்பு - தீபாவளிக் கொண்டாட்டம் - ம்ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள்.//

சீனா ஐயா, வாழ்த்துக்கு நன்றி !

//தங்களைப் பற்றி ஒரு கற்பனை வடிவம் வைத்திருந்தேன். பொய்த்து விட்டது.

11:44 PM, October 27, 2008
//

காயமே பொய்தானே...அதில் தோன்றும் கற்பனைகளும் அப்படித்தானே !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// வடுவூர் குமார் said...
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
//

குமார் அண்ணன்,
அனைவர் சார்பிலும் வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
ஆஹா, உங்க வீட்ல சாப்பிட்டுட்டு நாங்க வீட்டுக்கு வந்து சேர்ந்து கணிணிய திறந்தா, அதுக்குள்ள பதிவா?

மின்னல் வேக பதிவர்ணே நீங்க.

மிக அருமையான காலை உணவும், மதிய உணவும் படைத்து, பலகாரங்களும், புத்தகங்களும், அதோடு சுப்ரமண்யபுரம் பட ஒரிஜினல் சிடியும் கொடுத்து மிக அருமையாய் உபசரித்த உங்களுக்கும், அண்ணிக்கும் எங்கள் நன்றிகள்.
//

நீங்கள் மூவரும் வந்திருந்தது தான் தீபத்திருநாளின் பெரு மகிழ்ச்சியாக நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
ஆகா அற்புதம்!
பதிவுலகப் பிதாமகன் கோவியார்!!
உங்க வீட்டுப் பால்கனியில் பட்டாசு வெடிக்கும் பாக்கியமும் கிடைத்தது அருமை.

7:02 PM, October 27, 2008
//

பட்டாசு வெடிக்கல, விசிலடிக்கும் மத்தாப்பு மட்டும் தான்.

இராம்/Raam சொன்னது…

நான் வர்றப்போ என்னோட ஸ்கூட்டரை உங்க வீட்டிலே விட்டுட்டு வந்துட்டேன், சன்டே வந்து எடுத்துக்கிறேன்னு உங்க பொண்ணுக்கிட்டே சொல்லிருங்க... :)

குடுகுடுப்பை சொன்னது…

இப்படியெல்லாம் சாப்பாடும் என்னைப்பற்றி பதிவும் கிடைக்குமென்றால் , நான் என் அடுத்த இந்திய பயணத்தை சிங்கை வழியே வைத்துக்கொள்கிறேன்.

ஆட்காட்டி சொன்னது…

சிங்கையில் என்ன தான் செய்யலாம்? மத்தாப்பு தான் கொளுத்த முடிஞ்சுதா? பக்கத்தில போயிருந்தா பட்டாசே போட்டுருக்கலாமே?

துளசி கோபால் சொன்னது…

ஊஹூம்....பதிவு இன்னும் முழுமையா இல்லை!

காலை & பகல் சாப்பாட்டு மெனு என்னன்னு சொல்லுங்க.

அனைவருக்கும் தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
ஊஹூம்....பதிவு இன்னும் முழுமையா இல்லை!

காலை & பகல் சாப்பாட்டு மெனு என்னன்னு சொல்லுங்க.

அனைவருக்கும் தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
//

துளசி அம்மா,

காலை உணவு இலையில் பார்த்த உணவு வகைக்கள் தான். மதியம் லைட் உணவு, பாசுமதி அரிசி வெள்ளைச் சோறு, காய்கறி குருமா குழம்பு, கிளரிய தயிர்சாதம், அப்பளம், கொத்தவரை வற்றல், மோர் மிளகாய்.

பெயரில்லா சொன்னது…

படம் எடுக்கும் போது மட்டும், பட்டாசுக்கு பயப்படாதவங்க போல எப்படி என் அண்ணன்கள் நடித்தார்கள்?!!! :P கிகிகிகிகிகி

Mahesh சொன்னது…

அடடா... மறுபடி மிஸ் பண்ணிட்டேன்... உங்க வீட்டுல இருந்து ஜோசஃப் கூப்பிட்டபோதுதான் நான் வெளிய கிளம்பிக்கிட்டுருந்தேன்... திரும்ப வர் 5 மணி ஆயிடுச்சு... அப்ப்றம் நம்ம வீட்ல விருந்தாளிங்க... பரவால்ல... சனிக்கிழமை விக்கியுடன் சந்திப்புல மீட் பண்ணுவோம்....

ஜமாலன் சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

துளசி மேடம் கேட்ட பிறகுதான் மெனுவா? முதலிலேயே சொல்லியிருக்கலாம்.

புசையில் வைத்திருப்பது எண்ணை பாட்டில்தானே? :)

எங்கள் ஊர் தீபாவளி என்றால் சட்டென்று நினைவிற்கு வருவது இவைதான். தெருவில் பெரியவர் முதல் சிறயவர் வரை விளையாடும் பலிங்கு “சாண்போடுதல்“ என்கிற ஒரு ஆட்டம் ஆயிரக் கணக்கில் பணம் புரளும். அங்கேயே மீட்டர் வட்டியில் பணம் தரும் “பெருந்தனக்“-காரர்களும் உண்டு. அடுத்தது புதிய வேட்டி அவிழ்ந்து பாதை ஓரங்களில் கிடக்கும் நம்நாட்டின் “குடி“மக்கள். நண்பர்கள் அழைத்துச் சென்று குளிப்பாட்டும் குவாட்டர்கள். வீட்டிற்க வர அஞ்சி எங்காவது திண்ணையில் துஸங்கிக் கழியும் அந்த இரவு. வெடி வெடித்தவிட்டு 10 மணி அளவில் புது உடையுடன் சன்னலில் காத்திருந்து பார்த்து சிரிக்கும் “சுப்ரமண்யபுர“ வகைக் காதலர்கள்.

உற்சானமான நாட்கள் இப்படி சில இருப்பது நமக்கு புத்துணர்ச்சித் தரக்கூடியதுதானே.

நன்றி. தீப ஒளித்திருநாளை பதிவர்களுடன் கொண்டாடியதற்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

துளசி மேடம் கேட்ட பிறகுதான் மெனுவா? முதலிலேயே சொல்லியிருக்கலாம். //

ஜமாலன் அண்ணா,

இங்கே ஈழத்தமிழர்கள் பிரச்சனைகள் பற்றி எரிகின்ற போது நம் பண்டிகைக் கொண்டாட்டத்தை விவரித்து எழுதினால் அது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாகப் புரிந்து கொள்ளப்படும். மற்றவர்களின் உணர்வுகள் நமக்கு முக்கியமானது.

//புசையில் வைத்திருப்பது எண்ணை பாட்டில்தானே? :)
//
எண்ணைதான் நல்ல எண்ணை !
:)

//எங்கள் ஊர் தீபாவளி என்றால் சட்டென்று நினைவிற்கு வருவது இவைதான். தெருவில் பெரியவர் முதல் சிறயவர் வரை விளையாடும் பலிங்கு “சாண்போடுதல்“ என்கிற ஒரு ஆட்டம் ஆயிரக் கணக்கில் பணம் புரளும். அங்கேயே மீட்டர் வட்டியில் பணம் தரும் “பெருந்தனக்“-காரர்களும் உண்டு. அடுத்தது புதிய வேட்டி அவிழ்ந்து பாதை ஓரங்களில் கிடக்கும் நம்நாட்டின் “குடி“மக்கள். நண்பர்கள் அழைத்துச் சென்று குளிப்பாட்டும் குவாட்டர்கள். வீட்டிற்க வர அஞ்சி எங்காவது திண்ணையில் துஸங்கிக் கழியும் அந்த இரவு. வெடி வெடித்தவிட்டு 10 மணி அளவில் புது உடையுடன் சன்னலில் காத்திருந்து பார்த்து சிரிக்கும் “சுப்ரமண்யபுர“ வகைக் காதலர்கள். //

ஓ... உங்க ஊர்காரர்கள் கொண்டாடிகள் !

//உற்சானமான நாட்கள் இப்படி சில இருப்பது நமக்கு புத்துணர்ச்சித் தரக்கூடியதுதானே.

நன்றி. தீப ஒளித்திருநாளை பதிவர்களுடன் கொண்டாடியதற்கு.
//

படித்து கருத்துக் கூறிய உங்களுக்கும் நன்றி !

துளசி கோபால் சொன்னது…

படத்தைப் பெருசாக்கிப் பார்க்காமக் கோட்டைவிடப் பார்த்தேனே:-)

அதென்ன ரெண்டுவிதமான வடையா? ஹூம்.....

அதிரசத்தை இங்கே நாலு அனுப்புனாத் தேவலை.

ஊதுவத்தி ஸ்டேண்ட் அட்டகாசமா இருக்கு:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said... அதென்ன ரெண்டுவிதமான வடையா? ஹூம்.....//

படத்தை பெருசாக்கிப் பார்த்தாலும் கண்ணுக்கு எட்டியது கைக்கு எட்டாது !

:)

எண்ணைப் பலகாரம் மொத்தம் 3 வகை செய்தோம் மசால் வடை, உளுந்து வடை மற்றும் சுழியன், பஜ்ஜி செய்ய நேரமில்லை. :(

இலையில் இன்னொன்னு கவனிச்சங்களா காசுகள் இருக்கும். அது எதுக்கு என்றால் வெற்றிலைப் பாக்கு வாங்க மறந்தாச்சு, அதுக்கு பதிலாக காசு வச்சிக்கச் சொல்லிடோம். நீங்களும் கூட இந்த டெக்னிக் பயன்படுத்தலாம், எது கிடைக்கலையோ, மறந்திட்டமோ அதற்கு ஈடாக பணத்தை வைத்துவிடுவது. :)

//அதிரசத்தை இங்கே நாலு அனுப்புனாத் தேவலை.
//

அதிரசம் செய்த பிறகு சூடு தணிந்த பிறகு காற்றுப் புகாமல் மூடி வைத்துவிட்டோம் மறுநாள் தொட்டுப்பார்தால் இறுகி இருந்தது, பிறகு திறந்து வைத்த இரண்டு மணி நேரத்தில் மென்மையாக மாறியது. நல்லா தான் இருக்கு, நீங்கள் அதில் பார்த்த பலகாரங்கள் அனைத்துமே சனி / ஞாயிறு இரு நாட்களில் இருவருமே சேர்ந்து செய்தவைதான். கடையில் இருந்து மாவுகளை மட்டும் தான் வாங்கினோம்.

//ஊதுவத்தி ஸ்டேண்ட் அட்டகாசமா இருக்கு:-))))
//

எங்க வீட்டில் இருக்கும் சிறிய குமிழுடன் கூடிய பித்தளை ஊதுபத்தி ஸ்டாண்டில் இருக்கும் ஊதுபத்தி துளை மிகச் சிரியது. என்னுடைய பொறுமையை பலமுறை சோதித்து இருக்கிறது, அதனால் தடாலடியாக அந்த ஸ்டாண்ட் பயன்படுத்தினேன்.

லக்கிலுக் சொன்னது…

ச்சே.. ஜஸ்ட்டு மிஸ்ஸு.. நானும் வந்திருக்கலாம் :-(

துளசி கோபால் சொன்னது…

//இலையில் இன்னொன்னு கவனிச்சங்களா காசுகள் இருக்கும். அது எதுக்கு என்றால் வெற்றிலைப் பாக்கு வாங்க மறந்தாச்சு, அதுக்கு பதிலாக காசு வச்சிக்கச் சொல்லிடோம். நீங்களும் கூட இந்த டெக்னிக் பயன்படுத்தலாம், எது கிடைக்கலையோ, மறந்திட்டமோ அதற்கு ஈடாக பணத்தை வைத்துவிடுவது. :)//

நாங்க இப்படிச் செய்யறதில்லை. காசு வச்சாலும், சாமி எந்தக் கடையிலேன்னு போய் வெத்தலை வாங்கும்? இங்கேதான் கிடைக்கவே கிடைக்காதே.....

ஒரு ஆப்பிள் வெற்றிலை, இன்னொரு ஆப்பிள் இல்லேன்னா ஆரஞ்சு பாக்கு. இப்படித்தான் நடக்குது!

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் 2:43 PM, October 28, 2008
ச்சே.. ஜஸ்ட்டு மிஸ்ஸு.. நானும் வந்திருக்கலாம் :-(
//

அடுத்த தீபாவளிக்கு வந்திடுங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//Mahesh said...
அடடா... மறுபடி மிஸ் பண்ணிட்டேன்... உங்க வீட்டுல இருந்து ஜோசஃப் கூப்பிட்டபோதுதான் நான் வெளிய கிளம்பிக்கிட்டுருந்தேன்... திரும்ப வர் 5 மணி ஆயிடுச்சு... அப்ப்றம் நம்ம வீட்ல விருந்தாளிங்க... பரவால்ல... சனிக்கிழமை விக்கியுடன் சந்திப்புல மீட் பண்ணுவோம்....

1:45 PM, October 28, 2008
//

Mahesh,

ஜோசப் சொன்னார், வருவீர்கள் என்று எதிர்ப்பார்த்தோம், சனிக்கிழமை சந்திப்போம் !

கோவி.கண்ணன் சொன்னது…

/// Thooya said...
படம் எடுக்கும் போது மட்டும், பட்டாசுக்கு பயப்படாதவங்க போல எப்படி என் அண்ணன்கள் நடித்தார்கள்?!!! :P கிகிகிகிகிகி
//

தூயா,

அது பட்டாசு இல்லை, பூத்திரி மத்தாப்பு....உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று விசில் அடித்து எரிய ஆரம்பிக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆட்காட்டி said...
சிங்கையில் என்ன தான் செய்யலாம்? மத்தாப்பு தான் கொளுத்த முடிஞ்சுதா? பக்கத்தில போயிருந்தா பட்டாசே போட்டுருக்கலாமே?

9:23 AM, October 28, 2008
//

ஆட்காட்டி,
சிங்கையில் வெடிக்க முடியாது ஊருக்குப் போகும் போது வெடிக்க வேண்டியதுதான். வாங்கி வைக்கச் சொல்லிட்டோம்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...
நான் வர்றப்போ என்னோட ஸ்கூட்டரை உங்க வீட்டிலே விட்டுட்டு வந்துட்டேன், சன்டே வந்து எடுத்துக்கிறேன்னு உங்க பொண்ணுக்கிட்டே சொல்லிருங்க... :)

1:09 AM, October 28, 2008
//

Raam, ஸ்கூட்டரா ? அதெல்லாம் நீ வருகிறேன் என்று சொன்னாலே என் மகள் எடுத்து ஒளித்து வைத்துவிடுவாள்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

நாங்க இப்படிச் செய்யறதில்லை. காசு வச்சாலும், சாமி எந்தக் கடையிலேன்னு போய் வெத்தலை வாங்கும்? இங்கேதான் கிடைக்கவே கிடைக்காதே.....//

துளசி அம்மா, வெத்திலை பாக்கு வச்சாலும் சிவக்க சிவக்க போட்டுவிடாது :)

//ஒரு ஆப்பிள் வெற்றிலை, இன்னொரு ஆப்பிள் இல்லேன்னா ஆரஞ்சு பாக்கு. இப்படித்தான் நடக்குது!

4:55 PM, October 28, 2008
//

இந்த கணக்கும் நல்லா இருக்கு !

ILA (a) இளா சொன்னது…

ஒரு உசுரு போனதுக்குப் போயி கொண்டாடுறீங்களே.. உங்களை எல்லாம்..

தீவாளி கொண்டாட முடியாத எரிச்சலில் மப்பு இல்லாமலே உளரும்

இளா

வால்பையன் சொன்னது…

பட்டையெல்லாம் பலமா இருக்கு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்