பின்பற்றுபவர்கள்

12 அக்டோபர், 2008

அலுப்பே இல்லாமல் பதிவு போடுறாங்களே எப்படி ?

சமயத்தில் எனக்கு, 'இவ்வளவு பதிவு எழுதிறிங்களே உங்களுக்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்குது ? என்று சிலர் பின்னூட்டத்தில் கேட்பார்கள், உண்மையிலேயே பதிவு போட நேரம் கிடைப்பதைவிட எதாவது உள்ளிடு கிடைப்பதுதான் கடினம். பதிவு எழுத பத்து நிமிடம் கூட ஆகாது, ஆனால் அதில் எதை எழுதுவது என்பது தான் புதியவர்களுக்கும், நெடுநாளாக எழுதுபவர்களுக்கும் இருக்கும் தடையே. நாள் தோறும் படிப்பவர்களுக்கு படிப்பதற்கு நேரம் கிடைப்பது போல் தான், நாள் தோறும் பதிவிடுபவர்களுக்கு எழுதுவதற்கு நேரம் கிடைக்கும், ஒரு 10 - 15 நிமிடம் படிப்பதைத் தவிர்த்துவிட்டு அந்த நேரத்தில் ஒன்றை எழுதிப் போடுகிறார்கள். நானும் அவ்வாறே.

சரி, பதிவர்கள் எப்படி மேட்டர் தேற்றுகிறார்கள் என்று பார்ப்போம், இந்த வழிமுறை மிகச் சரியானது இல்லை என்றாலும் எழுதத் திணறும் போது கை கொடுக்கும். (இதைச் சொல்லவில்லை என்றால் ஆசிப் அண்ணாச்சி ஒரு எதிர்பதிவு போட்டுவிடுவார்)

லக்கிலுக் : பைக்கிலிருந்து இறங்கும் போது பக்கத்து வீட்டு பரிமளா அக்காவைப் பார்த்து இருப்பார், அப்படியே முன்னோக்கி பைக்கை நிறுத்துவிட்டு, பின்னோக்கி நினைவுகளைச் சுழற்றி, 'பரிமளா அக்கா பற்றிய நினைவில் மூழ்கி, அதை பதிவாக ஆக்கிவிடுவார், இவர் கண்ணில் படுவதெல்லாம் பதிவாகிவிடும்

பரிசல்காரன் : பைக்கு தான் இவர் எழுத்தின் முக்கால்வாசி பதிவுகளுக்கு காரணம், டீக் கடையில் நிறுத்திவிட்டு அங்கு நடப்பதைப் பார்ப்பார், அல்லது போகும் வழியில் ஓடுவதைப் பார்ப்பார், நடப்பதையெல்லாம் எழுத்தாக்குவார். போறவழியில் ஒரு மெஸ்சைப் பார்த்தால் 3 ஆண்டுக்கு முன்னால் ஒரு ப்ளாஸ் பேக் நினைவு வரும் அப்பறம் என்ன ? பதிவுக்கு மேட்டர் தேறிடும். இவரது பைக்கு சாவியை உமா எடுத்து ஒளித்து வைக்காதவரை நாள் தோறும் 2 பதிவு கண்டிப்பாக உண்டு.

டிபிசிடி : இப்போதெல்லாம் அடிக்கடி வெளி மாநிலம் செல்வதால் வெளி மாநில தமிழர்கள், அங்குள்ளவர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும், 'இந்தியைப் பற்றி பெருமையாக பேசுறாங்களே...ன்னு மெல்லக் கேட்டு அவர்களிடம் பிட்டைப் போட்டு மேட்டரைக் கறந்து பதிவாக்கிவிடுவார். கொஞ்ச காலமாக இணைய இணைப்பு கிடைக்கலையாம், இப்ப கிடைச்சிருக்காம், 'அண்ணே நம்ம பதிவில் இனிமேல் இடுகை மழைதான்ணே' என்றார்

அதிஷா : சென்னையில் எங்காவது ஷகிலா போஸ்டரும், வியர்வை வழிய வழிய ரிக்க்ஷா ஓட்டுபவர்களைப் பார்த்தால் சிறு கதையாகிவிடும்

பொடியன் / Sanjai : எதிர்பதிவு ஏகாம்பரம் என்று பெயர் எடுக்கும் அளவுக்கு, சூடனா இடுகையில் ஒரு பதிவைப் பார்த்துவிட்டால் இவருக்கு கை பரபரப்பாகிவிடும் அப்பறம் என்ன உடனே நகைச்சுவையுடன் (கவரிங் என்றாலும் அதுவும் நகைதானே) எதிர்பதிவுதான்

ஆர்.கே.சதீஷ்குமார் : யாரும் தினமலர் பக்கம் போகமல் தடுக்கும் வேலையை இவர் தான் செய்துவருகிறார். வைரம் ராஜகோபால் எழுதும் ஆன்மிகம் முதல் அனுராதா ரமணின் அந்தரங்க ஆலோசனை வரையில் அப்படியே எடுத்துப் போடும் சமூக சேவையைச் செய்துவருகிறார். கொஞ்ச நாளில் சொந்தமாகவும் நிறைய எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்

குமரன் : யாராவது நண்பர் இவருக்கு தொலைபேசி இருந்தாலோ, சாட் செய்து இருந்தாலோ அந்த நண்பர் பெயர் எதாவது சாமியின் பெயராக இருந்தால், அந்த சாமியைப் பற்றி சுலோகங்கள் உடனே மனதில் வந்திவிடும், அந்த பாட்டையும் அதற்கான பொருளையும் உடனே பதிவில் எழுதிவிடுவர். பெண் நண்பர்களும் நிறைய இருப்பார்கள் போல.

ரத்னேஷ் : செய்தித்தாள்களையும், தொலைக்காட்சி செய்தியையும் இரண்டு நாள் படிக்கவில்லை, பார்க்கவில்லை என்றால் அடுத்த இரண்டு நாளுக்கு நாள் ஒன்று ஒரே ஒரு பதிவைத் தான் எழுதுவார்.

கேஆர்எஸ் : காலையில் எழுந்து காலெண்டரைப் பார்ப்பார், இன்னிக்கு 'கார்த்திகை' உடனே முருகன் பதிவு, அடுத்த அடுத்த நாள், 'ராம நவமி' சிறப்பு பதிவு. இசையமைப்பாளர் பற்றிய நல்ல, துக்க செய்தியைப் படித்துவிட்டால் இசை இன்பத்தில் பதிவுகள் வந்துவிடும்

கோவியார் : நேற்றுப் படித்த செய்தியை, கட்டுரையை, விவாதத்தை மனதில் போட்டு வைத்திருப்பார், அன்றே எழுதினால் இரவல் சிந்தனை போல் தெரிந்துவிடும், புதிய சிந்தனைப் போல் அந்த செய்தியைப் பற்றி உயர்வாக அல்லது எதிராக தன்னுடய மனநிலையின் ஏற்புக்கு ஏற்றவாறு எழுதுவார்

வாத்தியார் : நண்பர் யாரும் மின் அஞ்சலை அனுப்பி இருந்தால் அன்று கண்டிப்பாக ஒரு பதிவு வரும், மற்ற நாட்களில் பரண் மீது இருக்கும் பழைய புத்தகங்களில் ஒன்றை நாள் தோறும் எலித் தொல்லையால், எலி தட்டிவிட, அதை எடுத்து வைக்கும் நேரத்தில் அதில் உள்ளவற்றைப் படித்து பதிவு போட்டுவிடுவார். முக்கால் வாசி கவியரசர் கண்ணதாசன் புத்தகங்களையே எலி கீழே தள்ளிக் கொண்டு இருக்கிறது, ஒரு முறை பெரிய ஜோதிட புத்தகத்தை கீழே தள்ளிவிட்டதாம், அதன் எடை காரணமாக அதை இன்னும் மேலே தூக்கி வைக்காமல் இருக்கிறார்

இன்னும் பல பதிவர்களை எழுதிக் கொண்டே செல்லலாம்...இடுகை தாங்காது

*******

நாள் தோறும் எழுதும் பதிவர்கள் அனைவருக்குமே, பதிவுக்கான உள்ளிடு பொருள் சுற்றி நடப்பவைகள் தான் மற்றும் அதன் தொடர்பில் பழசை அசைபோடுவது. அதை சரியாக கவனித்து, எண்ணத்தில் கொண்டுவந்து, எழுத்தில் ஏற்றினால் பதிவு ஆயத்தம்

பின்குறிப்பு : இங்கே சொல்லப்பட்டுள்ள பதிவர்களிடம் 'இதில் தவறும் இருக்கலாம், தயவு செய்து தப்பாக நினைக்காதீர்கள்' என்று சொல்லி அவர்களின் புரிந்துணர்வை கொச்சைப் படுத்த விருப்பவில்லை :)))

40 கருத்துகள்:

முரளிகண்ணன் சொன்னது…

அசத்திட்டீங்க

TBCD சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்...சாட்டில் பேசுவதைக் கூட பதிவாக்கும் பதிவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துக்கோங்க அண்ணாச்சி...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் 1:03 AM, October 12, 2008
அசத்திட்டீங்க
//

முதல் போனி !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
அவ்வ்வ்வ்வ்வ்...சாட்டில் பேசுவதைக் கூட பதிவாக்கும் பதிவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துக்கோங்க அண்ணாச்சி...

அவ்வ்வ்வ்வ்வ்வ்
//

அப்படியா, யாரு யாரு ?

குடுகுடுப்பை சொன்னது…

நானும் இப்ப என்ன எழுதறதுன்னு தெரியாம இருக்கேன். நீங்க சொன்னதை வழிமொழிஞ்சி எதாவது எழுதுவோம்

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
நானும் இப்ப என்ன எழுதறதுன்னு தெரியாம இருக்கேன். நீங்க சொன்னதை வழிமொழிஞ்சி எதாவது எழுதுவோம்
//

அது அது...பலபதிவுகள் எழுதி பெருவாழ்வு வாழ்க !

விஜய் ஆனந்த் சொன்னது…

:-))))....

ஆஹா....இதுதான் மேட்டரா!!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
:-))))....

ஆஹா....இதுதான் மேட்டரா!!!!!!
//

ஆமாம், பின்னூட்டம் மட்டும் போடுவதுடன். உடனே பதிவை எழுதத் தொடங்கு.

cheena (சீனா) சொன்னது…

நான் பதிவுகள் போடுவதையெ எவிட்டு விட்டேன் - நேரமில்லை - செய்திகளில்லை - மறுமொழி மட்டும் தான்

Unknown சொன்னது…

நம்மளை மாதிரி பின்னூட்டம் மட்டுமே போடுபவங்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

உண்மையில் பதிவு எழுத நேரம் கிடைப்பதே இல்லை. நானும் சில பதிவுகள் தொடங்கி வேலைப்பளு காரணமாக தொடர முடியாமல் போய் விட்டது. ஆனால் எல்லா பதிவையும் படித்து பின்னூட்டி பேர் வாங்கியே தீருவேன்.

புருனோ Bruno சொன்னது…

//நாள் தோறும் எழுதும் பதிவர்கள் அனைவருக்குமே, பதிவுக்கான உள்ளிடு பொருள் சுற்றி நடப்பவைகள் தான் மற்றும் அதன் தொடர்பில் பழசை அசைபோடுவது. அதை சரியாக கவனித்து, எண்ணத்தில் கொண்டுவந்து, எழுத்தில் ஏற்றினால் பதிவு ஆயத்தம்//

நச் அறிவுரை

RATHNESH சொன்னது…

என்னைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதில் இருக்கும் பொருத்தத்தையே அளவுகோலாகக் கொண்டு வேறு சிலர் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.

புதுகை.அப்துல்லா சொன்னது…

இந்த லிஸ்ட்ல நம்ப பேரு வரக்கூடாதுன்னுதான் நம்ம அடிக்கடி எதுவும் எழுதுறது இல்லை
ஹி...ஹி...ஹி...

துளசி கோபால் சொன்னது…

கண்ணையும் காதையும்(???) திறந்துவச்சாலே போதும். மேட்டரைத் தேத்திறலாம்:-))))

ஆரம்பகாலத்தில் 'ஏதோ' புடிச்சுக்கிட்ட மாதிரி தினப்பதிவுகள் இருந்துச்சு.

இப்ப எல்லாத்தையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தாச்சு. பத்திரிக்கை நடத்தும் ரேஞ்சில் வாரம் மூணு:-)))))

தாங்கமுடியலைன்னா ஒரு கூடுதல் சிறப்புப் பதிவு:-)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
நான் பதிவுகள் போடுவதையே விட்டு விட்டேன் - நேரமில்லை - செய்திகளில்லை - மறுமொழி மட்டும் தான்

2:00 AM, October 12, 2008
//

சுப்பையா வாத்தியார் போட்டி இன்றி ஆடுவதற்கு நீங்கள் தான் காரணமா ?
:))))

கோவி.கண்ணன் சொன்னது…

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
நம்மளை மாதிரி பின்னூட்டம் மட்டுமே போடுபவங்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

உண்மையில் பதிவு எழுத நேரம் கிடைப்பதே இல்லை. நானும் சில பதிவுகள் தொடங்கி வேலைப்பளு காரணமாக தொடர முடியாமல் போய் விட்டது. ஆனால் எல்லா பதிவையும் படித்து பின்னூட்டி பேர் வாங்கியே தீருவேன்.

2:05 AM, October 12, 2008
//

பின்னூட்டம் போட்டே பெயர் வாங்குபவர்கள் நிறைய பேர் இருக்காங்க, நம்ம தம்பி விஜய் ஆனந்த் பின்னூட்டப் பதிவாளர்தான். நீங்களும் ஒருவர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...

நச் அறிவுரை
//

புருனோ சார்,

கருத்துக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
என்னைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதில் இருக்கும் பொருத்தத்தையே அளவுகோலாகக் கொண்டு வேறு சிலர் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.
//

அண்ணா,

அந்த வேறு சிலர் யாருன்னு எனக்கு மட்டும் தனி மின் அஞ்சல் போட்டு சொல்லிடுங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.அப்துல்லா said...
இந்த லிஸ்ட்ல நம்ப பேரு வரக்கூடாதுன்னுதான் நம்ம அடிக்கடி எதுவும் எழுதுறது இல்லை
ஹி...ஹி...ஹி...

3:25 AM, October 12, 2008
//

பின்னூட்டம் போட்டே பெயர் வாங்கும் மற்றொரு பதிவர்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
கண்ணையும் காதையும்(???) திறந்துவச்சாலே போதும். மேட்டரைத் தேத்திறலாம்:-))))

ஆரம்பகாலத்தில் 'ஏதோ' புடிச்சுக்கிட்ட மாதிரி தினப்பதிவுகள் இருந்துச்சு.

இப்ப எல்லாத்தையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தாச்சு. பத்திரிக்கை நடத்தும் ரேஞ்சில் வாரம் மூணு:-)))))

தாங்கமுடியலைன்னா ஒரு கூடுதல் சிறப்புப் பதிவு:-)))))
//

துளசி கோபால்,

உங்களைப் பற்றியும் எழுதலாம் என்றே நினைத்தேன், நாள் தோறும் பதிவு போடுபவர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை. :)

எழுமின் !

Udhayakumar சொன்னது…

//முக்கால் வாசி கவியரசர் கண்ணதாசன் புத்தகங்களையே எலி கீழே தள்ளிக் கொண்டு இருக்கிறது, ஒரு முறை பெரிய ஜோதிட புத்தகத்தை கீழே தள்ளிவிட்டதாம், அதன் எடை காரணமாக அதை இன்னும் மேலே தூக்கி வைக்காமல் இருக்கிறார்//

நல்லா வாய் விட்டு சிரிச்சேன். நன்றி கோவி!!!

அத்திரி சொன்னது…

ரொம்ப நாளா கண்காணித்துகொன்டிருந்தீர்களோ?. ஏன் இப்படி உண்மையை போட்டு உடைச்சிட்டீங்களே

வெண்பூ சொன்னது…

ஹா..ஹா..ஹா..

அட, ஆமாம்.. அப்படின்னு சொல்ற மாதிரிதான் நீங்க சொன்ன எல்லாமே இருக்கு. உங்கள் ஆழ்ந்த வாசித்தலை நிரூபிச்சிட்டீங்க கோவி..

வடுவூர் குமார் சொன்னது…

உங்க ரகசியத்தையும் வெளியே விடுகிறீர்களே??

பெயரில்லா சொன்னது…

அண்ணே என்னையும் ஒரு பதிவரா மதிச்சு .....நன்றி ன்னே ...அனாநீங்க இவ்வளவு அழகா என்னை கேவலபடுதின பிறகும் தினமலர் பக்கம் போவேனா..நல்லா இருங்கண்ணே ....

பெயரில்லா சொன்னது…

கொஞ்ச நாளில் சொந்தமாகவும் நிறைய எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்//

நிச்சயம் உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்

Sanjai Gandhi சொன்னது…

ஜூப்பரு கோவியாரே.. :))
இன்னைக்கு நீங்க சொன்ன மாதிரி ஒரு பதிவு இருக்கு.. முடிஞ்சா பாருங்க.. :))

......ஆனாலும் எங்கள் வலைப்பூக்களுக்கு இணைப்பு குடுக்காத உங்கள் நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.. :))

Sanjai Gandhi சொன்னது…

//அவ்வ்வ்வ்வ்வ்...சாட்டில் பேசுவதைக் கூட பதிவாக்கும் பதிவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துக்கோங்க அண்ணாச்சி...

அவ்வ்வ்வ்வ்வ்வ்//

ஓசை செல்லாவும் வால்பையனும் தானே :))

குமரன் (Kumaran) சொன்னது…

இந்த இடுகையைப் பொறுத்த மட்டிலும் என்னைப் பற்றிய தவறான புரிதல்கள் ஏராளமாக உங்களுக்கு இருக்கின்றன என்று நன்கு காட்டுகிறது. :-)

பதிவு போடுவதில் எனக்கு அலுப்பு இல்லை என்று யார் சொன்னது? இப்போதெல்லாம் ஒவ்வொரு இடுகை இடுவதற்கு முன்னரும் அலுப்பாகத் தான் இருக்கிறது. விண்மீன் வாரத்திலும் அப்படித் தான் இருந்தது. ஏற்கனவே தொடங்கியவற்றை எழுத வேண்டும் என்ற கடமை உணர்ச்சி தான் முன்னிற்கின்றது. ஊக்கம் முன்பு இருந்த அளவிற்கு இல்லை.

அதனால் 'நாள்தோறும் பதிவுகள் எழுதுகின்றவர்கள்' பட்டியலிலும் என் பெயர் இப்போது இல்லை. என் பெயர் இந்தப் பட்டியலில் வந்தது தவறு.

என்னிடம் தொலைபேசியில் பேசுபவர்களும் சாட்டில் பேசுபவர்களும் மிக மிகக் குறைவு. 'நீங்கள் எல்லாம் எதற்கு செல்பேசி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று வீட்டில் குற்றம் சாட்டும் அளவிற்குத் தான் நானும் மற்றவர்களை அழைத்துப் பேசுவேன்; மற்றவர்களும் என்னுடன் பேசுவார்கள். சாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை யாராவது வந்து பேசினால் உண்டு. அப்படியிருக்க பதிவுலக நண்பர்களோ மற்றவர்களோ என்னிடம் தொலைபேசியிலோ சாட்டிலோ பேசுவதாகக் கூறுவது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு.

அடுத்த இரு புரிதல்களும் மிகப்பெரிய தவறுகளே. உடனே சுலோகம் நினைவிற்கு வருவதாகக் கூறுவது ஏதோ வடமொழி சுலோகங்களைப் பற்றி மட்டுமே எழுதுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. வடமொழி சுலோகங்களுக்காக ஒரே பதிவும் தமிழ்ப்பனுவல்களுக்காகப் பல பதிவுகளும் வைத்திருக்கிறேன். வடமொழிச்சுலோகப் பதிவில் எழுதுவதை விட மற்ற பதிவுகளிலேயே அதிகம் எழுதுகிறேன்.

அடுத்து நிறைய பெண் சாமிகளைப் பற்றி எழுதுகிறேன் என்ற தவறான புரிதல். முன்பு ஒரு முறை 95% நான் கண்ணனைப் பற்றியே எழுதுகிறேன் என்று தவறாகச் சொன்னீர்கள். இப்போது அம்மையைப் பற்றியே அதிகம் எழுதுகிறேன் என்ற வேறு தவறான முத்திரை. இங்கும் பதிவுகளின் எண்ணிக்கையையும் இடுகைகளின் எண்ணிக்கையையும் பார்க்க வேண்டும்.

இதெல்லாம் சொல்லி என்ன செய்ய? இருக்கும் புரிதல்களை மாற்றவா முடியும்? உங்கள் மேல் எனக்கு எத்தனை தவறான புரிதல்களோ? :-)

பரிசல்காரன் சொன்னது…

டிஸ்கி சூப்பரு!

கோவி.கண்ணன் சொன்னது…

//Udhayakumar said...

நல்லா வாய் விட்டு சிரிச்சேன். நன்றி கோவி!!!

11:01 AM, October 12, 2008
//

Udhayakumar,

வாத்தியாரின் நெற்றிக் கண் திறந்து விட்டது போல, இந்த பக்கமே எட்டிப் பார்க்கல,

வாத்தியார் ஐயா ! இதெல்லாம் தமாஷ் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திரி said...
ரொம்ப நாளா கண்காணித்துகொன்டிருந்தீர்களோ?. ஏன் இப்படி உண்மையை போட்டு உடைச்சிட்டீங்களே

11:30 AM, October 12, 2008
//
அத்திரி,

உண்மையைப் போட்டு உடைச்சா காயம் ஆகிடும், உண்மையை தோலுறித்து என்று சொல்லலாம் அதுவும் கொஞ்சம் காயம் ஆகிட்டும்,
பாதி உண்மையை சொன்னதாக எடுத்துக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
அண்ணே என்னையும் ஒரு பதிவரா மதிச்சு .....நன்றி ன்னே ...அனாநீங்க இவ்வளவு அழகா என்னை கேவலபடுதின பிறகும் தினமலர் பக்கம் போவேனா..நல்லா இருங்கண்ணே ....
//

சதீஷ்குமார் ஆக்சுவலிலிலி...

உங்கள் பதிவை தொடர்ந்து படிப்பதாகத் தான் நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

நிச்சயம் உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்
//

செய்யுங்கள், முன் கூட்டிய பாராட்டுக்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

// வெண்பூ said...
ஹா..ஹா..ஹா..

அட, ஆமாம்.. அப்படின்னு சொல்ற மாதிரிதான் நீங்க சொன்ன எல்லாமே இருக்கு. உங்கள் ஆழ்ந்த வாசித்தலை நிரூபிச்சிட்டீங்க கோவி..
//

ஓரளவு உண்மை, முற்றிலும் அல்ல !
கோவிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இதில 50 க்கு 50 கிண்டல் தான் செய்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
இந்த இடுகையைப் பொறுத்த மட்டிலும் என்னைப் பற்றிய தவறான புரிதல்கள் ஏராளமாக உங்களுக்கு இருக்கின்றன என்று நன்கு காட்டுகிறது. :-)

பதிவு போடுவதில் எனக்கு அலுப்பு இல்லை என்று யார் சொன்னது? இப்போதெல்லாம் ஒவ்வொரு இடுகை இடுவதற்கு முன்னரும் அலுப்பாகத் தான் இருக்கிறது. விண்மீன் வாரத்திலும் அப்படித் தான் இருந்தது. ஏற்கனவே தொடங்கியவற்றை எழுத வேண்டும் என்ற கடமை உணர்ச்சி தான் முன்னிற்கின்றது. ஊக்கம் முன்பு இருந்த அளவிற்கு இல்லை.

அதனால் 'நாள்தோறும் பதிவுகள் எழுதுகின்றவர்கள்' பட்டியலிலும் என் பெயர் இப்போது இல்லை. என் பெயர் இந்தப் பட்டியலில் வந்தது தவறு.

என்னிடம் தொலைபேசியில் பேசுபவர்களும் சாட்டில் பேசுபவர்களும் மிக மிகக் குறைவு. 'நீங்கள் எல்லாம் எதற்கு செல்பேசி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று வீட்டில் குற்றம் சாட்டும் அளவிற்குத் தான் நானும் மற்றவர்களை அழைத்துப் பேசுவேன்; மற்றவர்களும் என்னுடன் பேசுவார்கள். சாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை யாராவது வந்து பேசினால் உண்டு. அப்படியிருக்க பதிவுலக நண்பர்களோ மற்றவர்களோ என்னிடம் தொலைபேசியிலோ சாட்டிலோ பேசுவதாகக் கூறுவது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு.

அடுத்த இரு புரிதல்களும் மிகப்பெரிய தவறுகளே. உடனே சுலோகம் நினைவிற்கு வருவதாகக் கூறுவது ஏதோ வடமொழி சுலோகங்களைப் பற்றி மட்டுமே எழுதுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. வடமொழி சுலோகங்களுக்காக ஒரே பதிவும் தமிழ்ப்பனுவல்களுக்காகப் பல பதிவுகளும் வைத்திருக்கிறேன். வடமொழிச்சுலோகப் பதிவில் எழுதுவதை விட மற்ற பதிவுகளிலேயே அதிகம் எழுதுகிறேன்.

அடுத்து நிறைய பெண் சாமிகளைப் பற்றி எழுதுகிறேன் என்ற தவறான புரிதல். முன்பு ஒரு முறை 95% நான் கண்ணனைப் பற்றியே எழுதுகிறேன் என்று தவறாகச் சொன்னீர்கள். இப்போது அம்மையைப் பற்றியே அதிகம் எழுதுகிறேன் என்ற வேறு தவறான முத்திரை. இங்கும் பதிவுகளின் எண்ணிக்கையையும் இடுகைகளின் எண்ணிக்கையையும் பார்க்க வேண்டும்.

இதெல்லாம் சொல்லி என்ன செய்ய? இருக்கும் புரிதல்களை மாற்றவா முடியும்? உங்கள் மேல் எனக்கு எத்தனை தவறான புரிதல்களோ? :-)
//

குமரன்,

பதிவு எழுத உங்களுக்கு தூண்டுகோலாக இருப்பதைப் பற்றி உங்களிடமிருந்தே தெரிந்து கொள்ள இப்படியெலாம் கொக்கி போட வேண்டி இருக்கிறது.

:)))))))

முன்பு இரு மாதங்களுக்கு முன்பு நாள் தோறும் எழுதி வந்தீர்கள், எழுதமுடியாத வேளைகளில் உங்களின் பிற பதிவுகளில் இருந்து மீள் பதிவாக கூடலில் மாற்றி வந்தீர்கள், அப்படி என்றால் நீங்களும் நாள் தோறும் பதிவிட்டவர் தானே ?

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

இதில் கோவியார் பதிவெழுதும் டெக்னிக் தான் டாப்!

TBCD சொன்னது…

மக்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி எந்தளவிற்கு என்று இந்தப் பதிவின் மூலம் தெரிகிறது.....அந்த வகையில் இது ஒரு சிறந்த இடுகை....

குசும்பன் சொன்னது…

அண்ணே நீங்க தினமுமா பதிவு எழுதுறீங்க! ?????

வால்பையன் சொன்னது…

:))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்