பின்பற்றுபவர்கள்

8 அக்டோபர், 2008

தேதிமமுக - ஆதாயம் இல்லாமலா ... ?

ரஜினி ரசிகர்கள் கடைசியாக அதிரடி முடிவு எடுத்து இருக்கிறார்கள். ரஜினி எங்கள் உயிருக்கும் மேல் என்று சொல்லியதெல்லாம் அரசியல் ஆசைக்காகவும், சொந்த லாபத்திற்கும் என்பது வெளிச்சமாகிறது. இது ரஜினியின் தூண்டுதலா என்பது ரஜினிக்கே வெளிச்சம்.

கோவை: 'தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து கொடியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள், கோவையைச் சேர்ந்த சில ரஜினி ரசிகர்கள்

தமிழகம் முழுவதிலும் உள்ள ரஜினியின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்று கோரிக்கை விடுத்தும் போஸ்டர்கள் ஒட்டியும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.


********

ரஜினி வழக்கமாக முடிவெடுப்பதில் தயங்குபவர் என்று பிறர் சொன்னால் கோபம் கொள்ளும் ரசிகர்கள், ரஜினி முடிவுக்காக காத்திருந்து மேற்கண்ட நடவெடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே அரசியல் ஆசையில் இருந்த ரசிகர்கள் அது நிறைவேறாமல் போகவே பலர் விஜய்காந்தின் தேமுதிகவில் இணைந்திருந்தனர். அங்கு அவர்களுக்கு பெரிய மரியாதை கிடைப்பது போல் தெரியவில்லை. வேறு வழியின்றி காத்திருந்து பார்த்துவிட்டு முடிவை எடுத்து இருக்கின்றனர். இதை ரஜினி எப்படி கொண்டு செல்லப் போகிறார் என்று தெரியவில்லை. அக் 14ல் முடிவை அறிவிப்பார் என்று செய்தி இதழ்கள் வழக்கம்போல் ஊகமாகவே எழுதுகின்றனர்.

தன்னுடைய மவுனமே தனக்கான இமேஜைக் கூட்டும் என்ற நம்பிக்கை உடையவர் ரஜினி, பூடகமாகவே பேசி 'நான் எப்ப வருவேன், எப்டி வருவேன் என்று எனக்கே தெரியாது, வர வேண்டிய நேரத்தில் வந்திடுவேன்' என்று எழுதிக் கொடுத்த டயலாக்கைத் தான் பேசி இருக்கிறார்ர். ஆனால் அதில் மறைமுகமாக சொல்லி இருப்பது 'வருவேன்' என்பதைத்தான்.

ஏற்கனவே கெட்டுப் போன தமிழக அரசியலைக் கெடுக்க தமிழக மக்கள் எல்லோருக்குமே உரிமை இருக்கிறது, அதிலும் பெரிய அளவு ரசிகர்களாக இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு விழுக்காட்டு அளவிலும் மிகுந்த உரிமை இருக்கிறது.

ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றைக் கட்டி இரைப்பானா ? என்ற பழமொழி ஓரளவுக்கு உண்மைதான்.

ரஜினியின் ரசிகர்கள் தன் மீது பற்று வைத்திருப்பது வெறும் அன்பினால் மட்டுமில்லை, ஆதாயத்தினாலும் என்று ரஜினி புரிந்து கொண்டு அவர்களது ஆசையையாவது பூடகம் போடாமல் நிறைவேற்றுகிறாரா பார்ப்போம்.

டைல் பீஸ் : கட்சிப் பெயரையாவது காப்பியடிக்காமல் வையுங்க, விஜய்காந்த் கட்சியில் இருந்து பிரிந்தது போல் இருக்கு. மக்களுக்கு ஓட்டுப் போடும் போது குழப்பமும் வந்துடும். இல்லையென்றால் 'எங்கள் கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்கள் குழப்பத்தினால் கிடைக்காமல் போயிற்று' என்று விஜயகாந்த் ஊடகத்தில் மீசையைத் தட்டுவார்.

9 கருத்துகள்:

narsim சொன்னது…

//ரஜினியின் ரசிகர்கள் தன் மீது பற்று வைத்திருப்பது வெறும் அன்பினால் மட்டுமில்லை, ஆதாயத்தினாலும் என்று ரஜினி புரிந்து கொண்டு அவர்களது ஆசையையாவது பூடகம் போடாமல் நிறைவேற்றுகிறாரா பார்ப்போம்.//
க்கும்.. நெக்ஸ்டு, நெக்ஸ்டு...

கோவியாரே..

நல்ல பகுப்பு..

நர்சிம்

அருண்மொழி சொன்னது…

//'எங்கள் கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்கள் குழப்பத்தினால் கிடைக்காமல் போயிற்று' என்று விஜயகாந்த் ஊடகத்தில் மீசையைத் தட்டுவார்.
//

இதுவும் கருணாநிதியின் சதி வேலை என்று சன் TVயில் வாய்ஸ் விட்டாலும் விடுவார்.

பெயரில்லா சொன்னது…

: கட்சிப் பெயரையாவது காப்பியடிக்காமல் வையுங்க, விஜய்காந்த் கட்சியில் இருந்து பிரிந்தது போல் இருக்கு. மக்களுக்கு ஓட்டுப் போடும் போது குழப்பமும் வந்துடும். இல்லையென்றால் 'எங்கள் கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்கள் குழப்பத்தினால் கிடைக்காமல் போயிற்று' என்று விஜயகாந்த் ஊடகத்தில் மீசையைத் தட்டுவார்//
correct

அறிவகம் சொன்னது…

எம்.ஜி.ஆர் போல அரசியலுக்கு வரவேண்டும்., மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக சரித்திரம் படைக்க வேண்டும் என்பது நிச்சயம் திரு. ரஜினிகாந்தின் மனதுள் இருந்த, இருக்கும் ஒரு வேட்கை தான். ஆனால் காலம் அதற்கு ஒத்துழைக்குமா என்பது தான் திரு. ரஜினியின் தற்போதைய குழப்பம்.

இன்று திரு. ரஜினி ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக சொன்னாலும் அடுத்து வந்து விழும் முதல் கல்லடி தமிழன் தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்பது தான்.

சமீபத்தில் குலேசனுக்காக கன்னடர்களிடம் அவர் கேட்ட மன்னிப்பு விவகாரமே எப்படியெல்லாம் திரிக்கப்பட்டது என்பது நடுநிலைவாதிகளுக்கு தெரியும். உண்மையில் குலேசனுக்காக மட்டும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்களை(கன்னட கலவரக்கார்ககளை) உதைக்கவேண்டும் என்று அவர் பேசிய பேச்சு என்று கன்னடர்களை உதைக்கவேண்டும் என திரிக்கப்பட்டதோ அப்போதே அவர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்க மனதில் முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் உடனே சில குறுகிய பார்வையுள்ளவர்கள் அதையும் திரித்து குதிப்பார்களே என்று தான் அவர் மவுனம் காத்தார். குலேசனின் போது தன் மன இருக்கத்தை இருக்க சரியாக முயற்சித்தார். ஆனால் அந்த நல்லெண்ணத்தையும் தமிழகத்தில் சிலர் திரித்து எப்படி எல்லாம் விமர்சித்தார்கள்.

எம்.ஜி. ஆர் அரசியலுக்கு வந்தபோது இருந்த மக்கள் மனநிலை வேறு. இன்று மக்கள் மனநிலை வேறு. இப்போது எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வருவதாக கற்பனை செய்து பாருங்கள். அவர் மீது தொடர்ந்து விழும் கல்லடி மலையாளத்தான் என்றாக தான் இருக்கும். நிச்சயம் எம்.ஜி.ஆரால் தனியாக வெற்றிபெற முடியாது. ரஜினின் தயக்கத்துக்கான காரணமும் இது தான்.

மிகப்பெரிய பிரபலம் என்பதை தாண்டி இன்றும் ரஜினி அநாதையாக இருப்பது அவருக்கும் அவரை சரியாக புரிந்துகொண்டவர்களுக்கும் மட்டுமே தெரியும் உண்மை.

கட்சி ஆரம்பிக்க வேண்டி சில ரசிகர்கள் அவரை தொடர்ந்து நிர்பந்திப்பது அரசியல் சாயமே அல்லாமல் உண்மையான மக்கள் சேவை எண்ணம் கிடையாது.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.- குறள் 491

இந்த திருக்குறளை உண்மையான ரஜினி ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பத்தோடு பதினொன்றாவதாக இருப்பதானால் ரஜினி அரசியல்வாதியாகமல் இருப்பதே நல்லது.
நன்றி.

Salahuddin சொன்னது…

விஜயகாந்த் திரையுலகில் அறிமுகமானபோது ரஜினிகாந்தின் மறுபதிப்பு போல கொஞ்ச காலம் நடித்துக் கொண்டிருந்தார். இப்போ வி.கா-வின் கட்சியைப் பார்த்து ர.கா-வின் கட்சியா?

நையாண்டி நைனா சொன்னது…

அப்படின்னா.... "நாக்க முக்க" தயாநிதி மாறன் கட்சி கிடையாதா.......

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ஆண்டவன் சொல்றான்..அந்த அருணாசலம் செய்யறான்
கட்சிப் பெயரைக் கேட்டாலே அதிருதல்ல
இது எப்படி இருக்கு

Veera சொன்னது…

//டைல் பீஸ் : கட்சிப் பெயரையாவது காப்பியடிக்காமல் வையுங்க, விஜய்காந்த் கட்சியில் இருந்து பிரிந்தது போல் இருக்கு. //

ஹா.ஹா. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ள பிரிச்சாச்சா!? :)

Ŝ₤Ω..™ சொன்னது…

இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்..
இது சட்டம்..

ஆனால் அவரவருக்குன்னு ஒரு மனசாட்சி இருக்கு.. அது சொல்கிறபடி நடந்தாலே போதும்.. (மனசாட்சி படி நடந்தா அப்புறம் எதுக்கு அரசியலுக்கு வரனும்னு கேட்காதீங்க)

ரஜினிக்கு மனசாட்சி இருக்கு.. அது அவர் பக்கதுல உட்காந்து, நீ என்ன கிளிச்சிட்டன்னு அரசியல் பத்தி யோசிக்கரன்னு குத்துது.. அதுனால தான் ரொம்ப யோசிக்கரார்..
ஏங்க அவருக்கு தெரியாதா, அவரோட யோக்கியதை என்னன்னு???

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்