திண்டுக்கல் சர்த்தார் என்ற புனைப்பெயரில் எழுதுபவரும், பதிவர்களின் மனதில் வாழும் பதிவர் அனுராதா அம்மா அவர்களின் அன்புக் கணவருமான எஸ்கே சுப்ரமணியம் ஐயாவும் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதாக உறுதிக் கூறி இருக்கிறார். சந்திப்பின் போது அனுராதா அம்மா அவர்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வார்.
மேலும் தமிழ் பதிவர்களால் விக்கி என்று அன்புடன் அழைக்கப்படும் மலேசிய பதிவர், அன்புத் தம்பி விக்னேஷ்வரனின் சிங்கை வருகையை முன்னிட்டும், சிறப்பான பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.
நாள் : நவம்பர் 1, 2008
இடம் : செந்தோசா சுற்றுலாத்தலம் டால்பின் லகூன் கடற்கரை அருகில்
நேரம் : மாலை 4 - 8
வருகை தரும் பதிவர்களுக்கு வழிகாட்டுபவர் ஜோசப் பால்ராஜ்
வருகை தரும் பதிவர்களை கவனித்துக் (உபசரிப்பு) கொள்பவர் விஜய் ஆனந்த்
வருகை தரும் பதிவர்களுடன் புகைப்படம் எடுத்து பதிவில் போடுபவ்ர் கோவி.கண்ணன்
வருகை தரும் பதிவர்களுக்கு நினைவு பரிசு வழங்க இருப்பவர் விக்னேஷ்வரன்
வருகை தரும் பதிவர்களுடன் பேருரை ஆற்ற இருப்பவர்கள் ஜோ மற்றும் முகவை இராம்
வருகை தரும் பதிவர்களை புன்னகையால் வரவேற்பவர் பெங்களூர் இராம்
வருகை தரும் பதிவர்களுக்கு அல்வா கொடுப்பவர் சிங்கை நாதன்
ஹார்பர் ப்ரெண்ட் எனப்படும் எம் ஆர் டி நிலையத்திற்கு வந்து அங்கே விவோ சிட்டி (VIVO City) யின் மேல் தளத்தில் இருந்து செந்தோசாவிற்குச் செல்லும் இலகு ரயில் (மூன்று வெள்ளி டிக்கெட் செந்தோச நுழைவுக் கட்டணத்துடன்) எடுத்து உள்ளே வந்துவிடலாம். மெர்லயன் எனப்படும் கடல் சிங்க பெரும் சிலைக்கு அருகே இறங்கி, அங்கிருந்து டால்பின் லகூனுக்கு (செந்தோச இலவச உள் சேவை) பேருந்தை எடுத்து வந்துவிடலாம்.
நல்ல அருமையான, அமைதியான, துய காற்று வீசும் இடம். அமர்ந்து பேச வசதியான இடம்.
சிங்கைப் பதிவர்கள் அனைவரும் வருக !
பதிவர் சந்திப்பு முடிந்ததும், சுமார் இரவு 9 மணிக்கு மேல் லிட்டில் இந்தியாவில் இட்லி கடையில் (சகுந்தலா கார்டன்) இரவு உணவிற்கும் தேனீர் பார்டிக்கும் (தேனீர் தான்) செல்வதாகவும் பலர் திட்டம் வைத்திருக்கிறார்கள்.
தொடர்பு கொள்ள :
ஜோசப் பால்ராஜ் : 93372775
விஜய் ஆனந்த் : 97798649
கோவி.கண்ணன் : 98767586
28 கருத்துகள்:
//வருகை தரும் பதிவர்களுக்கு நினைவு பரிசு வழங்க இருப்பவர் விக்னேஷ்வரன்//
PSP கொடுக்குறதா இருந்தா சொல்லுங்க :D
அது மட்டும் வாங்கிக்க ஓடி வரேன் :))
//வருகை தரும் பதிவர்களுக்கு அல்வா கொடுப்பவர் சிங்கை நாதன்//
திருநெல்வேலி அல்வாவாக இருந்தால் நல்லா இருக்கும் :)
புகைப்படங்களைப் பார்த்ததும், என்னை நீங்கள் இங்கெல்லாம் அழைத்துச் சென்று காட்டிய இனிய நினைவுகள் வந்தன, கோவியாரே!
சந்திப்பு நிறைவாக நடக்க வாழ்த்துகள்!
அன்பின் கோவி
சந்திப்பு நடந்து 45 நாட்கள் ஆகி விட்டனவா ? அப்போ தீவாளி அன்னிக்கு உங்க வூட்ல நடந்த சந்திப்பு - ஜோதிபாரதி, ஜோசப் பால்ராஜ், ராம் இவங்கெல்லாம் வந்து சாப்பிட்டுட்டு போனாங்களே ! அது சந்திப்பு இல்லையா
ம்ம்ம் - படங்கள் நன்று
நல்வாழ்த்துகள் பதிவர் சந்திப்பு நல்லபடியா தேனீர் பார்டியுடன் முடிவதற்கு ( தேனீரிலே எதுவும் கலந்துடாதீங்க)
//PSP கொடுக்குறதா இருந்தா சொல்லுங்க :D//
அப்படி என்றால் என்ன?
//VIKNESHWARAN said...
//PSP கொடுக்குறதா இருந்தா சொல்லுங்க :D//
அப்படி என்றால் என்ன?//
அவங்க சொன்னதுக்கு தமிழிலேயே அர்த்தம் சொல்லி விடுகிறேன்.
அவங்க பி.எஸ்.பி யைக் கேக்குறாங்க.
அந்தம்மா மாயாவதி கொடுப்பாங்களா? கண்டிப்பா கொடுக்க மாட்டாங்க.
ஏன் சொல்லுங்க. கன்ஷிராம் ஆவி மன்னிக்காது.
Meaning : Play Station Portable(PSP)
தெற்காசிய பதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி அலைவரிசை பற்றி கோவியார் விளக்குவார்.
சிங்கப்பூர்,மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, புருனை போன்ற நாடுகளில் இருந்து பதிவர்கள் கலந்து கொள்கிறார்கள். சிறப்பு விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து செந்தோசாத் தீவுக்கு விவோ சிட்டியில் இருந்து புறப்படுகிறார்கள்.(விவோ சிட்டி பெரிய சிட்டிதானே கோவியாரே? அப்படின்னா ஏர்ப்போர்ட் இருக்கும்). விமான செலவை முழுவதும் ஏற்றுக் கொள்வதாக திரு ஜோசப் பால்ராஜ் தெரிவித்ததாக ஏஜெண்ட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
கோவியாரே! படங்கள் நீங்க புடிச்சதா? சூப்பர்!
அதை பி.எஸ் 3 என சொல்லி இருந்தால் எனக்கு புரிந்திருக்கும்...
மன்னிச்சிக்கோங்க நான் கொஞ்சம் மக்கு துர்கா மாதிரி அறிவாளி இல்லை...
// துர்கா said...
PSP கொடுக்குறதா இருந்தா சொல்லுங்க :D
அது மட்டும் வாங்கிக்க ஓடி வரேன் :))
//
PSP - அப்படி என்றால் KIT-KAT ?
:)
//ஹுத்தீன் said...
திருநெல்வேலி அல்வாவாக இருந்தால் நல்லா இருக்கும் :)
//
சலாஹுதீன், சிங்கை நாதன் விழும்புரம்காரர், திருநெல்வேலிக்கும் அவருக்கும் 500 கிலோமீட்டர்
//VSK said...
புகைப்படங்களைப் பார்த்ததும், என்னை நீங்கள் இங்கெல்லாம் அழைத்துச் சென்று காட்டிய இனிய நினைவுகள் வந்தன, கோவியாரே!
சந்திப்பு நிறைவாக நடக்க வாழ்த்துகள்!
//
நினைவை மறுபடியும் சந்திப்போம் மீண்டும் சிங்கை வாருங்கள் !
//cheena (சீனா) said...
அன்பின் கோவி
சந்திப்பு நடந்து 45 நாட்கள் ஆகி விட்டனவா ? அப்போ தீவாளி அன்னிக்கு உங்க வூட்ல நடந்த சந்திப்பு - ஜோதிபாரதி, ஜோசப் பால்ராஜ், ராம் இவங்கெல்லாம் வந்து சாப்பிட்டுட்டு போனாங்களே ! அது சந்திப்பு இல்லையா//
சீனா ஐயா,
அப்படிப் பார்த்தால் நேற்றுக் கூட பதிவர் சந்திப்புதான், பெங்களூர் இராமையும் 'சிறுமி' துர்காவையும் சந்தித்தேன். :)
//ம்ம்ம் - படங்கள் நன்று// சுட்டப் படம் தான் :)
//நல்வாழ்த்துகள் பதிவர் சந்திப்பு நல்லபடியா தேனீர் பார்டியுடன் முடிவதற்கு ( தேனீரிலே எதுவும் கலந்துடாதீங்க)
10:31 AM, October 29, 2008
//
வேறெதிலும் தேனிரைக் கலந்துடாதிங்கன்னு சொல்லி வாழ்த்துவிங்கன்னு பார்த்தால்... :)
//ஜோதிபாரதி said...
தெற்காசிய பதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி அலைவரிசை பற்றி கோவியார் விளக்குவார்.
சிங்கப்பூர்,மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, புருனை போன்ற நாடுகளில் இருந்து பதிவர்கள் கலந்து கொள்கிறார்கள். சிறப்பு விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து செந்தோசாத் தீவுக்கு விவோ சிட்டியில் இருந்து புறப்படுகிறார்கள்.(விவோ சிட்டி பெரிய சிட்டிதானே கோவியாரே? அப்படின்னா ஏர்ப்போர்ட் இருக்கும்). விமான செலவை முழுவதும் ஏற்றுக் கொள்வதாக திரு ஜோசப் பால்ராஜ் தெரிவித்ததாக ஏஜெண்ட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
கோவியாரே! படங்கள் நீங்க புடிச்சதா? சூப்பர்!
//
ஜோதிபாரதி,
எல்லோருக்கும் (பொறுப்பைக கொடுத்துட்டு உங்களுக்கு எதுவுமே எடுத்துக் கொள்ளாத உங்கள் பெரும் தன்மை எந்த அரசியல்வாதிக்கும் வராது
:)
//மன்னிச்சிக்கோங்க நான் கொஞ்சம் மக்கு துர்கா மாதிரி அறிவாளி இல்லை...
1:07 PM, October 29, 2008
//
விக்கி,
துர்காவை அறிவாளின்னு சொன்ன ஒரே ஆள் நீதான், அதனால் இனி உன்னை மட்டும் தான் உண்மையான அண்ணன் என்று சொல்லிக்கப் போறாளாம்
//சலாஹுதீன், சிங்கை நாதன் விழும்புரம்காரர்//
appadiya :)
anputan
singai nathan
I need PSP 3006
anputan
singai nathan
:(((
கடும் கண்டனங்கள்.........
//செந்தோசா//
மசால் தோசா தெரியும், சாதா தோசா தெரியும், நெய் தோசா தெரியும் இது என்னா செந்தோசா???? நீங்க கருகவிட்ட தோசாவா?
//டால்பின் லகூன் //
அப்படியே சுறா மீன் இருக்கும் இடத்திலும் ஒரு சந்திப்பு போட்டுவிட்டு வாங்களேன், எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும்!!!
//அறிவிப்பு : சிங்கை தெற்காசிய முனைய பதிவர் சந்திப்பு !"//
//வருகை தரும் பதிவர்களுடன் புகைப்படம் எடுத்து பதிவில் போடுபவ்ர் கோவி.கண்ணன்//
அண்ணே சந்திப்பை பற்றிய பதிவு நம்பர் 1 அப்படின்னு நம்பர் கொடுங்க.
சந்திப்பு முடிஞ்சபின் நம்பர் கொடுத்து போஸ்ட் போட சொல்லுங்க!
// VIKNESHWARAN said...
அதை பி.எஸ் 3 என சொல்லி இருந்தால் எனக்கு புரிந்திருக்கும்...
மன்னிச்சிக்கோங்க நான் கொஞ்சம் மக்கு துர்கா மாதிரி அறிவாளி இல்லை...//
//
பிஎஸ்பின்னா என்னன்னு தெரியல்லைன்னு ஒத்துகிட்ட கூட மனிச்சு விட்டுருப்பேன்,தெரியாம என்னை மக்குன்னு சொல்லுறது நல்லா இல்லை.
//PSP - அப்படி என்றால் KIT-KAT ?
:)//
விட்டா அல்வா கொடுத்து இதுதான் பிஎஸ்பின்னு சொல்லுவீங்க..
சந்திப்பு வாழ்த்துக்கள் கோவியாரே..
//தொடர்பு கொள்ள :
ஜோசப் பால்ராஜ் : 93372775
விஜய் ஆனந்த் : 97798649
கோவி.கண்ணன் : 98767586//
எல்லார் எண்ணிலும் 2 எண்கள் மிஸ் ஆகுதே.. எங்கூர்ல 10 எண்கள் இருக்கும்.. எங்கள எல்லாம் ஏமாத்தப் பாக்கறிங்களா:? :)))
கலைஞர் தொலைக்காட்சியில் சந்திப்பு லைவ்வா வருதாமே..?
திண்டுக்கல் சர்த்தார் என்ற புனைப்பெயரில் எழுதுபவரும், பதிவர்களின் மனதில் வாழும் பதிவர் அனுராதா அம்மா அவர்களின் அன்புக் கணவருமான எஸ்கே சுப்ரமணியம் ஐயாவும் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதாக உறுதிக் கூறி இருக்கிறார். சந்திப்பின் போது அனுராதா அம்மா அவர்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வார்.
//பெங்களூர் இராம்...//
மருதக்காரரை இப்படி அழைப்பதற்கு என் வருத்தத்தையும், அதைக் கண்டுக்காமல் விட்ட இராமைக் கண்டித்தும் என் பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்..
//தருமி said...
//பெங்களூர் இராம்...//
மருதக்காரரை இப்படி அழைப்பதற்கு என் வருத்தத்தையும், அதைக் கண்டுக்காமல் விட்ட இராமைக் கண்டித்தும் என் பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்..//
தருமி அய்யா சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்.
அப்ப அவர் நம்ம மதுரைக்காரர் தானா?
//ஜோதிபாரதி,
எல்லோருக்கும் (பொறுப்பைக கொடுத்துட்டு உங்களுக்கு எதுவுமே எடுத்துக் கொள்ளாத உங்கள் பெரும் தன்மை எந்த அரசியல்வாதிக்கும் வராது
:)//
அப்பாவியாகிய என்னை அரசியல்வாதியாக்கி, தான் ஒரு அரசியல்வாதி என்பதை வலை உலகுக்கு மறைத்த கோவியார்(பேராசிரியர், நாஞ்சிலார், ஆற்காட்டார், கோ.சி.மணியார் இப்படிதான் கோவியார் என்பதும் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு), அவர்களுக்கு எனது கண்டனங்கள்.
கருத்துரையிடுக