பின்பற்றுபவர்கள்

24 அக்டோபர், 2008

வைகோவின் அடுத்த நூல் !

தமிழ் ஈழ அரசியலால் தனக்கு அடையாளம் தேடிக் கொண்டோர் பலர். அதில் வைகோவும் ஒருவராகத்தான் நினைக்க முடிகிறது. ஓர் ஆண்டுக்கும் மேல் பொடா சிறையில் இருந்தவர் எந்த நோக்கத்திற்காக ஜெ வுடன் இணைந்தார் என்பதே கேள்விக்குறியாகியது போல் அவரது ஈழ ஆதரவும் கேள்விக் குறியாகியது. கலைஞரை எதிர்க்க ஜெவுடன் கூட்டு என்று சென்றிருந்த போதிலும் அதில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஒரு முறை ஜெ வை சந்திக்க பலமாதங்களுக்கு முன்பு அனுமதி வாங்கி, கடைசி நிமிடம் வரை ஜெவின் மூடு மாறாமல் இருந்தால் தான் சந்திக்க முடியும் என்பதுதான் எப்போதுமே வைகோவின் நிலைமை.

ராஜிவின் மரணத்தை ஒட்டி ஏற்பட்ட அரசியல் அனுதாப அலையால் தனது அரசியல் வாழ்வை தக்கவைத்துக் கொண்ட ஜெ உண்மையிலேயே விடுதலைப் புலிகளுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டவர். ஏன் எதிர்க்கிறார் என்று தெரியவில்லை :) எம்ஜிஆருக்கே இல்லாத மரியாதையையா பிறருக்கு கொடுத்துவிடப் போகிறார். அவரது அரசியல், அரசியல் சார்ந்தவையும் அல்ல, நிலையானதும் அல்ல என்பது அனைவருமே அறிந்தது தான். ஆனால் விடுதலைப் புலிகளை கடுமையாக் எதிர்க்கும் ஜே, விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் முழங்கும் ஜே, வைகோவை தொடர்ந்து கூட்டணியில் வைத்திருப்பது முரணான ஒன்று. விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது இந்திய அரசு நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்று கூவும் ஜெ, தன்னால் நடவடிக்கை எடுத்து கூட்டணியில் இருந்து கழட்டி விடக் கூடிய வைகோ பற்றி வாய்த்திறக்காமல் இருப்பது அபத்தம், சந்தர்பவாதம்

ஜெ தொடர்ந்து அவ்வாறு பேசினால் கலைஞரைத் தூண்டி வைகோவை கைது செய்ய வைக்க முடியும் அதன் மூலம் வைகோவை தொடர்ந்து தனது ஆட்சிக்குப் பிறகும் சிறையில் வைத்திருக்க முடியும் என்று நினைத்தாரோ :) வருங்காலத்தில் வைகோவை கைது செய்தது நான் அல்ல கருணாநிதி அரசுதான் என்று சொன்னாலும் சொல்லுவார். மேலும் வைகோவை கைது செய்ய வைப்பதன் மூலம் ஈழ ஆதரவாளர்களின் எதிர்ப்பை கலைஞர் பக்கம் திருப்பிவிட முடியும். இப்போது அதுதான் நடக்கிறது, வைகோ கைதுக்கு பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இவர்கள் ஜெவுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்திருக்கலாம், வைகோ கைதிற்கு முதன்மை காரணமே ஜெ அதுபோல் பேசி வருவதுதான்.

வைகோவிற்கு எதும் நட்டமில்லை, பல்வேறு வெளிநாட்டு அறிஞர்களின் புத்தகங்களைப் படித்து அதை வைத்து தானும் 'பாசிச ஹிட்லர் ஆட்சியின் 10 ஆம் பாகம்' என்ற நூலை எழுதி, முடிந்திருந்தால் ஜெவின் கையால் வெளி இடுவார். சிறையில் மற்ற நேரங்களில் மீண்டும் கடிதங்கள் எழுதி கின்னஸில் புதிய சாதனைகளை ஏற்படுத்துவார். வெளியே வந்தும் பாராளுமன்ற தேர்த்தல் இருக்கும் கலைஞருடன் கூட்டணி என்று முடிவு செய்து பொக்கேயுடன் கலைஞரை கட்டிப்பிடித்து போஸ் கொடுப்பார். இதுக்கும் மேல் வேற என்ன நடக்கும் ?

இணைப்பு : மனித வெடிகுண்டும் மனிதச் சங்கிலியும் - ரத்னேஷ் !

9 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வைகோ கைது செய்யப்பதன் மூலம் கொள்ளை லாபம் அடைவது இருவர் மட்டுமே,
1) கருணாநிதி :- வைகோவை ஜெயலலிதா கூட்டணியில் இருந்து பிரித்து தனிமைப்படுத்துவது. அதனால் ஜெ கூட்டணி பலவீனப்படும். நாம் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம். மக்கள் மின்வெட்டு, விலைவாசி உயர்வு கப் சிப். மக்கள் வைகொவை பற்றியே பேசுவார்கள். அதனால் வைகோவுக்கு பலன் இல்லை. பலன் கருணாநிதிக்கே.

2) ஜெயலலிதா :- ஈழ ஆதரவாளர்கள், ஈழமக்கள், தமிழின உணர்வாளர்களின் கெட்ட பெயரை கருணாநிதிக்கு ஏற்ப்படுத்திக் கொடுத்து அதில் கொஞ்சம் அரசியல் குளிர் காய்வார்.(அவர்கள் இவர்களுக்கு ஓட்டு போடுவார்களா என்பது வேறு விடயம்?) இவர் கைது செய்ய சொல்றபடி எல்லோரையும் கைது செய்து விட்டால், ஜெயலலிதா, சோ, சு.சுவாமி, இந்து ராம் உள்ளிட்ட சிலர் தான் மிச்சப் படுவார்கள்.
கடைந்தெடுத்த அரசியல் கேவலம்.
படிப்பறிவில்லாத மக்களுக்கும் இவர்களின் அரசியல் சித்து விளையாட்டு தெரிந்து விட்டால்/புரிந்துவிட்டால் இவர்கள் அம்பேல்தான்!!!
திருந்த மாட்டார்களா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//வைகோவின் அடுத்த நூல் ! //

உங்கள் தலைப்பு சொல்லும் அர்த்தங்களும் இரண்டுதான்!

1) வைகோ ஜெயிப்பார்னு சொல்லுது.

2)நீங்கள்(கோவி) வைகோவோடு இரண்டறக் கலந்துவிட்டீர்கள் என்று சொல்லுது.

ஆனா, உள்ளே அப்படி இல்லையே?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
//வைகோவின் அடுத்த நூல் ! //

உங்கள் தலைப்பு சொல்லும் அர்த்தங்களும் இரண்டுதான்!

1) வைகோ ஜெயிப்பார்னு சொல்லுது.

2)நீங்கள்(கோவி) வைகோவோடு இரண்டறக் கலந்துவிட்டீர்கள் என்று சொல்லுது.

ஆனா, உள்ளே அப்படி இல்லையே?
//

ஜோதிபாரதி,

ரொம்ப ஆராய்கிறீர்கள், நான் அந்த பொருளில் எழுதவில்லை. உங்கள் கற்பனை சுவையானது :)

குப்பன்.யாஹூ சொன்னது…

வைகோவின் அந்த புத்தகத்தை (புழழ் சிறையிலிருந்து பூத்த கடிதங்கள்) அழகிரி வெளியிட தயாநிதி மாறன் (or ragul gandhi) பெற்று கொள்வார் என நினைக்கிறேன். அந்த நிகழ்ச்சி ஜெயா டி வி யில் நேரலை செய்யப்படும்.
நான் எப்போதும் போல விஜய் டி வி யில் ஜோடி நம்பர் ஒன்று பார்ப்பேன், அந்த நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளையில் இந்த நிகழ்ச்சிக்கு தாவுவேன்.

குப்பன்_யாஹூ

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஜெயலலிதா :- ஈழ ஆதரவாளர்கள், ஈழமக்கள், தமிழின உணர்வாளர்களின் கெட்ட பெயரை கருணாநிதிக்கு ஏற்ப்படுத்திக் கொடுத்து அதில் கொஞ்சம் அரசியல் குளிர் காய்வார்.(அவர்கள் இவர்களுக்கு ஓட்டு போடுவார்களா என்பது வேறு விடயம்?) இவர் கைது செய்ய சொல்றபடி எல்லோரையும் கைது செய்து விட்டால், ஜெயலலிதா, சோ, சு.சுவாமி, இந்து ராம் உள்ளிட்ட சிலர் தான் மிச்சப் படுவார்கள்.
கடைந்தெடுத்த அரசியல் கேவலம்.
படிப்பறிவில்லாத மக்களுக்கும் இவர்களின் அரசியல் சித்து விளையாட்டு தெரிந்து விட்டால்/புரிந்துவிட்டால் இவர்கள் அம்பேல்தான்!!!
திருந்த மாட்டார்களா?//


சோ, சு.சுவாமி, இந்து ராம் இவர்கள் மூவரும் கூட ஜெயலலிதாவால் கைதுப் பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டார்கள். அதில் ஒருவர் மாறுவேடமிட்டு மதுரை வழியாக தில்லிக்குப் பறந்தார்.
பாதிக்க படாதவர்கள் யார் யார் மிச்சப் படுகிறார்கள்? எனக்குத் தெயரியலை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்?

மணிகண்டன் சொன்னது…

வைகோ கைது செய்யப்பட்டது தேவையற்ற பிரிவினைவாத பேச்சிற்காக. இது ஒரு நியாயமான செயலே. அரசியல் முலாம் பூச வேண்டாம்.

Unknown சொன்னது…

அரசியல்வாதிகளூக்கு வெட்கம் மானம் என்பதே இருக்காதா?

RATHNESH சொன்னது…

//வைகோ கைது செய்யப்பட்டது தேவையற்ற பிரிவினைவாத பேச்சிற்காக. இது ஒரு நியாயமான செயலே. அரசியல் முலாம் பூச வேண்டாம்.//

மணிகண்டன் சொல்வது தான் சரி.

அதோடு, இது வடிவேலு பாணியில் (என்னை அரெஸ்ட் பண்னுய்யா, நானும் ரவுடி தான்யா என்று கெஞ்சாத வண்ணமாய்) வம்பு செய்து புழல் போயிருப்பவர. என்ன, இவருக்கு பில்டிங் வீக்கு; பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கு.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

வைகோவ கலைஞர் கைது செஞ்சதுக்கப்பறம் தான் நிம்மதியா இருக்கு. ஒரு வழியா வைகோ கலைஞர் கூட்டணிக்கு வந்துடுருவாரு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்