பின்பற்றுபவர்கள்

2 அக்டோபர், 2008

வலைப்பதிவாளர் பயோடேட்டா : Tulasi Gopal

பெயர் : துளசி கோபால்

புனைப் பெயர் : டீச்சர், ரீச்சர், பதிவானந்தமயி,துளசி அக்கா, துளசி அம்மா, பின்னூட்ட அரசி மற்றும் பின்னூட்ட நாயகி, அம்மனுக்கு ஆயிரம் பெயர்கள் போன்று இன்னும் நிறைய இருக்கிறது

வயது : பெண்களுக்கெல்லாம் அகவை 'ஆவதே' இல்லை

கணவர் பெயர் : திரு கோபால்

வசிக்கும் இடம் : நியூசி

தொழில் : புதுப்புது காய்கறி வகைகளை வைத்து சமையல் செய்து, சரியாக, சுவையாக வந்திருக்கிறதா ? என கோபால் ஐயாவை வைத்து (வதைத்து அல்ல) சோதனை செய்வது, இல்லாள் (ஹவுஸ் மேக்கர்)

துணைத் தொழில் : வலைப்பதிவது, கோபால கிருஷ்ணனை தாலாட்டுவது ( அவங்க வீட்டு கருப்பு பூனைதான், பூனை என்று சொன்னால் அவங்களுக்கு கோபம் வந்துடும், கிட்டதட்ட அவங்க வீட்டு இரண்டாவது வாரிசு)





அண்மைய சாதனை : மரத்தடி நினைவுகளை பெருமூச்சுடன் நினைவு கூர்ந்தது

நீண்ட நாளைய சாதனை : புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் இட்டு பதிவர் ஜோதியில் அவர்களை அமிழ்த்தி விடுவது.

பிடித்த பதிவர்கள் : 6 முதல் 100 அகவை வரை உள்ள எந்த பதிவரும்

தோழிகள் : பெண்பதிவர்கள் அனைவரும், மற்றும் சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர், இராமச்சந்திரன் உஷா, தமிழச்சி (இவங்களும் அதிரடி பதிவர் தான் இவங்க வேற தமிழச்சி) மற்றும் 'சிறுமி' துர்கா.

அண்மைய எரிச்சல் : சிங்கை வாழ் (சிங்க வால் இல்லை) ஆமத்தூர் ஜெகதீசனின் சமையல் குறிப்புகள்

பதிவு:

துளசி தளம் ( அன்றாட நிகழ்வுகள், பயணக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள், ஆன்மிகம், இலக்கியம், வரலாறு, நியூசி, ஆஸி பற்றிய தகவல்கள், கோகுலாஷ்டமி, ராம் நவமி போன்ற பண்டிகைகளுக்கு சிறப்பு பதிவு)

குழுபதிவுகள்:

விக்கிபசங்க, சாப்பிட வாங்க, சற்று முன்...



வாழ்நாள் சாதனை : கணவர் கோபாலுடன் நாடுகளைச் சுற்றி வருவதும் மட்டுமின்றி, தேவையான புகைப்படங்களைச் சேர்த்து அதை அருமையான பயணக் கட்டுரைகளாக எழுதி, அங்கு செல்பவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் சுவைபட எழுதிவருவது. அதையெல்லாம் தொகுத்தால் 4 - 5 நூல்களாக ஆக்கலாம் (செய்வார் என்று எதிர்பார்க்கிறேன், விரும்புகிறேன், வேண்டுகோள் வைக்கிறேன், தலைக்கு ஒரு நூல் வாங்கினாலும் 1000 நூல்கள் வரை பதிவர்கள் பெற்றுக் கொள்வார்கள், அப்படியும் தீரவில்லை என்றால் திருமணத்திற்குச் சென்றால் அங்கு மொய்யாக வைக்கலாம்) பின்னூட்டத்திற்கு மறுமொழி மறக்காமல் போடுவது.

பொழுது போக்கு : அதுவாகவே போய்விடுகிறது, நேரத்தை வேறு நீயுசியில் மாற்றியதால் விரைவாக தூங்குவது, அதிகாலையில் எழுவது, அக்கம்பக்கம் விழாக்களில் கலந்து கொள்வது, எல்லாருடைய பதிவுகளையும் படித்து சர்சை என்று தெரிந்தால் பின்னூட்டத்தை தவிர்பது, மற்ற பதிவுகளிக்கு இரண்டு வரியேனும் பாராட்டியோ, மாற்றுக் கருத்தையோ பின்னூட்டமாக இடுவது.

31 கருத்துகள்:

வெண்பூ சொன்னது…

நன்றாக தொகுத்திருக்கிறீர்கள் கோவி.

//நீண்ட நாளைய சாதனை : புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் இட்டு பதிவர் ஜோதியில் அவர்களை அமிழ்த்தி விடுவது.//

நிஜம். எனக்கு முதலில் பின்னூட்டமிட்ட பெரும்பதிவர் அவர்தான்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//அண்மைய எரிச்சல் : சிங்கை ஜெகதீசனின் சமையல் குறிப்பு //

இதை நான் தீவிரமாக வழிமொழிகிறேன்.

ஜெகதீசன் சொன்னது…

:)))
//அண்மைய எரிச்சல் : சிங்கை ஜெகதீசனின் சமையல் குறிப்பு //

இது என்ன கொடுமை????????

நான் எப்பவுமே ஆமத்தூர் ஜெகதீசன் தான்!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:)))
//அண்மைய எரிச்சல் : சிங்கை ஜெகதீசனின் சமையல் குறிப்பு //

இது என்ன கொடுமை????????

நான் எப்பவுமே ஆமத்தூர் ஜெகதீசன் தான்!!!!

9:16 PM, October 02, 2008
//

தம்பி மாற்றியாச்சு !

தருமி சொன்னது…

என்னை "வளர்த்து" விட்ட தவற்றை செய்தவர்களில் முக்கியமானவர்.

விஜய் ஆனந்த் சொன்னது…

உள்ளேன் டீச்சர்!!!

தொடர்க தங்கள் பதிவுச்சேவை!!!

வல்லிசிம்ஹன் சொன்னது…

பின்னூட்ட அரசி விட்டுப்போச்சே. கண்ணன்:)
அழகாக அன்பாகத் துளசிதளத்தைத் தொடுத்திருக்கிறீர்கள்.

அவங்க அன்பை எவ்வளவு சொன்னாலும் போதாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வல்லிசிம்ஹன் said...
பின்னூட்ட அரசி விட்டுப்போச்சே. கண்ணன்:)
அழகாக அன்பாகத் துளசிதளத்தைத் தொடுத்திருக்கிறீர்கள்.

அவங்க அன்பை எவ்வளவு சொன்னாலும் போதாது.
//

வல்லி அம்மா, பின்னூட்ட அரசி மறந்துவிட்டது, நினைவு படுத்தியதற்கு நன்றி, சேர்கிறேன். அம்பாளுக்கு ஆயிரம் பெயர்கள் அடியேனுக்கு ஒரு சில பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வரவில்லை.

துளசி அம்மா மிகவும் அன்பானவர்கள், நீங்கள் சொல்வது 100 விழுக்காடு சரி, நேரில் சந்தித்தால் உணர்வு பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நீண்ட நாளைய சாதனை : புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் இட்டு பதிவர் ஜோதியில் அவர்களை அமிழ்த்தி விடுவது.


என்னையும் வரவேற்று பின்னூட்டம் இட்டார்கள்!(நானும் ஒரு ஜோதிதான்)

குடுகுடுப்பை சொன்னது…

நல்லா இருக்கு கோவியாரே, குமுதத்தில உங்கள கேவி கெவி கூப்புடுறாங்க, காதுல உழுதா

பெயரில்லா சொன்னது…

டீச்சரை,

பின்னூட்டம் மூலமாகவே அறிவேன். அவர்களை மேலும் அரியத்தந்தற்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ஓ என் குருவோட பயோடேட்டாவா.. //அம்மனுக்கு ஆயிரம் பெயர்கள்// சூப்பர்.

SP.VR. SUBBIAH சொன்னது…

டீச்சரின் பிரம்பிற்குப் பயந்து அடக்கியே வாசித்திருக்கிறீர்.இதுவரை வந்த பயோடேட்டாக்களில் இது கொஞ்சம் உருப்படியாக உள்ளது பாராட்டுக்கள்

NewBee சொன்னது…

ஹைய்ய்ய்ய்! டீச்சர் பயடேட்டா சூப்பர்ர்ர்ர்ர்ர் :) :D

துளசி கோபால் சொன்னது…

ஆஹா......ஆஹா.......

ரொம்பத் தாக்காமல் விட்டதுக்கே முதல் நன்றியைச் சொல்லிக்கறேன்.

நல்லா மிரட்டும் போஸில் இருக்கும் படத்தைத் 'தக்க சமயத்தில்' வெளியிட்டதுக்கு நன்றி.
(டீச்சர்ன்னா ஒரு பயம் வரணுமும்.இல்லே?)

வடகரை வேலன்,

என்னை இப்படி 'அரி'யலாமா? (-:

ramachandranusha(உஷா) சொன்னது…

என் பெயரை மாற்றியவர், பக்கத்தில் இருக்கும் நட்பு பட்டியலில் ஷா,ஜ, ஸ் போன்ற எழுத்துவரும் பதிவர்களின் பெயரையும் மாற்ற ஆவன செய்யும் மாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
அதுசரி, சுடாலின் அவர்களைப் பற்றி பதிவு எழுதியுருக்கிறீர்களா :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//ramachandranusha(உஷா) said...
என் பெயரை மாற்றியவர், பக்கத்தில் இருக்கும் நட்பு பட்டியலில் ஷா,ஜ, ஸ் போன்ற எழுத்துவரும் பதிவர்களின் பெயரையும் மாற்ற ஆவன செய்யும் மாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
அதுசரி, சுடாலின் அவர்களைப் பற்றி பதிவு எழுதியுருக்கிறீர்களா :-)
//

உஷா மேடம், மாற்றிவிடுகிறேன்
'ச' க்கு பதிலாக ஷா போடலாம் நடைமுறையில் உள்ளவைதான், மற்றபடி ஹரிஹரனை கரிகரன் என்றெல்லாம் எழுதி கொலை செய்ய மாட்டேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
ஆஹா......ஆஹா.......

ரொம்பத் தாக்காமல் விட்டதுக்கே முதல் நன்றியைச் சொல்லிக்கறேன்.

நல்லா மிரட்டும் போஸில் இருக்கும் படத்தைத் 'தக்க சமயத்தில்' வெளியிட்டதுக்கு நன்றி.
(டீச்சர்ன்னா ஒரு பயம் வரணுமும்.இல்லே?)

வடகரை வேலன்,

என்னை இப்படி 'அரி'யலாமா? (-:
//

துளசி அம்மா,

பதிவை வழி மொழிந்ததற்க்கு மகிழ்ச்சி நன்றி. நான் பிரம்புக்கு பயந்து கொண்டு தான் இருந்தேன். சுப்பையா வாத்தியார் அளவுக்கு சுத்தி சுத்தி அடிக்காமல் விட்டுவிட்டீர்கள்.

இன்னிக்கு தற்செயலாக புகைப்படத்தில் உள்ள அதே சட்டையை அணிந்து வந்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
என்னை "வளர்த்து" விட்ட தவற்றை செய்தவர்களில் முக்கியமானவர்.

9:47 PM, October 02, 2008
//

தருமி ஐயா,

இப்படியெலலாம் சொன்னால் நீங்கள் வளரும் இளைஞர் என்பதை நாங்கள் நம்பிவிடுகிறோம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
நீண்ட நாளைய சாதனை : புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் இட்டு பதிவர் ஜோதியில் அவர்களை அமிழ்த்தி விடுவது.


என்னையும் வரவேற்று பின்னூட்டம் இட்டார்கள்!(நானும் ஒரு ஜோதிதான்)

10:28 PM, October 02, 2008
//

ஜோதிபாரதி,

துளசி அம்மா அடுத்த முறை சிங்கை வரும் போது கட் அவுட் வைத்து வரவேற்போம். செலவை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
டீச்சரின் பிரம்பிற்குப் பயந்து அடக்கியே வாசித்திருக்கிறீர்.இதுவரை வந்த பயோடேட்டாக்களில் இது கொஞ்சம் உருப்படியாக உள்ளது பாராட்டுக்கள்

1:19 AM, October 03, 2008
//

சுப்பையா சார்,
எல்லா பயோடேட்டாவும் உருப்படியாகத்தான் எழுதினேன். உங்கள் பயோடேட்டாவை நீங்களே எடைபோடக் கூடாது. வேண்டுமென்றால் நாமக்கல் சிபியிடம் சொல்லி சரிபார்க்கச் சொல்கிறேன்.

:)

பெயரில்லா சொன்னது…

:)

பரிசல்காரன் சொன்னது…

டீச்சருக்கு..

ப்ரசண்ட் டீச்சர்!

கோவி.க்கு..

:-)

நசரேயன் சொன்னது…

நல்ல தொகுப்பு கோவி.கண்ணன்..

துளசி டீச்சர் சேவையை தொடர்ந்து செய்ய வாழ்த்த வயது இல்லாமல் வணங்குகிறேன்

ambi சொன்னது…

//மற்றும் 'சிறுமி' துர்கா.
//

டீச்சரின் பயோடேட்டாவா? சூப்பர்.

ஹாஹா, நுண்ணாரசியலை ரசித்தேன் கோவி அண்ணா.

ஒரு சின்ன திருத்தம், சிறுமி இல்லை, குழந்தை தர்ஹா, சாரி துர்கா. :))

thamizhparavai சொன்னது…

டீச்சருக்கு வாழ்த்துக்கள்...
கோவியாருக்கு பாராட்டுக்கள்....

rapp சொன்னது…

அவங்க ஸ்பெஷாலிட்டியே, சர்ச்சைக்குரிய இடத்திலும் அழகான கமென்ட் போடறதுதான்

வடுவூர் குமார் சொன்னது…

முகப்பில் உள்ள படம் அருமையாகவும்,பக்கத்தை அருமையாகவும் மாற்றி அமைத்துள்ளீர்கள்.
டீச்சர் பற்றி நான் வேறு சொல்லனுமா??
அடுத்தது யாரு?

கயல்விழி சொன்னது…

எனக்கும் முதல் பதிவில் பின்னூட்டமிட்டது துளசி டீச்சர் தான்.


அவர்களுடைய பயணக்கட்டுரைகள், படங்கள்(முக்கியமாக கோகி படங்கள்), மற்றும் பின்னூட்டங்களுக்கு நானும் ஒரு விசிறி.

cheena (சீனா) சொன்னது…

aakaa துளசிக்க்கு இத்தனை கச்சிதமாக சுய விபரக் குறிப்பு எழுதியது பாராட்டுக்குறியது

பெயரில்லா சொன்னது…

நன்றாக தொகுத்திருக்கிறீர்கள். தொடர்க தங்கள் பதிவுச்சேவை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்