"ஊரோடு ஒத்துப் போ" என்ற வழக்கிற்கு சரியான பொருள் இறை நம்பிக்கைத் தான். தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும், புகழவைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கைகொடுக்கும் அறுமருந்து ஆன்மீகம், நான் தீர்த்தயாத்திரை சென்றேன், ஹஜ்ஜுக்கு சென்றேன், வேளாங்கன்னிக்கு பாதயாத்திரை சென்றேன், ஐயப்பனுக்கு மாலை போட்டேன் என்று கூறுபவர்களின் நடவடிக்கைகளை நன்றாக உற்றுப் பாருங்கள். தீர்த்தயாத்திரைக்குச் சென்றபிறகும் அதற்கும் முன்பும் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் இருப்பார்கள். இவையெல்லாம் வீன்பெருமையாக தன்னைத் தானே போற்றிக் கொள்ளவும், அடுத்தவர் தன்னை நல்ல ஒரு ஆன்மிகவாதியாக நினைப்பார் என்பதற்காகவும் சொல்லப்படுபவை.
அன்மையில் "அனுவைக் கண்டுபிடித்தாலும் கிரகத்தைக் கண்டுபிடித்தாலும் ஆண்டவன் 'அணு'க்'கிரகம்' தேவை" என்று வாசகமும், அதன் தொடர்பில் பிறரை எள்ளி நகையாடும் பின்னூட்ட வாசகங்களும் இட்லிவடையார் பக்கத்தில் எழுதப்பட்டு இருந்தது. ஆண்டவனுக்கு இவர்கள் செய்யும் கைமாறாக எழுதுகிறார்கள் என்று நினைப்பதைவிட பார்த்தாயா எப்படி இருந்தாலும் இறைவன் துணையின்றி எதுவும் நடக்காது என்ற எள்ளுதலே அந்த வாசகத்தில் காணப்படுபவை. சிவன் கழுத்து பாம்பு போலவே...கடவுள், இறைவன் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு போலவும் அவற்றிற்கான பேட்டன் உரிமையை இவர்கள் வைத்திருப்பது போலவும், வேற வழியே இல்லை நீங்கள் வணங்கித்தான் ஆகவேண்டும் என்று வியாபர வாக்கியமாகவே அதனைப் பார்த்தேன்.
இறை நம்பிக்கை என்பது ஒரு உணர்வுதான். அதை உணர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் வெறுமனவே பிறரைப் பழிக்க அதனைப் பயன்படுத்த யாதொரு அருகதையும் இல்லை. இவர்களின் இறைவன் குறித்த போற்றுதலும் ஒன்றாம் தர நடிகரின் நான்காம் தர ரசிகரின் போற்றுதலும் ஒன்றே. இறைவன் என்று ஒருவன் இருந்தால் தன் பெயரை வைத்து இவர்கள் புகழ்பெறவோ, மற்றவரை இகழவோ அனுமதிக்க மாட்டான்.
வெறும்பயல்களெல்லாம் சாதிப் பெருமை பேசி தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதற்கு ஒப்பானது வெறும் வாயில் இறைப்புகழ் பாடுபவர்களின் செயல். இவர்கள் உண்மையிலேயே இறைவன் புகழைப் போற்ற வேண்டுமென்றால் அதனை பிறர் தன்னாலேயே புரிந்து கொள்ளும் வண்ணம், உணர்ந்து கொள்ளும் வண்ணம் நடந்து கொள்வதுதான் வழியே. அப்படிப்பட்ட பலரைப் பார்த்திருக்கிறேன். நல்ல நம்பிக்கை உடையவர் எவருமே தனக்கு எல்லாமே தெரியும் என்று பீற்றிக் கொள்ளவோ, தற்புகழ்ச்சிக்காகவோ பேசவோ செய்யமாட்டார்கள்.
வெறுமனே இறை நம்பிக்கையும் அதன் பொருட்டான போற்றுதலும் எந்த பயனும் இல்லை, ஜால்ரா போடுபவர்கள் யார் உண்மையாக தனது பெயரைக் கெடுக்காமல் போற்றுபவர் யார் என்பதெல்லாம் இறை சக்தி அறியாதது அல்ல. மற்றவர்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் என்கிற பெரிய மனசுக்காரர்கள் தங்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா ? முதலில் தமக்கு வேண்டுதல் இல்லையா ? என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்வது நல்லது, தானே இறைவன் முன் பிச்சைக்காரானக் இருப்பவர் பிறருக்காவும் இரக்கிறார் என்று சொல்வது பெருந்தன்மையா ? பிறருக்காக பிரார்தனைச் செய்பவர்கள் எவருமே அதனை வெளியே சொல்ல மாட்டார்கள்.வேண்டுதல் கூட வெளியே தெரியாத அளவுக்கு வேண்டிக் கொள்பவர்களே உண்மையான இறை அடியார்கள். 'வேண்டுதலை வெளியே சொல்லக் கூடாது' என்பது பிறர் பொருட்டு வேண்டிக் கொள்வதை வெளியே சொல்லக் கூடாது என்பது பற்றிய கூற்றுதான்.
நாத்திவாதிகள் இறை சக்தியை கேவலப்படுத்துவதை விட, 'உன் கீழான நிலைக்கு, தீராத நோய்க்கும், குறைக்கும் காரணம் இறைவன் உன் தலையில் எழுதிய விதியே' என்று பழிப்பு காட்டும் அரைகுறை ஆன்மிகவாதிகளின் செயல் மிகவும் கேவலமானது, கீழானது. கடவுள் பெயரால் பிறரைக் கேவலப்படுத்தும் செயலை நாத்திகன் கூட செய்ய மாட்டான்.
இந்த தீபாவளியில், ஆன்மிகத்தை விளம்பரங்களுக்காக பயன்படுத்தும் மனங்களில் சூழ்ந்துள்ள மாயப்புகழ் என்னும் இருள் நீங்கி உண்மையான ஆன்மீக வெளிச்சம் கிடைக்கட்டும் என்று மட்டும் கூறிக் கொள்கிறேன்.
தலைப்பு உபயம் : என்ன சொன்னார் பரமசிவன்? - சுப்பையா வாத்தியார் இந்த பதிவு சுப்பையா ஐயாவுக்கு எதிராக எழுதப்பட்டது அல்ல.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
11 கருத்துகள்:
நல்ல அறிவுரை, யார் கடைபிடிக்கிறார்கள்...
//தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும், புகழவைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கைகொடுக்கும் அறுமருந்து ஆன்மீகம்
//
அந்த ஆண்டவனே, எந்நேரமும் அவனை புகழ்வதையும் அவனை போற்றுவதையும் தானே விரும்புகிறான்.
நல்ல பதிவு. தற்பெருமை பேசுவதில் ஆன்மீகவாதிகளும் முன்னிலைதான். இறைவனைப் புகழும் உரிமை ஒருவருக்கு இருக்குமாயின் இகழும் உரிமையும் உண்டு. அப்படி இகழ்கின்றவரையோ..கேள்வி கேட்கின்றவரையோ கிண்டல் செய்வது என்பது ஆண்டவன் ஒருவருக்குக் கொடுத்த உரிமையைக் கிண்டல் செய்வது போலாகும்.
உங்கள் கட்டுரை சொல்ல விழையும் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.
மிக நல்லப் பதிவு.
உண்மையிலேயே கடவுளை மிகவும் அவமானத்தை தருபவர்கள் ஆத்திக வாதிகள் தான். கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு அவர்கள் அடிக்கும் கூத்துகள் தான் கடவுளை அதிகமா அவமானப் படுத்துகிறார்கள். அவர்களை விட நாத்திகர்கள் ஒன்றும் கடவுளை இழிவுப்படுத்தவில்லை என்பது தான் உண்மை.
I have to write to you in private.
I could not find your email.
// Radhu said...
நல்ல அறிவுரை, யார் கடைபிடிக்கிறார்கள்...
//
பாராட்டுக்கு மிக்க நன்றி ! கடைபிடிக்கிறவர்கள் நிறைய உண்டு.
//Xavier said...
அந்த ஆண்டவனே, எந்நேரமும் அவனை புகழ்வதையும் அவனை போற்றுவதையும் தானே விரும்புகிறான்.
//
இறைவனை நான்காம் தர அரசியல்வாதி போன்று புகழுக்கு அடிமையானவராக சித்தரிப்பது ஆண்டவனுக்கு புகழைச் சேர்த்துவிடாது.
// G.Ragavan said...
நல்ல பதிவு. தற்பெருமை பேசுவதில் ஆன்மீகவாதிகளும் முன்னிலைதான். இறைவனைப் புகழும் உரிமை ஒருவருக்கு இருக்குமாயின் இகழும் உரிமையும் உண்டு. அப்படி இகழ்கின்றவரையோ..கேள்வி கேட்கின்றவரையோ கிண்டல் செய்வது என்பது ஆண்டவன் ஒருவருக்குக் கொடுத்த உரிமையைக் கிண்டல் செய்வது போலாகும்.
உங்கள் கட்டுரை சொல்ல விழையும் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.
//
G.Ragavan,
ஒரு நல்ல ஆன்மிகவாதியான உங்களுக்கு நான் சொல்வது நன்றாக புரிகிறது. பாராட்டுக்கும் மிக்க நன்றி !
//ஜோசப் பால்ராஜ் said...
மிக நல்லப் பதிவு.
உண்மையிலேயே கடவுளை மிகவும் அவமானத்தை தருபவர்கள் ஆத்திக வாதிகள் தான். கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு அவர்கள் அடிக்கும் கூத்துகள் தான் கடவுளை அதிகமா அவமானப் படுத்துகிறார்கள். அவர்களை விட நாத்திகர்கள் ஒன்றும் கடவுளை இழிவுப்படுத்தவில்லை என்பது தான் உண்மை.
//
ஜோபா 2 (ஜோபா 1 - ஜோதிபாரதி)
கட்டுரையை புரிந்து கொண்டு வலுசேர்பதற்கு மிக்க நன்றி !
//kadaaram said...
I have to write to you in private.
I could not find your email.
//
kadaaram,
மிக்க நன்றி. மின் அஞ்சல் govikannan at gmail dot com.
நடுநிலை இம்மிகூட தவறாமல் எழுதப்பட்ட பதிவு.
// கோவி.கண்ணன் said...
//ஜோசப் பால்ராஜ் said...
மிக நல்லப் பதிவு.
உண்மையிலேயே கடவுளை மிகவும் அவமானத்தை தருபவர்கள் ஆத்திக வாதிகள் தான். கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு அவர்கள் அடிக்கும் கூத்துகள் தான் கடவுளை அதிகமா அவமானப் படுத்துகிறார்கள். அவர்களை விட நாத்திகர்கள் ஒன்றும் கடவுளை இழிவுப்படுத்தவில்லை என்பது தான் உண்மை.
//
ஜோபா 2 (ஜோபா 1 - ஜோதிபாரதி)
கட்டுரையை புரிந்து கொண்டு வலுசேர்பதற்கு மிக்க நன்றி !//
கொஞ்சநாளைக்கு முன்பு வரை தமிழகக் காங்கிரசில் சோ.பா என்றொருவர் இருந்தார். அவரை அழைப்பது போன்ற உணர்வு. சின்ன குழந்தையா இருக்கும் போது நானும் சோ.பா தான். இப்பதான் ஜோ.பா.(அடப் போப்பா என்று யாரும் சொல்லாத வரையில்). ஹா ஹா!(தீபாவளியன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்த வடமொழியைத் தாராளமாகப் பயன்படுத்துங்கள்)
கருத்துரையிடுக