பின்பற்றுபவர்கள்

30 அக்டோபர், 2008

விடுதலை புலிகளுக்கும், தமிழ் ஈழ விடுதலைக்கும் தமிழக ஆதரவு நிலை !

ஈழ மண்ணில் அமைதி இன்மை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது, ஆரம்பத்தில் உரிமை கோரல் என்ற நிலையில் தொடங்கிய போராட்டம், அதாவது தமிழர்கள் இரண்டாம் குடிமக்களாக நடத்தப்பட்டு அரசாங்க கல்வி வேலை வாய்ப்புகளில் பின்னுக்குத் தள்ளி சிங்களர்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை கொடுத்ததைத் எதிர்த்து தொடங்கிய போராட்டம், அதை இலங்கை அரசாங்கம் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பதால், ஆயுதம் ஏந்தி தனி நாட்டை அடைவது (பெறுவது அல்ல) என்றதாக வளர்ந்தது. இதில் பல்வேறு தனித் தமிழ் போராட்டக் குழுக்கள் பல்வேறு மனநிலையில் இருந்ததால், ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு இது என்று அனைத்துலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒன்றுபட்ட மனநிலை இல்லாமல் இருந்தது துர் அதிர்ஷ்டவசமானது, தமிழர் விடுதலைக் குறித்த நிலைப்பாடுகளை உறுதி செய்து கொள்ளும் பொருட்டும், சிங்கள அரசிற்கான பல்வேறு போராளி குழுக்களின் ஆதரவு / எதிர்ப்பு நிலை என்பதில் இருந்த வேறுபாடுகள், மாறுபட்ட கருத்துக்கள் விடுதலை புலிகள் தரப்புகளுக்கும் மற்ற தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையே சகோதர யுத்தத்திற்கும் வழிவகுத்தது அதில் பல போராளி குழுத்தலைவர்கள் கொல்லப்பட்டனர் என்பதையெல்லாம் அனைவருமே அறிந்தது தான்.

தமிழர்கள் பெரும்பாண்மையினரான யாழ்பானம் மற்றும் பல பகுதிகள் முற்றிலுமாக விடுதலை புலிகளின் கட்டுபாட்டில் தான் உள்ளன, அதில் ஒரு பகுதியின் தலைவராக இருந்த கருணாவை சிங்கள அரசு தன்வசப்படுத்தியதாக பின்னர் அறியப்பட்டது. தமிழர்களின் பகுதிகள் இவை இவை என்றும் அந்த பகுதியில் சிங்கள ராணுவம் நுழைய முடியாதது என்பதுதான் கடந்த 20 ஆண்டுகளிக்கும் மேலான நிலை. முறையாக உலகிற்கு அறிவிக்கப்படாத தனி நாடாகவே இலங்கையின் தமிழர் பகுதிகள் இருந்துவருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

*******

நண்பர் மணிகண்டன் கேட்டக் கேள்விக்கு வருகிறேன்,

"புலிகளின் இன்றைய மற்றும் நேற்றைய நடவடிக்கைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா/எதிர்க்கிறீர்களா என்ற குழப்பம் எனக்கு இன்றும் நீங்கவில்லை. "

புலிகள் யாருக்குப் போராடுகிறார்கள் என்கிற அடிப்படை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர்கள் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அப்பாவித் தமிழர்களை கேடயமாக ஆக்குகிறார்கள் என்கிற செய்திகள் எந்த அளவு உண்மை ? புலிகளும் தமிழர்கள்தானே, அவர்களே தங்கள் மக்களை ஈழ அரசுக்கு எதிராக கேடயாமப் பயன்படுத்தினால் போராட்டத்தின் நோக்கமே கொச்சைப்படுகிறது. சிங்கள அரசின் நோக்கமே இன ஒழிப்புதான், அதைத் எதிர்த்து தான் போராட்டமே நடைபெறுகிறது என்ற நிலையில் அப்பாவி தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்று சொல்வது தங்களின் இன அழிப்புக்கு தங்களே உடந்தையாக இருக்கிறார்கள், அதாவது விடுதலை புலிகள் தமிழ் இன அழிப்பிற்காக சிங்கள அரசுக்கு மறைமுகம் உதவுகிறார்கள் என்று சொல்வதைப் போன்றது. அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லுபவர்களின் கூற்று இத்தகைய அபத்தமானது தான். நிராகரிக்கக் கூடியது.

விடுதலைப் புலிகள் அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களையெல்லாம் கட்டாயப்படுத்தி ஆயுதப் பயிற்ச்சி கொடுத்து கொடுமை படுத்தி இருந்தால் அவர்கள் எல்லோரும் சிங்களர்கள் வசிக்கும் பகுதிக்கோ, வேறு நாடுகளுக்கோ இடம் பெயர்ந்து தமிழர் பகுதியில் விடுதலைப் புலிகள் தவிர்த்து யாருமே இருக்க முடியாது. ஆனால் நிலவரம் அப்படியா ? புலம்பெயர்ந்தவர்கள் தவிர்த்து பிற தமிழர்கள் அங்கு தானே வசிக்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் தமிழர்களை கொடுமைப் படுத்துகிறார்கள் என்று சொல்வதும் நிராகரிக்கக் கூடியது.

இலங்கை அரசு தமிழர்களின் நலனில் அக்கரைகாட்டுகிறதா ? அண்மையில் இலங்கையில் சுனாமியில் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்றால் பெரும்பாலும் தமிழர்கள் வசித்தப் பகுதிகள் தான், உலக நாடுகள் அளித்த பல்வேறு பொருள் மற்றும் பண உதவிகளை முறையாக தமிழர்களுக்கு அனுப்பாமல் சிங்கள புத்த பிட்சுகள் தடுத்ததை அனைவருமே அறிவர். மக்களுக்கு பொதுவானவராக இருக்கக் கூடிய புத்த பிட்சுகளுக்கே, அப்படி ஒரு பரிதாபமான சூழலிலும் இவ்வளவு இன வெறி இருக்கும் போது, பதவி அதிகாரத்தில் இருக்கும் மற்ற சிங்களர்களின் இனவெறி பற்றி எதுவும் சொல்லத் தேவை இல்லை. இவர்களுடன் தமிழர்கள் சேர்ந்து வசிக்க முடியும் என்பதும் கூறு (சாத்தியம்) அற்றது. சிங்கள அரசு தங்கள் அரசு நடுநிலையானது என்று காட்ட மட்டை ஆட்டத்தில் பேருக்கு ஒரே ஒரு தமிழரை சேர்த்துக் கொண்டு இருக்கிறது, பாராளுமன்றத்தில் ஒரு சில தமிழர்களைச் சேர்த்துக் கொண்டு இருக்கிறது, அதற்கும் உள்ளுக்குள் என்னவெல்லாம் எதிர்ப்பு என்பதை, சேர்ந்து வாழலாம் என்ற ஆசையிலும், பிரிவினையில் நம்பிக்கை இல்லாத தமிழர்களைக் கேட்டால் தான் தெரியும்.

விடுதலைப் புலிகளின் நேற்றைய நடவடிக்கைகள் என்பவை நடந்து முடிந்தவை, அது பற்றிப் பேச ஒன்றும் இல்லை, இராஜிவ் காந்தி படுகொலையை தமிழ்மண்ணில் நிகழ்த்தியது தமிழக தமிழர்களுக்கு பெருத்த அவமானம் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அதற்கு விடுதலைப் புலிகள் தரப்பும் வருத்தம் தெரிவித்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் அழிவை கல் மனதுடன் வேடிக்கைப் பார்க்க வசதியாக 'இராஜிவின் ஆன்மாவை' கண்களை மறைத்துக் கட்டிக் கொண்டும், காலத்திற்கும் அதையே காரணாமாகச் சொல்லிக் கொண்டி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மிசாவில் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு உயிரைக் கையில் பிடித்த திமுககாரர்கள் பழிவாங்குதல் போல் நினைத்திருந்தால் காங்கிரசுடன் எந்த காலத்திலும் கூட்டு வைத்திருக்கவே மாட்டார்கள். தன்னை ஓராண்டிற்கும் மேலாக சிறையில் வைத்திருந்தவர் ஜெ என்று கோபம் கொப்பளித்துக் கொண்டே இருந்தால் வைகோ ஜெவுடன் கூட்டணி அமைத்திருக்காமல் திமுக ஜோதியில் கலந்து மறைந்திருப்பார். வெள்ளைக்காரன் இந்தியர்களை அழித்தான் மானமுள்ள இந்தியன் எவனுமே இங்கிலாத்திற்குச் செல்லக் கூடாது வெள்ளையர்களிடம் வேலை பார்க்கக் கூடாது என்று ஒருவர் சொன்னால் அது அபத்தம், சொல்லுபவர் மன நிலையை சோதித்து அறிய வேண்டும்.

ஜப்பான் அமெரிக்காவையே எடுத்துக் கொள்வோம், ஹிரோஷிமா, நாகசாகி பற்றி எப்போதும் பெருமூச்சி விட்டுக் கொண்டிருந்தால் அது தீராப்பகையாகி அமெரிக்கர்களை அழிப்பதிலேயே குறியாக இருந்திருப்பர் ஜப்பானியர்கள். ஆனால் நிலைமை அப்படியா ? இன்றைய தேதியில் மிகவும் வலுவான நட்பு நாடுகள் என்றால் அது அமெரிக்காவும் ஜப்பானும் தான்.

உலகெங்கிலுமே பழையதை மறந்து கைகோர்பது என்பது நடைமுறைதான். தன் தந்தையைக் கொன்றவர்கள் என்ற நினைப்பே இருந்திருந்தால் பிரியங்கா நளினியை சந்திக்கச் சென்று இருப்பாரா ?

சிங்கள அரசு தமிழர்களுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்து கொள்ளவோ, அவர்களுக்கு சம உரிமை கொடுக்கவோ கடந்த 30 ஆண்டுகளாகவும் முன்வராத நிலையில், தமிழர்களின் ஒரே நம்பிக்கை விடுதலைப் புலிகள் தான், புலிகளின் அடிப்படைப் போராட்டமும் தமிழர்கள் நலன் முன்னிறுத்தியதுதான் என்பதில் தமிழக தமிழர்கள் (பலர்) தெளிவாகவே இருக்கின்றனர்.

100 பேர் ஒற்றுமையாக இருக்கும் இடத்தில் அதில் 10 பேர் சலசலப்புக் காட்டுவார்கள், தமிழகத்திலும் அதுதான் நடக்கிறது. அந்த 10 பேர் காங்கிரசும் அவர்களுடன் கூட்டணி அமைக்க முயல்பவர்களும் தான். உணர்ச்சி வசப்படுபவர்கள் சிந்தித்துப் பாருங்கள். பஞ்சாபிகளின் ஓட்டுக்காக இந்திராகாந்தி படுகொலையை மறந்த காங்கிரஸ், இராஜிவ் காந்தி பற்றி என்றுமே பேசுகிறது என்றால் அதற்குக் காரணம் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் ஓட்டுரிமை இல்லை என்பதைத் தவிர்த்து 'பாசத்தால் அவர்கள் இன்னும் இராஜிவை மறக்கவில்லை' என்றெல்லாம் பெருமையாக நினைக்க முடியவில்லை. எல்லாம் லாப நட்ட அரசியல் தான். :(

"மறப்போம் மன்னிப்போம் " அதுதான் மனிதனுக்கு உயர்வு, ஐயன் திருவள்ளுவர் தமிழர்களுக்கென இன்னும் கூட மாற்றியே சொல்லி இருக்கிறார்.

'இன்னா செய்தாரை ஒறுத்தல்...'

பின்குறிப்பு : எனது கட்டுரையில் தகவல் பிழைகள் இருக்கலாம், ஆனால் அது கட்டுரையின் சாரத்தைக் குறைத்துவிடாது என்றே நினைக்கிறேன்

10 கருத்துகள்:

சி தயாளன் சொன்னது…

//தமிழர்கள் பெரும்பாண்மையினரான யாழ்பானம் மற்றும் பல பகுதிகள் முற்றிலுமாக விடுதலை புலிகளின் கட்டுபாட்டில் தான் உள்ளன//

யாழ்ப்பாணம் (குடாநாடு) 1995 முதல் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் சூரியக் கதிர் நடவடிக்கையின் காரணமாகத்தான் நானும் கடைசியாக இடம்பெயர நேரிட்டது.

தற்போது புலிகளின் 100% வீத நிர்வாகத்தில் இருப்பது வன்னி எனப்படும் பிரதேசம். கிளிநொச்சி, முல்லைத்தீவு, இதில் அடங்கும்.

கருணா மட்டக்களப்பு இராணுவத்தளபதியாக இருந்தவர்.

குடிமகன் சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மை தான் ..

ஈழப் பிரச்சினையை இப்போது இந்திய அளவில் பேச வைச்சததும் அம்மா தான் ..அதை இப்படி பிசுபிசுக்க வைச்சதும் அம்மா தான் ...

இப்பிரச்சினையை வைத்து கலைஞருக்கு குடைச்சல் கொடுக்க ஈழ ஆதரவு எனும் அறிக்கையை கொடுத்தார்.. இதன் விளைவாக அனைத்து கட்ட்சிகளும் ஒரே குரலாக ஒலிக்க ஆரம்பித்தனர் ..அதனால் தான் காங்கரசும் எங்கே தாங்கள் தனித்து விடப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் தலையாட்டியது ..
ஆனால் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறதே என்ற கவலையில் ..மாற்று அறிக்கை அம்மா கொடுத்தார்கள் ...ஆதரவளிக்கும் மற்றவர்களையும் அவர்களின் பேச்சுகளையும் புலி ரத்தம் பாச்சினார்கள்....
இதன் விளைவாக காங்கிரசும் எதிர் தாளம் போட ஆரம்பிச்சது ...கலைஞரும் எதிர் தாளத்திற்கு பணிய வேண்டியதாயிற்று ....


புலிகளை ஆதரிக்கும் வைகோவும் எதிர்க்கும் அம்மாவும் ஒரே கூடத்தில் அதிகார பகிர்வு ஒன்றே குறிகோளுடன் இருக்கும் வரையில் ஈழ ஆதரவு குரல் என்பது வெறும் சந்தர்ப்ப வாத குரல் தான் ...
இவர்களின் ஆதரவு குரலை கேட்பதுக்கு பதிலாக பிரபாகரன் , ராஜபக்சேயுடன் அதிகார பகிர்வு செய்வதே மேல் ...

வெத்து வேட்டு சொன்னது…

if America and Japan can work together, Can't Tamils and Singalese also "work" together in the future? :)

கிருஷ்ணா சொன்னது…

நல்ல பதில்.
அருமை

கோவை சிபி சொன்னது…

//அங்கு தானே வசிக்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் தமிழர்களை கொடுமைப் படுத்துகிறார்கள் என்று சொல்வதும் நிராகரிக்கக் கூடியது.//

புலிகளை எதிர்த்தாலும்,ஆதரித்தாலும்
எதார்த்த உண்மை இதுதான்.இது இங்குள்ள காங்கிரஸ் காரனுக்கு புரியனும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வேதனையின் விளிம்பில் பாவலர் அறிவுமதி எழுதிய கவிதையின் சில வரிகளை இங்கு விட்டுச் செல்கிறேன்.

படகில் ஏறினோம்
படகுகளை விற்று
இங்கே வீடு கிடைப்பதற்குள்
அங்கே நாடு கிடைத்துவிடும்

இராமேசு வரத்தில்
எல்லோரும்
குளித்துக் கரையேறுகிறார்கள்
நாங்கள்
குதித்துக் கரையேறுகிறோம்.

//கருணா மட்டக்களப்பு இராணுவத்தளபதியாக இருந்தவர்.//

அன்புச் சகோதரர் "டொன்" லீ தயாளனின் கூற்றுப்படி நாடு எப்போதோ கிடைத்துவிட்டது. அவரை அறியாமல் அது வந்துவிட்டது. அனைத்துலக அங்கீகாரமும் தமிழர் வாழும் இடங்களின் ஒருங்கிணைப்பும் மட்டுமே மீதம் இருக்கிற வேலை.

கருணா அம்மான் இப்போது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினாராக இருக்கிறாரே, அவரை மதித்து தாய்லாந்து பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்கள் விடுதலைப் புலிகள்.
காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களை என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்?(பக்கத்திலேயே வைத்துக் கொண்டு இருக்கச் சொல்கிறார்களா?) உங்கங்களுடைய முந்தைய பதிவில் பின்னூட்டமிட்டிருக்கும் சிலர்.

கோவி.கண்ணன் சொன்னது…

கருத்துக் கூறிய 'டொன்' லி, ஜோபா 1, குடிமகன், வெத்துவேட்டு, கிருஷ்ணா, கோவை சிபி ஆகியோருக்கு மிக்க நன்றி !

மணிகண்டன் சொன்னது…

நன்றி கோவி.

IRA இயக்கம் குண்டு வைத்து கொண்டு இருந்த சமயத்திலும் இங்கிலாந்து அரசாங்கம் (எந்தவித முன்நிபந்தனைகள் இல்லாமல்) பேச்சுவார்த்தை நடத்தியதை நாம் மறக்ககூடாது.

Adriean சொன்னது…

//தமிழர்கள் பெரும்பாண்மையினரான யாழ்பானம் மற்றும் பல பகுதிகள் முற்றிலுமாக விடுதலை புலிகளின் கட்டுபாட்டில் தான் உள்ளன.//
முக்கியமான தகவல் பிழை உங்கள் கட்டுரையின் சாரத்தைக் மிக குறைத்துவிட்டது.

நவநீதன் சொன்னது…

நண்பர் வெத்து வெட்டுக்கு பதிலளிப்பது என் கடமையாகிறது....

ஐயா...
சேர்ந்து வேலை செய்வது (work together) என்பது வேறு..... சேர்ந்து வாழ்வது (live together) என்பது வேறு....

இரண்டு பேர் சம நிலைமையில் இருந்தால் சேர்ந்து வேலை செய்யலாம்...
ஒருவனை உயர்த்தியும் மற்றவனின் உரிமைகள் மறுக்கப் பட்டும் இருந்தால் சேர்ந்து வாழ்தல் சாத்தியப் படாது....

ஜப்பானும் அமெரிக்காவும் வேறு வேறு நாடுகள் என்பதால் ஒருவர் உரிமையை மற்றொருவர் பறிக்கும் அவலம் நிகழவில்லை. இருவருமே ஒரே நிலைமையில் இருந்தார்கள்...

அனால் இங்கு ஈழ தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சமமான உரிமைகள் கொடுக்கப் பட்டால் தான் (may be tamil eezham) , அவர்கள் சேர்ந்து வேலை செய்யும் நிலை வரும்...

@ கோவிஜி,

விடுதலை புலிகள் அப்பாவிகளை கேடயமாக பயன்படுத்துவதாக கூவுபவர்கள் பார்வைக்கு அப்பாவி தமிழர்களை சிங்களர்கள் படுத்தும் பாடு ஏன் தெரிவதில்லை என்பது எனக்கு புரிவதே இல்லை...

சிங்களர்கள் சம உரிமை கொடுத்து விட்டால் போராட்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லையே... அப்புறம் எங்கே கேடயம் வரப் போகிறது....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்