பொருளீட்டலுக்காக வாழ்கையின் பகுதியைத் தொலைத்தவர்கள் என உறவுகளை விட்டு தொலைவில் நீண்ட நாளாக வெளிநாட்டில், தொலைவான நகரங்களில் வசிப்போர்களுக்கு எப்போதாவது ஏற்படும் அனுபவம்.
தற்பொழுது தொலைபேசி, வெப்காம் மூலமாக உடனடியாக நினைத்த நேரத்தில் தொடர்ப்பு கொள்ள முடிகிறது. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை உடனடி தொடர்பு ஒருபக்கம் மட்டுமே தகவல் தொடர்பு வசதி இருந்தாலும் மறுபக்கம் இல்லாததால் வாய்ப்பற்றதாகவே இருந்தது. இண்டெர் நெட் உலகம் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. முன்பெல்லாம் கடிதம் எழுதுவது ஒரு தகவல் பரிமாற்றம் என்றாலும் அதற்கான நேரம் செலவு செய்து கைப்பட எழுதி அனுப்பும் போது படிப்பவர்களுக்கு அதில் நல்ல தாக்கமும் உணர்வும் ஏற்படும். இப்பொழுது இமெயில், செல்பேசி அலைப்பு என்றாகிவிட்டதால், நாம் பிறருக்கு செலவு செய்யும் நேரம் குறைந்தது போலவே அவர்களை நினைத்துப் பார்க்கும் நேரமும் குறைந்து உறவுகள் இருக்கிறது என்ற வகையில் தானே அவரவர்களின் வாழ்க்கையும் சென்று கொண்டு இருக்கிறது.
இண்டெர் நெட் வசதிகளை பயன்படுத்திக் கொண்டு மிகுந்த 'இ-பிரார்தனா' போன்று வெர்சுவல் (மெய் நிகர்) மின் அஞ்சல் வழி வழிபாடு, மின் அஞ்சல் வழியாக ஆசி பெறுவது, பிரசாதமாக ஸ்கேன் செய்யப்பட்ட படங்களைப் பெறுவது என ஒருபக்கம் கடவுள் வியாபாரம் நடப்பதைப் பார்க்கும் போது, வெறும் சடங்கு என்பதில் கூட எவ்வளவு விடாப்பிடியாக (ப்ளாட் வீட்டு கிரக பிரவேசத்துக்கு மாட்டு பொம்மை செல்லுமாம்) இருக்கிறார்கள், 'ஏஞ்சாமி இம்புட்டு கஷ்டப்படுகிறீர்கள் ?' என்று கடவுளே கேட்டாலும் நிறுத்தமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
வெப்காம், இண்டெர் நெட் வசதியை மிகவும் சரியாக பயன்படுத்துவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்கும், முன்பெல்லாம் பெரிய தலைவர்களின் இறப்பு முதல் இறுதிச் சடங்குகள் வரை நேரடியாக ஒளிப்பரப்பப் பட்டதைப் போலவே, பெற்றோர் மற்றும் உறவினர்களின் இறுதிச் சடங்குகளை நேரடியாக இணையம் வழியாக காட்டுவதற்கு நிறுவனங்கள் வந்துவிட்டனவாம். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நெருங்கியவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் இறுதிச் சடங்கில் வெர்சுவலாக கலந்து கொள்ளும் வசதி ஏற்பட்டு இருக்கிறது.
இது சரியா தவறா என்று சொல்லத் தெரியல, ஆனால்
"எப்போ இருந்தாலும் ஆவறது ஆகப் போவுது... தெரிஞ்சது தானே... புதுசா என்னம்மா சொல்றே..."
"இன்னும் இரண்டு நாள் தான்ன்னு டாக்டர் டைம்...கொடுத்திருக்கிறார்...வந்தவுடன் சொல்லவேண்டாமே என்று தான் நீ காப்பி குடிக்கும் வரை வெயிட் பண்ணினேன்"
"அம்மா......! நான் நாளைக்கு மதியம் ப்ராங்பர்டில் மீட்டிங்கில் இருக்கனும்...அங்கிருந்து மாலை லண்டன்...அப்படியே நியூயார்க்...அதாவது நாளென்னிக்கு அமெரிக்காவில் இருப்பேன்"
"உங்க அப்பாடா...தூக்கி வளர்த்த அப்பாடா "
"ஆமாம் அதுக்கு என்னச் செய்யச் சொல்றே...நான் போன் பண்ணி எல்லா ஏற்பாடும் பண்ணச் சொல்லிட்டேன்... அப்பாவுக்கு முடிஞ்சதும் போன் பண்ணி சொல்லிடுங்க அரை மணி நேரத்தில் கேமராவும் கையுமாக வந்துடுவாங்க"
"கடைசியாக கூட இருக்கனும்னு கூடத் தோனலையா ?"
"அம்மா...வெப்காமில் எல்லாத்தையும் பார்த்துகிறேன்... நாளென்னிக்கு இரவு 11:30 மணிக்கு மேலே ப்ரீயா இருப்பேன்...இந்தியாவில் பகல் தான்...அந்த சமயத்தில் அப்பாவின் இறுதி சடங்கை வச்சிக்கிற மாதிரி ஏற்பாடு செய்துடு"
********
"ஏங்க இதுக்கு போய் நம்ம டூரை கேன்சல் பண்ணனுமா ? வயசாகி தானே செத்து இருக்காங்க வெப்காமிலேயே உங்க அம்மாவைப் பார்த்துக்களாங்க...அதான் நம்ம வீட்டில் 52" எல்சிடி டிவி இருக்கே கிட்டே இருப்பது போல் தெளிவாக தெரியுங்க..."
*********
ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
21 கருத்துகள்:
பழைய செய்திய இப்போ பதிவா போடறிங்க. ஏற்கனவே எத்தனை அமெரிக்கா பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் 60 ஆம் கல்யாண வைபவம் வெப் கேமில் பார்த்து ரசித்தார்கள். அதே போல இங்கு உள்ள மாமிகளும் தங்கள் பேரன் பேதி விளையாட்டுக்களை வெப் கேமில் பார்த்து ரசித்தார்களே., சிஃபி கபெ யில் (sify cafe) இதற்கென தனி அறையே உண்டு.
நானே இரு முறை வைகோ பேச்சை வெப்காமில் சிங்கப்பூர், அய்ரோப்பிய சாட்டர்களுக்கு ஒலி பரப்பினேன் (வைகோவின் அனுமதியுடன், அவருக்கும் மிக்க மகிழ்ச்சி).
யாகூ தமிழ் நாடு அரை சட்டேர்கள் சந்திப்பை (TN1 room chatters meet) நாங்கள் வெப்காமில் ஒலி பரப்பு செய்ததும் ஊர் அறிந்த செய்தியே.
குப்பன்_யாஹூ
//குப்பன்_யாஹூ said...
பழைய செய்திய இப்போ
.../
நீங்கள் சொல்வது தான் பழைய தகவல் அவை விழாக்கள், லேட்டஸ்ட் e-funeral ceremony.
:)
ஹூம்... உலகம் போற போக்கு லே......
என்னத்தை சொல்ல.......
வெப்காம்ல வேற என்னென்னமோ பண்றாங்க
ஹம்ம்ம்ம்...
உறவுகள் தளர்ந்து போவதை உணர முடிகிறது... அவசர உலகம் என்றாலும் இது கொடுமையினும் கொடுமை...
//"ஏங்க இதுக்கு போய் நம்ம டூரை கேன்சல் பண்ணனுமா ? வயசாகி தானே செத்து இருக்காங்க வெப்காமிலேயே உங்க அம்மாவைப் பார்த்துக்களாங்க...அதான் நம்ம வீட்டில் 52" எல்சிடி டிவி இருக்கே கிட்டே இருப்பது போல் தெளிவாக தெரியுங்க..."//
நீங்க டூர்ல இருக்கும் போது உங்களோட வீட்டு 52" டீ.வி.ய எப்படி பாப்பீங்க?
//அமர பாரதி said... நீங்க டூர்ல இருக்கும் போது உங்களோட வீட்டு 52" டீ.வி.ய எப்படி பாப்பீங்க?//
டூர் போறது நாளைக்கு அல்லது மறுநாள் என்று தெளிவாக எழுதி இருக்கனுமா ? :)
நல்லா பாயிண்ட் பிடிக்கிறாங்கப்பா... எழுதிட்டு நானும் இதையோ யோசிச்சேன் :)
உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே.....
//நையாண்டி நைனா said...
ஹூம்... உலகம் போற போக்கு லே......
என்னத்தை சொல்ல.......
//
:) இயந்திர வாழ்க்கை !
//வருங்கால முதல்வர் said...
வெப்காம்ல வேற என்னென்னமோ பண்றாங்க
1:08 AM, October 23, 2008
//
அதெல்லாம் படச்சுருள் வந்த காலத்தில் இருந்தே பண்ணுறாங்க !
//VIKNESHWARAN said...
ஹம்ம்ம்ம்...
உறவுகள் தளர்ந்து போவதை உணர முடிகிறது... அவசர உலகம் என்றாலும் இது கொடுமையினும் கொடுமை...
1:31 AM, October 23, 2008
//
VIKNESHWARAN,
தவிர்க்க முடியாத போது பயன்படுத்தும் வசதிகளெல்லாம், வசதிக்காக தவிர்க்க முடியாதாக மாறிவிடுகிறது !
:)
//துளசி கோபால் said...
உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே.....
8:26 AM, October 23, 2008
//
துளசி அம்மா,
கம்ப்யூட்டர் கடவுளாக மாறி போச்சுடான்னு ஒரு பாட்டு பாடுவாங்களே.
:)
இணையத்தின் மூலம் கிடைக்கும் வசதிகள் இந்த அவசர உலகத்திற்கு உதவுகின்றன. அதே சமயம் காலத்தின் கட்டாயம் இறுதிச் சடங்குகளில் கூட கலந்து கொள்ள இயலாமை. என்ன செய்வது ? பணம் பணம் என்று அலைகிறோம். அதற்கு ஏதேனும் இழப்பு வேண்டாமா?
அயலகத்தில இருக்கும் ரத்தங்களூடன் தினமும் மின்னஞ்சல், தேவைப்படும் போது தொலைபேசி, வாரமிருமுறை மணிக்கணக்கில் வெப்காம் அரட்டை - இவ்வளவும் பக்கத்தில் தான் இருக்கிறார்கள் என ஒரு ஆறுதல் தானே.
என் கூடப் பிறந்த சகோதரனின் திருமணத்தன்று நான் வேறொரு இடத்தில், படித்து முடித்து விட்டு - வேலைக்கான தேர்வு எழுதிக் கொண்டிருந்தேன். அக்காலத்திலும் அப்படித்தான் - இக்காலத்திலும் அப்படித்தான்.
மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.
என்ன கொடுமை அய்யா இது!
கோவி சார்,
நகரங்களில் இயந்திர வாழ்வின் வேகம் அதிகரித்து வருகிறது.
இங்கு நல்ல நட்பை பெறமுடியவில்லை.
அதிக சுயனலத்துடன் அனைவரும் இருப்பதாக தெரிகிறது.
23 வயது வரை கிராமத்தில் வளர்ந்த என்னால் இவற்றை சகித்து போவது கஷ்ட்டமாக இருக்கிறது.
சென்னையில் மக்கள் சக்தி இயக்கத்தால் நடத்தப்பெற்ற சமச்சீர் கல்வி பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர்கள் வெளியிட்ட CD யை 10 பேருக்கு கொடுத்த நான் என் உறவினர் மகளை CBSE பள்ளியில் சேர்க்க இரவு முழுவதும் Q வில் நின்றேன்.
அதிகம் படித்தவர்கள், நாகரிகமானவர்கள் என்று சமுகத்தால் மதிக்கப்படும் என் சக பணியாளர்களிடம் நல்ல கருத்தை, சிந்தனை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
அவர்கள் பேச்சு சினிமா பற்றியும் மானட மயிலாட பற்றியும் உள்ளது.
உறவுகளையும் நட்ப்பையும் மதிக்காமல் சுயனலத்துடன் வாழும் வாழ்க்கை முறையை இன்று குழ்ந்த்தைகளுக்கு நகரமும் ஊடகமும் சொல்லிக்கொடுத்து வருகிறது.
திரு கோவி.கண்ணன் அவர்களே,
இந்த கட்டுரையின் கருத்தை இதற்கு முன் எங்கோ பார்த்தது போல இருக்கிறதே... :)
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்
//"கணனி யுகம் : வெப்காம் மூலம் இன்னும் என்ன செய்யலாம் ?"//
கோவி கண்ணன் அண்ணே வெப்காம் மூலமாக மேட்டரே செய்யுறாங்க:))
பல தளங்களில், வெப் காம் மூலமாக மேட்டர் செய்ய வசதி இருக்காம், பரிசோதித்துவிட்டு எப்படி இருக்குன்னு கொஞ்சம் யாராவது சொல்லமுடியுமா?
தலைப்பை மட்டும் படிப்போர் சங்கம்
துபாய் கிளை
Kusumban
In paltalk, www.paltalk.com, private chat roosm are there for husbands & wifes. But most of the rooms are paid rooms.
I know one couple, the husband is in UK (CEO of a Company)and the wife (Teacher) is in Philipines.
They do online English classes to chatters through webcam.
Kuppan_yahoo
// அம்மா...வெப்காமில் எல்லாத்தையும் பார்த்துகிறேன் //
ஆனால், குப்பை படத்தை முதல் நாள் பார்ப்பதற்கு ப்ளைட் பிடிச்சு போவார்கள்.
கேமராவில் எடுக்கிறார்கள் என்றால் நம்மவர்களில் பலர் இயற்கையாக அழக்கூட மாட்டார்களே!
சாவு வீடுகளுக்குப் போகும் முன்பும் ப்யூட்டி பார்லர் போக வேண்டி வந்து விடும். இதற்கு வேறுவிதமான அலங்காரம் நடைபெறுமோ!
என்னவோ போங்க!
சம்பந்தப்பட்டவர்களின் செவிட்டில் அறைகிறார் போல் பட்டென்று போட்டு உடைத்துளீர்கள்
கருத்துரையிடுக