பின்பற்றுபவர்கள்

19 அக்டோபர், 2008

இதே தலைப்பில், இந்த இடுகையை ஏற்கனவே எழுதி இருக்கிறேன் !

நான் சொல்வது வியப்பாக இருக்கலாம், உண்மையாகக் கூட இருக்கலாம். இவை சரியான அனுமானம் என்றால் ஜோதிடங்கள் சொல்லும் உண்மைகள், மதங்கள் சொல்லும் இறைத் தத்துவங்கள் கூட உண்மையாக இருக்கலாம். ஜோதிடத்தில் எதிர்காலத்தை கணித்துச் சொல்கிறார்கள், அவற்றினால் சொல்லப்படும் எதிர்காலம் குறித்த (சரியான) தகவல்கள் ஜோதிடரின் (ஆழ்ந்த) புலமை பெறுத்தது. பிழைப்புக்காக ஜோதிடம் சொல்பவர்கள் தவிர்த்து அதைக் கலையாக கற்று வைத்திருப்பவர்கள் நம் சுப்பையா வாத்தியார் மற்றும் ஸ்வாமி ஓம்கார் போன்றோர் அளிக்கும் ஜோதிடத் தகவல்கள் நடப்பதற்கு சாத்தியம் உள்ளவைகள், நடக்காது என்று முற்றிலும் நிராகரிக்க முடியாது. அதற்காக ஜோதிடத்தை நம்பித்தான் ஆகவேண்டும் என்றெல்லாம் சொல்ல வரவில்லை.

எதிர்காலம் என்பவை இனிவருபவையா ? ஏற்கனவே நடந்தவையா ? காலம் முன்னோக்கி நகர்கிறது என்கிற அறிதலில் எதிர்காலம் என்பவை இனிவருபவை என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் அவை எந்த அளவுக்கு உண்மை ? உதாரணத்திற்கு 24 மணி நேர நாள் பகுப்பில் 15 மணி என்பது 14 ஆவது மணிக்கு பிறகு வருவது என்று எளிதாக சொல்லிவிடுவோம். 15 மணி என்பது 14 ஆம் மணியின் எதிர்காலம். இப்பொழுது 15 ஆம் மணியில் இருந்து பார்த்தால் 14 ஆம் மணி 25 மணி நேர அளவில் முன்னே நிற்கும் எதிர்காலம் ஆகிறது அதாவது 15க்கு பிறகு 14 வருகிறது. இதுவும் முன்னோக்கி நகரும் காலம் தான் ஆனால் 14க்கு முன்னே நிற்பது 15. ஒரு சுற்று முடியும் நேரத்தில் வரிசை மாறிவிடுகிறது 1-24 to 24-1. இந்த சுற்று ஒரு நாளுக்கு இருப்பது போலவே ஒரு ஆண்டு அளவில் உண்டு. ஜனவரிக்கு பிறகு பிப்ரவரி .... ஜனவரி .... பிப்ரவரி. ஒரு ஆரம்பம் என்ற அளவில் ஜனவரி முன்பாகவும் பிப்ரவரி பின்பாகவும் நமக்கு தெரிகிறது, ஆரம்பம் இல்லாமல் முன்னோக்கி நகரும் காலத்தில் ஜனவரி முதலிலா ? பிப்ரவரி முதலிலா ?அல்லது டிசம்பர் தான் கடைசியா என்று சொல்லவே முடியாது. காலம் நிற்காமல் சுழன்று கொண்டு தானே இருக்கிறது.

இப்போது பிக்பாங்க் தியரிக்கு வருவோம், பிரபஞ்சம் சுறுங்கி விரிவதாக தற்போதைய விஞ்ஞானிகள் கோட்பாடு வகுத்திருக்கிறார்கள், சுருங்கி விரியும் காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. அவற்றை முற்றிலும் வரையறுக்கும் ஆற்றல் மனித இனத்துக்கு ஏற்படாது என்றே நினைக்கிறேன், ஒளியின் வேகத்தைவிட பயணம் செய்யும் ஆற்றல் எந்த ஒரு திடப்பொருள் மீதும் ஏற்படுத்தி விடமுடியாது இது விஞ்ஞான உண்மையும் கூட, பிரபஞ்சத்தைப் பற்றி முற்றிலும் அறிந்தால் தான் விரிந்து சுறுங்கும் காலத்தை அளக்கவே முடியும். எல்லை அளவிட முடியாத பிரபஞ்சத்தை முற்றிலும் அறிவதற்கான உதவும் கருவிகளை எவ்வளவுதான் முயன்றாலும் உருவாக்கமுடியாது, பிரபஞ்ச ஒடுக்கம் விரிவு கோட்பாட்டை மெய்பிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுக் கொண்டு மாதிரிகளை செய்து வைத்திருக்கிறார்கள். அவை முற்றிலும் வெற்றிகரமாக அமையுமா என்பது சரியாகத் தெரியவில்லை. சூரியன் தோன்றிய காலம் 5000 மில்லியன் ஆண்டுகள் என்கிறார்கள், மனித இன அறிவின் வரலாறு பரிணாம கொள்கை தவிர்த்துப் பார்த்தால் வரலாற்று அளவில் 3 - 5 ஆயிரம் ஆண்டுகள் தான், இந்த 5 ஆயிரம் ஆண்டை 5000 மில்லியனில் கழித்தால் 5000 மில்லியன் ஆண்டுகளே கிடைக்கும், எனெனில் 5000 மில்லியனை 5 ஆண்டுகளில் ஒப்பு நோக்க சொற்பமே, infinity - known integer = infinity.
எனவே மனித அறிவின் வழி பெறப்படும் பிரபஞ்ச தோற்றத்தின் (ஊகம்) ஆண்டு கணக்கு, சூரியன் வெளிப்பட்டதாக சொல்லப்படும் (ஊகம்) ஆண்டுக் கணக்கு எந்த அளவு சரி என்பதையும் பார்க்க வேண்டும்.

******

பிரபஞ்சம் சுறுங்கி விரிதல் என்னும் தத்துவத்தில் விரிதலில் நடக்கும் இயக்கம், சுறுங்குவதற்கு முன்பு நடந்த (முந்தைய) விரிவிலும் ஏற்பட்டு இருக்கலாம். ஒவ்வொரு முறையும் பிரபஞ்ச விரிதலில் நடக்கும் இயக்கமே மீண்டும் நடக்கிறது என்று வைத்துக் கொண்டு பார்த்தால், இயக்கமும் அதில் நடக்கும் நிகழ்வுகள் யாவும் முன்பே நடந்தவை. முன்பே நடந்தவையாக தெரிந்தால் மிகச் சரியாக அடுத்து வருவதை சொல்ல முடியும். ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு பிறகு 2 மணி வருதால், நாளைக்கும் 1 மணிக்கு பிறகே 2 மணி வரும் என்பது சரியான அவதனிப்புதானே. குறுகிய காலகட்டத்தில் நடக்கும் சுழற்சியை அறியும் ஆற்றல் உள்ளவர்களான நாம் அடுத்து வருவது என்ன என்று சொல்லிவிடுகிறோம், பிரபஞ்ச விரிவு ஒடுக்க அளவில் நிகழும் இயக்கங்களை அறிந்தவர் அடுத்த பிரபஞ்ச விரிவிலும் இதே தான் வரும் என்று சொல்வாரா இல்லையா ? ஆனால் அப்படி ஒரு அறிவு உள்ளவர் (நம்மில்) எவரும் இல்லை. ஏற்கனவே நடந்தவைகளைத்தான் ஈஎஸ்பி என்ற உணர்வாக பலரும் உணர்கிறார்கள். பலருக்கும் இந்த உணர்வு உண்டு. முந்தைய பிரபஞ்ச விரிவின் இயக்கத்தின் போது சந்தித்தவற்றையே திரும்பவும் சந்திக்கிறோம். ஒரு சிலருக்கு இந்த இடத்தை முன்பே பார்த்திருக்கிறோம் என்ற உணர்வும், அந்த இடம் 10 ஆண்டுக்கு முன்பு உருவான அடுக்கு மாடி குடி இருப்பாகக் கூட இருக்கும், சுமார் 100 - 200 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த முந்தைய பிறவியில் கூட பார்த்திருக்க சாத்திய மற்றதாகக் கூட இருக்கும், அப்படி இருந்தாலும் அந்த இடத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என்றூ உணர்வார். ஏன் ? ஒருவரை புதிதாகப் பார்த்தவுடன் ஏற்கனவே பார்த்தது போலவே சிலர் உணர்வார்கள். பிரபஞ்சம் ஒடுங்கி மீண்டும் விரியும் போது நடந்தவையே மீண்டும் நிகழும், எப்போதும் அதையே உணர்வார்கள்.

இது உண்மை என்றால் மதமாக மனித இனத்தில் முதலில் சநாதனம், சமணம், பெளத்தம், கிறித்துவம், இஸ்லாம் இவை வரிசை மாறாமல் மறுபடியும் ஏற்படும் எல்லா மதங்களிலும் உலகம் ஒருநாள் அழியும் என்று சொல்லி இருப்பதையும் கவனிக்கவும். உலக அழிவும் ஏற்கனவே நிகழ்ந்ததாக இருப்பதால் அவற்றை உறுதியாகவே இம்மதங்களின் வழியாகவும் சொல்லப்படுகிறது என்றே கருதவேண்டி இருக்கிறது. அந்த அழிவு எப்போது ? காலத்திற்கு (கோவியார் அல்ல) மட்டுமே தெரியும் அது 100 ஆண்டுகளிலோ, அடுத்த ஆண்டிலோ, அடுத்த மாதமாகக் கூட இருக்கலாம். :)

ஒவ்வொரு விரிவின் போது பிறவிகள் மற்றும் சூழல்கள் அச்சு மாறாமல் நிகழும். விமான தாக்குதலால் இரட்டை கோபுரம் தகரும், அதே பெற்றோருக்கு பிறந்து இருப்பீர்கள், உங்கள் (இதே)மனைவியுடன் இருப்பீர்கள், (என்ன கொடுமை என்கிறார்கள் பலர்) . பீர் அருந்துபவர்கள் அருந்துவார்கள், இந்த நிமிடம் நடப்பவையே நடக்கும். தமிழ்மணம் இருக்கும், காலம் பதிவு இருக்கும், இந்த பதிவின் தலைப்பையும், இந்த பதிவை இந்த 2008 ஆண்டுக்கான 300 ஆவது பதிவாகவும் (எழுத்துப் பிழைகளுடன்) கோவியார் எழுதி முடித்திருப்பார். நீங்கள் படித்துக் கொண்டு இருப்பீர்கள்.
உங்கள் வாழ்வில் மகிழ்ந்திருந்தாலோ, துக்கப்பட்டு இருந்தாலோ அவை பிரபஞ்ச விரிவு தோறும் நடப்பவையே. இவை சரியாகப் புரிந்து கொண்டால் எல்லாம் மாயை என்று உணர்வீர்கள், எதற்கும் நாம் காரணமல்ல. உலகம் நாடக மேடை நாம் (வந்து போகும்...வந்து போகும்) நடிகர்கள் என்று உணர்வீர்கள்.

எந்த விதியும் (கால) சுழற்சிக்குள் அடக்கம் ! விதிகள் காலத்தால் மாறும் ?

******
பின்குறிப்பு : நான் சொல்லி இருப்பது பிரபஞ்ச ஒடுக்கம் விரிவில் வரும் கோட்பாடுகளை (Cycle of Time) ஒட்டி வருபவை. இவற்றை நம்ப வேண்டும் என்ற வலியுறுத்தல் இல்லை. இவை சாத்தியம் என்று என்னளவில் நம்புகிறேன். விவேகநந்தர் ஞானயோகத்தில் இதுகுறித்து விரிவாக எழுதி இருக்கிறார்.

31 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

Mee the Firsttttttttttuuuuuuuuuuu

நையாண்டி நைனா சொன்னது…

தெரியாத்தனமா.... மீ த பர்ஸ்ட்டு ...போட்டுட்டேன்......
நான் எத்தனையாவதோ??????

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
Mee the Firsttttttttttuuuuuuuuuuu
//

இந்த பதிவுக்கு எப்போதும் நீங்கள் தான் 'Mee the Firsttttttttttuuuuuuuuuuu'

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
தெரியாத்தனமா.... மீ த பர்ஸ்ட்டு ...போட்டுட்டேன்......
நான் எத்தனையாவதோ??????
//

எப்போதும் போல பதிவை சரியாக புரிந்து கொண்டு இரண்டாவது பின்னுட்டம் இட்டு இருக்கிறீர்கள் ! நன்றி !

ALIF AHAMED சொன்னது…

மீண்டும் 300 க்கு வாழ்த்துக்கள் :)

SurveySan சொன்னது…

ஈ?

இவ்வளவு பெச்சு பெச்சா பதிவு எழுதனா, படிக்க மாட்டோம்ல.

dondu(#11168674346665545885) சொன்னது…

"ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு 'rider' வைத்து விடுகிறார் - ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி "அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்" கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் "நீ எங்கிருக்கிறாய்:" என்று கேட்டார்."

இந்த விஷயத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவு. ஆதாம் மற்றும் ஏவாள் கடவுள் சொன்னபடி நடந்து அக்கனியை பறித்துண்ணாதிருந்தால் என்னவாகியிருக்கும்? சற்று கற்பனையை ஓட்டிப் பாருங்கள். முடியாவிட்டாலும் கவலையில்லை. ஏற்கனவே ஃபிரெஞ்சு எழுத்தாளர் Pierre Boulle இதை கற்பனை செய்து ஒரு அருமையான கதையை எழுதியுள்ளார். அது அவரது Quia Absurdum (Sur la Terre comme au Ciel) *சொர்க்கத்திலும் பூமியிலும் அபத்தங்கள்) என்ற சிறுகதை தொகுப்பில் வருகிறது. கதையின் பெயர் Quand le Serpent Échoua. (பாம்பு தோல்வியுற்றபோது).

இக்கதையில் ஆசிரியர் ஒரு விஷயத்தை முதலில் தெளிவுபடுத்துகிறார். அதாவது பழைய ஏற்பாட்டில் வரும் genesis நிகழ்வுகள் ஒவ்வொரு உலகிலும் அப்படியே வருகின்றது என்பதுதான் அது. இக்கதை ஆரம்பிக்கும்போது ஒரே நிகழ்வு பல்லாயிரக்கணக்கான முறை பல்லாயிரக்கணக்கான உலகில் நடந்து விட்டது. ஆகவே இந்த முறை பாம்புக்கு கூட கொஞ்சம் போர் அடிக்கிறது....
மேலே படிக்க, பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/quia-absurdum.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு கோவி.கண்ணன் அவர்களே,

கடந்த இரு பதிவுகளாக உங்கள் எழுத்தும் கருத்தும் அறிவுக்கும் தட்டச்சு செய்யும் கைகளுக்கும் இடையே சிக்கி தவிப்பதாக எண்ணுகிறேன்.

அவதாரங்களை பற்றி நீங்கள் அலசியதில் எனக்கு உடன்பாடு இல்லை.அதற்கு மறுமொழி சொன்னால் உங்கள் பதிவை காட்டிலும் நீண்டுவிடும்.

ஆனால் கடந்த இருபதிவுக்கும் ஓர் தொடர்பு உண்டு என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.

இருந்தாலும் கால சுழற்சியில் மீண்டும் இதே பதிவை படிக்க போகிறோம் என எண்ணும் பொழுது சிறிது கஷ்டமாகவே இருக்கிறது :-))

கோவி.கண்ணன் சொன்னது…

// மின்னுது மின்னல் said...
மீண்டும் 300 க்கு வாழ்த்துக்கள் :)
//

:) நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
ஈ?

இவ்வளவு பெச்சு பெச்சா பதிவு எழுதனா, படிக்க மாட்டோம்ல.
//

இதைப் படித்து இருக்கலாம், என் பதிவுகளில் சார அம்சம் தான் இந்த பதிவு !
:)

வடுவூர் குமார் சொன்னது…

பொரொபைலில்..
காலத்தால் மாறும்!(ஆச்சரியக்குறி)
இந்த கட்டுரையின் கடைசியில்...
விதிகள் காலத்தால் மாறும் ?
கேள்விக்குறியா?
பிரபஞ்சம் பற்றி முழு அறிவு நமக்கு எப்போதுமே கிடைக்காது என்றே நம்புகிறேன்,எனக்கென்னவோ நம் சிந்திக்கும் திறனுக்கு அப்பாற்பட்டதால் வேறு ஏதோ ஒன்று நம்மிடம் கண்ணா மூச்சி காட்டுகிறது.
முயற்சிக்கலாம்,அவ்வளவு தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
"ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு 'rider' வைத்து விடுகிறார் - ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி "அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்" கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் "நீ எங்கிருக்கிறாய்:" என்று கேட்டார்."

இந்த விஷயத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவு. ஆதாம் மற்றும் ஏவாள் கடவுள் சொன்னபடி நடந்து அக்கனியை பறித்துண்ணாதிருந்தால் என்னவாகியிருக்கும்? //

டோண்டு சார், நல்ல உதாரணம்.

ஆதாம் ஆப்பிள் பற்றி பல்வேறு ஊகங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும், நாம் சுயசுந்தனையுடன் செயல்படுகிறோம் (Free Will) என்ற தன் விழித்துக்கொள்ளுதல் தான் ஆதாம் ஆப்பிள் கதையாக நான் கருதுகிறேன். அதற்கு முன், நடப்பவையில் நாமும் அங்கம் என்றே நினைத்து இருந்திருக்க வேண்டும். தனது சுய விழிப்பில் விழுந்துவிட்டதால் மகிழ்ச்சியை உருவாக்குவது போலவே அதன் எதிர்வினையான துன்பத்தையும் மனிதன் எதிர் நோக்குகிறான்.

//இக்கதையில் ஆசிரியர் ஒரு விஷயத்தை முதலில் தெளிவுபடுத்துகிறார். அதாவது பழைய ஏற்பாட்டில் வரும் genesis நிகழ்வுகள் ஒவ்வொரு உலகிலும் அப்படியே வருகின்றது என்பதுதான் அது. இக்கதை ஆரம்பிக்கும்போது ஒரே நிகழ்வு பல்லாயிரக்கணக்கான முறை பல்லாயிரக்கணக்கான உலகில் நடந்து விட்டது. ஆகவே இந்த முறை பாம்புக்கு கூட கொஞ்சம் போர் அடிக்கிறது....
மேலே படிக்க, பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/quia-absurdum.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

இஸ்லாமிலும் இதே கருத்து இருப்பதாகவும் முந்தைய உலகில் மனிதர் முற்றிலும் கெட்டுவிட்டதால் அழித்துவிட்டு மீண்டும் படைத்தார் என்றும் சொல்கிறார்கள். நடந்தவையே திரும்ப நடக்கும் என்று மதங்கள் பலவற்றிலும் மறைமுகமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

டோண்டு ராகவன் என்ற பெயருடன் வடகலை ஐயங்காராகவே ஒவ்வொரு சுழற்சியிலும் நீங்கள் வருவீர்கள் என்பது உங்களுக்கு மகிழ்வான ஒன்று தானே !

:)

வடுவூர் குமார் சொன்னது…

சுவாமி ஓம்கார் சொன்ன மாதிரி...
சும்மா எண்ணங்கள் எழுத்துவடிவமாக syphonic- மாதிரி கொட்டியிருக்குது.
2 வது பத்தி மாத்திரம் (எனக்கு)கொஞ்சம் தட்டாமாலையாக சுத்துது

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நான் இந்த விளையாட்டுல இல்ல.

suvanappiriyan சொன்னது…

மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் 'புனர் ஜென்மம்', 'பர்லோக்' என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

கோவி.கண்ணன் சொன்னது…

// சுவனப்பிரியன் said...

மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் 'புனர் ஜென்மம்', 'பர்லோக்' என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்//

சுவனப்பிரியன்,

ஆப்ரகாமிய மதங்களில் மறுபிறப்பு தத்துவும் கிடையாது அதனால் உங்கள் வாதம் அதை ஒட்டியே அமையும் என்பதில் வியப்பு இல்லை. இந்திய சமயசார் தத்துவங்கள் எதுவுமே மறுபிறப்புக் கொள்கை இல்லாது அமையவில்லை. ஆன்மாவுக்கு அழிவே இல்லை என்றே இந்திய சமயதத்துவங்கள் கூறுகின்றன. நான் உங்களை நம்பச் சொல்லவில்லை. ஆனால் அப்படி இருக்கவே முடியாது என்று நம்புவர்கள் குறித்து தவறு என்று சொல்வதும் தவறுதான்.

ஆன்மாக்கள் குட்டிப் போடுமா ? இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் 30 கோடியாக இருந்தது தற்பொழுது 100 கோடியாக ஆனது எப்படி என்றே பலரும் கேட்கிறார்கள், ஒரே சமயத்தில் விதைக்கும் விதைகள் ஒவ்வொன்றாக கால சூழலைப் பொறுத்தே முளைக்கும், எங்கு மழையும் சூழலும் இருக்கிறதோ அங்குதான் விதைத்த விதைகள் முளைக்கும், அதுவரை அப்படியே இருக்கும், உற்பத்தி திறன் பெருகிய போது பிறப்பெடுக்காமல் இருக்கும் ஆன்மாக்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு பிறப்பதாகத்தான் எனக்கு சிலர் விளக்கமளித்தனர். முளைத்து வளர்ந்து மீண்டும் விதையைக் கொடுப்பது மீண்டும் விதைப் பயிராகவேக் கூட பயன்படுத்தப் படலாம் அல்லவா ? இதுதான் ஆன்மா மற்றும் மறுபிறவி பற்றிய சித்தாந்ததங்கள். உங்களுக்கு புரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். ஒவ்வொருவரும் பிறக்கும் போதே அவர்கள் எதையெல்லாம் நம்புவார்கள், எந்த மதத்தில் பிறப்பார்கள் என்பது அவர்களின் ஆன்மாவிலேயே இருக்கும் விதி நீங்கள் நினைத்தாலும் அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளவே முடியாது. உங்கள் நம்பிக்கை முன்கூட்டியே தீர்மாணிக்கப் பட்டது என்பதை இந்திய சமயத்தத்துவம் அழகாகச் சொல்லி முற்றுப் புள்ளி வைத்துவிடும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஸ்வாமி ஓம்கார் said...
திரு கோவி.கண்ணன் அவர்களே,

கடந்த இரு பதிவுகளாக உங்கள் எழுத்தும் கருத்தும் அறிவுக்கும் தட்டச்சு செய்யும் கைகளுக்கும் இடையே சிக்கி தவிப்பதாக எண்ணுகிறேன்.//

ஸ்வாமி ஓம்கார் ,
இருக்கலாம், எதையும் பட்டென்று சொல்லிவிட்டாலும் யாருக்கும் புரியாது. தெரிந்த ஒன்றில் இருந்து தான் தெரியாத ஒன்றை விளக்க முடியும். அதில் சில புரியாமல் கூட போகலாம் :)

//அவதாரங்களை பற்றி நீங்கள் அலசியதில் எனக்கு உடன்பாடு இல்லை.அதற்கு மறுமொழி சொன்னால் உங்கள் பதிவை காட்டிலும் நீண்டுவிடும்.
//

நான் அவதாரங்கள் பற்றிக் குறிப்பிட்டத்தில் எதும் தவறு இருப்பது போல் தெரியவில்லை, இராமனும் கிருஷ்ணனும் தவிர்த்து எந்த அவதாரங்களும் பிறப்பெடுத்ததாக் எந்த இந்திய சமய தத்துவத்திலும் கூறப்படவில்லை. சிவன் பிறப்பெடுத்ததே கிடையாது.

ஆனால் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பல (ஆ)சாமிகள் தங்களை கிருஷ்ணனின் அவதாரம் என்றே கூறிக் கொள்கின்றனர். ஒருவர் சொன்னாலும் பரவாயில்லை பல சாமியார்கள் அதையே சொல்கிறார்கள். எது உண்மை ?

//ஆனால் கடந்த இருபதிவுக்கும் ஓர் தொடர்பு உண்டு என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.

இருந்தாலும் கால சுழற்சியில் மீண்டும் இதே பதிவை படிக்க போகிறோம் என எண்ணும் பொழுது சிறிது கஷ்டமாகவே இருக்கிறது :-))

3:31 PM, October 19, 2008
//

இதில் கஷ்டப்பட ஒன்றுமே இல்லை, எப்போதும் படித்து இதையே தானே சொல்கிறீர்கள். இதுவும் முன்பு போலவே கடந்து போகும் என்பது சரியா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் 4:36 PM, October 19, 2008
சுவாமி ஓம்கார் சொன்ன மாதிரி...
சும்மா எண்ணங்கள் எழுத்துவடிவமாக syphonic- மாதிரி கொட்டியிருக்குது.
2 வது பத்தி மாத்திரம் (எனக்கு)கொஞ்சம் தட்டாமாலையாக சுத்துது
//

வடுவூர் குமார்,

இங்கு பிக்பாங்க் தியரியை ஒரு புரிதலுக்காக மட்டுமே சொல்லி இருக்கிறேன். யுகப் பிரளயம் என்று சொல்லுவார்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? பிக்பாங்க் இல்லாமலேயே கால மறுசுழற்சி நடக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
பொரொபைலில்..
காலத்தால் மாறும்!(ஆச்சரியக்குறி)
இந்த கட்டுரையின் கடைசியில்...
விதிகள் காலத்தால் மாறும் ?
கேள்விக்குறியா?

//

அங்கே ஆச்சிரியகுறி ஒரு சுழற்சிக்குள் தீர்மாணிக்கப்படும் விதிகளுக்கும் மட்டும் தான் எனவே அது மாறலாம். அதாவது பழைய சித்தாந்தங்கள் புதிய வடிவம் பெறுவது.

ஒவ்வொரு சுழற்சிக்குள்ளும் முன்பு நடந்தவையே மீண்டும் நடந்தால் காலத்தால் மாறுமா ? அதற்குத்தான் கேள்வி குறி போட்டேன்.

சரியாக கவனித்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் !

//பிரபஞ்சம் பற்றி முழு அறிவு நமக்கு எப்போதுமே கிடைக்காது என்றே நம்புகிறேன்,//

நானும் அப்படியே முழுப்பிரபஞ்சத்தை முற்றிலுமாக எந்த ஒரு காலத்திலும் அறிந்து கொண்டுவிட முடியாது. நேரம் மட்டும் வேக லிமிட்டேசன்ஸ் இருக்கு, ஒளியின் வேகத்தைவிட வேகமான ஒன்றை பருப்பொருள்களால் உருவாக்கிவிட முடியாது. மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதையெல்லாம் மனிதனால் எந்தகாலத்திலும் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. செவ்வாய்க்கே 7 மாதம் வின்கலம் பயணிக்கிறது.

//எனக்கென்னவோ நம் சிந்திக்கும் திறனுக்கு அப்பாற்பட்டதால் வேறு ஏதோ ஒன்று நம்மிடம் கண்ணா மூச்சி காட்டுகிறது.
முயற்சிக்கலாம்,அவ்வளவு தான்.

4:33 PM, October 19, 2008
//
சிந்திக்கும் திறன் புலன்களுக்குள் ஒடுங்கியது தானே. அதனால் நம்மால் அதை மீறி கற்பனை செய்துவிட முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
நான் இந்த விளையாட்டுல இல்ல.
//

ஜோதிபாரதி,

நீங்கள் முன்பும் இந்த விளையாட்டில் இல்லை ! :)

suvanappiriyan சொன்னது…

கோவிக் கண்ணன்!

//இதுதான் ஆன்மா மற்றும் மறுபிறவி பற்றிய சித்தாந்ததங்கள். உங்களுக்கு புரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள்.//

:- (

//ஒவ்வொருவரும் பிறக்கும் போதே அவர்கள் எதையெல்லாம் நம்புவார்கள், எந்த மதத்தில் பிறப்பார்கள் என்பது அவர்களின் ஆன்மாவிலேயே இருக்கும் விதி நீங்கள் நினைத்தாலும் அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளவே முடியாது. உங்கள் நம்பிக்கை முன்கூட்டியே தீர்மாணிக்கப் பட்டது என்பதை இந்திய சமயத்தத்துவம் அழகாகச் சொல்லி முற்றுப் புள்ளி வைத்துவிடும்.//

20 வயதிலும் 30 வயதிலும் தங்கள் வாழ்க்கை சட்டங்களையும் தங்கள் மதத்தையும் மாற்றிக் கொள்பவர்களை எதில் சேர்ப்பீர்கள்?

முற்ப்பிறவியில் செய்த பாவங்கள்தான் நாம் இப்பிறவியில் அனுபவிப்பது என்றால் எந்த குற்றத்துக்காக இந்த பிறவியில் இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பதும் எவருக்கும் தெரியவில்லையே! இந்த குற்றத்துக்காக இந்த தண்டனை என்பதை மனிதன் விளங்கினால்தானே திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும்.

30 கோடி முகமுடையாள் என்று பாரதி பாடிய பாடல் எனக்கு நினைவுக்கு வருகிறது. தற்போதய இந்திய மக்கள் தொகை 100 கோடிக்கும் மேல். மறுபிறவி சாத்தியம் என்றால் இன்றும் அதே 30 கோடி மக்கள் தான் நம் பாரத நாட்டில் மறு பிறவி எடுத்து இருக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

சுவனப்பிரியன்,
//20 வயதிலும் 30 வயதிலும் தங்கள் வாழ்க்கை சட்டங்களையும் தங்கள் மதத்தையும் மாற்றிக் கொள்பவர்களை எதில் சேர்ப்பீர்கள்?//

அதுவும் அவர்கள் ஆன்மாவில் அடங்கி இருப்பது தான், சில குழந்தைகள் மருத்துவமனையில் மாறிப் போய் வேறு வீட்டில் வளர்வது இல்லையா, உண்மை தெளியும் போது சிலர் தன்னுடைய பெற்றோர்களை நாடுவார்கள், சிலர் இதுவரை நன்றாகத்தானே வைத்திருந்தார்கள் என்று திருப்தியுடன் தொடர்வார்கள்.

//முற்ப்பிறவியில் செய்த பாவங்கள்தான் நாம் இப்பிறவியில் அனுபவிப்பது என்றால் எந்த குற்றத்துக்காக இந்த பிறவியில் இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பதும் எவருக்கும் தெரியவில்லையே! இந்த குற்றத்துக்காக இந்த தண்டனை என்பதை மனிதன் விளங்கினால்தானே திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும்.//

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற தத்துவம் கேள்வி பட்டு இருக்கிறீர்களா ? இப்பொழுது இல்லாவிட்டாலும் எப்பிறவியியிலேனும் தனக்கு தண்டனை உண்டு என்று நம்புபவனே எக்காலத்திலும் தவறே செய்ய மாட்டான். துர்அதிர்ஷ்டவசமாக, சுயநலம் காரணமாக யாரும் அப்படி நினைப்பதே இல்லை. நீங்களே சொல்லுங்கள் குரான் நன்கு தெரிந்த இஸ்லாமியர்கள், மறுமையில் தண்டனை உண்டு என்று நன்கு தெரிந்தவர்களாக இருந்தும், எத்தனை பேர் பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கிறார்கள் ?

//30 கோடி முகமுடையாள் என்று பாரதி பாடிய பாடல் எனக்கு நினைவுக்கு வருகிறது. தற்போதய இந்திய மக்கள் தொகை 100 கோடிக்கும் மேல். மறுபிறவி சாத்தியம் என்றால் இன்றும் அதே 30 கோடி மக்கள் தான் நம் பாரத நாட்டில் மறு பிறவி எடுத்து இருக்க வேண்டும். //

கிபிக்கு முன்பு 30 கோடியெல்லாம் கிடையாது, சில கோடிகள் இருக்கலாம். அதற்குதான் முன்பே பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். இன்றைய உலக மக்கள் தொகையை எடுத்துக் கொள்ளுங்கள் 550 கோடி இருக்குமா ? மொத்தம் 550 கோடி விதைகள் பூமி எங்கும் தூவப்பட்டதாக வைத்துக் கொள்ளுங்கள், எப்போது மழையும் வளமும் கிடைக்கிறதோ அப்போதுதான் அவைகள் முளைத்து பயிராகும் அது பிறவி, அப்படி பயிரானவைகளில் சில விதையாகி மீண்டும் பயிராகும் அது மறுபிறவி.

******

நான் இதை இஸ்லாமிய விவாதமாக கொண்டு செல்ல விரும்பவில்லை. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நம்புங்கள் என்று நான் வற்புறுத்தவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//TechPen said...
Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com
//

பின்னூட்ட விளம்பரமா ?

it is ok !

குடுகுடுப்பை சொன்னது…

இந்த என்னைப்போல் முட்டாள்களுக்கு அல்ல என நினைக்கிறேன்.

ஆனாலும் ரொம்ப கொழப்புதுங்க கோவியாரே.

வடுவூர் குமார் சொன்னது…

சுகனப்பிரியனுக்கு கொடுத்த பதில்களை படித்த பிறகு....
புரியாத புதிர் பிரபஞ்சம் மட்டும் அல்ல அதில் இருக்கும் நாமும் தான் போல் இருக்கு.இதைத்தான் என் பொரபைலில் கேட்டிருக்கேன் "நான் யார்?" என்று.
இந்த தேடுதல் அவ்வப்போது வருகிறது.
இந்த மாதிரி ஆரோக்யமான விவாதங்களுக்கு பலர் வந்தால் இன்னும் பரவலான விளக்கம் கிடைக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
சுகனப்பிரியனுக்கு கொடுத்த பதில்களை படித்த பிறகு....
புரியாத புதிர் பிரபஞ்சம் மட்டும் அல்ல அதில் இருக்கும் நாமும் தான் போல் இருக்கு.இதைத்தான் என் பொரபைலில் கேட்டிருக்கேன் "நான் யார்?" என்று.
இந்த தேடுதல் அவ்வப்போது வருகிறது.
இந்த மாதிரி ஆரோக்யமான விவாதங்களுக்கு பலர் வந்தால் இன்னும் பரவலான விளக்கம் கிடைக்கும்.

1:59 PM, October 20, 2008
//

வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களைப் போல நாமும் இந்த இயக்கத்தில் இயங்கும் ஒரு அங்கமாக வந்து போகிறோம். அதற்கும் மேல் 'தன்னிலை' என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நமது செயல்பாடுகளாக நாம் நினைத்து, நம் எண்ணங்களின் வழி செயல்படுவதாக நாம் நினைப்பதெல்லாம் கூட பேரியக்கத்தினுள் இயங்கும் மற்றொரு ஒரு சிறு தானியங்கி இயக்கம் தான்.

கிருஷ்ணா சொன்னது…

//ஒவ்வொரு விரிவின் போது பிறவிகள் மற்றும் சூழல்கள் அச்சு மாறாமல் நிகழும்

ஒவ்வொரு முறையும் பிரபஞ்ச விரிதலில் நடக்கும் இயக்கமே மீண்டும் நடக்கிறது என்று வைத்துக் கொண்டு பார்த்தால், இயக்கமும் அதில் நடக்கும் நிகழ்வுகள் யாவும் முன்பே நடந்தவை. முன்பே நடந்தவையாக தெரிந்தால் மிகச் சரியாக அடுத்து வருவதை சொல்ல முடியும்

//

கோவி சார்,

நீங்கள் சொல்லும் இதே விஷயம் ஜெயமோகனுடைய கதையில் ஒரு நம்பூதீரீ தான் கண்டுபிடித்த concept ஆக சொல்லுவார். இதை விட அதில் விரிவாக இருக்கும்.

அந்த கதையின் ஹிரோ e=mc2கொண்டு விளக்கி அதை பொய் என்று சொல்வதாக வரும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணா said...


கோவி சார்,

நீங்கள் சொல்லும் இதே விஷயம் ஜெயமோகனுடைய கதையில் ஒரு நம்பூதீரீ தான் கண்டுபிடித்த concept ஆக சொல்லுவார். இதை விட அதில் விரிவாக இருக்கும்.

அந்த கதையின் ஹிரோ e=mc2கொண்டு விளக்கி அதை பொய் என்று சொல்வதாக வரும்.
//

கிருஷ்ணா,

ஜெயமோகன் அவருடைய கதையை அவர் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார். :)

நான் இங்கு பிரபஞ்ச பெருவெடிப்பை எடுத்துக் கொண்டது எளிதான உதாரணத்துக்குத்தான். மற்றபடி நிகழ்வுகள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மீண்டும் நடக்கலாம்.

குமரன் (Kumaran) சொன்னது…

300வது இடுகைக்கு வாழ்த்துகள் கோவி.கண்ணன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
300வது இடுகைக்கு வாழ்த்துகள் கோவி.கண்ணன்.
//

குமரன்,

இது 2008 க்கு ஆன 300 ஆவது இடுகை.

வாழ்த்துக்கு மிக்க நன்றி !

Saravanan Renganathan சொன்னது…

சுட்டியை அளித்தற்கு மிக்க
நன்றி திரு.கோவி. கண்ணன் !!

கட்டுரையும் அதையொட்டி நடந்த விவாதங்களும் அருமை !!

infinity - known integer = inifinity
உண்மை உண்மை !!

மீண்டும் இவ்வளவு தாமதமாக வந்து பின்னூடம் போடுவேனா என்று தெரியவில்லை :-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்