பெயர் : Prof. SAM GEORGE
புனைப் பெயர் : பேராசிரியர், தருமி (வலைப்பெயரும் அதுதான், ஆனால் கேள்வி மட்டுமே கேட்கமாட்டார்), தருமி ஐயா, தருமி சார்
வயது : நடிகர் ரகுவரனை விட 2 - 3 வயது கூட இருக்கும்
வசிக்கும் இடம் : தருமி என்கிற பேரைச் சொன்னாலே ஊரைச் சொல்ல வேண்டியது இல்லை.
தொழில் : விலங்கியல் பேராசிரியராக அமெரிக்கன் கல்லூரியில் வலம் இடமாக சுற்றிச் சுற்றி வந்தது, கல்லூரி வளாக மரத்தடி நிழல்களில் மாணவர்களுக்கு சிறப்பு பாடம் நடத்தியது
துணைத் தொழில் : பேரப் பிள்ளைகளுடன் அவர்களில் ஒருவராக விளையாடுவது, வலைப்பதிவது
அண்மைய சாதனை : பண்புடன் குழுமத்தில் இந்தவார நட்சத்திர ஆசிரியர்
நீண்ட நாளைய சாதனை : மதத்தை விட்டு வெளியே வந்து, மூட நம்பிக்கைகள் மீது தொடர் தாக்குதலாக கேள்விக் கணைகளை தொடுத்து வருவது.
வாழ்நாள் சாதனை : காலனை எட்டி உதைத்து ஓட ஓட விரட்டியது (மரணம் தொட்ட கணங்கள் )
பிடித்த பதிவர்கள் : பெரும்பாலும் இளையர்கள், முற்போக்காளர்கள்
அண்மைய எரிச்சல் : சமையல் அறையில் அவரது மனைவி உறித்த வெங்காயம், மற்றும் மதுரை மாநகராட்சி , யாரோ ஒரு பதிவர் சாம் தாத்தா என்ற பெயரில் பதிவு ஆரம்பித்தது (அப்பறம் இவர் கண்டு கொள்ளவில்லை), மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நிர்வாகத்தினரால் நடக்கும் வெளிப்படையான பாலிடிக்ஸ்
பதிவு: தருமி (கேள்வி கணைகள், அன்றாட அரசியல், திரைப்படம், முற்போக்கு சிந்தனைகள், மத விவாதங்கள் ( நான் ஏன் மதம் மாறினேன் ? - போன்று பெயர் பெற்று தந்த) தொடர்கள், சொந்த கதைகள், தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது எழுதி வருவது)
குழுப்பதிவுகள்:
வேடந்தாங்கல்.......
மதுரை மாநகரம்
Fix My India
Sixth-Finger
IPAC
singleclicks
வாழ்நாள் சாதனை : மரணத்தை தொட்டு வந்தவருக்கிறார். நெஞ்சிலும், ஈரலிலும் ஒன்றாக கலந்திருந்த புகையை மறந்தது, நிறைய மாணவர்களின் நினைவில் பதிவாக ஆனது. காலத்திற்கேற்ற சிந்தனைகளை மாற்றி அமைத்துக் கொள்வது, மன அளவில் இளைஞராகவே, இளைஞர்களுக்கு ஈடுகொடுத்து உரையாடுவது
(மதுரை பேருந்து நிலையத்தில் இரவு 11 மணிக்கு எடுத்த புகைப்படம்)
அடையாளம் : இவருடன் ராசியான (உடன் இருக்கும்) சிவப்புக்கல் மோதிரம்
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
20 கருத்துகள்:
மதுரை செல்லும்போது தருமி அய்யாவின் மோதிரக்கையால் குட்டுப்பட் ஆசை(கத்துக்கதாங்க)
என்னது ஒரே பயோ-டேட்டாவா போட்டுத் தாக்குறீங்க...
அவர் ஆங்கிலப் பேராசிரியர் இல்லைவோய்... விலங்கியல் துறையைச் சார்ந்தவர்.
ஆனா, இந்த சீரிசிம் நல்லாத்தான் இருக்கு, நடத்துங்க... நடத்துங்க :).
ஒவ்வொரு பதிவரின் பயோடேட்டாவையும் மிக அருமையாக தொகுத்துள்ளீர்கள்.
//ஆங்கிலப் பேராசிரியராக//
Biology I think
**
He is one of the Great Man that we have in our Tamil blog arena.
People will talk and write thousand things. Only few people will go to street and work for what they believed in like Periyar.
He is that kind.
-Kalvetu
தெகா, கல்வெட்டு
தங்களின் தகவல் படி மாற்றிவிட்டேன், மிக்க நன்றி !
தருமி அய்யாவுக்கு வணக்கங்களும் திருப்பணி தொடர வாழ்த்துக்களும்...
இதுக்காகவே மதுரைக்குப் போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
நல்ல தொரு தொகுப்பு கண்ணன்.
தருமி அய்யா பணி சிறக்க வணங்குகிறேன்
தருமி அய்யாவை வாழ்த்துவோம். தருமி அய்யா அவர்கள் திரு.பாப்பையா அவர்களோடு ஆசிரியப் பணி செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.
ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லாமல் விட்டுட்டீங்களே, கோவி!
இந்த வயதிலும் (23.12.1944 பிறந்தவர்) ஆர்வத்துடன் பதிவுகள் எழுதும் தருமி சாருக்கு என்னுடைய பாராட்டுகளைச் சொல்லுங்கள் கோவியாரே! அவருடைய ஆதிக்க எண் 8 - கர்மகாரகன் சனியின் ஆதரவு நிறைந்து இருப்பவர். அதன் தாக்கம் அவர் எழுத்துக்களிலும் தெரிகிறது. இதையும் அவரிடம் சொல்லுங்கள்!
முன்பு அவர் ஆசையாய் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை வைத்து கேலி செய்தது நினைவுக்கு வருகிறது. அவரிடம் சொல்லுங்கள் இந்த புகைப்படம் அருமையாக இருக்கிறதென்று...
இயக்குநர் மகேந்திரன் லுக் வருகிறதே!
//கேள்வி மட்டுமே கேட்கமாட்டார்//
யார் சொன்னது, அதெல்லாம் பட்டய கிளப்புவார்
//நடிகர் ரகுவரனை விட 2 - 3 வயது கூட இருக்கும்//
மன்மோகன் சிங்கை விட 2-3 குறைவாக இருக்கும் என்று சொன்னால் தான் அவருக்கு பிடிக்கும்
//தருமி என்கிற பேரைச் சொன்னாலே ஊரைச் சொல்ல வேண்டியது இல்லை.//
திருவிளையாடல் படம் பார்க்காதவர்களுக்கு
//விலங்கியல் பேராசிரியராக அமெரிக்கன் கல்லூரியில் வலம் இடமாக சுற்றிச் சுற்றி வந்தது, //
அப்போ அவரு பாடமே எடுக்கலையா
//மதத்தை விட்டு வெளியே வந்து, மூட நம்பிக்கைகள் மீது தொடர் தாக்குதலாக கேள்விக் கணைகளை தொடுத்து வருவது.//
கேள்விகளே கேக்க மாட்டாருன்னு சொன்னிங்க
//வாழ்நாள் சாதனை : காலனை எட்டி உதைத்து ஓட ஓட விரட்டியது//
அதன் பிறகு இவரது பெயரையே அவன் மறந்துட்ட்டானாம்
//பிடித்த பதிவர்கள் : பெரும்பாலும் இளையர்கள், முற்போக்காளர்கள்//
வாலையும் பிடிக்கும்
இவரது வலைப்பூ ஆனந்தவிகடனில் வந்திருக்கிறது,
அதன் பிறகு தான் நான் வலைப்பூவையே தெரிந்து கொண்டேன்
கருத்துரையிடுக