பின்பற்றுபவர்கள்

30 ஜூன், 2008

ஏசுவின் இரத்த வகை என்ன ?

மும்பை: மும்பை, மாஹிம் பகுதியில் உள்ள பிரபல செயின்ட் மைக்கேல்ஸ், சர்ச்சில் உள்ள இயேசு கிறிஸ்துவின் ஓவியத்திலிருந்து ரத்தம் கசிவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர்.

ஜோசப் டிசவுசா என்பவர் கூறுகையில், இது நிச்சயம் ஒரு அற்புதமான செயல்தான். கடவுள் நம்மிடம் எதையோ சொல்ல விரும்புவதையே இது உணர்த்துகிறது. இதை மக்கள் உணர வேண்டும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது அற்புதமான செயலாக தோன்றுகிறது. மற்றவர்களுக்கு எப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை. அதுகுறித்து நம்பிக்கையாளர்களான எங்களுக்கு கவலை இல்லை என்றார்.

இந்த சம்பவம் குறித்து மும்பை ஆர்ச்பிஷப் கார்டினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் கூறுகையில், இதுகுறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இது அற்புதச் செயலா என்பது குறித்து விரிவான ஆய்வுக்குப் பின்னரே கூற முடியும் என்றார். - மேலும் படிக்க ...

*******

சென்னையில் ஒரு தடவை மாட்டின் கண்களுக்குள் எம்ஜிஆர் தெரிந்தாராம், பிறகு தான் தெரிந்தது மாட்டுக்கு கண்ணில் புறையோடி இருப்பதே.

பிள்ளையார் பால் குடித்த கதையைச் சொல்லிப்பாருங்கள் இந்துத்துவாக்களுக்கு உடனே 'சாமி' வந்துவிடும்

கிறித்துவர்கள், இந்துக்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் ? 'அல்லா' என்று ஒரு மீன் உடலில் அரபி எழுத்தில் எழுதி இருப்பதாக அரபு நாட்டில் ஒருவர் லட்சக்கணக்கில் விலை கொடுத்து அதை வாங்கினார் என்ற செய்தி வந்தது.

ஆங்காங்கே அடிக்கடி மாதாவின் கண்களில் இருந்து இரத்தம் வழிவதும் கேள்விப்படும் செய்திகளே.

எங்கள் தெருவில் ஒரு வீட்டில் பரங்கிச் கொடியில் ஆத்தா நாக உருவெடுத்து அவதரித்திருக்கிறாள் என்று அந்த குடும்பம் கிளப்பிவிட்டு விட்டது. அன்று மாலையே 300 பேர் வரை அந்த கொடியை பார்த்துவிட்டு, அங்கு வைத்திருந்த குங்குமத்தைப் பூசிக் கொண்டு சாமி ஆடிச் சென்றார்கள். அன்றும், மறுநாளும் 1000 பேருக்கும் மேல் தரிசித்துவிட்டார்கள். நல்ல உண்டியல் வசூல். 'நடத்த கெட்டவ வீட்டுக்கெல்லாம் கூட சாமி வருது' முனுமுனுத்துக் கொண்டே...அந்த பக்தர்களிலும் சிலர் வாயடைத்தனர்.

நானும் சென்று பார்த்தேன். நிழலில் வளர்ந்த பரங்கிக் கொடி, கொஞ்சம் வெயில் பட்ட இடத்தில் நீண்டு வளர்ந்திருந்த அதன் கொடியின் கிளையில் ஒரு அடி நீளத்திற்கு மட்டும் கொஞ்சம் தடிமனான தண்டாக இருந்தது, அந்த கொடியில் இருந்த இலைகளும் சற்று உப்பலாக இருந்தது. பார்பதற்கு கொஞ்சம் தடிமனான பச்சைப் பாம்புக்கு நான்கு தலைகள் இருப்பது போன்று அதாவது மேகங்களை உருவங்களாக கற்பனை செய்யவது போல் செய்ய முடியும். அதுதான் ஆத்தா பரங்கிச் செடியில் அவதரித்த ரகசியம். அதாவது வெயில் பட்ட இடத்தில் கொடி கூடுதலாக வளர்ந்திருந்தது...சிலர் பரங்கி / பூசனி செடியில் உண்டாகும் ஒரு வித நோய் அது என்றும் பூச்சி மருந்து அடித்தால் சரியாகிவிடும் என்றார்கள்

மறுநாள் ஆத்தாவைக் காணும். ஆத்தா தரிசனத்திற்கு வந்தவர்களெல்லாம் ஏமாந்துப் போனார்கள். இரண்டு நாள் சென்றதும் தான் கேள்விப்பட்டேன்... பக்கத்து தெருவில் இருந்த இளைஞர்கள் சிலர், இரவோடு இரவாக அந்த பரங்கிச் செடியில் ஆத்தாவாக இருந்த அந்த குறிப்பிட்ட பகுதியை வெட்டி எரிந்துவிட்டதாக என்னிடம் சொன்னார்கள்.

*******

இனி எங்காவது சாமி படங்களில் / சிலைகளில் இரத்தம் வழிந்தால் உடனடியாக ஒரு துளியை எடுத்து என்ன வகை (குரூப்)என்று கண்டுபிடித்துவிட்டால். ஆண்டவனைக் காட்ட முடிகிறதோ இல்லையோ. ஆண்டவனின் இரத்த வகையாவது இதுதான் என்று சொல்லிவிட முடியும். பிறகு நாத்திகர்கள் ஏன் பேசப்போகிறார்கள். வாயடைத்துப் போய்விட மாட்டார்களா ?

இங்கே பாருங்கள் யூடியூப் படக் காட்சி அதையும் மும்பையில் வழிந்த இரத்தவகையையும் ஒப்பிட்டு உண்மையைச் சொன்னால் கேட்டுக்கொள்ளப் போகிறார்கள்.
:)

1 கருத்து:

தருமி சொன்னது…

இதெல்லாம் என்னங்க சும்மா ஜுஜுபி..ஏசுவின் ரத்தத்தையே எடுத்து என்ன வகைன்னு் பிரிச்சி பார்த்திட்டாங்க தெரியுமா? அவரோட ரத்தம் AB Rh+ அப்டின்னு கண்டுபிடிச்சிட்டாங்க. அதோடு மட்டுமில்லாம அவரது ரத்தத்தில நம்ம செல்களில் 23 ஜோடி நிறமிகள் (chromosomes) இருக்கிறது மாதிரி இல்லாமல், வெறும் 23 க்ரோமோசோம்கள் மட்டும்தான் இருந்ததாகவும் "கண்டுபிடித்து" இருக்கிறார்கள். வேண்டுமானால் இந்த u-tube பாருங்கள். (ஆனால் இதில் உள்ள "ஜோக்கை"ப் புரிந்து கொள்ள கொஞ்சம் உயிரியலும், பைபிளும் தெரியணும்!!)

http://www.youtube.com/watch?v=oLwTQxIsLfc&feature=related

http://www.youtube.com/watch?v=EGLPADW_kUw

அதைப் பார்த்தாச்சா ..? அப்போ அடுத்த இருக்கிற லின்க்குகளையும் பார்த்துக்கோங்கோ...அதிலும் ரெண்டாவது லின்க்கில் நிறைய இருக்கு; ஏதாவது ஒண்ணை எடுத்து வாசிச்சாலும் போதும்.

பி.கு. ரெண்டுமே கிறித்துவ நம்பிக்கையாளர்கள் எழுதியதுதான்.

http://www.tentmaker.org/Dew/Dew7/D7-AGreatChristianScam.html

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்