பின்பற்றுபவர்கள்

9 ஜூன், 2008

மரங்கள் ! (சிறுகதை)

"இவன் இல்லாட்டி எனக்கு வாழ்கையே இல்லிங்க..."

"அப்படியா ?" ஆர்வமுடன் கேட்டார் பக்கத்தில் இருந்தவர்

"இவன் தான் இதைப்படிடா நல்லா வருவே ன்னு சொல்லி பொருளுதவியும், தங்குமிடம் வசதியும் செய்தான்."

எதிர்பார்ப்பில் எதுவும் செய்யாவிட்டாலும் நட்பு என்ற பெயரில் செய்ததை பலருக்கு முன்பு மகிழ்வாக அவன் சொல்லும் போது கேட்க கூச்சமாக இருந்தாலும் '...பய எவ்வளவு நன்றியோட நினைத்துப் பார்க்கிறான்'. நெகிழ்ச்சியாகவே இருந்தது

ஏற்றிவிடுகிற ஏணி எப்பவும் அதன் கடமையை செய்து கொண்டு அப்படியே தான் இருக்கும், ஏறுபவர்கள் தான் இது இருந்தால் ஒருவேளை எப்போதாவது கீழே இறங்க நேரிட்டால் .... என்ற நினைப்பில் எட்டி உதைத்துவிடுவார்கள். ஏணிக்கு என்ன ? வேறுருவர் ஏற நினைத்து நிமிர்த்தி வைக்கும் போது வழி அமைத்துக் கொடுக்கும்.

அவனே அன்றொரு நாள் தொலைபேசினான்

"அடடே...எப்படிப்பா இருக்கே..."

"எங்கே ஒரே பிசி....எல்லாம் டைட்டாக போயிட்டு இருக்கு"

"பரவாயில்லையே...பிசியிலும் என்னை நினைச்சுப் பார்க்க முடியுதா ?"

"அது இல்லடா...ஒரு பெரிய ப்ராஜட் எடுத்து இருக்கேன்..."

"இருக்கட்டும் நல்லா இரு...."

ச்சே இவனுக்கு தன் பெருமையை பேச வேண்டுமென்றால் மட்டும் நான் நினைவுக்கு வருகிறேன் போல

"என்னடா இப்படி சொல்றே...உன் கிட்டதான் இதைச் சொல்றேன்....என் மனைவியிடம் கூடச் சொன்னது இல்லை..."

"என்கிட்ட சொன்னாலும் எதும் ஆகப் போறதில்லே...உன் மனைவியிடம் நீ சொல்லாவிட்டாலும் நீ சம்பாதிப்பது உன் குடும்பத்துக்குத்தான்....இதுல என்கிட்ட சொல்வது என்னமோ எனக்கு பெருமை செய்வதாக நினைக்கிறியா ?"

"......."

"சரி எனக்கு வேலை இருக்கு அப்பறம் பார்க்கலாம்...."

******

அவனுக்கும் தெரிவிக்க வேண்டுமே என்பதற்காக

"டேய்......நான் ஊருக்கு வருகிறேன்...."

"ஓ அப்படியா .....?"

"ஆமாண்டா...."

என்கூடவே சுற்றிக் கொண்டு இருந்தவன்.....

"நான் பிசிடா...வீட்டுக்கு போகக் கூட நேரம் இல்லை.....வேண்டுமானால் சாப்பாட்டு நேரத்தில் அலுவலகத்தில் வந்து பாரேன்.....அங்கே தான் இருப்பேன்...வர்றத்துக்கு முன்னால போன் பண்ணிடு அப்பாய்ண் மெண்ட் இல்லேன்னா.... பிரச்சனையே இல்லை"

நான் முன்பு மாதிரி இல்லை என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்ல இவனுக்கு நன்றாக வருகிறது.

"அப்படியா சாமி...நீ பிசி உன் நேரத்தை நான் வீணாக்க விரும்பல....அப்பறம் எப்போதாவது பார்ப்போம்...."

இவன் முன்பு நான் ஊருக்குச் சென்று திரும்பும் வரம் வரை தினமும் என்னுடனே இருந்தவன்

இப்ப மறுபடியும் யாருடனாவது பார்த்தால் பழைய டயலாக்,

"இவன் இல்லாட்டி எனக்கு வாழ்கையே இல்லிங்க..."

என்று சொல்வதை மறந்து இருப்பான் என்று தான் நினைக்கிறேன்.

********

சென்றவாரம்...பின்னிரவில் வந்த தொலைபேசியில் பெயரைச் சொல்லி ஒருவன் அறிமுகப்படுத்திக் கொண்டான், சற்று குழம்பினாலும்

"நீயா...சொல்லு சொல்லு..."


"டேய் நண்பா... பார்த்து பத்துவருடம் ஆச்சிங்கிறதால என்னை தெரியவில்லைன்னு சொல்லிட்டே...பரவாயில்லை....நான் வேலைத் தேடி அங்கு வருகிறேன்...நீ தான் எல்லா உதவியும் செய்யனும்...."

(இவனுங்களுக்கெல்லாம் இப்ப மட்டும் என் ஞாபகம் எப்படி வருதுன்னு தெரியல)

"அதுக்கென்ன வாடா....வீட்டில் ஒரு ரூம் காலியாகத்தான் இருக்கு...நான் பார்த்துக் கொள்கிறேன்....."

********

மரங்கள் லாப நட்டம் பார்த்து பலன் தருவதில்லை. பறித்துச் சென்றவர் நன்றியோடு இல்லை என்பதற்காக பசி கொண்டவர்க்கு அது மறுப்பதும் இல்லை.

6 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

மிக அருமையான கதை.....

இன்றும் அநேகர் தன் வாழ்வில் அனுபவித்த கதை.

கிரி சொன்னது…

//மரங்கள் லாப நட்டம் பார்த்து பலன் தருவதில்லை. பறித்துச் சென்றவர் நன்றியோடு இல்லை என்பதற்காக பசி கொண்டவர்க்கு அது மறுப்பதும் இல்லை.//

பலரின் வாழ்வில் இது நடப்பது தான்.

யோசிப்பவர் சொன்னது…

கருத்து கரெக்ட்டுதான். ஆனால் கதையை இன்னும் கொஞ்சம் கூட செதுக்கியிருக்கலாம்னு தோனுது!!;-)

Rams சொன்னது…

If it is with the real name that will be good

கோவி.கண்ணன் சொன்னது…

பதிவுக்கு விளம்பரம் கொடுத்த மும்மூர்த்திகளுக்கு நன்றி !

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

/(இவனுங்களுக்கெல்லாம் இப்ப மட்டும் என் ஞாபகம் எப்படி வருதுன்னு தெரியல)/
/மரங்கள் லாப நட்டம் பார்த்து பலன் தருவதில்லை. பறித்துச் சென்றவர் நன்றியோடு இல்லை என்பதற்காக பசி கொண்டவர்க்கு அது மறுப்பதும் இல்லை/

இந்த இரண்டு பத்திகள் மட்டும் இல்லாமலிருந்தால் நல்ல சிறுகதையாகியிருக்கும்!

(நானும் மும்மூர்த்திகளில் ஒருவரின் தயவில்தான் வந்தேன்!).

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்