பின்பற்றுபவர்கள்

19 ஜூன், 2008

பாமகவைக் கூப்பிடும் பாஜக !

நாடாளுமன்ற தேர்த்தலுக்கு முன்பே தமிழக அரசியலில் சூடு கிளம்பியுள்ளது. கூட்டணியில் இருந்தாலும் கூட்டணிக் கட்சிகள் திமுக அரசி(யலி)ன் செயல்பாடுகளை தட்டிக் கேட்கலாம் என்பதை ஆரம்ப காலத்தில் சொல்லி வந்த கலைஞருக்கு தலையில் பலத்த குட்டு விழவே பாமக கழட்டிவிடப்பட்டு இருக்கிறது. கொள்கை அடிப்படையில் இணையாத கூட்டணிக் கட்சிகள் ( அப்படி ஒன்று இல்லவே இல்லை) சூழ்நிலை வசத்த்தால் இணையும் போது எப்போது வேண்டுமானாலும் விலகிச் செல்லும் / விலக்கப்படும் என்பது தெரிந்ததுதான்.

திமுகவிற்கு இழப்பா ? திமுக கூட்டணி தயவால் ஆட்சிக்கு வரத் துணிந்ததிலிருந்தே...எதிர்காலத்திலும் இப்படித்தான் என்பதால் திமுகவிற்கு இழப்பு போல் தெரியவில்லை. பாமக இல்லாவிட்டால் அந்த இடத்தில் தேமுதிக வரப் போகிறது. தேமுதிகவுக்கு தனியாக நின்றால் வெற்றிபெற முடியாமல் போகும் வாய்ப்புகள் தற்பொழுது சாதகமாக அமையும். நாடாளுமன்ற தேர்த்தலில் நான்கு இடங்கள் பெற்று அதில் இரண்டு வெற்றிபெற்றால் கூட அவர்களுக்கு லாபம் தான். கண்டிப்பாக விஜயகாந்த் கட்சி திமுக பக்கம் சென்றுவிடும் என்றே தெரிகிறது.

அம்மா கட்சியில் சேருவதைத் தவிர பாமகவிற்கு மாற்று இல்லை. பாமகவின் தனித்த பலம் அவர்களுக்கே தெரிந்ததது தான். தனித்து நின்றால் தேறுவதற்கு வழியில்லை. அம்மா கட்சிக் கூட்டணி பாமகவிற்கும் சாதகமாகவே அமையும்.

இதற்கு இடையில் லெட்டர் பேடு கட்சிகளையும், பாமகவையும் சேர்த்துக் கொண்டு நாடாளுமன்ற தேர்த்தலை சந்தித்தால் அள்ளிவிடலாம் என்று பாஜக கணக்கு போடுகிறது. கர்நாடகாவில் வெற்றிபெற்றதால் பக்கத்து மாநிலத்திலும் வெற்றிபெறலாம் என்ற நப்பாசைதான் போல் இருக்கிறது. பாஜவின் தமிழக பலம் என்ன என்பதை எல்லாக் கட்சிகளும் அறிந்ததே. அவர்களின் கூட்டணியால் பாஜவிற்கு மட்டுமே லாபம், சேர்த்துக் கொண்டால் மாநிலக் கட்சிகளுக்கு நஷ்டம் தான். அம்மா கட்சி பாஜகவிற்கு சிக்னல் எதுவும் கொடுப்பது போல் தெரியவில்லை. அத்வானி பிரதமர் என்பதை தமிழக மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பது அம்மாவிற்கு நன்கு தெரியும், கடைசிவரையில் பாஜகவை அம்மா கட்சி கூட்டணிக்கு அழைக்க மாட்டார்கள் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. இதெல்லாம் தெரிந்து தான் தனியாக நின்றால் வழக்கம் போல் டெபாசிட் தேறாது என்பதற்காக பாமகவை அழைத்து தனிக்கூட்டணிக்கு வழி கிடைக்குமா என்று முயல்கிறார் திருநாவுக்கரசர்.

சரத்குமார், கார்த்திக் கட்சிகளை திமுகவோ, அம்மாவோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை எனவே அவர்கள் பாஜகவுடன் இணைந்து தேர்த்தலை சந்திப்பார்கள் என்றே கருதுகிறேன்.

ஆக வரப் போகும் பாரளுமன்ற தேர்த்தலில் லாபம் பெறப் போகிற ஒரே கட்சி வி.காந்த் கட்சிதான். ஆனால் கடந்த தேர்த்தல் போல் மொத்த வாக்குகளில் 8 விழுக்காடு வாக்கு பெற்ற மூன்றாவது பெரிய கட்சி என வி.காந்த் வருங்காலத்தில் கணக்கு சொல்ல முடியாது காரணம் இருக்கும் 40 இடங்களில் 4 இடங்களுக்கு மேல் திமுக தராது.

பாஜக லெட்டர்பேடு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்த்தலை சந்தித்தால் அது அம்மாகட்சிக்கு சற்று பின்னடைவாக அமையும். வரும் நாடாளுமன்ற தேர்த்தல் தமிழகத்தைப் பொறுத்து எந்த அலையும் வீசுவது போல் தெரியவில்லை.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...தசவதாரம் படம் வெளியிட்ட ஒருவாரத்திற்குள் குசேலன் பட ஸ்டில்களை வெளியிட்டது என்ன வகையான அரசியல்? புதசெவி

12 கருத்துகள்:

siva சொன்னது…

"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...தசவதாரம் படம் வெளியிட்ட ஒருவாரத்திற்குள் குசேலன் பட ஸ்டில்களை வெளியிட்டது என்ன வகையான அரசியல்? புதசெவி"

what the meaning for "புதசெவி"??
I don't understand that world

puduvai siva.

டி.பி.ஆர் சொன்னது…

கூட்டணியில் இருந்தாலும் கூட்டணிக் கட்சிகள் திமுக அரசி(யலி)ன் செயல்பாடுகளை தட்டிக் கேட்கலாம் என்பதை ஆரம்ப காலத்தில் சொல்லி வந்த கலைஞருக்கு //

தட்டி கேட்கலாம் தவறில்லை. ஆனால் கேட்பதை விட்டுவிட்டு தட்டிக்கொண்டே இருந்தால் யாருக்குத்தான் பொறுமை போகாது.
அதான் கழட்டி விட்டுட்டார்.

பாமக இல்லாவிட்டால் அந்த இடத்தில் தேமுதிக வரப் போகிறது. தேமுதிகவுக்கு தனியாக நின்றால் வெற்றிபெற முடியாமல் போகும் வாய்ப்புகள் தற்பொழுது சாதகமாக அமையும். நாடாளுமன்ற தேர்த்தலில் நான்கு இடங்கள் பெற்று அதில் இரண்டு வெற்றிபெற்றால் கூட அவர்களுக்கு லாபம் தான். கண்டிப்பாக விஜயகாந்த் கட்சி திமுக பக்கம் சென்றுவிடும் என்றே தெரிகிறது.//

அப்படியா நினைக்கிறீங்க? சந்தேகம்தான்.

அம்மா கட்சியில் சேருவதைத் தவிர பாமகவிற்கு மாற்று இல்லை.//
அதான் அன்புமணி அப்படியும் நடக்கலாம் என்று தொலைக்காட்சி பேட்டியொன்றில் நேற்றே கூறிவிட்டாரே.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...தசவதாரம் படம் வெளியிட்ட ஒருவாரத்திற்குள் குசேலன் பட ஸ்டில்களை வெளியிட்டது என்ன வகையான அரசியல்? //

இதுவும் ஒரு அரசியல்தான்னு வச்சிக்குங்களேன்:-))

கோவி.கண்ணன் சொன்னது…

//what the meaning for "புதசெவி"??
I don't understand that world

puduvai siva.//

சிவா,

நண்பர் டிபிசிடி அறிமுகப்படுத்திய சொல். விரிவாக்கம் 'பு'ரியவில்லை, 'த'யவு 'செ'ய்து 'வி'ளக்கவும் என்று பொருள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//டி.பி.ஆர் said...
தட்டி கேட்கலாம் தவறில்லை. ஆனால் கேட்பதை விட்டுவிட்டு தட்டிக்கொண்டே இருந்தால் யாருக்குத்தான் பொறுமை போகாது.
அதான் கழட்டி விட்டுட்டார்.
//

ஜோசப் ஐயா,
என்ன அரசியல் என்றே தெரியவில்லை. சென்னை விரிவாக்கம் இடம், சோலிங்க நல்லூரில் பாமக வளைத்த இடம் சர்சை வந்த போதும் பாமக கடுமையாக விமர்சனம் செய்தது. ஆட்சியின் முதல் ஆண்டு என்பதால் அப்போது பொறுமை காத்த்தார்கள் என்று தான் நினைக்க வேண்டி இருக்கிறது. வேலியில் இருக்கும் ஒனானை மடியில் வைத்து இருந்தது தற்பொழுதுதான் தெரியவந்தது போலும்.

****

சென்னையில் நான் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட போது நீங்களும் வந்து கலந்து கொள்வீர்கள்...சந்தித்து பேசலாம் என்று எதிர்பார்த்தேன். :(

டி.பி.ஆர் சொன்னது…

சென்னையில் நான் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட போது நீங்களும் வந்து கலந்து கொள்வீர்கள்...சந்தித்து பேசலாம் என்று எதிர்பார்த்தேன். :(//

அந்த வாரம் நான் கொச்சியில் இருந்தேன் கண்ணன். எனக்கும் உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தம்தான்.

மனதின் ஓசை சொன்னது…

கோவி,

//கண்டிப்பாக விஜயகாந்த் கட்சி திமுக பக்கம் சென்றுவிடும் என்றே தெரிகிறது.//

இது நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.. "காலம்"தான் பதில் சொல்லும்.

பாஜாக + ஆதிமுக + பாமாக வரும் என நினைக்கிறேன். :-(

//தசவதாரம் படம் வெளியிட்ட ஒருவாரத்திற்குள் குசேலன் பட ஸ்டில்களை வெளியிட்டது என்ன வகையான அரசியல்? //
அதானே..எனக்கும் புரியல..

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//டி.பி.ஆர் said...


அந்த வாரம் நான் கொச்சியில் இருந்தேன் கண்ணன். எனக்கும் உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தம்தான்.
//

ஜோசப் ஐயா,

:(

பதிவர் சந்திப்பு முடிந்த மே 18க்குப் பிறகு நானும் மே 22 - 24 வரை கொச்சியில் தான் இருந்தேன்.
அது பற்றியும் எழுதி இருக்கிறேன்.

:)

Bleachingpowder சொன்னது…

//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...தசவதாரம் படம் வெளியிட்ட ஒருவாரத்திற்குள் குசேலன் பட ஸ்டில்களை வெளியிட்டது என்ன வகையான அரசியல்? புதசெவி///

விட்டா போன வாரம் கே டிவில பணக்காரன் படம் போட்டது கூட என்ன வகையான அரசியல்னு கேப்பீங்க போல இருக்கே...

ஒருத்தன் தோத்து போய்ட்டா அத மறைக்கறதுக்கு நூறு நொண்டி சாக்கு தேடுவான் அது போல தான் இதுவும். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.

இதே ரவி சொல்லலீயா இரண்டு மாதம் முன்பு, பொள்ளாச்சில ரெண்டு மாசம் சூட்டிங் வச்சு முடிக்கறதுக்கு இது ஒன்னும் சாதரணப்படம் இல்ல இது உலக படம்னு. அப்புறம் ஏன் வெறும் போட்டோ வ பார்த்து இப்படி பயப்படுகிறார்கள்.

அடுத்த மாதம் குசேலன் ரிலீஸ் அதனால் இப்போது Stills வெளியிட்டுள்ளார்கள். இதில் என்ன அரசியல் இருக்க முடியும்

Bleachingpowder சொன்னது…

//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...தசவதாரம் படம் வெளியிட்ட ஒருவாரத்திற்குள் குசேலன் பட ஸ்டில்களை வெளியிட்டது என்ன வகையான அரசியல்? புதசெவி///

விட்டா போன வாரம் கே டிவில பணக்காரன் படம் போட்டது கூட என்ன வகையான அரசியல்னு கேப்பீங்க போல இருக்கே...

ஒருத்தன் தோத்து போய்ட்டா அத மறைக்கறதுக்கு நூறு நொண்டி சாக்கு தேடுவான் அது போல தான் இதுவும். அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.

இதே ரவி சொல்லலீயா இரண்டு மாதம் முன்பு, பொள்ளாச்சில ரெண்டு மாசம் சூட்டிங் வச்சு முடிக்கறதுக்கு இது ஒன்னும் சாதரணப்படம் இல்ல இது உலக படம்னு. அப்புறம் ஏன் வெறும் போட்டோ வ பார்த்து இப்படி பயப்படுகிறார்கள்.

அடுத்த மாதம் குசேலன் ரிலீஸ் அதனால் இப்போது Stills வெளியிட்டுள்ளார்கள். இதில் என்ன அரசியல் இருக்க முடியும்

டி.பி.ஆர் சொன்னது…

பதிவர் சந்திப்பு முடிந்த மே 18க்குப் பிறகு நானும் மே 22 - 24 வரை கொச்சியில் தான் இருந்தேன்.//

அடடா! தெரிந்திருந்தால் அங்கேயே சந்தித்திருக்கலாம்.

ச்சின்னப் பையன் சொன்னது…

ஐயா!!என்ன இது கணக்கு எங்கேயோ இடிக்குதே!! நாடாளுமன்றத் தேர்தலுக்கு 6 மாதம் முன்பு, நாங்களே கூட்டணி மாறி அங்கே (பாஜக) போயிடுவோமே!! அப்போ அங்கே ஏற்கனவே பாமக இருக்குமா!!

இக்பால் சொன்னது…

\\..நாடாளுமன்ற தேர்த்தலில் நான்கு இடங்கள் பெற்று அதில் இரண்டு வெற்றிபெற்றால் கூட அவர்களுக்கு லாபம் தான். கண்டிப்பாக விஜயகாந்த் கட்சி திமுக பக்கம் சென்றுவிடும் என்றே தெரிகிறது.//
சந்தேகம்தான். எனக்கு என்னவோ வி. காந்த், ச் குமார் எல்லாம் பாஜகவோடா சேருவதிற்கு வாய்ப்பு இருக்கூன்னு நினைக்கிறேன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்