பின்பற்றுபவர்கள்

21 ஜூன், 2008

தசவதாரம் - பதிவுலகம் சாராத ஒருவரின் விமர்சனம்

தலைப்பிலேயே டிஸ்கி (disclaimer) போட்டாச்சி, அதனால் தசவதார விமர்சனமா ? ஐயோ கொல்றாங்களே என்று சொல்வதை தவிர்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியும் கொலைவெறி வந்தால், இதற்கும் மேல் கீழே படிக்க வேண்டாம். எனது நெருங்கிய நண்பரின் மாமனார் ஒரு விமர்சனத்தை எழுதி அவருக்கு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். அதை நண்பர் எனக்கு அனுப்ப...உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். பதிவர்கள் அடுத்த சுற்று 'தசவதாரம் எடுக்க' ஐடியா கொடுத்தாச்சு :)

இனி அவர் அனுப்பியதை இங்கே அப்படியே பதிக்கிறேன். அதில் எனது கருத்து எதையும் சேர்க்கவில்லை.

********

தசாவதாரம் -- ஒரு விமர்சனம்
தசாவதாரம் தொடங்கி சில நிமிடங்களிலேயே எனக்குத் தலைவலியின் அறிகுறி தோன்றத் தொடங்கி விட்டது.

கமல் போன்ற வெளிவாசிகளின் (outliers, the milder alternative for geniuses!) எதிர்பார்க்கப்பட்ட பண்புதான் இது! ஒரு நேரம் மிக ஆச்சரியகரமாய் அனைவரையும் கவர்வார்கள்; ஒரு நேரம் பெரும்பான்மையோரைச் சலிப்படைய வைத்துவிடுவார்கள்! ஆளவந்தான், அன்பே சிவம், மும்பை எக்ஸ்ப்ரெஸ், விருமாண்டி என்று மாறி மாறி வரும் கமலின் படைப்புத் தரங்களைப் பார்த்தால் நாம் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ராம்கோபால் வர்மா இன்னொரு எடுத்துக்காட்டு (இப்போது அவர் மேலெழுந்து வரும் அறிகுறி குறைவாக இருப்பது வேறு விஷயம்!)

தசாவதாரத்தின் முக்கியமான குறைகள்: பெரிதும் எதிர்பார்ப்புடன், பெரிய செலவு செய்து, நீண்ட காலம், நிறைய முயற்சிகள் செய்து ஒரு படம் எடுக்கும்போது அப்படத்தின் வகையை (genre) முதலில் நிர்ணயிக்க வேண்டியது முதற்கண் தேவை. இது ஒரு பொழுதுபோக்குப் படமா, ஒரு 'புத்திசாலிப்' படமா? பொழுதுபோக்கிலும் ஒரு மகானுபவப் (adventure) படமா, ஒரு உறவுகளின்/சம்பவங்களின் கோர்வையா (drama), ஒரு நகைச்சுவைப் படமா? தசாவதாரம் ஒரே நேரத்தில் இவையனைத்துமாகவும் இன்னும் மற்றபிறவாகவும் (அறிவியல், வரலாறு, உண்மைச்சம்பவங்களின் பின்புலம்) இருக்க முயல்கிறது. இதுவே அதன் முதற்குறை! இக்குறையையும் ஒரு நேரிய திரைக்கதையின் மூலம் நிவர்த்தி செய்திருக்கலாம்; செய்யவில்லை! அது மிகப்பெரிய இரண்டாம் குறை!

இவ்வளவு செலவு செய்து ஒப்பனை செய்து என்ன பயன்? ஓரிரு வேடங்களைத்தவிர மற்ற அனைத்தும் முகபாவங்களைக் காட்டமுடியாத அளவுக்குக் கல்லாகவும் பளபளப்பாகவும் நிற-அமைவு இல்லாமலும் சலிப்பையும் (சிலே நேரங்களில் சிரிப்பையும்) வரவழைப்பதே உண்மை!

ஆழம் தெரிந்து காலை விட்டிருக்க வேண்டும்; அமெரிக்கக் காட்சிகளும் கதை அமைப்பும் (நாசாவில் எங்கும் தமிழர்களா?) பெரிதும் நிரடுகிறது. 'ஹே ராம்' எடுத்தவர் இவர்தானா என்ற வியப்பு தோன்றுகிறது!

என்னைப் பொறுத்தவரை இப்படத்தில் என்னைக் கவர்ந்தது சில பாத்திரங்களின் வசன உச்சரிப்பே! குறிப்பாகத் தெலுங்கு-தமிழ் CBI அதிகாரியும் தலித் போராளியும் இத்துறையில் தேறுகிறார்கள்!

மிச்ச சிறப்புகள் அனைத்தும் மற்ற குறைகளின் அழுத்தத்தில் காணாமலே போகின்றன! மெல்ல மெல்ல வந்த என் தலைவலி சப்பணம் போட்டு அமர்ந்துகொண்டு மறுநாள் காலை வரை.

பின்குறிப்பு : இது தசவதாரம் குறித்த எனது எட்டாவது பதிவு. இன்னும் 2 சேர்த்து பத்தாவது பதிவு போடுவதற்கு எதாவது தேறும் என்ற நன்நம்பிக்கையில் இருக்கிறேன். வழக்கம் போல் பேராதரவு கொடுத்து எனது லட்சியத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் :)

தொடர் : ஒலக நாயகனின் தசவதாரம் - திரைக்கதை ( செப் 2006. எழுதியது நகைச்சுவை தொடர்)
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

தசவதாரம் - கிளம்பிய புதிய சர்ச்சைகள் !
தசவதாரம் - பார்த்தவர்களுக்கு மட்டும் ...
தசவதாரம் - ஒரு சோதிட பார்வை !

5 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

//
இது தசவதாரம் குறித்த எனது எட்டாவது பதிவு. இன்னும் 2 சேர்த்து பத்தாவது பதிவு போடுவதற்கு எதாவது தேறும் என்ற நன்நம்பிக்கையில் இருக்கிறேன்.
//
விரைவில் 10வது பதிவிட வாழ்த்துக்கள்!!
:)

பரிசல்காரன் சொன்னது…

;-))
அட்டென்டன்ஸ் போட்டாச்சு!

அப்புறம் வாரேன்!

கிரி சொன்னது…

கோவி கண்ணன் எல்லோரும் ஒரு முடிவோட தான் இருக்காங்க போல..

நான் படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதலாம்னு நினைத்து இருந்தேன்.. இனி எழுதுனா தேடி வந்து அடி விழும் போல ஹா ஹா ஹா ஹா ஹா

இந்த ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பா இதை வேற நீங்க சொருகிட்டீங்க :-))))

பாவங்க இனி தாங்காது ...

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கோவி கண்ணன் எல்லோரும் ஒரு முடிவோட தான் இருக்காங்க போல..

நான் படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதலாம்னு நினைத்து இருந்தேன்.. இனி எழுதுனா தேடி வந்து அடி விழும் போல ஹா ஹா ஹா ஹா ஹா

இந்த ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பா இதை வேற நீங்க சொருகிட்டீங்க :-))))

பாவங்க இனி தாங்காது ...
//


பாசரிஸில் படம் ஓடுது. சென்று பாருங்கள் அங்கு கூட்டம் இருக்காது !

கிரி சொன்னது…

//பாசரிஸில் படம் ஓடுது. சென்று பாருங்கள் அங்கு கூட்டம் இருக்காது !//

அப்படியா! நான் யிஷுன் ல மட்டும் தான் என்று நினைத்தேன்.. நாளைக்கு டிக்கெட் கிடைக்குமா ..இன்னைக்கு கொஞ்சம் அலுவலக வேலை இருக்கு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்