பின்பற்றுபவர்கள்

7 ஜூலை, 2008

வயது++ இத்துடன் போதும் - அழகியுடன் நான் !

சிங்கையில், ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் - ஜனவரியில் வெளிநாட்டு கலைக்குழுவினர்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு வந்து கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்து இருப்பார்கள். 2007 ஜெனவரியில் அர்ஜெண்டினா, ப்ரேசில் கலைகுழுவினர் இணைந்து வந்து நிகழ்ச்சி நடத்தினர். பேண்ட் வாத்திய நிகழ்ச்சிகளில் ப்ரேசில் மற்றும் அர்ஜெண்டினா இடுப்பாட்ட அழகிகள் (Belly Dancer) சுழன்று ஆடினார்கள். கண்கள் இமைக்காமல் பார்த்து மயங்கும் அளவுக்கு நடன அசைவுகள். முடிந்ததும் அனைவரும் அவர்களுடன் புகைப்படம் எடுத்தனர். எனக்கும் எடுத்துக் கொள்ள ஆசை. தயக்கம் விட்டு, இடுப்பாட்ட(ம்) அழகியின் அருகில் சென்று நின்றேன். கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது. பெருமிதமான சிரிப்புடன் அருகில் மிகவும் நெருக்கமாக அந்த அழகி என்னுடன் ஒட்டி நிற்க, நான் கொண்டு சென்றிருந்த நிழல்படக் கருவியின் விசையைத் என் மனைவி தட்ட இந்த நிழற்படம் கிடைத்தது.

உலகெங்கிலும் சிறந்த கலைஞர்கள் கலையை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துகிறார்கள். அத்தகைய கலைகள் முதலில் அவர்களது தொழில் பிறகு அவர்களது பண்பாடுகளை சார்ந்தது. நம் ஊரில் குறவன் - குறத்தி நடனத்தின் போது குறத்தியாக ஆடும் பெண்களின் ஜாக்கெட்டில் ரூபாய் நோட்டுகளை குத்தும் பெருசுகளையும், அதை விழிக்கொட்டாமல் பார்த்து ரசிக்கும் இளசுகள், ரெக்கார்ட் டான்ஸ் என்ற பெயரில் சேலம் பகுதி ஊர்களில் அரங்கில் ஆபாசமே முதன்மையாக் இடம்பெறும், நடைபெறும் பண்பாடு உடைய நமக்கு, ப்ரேசில் நடன கலைஞர்களின்ன் இடுப்பு நடனமோ, அந்த கலைஞர்களின் இடுப்பு அசைவுகளோ, அவர்களின் மேடை பண்பாடோ ஒப்பு நோக்க எந்தவிதத்திலும் தரக்குறைவானது அல்ல என்பது என் எண்ணம்.

மேலே உள்ள படத்தைப் பார்த்து உங்களில் யாருக்கும் காதில் புகைவந்தால் நான் பொறுப்பு அல்ல. :)))))))

கீழே உள்ள அசை படம் அவர்கள் அங்கே மேடையில் ஆடியது. அசைபட உதவி உதவி யூடியூப்


18 கருத்துகள்:

SP.VR. SUBBIAH சொன்னது…

////மேலே உள்ள படத்தைப் பார்த்து உங்களில் யாருக்கும்
காதில் புகைவந்தால் நான் பொறுப்பு அல்ல. :)))))))////

உங்கள் Better Halfற்கே புகை வராதபோது - எங்களுக்கு எப்படி வரும் ராசா?

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...


உங்கள் Better Halfற்கே புகை வராதபோது - எங்களுக்கு எப்படி வரும் ராசா?
//

நம்ம வீட்டில் இதுக்கெல்லாம் வாய்ப்புக் கொடுப்பாங்களா....ஹூம் ...புகைவராதா ?
:)))

வடுவூர் குமார் சொன்னது…

டச் அப் செய்த படமோ என்று நினைத்தேன். :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
டச் அப் செய்த படமோ என்று நினைத்தேன். :-)
//

குமார்,
டச்சிங் டச்சிங் தான். டச் அப் இல்லை. இப்படி நினைப்பீர்கள் என்று தான் நடனமணிகளின் வீடியோவை இணைத்திருக்கிறேன்.

ஜீவன் சொன்னது…

படத்தை , குறிப்பாக ப்ரேசில் அழகியை , பெரிதாக்கி பார்க்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்,
:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவன் said...
படத்தை , குறிப்பாக ப்ரேசில் அழகியை , பெரிதாக்கி பார்க்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்,
:-)
//

உங்கள் LOOK க்கு வேண்டுமென்றால் மின் அஞ்சலில் அனுப்பு வைக்கிறேன். ப்ரேம் போட்டு அலுவலகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் !
:)

கிரி சொன்னது…

கோவி காண்ணன் எனக்கு மறக்காம இந்த முறை எனக்கும் தெரியப்படுத்துங்க ஹி ஹி ஹி ஹி

உங்க ++ அனுபவத்தை முடித்து விட்டீங்க போல .. ;-)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கோவி காண்ணன் எனக்கு மறக்காம இந்த முறை எனக்கும் தெரியப்படுத்துங்க ஹி ஹி ஹி ஹி //

கிரி,
அதுக்கென்ன தெரிந்தால் தெரிய படுத்துக்கிறேன். உங்களுக்கு இம்புட்டு தைரியம் வந்த பிறகு எனக்கு என்ன தயக்கம் ?
:))))))))

//உங்க ++ அனுபவத்தை முடித்து விட்டீங்க போல .. ;-)
//

ஆமாம், எனது நண்பர் கூட கேட்டார்,
'இப்போ உன்னைப் பற்றிய இமேஜ் மாறி இருக்குமே?' என்று. நான் ஆபாச கதைகள் போல் எழுதவில்லை என்றாலும் பலருக்கு அதுபோன்றே புரிதலில் குழப்பம் நடைபெறுவதால், போதும் நிறுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டேன்.
:) தொடர்(ந்த) ஆதரவுக்கு நன்றி !

VIKNESHWARAN சொன்னது…

இதற்கு மேல் 18 வயது கதைகள் வராது தானே...

TBCD சொன்னது…

புகை வருவதெல்லாம் இருக்கட்டும்...

இன்னும் இந்த ஒரு படத்தை வைச்சு எத்தனை நாள் ஓட்டப் போறீங்க..

சீக்கிரம் வேற ஒரு அழகி படம் காட்டுங்க...

பி.கு :-

சிங்கையில் ஸ்ரிப்டீஸ் உண்டா...

புதுகை.எம்.எம்.அப்துல்லா சொன்னது…

புகைப்படம் பொண்டாட்டி எடுத்ததா??
ஹும்ம்ம்...வேற என்னத்தண்ணே சொல்ல?

இக்பால் சொன்னது…

\\\\மேலே உள்ள படத்தைப் பார்த்து உங்களில் யாருக்கும் காதில் புகைவந்தால் நான் பொறுப்பு அல்ல. :)))))))///

புகைப்படம் போட்டதே எங்களை வெறுப்பேற்றுவதற்குதான். அப்புறம் என்ன....

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
இதற்கு மேல் 18 வயது கதைகள் வராது தானே...
//
விக்கி,
என்னுடைய அந்த இடுகையில் எது ஆபாசம் என்று சொன்னால் எடுத்துவிடுவேன்.

தற்போது திருப்தியா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
புகை வருவதெல்லாம் இருக்கட்டும்...

இன்னும் இந்த ஒரு படத்தை வைச்சு எத்தனை நாள் ஓட்டப் போறீங்க..

சீக்கிரம் வேற ஒரு அழகி படம் காட்டுங்க...//

டிபிசிடி
நாம லங்காவி சென்ற போது இரண்டு புகைப்படம் தட்டி இருக்கலாம். மிஸ் பண்ணிட்டோம் !

//பி.கு :-

சிங்கையில் ஸ்ரிப்டீஸ் உண்டா...
//

அப்படீன்னா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
புகைப்படம் பொண்டாட்டி எடுத்ததா??
ஹும்ம்ம்...வேற என்னத்தண்ணே சொல்ல?
//

புகை வந்துடுச்சா ?

என்னங்க இது மனைவியை அருகில் வைத்துக் கொண்டே சைட் அடிக்கும் ஆண்களைப் பார்த்ததே இல்லையா ?
அதுக்கு இது எவ்வளவோ பெட்டர். பர்மிசனோடு தானே புகைப்படம் எடுத்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இக்பால் said...
\\\\மேலே உள்ள படத்தைப் பார்த்து உங்களில் யாருக்கும் காதில் புகைவந்தால் நான் பொறுப்பு அல்ல. :)))))))///

புகைப்படம் போட்டதே எங்களை வெறுப்பேற்றுவதற்குதான். அப்புறம் என்ன....
//

இக்பால்,
டிசம்பர் மாதம் இதுபோல் எதாவது குழுவரும், தைரியமாக போய் எடுத்துக் கொள்ளுங்கள்.

டொன் லீ சொன்னது…

இது சிங்கே பரேட் என்று நினைக்கிறேன். ஜனவரி மாதமளவில் நடப்பது வழக்கம். எல்லா நாட்டிலிருந்தும் வருவார்கள்.

தஞ்சாவூரான் சொன்னது…

நல்லா இருக்கு. ஆர்ச்சர்ட் ரோட் பரேடா? நம்ம ஊர் கலைக் குழுக்களும் வந்திருக்குமே?
கலையை, கலைக்கண் மட்டும் கொண்டு பார்த்தால் ஆபாசம் எங்கே வரும்?

டிபிசிடி,
சிங்கப்பூரில் ஸ்ட்ரிப் டான்ஸெல்லாம் கிடையாது :) ஒரே ஒரு காபரே கேலாங் லோரோங் 1 சந்தில் இருப்பதாக ஞாபகம் :))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்