பின்பற்றுபவர்கள்

15 ஜூன், 2008

தசவதாரம் - பார்த்தவர்களுக்கு மட்டும் ...

'இந்த குழந்தை பிறந்த நேரம் உலகத்துக்கே ஆபத்து' வழக்கமான மாரியாத்தா கதைக்கு மாற்றாக அமெரிக்கத் தனமான அறிவியல் பயமுறுத்தல் கதை. 'உயிர்கொல்லி கெமிக்கல் எதிரிகளின் கைகளுக்கு சிக்கிவிட்டாலோ, அல்லது திறந்து கொண்டாலோ ஏற்படும் விளைவுகள் சுனாமியால் தடுக்கப்படுகிறது' பெரிய எழுத்தில் சிறிய சிலேட்டில் எழுதிவிடக் கூடிய கதை. நைட் சியாமளனின் ஹேபனிங்க் கூட உலக மக்களை தற்கொலை செய்து கொள்ள வைக்கும் ஒரு கிருமி பற்றியது.

அதற்கு விதவிதமான மேக்கப் போட்டு சோழர்காலம் முதல் சென்ற சுனாமி வரை உள்ள காலத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். சைவ வைணவ சண்டைகளுக்கு காரணம் குலோத்துங்கச் சோழன் 'தான்' என்று கதையில் சொல்லிவிட்டதால் இராமகோபாலன்களுக்கு நிம்மதி ஏற்பட்டு இருக்கும், சோழர்காலக் கதையில் காட்டி இருக்கும் ஒரு வைணவருக்கே முதுகில் கொக்கி மாட்டி தொங்கவிடப்பட்டு சிலையுடன் கடலில் மூழ்கடிக்கப்படும் இத்தகைய கொடூர தண்டனை என்றால் சைவ சமயம் தழைக்க கழுவேற்றப்பட்ட எண்ணாயிரம் சமணர்கள் அந்த காட்சியின் போது என்னுள் வந்து சென்றார்கள். :(

துரோகிகள் எப்போதும் கூடவே தான் இருப்பார்கள் என்று சொல்லுவிதமாக அமெரிக்க விஞ்ஞானியாக இருக்கும் கமலின் நண்பர்களின் பாத்திரங்கள். அங்கிருந்து தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் அருமை. இடையில் காட்டப்படும் ஜப்பானிய கராத்தே மாஸ்டர் படத்தின் இறுதிக் காட்சிகளில் மட்டுமே ஒட்டுகிறார். பாத்திரத்தின் முழுமைக்காக கமல் மிகவும் பாடுபட்டு இருப்பதால் என்னவோ அங்கு கமல் என்ற அடையாளமே மறைந்து இருக்க இல்லாமல் வேறுருவரைக் கூட அதற்கு போட்டிருக்கலாம் என்றும் தோன்றியது. முற்றிலும் மாறுபட்ட பாத்திரம் என்பதை தனது சுவடில்லாமல் சிறப்பாக செய்திருக்கிறார் என்றும் கொள்ளலாம்.

எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது பல்ராம் நாயுடு பாத்திரம் தான். பெங்களூரில் இருந்த போது பார்த்திருக்கிறேன் தெலுங்கர்கள் (பாஸ்) தட்டுத்தடுமாறி பேசும் தமிழை அப்படியே நகைச்சுவையுடன் கலந்து தந்திருப்பதை ரசித்தேன். அது போன்ற பாத்திரங்களை பலர் பார்த்திருக்கக் கூடும். கமல் சிறப்பாகவே செய்திருக்கிறார். அட்டகாசம் பல்ராம் நாயுடுவை மீண்டும் ரசிக்க மறுமுறை படம் பார்ப்பேன். :)

உயர்ந்த மனிதன், மற்றும் ஜார்ஜ் புஷ் உருவங்கள் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. பூவராகவன் பாத்திரம் பேசும் வசனங்களுக்காகவும் உருவ அசைவுகளுக்காகவும் மனதில் ஒட்டியது. சிங் வேடத்தில் புற்றுநோயால் இரத்த வாந்தி எடுக்கும் காட்சியைப் பார்க்கும் போது...இதைத்தான் ஏற்கனவே வாழ்வே மாயம், சலங்கை ஒலி படத்திலியே பார்த்துட்டோம்ல என்று நினைக்க வைத்தது. சிங் பாடும் பாடல் எழுந்தாட வைக்கும் என்று நினைத்தேன் ஏமாற்றம் தான். பஞ்சாப் பங்க்ரா நடனம் பார்த்தவர்களுக்கு அது சலிப்பையே தரும்.

சுனாமி சோகத்தில் மக்கள் அங்கும் இங்கும் அலறிக் கொண்டு ஓடுவதாகக் காட்டிக் கொண்டே நடுவே கமல் - அசின் பேசும் ரொமான்ஸ் வசனங்கள் அந்த சூழலிலும் அப்படி பேசிக் கொள்ள முடியுமா ? எதார்த்தமாக இல்லையே என நினைக்க வைத்தது. அடுத்தபடமெல்லாம் இவ்வளவு செலவு செய்யாமல் கே எஸ் இரவி குமார் எடுப்பாரான்னு எதிர்ப்பார்பை உண்டாக்கிவிட்டது. படத்தில் பார்க்க வேண்டும் என்று பாடல்கள் எதையும் இதுவரை கேட்காமல் சென்றதான் 'முகுந்தா...முகுந்தா' பாடல் தவிர எதுவும் ஒட்டவில்லை.

கடைசியில் கமல் மேக்கப் போட்டுக் கொள்ளும் காட்சியைப் பார்க்கும் போது உண்மையில் அதிர்ச்சி...சிஐஏ ஏஜெண்ட் அமெரிக்கராக நடித்தவரும் அவர் தான் என்று. அதன் பிரமிப்பு அகல நீண்ட நேரம் ஆயிற்று. காரணம் இந்த அமெரிக்கர் நன்றாக செய்கிறாரே அடுத்த அடுதத தமிழ் படங்களில் வாய்ப்புக் கிடைத்தால் தமிழ்நாட்டுக்கு வந்துவிடுவார் என்று படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நினைத்துக் கொண்டிருந்தேன். மல்லிகா செராவத் 'தாராள' நடிப்பு...ஏற்ற பாத்திரம் சிறப்பாக செய்து இருந்தார். ஜெயபிரதா - எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்று சொல்ல முடியாதா அளவுக்கு ஓரளவு நன்றாகவே இருக்கிறார். அசின் லொட லொட பேச்சு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியது (ஓவர் ஆக்சன்) மற்றபடி கமல் படத்தில் வரும் நாகேஷ், சந்தான பாரதி வருகிறார்கள். ரேகவும் பி.வாசுவும் தலையை காட்டுகிறார்கள். சுனாமி காட்டுவத்ற்கு முன்பு வரும் காட்சிகள் மைக்கேல் மதன காமராசனை நினைவு படுத்துகிறது.

சிவாஜியா ? தசவதாரமா ? - தமிழ்மண பதிவுகளைப் பொருத்தும்... சூடான இடுகைகளையும் மட்டுமே ஒப்பிட்டால் தசவதாரம் சிவாஜியை பின்னுக்கு தள்ளிவிட்டதென்றே சொல்லலாம். :) படத்தைப் பற்றி பலர் எழுதியதை படிக்கவில்லை. இருந்தாலும் சுனாமி போன்று தசவதார பதிவுகளாக வந்து எதிர்பார்க்க வைத்தது...ஓரளவுக்கு எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரவில்லை என்றாலும் ஏன் இவ்வளவு பில்டெப் என்றும் நினைக்க வைக்கிறது. கிறித்துவ, இஸ்லாமியர், தெலுங்கர் மற்றும் பார்பனர் ஆகிய பலதரப்பையும் கவரும் வண்ணம் பாத்திரங்களை படைத்து இருப்பது வியாபார தந்திரம் தான். வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

25 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

//
தசவதாரம் - பார்த்தவர்களுக்கு மட்டும் ...
//
மன்னிக்கவும்.. நான் இன்னும் பாக்கலை... அதனால பதிவைப் படிக்காம பின்னூட்டம் மட்டும் போடுறேன்... :P

Thekkikattan|தெகா சொன்னது…

இன்று மதியம் நான் தரிசித்து விட்டுத்தான் ஏதும் சொல்ல முடியும் :)). நேற்றைக்கு வேற இருக்கிற பண வீக்கத்திலே "த ஹாப்பனிங்" பார்த்திட்டு உட்கார்ந்திருக்கோம் இன்னிக்கு இது... பார்த்திட்டு சொல்றேன்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நானும் படம் பார்த்துவிட்டேன். படத்தின் வேகம் சிந்திக்க, சிரிக்க , ரசிக்க நேரம் கொடுக்கவில்லை.. வேகம் , வேகம் ..... தமிழ் படத்தில் இல்லாத வெகம். மீண்டும் பார்த்தால் இன்னும் புரியும் என்று நினைக்கிறென்.... ஹிஹிஹிஹி..

Jay சொன்னது…

கமலுக்காகவும் அவரின் நடிப்புக்காகவும் திரைப்படத்தைப் பார்க்கலாம்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

//அது போன்ற பாத்திரங்களை பலர் பார்த்திருக்கக் கூடும். கமல் சிறப்பாகவே செய்திருக்கிறார்.//
ஆமாம் நாங்கள் தெலுங்கு பார்டரில் வசிப்பதால் நேரில் இது போல் பல கேரக்டர்களை நேரில் பார்க்கிறோம் .
அதிலும் அவர் அச்சிடன்ட் சொல்வாரே " இவர் மிகவும் திறமைசாலி . இவர் ஆறு லான்க்வேஜை தெலுகில் பேசுவார் " (he can speak six languages in telugu ). நினைக்க நினைக்க சிரிப்புதான் !!!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

Prasad Raj சொன்னது…

கோவி..

மிக அருமை..அழகாக சொல்லியிருக்கிறாய்.

நண்பர்கள் சிலர் சொல்லியதை வைத்து, நான் இந்த படத்தை பார்காமல் விட்டு விடலாம் என்று என்னி இருந்தேன்..

இல்லை ...இல்லை...

உன் எழுத்துக்கள் ..என்னை படம் பார்க்க டிக்கெட் எடுக்க சொல்லிற்று.

விரைவில் பார்த்துவிட்டு...
விரிவாக எழதுகிறேன்.

அன்புடன்...
பிரசாத்,
சிகாகோ.

பி.கு. என்னவர்களுக்கும்..உன் எழத்தை அனுப்பி வைக்கிறேன்.

கிரி சொன்னது…

நான் இந்த வாரம் பார்க்க போறேன்..:-)

SurveySan சொன்னது…

//சிவாஜியா ? தசவதாரமா ?//

நல்ல தலைப்பு :)


பி.கு: Snap ஒபத்ரவம் கொடுக்குது.

பரிசல்காரன் சொன்னது…

/சுனாமி சோகத்தில் மக்கள் அங்கும் இங்கும் அலறிக் கொண்டு ஓடுவதாகக் காட்டிக் கொண்டே நடுவே கமல் - அசின் பேசும் ரொமான்ஸ் வசனங்கள் அந்த சூழலிலும் அப்படி பேசிக் கொள்ள முடியுமா ? எதார்த்தமாக இல்லையே என நினைக்க வைத்தது.//

உண்மை..!

//படத்தில் பார்க்க வேண்டும் என்று பாடல்கள் எதையும் இதுவரை கேட்காமல் சென்றதான் 'முகுந்தா...முகுந்தா' பாடல் தவிர எதுவும் ஒட்டவில்லை.//

பாடல்களில் 'கல்லை மட்டும் கண்டால்' & 'முகுந்தா முகுந்தா..' முதல்/இரண்டாமிடம் தட்டி செல்கின்றது.
கல்லை மட்டும் கண்டால் பாடல் பற்றி என் விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். வந்துட்டு போங்க.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. எப்படியெல்லாம் ஆள் சேர்க்க வேண்டியிருக்கு!)

Bleachingpowder சொன்னது…

//கடைசியில் கமல் மேக்கப் போட்டுக் கொள்ளும் காட்சியைப் பார்க்கும் போது உண்மையில் அதிர்ச்சி...சிஐஏ ஏஜெண்ட் அமெரிக்கராக நடித்தவரும் அவர் தான் என்று. அதன் பிரமிப்பு அகல நீண்ட நேரம் ஆயிற்று//

இது ரொம்ப ஒவர்..எனக்கு தெரிந்து எந்த அமெரிக்கனுக்கும் இவ்வளவு பெரிய தலை இருந்ததில்லை.

அதேபோல் தொழில்நுட்பம். எனக்கெனனவோ ஆளவந்தான் இதவிட பெட்டர்னு தோனுது

Bleachingpowder சொன்னது…

//கடைசியில் கமல் மேக்கப் போட்டுக் கொள்ளும் காட்சியைப் பார்க்கும் போது உண்மையில் அதிர்ச்சி...சிஐஏ ஏஜெண்ட் அமெரிக்கராக நடித்தவரும் அவர் தான் என்று. அதன் பிரமிப்பு அகல நீண்ட நேரம் ஆயிற்று//

இது ரொம்ப ஒவர்..எனக்கு தெரிந்து எந்த அமெரிக்கனுக்கும் இவ்வளவு பெரிய தலை இருந்ததில்லை.

அதேபோல் தொழில்நுட்பம். எனக்கெனனவோ ஆளவந்தான் இதவிட பெட்டர்னு தோனுது

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//கழுவேற்றப்பட்ட எண்ணாயிரம் சமணர்கள் அந்த காட்சியின் போது என்னுள் வந்து சென்றார்கள். :(//

என்னுள்ளும் தான்! :-((

//கமல் என்ற அடையாளமே மறைந்து இருக்க இல்லாமல் வேறுருவரைக் கூட அதற்கு போட்டிருக்கலாம் என்றும் தோன்றியது//

அட,
கதாநாயகிகளைக் கூட கமல் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் (கதைக்கு), வீணடித்து விட்டாரோ (கதைக்கு) என்ற ஒரு ஏக்கமும் வருகிறது! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//சுனாமி சோகத்தில் மக்கள் அங்கும் இங்கும் அலறிக் கொண்டு ஓடுவதாகக் காட்டிக் கொண்டே நடுவே கமல் - அசின் பேசும் ரொமான்ஸ் வசனங்கள் அந்த சூழலிலும் அப்படி பேசிக் கொள்ள முடியுமா ?//

போதாக்குறைக்கு நாகேஷ் பேசும் வசனம்!
நாமளும் வெளியே இருந்திருந்தால் இந்நேரம் செத்துப் போய் இருப்போம்! நல்ல காலம்! கடவுள் அருள்! நாம் தப்பித்தோம் என்கிற ரீதியில் பேசுவார் பாருங்க!

அத்தனை உடல்களையும் அடக்கம் செய்யும் இடத்தில் பேசும் பேச்சா இது? என்னமோ இறந்தவர்கள் எல்லாம் கடவுள் அருள் இல்லாத மாதிரி! ஒரு வகை தொகை வேணாம் எங்க எது பேசறதுன்னு?

இன்னொரு நெருடல், பூநூலைக் காட்டி, கமல் நம்பி விடும் பிரம்மஹத்தி சாபம்!
சரி அந்தக் காலத்தில் இருந்தது தான்! இராமனும் இராவணனைக் கொன்ற இதே சாபம் தீர ஈசனை வணங்கிய கதை-ன்னு ரெண்டு பக்கமும் இந்தப் பழக்கம் உண்டு என்று சும்மா இருந்து விடலாம்!

ஆனால் இராமசாமி என்ற பெயரைக் கேட்டதும், தொடர்வண்டியில் அசின் பொரிந்து பேசுவது சைலண்ட் மோட் ஆகி விடும்! சென்சார் கட்டா என்று தெரியவில்லை?

பேசாம அந்தக் காட்சியையே நீக்கி இருக்கலாம்! இல்லை முழுக்கக் காட்டி இருக்கலாம்! இப்படிச் செய்தது மிகவும் இழிவான ஒரு செயல்! மிகவும் தவறான ஒரு போக்கு! கண்டனங்கள்!!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

அண்ணா,
ஜிராவுக்கு அளித்த மறுமொழிகள், பதிவுச் சாளரம் (Blog window) மாறி விட்டது! தூக்கக் கலக்கம்! :-)
பப்ளிஷ் பண்ணுங்க! காப்பி & பேஸ்ட் செஞ்ச பின் டிலீட் செய்து விடுகிறேன்!

இது பிரசுரத்துக்கு உகந்ததே! :-))

ரூபன் சொன்னது…

ந‌ண்பரே 60 கோடி செல‌வில்,2 வ‌ருட‌ உழைப்பும் வேர்வையும் ம‌ட்டுமே ப‌ட‌த்தில் தெரிந்த‌து.தாங்க‌ள் சொல்வ‌தைப்போல் அல்ல‌.எல்லா ர‌சிக‌ர்க‌ளையும் திருப்தி ப‌டுத்தும் வித‌மாக‌வே உள்ள‌து.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரூபன் said...
ந‌ண்பரே 60 கோடி செல‌வில்,2 வ‌ருட‌ உழைப்பும் வேர்வையும் ம‌ட்டுமே ப‌ட‌த்தில் தெரிந்த‌து.தாங்க‌ள் சொல்வ‌தைப்போல் அல்ல‌.எல்லா ர‌சிக‌ர்க‌ளையும் திருப்தி ப‌டுத்தும் வித‌மாக‌வே உள்ள‌து.
//

ரூபன்,
விமர்சனத்தை சரியாக படிக்க வில்லையோ...படத்தில் குறைகளாக தெரிந்தது லாஜிக் இல்லாத சமாச்சாரங்கள் தான். படத்தின் மற்ற தரங்கள் நன்றாகவே இருக்கிறது, வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறேன் நண்பரே.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஆ.ஞானசேகரன் said...
நானும் படம் பார்த்துவிட்டேன். படத்தின் வேகம் சிந்திக்க, சிரிக்க , ரசிக்க நேரம் கொடுக்கவில்லை.. வேகம் , வேகம் ..... தமிழ் படத்தில் இல்லாத வெகம். மீண்டும் பார்த்தால் இன்னும் புரியும் என்று நினைக்கிறென்.... ஹிஹிஹிஹி..
//

ஞான்ஸ்,
சரி சரி டிக்கெட் எடுத்து வையுங்கள் 2 ஆவது தடவை போய் வருவோம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//
ஜெகதீசன் said...
//
தசவதாரம் - பார்த்தவர்களுக்கு மட்டும் ...
//
மன்னிக்கவும்.. நான் இன்னும் பாக்கலை... அதனால பதிவைப் படிக்காம பின்னூட்டம் மட்டும் போடுறேன்... :P
//

ஜெகா, எங்கள் வீட்டுக்கு பக்கம்..பாசரிஸ் டவுன் டவுன் ஈஸ்டில் இஹப் திரையரங்கில் 5 காட்சி போட்டு இருக்கார்கள், அங்கு கூட்டம் வராது சென்று பாருங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா said...
இன்று மதியம் நான் தரிசித்து விட்டுத்தான் ஏதும் சொல்ல முடியும் :)). நேற்றைக்கு வேற இருக்கிற பண வீக்கத்திலே "த ஹாப்பனிங்" பார்த்திட்டு உட்கார்ந்திருக்கோம் இன்னிக்கு இது... பார்த்திட்டு சொல்றேன்.
//

தெகா,
சொன்னமாதிரியே பார்த்துவிட்டு சொல்லிட்டிங்க இப்போ.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Mayooresan said...
கமலுக்காகவும் அவரின் நடிப்புக்காகவும் திரைப்படத்தைப் பார்க்கலாம்.
//
மயூ,

யாராவது ஓசி டிக்கெட் கொடுத்தால் இன்னுமொருமுறை கூட பார்க்கலாம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Mayooresan said...
கமலுக்காகவும் அவரின் நடிப்புக்காகவும் திரைப்படத்தைப் பார்க்கலாம்.
//
மயூ,

யாராவது ஓசி டிக்கெட் கொடுத்தால் இன்னுமொருமுறை கூட பார்க்கலாம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ARUVAI BASKAR said...
//அது போன்ற பாத்திரங்களை பலர் பார்த்திருக்கக் கூடும். கமல் சிறப்பாகவே செய்திருக்கிறார்.//
ஆமாம் நாங்கள் தெலுங்கு பார்டரில் வசிப்பதால் நேரில் இது போல் பல கேரக்டர்களை நேரில் பார்க்கிறோம் .
அதிலும் அவர் அச்சிடன்ட் சொல்வாரே " இவர் மிகவும் திறமைசாலி . இவர் ஆறு லான்க்வேஜை தெலுகில் பேசுவார் " (he can speak six languages in telugu ). நினைக்க நினைக்க சிரிப்புதான் !!!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
//

அந்த காட்சி வசனத்தைக் கேட்டுவிட்டு என் மகள் என்னிடம் கேட்டாள் 'ஹவ் கம் ? so funny'
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// கிரி said...
நான் இந்த வாரம் பார்க்க போறேன்..:-)
//

கிரி
வரம் கிடைக்கட்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

// Prasad said...
கோவி..

மிக அருமை..அழகாக சொல்லியிருக்கிறாய்.

நண்பர்கள் சிலர் சொல்லியதை வைத்து, நான் இந்த படத்தை பார்காமல் விட்டு விடலாம் என்று என்னி இருந்தேன்..

இல்லை ...இல்லை...

உன் எழுத்துக்கள் ..என்னை படம் பார்க்க டிக்கெட் எடுக்க சொல்லிற்று.

விரைவில் பார்த்துவிட்டு...
விரிவாக எழதுகிறேன்.

அன்புடன்...
பிரசாத்,
சிகாகோ.

பி.கு. என்னவர்களுக்கும்..உன் எழத்தை அனுப்பி வைக்கிறேன்.
//

பிரசாத்,

பாராட்டுக்கு நன்றி,

அப்படியே படம் பார்த்துட்டு உன்கருத்தையும் சொல்லு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்