பின்பற்றுபவர்கள்

15 ஜூன், 2008

சிங்கை சிங்கங்களின் சந்திப்பு !

நான் எனது வாடகைக் காரில் கிழக்கு கடற்கரையினுள் நுழையும் சாலையை அடைந்த போது மாலை 5.20 ஆகி இருந்தது. அதற்குள் நான்கு சிங்கங்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தி இருந்தனர்.


மொத்தம் பதிவர் சந்திப்புக்கு 8 சிங்கங்கள் வந்திருந்தன. ஒரு சில சிங்கங்கள் வருவதாக சொல்லி இருந்தது, வேறு சில வேலைகளின் நீட்சியால் சந்திப்புக்கு வர இயலவில்லை என்றன.

சிங்கம் 1 : சிங்கை நாதன் (செந்தில்) நீண்டகாலமாக பதிவுலகையே வாசித்துவரும் சிங்கம். பலநூறு பதிவர் சந்திப்புகளை கண்ட சிங்கம் இதுதான்.

எனக்கு முன்பாக அங்கே வந்துவிட்டது. சிங்கத்துடன் ஒரு 30 நிமிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அடுத்து இரு சிங்கங்கள் வந்தன.

சிங்கம் 2 : ஜெகதீசன், இந்த சிங்கத்தைப் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் வாய் பேசாதவர்களில் சிலர் வாய் பேசுபவர்களை விட குசும்புத்தனம் செய்வார்களாமே அதை கற்பனை செய்து கொள்ளுங்கள். :) இந்த சிங்கம் வரும் போதே...புதிய சிங்கத்தையும் அழைத்து வந்தது.

சிங்கம் 3 : கிரி, இந்த சிங்கம் மூன்று மாதத்திற்கும் முன் எழுத ஆரம்பித்து 100 பதிவுகள் வரை கண்டு இருக்கிறது.

பரவலாக பலர் இந்த சிங்கத்துக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருப்பதால், முகத்தை இங்கே பார்த்துக் கொள்ளுங்கள். இளம் சிங்கம் தான், நெடிய ஒல்லிய சிங்கம். அடுத்ததாக வந்தது...

சிங்கம் 4: என்பெயர் சிவராம் முருகன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டது. தமிழ்மணத்தில் வரும் பதிவுகளை தொடர்ந்து படித்துவருகிறேன்.

பதிவை தொடங்கி அப்படியே வைத்திருக்கிறேன் என்று சொன்னது...அடுத்து வந்தது ஒரு அதிரடி சிங்கம்...

சிங்கம் 5 : பாரி.அரசு... கொஞ்ச நாளாகவே அருள் வந்த சாமியார் மாதிரி அவ்வப்போது அதிரடியாக எழுதிவரும் சிங்கம். சந்திப்பில் நிறைய பேசியது இந்த சிங்கம் தான்.

அடுத்து ஒரு சிங்கம்...தசவதாரம் படத்தில் வரும் நெடிய கமலைவிட ஒரு அடி குறைவான உயரம்... அது தான்

சிங்கம் 6 : வடுவூர் குமார்... ரொம்ப குஷி மூடில் இருந்ததால் என்னவோ...சந்திப்பில் அனைவருக்கும் இரவு உணவை உற்சாகமாக வாங்கித்தந்தது. இன்னொரு சிங்கம்...கடைசியாக வந்த சிங்கம் இதுதான்...சரியாக மாலை 6.15 மணிக்கு வந்தது

சிங்கம் 7 : முகவை மைந்தன் (இராம்) பரவலாக பலரது பதிவுகளை படித்துவரும் சிங்கம்... சிங்கைக்கு வேலைக்கு வந்து குறிப்பிட்ட வேலை அலுவலகத்தாரால் இன்னும் முடிவு செய்யமல் இருப்பதால் வலைப்பூவை வைத்து பொழுதை ஓட்டிவருவதாகச் சொன்னது. 8 ஆவது சிங்கம்

சிங்கம் 8 : தற்பெருமை எழுதினால் சிங்கம் அசிங்கமாகிடும் :))

*********சந்திபிற்கு முதலில் வந்த சிங்கை நாதன் செந்தில் வீட்டில் இருந்து அல்வா மற்றும் கேள்வரகு (ராகி) முறுக்கு செய்து எடுத்துவந்தார். வலைப் பதிவாளர்களின் மீது தனிப்பட்டு வைத்திருக்கும் அன்பு அதன் மூலம் எனக்கு தெரிந்தது. 'நீங்களெல்லாம் கஷ்டப்பட்டு எழுதுறிங்க...அதைப்பாராட்ட வழி தெரியல...என்னால் இப்படித்தான் பாராட்ட முடிகிறது...'என்றார். நெகிழ்ச்சியாக இருந்தது. சந்திப்பின் போது 'பதிவு எதையும் எழுதுவதில்லை...பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்' என்றார். பதிவு எதும் வைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். 'எதும் இருக்கிறதா ?' கேட்டேன்....'முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்' என்று சவால் விட்டார். இவருக்கு வலைப்பதிவு இருக்கிறதா ? தெரிந்தால் சொல்லுங்களேன். வாதம் - முடிவுக்கு வராத விவாதம் ஆகியவற்றால் பயனில்லை...வலைப்பதிவுகள் பயனுள்ள வகையில் எடுத்துச் சொல்லப்பட ...செல்லப்படவேண்டும். எழுதினோம்...சண்டைப்போட்டோம்...பொழுது போனது என்று இல்லாமல் அடுத்தக் கட்டத்திற்கு செல்லவேண்டும் என்று தனது ஆதங்கத்தையும் குறிப்பிட்டார்.

சிவராம் முருகன் பேசும் போது...'சில பதிவுகளைப் படிக்கும் போது பயங்கர வெறி வரும்...வக்காளி இதுபோல நாமும் எழுதனும்டான்னு ஆரம்பிச்சி எழுதுவேன்...எழுதிட்டு பதிக்க மாட்டேன்...அப்பறம் நாலு நாள் சென்று அதை அழித்துவிடுவேன்' என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

முகவை மைந்தன் பேசும் போது... என்னமோ 'சுதந்திரம்... கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் ?' என்று பாரி.அரசுவிடம் கேள்வி எழுப்பினார்...அப்பதான் தெரிந்தது இவர் கொஞ்ச கொஞ்சமாக பைத்தியக்காரனாக ( ஐ மீன் பின்னவினத்துவ பதிவர் நம்ம பைத்தியக்காரனைப் போல்) மாறிவருகிறார் என்று தெரிந்தது. இவரும் பாரி.அரசுவும் சூடான விவாதங்களைப் பேசினார்கள். ஜெகதீசன் அப்பாவியாக பார்த்துக் கொண்டு இருந்தார்.

பாரி.அரசு தமிழ்99 பயன்பாடுகள் பற்றி அருமையாக விளக்கினார். ஒரே முறையில் தமிழ் உள்ளிடுதல் இருந்தால் தமிழில் மென்பொருள் தயாரிப்பதை எளிதாக்கவும், அதை பயன்படுத்துவதும் எளிதாகிவிடும்...இல்லை என்றால் ஒவ்வொரு உள்ளிடுதல் முறைக்கும் மென்பொருள் தயாரித்து அதை ஒருங்குறிக்கு மாற்றி பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. அதாவது நாம் இன்று பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு உள்ளிடு முறைகளை ஒரே முறைக்கு மாற்றினால் கணனி தமிழை வணிகம் சார்ந்த பயன்பாட்டிற்கு சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என்றார்

வடுவூர் குமார் லினக்ஸ் பயன்படுத்தும் அனுபவங்களையும்...மற்றும் பதிவு சாராத பலசெய்திகளை பகிர்ந்து கொண்டார். முகவை மைந்தன் திருக்குறளுக்கு விளக்க உரை எழுதிய தனது சிலிர்ப்பு அனுபவத்தை விவரித்தார். நேரம் ஆகிவிட்டது கிளம்புகிறேன் என்று எவருமே சொல்லாததால் இரவு 9.15 ஆனதும்...சரி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு நடையைக் கட்டுவோம் என்று நினைவு படுத்தினேன். 9.30 மணி வாக்கில் அங்கேயே கோமளா உணவகத்தில் வடுவூர் குமாரின் உபயத்தால் உணவு உண்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு விடைபெற்று கிளம்பும் போது இரவு மணி 9.50 ஆகி இருந்தது. பதிவுலகம் தாண்டிய பல்வேறு நடப்புகளையும் பொதுவானவற்றையும் மட்டுமே மிகுந்து பேசினோம்.

கோமளாவில் போண்டா கிடைக்கவில்லை. அதனால் ஜெகதீசனுக்கு சந்திப்பு தித்திப்பாக இல்லையாம் ரொம்பவே வருத்தப்பட்டார்.

*********

மேலும் அவரவர் பார்வையில் பதிவர் சந்திப்பு குறித்து முதன் முதலில் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட கிரி...முகவை மைந்தன்...மற்றும் சிவராம் முருகன் எழுதுவார்கள்

50 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)

ஜெகதீசன் சொன்னது…

///
இந்த சிங்கத்தைப் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் வாய் பேசாதவர்களில் சிலர் வாய் பேசுபவர்களை விட குசும்புத்தனம் செய்வார்களாமே அதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
///
:((((

வடுவூர் குமார் சொன்னது…

சிவராம் முருகன் பேசும் போது...'சில பதிவுகளைப் படிக்கும் போது பயங்கர வெறி வரும்...வக்காளி இதுபோல நாமும் எழுதனும்டான்னு ஆரம்பிச்சி எழுதுவேன்...எழுதிட்டு பதிக்க மாட்டேன்...அப்பறம் நாலு நாள் சென்று அதை அழித்துவிடுவேன்' என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டு இருக்கேன்.

எழுதிமுடிச்சி மறுநாள் படிக்கும் போது...
"இது தேவையா? உனக்கு என்று கேள்வி அவரையே கேட்டுக்கொண்டு" மூடிவிடுவாராம். :-))

ஹலோ! போண்டாவுக்கு பதில் வடை வாங்கியது யார்??
அது வீட்டுக்கு வரும் வரை நெஞ்சு வரை இருந்தது தனிக்கதை.

பாரி.அரசு பல நல்ல விஷயங்களை சொன்னார்,தனது ஃரொபைலில் உள்ளதை அவ்வப்போது ஞாயப்படுத்திக்கொண்டு இருந்தார்.
அவர் தன் தந்தையை பற்றி சொன்னது இன்னும் யோசிக்கவைத்துக்கொண்டு இருக்கிறது.இவ்வளவு விஷய ஞானம் உள்ளவர் அதை தன் பதிவில் கொண்டுவருவதில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.

வடுவூர் குமார் சொன்னது…

சிவராம்...
தயவு செய்து அந்த விஸ்கி தான் முதல் பதிவாக இருக்கனும்.

நானும் அந்த மாதிரி தான் என்னுடைய முதல் அனுபவத்தில். :-))

வடுவூர் குமார் சொன்னது…

அல்வா மற்றும் கேழ்வரகு தேங்குழல் கொடுத்தனுப்பிய சிங்கைநாதன் மனைவிக்கு எங்கள் நன்றிகள்.

அல்வா, அளவான சக்கரையுடன் கையில் கூட ஒட்டாமல் அருமையாக இருந்தது.

ஜீவன் சொன்னது…

அறிவியல் மையம் சென்று கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு ஆஜர் மட்டும் சொல்லி விடுகிறேன்.
திரும்ப வருவேன்.


- ஜீவன் ( சிவராம் முருகன்)

துளசி கோபால் சொன்னது…

நம்ம செந்தில் எல்லாருக்கும் அல்வா கொடுத்துட்டாரா?:-)))))

வடுவூராரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் 'நோ ரிப்ளை' யாம். நியூசிச் சிங்கம் குறைபட்டுக் கொண்டார்.


ஆனால் பகலுணவு இன்னொரு (மரத்தடி)எழுத்தாளருடன் சாப்பிட்டுருக்கார்.

அல்வாத் திங்கக் கொடுத்துவைக்கலை(-:

அதிஷா சொன்னது…

இது போல நிறைய சந்திப்புகள் நடத்துங்க
வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
நம்ம செந்தில் எல்லாருக்கும் அல்வா கொடுத்துட்டாரா?:-)))))

வடுவூராரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் 'நோ ரிப்ளை' யாம். நியூசிச் சிங்கம் குறைபட்டுக் கொண்டார்.


ஆனால் பகலுணவு இன்னொரு (மரத்தடி)எழுத்தாளருடன் சாப்பிட்டுருக்கார்.

அல்வாத் திங்கக் கொடுத்துவைக்கலை(-:
//

துளசி அம்மா,

என்னுடைய எண்ணிற்கும் முயற்சித்திருக்கலாமே...ஐயாவிடம் என்னுடைய கைப்பேசி எண்ணை கொடுக்கவில்லையா ?

சரி விடுங்க...அடிக்கடி சிங்கை வருவீர்கள் பார்ப்போம்.
:)

VIKNESHWARAN சொன்னது…

என்னையும் ஒரு வார்த்தை கூப்பிட்டிருக்கலாமே...

அடுத்த முறை என்று என சொல்லிவிட்டால் ஏர் ஆசியா டிக்கட் ஒன்றை புக் செய்து வைத்துவிடுவேன்.

இக்பால் சொன்னது…

சிங்கங்களை சந்திக்க முடியவில்லை என்று இந்த முயலுக்கு வருத்தம்தான். ஒரு அவசர செய்தியால் இந்தியா செல்ல வேண்டியதாகி விட்டது. என்ன செய்யறது நமக்கு குடுப்பினை இல்லை, அல்வாவும், முறுக்கும் சாப்பிடுவதற்கு. ஹ்ம்ம்...

கிரி சொன்னது…

//பரவலாக பலர் இந்த சிங்கத்துக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருப்பதால்//

இதுல உள் குத்து எதுவும் இல்லையே :-))

//அதைப்பாராட்ட வழி தெரியல...என்னால் இப்படித்தான் பாராட்ட முடிகிறது//

நான் கூட பழி வாங்கி விடுவாரோன்னு நினைத்தேன்,, நல்ல வேளை அவங்க மனைவிக்கு நன்றி

//'சில பதிவுகளைப் படிக்கும் போது பயங்கர வெறி வரும்...வக்காளி இதுபோல நாமும் எழுதனும்டான்னு ஆரம்பிச்சி எழுதுவேன்...எழுதிட்டு பதிக்க மாட்டேன்...அப்பறம் நாலு நாள் சென்று அதை அழித்துவிடுவேன்' என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்//

:-))))))))))))))

//நேரம் ஆகிவிட்டது கிளம்புகிறேன் என்று எவருமே சொல்லாததால் இரவு 9.15 ஆனதும்..//

இதுல இருந்து என்ன தெரியுது???? ;-)

//அதனால் ஜெகதீசனுக்கு சந்திப்பு தித்திப்பாக இல்லையாம் ரொம்பவே வருத்தப்பட்டார்.//

அதுக்கு தான் செந்தில் ஹல்வா கொடுத்துட்டாரே :-))))

கோவி கண்ணன் கலக்கலா எழுதி இருக்கீங்க ..

பெயரில்லா சொன்னது…

excuse me!ஒரு சின்ன கேள்வி.
சிங்கம் எல்லாம் ஒன்னு காட்டுல இருக்கனும்,இல்லை விலங்கு காட்சி சாலையில் இருக்கனும்.ஆனா இந்த 8 சிங்கமும் east cost parkஇல் என்ன வேலை :D?அதுவும் அல்வாவும் முறுக்கும் சாப்பிடும் சிங்கங்களை இப்போதான் பார்க்குறேன்,இப்படி கேள்வி கேட்டதுக்காக மத்த 7 சிங்கமும் என்னை அடிக்க வரக்கூடாது சொல்லிட்டேன்.நான் ஒரு அப்பாவி சிறுமியாக்கும்.

ARUVAI BASKAR சொன்னது…

இது போல நிறைய சந்திப்புகள் நடத்துங்க,
வாழ்த்துக்கள்.
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

நிஜமா நல்லவன் சொன்னது…

உள்ளே வரலாமா?

நிஜமா நல்லவன் சொன்னது…

///துர்கா said...
அதுவும் அல்வாவும் முறுக்கும் சாப்பிடும் சிங்கங்களை இப்போதான் பார்க்குறேன்///


என்னது பார்த்தீங்களா? அப்ப நீங்களும் சந்திப்புக்கு போனீங்களா?

நிஜமா நல்லவன் சொன்னது…

///இந்த சிங்கத்தைப் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் வாய் பேசாதவர்களில் சிலர் வாய் பேசுபவர்களை விட குசும்புத்தனம் செய்வார்களாமே அதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.///


அச்சச்சோ அவரு ஊமையா:((

நிஜமா நல்லவன் சொன்னது…

///கிரி said...
//பரவலாக பலர் இந்த சிங்கத்துக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருப்பதால்//

இதுல உள் குத்து எதுவும் இல்லையே :-))////இதுல உள்குத்து இருக்கிற மாதிரி தெரியல. ஆனா போன இடத்துல ஏதும் உங்களுக்கு குத்து இல்லையே?

நிஜமா நல்லவன் சொன்னது…

///சிங்கையில் மாபெரும் வலைப் பதிவாளர்கள் சந்திப்பு ! ///

///மொத்தம் பதிவர் சந்திப்புக்கு 8 சிங்கங்கள் வந்திருந்தன.///


என்ன கொடுமை இது? வெறும் எட்டு பேரு தான் வந்தாங்களா? அப்புறம் எப்படி மாபெரும்?

நிஜமா நல்லவன் சொன்னது…

//வேறு சில வேலைகளின் நீட்சியால் சந்திப்புக்கு வர இயலவில்லை என்றன.//


நான் இல்லைங்க. நான் இல்லைங்க.

பெயரில்லா சொன்னது…

//என்னது பார்த்தீங்களா? அப்ப நீங்களும் சந்திப்புக்கு போனீங்களா?//
நம்ப கோவி அண்ணாதான் படத்தை இங்கே போட்டு இருக்காரே :D
இதுலதான் பார்த்தேன் அண்ணா

நிஜமா நல்லவன் சொன்னது…

//இந்த சிங்கம் வரும் போதே...புதிய சிங்கத்தையும் அழைத்து வந்தது.///தான் மட்டும் மாட்டினா பத்தாதுன்னு இன்னொரு சிங்கத்தையும் கூட அழைச்சிட்டு வந்திருப்பார் போல. ரொம்ப நல்ல மனுஷன்:)

ஜெகதீசன் சொன்னது…

//
நிஜமா நல்லவன் said...
///சிங்கையில் மாபெரும் வலைப் பதிவாளர்கள் சந்திப்பு ! ///

///மொத்தம் பதிவர் சந்திப்புக்கு 8 சிங்கங்கள் வந்திருந்தன.///


என்ன கொடுமை இது? வெறும் எட்டு பேரு தான் வந்தாங்களா? அப்புறம் எப்படி மாபெரும்?
//
வந்திருந்த ஒவ்வொரு சிங்கங்களும் 10000 சிங்கங்களுக்குச் சமம்.. பாரி.அரசு ஒருவர் மட்டுமே ஒரு கோடி சிங்கங்களுக்குச் சமம்....

நிஜமா நல்லவன் சொன்னது…

எல்லா சிங்கமும் பேசிச்சு பேசிச்சுன்னு சொல்லுறீங்களே என்ன லாங்குவேஜ்ல பேசிச்சுதுங்க? நல்ல வேளை உங்களுக்கு சிங்க லாங்குவேஜ் தெரிஞ்சதால பதிவு போட்டீங்க. இல்லைன்னா என்ன பண்ணுறது?

பெயரில்லா சொன்னது…

//இந்த சிங்கத்தைப் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் வாய் பேசாதவர்களில் சிலர் வாய் பேசுபவர்களை விட குசும்புத்தனம் செய்வார்களாமே அதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.//


அப்பாவி ஜெகதீசன் அண்ணாவைப் பத்தி இப்படி பொய் சொல்லதீங்க கோவி அண்ணா.அவரு ஒரு வாயில்லாத பூச்சி :P

பி.கு: ஜெகதீசன் அண்ணா நீங்க சொன்ன மாதிரியே மறுமொழி போட்டாச்சு...

நிஜமா நல்லவன் சொன்னது…

///ஜெகதீசன் said...
நிஜமா நல்லவன் said...
///சிங்கையில் மாபெரும் வலைப் பதிவாளர்கள் சந்திப்பு ! ///

///மொத்தம் பதிவர் சந்திப்புக்கு 8 சிங்கங்கள் வந்திருந்தன.///


என்ன கொடுமை இது? வெறும் எட்டு பேரு தான் வந்தாங்களா? அப்புறம் எப்படி மாபெரும்?
//
வந்திருந்த ஒவ்வொரு சிங்கங்களும் 10000 சிங்கங்களுக்குச் சமம்.. பாரி.அரசு ஒருவர் மட்டுமே ஒரு கோடி சிங்கங்களுக்குச் சமம்....///


இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். வந்திருந்த எல்லோரும் சரி சமமா பழகினோம்னு சொல்லிட்டு இப்ப பாரி அரசு மட்டும் ஒரு கோடி சிங்கத்துக்கு சமம்ன்னு சொன்னா எப்படி? பிரிவினைய தூண்டாதீங்க. சொல்லிட்டேன்.

நிஜமா நல்லவன் சொன்னது…

//தற்பெருமை எழுதினால் சிங்கம் அசிங்கமாகிடும் :))//

அப்ப பிறர் பெருமை எழுதினால் அசிங்கம் சிங்கம் ஆய்டுமா? இது நான் கேக்கல. ஜெக் கேக்க சொன்னாருன்னு நான் எப்படி சொல்லுறது?

ஜெகதீசன் சொன்னது…

//
துர்கா(அறுந்த வாலு):
பி.கு: ஜெகதீசன் அண்ணா நீங்க சொன்ன மாதிரியே மறுமொழி போட்டாச்சு...

நி.ந:
இது நான் கேக்கல. ஜெக் கேக்க சொன்னாருன்னு நான் எப்படி சொல்லுறது?
//
:(((
ரெம்ப நன்றி!!!!!

நிஜமா நல்லவன் சொன்னது…

///துர்கா said...
//இந்த சிங்கத்தைப் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் வாய் பேசாதவர்களில் சிலர் வாய் பேசுபவர்களை விட குசும்புத்தனம் செய்வார்களாமே அதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.//


அப்பாவி ஜெகதீசன் அண்ணாவைப் பத்தி இப்படி பொய் சொல்லதீங்க கோவி அண்ணா.அவரு ஒரு வாயில்லாத பூச்சி :P//


என்னது பூச்சியா? அப்புறம் எப்படி சிங்கம் கணக்குல அவரு வந்தாரு? ஒரு வேளை பூச்சி சிங்கமா இருப்பரோ?

டொன் லீ சொன்னது…

இத்தால் சிங்கிள் சிங்கமாகிய நான் அறிவித்துக்கொள்வது என்னவென்றால்.. தவிர்க்கமுடியாத காரணங்களால் நான் சமூகமளிக்கவில்லை..!

எழுதினது புரிஞ்சுதா..? நான் நிஜமாவே வரலீங்கோ...

நிஜமா நல்லவன் சொன்னது…

///சந்திபிற்கு முதலில் வந்த சிங்கை நாதன் செந்தில் வீட்டில் இருந்து அல்வா மற்றும் கேள்வரகு (ராகி) முறுக்கு செய்து எடுத்துவந்தார். வலைப் பதிவாளர்களின் மீது தனிப்பட்டு வைத்திருக்கும் அன்பு அதன் மூலம் எனக்கு தெரிந்தது. ///


எங்க ஊருல அல்வா கொடுக்கிறதுக்கு வேற அர்த்தம்ங்க. இங்க என்னவோ அல்வா கொடுத்தா அன்பாமே?

நிஜமா நல்லவன் சொன்னது…

///'நீங்களெல்லாம் கஷ்டப்பட்டு எழுதுறிங்க...அதைப்பாராட்ட வழி தெரியல...என்னால் இப்படித்தான் பாராட்ட முடிகிறது...'என்றார். ///

நீங்க எல்லோரும் எழுதுறதை படித்து ஏற்கனவே நொந்து போய் இருப்பார் போல. இதுல இங்க வேற எல்லோரும் சேர்ந்து பேசி ஒரு வழி பண்ணிட்டா என்ன பண்ணுறதுன்னு யோசிச்சி முன் யோசனையோட அல்வா கொடுத்திருக்கார். வாய்ல அல்வா போட்ட பிறகு யாருக்குமே பேச்சே வரலை நாக்கு ஒட்டிகிச்சுன்னு ஜெகதீசன் சொல்லிட்டாரு:)

நிஜமா நல்லவன் சொன்னது…

/// 'பதிவு எதையும் எழுதுவதில்லை...பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்' என்றார். பதிவு எதும் வைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். 'எதும் இருக்கிறதா ?' கேட்டேன்....'முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்' என்று சவால் விட்டார். இவருக்கு வலைப்பதிவு இருக்கிறதா ? தெரிந்தால் சொல்லுங்களேன்.///


இருங்க கோகுல்நாத் கிட்ட சொல்லி விவேக் ரூபலாவ வர சொல்லி இருக்கிறேன். அவங்க வந்து கண்டுபிடிச்சி சொல்லிடுவாங்க.

பெயரில்லா சொன்னது…

//அல்வா மற்றும் கேழ்வரகு தேங்குழல் கொடுத்தனுப்பிய சிங்கைநாதன் மனைவிக்கு எங்கள் நன்றிகள்.

அல்வா, அளவான சக்கரையுடன் கையில் கூட ஒட்டாமல் அருமையாக இருந்தது.//

எல்லாரும் எனக்குக் கொடுக்காமல் சாப்பிட்டீங்க இல்ல :((
தங்கச்சிக்கு கொஞ்சம் அனுப்பி வைக்கனும் ன்னு தோனிச்சா உங்களுக்கு எல்லாம்?

நிஜமா நல்லவன் சொன்னது…

//...'சில பதிவுகளைப் படிக்கும் போது பயங்கர வெறி வரும்...வக்காளி இதுபோல நாமும் எழுதனும்டான்னு ஆரம்பிச்சி எழுதுவேன்...எழுதிட்டு பதிக்க மாட்டேன்...அப்பறம் நாலு நாள் சென்று அதை அழித்துவிடுவேன்' என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.///


உங்களுக்கு ஒரு ஞாயம் அடுத்தவங்களுக்கு ஒரு ஞாயமா? நீங்க எப்படி அடுத்தவங்க பதிவ படிச்சப்போ வெறி வந்துச்சோ அதே மாதிரி நீங்களும் எழுதி இருந்தா உங்களை மாதிரி இன்னும் நாலு பேரு யோசிப்பாங்க தானே? பல்கி பெருகுனா தானே வலையுலகம் சிறக்கும்:)

நிஜமா நல்லவன் சொன்னது…

//ஜெகதீசன் அப்பாவியாக பார்த்துக் கொண்டு இருந்தார்.//

அப்படித்தான் பார்ப்பாரு. ஆனாரு செய்றது எல்லாம்?????????

நிஜமா நல்லவன் சொன்னது…

///துர்கா said...
//அல்வா மற்றும் கேழ்வரகு தேங்குழல் கொடுத்தனுப்பிய சிங்கைநாதன் மனைவிக்கு எங்கள் நன்றிகள்.

அல்வா, அளவான சக்கரையுடன் கையில் கூட ஒட்டாமல் அருமையாக இருந்தது.//

எல்லாரும் எனக்குக் கொடுக்காமல் சாப்பிட்டீங்க இல்ல :((
தங்கச்சிக்கு கொஞ்சம் அனுப்பி வைக்கனும் ன்னு தோனிச்சா உங்களுக்கு எல்லாம்?///


அதானே கூண்டில் அடைப்பட்டு கிடக்கிற தங்கச்சி சிங்கத்த எப்படி மறந்தாங்க?

பெயரில்லா சொன்னது…

நிஜமா நல்லவன் அண்ணாச்சி
உங்களுக்கு அல்வாவும் முறுக்கும் கொடுக்கல்லைன்னு இப்படியா கும்மி அடிக்கிறது?பாவம் எல்லாரும் :P
அடிப்பாவி என்னை நீதானே கும்மி அடிக்க கூப்பிட்டேன்னு என் மேல பழி எல்லாம் போடக்கூடாது.இப்போவே சொல்லிட்டேன்..

நிஜமா நல்லவன் சொன்னது…

//துர்கா said...
நிஜமா நல்லவன் அண்ணாச்சி
உங்களுக்கு அல்வாவும் முறுக்கும் கொடுக்கல்லைன்னு இப்படியா கும்மி அடிக்கிறது?பாவம் எல்லாரும் :P
அடிப்பாவி என்னை நீதானே கும்மி அடிக்க கூப்பிட்டேன்னு என் மேல பழி எல்லாம் போடக்கூடாது.இப்போவே சொல்லிட்டேன்..///

அடிப்பாவி நீயா அப்பாவி?

கிரி சொன்னது…

//நிஜமா நல்லவன் said...
போன இடத்துல ஏதும் உங்களுக்கு குத்து இல்லையே?//

ஹீ ஹீ இதுல எதுவும் உள் குத்து இல்லையே :-))))))))))

நிஜமா நல்லவன் சொன்னது…

50 வந்துச்சா இல்லையா? நான் போகணும்.

நிஜமா நல்லவன் சொன்னது…

சரி போய்ட்டு அப்புறமா வர்றேன். என்ன தைரியமா இங்க வாங்க எது நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன்னு சொன்ன MM1க்கு மிக்க நன்றி.

ஜீவன் சொன்னது…

என்ன இருந்தாலும் "மூத்த பதிவர்" மூத்த பதிவர் தான்.. ( அய்யோ, அடிக்க வராதீங்க )..

நான் எல்லாம் , சந்திப்பு குறித்த பதிவுகளுக்கு பின்னுட்டம் போட யோசிக்கும் நேரத்தில், எப்படி சாமி, இத்தனை பதிவு..? அதற்குள் தந்தையர் தினப் பதிவு போட்டும் விட்டீர்கள்..

ஜீவன் சொன்னது…

//அல்வா மற்றும் கேழ்வரகு தேங்குழல் கொடுத்தனுப்பிய சிங்கைநாதன் மனைவிக்கு எங்கள் நன்றிகள்.//

அதே !!!

அத்தோடு, டின்னர் ஸ்பான்ஸர் வடுவூர் குமாருக்கும் நன்றிகள்..

கோவி.கண்ணன் சொன்னது…

வந்திருக்கிற கும்மியை வச்சுப்பார்த்தால் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லி மறுமொழி போடுவதற்கு மறு ஜென்மமே தேவைப்படும் போல இருக்கு. :)

அதனால் பின்னூட்டம் வழங்கிய சிங்கங்களுக்கும் தங்கங்களுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது…

"நான் தான் கோவி கண்ணன் பேசறேன்"-ன்னு வழக்கமாகத் தொலைபேசும் "அந்த"க் கோவி கண்ணன் "இந்த"ச் சந்திப்புக்கு வரலையா? :-)))

பாண்டித்துரை சொன்னது…

கண்ணன்
அடுத்த சந்திப்பு எப்பொழுது?

pandiidurai@yahoo.com
www.pandiidurai.wordpress.com

pandiidurai

kuppan சொன்னது…

அட சனியன்கலா மன்னிக்கவும் சிங்கங்கங்களா நிங்களும் சிங்கையில்தான் வசிக்குரிங்களா.அடுத்தமுரை மாபெரும் விழாவுக்கு அழையுங்கள்

Joseph Paulraj சொன்னது…

அடுத்தமுறை சந்திக்கும் போது தெரிவியுங்கள். நானும் கலந்து கொள்கின்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//kuppan said...
அட சனியன்கலா மன்னிக்கவும் சிங்கங்கங்களா நிங்களும் சிங்கையில்தான் வசிக்குரிங்களா.அடுத்தமுரை மாபெரும் விழாவுக்கு அழையுங்கள்

12:25 PM, June 25, 2008


Joseph Paulraj said...
அடுத்தமுறை சந்திக்கும் போது தெரிவியுங்கள். நானும் கலந்து கொள்கின்றேன்.
//

குப்பன் மற்றும் பால்ராஜ்,

அடுத்தமுறை சந்திப்பு என்றால் ஏற்பாடு செய்பவர்கள் பதிவில் அறிவிப்பார்கள். அது நீங்களாகக் கூட இருக்கலாம் !
:)

இதுக்கெல்லாம் தலைமை என்று யாரும் கிடையாது, யாராவது ஒருவர் கூட்டத்தைக் கூட்ட வேண்டியது தான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்