நான் தமிழகம் செல்லும் போது சந்திக்க விரும்பியவர்களில் அவரும் ஒருவர். கூகுள் அரட்டையில் சந்திப்பது குறித்துப் பேசினோம். எதிர்பாராவிதமாக சென்னை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டார். அங்கு பலரும் வந்தபோது தனிப்பட்ட உரையாடல்களுக்கான நேரம் கிடைக்கவில்லை. அதன் பிறகு அவரது ஊரிலேயே சந்தித்துப் பேசலாம் என்று முடிவெடுத்து தொடர்பு கொண்டேன். 'எதிர்பார்க்கிறேன்...வாருங்கள்' என்றார்.
கடந்த புதன், 28 மே 2008ல் திருச்சிக்கு உறவினர்களை சந்திக்கச் சென்ற நான், அது முடிந்ததும், மாலை 6 மணிக்கு 'சார், நான் இப்ப திருச்சியில் இருக்கிறேன்...மதுரை வருவதற்கு 3 - 4 மணி நேரம் ஆகும், வந்தால் பார்க்க முடியுமா ?' என்றேன். 'வாங்க.....கண்ணன்...பார்ப்போம்' என்றார். 'வந்த உடனேயே திரும்பிவிடுவேன்' எனது நேரமின்மையை தெரிவித்தேன்.
சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரை செல்லும் விரைவு பேருந்து ஒன்றில் மாலை 6.10 மணிக்கு ஏறி அமர்ந்தேன். உள்ளே அமர்ந்திருந்தவர்களின் முனகலில் அந்த விரைவு பேருந்தின் ஆமை வேகம் தெரிந்தது. வழக்கமாக 3 மணி நேரத்திற்குள் மதுரை செல்லும் பேருந்து 30 நிமிடங்கள் கூடுதலாகவே எடுத்துக் கொண்டு இரவு 9.40க்கு மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தை அடைந்தது. முன்கூட்டியே மேலூர் அருகில் பேருந்து வரும் தகவலை சொல்லி இருந்ததால் பேருந்து நிறுத்தத்தின் எதிரிலேயே உணவகத்திற்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்துவிட்டு காத்திருந்தார்.
"தருமி சார்.....வந்துட்டேன்" என்ற குரல் கேட்டு திரும்பினார்.
"சாப்பிடாமல் வந்திருப்பிங்க.......நீங்க உடனே போகனும்னு சொல்றிங்க...வாங்க சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்" என்றார்
உள்ளே சென்று தோசை, இட்லி, காப்பி சாப்பிட்டு முடியும் வரை பதிவுலக நடப்புகளைப்...நட்புகளைப் பகிர்ந்து கொண்டோம்.
இவரது ஆரம்பகால எழுத்துக்களை வைத்து இவரது வயதை எவராலும் அறிய முடியவில்லை. அந்த அளவுக்கு எழுத்திலும் எண்ணத்திலும் நடப்புகளை தற்காலச் சிந்தனையுடன் எழுதிவந்தார். அவரே வெளிப்படுத்திக் கொண்ட பிறகுதான் அவரது உண்மையான வயதும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக வேலை பார்த்த விபரம் எல்லோருக்குமே தெரியும்.
அங்கிருந்து மதுரை பேருந்து நிலையம் வந்து இரவு 11:15 வரை பேசிக் கொண்டிருந்தோம்.
63 வயதில் மின்னும் கண்கள், அவரது தெளிவான சிந்தனையின் வாயில்களாக தெரிந்தது. அந்த வயதில் அவ்வளவு பளப்பளப்பான கண்கள் உடையவர்களை நான் பார்த்தது இல்லை. 'மரணம் தொட்ட கணங்கள்' அவரை ஞானியாக்கி இருந்தது. வாழ்வின் தொடக்கம் முடிவு பற்றிய தெளிவும். எதிர்காலத்தை எதிர்கொள்ளும் துணிவும், மகிழ்வும் கூடவே இருந்தது. சிவப்புக் கல் மோதிரம் போட்டு இருந்தார். 'சார்...ஜோதிடத்திற்கு எதிராக பலகருத்துக்களை எழுதிவிட்டு....இது என்ன கையில் இராசி கல் மோதிரம் ?' என்றேன்
'பலர் அப்படித்தான் கேட்கிறார்கள்....மனைவி செய்து கொடுத்தது...சிகப்புக் கல் வைத்துப் போடவேண்டும் என்ற என் ஆசையை நிறைவேற்றி வைத்தார்...மற்றபடி இந்த சிகப்புக் கல்லுக்கும் ஜோதிடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை' என்றார்
அவருக்கு 45 வயதில் முதல் தடவை ஏற்பட்ட மாரடைப்பு... அவரது வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க காரணமாக அமைந்ததாம்.
"வாரிசுகளுக்கு திருமணம் முடித்துவிட்டீர்கள்... எல்லாக் கடமையும் முடிந்துவிட்டது....இனி வரும் காலம்...அடுத்தது பற்றிய அச்சம் எதுவும் இருக்கிறதா ?' கொஞ்சம் தடுமாறிதான் கேட்டேன்.
அதே வயதுகாரர்கள் சிலரிடம் அதே கேள்வியைக் கேட்டால், சிலருக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். இவரிடம் கேட்க முடியும்.
"கண்ணன்...மரணம் பற்றிய தெளிவாகவே இருக்கிறேன்...அது பற்றிய அனுபவம் இருக்கிறது... ஆனால் போகும் போது எவருக்கும் கஷ்டம் கொடுக்காமல் போகவேண்டும் என்று நினைப்பேன்....என்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்றால் முதியோர் இல்லத்தில் சேர்ந்துவிடுவேன்... அதையே மனைவியையும் செய்யச் சொல்லி இருக்கிறேன்... " தொடர்ந்தார்
"பேரக்குழந்தைகள் வீட்டுக்கு வரும் போதோ, அவர்களை நான் சந்திக்கும் போது மகிழ்வாக இருக்கிறது....நான் நல்ல படியாக இருப்பதால் அவர்களுடன் மகிழ்வாக இருக்க முடிகிறது ... அவர்களை வெளியில் அழைத்து செல்வேன்......இதுவே படுக்கையில் கிடக்கும் தாத்தா என்றால் பேரக்குழந்தைகள் அதையே நினைத்துக் கொண்டிருப்பார்கள் ... அவர்களுக்கு என்னால் மகிழ்ச்சி கிடைக்கிறது...வருங்காலத்தில் அவர்கள் என்னை நினைக்கும் போது மகிழ்வாக இருந்ததை நினைத்துப் பார்ப்பார்கள்... நல்லபடியாக இருக்கும் தாத்தக்களைத் தானே பேரப்பிள்ளைகள் விரும்புவார்கள் ?"
"ம் சரிதான்"
"செத்த பிறகு எரித்துவிடச் சொல்லி இருக்கிறேன்" அதிர்ச்சிக் கொடுத்து அதற்கான காரணங்களையும் சொன்னார்.
"ஆரம்ப காலத்தில் நிறைய எழுதினேன்....தற்பொழுது கொஞ்சம் சுனக்கமாக இருக்கிறது...இனி சின்ன சின்ன கருத்துக்களை செய்திகளை எழுதுவேன்" என்றார்
அதன் பிறகு பலவற்றை பேசினோம்... இரவு 11:15 க்கு அவரது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வரவே....
"சரி...ஐயா.....நீங்க கிளம்புங்க...நான் இப்படியே பஸ் ஏறிவிடுகிறேன்" என்று சொல்லி விடைபெற்றேன்.
63 வயது ஒன்றும் மிகவும் வயதான பருவம் இல்லை... அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58 என்று முடிவு செய்து இருப்பதால்...அது கடந்தவர்களை வயதானவர்களாகவே, முதியவர்களாகவே பார்க்கிறது உலகம்.
நான் சந்தித்த தருமி ஐயா....வயதில் மூத்தவர் என்றாலும் இளைஞர்களின் சிந்தனைக்கு சரியாக போட்டிபோடுபவர்...இன்றைய சமுகமாறுதல்களை ஏற்றுக் கொண்டவராகவும்...அவை தேவை என்ற கருத்தும், முற்போக்குச் சிந்தனைகளையும் கொண்டவர்.
பதிவர்கள் மதுரைக்குச் சென்றால் சொக்கனாதர் - மீனாட்சி தம்பதிகளைப் பார்த்துவருவது போலவே...நம்ம தருமி ஐயாவை சந்தித்து வரலாம்.
மதுரைக்குச் சென்றது, தருமி ஐயாவை சந்திப்பது என்ற நோக்கத்தில் மட்டுமின்றி ... மற்றொரு காரணமாக மதுரை மண்ணை தொட்டுவருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான்.... நண்பர்கள் டிபிசிடி ... ரத்னேஷ்... கூடல் குமரன்... முத்து குமரன் மேலும் பல பதிவர்கள் பிறந்து தவழ்ந்து வளர்ந்த ஊராயிற்றே.... அங்கு இருந்த போது சொந்த ஊர் போன்றே ஒரு உணர்வு இருந்தது
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
14 கருத்துகள்:
தருமியோடு பேசும்போது வயதுவித்தியாசம் எதுவும் எனக்குத் தெரிந்ததில்லை. அவர் எல்லா விஷயத்திலும் அப்டேட்டாக தானிருக்கிறார்.
அறுபதைக் கடந்தவர்கள் சிலர் இவரிடம் பாடம் கற்றால் தேவலை :-)
வாங்க நல்ல படியா முடிஞ்சுதா ஊர் பயனம்!
லக்கி யாரையோ கும்மாங்குத்து குத்துகிறார் அது நீங்களா:))
//குசும்பன் said...
வாங்க நல்ல படியா முடிஞ்சுதா ஊர் பயனம்!
லக்கி யாரையோ கும்மாங்குத்து குத்துகிறார் அது நீங்களா:))
//
குசும்பன் தம்பி,
லக்கி யாரைச் சொல்றார்னு தெரியல...
'கோழிக்குஞ்சுக்கு தன் இரை எதுவென்று தெரியாவிட்டாலும்...தன் எதிரி பருந்துதான் என்று தெரியுமாம்'
கருத்து சொன்னால் அனுபவிக்கனும் ஆராயப்படாது.
:)
//லக்கிலுக் said...
தருமியோடு பேசும்போது வயதுவித்தியாசம் எதுவும் எனக்குத் தெரிந்ததில்லை. அவர் எல்லா விஷயத்திலும் அப்டேட்டாக தானிருக்கிறார்.
அறுபதைக் கடந்தவர்கள் சிலர் இவரிடம் பாடம் கற்றால் தேவலை :-)
//
லக்கி,
சிலரா ? ஓரிருவர் இல்லையா ? ஒரு கோஷ்டியாகத்தான் இருக்காங்களா ?
:)
//
குசும்பன் said...
வாங்க நல்ல படியா முடிஞ்சுதா ஊர் பயனம்!
லக்கி யாரையோ கும்மாங்குத்து குத்துகிறார் அது நீங்களா:))
//
நீங்களா அது???
:P
ஆஹா.. நம்மூருக்கு வந்திருந்தீங்களா??? தருமி ஐயா'வே சந்திச்சது'லே ரொம்பவே சந்தோஷப்பட்டுருப்பீங்க.... எந்த டாபிக்'லே விவாதம் பண்ணினாலும் ஜாலியாவே கருத்து சொல்லுவாரு.... எனக்கும் அவருக்கும் நிறைய தடவை விவாதம் போயிருக்கு... :) செம கூல் பார்ட்டி... :)
ஹிம்... பஸ்ஸடாண்ட் வரைக்கும் வந்துட்டு ஊருக்குள்ளே வரலை போல... :)
ஆமாம் கண்ணன்! நீங்க சொல்வது சரிதான். நானும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். அடுத்த முறை கண்டிப்பாக பார்த்துவிடுவேன்!!
பழகவும் நட்புப் பாராட்டவும் இனியவர் நம்ம தருமி.
இதுலே வயசு என்னத்துக்கு? :-)))))
//ஜெகதீசன் said...
நீங்களா அது???
:P
//
ஜெகதீசன் ஐயர்,
அவரு என்னை குத்தவில்லை. நீங்க தான். :)
//இராம்/Raam said...
ஆஹா.. நம்மூருக்கு வந்திருந்தீங்களா??? தருமி ஐயா'வே சந்திச்சது'லே ரொம்பவே சந்தோஷப்பட்டுருப்பீங்க.... எந்த டாபிக்'லே விவாதம் பண்ணினாலும் ஜாலியாவே கருத்து சொல்லுவாரு.... எனக்கும் அவருக்கும் நிறைய தடவை விவாதம் போயிருக்கு... :) செம கூல் பார்ட்டி... :)
ஹிம்... பஸ்ஸடாண்ட் வரைக்கும் வந்துட்டு ஊருக்குள்ளே வரலை போல... :)
6:11 PM, June 02, 2008
//
இராம்,
மதுரையை இரவில் பார்த்துவிட்டு திரும்பிவிட்டேன். அடுத்த முறை வரும் போதுதான் பகலிலும் பார்த்துவிட்டு முருகன் இட்லி கடைக்கெல்லாம் சென்று வரவேண்டும்.
இந்த பதிவிற்கு முன்புவரை நான் அவரை ஒரு இளைஞராகத்தான் நினைத்தேன். அவரது எழுத்தும் அதைதான் சொல்லியது. எழுத்தை வைத்து வயதை எடை போடுவதின் தவறை இப்பதிவு உணர்த்தியது. சிந்திப்பதற்கு வயதில்லை என்பது உண்மை என்றாலும் எழுத்தையும் இளமையாக வைத்துக்கொள்வதை அவரிடம்தான் கற்கவேண்டும்.
Lucky Look points his arrow at Don.
Ok...Mr Kannan...has Mr Dharumi written in English? Could you give me the link?
//karikkulam said...
Lucky Look points his arrow at Don.
Ok...Mr Kannan...has Mr Dharumi written in English? Could you give me the link?
//
Dear karikkulam,
Please follow the link :
sixth-finger
தருமி அய்யாவை ஒரு முறை பார்க்கவேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். என்று நிறைவேறுமோ?
கருத்துரையிடுக