பின்பற்றுபவர்கள்

24 ஜூன், 2008

தமிழ்த் திரையில் சிறந்த நடிகர், படாலாசிரியர், இசையமைப்பாளர் யார் ?

எந்த ஒரு தொழிலிலும் நிபுணத்துவம் என்று ஒன்று உண்டு. அந்த இலக்கை சரியாக அடைபவர்களே போற்றப்படுகிறார்கள். பொழுதுபோக்கு ஊடகங்களில் நடிகராக, இசை அமைப்பாளர்களாக, கவிஞர்களாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றிலும் உயர்வை எட்டியவர் வெகுசிலரே.

"சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...." என மூன்று மணிநேரம் .... ஐந்து நிமிடத்திற்கு ஒரு பாடல் என படங்கள் இருந்த காலத்தில்...கண்களில் நெருப்புப் பறக்க பராசக்தி வசனம் பேசிய ஒருவரின் தனித்திறமை அனைவரின் கவனம் ஈர்க்கப்பட பின்னாளில் அவரது நடிப்புத்திறன் பேசப்பட்டு 'நடிகர் திலகம்' ஆனார். வி.சி. கனேசனுக்கு சிவாஜி கனேசன் என தந்தை பெரியார் சூட்டிய பெயரே அவரது சிம்மக் குரலுக்கு பொருத்தமான பெயராக இருந்ததுமில்லாமல் நடிப்பின் உச்சத்தின் அடையாளாமாக மாறி...கோடம்பாக்கத்திற்கு கனவுடன் நுழைபவர்களுக்கெல்லாம் அவர் ஒரு ரோல் மாடல் ஆகிப் போனார்.

பல திரைப்படங்களின் வெற்றிக்கு காரணம் அவற்றில் பொழுது போக்கு அம்சங்கள் அடங்கி இருந்தாலே போதும் என்று நிலை இருக்கிறது. அவ்வகைப் படங்கள் அறியப்பட்ட நடிகர்களின் ப்ராண்டட் / மசாலா படமாகவே இருக்கும். அதைத் தவிர்த்து இயக்குனர் பாணி படங்களும் பல வெற்றிப்படங்களாக இருக்கிறது. இவற்றையெல்லாம் திரைப்படங்கள் என்ற இலக்கணத்தில் மட்டுமே சொல்லாம் அன்றி திரைப்படக் கலை என்று வரையரைக்குள் அவை வராது. அவை பொழுதுபோக்கு அம்சம் கொண்டவை. வியாபார நோக்கம் சார்ந்தவை.

திரைப்படக் கலை என்பது வேறொரு தளத்தில் பயணிப்பது, அவற்றின் நோக்கமும் பொழுதுபோக்கு என்ற நிலை இருந்தாலும்...அவை பார்பவர்களின் எண்ணங்களில் பாதிப்பை ஏற்படுத்துபவை. அவ்வகைப்படங்களில் நமக்கு பழக்கப்பட்ட பாத்திரங்களை அல்லது புதிய பாத்திரங்களை உருவாக்கி காட்டுவார்கள். அங்கு நடிகனின் வேலை அந்த பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுவதுதான்.

நடிகன் என்பவன் தன்னைத் தொலைத்து ஒரு பாத்திரமாக கண்முன் வந்து சென்று அந்த பாத்திரம் அனைவராலும் பேசப்படும் பொழுது அவன் சிறந்த நடிகன் என ஏற்றுக் கொள்ளப்படுகிறான். அவ்வாறு வரலாற்று பாத்திரங்களைக் கண் முன் நிறுத்திக் காட்டியவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கனேசன்.

மற்றொரு நடிகர் கமலஹாசன். 16 வயதினிலே படத்தில் சப்பானியை மிகச் சிறப்பாக செய்திருந்தார். அதன் பிறகு பேசப்படும் பாத்திரப் படங்களை செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்காததாலோ, அல்லது தன்னை நிலை நிறுத்துக் கொள்ள வேண்டும் மென்பதற்காக சகலாகலவல்லவன், ஜப்பானில் கல்யாண ராமன் போன்ற மசாலா படங்களில் நடித்தார். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களில் தான் கமலஹாசன் ஒரு சிறந்த நடிகர் என அறியப்பட்டர். தனக்கிருக்கும் திறமையையும் அவர் அப்போதுதான் உணர்ந்து கொண்டிருக்கக் கூடும், அதன் பிறகு ஒவ்வொரு படங்களிலுமே தனிப்பட்ட முத்திரை பதிக்க வேண்டும் என்று சிரத்தை எடுத்து தேவர்மகன், மகாநதி, குணா போன்ற படங்களைக் கொடுத்தார். ஹேராம் போன்ற படங்களில் நடிப்பு, இயக்கம் ஆகியவற்றை முழுதும் உள்வாங்கி செய்தார். கமல் படம் வெற்றிப்பட்மா தோல்விப்படமா என்று ஆராய்வதைவிட அவர் அந்த பாத்திரத்தை முழுமையாக செய்திருந்தார் என்பதே பேசப்பட்டது. இப்பொழுதும் கூட எடுத்துக் கொண்ட பாத்திரத்தில் குறைவைக்காமல் சிறப்பாக செய்யக் கூடிய ஒரே நடிகர் கமல்தான்.

சரி விசயத்துக்கு வருவோம். சிறந்த நடிகர் யார் நடிகர் திலகம் ? உலக நாயகன் ?
அவர் காலத்தில் அவர்...இவர் காலத்தில் இவர். சிறந்த நடிகர் என்றால் எல்லாரையும் விட சிறந்த நடிகர் என்று ஒப்பீட்டு அளவில் சொல்வது தவறு என்றே கருத்துகிறேன். நடிப்பின் எல்லையைத் தொட்டவர்கள் இவர்கள். சிறந்த நடிகர் என்பது ஒரு உயரம் / எல்லை...அது எவருக்கும் சொந்தமானது அல்ல... நேற்று நடிகர் திலகம் அதன் மீது ஏறினார்...இன்று உலகநாயகன் ஏறி இருக்கிறார்...நாளை வேறுருவர் ஏறுவார். இன்றைக்கு பல இளைய நடிகர்கள் அதன் பரிசோதனையில் தான் இருக்கிறார்கள்...நாளை அதில் சிலர் அந்த இடத்திற்கு வரக் கூடும். புதிதாக ஏறுபவர்கள் ஏற்கனவே ஏரியவர்களை தள்ளிவிட்டார்கள் என்று பொருள் கொள்ளல் ஆகாது.

இதுபோல் தான் கவிஞர்கள் இயக்குனர்கள் இசை அமைப்பாளர்கள்...அந்தந்த காலத்தில் சிலர் ஜொலிக்கிறார்கள். ஆனால் அந்த இடம் ஒருவருக்கே நிலையானது என்று சொல்வது அபத்தம். அபிமானிகள் தவிர்த்து வேறுயாரும் அதுபோன்று அபத்தங்களைச் செய்யமாட்டார்கள்.

நமது காலத்திலேயே பார்த்துவிட்டோம் மெல்லிசை மன்னர் > இசைஞானி > இசைப்புயல் என்றெல்லாம் தமிழ் திரை இசையின் பயணம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஒப்பீட்டு அளவில் ஒருவரே மற்றவரைவிட சிறந்தவர் என்று சொல்வது அபத்தம்.

சிறந்த கவிஞர் நேற்று கண்ணதாசன்...இன்று வைரமுத்து... வேண்டுமானால் கவியரசர், கவிப்பேரசரர் என்ற அடைமொழிக்குள் அவர்களை அடக்கலாம். ஆனால் அவை வேறுபடுத்திக் காட்டுவதன் பெயரேயன்றி ஒப்பீட்டு அளவில் யார் சிறந்தவர் என்று சொல்வதற்கான அடையாளம் அல்ல.

எளிமையாக சொல்வதென்றால் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் அதற்கு முந்தைய ஆண்டு பள்ளியின் முன்னாள் மாணவர்களில் சிலர் முதல் பரிசு பெற்று இருப்பார்கள்.

19 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

புதிதாக சகலகலா வல்லவன் வலைப்பதிவு ஆரம்பித்து இருக்கும் லக்கி லுக் அவர்களுக்கு வாழ்த்துகள் !

சினிமா நிருபர் சொன்னது…

//சிறந்த கவிஞர் நேற்று கண்ணதாசன்...இன்று வைரமுத்து... வேண்டுமானால் கவியரசர், கவிப்பேரசரர் என்ற அடைமொழிக்குள் அவர்களை அடக்கலாம். ஆனால் அவை வேறுபடுத்திக் காட்டுவதன் பெயரேயன்றி ஒப்பீட்டு அளவில் யார் சிறந்தவர் என்று சொல்வதற்கான அடையாளம் அல்ல.//

இந்த பதிவில் நான் ரசித்து படித்த வரிகள் இவை.

ambi சொன்னது…

நல்ல திறனாய்வு மிக்க பதிவு.

கவிஞர் தாமரை தமிழ் சினிமாவின் வியாபார வலையில் சிக்காமல், ஆங்கிலம் கலவாமல், அதே சமயம் பல நல்ல வெற்றி பாடல்களை குடுத்து வருகிறார்.

ஆனாலும் அவருக்குரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லையோ என தோன்றுகிறது.

சந்ரபாபு பாடல் தான் நினைவுக்கு வருது.

என்ன பாடல்?னு சொல்லுங்க பார்ப்போம் கோவி அண்ணா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ambi said...
நல்ல திறனாய்வு மிக்க பதிவு.

கவிஞர் தாமரை தமிழ் சினிமாவின் வியாபார வலையில் சிக்காமல், ஆங்கிலம் கலவாமல், அதே சமயம் பல நல்ல வெற்றி பாடல்களை குடுத்து வருகிறார்.

ஆனாலும் அவருக்குரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லையோ என தோன்றுகிறது.

சந்ரபாபு பாடல் தான் நினைவுக்கு வருது.

என்ன பாடல்?னு சொல்லுங்க பார்ப்போம் கோவி அண்ணா? :)
//

அம்பி,

பொதுவாகவே ஆண்கள் கோலொச்சும் துறையில் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது அரிது. அதனையும் தாண்டி கவிஞர் தாமரை பேசப்படுவது போற்றுதலுக்குறியது.

நிங்கள் கேட்ட அந்த பாடல். "வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை..."

கோவி.கண்ணன் சொன்னது…

//சினிமா நிருபர் said...


இந்த பதிவில் நான் ரசித்து படித்த வரிகள் இவை.
//

நிருபரே,

மிக்க நன்றி !

கிரி சொன்னது…

//வரலாற்று பாத்திரங்களைக் கண் முன் நிறுத்திக் காட்டியவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கனேசன்//

அமாங்க எனக்கெல்லாம் வீரபாண்டிய கட்ட பொம்மன் கப்போலோட்டிய தமிழன் போன்றோரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது இவர் நடிப்பாற்றல் தான்.

//இப்பொழுதும் கூட எடுத்துக் கொண்ட பாத்திரத்தில் குறைவைக்காமல் சிறப்பாக செய்யக் கூடிய ஒரே நடிகர் கமல்தான்//

குறை வைக்காமல் என்ற பிரச்சனைக்கு வரவில்லை. இன்னைக்கு இவர அடிச்சுகிரதுக்கு ஆள் கிடையாது.

// ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஒப்பீட்டு அளவில் ஒருவரே மற்றவரைவிட சிறந்தவர் என்று சொல்வது அபத்தம்//

யாரையும் ஒப்பிட்டு பேசக்கூடாது ..ஒவ்வொரு விசயத்தில் ஒவ்வொருவர் சிறந்தவர்

நல்ல பதிவு கோவி கண்ணன்

ஜெகதீசன் சொன்னது…

நல்ல பதிவு கோவி கண்ணன்.

bala சொன்னது…

கோவி.மு.கண்ணன் அய்யா,

நடிப்பில் இமயத்தை தொட்டவர்கள் என்று நடிகர் திலகத்தையும்,இன்றைய காலக்கட்டத்தில் உலகநாயகனையும் உதாரணம் காட்டி, பொது புத்தியோடு, ஒரு கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.பொதுவா,பொது புத்தியோடு அலசப்பட்டு,முடிவுக்கு வரும் கருத்துக்கள்,மேலோட்டமாக பார்ப்பதற்கு சரியானவை போன்று தோன்றினாலும்,ஆழ்ந்து ஆராய்ந்தால் தவறானவை என்று புலப்படும் என்பதற்கு உங்களுடைய இந்த கருத்தும் ஒரு விதிவிலக்கல்ல.

அந்த காலத்தில் ந்டிப்பில் புரட்சி செய்து சாதனை படித்தவர்,மக்கள் திலகம் எம் ஜி ஆர். ஜெயமோகன் அய்யா சொன்னது போல், உதட்டைக் கோணி,சுழித்துக் கொண்டு தலையயும்,கையையும் அசைத்து காதல் காட்சிகளில் நடித்தது ஆகட்டும்,அம்மாமாமா என்று அலறியபடி தாய்ப்பாசத்தைக் காட்டும் காட்சிகளிலும் சரி அவரை விஞ்சுவதற்கு ஆளில்லை என்று தான் தோன்றியது.அறிஞர் அண்ணாவே அசந்து போய் இவரை புரட்சி நடிகர் என்றும்,இதயக்கனி என்றும் பாராட்டியது,நீங்கள் அறியாததா?வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பதை உணர்த்துவதற்கு,இவரையும் தாண்டி நடிப்பில் சாதனை படைத்தவர்,நம்ம மஞ்ச துண்டு அய்யா ஈன்றெடுத்த முத்தான மு க முத்து.நமது போதாத காலம்,இவரால் சினிமா உலகில் ஜொலிக்க முடியவில்லை.

இன்றைய கால கட்டத்தில் இந்த அளவுக்கு உணர்ச்சிகரமாக,புரட்சியாக நடித்து இமயத்தை தொட்டு சாதனை படைத்து வருபவர் நம்ம கரடி டி ராஜேந்தர் அய்யா.நடிப்புலகின் ஜாம்பவான் என்று இவரை அதற்காக சொன்னால் அது மிகையாகாது."கரடிக்கு பிறந்தது கன்னுக்குட்டியாகுமா" என்ற சொல்லுக்கு ஏற்ப அவரது பையன் சிம்பு,தந்தை அளவுக்கு நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.சீக்கிரம் வெற்றி வாகை சூடுவார் என்றும் நினைக்கிறேன்.

உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
கோவி.மு.கண்ணன் அய்யா,

நடிப்பில் இமயத்தை தொட்டவர்கள் என்று நடிகர்....
உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

பாலா//

ஜயராமன் சார்,

நானும் வரை'யறுத்துக்' கூறவில்லை. உதா'ரணத்துக்குத்தான்' சொன்னேன். 'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' - சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். 'சாம்பார்' என்று பிரியமுடன் அழைக்கப்படும் பலதாரப்புகழ் ஜெமினிகனேசன் ஐயரும் சிறந்த நடிகர் தான்.

முகவை மைந்தன் சொன்னது…

முதன்முதலில் தமிழுக்கு நடிப்பில் தேசிய விருது பெற்றுத் தந்தவரை சேர்க்காததை... கண்டிக்காம, என்ன பண்றது.

நான் பார்த்த படங்களில், சிவாஜி நடித்ததாக கருதும் ஒரே படம் முதல் மரியாதை. மற்ற படங்களில் அவர் நடிப்பு புகழப்பட்ட காட்சிகளை நிகழ்வில் நிறுத்திப் பாருங்கள். கொடுத்த காசுக்கு மேல எவ்வளவு நடித்திருக்கிறார் என்பது விளங்கும்.

மெச்சத் தகுந்தவர் என்பதில் வேறுபாடு இல்லை. நாடக நடிகர் என்ற பின்புலம் காரணமாக என்பதை விட போணியாகும் என்ற விதத்தில் தான் அவர் நடித்தார் என்பதே சாலப் பொருந்தும். ஒருவகையில், அதுவும் சந்தைப் படுத்தப் பட்ட நடிப்புத் தான்.

டி.பி.ஆர் சொன்னது…

ஒவ்வொரு வருடமும் வெளிவருகிற படங்களில் நடித்தவர்களுள் யார் சிறப்பாக நடித்துள்ளனர் என்பதை வைத்தே அந்த வருடத்திற்குறிய சிறந்த நடிக/நடிகைகளை, இசையமைப்பாளர்களை தெரிவு செய்கின்றனர் இல்லையா?

அவர் அந்த வருடத்திய சிறந்த சாதனையாளர் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
முதன்முதலில் தமிழுக்கு நடிப்பில் தேசிய விருது பெற்றுத் தந்தவரை சேர்க்காததை... கண்டிக்காம, என்ன பண்றது.//

ஏனுங்க வரலாற்றுப்படங்கள், கர்ணன், இராஜ இராஜ சோழன் படமெல்லாம் நீங்கள் பார்த்தது இல்லையா ?

//நான் பார்த்த படங்களில், சிவாஜி நடித்ததாக கருதும் ஒரே படம் முதல் மரியாதை. மற்ற படங்களில் அவர் நடிப்பு புகழப்பட்ட காட்சிகளை நிகழ்வில் நிறுத்திப் பாருங்கள். கொடுத்த காசுக்கு மேல எவ்வளவு நடித்திருக்கிறார் என்பது விளங்கும்.//

ஹலோ, இங்கே 'ஜோ' என்கிற பதிவர் நண்பர் இருக்கிறார். அவர் இன்னும் இந்த பதிவை பார்க்கவில்லை என்ற தைரியத்தில் நீங்கள் பாட்டுக்கு நடிகர் திலகம் பற்றி கண்டபடி எழுதுறிங்க...ஆட்டோ வரனுமா ?

//மெச்சத் தகுந்தவர் என்பதில் வேறுபாடு இல்லை. நாடக நடிகர் என்ற பின்புலம் காரணமாக என்பதை விட போணியாகும் என்ற விதத்தில் தான் அவர் நடித்தார் என்பதே சாலப் பொருந்தும். ஒருவகையில், அதுவும் சந்தைப் படுத்தப் பட்ட நடிப்புத் தான்.
//

ஹலோ தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வர வித்வான் சிக்கல் சன்முகசுந்தரமாக நடித்த ஒரு படமே உங்கள் குற்றச் சாட்டுகளை மறுக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//டி.பி.ஆர் said...
ஒவ்வொரு வருடமும் வெளிவருகிற படங்களில் நடித்தவர்களுள் யார் சிறப்பாக நடித்துள்ளனர் என்பதை வைத்தே அந்த வருடத்திற்குறிய சிறந்த நடிக/நடிகைகளை, இசையமைப்பாளர்களை தெரிவு செய்கின்றனர் இல்லையா?

அவர் அந்த வருடத்திய சிறந்த சாதனையாளர் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்.
//

ஜோசப் ஐயா,

பருவகால பூக்களைப் போல் அவ்வப்போது புதியவர்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் சில அபி(ன்)மானிகள் தான் இன்னும் பாரதி போல் புலவன் இல்லை...சிவாஜியைப் போல் நடிகர் இல்லை என்று ஒன்றையே பெருமையாகப் பேசிக் கொண்டு இருப்பார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
நல்ல பதிவு கோவி கண்ணன்.
//

நன்றிங்கோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...

அமாங்க எனக்கெல்லாம் வீரபாண்டிய கட்ட பொம்மன் கப்போலோட்டிய தமிழன் போன்றோரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது இவர் நடிப்பாற்றல் தான்.

//

கிரி,

அப்படியே விசயத்தை முகவை மைந்தரிடம் பாஸ் பண்ணுங்க !
:)

TBCD சொன்னது…

கதவை சாத்தி வையுங்க அண்ணாச்சி...

அம்புட்டுத் தான் சொல்லுவேன்..

ராவணன் சொன்னது…

"'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' - சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். 'சாம்பார்' என்று பிரியமுடன் அழைக்கப்படும் பலதாரப்புகழ் ஜெமினிகனேசன் ஐயரும் சிறந்த நடிகர் தான்."

ஏன் அய்யரை மட்டும் அய்யர் என்று குறிப்பிடுகிறீர்கள்.
கமல் காசன் அய்யங்கார் என்று கூறலாமே?
கமல் காசன் அய்யங்காரும் பலதாரத்தில் புகழ் பெற்றவர்தானே?
பல வப்பாட்டிகளையும் வைத்துக் கொண்டவர்தானே?

அய்யங்கார் என்றால் போண்டா அய்யங்கார் சுளுக்கு எடுப்பார் என்ற பயமா?
இல்லை லுக்கு லுக்கு கஞ்சா கேசில் உள்ளே தள்ளிவிடுவார் என்ற பயமா?

இப்படிக்கு,
ராவணன்.

முரளிகண்ணன் சொன்னது…

men mo go men may come but the industry stands

பரிசல்காரன் சொன்னது…

//சிறந்த கவிஞர் நேற்று கண்ணதாசன்...இன்று வைரமுத்து... //

எப்போதும் வாலி!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்