பின்பற்றுபவர்கள்

10 ஜூன், 2008

வருங்கால முதல்வர் கார்த்திக் வாழ்க !

அந்த காலம் எப்போது வரும் என்று தெரியாதவரை கோஷத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். நடிகர் கார்த்திக் கட்சி ஆரம்பித்து இருக்கிறாராம். தயாரிப்பாளர்களின் முதல் இல்லாமல் நெடும்தொடரில் சொந்தப் பெயரில் இயல்பாக நடிக்க வாய்ப்பாக நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

வழக்கம் போல் தனது கட்சி சாதிக்கட்சி அல்ல சாதிக்கும் கட்சி என்கிறார் கார்த்திக். அவரிடம் கேட்டபோது,

அவரது குரலில் கற்பனை உரையாடல்.

"அது.....வந்து....நான்.... ஏன் தனிக்கட்சி ஆரம்பிக்கக் கூடாதுன்னு...எ.... என் ரசிகர்கள் கே.....கேட்டாங்க....நான் நான் நானே சிந்திச்சேன்...நாம நாம ஏன் ஏன் கட்சி ஆராம்பிக்கக் கூடாதுன்னு... நேற்று வ....வந்தவனெல்லாம் கட்சி ஆரம்பிச்சிட்டாங்க...தலைவா....நீ நீ....ஏன் கட்சி ஆரம்பிக்கக் கூடாதுன்னு அவங்க கே.......கேட்பது ஞாயம் தானே. இப்ப பாருங்க....நான் நான் மதுரை பக்கம் போ....போனாலே கூட்டம் அ....அலைமோதுது....நீ......நீங்கதான் ...நம்ம மக்களுக்கு எ......எதாவது செய்யனும்னு கே...கேட்கிறாங்க"

முன்னும் அரசியலில் தானே இருந்திங்க அப்ப எதாவது செய்து இருக்கலாமா ?

"எ......ஏன் இப்படி கேட்குறிங்க....நான் நான் வந்து கட்சி த....தலைவராக இருந்தாலும்...என்னை க....க....கட்டுப்படுத்தியே வச்சிருந்தது பார்வேர்ட்..ப்ளாக்....சரி....அங்கே இருந்தா மக்களுக்கு எ......எதும் செய்ய முடியாதுன்னு தான் புதுசா க.....கட்சி ஆரம்பிச்சி எ....எதாவது செய்யலாம்னு இருக்கேன்

விஜயகாந்த், சரத் குமாரெல்லாம் உங்களுக்கு முன்மாதிரியா ?

"ஐயோ........எ....ஏன் இப்படி கே....கேட்க மனசு வந்துச்சு உங்களுக்கு....நான் நான் அது வ....வந்து.....அ...அவங்களுக்கு முன்னமே அரசியலுக்கு வந்துட்டேன்.....அ...அவங்கெல்லாம் எ....என்னைப்பார்த்துதான் க.......கட்சியே ஆரம்பிச்சாங்க

படப்பிடிப்புக்கே ஒழுங்காக செல்லாத நீங்கள் கட்சியை நடத்த முடியுமா ?

"இ.இதெல்லாம் அபாண்டம்....நான் நான் நடிக்கறத்துக்கு சரியான சீன் வைக்கமாட்டேன்கிறார்....டைரக்டர்...அ...அதனால கடுப்பாகி ஓடியாந்துட்டேன்....இ....இப்பவும் சொல்லுங்க....எ என் நடிப்பு தீணி போடும் டைரக்டர்ஸ் யா......யாரும் இருக்காங்களா ?"

******

நாமக வாழ்க ....நமக இல்லிங்க.... அவரின் கட்சிப்பெயர் 'நாடாளும் மக்கள் கட்சி'

அந்தக்காலம் போல் குறுநிலம் இருந்தால் எல்லாக் கட்சித்தலைவர்களும் நாடாளுவார்கள். :)

13 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)

கிரி சொன்னது…

அய்யயோ தமிழ் மறந்துடும் போல இருக்கே :-))

கோவி கண்ணன் வேண்டாம் இந்த விஷ பரிட்ச்சை :-)))))

கட்சி பேரு "நாம" கட்சி... சூப்பரப்பூ

வடுவூர் குமார் சொன்னது…

வீட்டில என்ன பிரச்சனையோ??

நையாண்டி நைனா சொன்னது…

சத்தியமாக நாம் நாடாள போவதில்லை, நம் கட்சிக்காவது அந்த பெயர் இருக்கட்டும் என்று வைத்துவிட்டார் போங்கள்.

இன்னும் விரைவில்,
செந்தில், கவுண்டமணி, வடிவேல், 'ஸிஸர்' மனோகர், கொட்டாச்சி, வையாபுரி, குள்ளமணி, போன்றோர்களும் கட்சி ஆரம்பிக்க போவதாக ரகசிய தகவல் வந்துள்ளது...
தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற செய்தி படு வெளிப்படையாகவே வந்துள்ளது

முரளிகண்ணன் சொன்னது…

2011 ல் நான் தான் முதல்வர் என்ற கோஷத்தை இவராவது விட்டு வைத்தாரே

ஒரிஜினல் "மனிதன்" சொன்னது…

"வருங்கால முதல்வர் கார்த்திக் வாழ்க"

சிந்தனைச்சிற்பி,சிங்கநிகர் தலைவன்,ஆற்றலரசு,ஆர்ப்பரிக்கும் அடலேறு, மொழிப்போர் தியாகி, தமிழ்த்திரையுலகின் முடிசூடாமன்னன்,எங்கள் அண்ணன்
கிங்காங் இருக்கும்பொழுது மேற்படி டைட்டிலை வைத்த கோவியாரை வண்மையாக கண்டிக்கிறேன்.

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அண்ணன் கிங்காங் வாழ்க.

ezhil arasu சொன்னது…

சார் இன்னிக்கு தினசரியின் தலைப்புச் செய்தியே இதப்பற்றிதான்.
விஜயகாந்த்,சரத்,கார்திக் மூவர் கூட்டனி வரும் தேர்தலில் போட்டிபோட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்ககப் போவதாக!
சேர,சோழ,பாண்டிய மூவேந்தர் ஆட்சியா?

அது சரி சார் நம்ம மக்களை நம்பமுடியாது சினிமான்னா அவ்ங்களுக்கு உயிர்

எனவே கார்த்திக் முதலமைச்சர் ஆகாவிட்டாலும் போலிஸ் அமைச்சர்

என் அவ்ர்கள் கட்சி தொண்டர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களாம்.

ச்சின்னப் பையன் சொன்னது…

மக்கள் சேவை செஞ்சே தீருவேன்னு இன்னும் எவ்ளோ பேர் இந்த மாதிரி கட்சியை ஆரம்பிக்கபோறாங்களோ!!!

TBCD சொன்னது…

:)

சினிமா நிருபர் சொன்னது…

என்ன கொடுமை சார் இது!

siva சொன்னது…

HI Time
but it is bad time for Karthick

"எங்கள் அண்ணன்
கிங்காங்" :-)))

puduvai siva.

பரிசல்காரன் சொன்னது…

கண்டிப்பாக இந்தப் பதிவை கார்த்திக் பார்த்தால் கொ.ப.செ. நீங்கள்தான்!

nakul சொன்னது…

எப்போ எங்கள் காணல் நீர் ரித்தீஷ் முதல்வர் ஆவார், யாராவது சொல்லுங்களேன்?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்