இந்த வாரமும், அடுத்தவாரமும் இதுதான் ஹிட்டுன்னு தெரிஞ்சு போச்சு... ஊகமாக இதெல்லாம் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்க. 10 நாளைக்காவது பதிவுலகின் மந்திரச் சொல்லாக 'தசவதாரம்' இருக்கும், கருத்து செறிவுள்ள பதிவுகளை இந்த வாரம் வலையேற்றலாம் என்பவர்கள் ஒத்திப் போடுங்கள், ஏனென்றால் கவனம் பெறாது.
தசவதாரத்தினால் என்னவெல்லாம் நடக்கலாம்,
அக்கம் பக்கம் :
1* பெட்ரோல் விலை உயர்வை ஒருவாரத்திற்காவது மறக்க வைக்கும்
2* சிவாஜியா ? தசவதாரமா ? எது சிறந்த படம் என்ற அபத்த விவாதங்கள் நடக்கும். (ஒப்பிடமுடியாதவற்றைக் கூட ஒப்பிட்டு பேசுவதில் நம்மவர்கள் வல்லவர்கள்)
3* ஒருவாரம் வெளி வேலைகளைப் பார்க்கலாம் என்று நினைக்கும் பதிவர்களுக்கு நல்ல வாய்ப்பு, ஒருவாரம் முழுவதும் தசவாதாரம் தான் சூடாகப் போகிறது, வேறு பதிவுகள் எதுவும் கவனம் பெறாது. எனவே தற்காலிக ஓய்வெடுக்கலாம் என்று மூடுக்கு பலர் வரக்கூடும்.
4* தசவதாரம் பற்றி ஒரு இடுகையோ, ஒரு பின்னூட்டமோ போடவில்லை நீயெல்லாம் ஒரு பதிவரா ? பதிவுலகினரால் கேலிக்கு ஆளாகி, சில பதிவர்கள் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்வார்கள்
5* சோகம் : தசவதாரம் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை, வாலிபர் விசம் அருந்தினார் - தட்ஸ் தமிழ் செய்தி
வரப்போகும் கட்டுரைகள் :
6* தசவதாரம் - கமலஹாசனின் உடல் அரசியலும், ஊடகங்களும் - ஜமாலன் ( கீற்றுக் கட்டுரை மீள் பதிப்பு)
7* தசவதாரமும் உருவப்படும் பத்து கோமணங்களும் - அசுரன்
8* தசவதாரமும் மிதிக்கப்படும் பெண்ணியமும் - சுகுணாதிவாகர் (பின்னவினத்துவ அலசல்)
9* தசவாதாரம் - திரையுலகின் ஒரு சாகா வரம் - உண்மைத்தமிழனின் மின் நூல்வெளியீடு (பதிவு நீளம் என்பதால் இப்போதெல்லாம் அதை மின்னூலாக்கி எல்லோருக்கும் மின் அஞ்சல் அனுப்புகிறாராம்)
10* அடுத்தவார வெள்ளிக்கிழமை டோண்டு ராகவனின் கேள்வி பகுதியில் , 'சமீபத்தில்' வெளியான சிவாஜி கனேசனின் தசவதாரமும், தற்போது வெளியான கமலஹாசனின் தசவதாரமும் - ஒப்பிடமுடியுமா ?
**************
இதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
* சிங்கைப் பதிவர்களே நாளைக்கு பதிவர் சந்திப்புக்கு மறக்காமல் வந்துவிடுங்கள்
* நம்ம இளஞ்சிங்கம், புதிய சுனாமி மோகன் கந்தசாமியின் வெள்ளிவிழா பதிவை நேரம் கிடைக்கும் போது படிச்சுப்பாருங்க, அவரது பதிவு பின்னூட்டத்தில் திரட்டப்படவில்லை)
* கோவியாருக்கு சூடான பதில்கள்! டோண்டு சாருக்கு நாக்கை புடுங்கும் கேள்விகள்!! - வலைப்பூ சுனாமி திரு லக்கி லுக்
பிகு : தசவதாரம் படத்தை இன்னும் பார்க்கலைங்க, இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை, மலேசியா - ஜோகூர் ( சிங்கப்பூர் அருகில் இருக்கும் இடம்) சென்று பார்ப்பேன். அதுபற்றி பதிவெழுத வேண்டாம் என்று சொன்னால் பரிசீலிப்பேன் :)))
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
10 கருத்துகள்:
வரப்போகும் கட்டுரைக்களுக்கான முன்னோட்ட தலைப்புகள் அருமை :))
//ஒப்பிடமுடியாதவற்றைக் கூட ஒப்பிட்டு பேசுவதில் நம்மவர்கள் வல்லவர்கள்//
நேரம் கிடைக்கும் போதெல்லாம் (அதாவது எப்போதும் :D)தலைவரை வாரும் கோவி கண்ண்ணன் அவர்களுக்கு என் தாறுமாறான கண்டனங்கள்
//தசவதாரம் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை, வாலிபர் விசம் அருந்தினார் - தட்ஸ் தமிழ் செய்தி//
:-)))))
//தசவதாரமும் உருவப்படும் பத்து கோமணங்களும் - அசுரன்//
எல்லோருக்கும் இப்படி தான் போடுவாரா..????
//பதிவு நீளம் என்பதால் இப்போதெல்லாம் அதை மின்னூலாக்கி எல்லோருக்கும் மின் அஞ்சல் அனுப்புகிறாராம்)//
ஹா ஹா ஹா ஹா
:)
* // தசவாதாரம் - திரையுலகின் ஒரு சாகா வரம் - உண்மைத்தமிழனின் மின் நூல்வெளியீடு (பதிவு நீளம் என்பதால் இப்போதெல்லாம் அதை மின்னூலாக்கி எல்லோருக்கும் மின் அஞ்சல் அனுப்புகிறாராம் //
உண்மைத்தமிழனினை ஓட ஓட லக்கியும் விரட்ராரு பாவும் சார்..
:) :) :)...................
வாத்தியார் ஐயாவோட வேலைய நீங்க எடுத்துக்கிட்டிங்க போல...
தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனின் 10 கேரக்டர்கள் பற்றிய விரிவான அலசல் கட்டுரை http://nirubar.blogspot.com வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம். அதையும் வந்து ஒரு எட்டு படிச்சுட்டு போங்களேன் வாசகர்களே...!
//தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனின் 10 கேரக்டர்கள் பற்றிய விரிவான அலசல் கட்டுரை http://nirubar.blogspot.com வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம். அதையும் வந்து ஒரு எட்டு படிச்சுட்டு போங்களேன் வாசகர்களே...!//
முடியாது... படத்த பார்த்துட்டு தான் விமர்சனம் படிக்கனும்னு இருக்கேன்... மன்னிச்சுடுங்க....
தசவதார இரைச்சலில்...உங்கள் பதிவுதான் தூள்!
கீழ்க்கண்ட தலைப்புகளையும் இங்கே சேர்க்கலாம்.
***தசாவதாரம் வெற்றிக்கு காரணம், CIA ஏஜன்ட் கமல்.
***தசாவதாரம் தோல்விக்கு காரணம் லொட லொட அசின்.
***தசாவதாரம்: சோழர் கால காட்சிகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்.
***பெரியாரும் தசாவதாரமும்
என்ன நடக்கது இங்க? இருந்தாலும் இந்த தலைப்பு அருமை..
//தசவதாரம் - கமலஹாசனின் உடல் அரசியலும், ஊடகங்களும் - ஜமாலன் ( கீற்றுக் கட்டுரை மீள் பதிப்பு)//
பதிவுல போட்டபின்தான் கீற்றுக்கு... டிக்கெட் அனப்புவதற்கு முன்பாக இங்க ஒரு தியேட்டர் கட்டி படம் ரிலிஸ் பன்னங்கொ.. அப்புறம் பார்க்கலாம் உ.அ. வெல்லாம்
ஸேப்சைடா பைத்தியக்காரனிற்கு பின்னோட்டம் போட்டு கோட்டவ முடிச்சிட்டும்ல..
கருத்துரையிடுக