பின்பற்றுபவர்கள்

22 ஜூன், 2008

மறுபிறவியும் சுப்பையா வாத்தியாரும் !

எரிந்த கட்சி - எரியாத கட்சி போலவே ஆத்திக நம்பிக்கையில் ஒருசாரர் பிறவிகள் இருக்கிறது மற்றவர்கள் இல்லை என சொல்லும் இருசாரர் இருகின்றனர். ஆப்ரகாமிய மதங்களைப் (கிறித்துவ, இஸ்லாமிய) பொருத்து மறுபிறவிகள் இல்லை என்பர். இந்திய சமயதத்துவங்களில் மறுபிறவி உண்டென்பர், இந்திய தத்துவங்கள் பழிபாவத்திற்கு அஞ்சு...மீறி செய்தால் நாய் ஆவாய் நரியாவாய்...எறும்பாவாய் ஈ ஆவாய் என்றெல்லாம் சொல்லுவார்கள். அதே போன்று ஆப்ரகாமிய மதங்களில் 'பாவங்களுக்கு அஞ்சு அப்படி இல்லை யென்றால் இம்மையில் அதாவது இறப்பின் பின் மறு உலகில் நிரந்தரமாக தண்டிக்கப்படுவீர்கள்' என்றும் சொல்லி பயமுறுத்தியிமின்றி, எங்கள் வேதபுத்தகமே உண்மையான இறைவன் அருளியது, எங்கள் ஆண்டவனால் சொல்லப்பட்ட / அருளப்பட்ட இந்த வேதங்களை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்காவிட்டால் உங்களுக்கு நிரந்தர நரகம் தான் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.

முற்பிறவி பொய் என்கிறீர்களே, ஒரு குழந்தை ஊனமாகவே பிறப்பதற்கும், பிறந்து அதே விநாடியில் இறப்பதற்கும் என்ன காரணம் என்று கேட்டால் அவர்களது வேதத்தில் தெளிவான பதில் எதுவுமில்லை. உங்கள் வேதமே எட்டாதா காட்டுவாசிகள் எவரும் மனிதர்களே இல்லையா ? அவர்களுக்கு உங்கள் மதமோ / மார்கமோ தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை, அங்கெல்லாம் உங்கள் கொள்கைகள் காடுகளைத் துளைத்து நுழைந்திருக்கிறதா ? அப்படி எதுவும் தெரியவில்லையே. அவர்கள் இறந்தாலும் நிரந்தர நரக நெருப்பில் வாடுவார்களா ? காந்தி கிறித்துவ மதத்தையோ, அன்னை தெரசா இஸ்லாமிய மார்கத்தையோ தழுவவே இல்லை. இவ்விரு மதங்களின் கொள்கைப்படி இவர்கள் அம்மதங்களைப் பற்றி அறிந்திருந்தும் அவற்றைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதததல் பாவிகள் அடையும் நிரந்தர நரகத்தைத்தானே அவர்களும் அடைவார்கள் ? என்று ஒரு சில கிறித்துவ / இஸ்லாமிய அன்பர்களைக் கேட்டபோது தெளிவான பதில் கிடைக்கவே இல்லை.

இந்தியாவில் இந்துமதத்தில் 'பிறப்பின் வழி புனிதம் (பிறந்த வழி பற்றியதல்ல...அதை தூய்மையற்றது என்றே சொல்லி வந்தார்கள்) கற்பிப்பதால் என்னவோ பிறப்பில் கிடைக்கும் நன்மை தீமைக்கெல்லாம் இறைவனின் சித்தமே காரணம் என்று சொல்வார்கள், அந்த பித்தம் பிடித்தவன் ஏன் சில குழந்தைகளைக் கூட அழித்துவிடுகிறான் என்று கேட்டால்...கொஞ்சம் தயங்கி தயங்கி முன் ஜென்ம வினை என்று அவிழ்த்துவிடுவார்கள். மனிதப்பிறவியில் சாதியைச் சொல்லி, இனத்தைச் சொல்லி பலரை நாயைவிட கேவலமாக நடத்தப்படும் போது மனிதன் விலங்காகக் கூட பிறப்பான் என்பது மறுப்பிற்குரியது. இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை. மனிதன் பாவம் செய்வதால் விலங்காகப் பிறக்கிறான் என்கிறார்கள்.

எந்த ஒரு விலங்கும் தன் உணவிற்கும், தன்னுடைய பாதுகாப்பிற்க்கும், இனப்பெருக்கத்திற்கும் தன் கவனம் செலுத்துவதைத் தவிர வேறெதிலும் செலுத்துவதில்லை. 'வாழ்க்கை' என்றால் விலங்குகளுக்கு உரியவையே உண்மையிலேயே முழுமையான வாழ்க்கை, அத்தகைய வாழ்கை (சுகங்கள், வசதிகள் என்பது தவிர்த்து) எந்த மனிதனுக்கும் கிடைப்பது இல்லை. பிறகு ஏன் பாவம் செய்த மனிதன் விலங்காகப் பிறக்கப் போகிறான் ? விலங்கு வாழ்கையில் மனிதனைவிட சுகபோகம் அதிகமே. ஒரு நாயைப் போல் உணவின் சுவை அறிந்து ருசித்து ருசித்துத் தின்னும் திறன் எந்த மனிதனுக்கும் கிடையாது. ஒரு காக்கை கூட்டத்தைப் போல் தன்னினத்துடன் சேர்ந்து மகிழ்ந்திருக்கும் தன்மை மனித கூட்டத்திற்கு கிடையாது. இரு பாம்புகள் பின்னிக் கொள்வது போல் மணிக்கனக்கில் உடல்சுகத்தில் மயங்கிக் கிடைக்க மனிதனால் முடியவே முடியாது. சிலவகை விலங்குகளுக்கு இறப்பினால் ஏற்படும் துக்கம் / சோகம் உண்டு, குழந்தைகளைப் போலவே பலவற்றிற்கு துக்கம் என்பது இல்லவே இல்லை. பிறகு எப்படி சொல்வது பாவம் செய்த மனிதன் விலங்காகப் பிறக்கிறான் என்று ? ஒரு வேளை புண்ணியம் செய்திருந்தால் விலங்காக பிறக்கும் பாக்கியம் கிடைக்குமோ. விலங்குகெல்லாம் முற்பிறவியில் புண்ணியம் செய்த மனிதர்களா ?

பாவம் செய்த மனிதர்கள் ஊனமாக பிறக்கிறார்கள், ஊமையாகப் பிறக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வது தற்போது ஓரளவு நின்று இருக்கிறது. அது கொஞ்சம் முன்னேற்றம் தான். முற்பிறவி இருக்கிறதா இல்லையா ? அதில் நம்பிக்கைக் கொள்ள வேண்டுமா ?

பிறவிகள் உண்டு என்று வைத்துக் கொண்டாலும் தற்போது இந்த பிறவியில் முன் பிறவிகளின் சுவடுகளே தெரியாதபோது அதை நம்புவதால் என்ன பயன் ? பிறவிகள் பாவ புண்ணியத்தின் கணக்கு என்றால், பாவம் செய்தவனும் தண்டனை அனுபவிக்க பிறந்தாகவேண்டும், புண்ணியம் செய்தவனும் அதன் பலன் அனுபவிக்க பிறந்தாகவேண்டும். இதை வெளியில் சொல்லிப் பாருங்கள், பிறவி பயம் இருப்பவர்கள்... தவிச்சவாயிக்குக் கூட தண்ணீர் கொடுத்தால் புண்ணியம் பெற்று அடுததபிறவி வந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கியே தண்ணீர் கொடுக்காமல் சிலர் ஆவிபோனபின் பாவியாகி மறுபடியும் பிறப்பார்கள் :)

பிறவி பாவம் புண்ணியம் ஆத்மாவில் எழுதப்பட்ட கணக்கு என்றால் ஆண்டவனுக்கு வேலை ஒன்றுமே இல்லை என்றல்லவா ஆகிறது. இதுவும் ஒருவகை நாத்திகம் தான். இந்தியாவில் இந்து மதத்தில் இது போன்ற தத்துவக் குழப்பங்கள் நிறைய உள்ளது, காரணம் இந்து மதம் என்பது உள்வாங்கி வளர்வதாகக் கூறிக் கொண்டு பிச்சைக்காரன் வாந்தியைப் போல் பலவற்றையும் உண்டு செறிக்காமல் வரும் ஒவ்வாமையே. தற்போதைய காலகட்டத்தில் 'மதத்தால்' மனிதனுக்கு தரமான தத்துவ சிந்தனைகளை முன்னிறுத்தவே முடியாது. ஏனென்றால் அவற்றின் கட்டமைப்புகளான அடிப்படை வாதத்தை உடைத்துக் கொண்டு அவற்றால் மீண்டுவிட முடியாது. மதங்கள் 'இறைவன் இருக்கிறான்' என்று சொன்னாலும் இறைவன் குறித்த வரையரையில் முறன்பட்டே நிற்கின்றன. அவை மதங்களாக வகைப்படுத்தி வேறுபட்டதாக அறியப்படுபதற்கும் அதுவே அடிப்படைக் காரணம் கூட.

இறைநம்பிக்கை மாற்றானவர்களும் சொல்வது இதுதான் 'கண் முன் நடப்பதை நம்பு, எவருக்கும் கொடுதல் செய்யாதே' இறைமறுப்பாளர்கள் பாவ புண்ணியத்தை நம்புகிறார்களோ இல்லையோ... கொலை செய்தாலும் பரிகாரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறும் துணிவும் அஞ்சாமையும் ஆளுமையும் உடையவர் நாத்திகராக இருந்தது இல்லை.

பின்குறிப்பு : தலைப்பில் இடம்பெற்றதைத் தவிர்த்து சுப்பையா ஐயாவுக்கு பதிவுக்கும் தொடர்பு இல்லை. எனது அன்புக்குறிய நண்பர் ஆகையால் அவரை இடுகையின் தலைப்பில் சும்மா இழுத்தேன். அம்புட்டுதான்.

14 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

சில நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்கிறது.

Subbiah Veerappan சொன்னது…

/////காரணம் இந்து மதம் என்பது பிச்சைக்காரன் வாந்தியைப் போல் பலவற்றையும் உண்டு செறிக்காமல் வரும் ஒவ்வாமையே.////

சூப்பர்!
இதைப் பார்த்து மகிழ கண்ணதாசன் இல்லாமல் போய்விட்டாரே!;-((((((((

மங்களூர் சிவா சொன்னது…

/
இந்து மதம் என்பது பிச்சைக்காரன் வாந்தியைப் போல் பலவற்றையும் உண்டு செறிக்காமல் வரும் ஒவ்வாமையே.
/

உவ்வ்வ்வ்வேக்

:((((((((((

பரிசல்காரன் சொன்னது…

//தலைப்பில் இடம்பெற்றதைத் தவிர்த்து சுப்பையா ஐயாவுக்கு பதிவுக்கும் தொடர்பு இல்லை. எனது அன்புக்குறிய நண்பர் ஆகையால் அவரை இடுகையின் தலைப்பில் சும்மா இழுத்தேன். அம்புட்டுதான்.//

நானும் கடைசி வரை எதிர்பார்த்திருந்தேன்.. ரொம்ப குசும்பு சார் உங்களுக்கு!

பரிசல்காரன் சொன்னது…

//பாவம் செய்த மனிதர்கள் ஊனமாக பிறக்கிறார்கள், ஊமையாகப் பிறக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வது தற்போது நின்று இருக்கிறது. அது கொஞ்சம் முன்னேற்றம் தான்//

எனக்கென்னமோ இதில் உடன் பாடில்லை. இன்றைக்கும் “எல்லாம் அவன் செஞ்ச பாவம்டா” என்றோ, நீ பண்ற இந்தப் பாவம் உன்னை சும்மா சிடாது என்றோ சொல்வது குறைந்ததாகத் தெரியவில்லை!

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
சில நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்கிறது.
//
எதையும் மறுப்பது ஏற்பது என்பதைத் தவிர்த்து அதன் உண்மைத் தன்மை பற்றி விறுப்புவெறுப்புடன் தெரிந்து கொள்ள முனைந்தால் பலவற்றிற்கு தன்னளவில் ஒரு தெளிவு கிடைக்கும் குமார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
சூப்பர்!
இதைப் பார்த்து மகிழ கண்ணதாசன் இல்லாமல் போய்விட்டாரே!;-((((((((
//

சுப்பையா ஐயா,

ஏன் ஏன் இல்லை ? மறுபிறவி நம்பிக்கைப் படி அவர் மீண்டும் பிறந்திருக்காத அளவுக்கு அவர் உத்தமராக வாழ்ந்து மறைந்தார், அவர் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்கிறீர்களா ? கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞர், மதநம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் உடையவர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
எனக்கென்னமோ இதில் உடன் பாடில்லை. இன்றைக்கும் “எல்லாம் அவன் செஞ்ச பாவம்டா” என்றோ, நீ பண்ற இந்தப் பாவம் உன்னை சும்மா சிடாது என்றோ சொல்வது குறைந்ததாகத் தெரியவில்லை!

7:58 PM, June 22, 2008
//

நேரடியாக அப்படி எதும் சொல்ல மாட்டார்கள். அதுவே சாமியார் சிறைக்குச் சென்றால் 'சாமிக்கு கிரக நிலை சரியில்லை' அதனால் நடந்துவிட்டதாக தெளிவாக(?) சொல்லிவிடுவதால், சாமியார்கள் பாவிகள் இல்லை என்று மறைமுக பொருள் கொள்ள வேண்டும். அங்கே சாமியார் என்ன பாவம் செஞ்சாரோ ? என்று மறைமுகமாகக் கூட அவரது அடியார்கள் (பாவ புண்ணியத்தில் நம்பிக்கை உடையவர் என்றாலும்) சொல்லத் துனிய மாட்டார்கள். :(

இதற்குத்தான் குறிப்பிட்டேன் பிச்சைக்கார வாந்தி என்று.

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...


உவ்வ்வ்வ்வேக்

:((((((((((
//

நன்னி

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said... நானும் கடைசி வரை எதிர்பார்த்திருந்தேன்.. ரொம்ப குசும்பு சார் உங்களுக்கு!

7:55 PM, June 22, 2008//

கே.கே,

வாத்தியார் எனது ஆஸ்தான ஆசான். அவரை வம்பிலுக்க முடியுமா ? மற்ற மாணவர்களுக்கு அவர் கேள்விகளாக வைத்ததை நான் அசைன்மெண்டாக எடுத்துக் கொண்டு கட்டுரையை பொருள் தொட்டு(பதிலாக அல்ல) தந்திருக்கிறேன்.

தருமி சொன்னது…

நம்பிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் "ஏழாம் பொருத்தம்" என்பது தெரிந்தது தானே...

நல்ல கேள்விகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
நம்பிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் "ஏழாம் பொருத்தம்" என்பது தெரிந்தது தானே...

நல்ல கேள்விகள்.
//

தருமி ஐயா,

ஒரு மதத்தின் தோற்றமே மற்ற (மதங்களின்) நம்பிக்கையின் மீதான கேள்வியின் / மறுப்பின் தொகுப்புதான் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை.
:)

நையாண்டி நைனா சொன்னது…

ஒத்துக்கறேன்.... நான் இப்ப ஒத்துக்கறேன்....
போன ஜென்மத்திலே, நான் பதிவுலே யாருக்குமே பின்னூட்டம் போடாதனாலே இப்போ யாரும் எனக்கும் போட மாட்டேங்கிறாங்க,
அதே மாதிரி நீங்களும் பின்னூட்டம் போடாம இருந்தீங்கன்( குறிப்பா எனக்கு போடாம இருந்தீங்கன்ணா ) அடுத்த ஜென்மத்திலே உங்களுக்கு ஒரு பின்னூட்டம் கூட கிடைக்காது..

மங்களூர் சிவா சொன்னது…

இந்த சுட்டி உங்கள் பதிவுக்கு பல விளக்கங்கள் / தெளிவுகள் தரலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்