பின்பற்றுபவர்கள்

3 ஜூன், 2008

கேரள அம்மேக்கள் !

இந்தியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அங்கிருக்கும் போது இந்திய சுற்றுலா மையங்களை பார்ப்பதற்கு போதிய வாய்ப்போ, நேரமோ, பொருள் வசதியோ எனக்கு கிடைக்கவில்லை. இந்த முறை 15 நாள் விடுப்பில் செல்லும் போது எங்காவது சென்று வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். பதிவுலகம் சாராத என் நண்பர் ஜெ.கண்ணன் என்பவர் (பதிவர் சந்திப்புக்கு என்னை அழைத்துச் சென்றவர்) அடிக்கடி பணிக்காக கேரளா சென்றுவருபவர். இந்த முறை என்னையும் அழைத்துச் செல் என்று சொல்லி ஏற்பாடுகளைச் செய்யச்சொல்லிவிட்டு அதன் படி கொச்சி(ன்) சென்று வந்தேன். இருபகல், ஓர் இரவு அங்கு தங்கி இருந்தேன். சிறுவயதில் சபரிமலைக்கு கேரளா சென்றிருக்கிறேன். அறியாத வயதில் சென்றதால் கேரளா பற்றி அவ்வளாவாக நினைக்க முடியவில்லை. இந்த பயணம் கேரளா பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

மற்ற இடங்களுக்குச் சென்றது பற்றி பிறகு எழுதுகிறேன். முதலில் சோட்டானி கரை சென்றது பற்றி...

கடந்த 23 மே 2008ல் கொச்சினிலிருந்து ஊருக்கு கிளம்பும் நாள் அரண்மனை மற்றும் சோட்டானிக்கரை கோவிலுக்குச் சென்றோம். கொச்சி - எர்ணாகுளத்தில் இருந்து அரசு பேருந்தில் 4 ரூபாய் கட்டணத்தில் சோட்டானிக்கரைக்குச் செல்ல முடியும். ஒரு 30 நிமிட பயணம் தான். சென்ற போது சரியான உச்சி வெயில், கொச்சியில் வெயில் குறைவுதான் என்றாலும் கடற்கரை நகரமாக இருப்பதால் காற்றின் ஈரப்பதம் காரணமாக புழுக்கமாகவே இருந்தது. சென்னையைவிட பரவாயில்லை.

கோவிலின் அருகில் நிறைய தமிழ் உணவு விடுதிகள் (ஓட்டல்கள்) இருந்தன. பெயர்கள் தமிழில் எழுதி இருந்தது...கேரளா பயணிகள் வேளாங்கன்னிக்கு வருவது போலவே தமிழக

பயணிகள் சோட்டானிக்கரைக்குச் செல்வார்கள் போலும். வேளாங்கன்னியில் பல கடைகள் மலையாளத்தில் எழுதப்பட்டு இருக்கும். செருப்பை கோவில் நுழைவாயிலுக்கு அருகில் விட்டுவிட்டு உள்ளே சென்றோம்.

பகவதி அம்மன் கோவில் (இரு அம்மைகளாம்) வழக்கமான ஓடுவேய்ந்த கேரள கோவில் அமைப்பிலேயே இருந்தது. உள்சுற்றில் நடக்கும் போது தீமிதிப்பது போன்று வெயிலின் சூடு கால்களை பதம் பார்த்தது.

சென்ற வேளை உச்சி வேளை என்பதால் கோவிலில் நின்று கும்பிடும் இடத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நடை சாத்தி இருந்ததர்கள். முன்பக்கம் சிறிய கதவின் வழியாக சிலையைப் பார்க்க முடிந்தது. நண்பர் கன்னத்தில் போட்டுக் கொண்டு கும்பிட்டார். நான் வெறும் கண்களால் பார்த்தேன். அனிச்சை செயலாக கையெடுத்துக் கும்பிடும் பழக்கம் கூட எனக்கு நின்றுபோனது... எனக்கே வியப்புதான். அதன் பக்கத்திலேயே சோறு ஊட்டு வதற்காக இன்னொரு அம்மன் இருந்தது. அங்கே அதனருகில் சிறிய மண்டபத்தில் கூடியிருந்த பெண் / ஆண் பக்தர்கள் 'அம்மே நாராயணா, தேவி நாராயணா' என்று பாடிக் கொண்டிருந்தார்கள். நம்பூதிரிகள் நிறைய பேர் தென்பட்டனர்.

அதன் பிறகு அதன் எதிரிலேயே சற்று கீழ் பகுதியில் அமைந்திருக்கும் ஐய்யப்பன் கோவிலுக்கு நண்பர் மட்டும் சென்றார். இடைப்பட்ட நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த போது இரண்டு மூன்று பேரிளம் பெண்கள் சூழ்ந்து கொண்டு கைரேகை பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள்.

இருப்பதிலேயே வயதான அம்மேவிடம் கையை நீட்டினேன். ஒரு சிறிய புத்தகத்தில் பல படங்கள் இருந்தது அதில் ஒரு படத்தை விரலால் தொடச் சொன்னார். தொட்டவுடன் பணம் கேட்டார். கொடுத்தேன். 'எல்லா கஷ்டமும் இந்த வருசத்தோட உனக்கு முடிந்துவிடும்' என்றார். கைரேகை பார்க கையை விரிக்கச் சொன்னார். எவ்வளவு என்று கேட்டேன்... 250 ரூபாய் முதல் 1000 வரை ரேட். 'கட்டுப்படியாகல...ஆத்தா...! எதோ வெயிலில் நிற்கிற...பார்பதற்கு எங்க ஆத்தா போல இருக்கே அதற்காகத்தான் உனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தேன்... ஆளைவிடு' என்று அங்கிருந்து நகர்ந்தேன். அதற்குள் நண்பர் வர அவரிடமும் இன்னொரு ஆத்தா பணம் கறந்தார்.

அதற்கும் கீழே குளத்துடன் கூடிய தேவி கோவில் இருந்தது. மேல்சட்டையை கழட்டச் சொன்னார்கள். நாங்களும் கழட்டினோம். (பழைய அரவிந்த் சாமி போன்ற ஆண் அழகர்கள் வந்தால் திருமணம் ஆகாத பெண்கள் சலனப்பட மாட்டார்களா ? ஏன் இந்த கற்கால பழக்கம் இன்னும் ?)
அங்கே உள்ள அரச மரம் 1000 க்கும் மேற்பட்ட பொம்மை பிள்ளைகளைப் பெற்று காற்றில் தாலாட்டிக் கொண்டு இருந்தது, பிள்ளை இல்லாதவர்கள் வேண்டிக் கொண்டு பொம்மை கட்டுவார்களாம்.
அருகில் படங்கள் விற்கும் கடையில் சென்று வந்ததன் நினைவாக பூசை அறையில் 10த்தோடு பதினொன்றாக வைக்கச் சொல்லி மனைவிக்காக ஒரு படத்தை வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சென்ற வழியாகவே திரும்பினோம். வரும் வழியில் வெடி வழிபாடு செலுத்தும் ஒரு இடம் இருந்தது. ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி ரசீது கொடுத்தால் ஒரு பெரிய வெடியை வெடிப்பார்கள்.

கேரளாவில் பல கோவில்களில் வெடி வழிபாடு நடைமுறையில் உள்ளது. அந்த காலத்தில் காட்டுப்பகுதியில் இருக்கும் கோவில்களுக்கு அருகில் வந்து மிரட்டும் காட்டு யானைகளை விரட்டும் பழக்கமாக வெடிவெடிப்பது இருந்து, அதுவே வழிபாடாக பரிணாமம் பெற்றிருக்கும் என நினைக்கிறேன்.

சிறுவயதில் ஐயப்பன் கோவிலுக்கு மாலைபோட்டுக் கொண்டு பூஜையின் போது பஜனையில் 'சோட்டானி கரை வாழும் பகவதி சரணம் அம்மா...தாயே சரணம் அம்மா' அப்பாவுடன் சேர்ந்து பாடிய நினைவுகள் அழுத்த

கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக அங்கே செலவிட்டுத் திரும்பினோம்.

13 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

உங்களை(யே)..... 'தீ மிதிக்க 'வச்சுட்டாளா பகவதி?

என்றம்மே..... கொள்ளாமல்லோ!

குசும்பன் சொன்னது…

கேரளா என்ற தலைப்பை கண்டு ஆசையோடு ஓடி வந்த நான் மிகுந்த வருத்தத்தோடு திரும்புகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
உங்களை(யே)..... 'தீ மிதிக்க 'வச்சுட்டாளா பகவதி?

என்றம்மே..... கொள்ளாமல்லோ!
//

துளசி அம்மா,

இதுக்கு இப்படி ஒரு பொருளும் இருக்கா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
கேரளா என்ற தலைப்பை கண்டு ஆசையோடு ஓடி வந்த நான் மிகுந்த வருத்தத்தோடு திரும்புகிறேன்.
//

யோவ்,

திருமணம் ஆகி முழுசாக மூனுமாசம் கூட ஆகல... இன்னுமா அடங்காமல் இருக்கே ?

ஜமாலன் சொன்னது…

ம் கேரளா பற்றிய பதிவுகள் எதிர்பார்க்கலாம். ஆமா ஊருக்குப்போனத சொல்லவே இல்ல. :)

ஊர் எப்படி உள்ளது? ஆத்துல மீனும் சுகம்தானா? அய்த்தையும் மாமனும் சுகந்தானா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
ம் கேரளா பற்றிய பதிவுகள் எதிர்பார்க்கலாம். ஆமா ஊருக்குப்போனத சொல்லவே இல்ல. :)

ஊர் எப்படி உள்ளது? ஆத்துல மீனும் சுகம்தானா? அய்த்தையும் மாமனும் சுகந்தானா? :)
//

ஜமாலன்,

கவர்ச்சிகரமாக எழுத தெரியாது...சுற்றுலா தொடர்பாக எழுதுவேன்

வடுவூர் குமார் சொன்னது…

அப்பாடி! இப்பவாது நன்றாக முகம் தெரியிற மாதிரி படம் கிடைத்ததே!!

அடுத்து எங்கே?

Thekkikattan|தெகா சொன்னது…

எண்ட குரூவாயூருக்கும் ஒரு ட்ரிப் அடிச்சிருக்கலாமே... :-)

நான் கடந்த முறை நாகர் கோவில் வழியாக திருவணந்தபுரம் சென்று, அங்கே இருக்கும் பத்மநாபஸ்வாமி கோவிலுக்கு சென்றேன், அங்கேயும் குழாயின்(பேண்ட்ஸ்) மீது ஒரு வேஷ்டியை கட்டச் சொல்லிட்டு மேல் சட்டையை உருவி விட்டார்கள், எனக்கு ஒரே வெக்காத்தையா போச்சி :-P போங்க, ஏன்னா, நாமல்லாம் புல் தடுக்கி பயில்வானுன்னு பேரை எடுத்துவாய்ங்களாக்கும்... ;).

அடுத்த டூர் இடம் எங்கே கூட்டிட்டுப் போகப் போறீங்க...

ச்சின்னப் பையன் சொன்னது…

//அடுத்து எங்கே?//

ரிப்பீட்டே....

கிரி சொன்னது…

கோவி கண்ணன் சேட்டா.. மலையாள கரை போயும் ...ஒரு சேச்சி போட்டோ கூட இல்லையே ...அம்மே போட்டோ தான் இருக்கு. எண்ட அம்மே .. குருவாயூரப்பா ..

//எதோ வெயிலில் நிற்கிற...பார்பதற்கு எங்க ஆத்தா போல இருக்கே அதற்காகத்தான் உனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தேன்... ஆளைவிடு' என்று அங்கிருந்து நகர்ந்தேன்.//

ஹா ஹா ஹா

ஜோதிபாரதி சொன்னது…

ஸ்ரீ கோவி கண்ணன்,
எந்தா சுகந்தன்னே!
சுந்தரனாயிட்டு இருக்கேள் போங்கோ!!
நாட்டுக்கு போகான்சோதிச்சு. பின்னே விளிச்சிட்டுள்ளே!!!
சரிக்கு பறைஞ்சு. அச்சா! அச்சா!!

அளியன்,
ஜோதிபாரதி

kuppan சொன்னது…

அட சனியன்கலா மன்னிக்கவும் சிங்கங்கங்களா நிங்களும் சிங்கையில்தான் வசிக்குரிங்களா.அடுத்தமுரை மாபெரும் விழாவுக்கு அழையுங்கள்

cheena (சீனா) சொன்னது…

aakaa ஆகா ஆகா - துளசி சரியாச் சொல்லி இருக்காங்க - வழி மொழிகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்