பின்பற்றுபவர்கள்

26 ஜூன், 2008

பாமகவுடன் கைகோர்ப்பு ? தினமலரின் 'பத்ம' வியூகம் !

சிறிது காலம் 'கலைஞர்' புகழ் பாடியும் வந்த தினமலர் செய்திகள், வாசகர் கடிதங்கள் தற்போது பாமகவுக்கு ஆதரவாக மாறி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. தினகரனுக்கு மாற்றாக கலைஞர் அரசும் தினமலருக்கு தங்கள் அரசு விளம்பர ஆதரவைத் தெரிவித்தது, எனவே தினமலர் கலைஞர் புகழ்பாடியதற்கு காரணாங்க்கள் வேறு. பாமக ஆரம்பிக்கப்பட்டது முதல் அண்மை வரை பாமக வன்னியர் சாதிக் கட்சி (95% அது உண்மையும் கூட) என்று தொடர்ந்து விமர்சித்தே வந்திருந்தது. திமுக கூட்டணியில் இருந்து பாமக அதிரடியாக விளக்கப்பட்டத்தைத் தொடர்ந்து தினமலரின் வாசம் தற்போது பாமக பக்கம் அடிக்கிறது.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே பாமக-வுக்கு நல்லது என 'அட்வைஸ்' செய்யும் அளவுக்கு தினமலரின் பாமக பாசம் புரியாத புதிராக இருக்கிறது ?

ஜெயலலிதா, எடியூரப்பா, நரேந்திர மோடியுடன் ராமதாஸ் மேடை ஏறவேண்டியது தான். இதற்கான காரணங்களை ராமதாஸ் இனி ஆயத்தப்படுத்தலாம். (முழுதாக படிக்க தொடுப்பை சொடுக்குங்கள்)

மேலும் ஒன்று ... அதே பக்கத்தில் ராமதாசின் இயற்கை குணம்!: என்ற கடிதத்தில் அதில் கடைசியில்...

மருத்துவரான ராமதாஸ், ஏழை நோயாளிகளின் மனநிலை, உடல் நிலை அறிந்து வைத்தியம் பார்த்தவர். மற்ற அரசியல்வாதிகளைப் போல, பழக்க வழக்கங்கள் இல்லாத அவர், இந்த அளவுக்கு அரசியல்வாதியாக பொறுமை காக்கிறார் என்றால், அது அவரது மைனஸ் பாயின்ட்.தன் ஜாதியை முன் நிறுத்துகிறார், இரண்டாவது தனது மகனுக்கு மந்திரி பதவிப் பெற்றது போன்ற குறைகள் உண்டு. ஆனால், எந்த அரசியல்வாதி தன் மனைவி, மகன், மகளை அரசியலுக்கு இழுக்கவில்லை. மறைமுகமாக, தனது ஜாதியை எந்த அரசியல்வாதி காப்பாற்றவில்லை? சமீபத்தில், அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கூட தனது மனைவி, மைத்துனரை முன்னிலைப்படுத்தவில்லையா?

- என்ற ஒப்புமைகள் கூட பாமக பக்க(மும்) ஞாயங்கள் என தினமலர் மூலம் வருகின்றது.

தினமலரின் விருப்பமாக ...மைய அரசாக பாஜக அமையவேண்டும் என்பதும், அதற்கு பாமகவின் ஆதரவும் வேண்டும் என்ற பத்ம (தாமரைக் கட்சி) வியூகம் அமைக்கும் காரணமின்றி பாமக புகழ்பாட வேறென்ன காரணம் இருக்க முடியும் ?

பாடிகாட் முனிஸ்வரா எல்லாம் உனக்கு(ம்) தான் தெரியும். முனிஸ்வரனின் தீவிர பக்தர்கள் கூட இனி மருத்துவர் ஐயாவின் புகழ்பாடுவார்கள்.

20 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)
என்னமோ நடக்குது...

ஜீவன் சொன்னது…

தினமலர் பா ஜ க வை முன்னிலைப்படுத்துகிறதோ இல்லையோ, ஆனால் , மருத்துவர் மனதில் அந்த எண்ணம் நிச்சயமாக இருக்கும்..

மோகன் கந்தசாமி சொன்னது…

///தினமலரின் வாசம் தற்போது பாமக பக்கம் அடிக்கிறது.///
வாசம் வீசும். துர்நாற்றம் அடிக்கும். தினமலர் துர்நாற்றமா? காலையில் வெளி வருகிறது என்பதற்காக தினமலரை நீங்கள் இப்படியெல்லாம் சொல்லக்கூடாது.

TBCD சொன்னது…

தங்களின் நுண்ணிய பார்வை மெய் சிலிர்க்க வைக்கிறது..அண்ணாச்சி..

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெகதீசன் said...
:)
என்னமோ நடக்குது...
//

ஜெகதீசன், மர்மம் ஒன்றும் இல்லை
பாராளுமன்ற தேர்தல் நெருங்க எல்லாம் வெளிச்சம் ஆகிவிடும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மோகன் கந்தசாமி said...
///தினமலரின் வாசம் தற்போது பாமக பக்கம் அடிக்கிறது.///
வாசம் வீசும். துர்நாற்றம் அடிக்கும். தினமலர் துர்நாற்றமா? காலையில் வெளி வருகிறது என்பதற்காக தினமலரை நீங்கள் இப்படியெல்லாம் சொல்லக்கூடாது.
//

மோகன்,

தினமலரின் செய்தி பற்றி விமர்சனமாக இந்த செய்தியைத் தரவில்லை. அரசியல் பார்வையாளனாக படித்தவற்றில் இருக்கும் அரசியலைச் சொன்னேன். அப்படி நடப்பது சரி / தவறு என்ற எனது கருத்தாக எதையும் குறிப்பிடவில்லை.

தினமலர் அவதுறு செய்திகள் வேறு. அவற்றை எழுதினால் நீங்கள் சொல்வது போல் நிலை மாற்றிக் கொள்ளலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவன் said...
தினமலர் பா ஜ க வை முன்னிலைப்படுத்துகிறதோ இல்லையோ, ஆனால் , மருத்துவர் மனதில் அந்த எண்ணம் நிச்சயமாக இருக்கும்..
//
ஜீவன்,
மத்தியில் காங்கிரஸ் பல்வேறு சவால்களில் சிக்கி பலவீனமடைந்திருக்கிறது என்பதால், தேர்த்தல் நெருங்க நெருங்க மருத்துவர் ஐயா வின் எண்ணம் மாற்றை நோக்கிச் செல்வதில் வியப்பென்ன ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
தங்களின் நுண்ணிய பார்வை மெய் சிலிர்க்க வைக்கிறது..அண்ணாச்சி..

10:24 AM, June 26, 2008
//

TBCD,

இதுக்கு என்னிய நீ இரண்டு அடி அடிச்சிருக்கலாம்.
:)

கிரி சொன்னது…

//மருத்துவரான ராமதாஸ், ஏழை நோயாளிகளின் மனநிலை, உடல் நிலை அறிந்து வைத்தியம் பார்த்தவர். மற்ற அரசியல்வாதிகளைப் போல, பழக்க வழக்கங்கள் இல்லாத அவர், இந்த அளவுக்கு அரசியல்வாதியாக பொறுமை காக்கிறார் என்றால்//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணை கட்டுதே..

ஏங்க.. இவங்களுக்கு வேணும்னா ஒரு மாதிரியும் அதே ஆளு வேண்டாம்னா ஒரு மாதிரி எழுதுறதும் ...படிக்கிறவன் எல்லாம் முட்டா பயலுகன்னு முடிவே பண்ணிட்டாங்களா..ஆனாலும் என்னங்க பண்ணுறது படித்துட்டு தான் இருக்கேன் ;-)

VIKNESHWARAN சொன்னது…

//:)
என்னமோ நடக்குது...//

ரிப்பீட்டுகிறேன்...

Anu_ashok சொன்னது…

ரொம்ப தான் தின்க் பண்றிங்க.......................

கோவி.கண்ணன் சொன்னது…

டி.பி.ஆர் has left a new comment on your post "பாமகவுடன் கைகோர்ப்பு ? தினமலரின் 'பத்ம' வியூகம் !":

இந்த முறை யாருடனும் கூட்டு வைக்காமல் பா.ம.க. இப்போதுள்ள அதே அளவு இடங்களை பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பிடித்து காட்டட்டும் அவருக்கு செல்வாக்கு உண்டு என்பதை நம்புவோம். அதன் பிறகு அவர் யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேர்ந்து 'அனுபவித்து'கொள்ளட்டும்

********

தவறுதலாக விசை அழுத்தப்பட்டு 'Reject' ஆகிவிட்டது. அதனால் இப்படி எடுத்து ஒட்டுகிறேன்

ஜோசப் ஐயா...பொருத்தருள்க !
:)

SanJai சொன்னது…

இந்த கூட்டணியவது எது வரை என்று முன் கூட்டியே பெரிய அய்யா அறிவிப்பாரா? :)

SanJai சொன்னது…

//மோகன் கந்தசாமி said...

///தினமலரின் வாசம் தற்போது பாமக பக்கம் அடிக்கிறது.///
வாசம் வீசும். துர்நாற்றம் அடிக்கும். தினமலர் துர்நாற்றமா? காலையில் வெளி வருகிறது என்பதற்காக தினமலரை நீங்கள் இப்படியெல்லாம் சொல்லக்கூடாது.//

அடப்பாவிகளா :P

டி.பி.ஆர் சொன்னது…

தவறுதலாக விசை அழுத்தப்பட்டு 'Reject' ஆகிவிட்டது. அதனால் இப்படி எடுத்து ஒட்டுகிறேன்//

பரவாயில்லீங்க. மட்டுறுத்தல்ல இதுவும் ஒரு தொல்லைதானே:-))

SanJai சொன்னது…

//இந்த முறை யாருடனும் கூட்டு வைக்காமல் பா.ம.க. இப்போதுள்ள அதே அளவு இடங்களை பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பிடித்து காட்டட்டும் அவருக்கு செல்வாக்கு உண்டு என்பதை நம்புவோம். அதன் பிறகு அவர் யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேர்ந்து 'அனுபவித்து'கொள்ளட்டும்//

நம்ம தோழர். கோ.க( மணி அல்ல:P ) எதோ தவறுதலாக விசையை அழுத்தின மாதிரி தினமலர் எதோ தவறுதலா அவரை அரசியல்வாதி இல்லை என்று பிரசுரித்துவிட்டது. அதை சீரியசாக எடுத்துக் கொண்டு நீங்கள் இவ்வளவு உணர்ச்சிவசப் படகூடாது. அவர் தான் உண்மையில் மிகச் சரியான அரசியல்வாதி. அவர் கூட்டே ஓட்டுக்கு தான். தனியாக கிடைத்தால் கூட்டு வைக்க அவர் என்ன முட்டாளா? :P

siva சொன்னது…

"எந்த அரசியல்வாதி தன் மனைவி, மகன், மகளை அரசியலுக்கு இழுக்கவில்லை."

:-))
in this list your forgot Grand childs

Now Azhakiri daughter Kazhailvil come forward Cuddalore women's meeting.

puduvai siva

ARUVAI BASKAR சொன்னது…

கிரி said //ஏங்க.. இவங்களுக்கு வேணும்னா ஒரு மாதிரியும் அதே ஆளு வேண்டாம்னா ஒரு மாதிரி எழுதுறதும் ...படிக்கிறவன் எல்லாம் முட்டா பயலுகன்னு முடிவே பண்ணிட்டாங்களா..ஆனாலும் என்னங்க பண்ணுறது படித்துட்டு தான் இருக்கேன் ;-)//
ரிப்பிட்டு
ரிப்பிட்டு

உடன்பிறப்பு சொன்னது…

//பாடிகாட் முனிஸ்வரா எல்லாம் உனக்கு(ம்) தான் தெரியும். முனிஸ்வரனின் தீவிர பக்தர்கள் கூட இனி மருத்துவர் ஐயாவின் புகழ்பாடுவார்கள்//

அப்போ தே.மு.தி.க. ஜால்ரா இனி குறையும் என்று எதிர்பார்க்கலாம்

மங்களூர் சிவா சொன்னது…

:)

(ஜெகதீசன் சாப்ட்வேர்மூலம் போடப்பட்ட பின்னூட்டம்)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்