பின்பற்றுபவர்கள்

8 ஜூன், 2008

சிங்கையில் மாபெரும் வலைப் பதிவாளர்கள் சந்திப்பு !

சிங்கையில் 20 பதிவர்களுக்கும் மேல் இருக்கிறார்கள். புதிதாக கிரி மற்றும் பலர் எழுதுகிறார்கள். எனது சென்னை சந்திப்புப் பற்றி எழுதிய போது சிங்கையில் பதிவர் சந்திப்பு நடத்துவது குறித்து பதிவர் கிரி ஆர்வமாக பின்னூட்டி இருந்தார். பொட்டீக்கடை சத்தியா வருகைக்குப் பிறகு சிங்கையில் பெரிதாக எதுவும் சந்திப்பு நடக்கவில்லை.

சிங்கையில் பிரபலமாக எழுதிவரும் பதிவர்கள் பாரி.அரசு மற்றும் ஜெகதீசன். ஜெகதீசன் பிரபலமாக எழுதவில்லை, என்போன்ற (ஹிஹி கண்டுக்காதிங்க) பிரபலங்களுக்கு பின்னூட்டமிடுவார். நண்பர் வடுவூர் குமார் பணி மாற்றம் காரணமாக விரைவில் தற்காலிகமாக சிங்கையை காலி செய்ய இருக்கிறார். அவரும் கலந்து கொள்கிறார்.

இடம் : ECP BEACH ( Behind Marine COVE), NEAR KOMALAS ( போண்டாவுக்காக)

நாள் : சனிக்கிழமை, 14 ஜூன் 2008

நேரம் : மாலை 5:30 மணி முதல்.... உடனே போகனும் வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு கிளம்பும் வரை

பேருந்து எண் : Service number 401 - From Bedok MRT (EW5)

சந்திப்பில் பேசு பொருள் : கருத்து உரிமையுடன் யாரையும் காயப்படுத்தாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் கதைக்கலாம் மற்றும் மொக்கை.

கலந்து கொள்ளும் அன்பர்கள் பின்னூட்டமிடவும், மேலும் சந்திப்பு குறித்து ஆலோசனை வழங்க
தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்

+65 9876 7586 (கோவி.கண்ணன்)
+65 9002 6527 (ஜெகதீசன்)

இந்த அறிவிப்பின் மூலம் சிங்கை பதிவர்கள், வலைபதிவு வாசகர்கள், பார்வையாளர்கள் அனைவரையும் ஒன்றுசேர, ஒன்றாக

அன்புடன் அழைப்பது.

கோவி.கண்ணன்
வடுவூர் குமார்
பாரி.அரசு
ஜெகதீசன்

அனைவரும் வாருங்கள் ! அனுமதி இலவசம் மற்றும் போண்டா இலவசம்.... :)))

பின்குறிப்பு : சிங்கையில் எங்கே எப்போது மழை பெய்யும் என்று தெரியாது...வரும் போது மறக்கமல் குடையை எடுத்துவரவும். அதுமட்டுமல்ல.... சந்திப்பில் கலந்து கொள்ள இருக்கும் துர்காவின் வீணை இசைமழையில் நனையாமலும் இருக்க வேண்டுமே

38 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

ஓ... துர்க்கா வேற வராங்களா...
அப்ப நான் கட்டாயம் வரேன்!!!
:))

ஜெகதீசன் சொன்னது…

அனைவரும் தவறாமல் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்!!!!
:)

ஜெகதீசன் சொன்னது…

பதிவுலகின் புதிய சுனாமி(பதிவு/ பின்னூட்டம் அனைத்திலும்) நிஜமா நல்லவனும் கட்டாயம் வருவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
அவரைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் பதிவர் அனைவரும் கட்டாயம் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்...
:))

டொன் லீ சொன்னது…

அடடா இத்தன பேர் இருக்கீங்களா..! நல்லது..! பார்க்கலாம்

முகவை மைந்தன் சொன்னது…

உள்ளேன் ஐயா!!

உற்சாகமாய் இருக்கிறது. முன்னெடுத்தமைக்கு நன்றி. கலந்து கொள்ள்ள்ள்கிறேஏஏஏஏஏஏஏஏஏஏன்!

முரளிகண்ணன் சொன்னது…

டிபிசிடி சிங்கை பதிவர் இல்லையா? சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

துளசி கோபால் சொன்னது…

கோபால் அன்னிக்கு அங்கே இருப்பார். ஆனால் 7.45 க்கு ஃப்ளைட் பிடிக்கணும்.

நேரம் இருந்தால் வரச்சொல்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
ஓ... துர்க்கா வேற வராங்களா...
அப்ப நான் கட்டாயம் வரேன்!!!
:))

11:33 AM, June 08, 2008
//

ஜெகதீசன்,

துர்கா வந்தான் வருவிங்களா ? என்னையெல்லாம் பார்த்தால் பதிவர் போல் தெரியவில்லையா ? நீங்கள் வந்தால் தான் நானும் வருவேன் என்று துர்காவும் சொல்லுது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அனைவரும் தவறாமல் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்!!!!
:)
//

அவ்வண்ணமே நானும் கோருகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
பதிவுலகின் புதிய சுனாமி(பதிவு/ பின்னூட்டம் அனைத்திலும்) நிஜமா நல்லவனும் கட்டாயம் வருவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
அவரைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் பதிவர் அனைவரும் கட்டாயம் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்...
:))
//

நானும் ஆவலோடு இருக்கிறேன். இலைக்காரர் கலந்து கொள்வாரா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//டொன் லீ said...
அடடா இத்தன பேர் இருக்கீங்களா..! நல்லது..! பார்க்கலாம்

11:42 AM, June 08, 2008
//

வாங்க சார்... வாங்க...

கோவி.கண்ணன் சொன்னது…

// முகவை மைந்தன் said...
உள்ளேன் ஐயா!!

உற்சாகமாய் இருக்கிறது. முன்னெடுத்தமைக்கு நன்றி. கலந்து கொள்ள்ள்ள்கிறேஏஏஏஏஏஏஏஏஏஏன்!
//

நீண்ட நாட்களாய் உங்களையும் காண ஆவல். தவறாது கலந்து கொள்ளுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
டிபிசிடி சிங்கை பதிவர் இல்லையா? சந்திப்புக்கு வாழ்த்துக்கள்
//

முரளிகண்ணன் சார்,

டிபிசிடி மலேசிய பதிவர்...தற்போதைக்கு மதுரைப் பதிவர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
கோபால் அன்னிக்கு அங்கே இருப்பார். ஆனால் 7.45 க்கு ஃப்ளைட் பிடிக்கணும்.

நேரம் இருந்தால் வரச்சொல்றேன்.
//

துளசி அம்மா,

அங்கிருந்து விமானநிலையம் செல்ல 10 நிமிடம் தான். கோபால் ஐயாவை வரச் சொல்லுங்க...நான் டாக்ஸியில் ஏற்றி அனுப்பி வைக்கிறேன். அங்கிருந்து 6.45க்கு விமான நிலையம் சென்றால் கூட சரியாக இருக்கும்.

ஜெகதீசன் சொன்னது…

//
இடம் : ECP BEACH ( Behind Marine COVE), NEAR KOMALAS ( போண்டாவுக்காக)
//
சென்னை சந்திப்புக்குப் பிறகு உங்களிடம் பெரிய மாற்றங்கள் தெரியுது... :P
போண்டாவின் தீவிர எதிர்ப்பாளரான நீங்க.. இப்ப போண்டாவுக்காக சந்திப்பை கோமலாஸ் பக்கத்துல வைக்கிறீங்க....
ம்ம்ம்ம்... எதோ நடக்குது...
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...

சென்னை சந்திப்புக்குப் பிறகு உங்களிடம் பெரிய மாற்றங்கள் தெரியுது... :P
போண்டாவின் தீவிர எதிர்ப்பாளரான நீங்க.. இப்ப போண்டாவுக்காக சந்திப்பை கோமலாஸ் பக்கத்துல வைக்கிறீங்க....
ம்ம்ம்ம்... எதோ நடக்குது...
:))
//

யோவ்,

நான் எப்போ நான் போண்டாவை வெறுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் ? போண்டா வடை பஜ்ஜி எல்லாமே எண்ணையில் செய்வதுதான்யா...அளவுக்கு மிஞ்சினால் அத்தனையும் நஞ்சு. எதாக இருந்தாலும் கையை சுட்டுக்காமல் பதமாக இருந்தால் சாப்பிடலாம்.

வடுவூர் குமார் சொன்னது…

கலக்கிடுவோம்.

திகழ்மிளிர் சொன்னது…

வாழ்த்துகள்

ஜோதிபாரதி சொன்னது…

சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள். தற்போது சிங்கை வந்துள்ளேன். (கத்தரி வெயிலை கத்தரித்துக்கொண்டு)கூடுமானவரை கலந்துகொள்ள முயற்சி செய்கிறேன்(பார்வையாளராக) பதிவுலக ஜாம்பவான்களின் முன்னிலையில்... எளிய வாசனாக. போண்டா வேண்டா என்று சொல்வோரும் உண்டோ? மிளகு போட்டால் நன்றாக(காரமாக) இருக்கும்.
அன்புடன்,
ஜோதிபாரதி.

கிரி சொன்னது…

கோவி கண்ணன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன். நீங்க இவ்வளவு நல்லவருன்னு தெரியாம போச்சே ;-)) இப்படி ஒரு பதிவரின் வேண்டுகோளை (தொல்லை தாங்காமல்) ஏற்று என்னை புல்லரிக்க வைத்துட்டீங்க (நல்ல வேலை சிங்கையில் ஆடு மாடு இல்லை சாப்பிடுறதுக்கு :D). இது இவ்வளோ சீக்கிரம் நடக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை.

//நேரம் : மாலை 5:30 மணி முதல்.... உடனே போகனும் வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு கிளம்பும் வரை//

இவன் எப்ப கிளம்புவான்னு திட்டாம இருந்தா சரி :-)))

//சந்திப்பில் பேசு பொருள் : கருத்து உரிமையுடன் யாரையும் காயப்படுத்தாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் கதைக்கலாம்//

அய்யயோ இப்படி கூறி பீதிய கிளப்புறீங்களே..யப்பா என் மீது எதாவது காண்டு இருந்தா..நான் ஒரு போண்டா வேணா வாங்கி கொடுத்துடுறேன் :-) (நண்பர் கோவி கண்ணன் செலவுல) வேற எதுவும் பண்ணிடாதீங்க

// மற்றும் மொக்கை//

இத சொன்னீங்களே ...அது ...

//போண்டா இலவசம்.... :)))//

சாதா போடாவா முட்டை போண்டாவா :-)))) நான் கூட டைகர் சமாச்சாரம் எதுவும் கிடைக்குமோ என்று நினைத்தேன் ..பயப்படாதீங்க சும்மா டமாசுக்கு :-)

//சிங்கையில் எங்கே எப்போது மழை பெய்யும் என்று தெரியாது//

ஆமாங்க ரெண்டு நாலு சாத்திட்டு இருக்கு. மேகம் கொட்டட்டும்! ஆட்டம் உண்டு னு நாம பாடிக்கலாம்.

அப்புறம் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இக்பால் சொன்னது…

பதிவர் ஜாம்பாவன்களை காண தங்களின் வாசகனாகிய நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
கவுன்ட் டௌன் ஆரம்பம்
8640m 40sec.
.
8640m 38sec
.
8640m 36sec

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
கலக்கிடுவோம்.

2:06 PM, June 08, 2008
//

குமார்,

காக்டெய்ல் பார்டி கொடுக்கப் போறிங்களா ? அப்ப கலக்கிடுவோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ்மிளிர் said...
வாழ்த்துகள்

2:46 PM, June 08, 2008
//

நன்றி !

மாதங்கி சொன்னது…

இப்படி ஒன்று இருந்தால் நிச்சயம் போகவேண்டும் என்று நினைத்ததுண்டு!

இதே நாளில் ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ள வேண்டியுள்ளது -

முயற்சி செய்கிறேன்

SP.VR. SUBBIAH சொன்னது…

இந்த சந்திப்பிலாவது நல்ல வெளிச்சத்தில் பதிவர்களைப் படம் எடுத்து, பெயருடன் பதிவிடுங்கள். அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள். தற்போது சிங்கை வந்துள்ளேன். (கத்தரி வெயிலை கத்தரித்துக்கொண்டு)கூடுமானவரை கலந்துகொள்ள முயற்சி செய்கிறேன்(பார்வையாளராக) பதிவுலக ஜாம்பவான்களின் முன்னிலையில்... எளிய வாசனாக. போண்டா வேண்டா என்று சொல்வோரும் உண்டோ? மிளகு போட்டால் நன்றாக(காரமாக) இருக்கும்.
அன்புடன்,
ஜோதிபாரதி.

3:21 PM, June 08, 2008
//

ஜோதிபாரதி,

விடுமுறையை முடித்துவிட்டு உற்சாகமாக இருக்கிறீர்கள், வாருங்கள் நாம எல்லோரும் சேர்ந்து சந்திப்பதுதான்...ஜாம்பவான்கள் யாரும் வரமாட்டார்கள். :) அப்படி யாரும் இருக்கிறார்களா ? எனக்கு தெரிந்து சிங்கையில் ஜாம்பவான்கள் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// கிரி said...
கோவி கண்ணன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன். நீங்க இவ்வளவு நல்லவருன்னு தெரியாம போச்சே ;-)) இப்படி ஒரு பதிவரின் வேண்டுகோளை (தொல்லை தாங்காமல்) ஏற்று என்னை புல்லரிக்க வைத்துட்டீங்க (நல்ல வேலை சிங்கையில் ஆடு மாடு இல்லை சாப்பிடுறதுக்கு :D). இது இவ்வளோ சீக்கிரம் நடக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை.

//நேரம் : மாலை 5:30 மணி முதல்.... உடனே போகனும் வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு கிளம்பும் வரை//

இவன் எப்ப கிளம்புவான்னு திட்டாம இருந்தா சரி :-)))

//சந்திப்பில் பேசு பொருள் : கருத்து உரிமையுடன் யாரையும் காயப்படுத்தாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் கதைக்கலாம்//

அய்யயோ இப்படி கூறி பீதிய கிளப்புறீங்களே..யப்பா என் மீது எதாவது காண்டு இருந்தா..நான் ஒரு போண்டா வேணா வாங்கி கொடுத்துடுறேன் :-) (நண்பர் கோவி கண்ணன் செலவுல) வேற எதுவும் பண்ணிடாதீங்க

// மற்றும் மொக்கை//

இத சொன்னீங்களே ...அது ...

//போண்டா இலவசம்.... :)))//

சாதா போடாவா முட்டை போண்டாவா :-)))) நான் கூட டைகர் சமாச்சாரம் எதுவும் கிடைக்குமோ என்று நினைத்தேன் ..பயப்படாதீங்க சும்மா டமாசுக்கு :-)

//சிங்கையில் எங்கே எப்போது மழை பெய்யும் என்று தெரியாது//

ஆமாங்க ரெண்டு நாலு சாத்திட்டு இருக்கு. மேகம் கொட்டட்டும்! ஆட்டம் உண்டு னு நாம பாடிக்கலாம்.

அப்புறம் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

3:45 PM, June 08, 2008
//

கிரி,

நீண்டநாட்களாகவே சந்திப்பு நடத்தவேண்டும் என்று யாரவது 3 பேர் கூடினால் பேசுவோம். நீங்கள் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்து இருக்கிறீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இக்பால் said...
பதிவர் ஜாம்பாவன்களை காண தங்களின் வாசகனாகிய நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
கவுன்ட் டௌன் ஆரம்பம்
8640m 40sec.
.
8640m 38sec
.
8640m 36sec

//

இக்பால் சார்,

கவுண்டவுன் போட்டு படு உற்சாக மாக இருக்கிறீர்கள். நாம எல்லோரும் ஜாம்பவான்கள் தான் :) ஒன்று கூடுவோம்

கோவி.கண்ணன் சொன்னது…

//மாதங்கி said...
இப்படி ஒன்று இருந்தால் நிச்சயம் போகவேண்டும் என்று நினைத்ததுண்டு!

இதே நாளில் ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ள வேண்டியுள்ளது -

முயற்சி செய்கிறேன்

9:37 AM, June 09, 2008
//

மாதங்கி அவர்களே,

நீண்ட நாளாக சிங்கை வாழ் பதிவர்களை சந்திக்க எனக்கும் ஆவல் தான்

வாருங்கள்...முடிந்த அளவு முயற்சி செய்துவாருங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
இந்த சந்திப்பிலாவது நல்ல வெளிச்சத்தில் பதிவர்களைப் படம் எடுத்து, பெயருடன் பதிவிடுங்கள். அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்!

9:56 AM, June 09, 2008
//

வாத்தியார் ஐயா,

பெயருடன் புகைப்படம் வெளிவருவது பதிவர்களின் விருப்பதைப் பொருத்தது. வேண்டாம் என்று சொல்லவில்லை என்றால் புகைப்படத்துடன் பெயர் வெளியிட தடையில்லை

நையாண்டி நைனா சொன்னது…

/*அனைவரும் வாருங்கள் ! அனுமதி இலவசம் மற்றும் போண்டா இலவசம்.... :)))*/
ஹி ..ஹி...ஹி... அப்படியே கொஞ்சம் T.A & D.A எல்லாம் கொடுத்தா.... நானும் கொஞ்சம் ஓசியிலே கும்முவேன் என்று தாழ்மையுடன் கூறி கொள்கிறேன்.

தாயின் மடியில் பிறந்து,
செவிலித்தாயின் மடியில் தவழ்ந்து...
தமிழாய் வளரும்...
தமிழை வளர்க்கும்.
எம் சகோதர சகோதரிகளே....
உங்கள் சந்திப்பு நேர்த்தியுடன் நடக்க
எனது வாழ்த்துக்கள்.......
==================================================

/*சந்திப்பில் பேசு பொருள் : கருத்து உரிமையுடன் யாரையும் காயப்படுத்தாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் கதைக்கலாம் மற்றும் மொக்கை.*/

பொங்கு பீர் வாழ்க்கை யஞ்சிறை தம்பி,
நாமும் தப்பாது குடிப்பது மொழிமோ,
பழகிய, செழிக்க நட்பின் மைய்யலில்
செறிந்தவை, சுண்ட கஞ்சியின்
போதையும் உளவோ, நீ அறியும் பீரே.

இதனை பற்றி விவாதித்து கூறினால் நன்றாய் இருக்கும்.

பின் குறிப்பு - தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்க, இது நகைச்சுவைக்கே அன்றி வேறில்லை..

(புலவர்களுக்கு இடையில் பட்டி தேவைதான்,
ஆனால் அது சண்டை யாக மாறிவிட கூடாது... - திருவிளையாடல் வசனம்)

மோகன் கந்தசாமி சொன்னது…

///+65 9876 7586 (கோவி.கண்ணன்)///

திரு கோவி.கண்ணன்,
உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள தகுந்த நேரம் எது (சிங்கை நேரம்)!,

கோவி.கண்ணன் சொன்னது…

திரு நையாண்டி நைனா,

நன்றி,

போண்டா என்றால் பரவாயில்லை கையை கடிக்காது. TA DA அப்பறம் போண்டி ஆகவேண்டியதுதான்

அருமையான வாழ்த்துக்கு நன்றி.

கைவசம் நிறைய உல்டா பாடல்கள் வைத்திருப்பீர்கள் போல இருக்கே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

மோகன் கந்தசாமி ஐயா,

GMT + 8 Hours சிங்கை நேரம்

அதன் படி இரவு காலை 8 லிருந்து இரவு 11 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

பரிசல்காரன் சொன்னது…

வாழ்த்துக்கள்! (வெறும் போண்டா மட்டுமா?)

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
வாழ்த்துக்கள்! (வெறும் போண்டா மட்டுமா?)

4:33 PM, June 09, 2008
//

பரிசல் ஐயா,
தேங்காய்ச் சட்டினி, காரச்சட்டினி கிடைத்தால் அதுவும் கிடைக்கும்.
:)

மங்களூர் சிவா சொன்னது…

/
சிங்கையில் எங்கே எப்போது மழை பெய்யும் என்று தெரியாது...வரும் போது மறக்கமல் குடையை எடுத்துவரவும். அதுமட்டுமல்ல.... சந்திப்பில் கலந்து கொள்ள இருக்கும் துர்காவின் வீணை இசைமழையில் நனையாமலும் இருக்க வேண்டுமே
/

ஆமாம் சாதாரண மழையில் நனைந்தால் பிழைக்க முடியும் ஒருவேளை தர்க்காவின் வீணை மழையில் நனைந்தால் அம்புட்டுதேன்
:(

அத விடியோல பாத்ததுக்கே ஒருவாரம் ஜன்னில படுத்திருந்த

மங்களூர் சிவா

கோவி.கண்ணன் சொன்னது…

சிவா,

அந்த வீணையை ஏலம் விடப் போகுதாம் துர்கா, எதாவது மழையில்லா ஊருக்கு உங்க தயவால் மழைவரட்டம், ஏலம் எடுத்து கொடுக்கிறீர்களா ?
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்