பின்பற்றுபவர்கள்

17 ஜூன், 2008

தசவதாரம் - கிளம்பிய புதிய சர்ச்சைகள் !

பொழுது போவலையான்னு கேட்காதிங்க... 'காற்றுள்ள போதேன்னு' ஒரு பலே பழமொழி இருக்கு ? அது மட்டுமா ? 'ஊரோடு ஒத்துப்போ....' இன்னும் இன்னும் நிறைய இருக்கு....வேறு எதை எழுதினாலும் இன்னும் ஒருவாரத்துக்கு யாரும் படிக்கப்போவதில்லை. தசவதராத்துக்கு
சரியான போட்டி கொடுத்தது 'ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகள் தான். தசவதாரத்திற்கு போட்டியாக ஹிட் ஆனது ஜ்யோவ்ராம் சுந்தரும், சுகுணா திவாகரும் தான். 'இவ்வளவு நாளாக எழுதுகிறேன்...என் பதிவு சூடாக மாட்டேன்குது' அப்படி யாருக்கும் குறை இருந்தால் இந்த வாரத்திற்குள் ஒரு தசவதார பதிவைப் போட்டுவிட்டால் அதன் பிறகு குறை ஒன்றும் இல்லை. - இதுவரைக்கும் குசும்பன் மேட்டர் தான்... தலைப்பத் தொட வேண்டுமே,

"என்ன இருந்தாலும் கமல் பிரம்மஹத்தி தோஷம் என்று மனுஸ்மிருதி பயமுறுத்தல்களையும், அண்டப்புளுகுகளையும் 'நம்பி' பாத்திரத்தில் குலோத்துங்க அரசனுக்கு சாபமாக பேசி இருக்கக் கூடாது..." ஒரு முற்போக்கு ஆத்திக பதிவர் (வீஎஸ்கே அல்ல) அங்கலாய்த்தார்

"சாமி....அது சோழர் காலத்தில் நடந்த கதையாக காட்டுறாங்க...அந்த கால பார்பனர்கள் அதைச் சொல்லித்தானே பயமுறுத்தினார்கள்...(அந்த) காலத்திற்கு பொருத்தமான வசனம் தான்... கமல் தவறு செய்யவில்லை" என்றேன்

"கமல் நாத்திக வேடம் போட்டு ஆத்திகம் வளர்க்கிறாரா ?" - இயற்கை நேசி சந்தேகமாக கேட்டார்

"ஒரு சிறந்த கலைஞன் ஒரு பாத்திரமாக மாறிவிட்டால் அந்த பாத்திரத்தின் தன்மையைத்தான் வெளிப்படுத்த முயற்சிப்பான்...அதில் தனது சொந்த கொள்கைகள்...விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை நுழைக்கமாட்டான்..... ஷன்முகி மாமியாகட்டும், ஹேராம் ஐயராகட்டும்...அதில் அந்த பாத்திரத்தை கண் முன் நிறுத்தி இருக்கிறார் கமல்...அதிலெல்லாம் நாத்திக பிரச்சாரம் செய்தால் படத்தின் கதையோடு ஒட்டி இருக்கவே இருக்காது......தசவதாரத்தில் பார்பனர்கள் பற்றி காட்டி இருக்கும் காட்சியும்...பார்பனராக நடித்திருப்பதை வைத்தும் கமல் ஆத்திகர் ஆகிவிட்டார் என்று அள்ளிவிடாதிங்க..... சிறந்த கலைஞனை கொச்சப்படுத்தாதிங்கைய்யா" என்றேன்

"பூவராகவன் பாத்திரத்தின் உடல்மொழி வசனம் சரியாக இருந்தாலும்...அந்த பாத்திரத்தில் கமல் நடித்ததால் பாத்திரம் செயற்கையாக இருந்தது......."

"என்னிடம் பதிலில்லை...நானும் கூட அப்படித்தான் நினைத்தேன்....."

"பலராம் நாயுடு தெலுங்கு டப்பிங்கில் பலராம் நாடாராமே ?"

"இதெல்லாம் வியாபார உத்திங்கோ......தெலுங்கிலும் நாயுடு என்றால் திருப்பதிக்கே லட்டு கொடுப்பது போல இருக்காதா ?"

"சோழர்கால வைணவர்கள் வதை காட்சியையும்...கடைசியில் மூழ்கிய நாராயண சிலை வெளியே வந்ததைக் காட்டி என்ன சொல்ல வர்றாங்க ?"

"எனக்கும் புரியலைங்க....வைணவ பிரச்சாரம் மாதிரி இருக்கு....தேவை இல்லாமல் படம் முழுவதும் வைணவ பெயர்கள்..... அமரர் சுஜாதா 'ரங்கராஜன் ஆரம்பத்தில் இதை நுழைத்திருக்கலாம் என்று பேச்சு அடிபடுது...நமக்கு தெரிவது கமலுக்கு தெரியாமல் போய் இருக்குமா ? இருவகை காலங்களை படத்தில் தொடுவதால் மாறுபட்ட முயற்சி என்று நினைத்து இருப்பார் போல"

"கிரிக்கெட்டில் ஜெயிக்கும் பாகிஸ்தான் வீரர்கள் உடனே தரையில் விழுந்து நமாஸ் செய்வதும் ... அதைப் பார்த்து நாம் வெறுப்படைவது போல...நாகேஷை வைத்து.....இஸ்லாமியர்களை சுனாமி தாக்கமல் விட்டதையும் ... அது அல்லாவின் கருணை என்று சொல்லச் சொல்வதும் ....நெருடலாகவே இருக்கு ... செத்துப்போன மற்ற மதத்துக்காரங்க பாவம் செய்தவர்களா ? இஸ்லாமியர்கள் மீது ஏன் வெறுப்பை வரவழைப்பது போல் அப்படி ஒரு காட்சியை வைக்கனும் ?"

"தப்புதேங்........அப்படி செய்திருக்கக் கூடாது......."

"படத்துல கே எஸ் ரவிகுமார் டச்சே இல்லையே ?"

"இங்கிதம் தெரியாம பேசாதிங்க...சிங்கீதம் சீனிவாசராவுக்கு வயசாகிடுச்சு போல இருக்கு...இனி ரவிதான் கமலுக்கு ஆஸ்தான இயக்குனர்"

*********

செலவே இல்லாமல் போஸ்டரில் ஐந்து வேசமே போட்டு இருந்தாலும் கேப்டன் விஜயகாந்துக்கு அவை பொருந்தியது போல் 10 வேசம் போட்ட கமலுக்கு போட்ட வேசம் உண்மையிலேயே பொருத்தமாக இருந்ததா ? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் :)))

6 கருத்துகள்:

SurveySan சொன்னது…

//எதை எழுதினாலும் இன்னும் ஒருவாரத்துக்கு யாரும் படிக்கப்போவதில்லை//

:) மெத்தச் சரி.
இன்னும் போணியாகலை.
கடைக்கு வந்துட்டுப் போங்க.
புது சரக்கு போட்டிருக்கேன். ஆனா,, ஈஈஈஈ.

(டிபிசிடியார் எங்க போயிட்டாரு? தசாவதாரத்தில் நுண்ணரசியல் ஆராய்ச்சியா? :) )

இக்பால் சொன்னது…

பாம்பு திங்கற ஊருக்கு போனா நடுக்கன்டம் எனக்குன்னு சொல்லனும்னு சொல்வாங்க. அது மாதிரி நீங்க 10அவதாரம் பத்தி எழுதி கடமையை முடிச்சிட்டிங்க.

தசம் = பத்து
அவ = ?
தாரம் = மனைவி

TBCD சொன்னது…

nunaarichi padam varathukku munnadiyey arambichachungannov... :)

I WILL BE BACK :P

///
SurveySan said...

(டிபிசிடியார் எங்க போயிட்டாரு? தசாவதாரத்தில் நுண்ணரசியல் ஆராய்ச்சியா? :) )
///

கீ - வென் சொன்னது…

//செலவே இல்லாமல் போஸ்டரில் ஐந்து வேசமே போட்டு இருந்தாலும் கேப்டன் விஜயகாந்துக்கு அவை பொருந்தியது போல் 10 வேசம் போட்ட கமலுக்கு போட்ட வேசம் உண்மையிலேயே பொருத்தமாக இருந்ததா ? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் :)))//

கோவி !!

இது என்ன புது மொக்கையா இருக்கு ? கேப்டனை தேசத் தியாகிகள் கெட்-அப் ல் பார்ப்பது..ஐயோ..தாங்க முடியலடா சாமி..!! கடவுளே !! என்னைக்கி தான் நம்ம ஜனங்க திருந்துவாங்களோ ??

Please visit my blog http://keysven.blogspot.com/

பி.கு : அடுத்த சிங்கை பதிவர் சந்திப்புக்கு வர முயற்ச்சி செய்கிறேன்..(ஆஸ்திரேலியா விலிருந்து..)

Great சொன்னது…

///
SurveySan said...

(டிபிசிடியார் எங்க போயிட்டாரு? தசாவதாரத்தில் நுண்ணரசியல் ஆராய்ச்சியா? :) )
///


இது உலக தர சீசன் என்பதால் டி.பி.சி.டி உலக தரத்திற்கு ஒரு பதிவு எழுதிட்டு இருக்காரா? உலக தரம்னாவே தாமதமாக தானே வரும்.
:-)

Vijay சொன்னது…

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்