பின்பற்றுபவர்கள்

25 ஜூன், 2008

விடுபட்டவை - இட்லி வடைக்குக் கொஞ்சம் சட்னி !

பெரியார் படம் வந்து ஒரு ஆண்டுக் கூட ஆகவில்லை. அதற்குள் மற்றுமொரு நாத்திக நச்சுக் கருத்துப்படம் வந்து இந்துக்களின் மனதை புண்படுத்தி வருகிறது. திருவல்லிக்கேனி பெருமாளை தரிசித்துவிட்டு, துளசி தீர்த்தம் குடித்துவிட்டு இந்த படத்தை பார்தத்தும் தான் தெரிந்தது, இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள், இந்து நம்பிக்கை எவ்வளவு கேவலமாக கிண்டலடிக்கப்பட்டு இருக்கிறது என்பதே. மேலும் தன்கையை வைத்தே கண்ணைக் குத்திக்கொள்ளச் செய்வது போலவே ஆத்திகர்களின் அறியாமையை பயன்படுத்தி நாத்திகம் வளர்க்கப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது 'அந்த' படம், அதற்கு கருணாநிதி, நாத்திகன் வீரமணி போன்றவர்களின் 'ஆசிர்வாதம்' வேறு. படத்தின் பேரைச் சொன்னாலே பதிவர்கள் அடிக்க வருவார்கள், எனவே விசயத்துக்கு நேராகாவே சென்றுவிடுகிறேன். இந்த படத்தை மூக்குக் கண்ணாடியின் இடுக்கு வழியாக உற்றுப்பார்த்த போது, ஆங்காங்கே அதிர்ச்சி அடைந்தேன்.

* இராமாயணம் பொம்பலாட்டக் காட்சியில் இராமர் படங்களை ஆத்திக சிறுவனை வைத்து எரிக்கவைத்து, இராமசாமி நாயகனின் சீடன் என்று காட்டிவிட்டார்

* இராமசாமி பெரியாரின் நினைவை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பதற்காவே பல'ராம் நாயுடு' என்று 'தெலுங்கு' பேசும் பாத்திரத்தை வைத்தார். அந்த பாத்திரத்தின் மூலம் இந்து தெய்வம் நம்பிக்கைகளை மட்டுமின்றி 'மடம்னா தப்பு நடக்காதா ?' என்று பெரியார் பாணியில் கேலி செய்தார்

* இந்து நம்பிக்கைக்கு எதிராக வயது வந்த பெண்ணை பெருமாள் சிலையை தொட வைத்து பெருமாளை நிந்தித்தார்

* இராம பக்தன் அனுமானை (சோதனை குரங்கு) முதல் காட்சியிலேயே கொன்று இந்துக்கள் மனதை புன்படுத்திவிட்டார்

* கிருஷ்ணபகவான் பருந்தாக வருவது போன்று காட்சி வைத்து அந்த பருந்து உயிருக்கு தப்பி ஓடுவது போன்று காட்சி வைத்து கடவுளுக்கு சக்தியே இல்லை என்று நாத்திக கருத்தை திணித்தார்

* பெருமாள் சிலையை இரயில் பெட்டி கழிவறைக்கு அருகில் எடுத்துச் சென்ற அவமானப்படுத்தினார்

* பெருமாள் சிலையை 'மண்ணுக்குள் புதைத்து' இறை நம்பிக்கைக்கு 'சமாதி' கட்டினார்

* பெருமாள் சிலை சுனாமியால் வெளியே கொண்டு வந்து காட்டியதன் மூலம் இயற்கைதான் சிலையைக் கூட காப்பாற்றுகிறது என்ற நாத்திக கருத்தை கடைசி காட்சியின் மூலம் வலிய திணித்தார்

* இந்துக்கள், கிறித்துவர்களை விட இஸ்லாமியர்கள் சுனாமி ஆபத்தில் இருந்து காப்பாற்றப்படுவதாகக் காட்டியதன் மூலம் இராமசாமி நாயகரைப் போலவே அப்பாவிகள் முஸ்லிம் மதம் மாறுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்

* பிராமணப் பெண் இராம சாமி நாயகரை 'நாத்திகன்' என்று கிண்டல் செய்வதாகக் காட்டியதன் மூலம் பார்பனர் அல்லாதவர்களுக்கு பார்பன வெறுப்பை ஏற்படுத்த முயன்று பார்பன துவேசம் நீர்த்துப் போகமல் இருக்க முயற்சி செய்திருக்கிறார்

* படத்தில் தென்கலை நாமம் போட்டுக் கொண்டு இராமனுஜம் நம்பி வருவதால், வடகலை ஐயங்கார் என்ற ஒரு பிரிவையே மறக்க வைக்க இரட்டடிப்பு சூழ்ச்சி செய்து இருக்கிறார்

* ஸ்ரீகிருஷ்ணரின் பத்து அவதாரங்களும் பத்து பாத்திரப் படைப்பின் மூலம் கிண்டல் அடிக்கப்பட்டு இருக்கிறது.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.... அதற்கு முன் தொலை நோக்கியை எடுத்துக் கொண்டு சென்று படத்தை 2 ஆவது தடவைப் பார்த்து சல்லடைப் போட வேண்டி இருக்கிறது.

மொத்ததில் நான் அறிந்தவகையில் இந்த படம் இந்து நம்பிக்கைகளுக்கு சமாதி கட்டுவதற்கு குழி தோண்டிய முயற்சி.

இந்துக்களே விழுமின் எழுமின் !

பின்குறிப்பு : இட்லிவடையின் பாடிகாட் முனீஸ்வரன் பதிவுக்கும் இந்த பதிவுக்கும் தொடர்பு இல்லை. ஐ மீன் இந்த பண்டம் அசல் நெய்யினால் செய்யப்பட்டது (அல்ல)

இது நகைச்சுவை நையாண்டி பதிவு என்றால் நம்பனும் !

38 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

பாலபாரதியைச் சொல்லணும்.

ஆளாளுக்கு இப்படி விடுபட்டுக்கிடக்கு..

பதிவு 'தசா' சம்பந்தமுன்னு கண்ணில் பட்டுச்சு.

நான் படம் பார்க்காதவரை இது சம்பந்தமுள்ள எதையும் படிக்க விருப்பமில்லை.

அப்புறம் பார்த்துக்கலாம்:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
பாலபாரதியைச் சொல்லணும்.

ஆளாளுக்கு இப்படி விடுபட்டுக்கிடக்கு..

பதிவு 'தசா' சம்பந்தமுன்னு கண்ணில் பட்டுச்சு.

நான் படம் பார்க்காதவரை இது சம்பந்தமுள்ள எதையும் படிக்க விருப்பமில்லை.

அப்புறம் பார்த்துக்கலாம்:-))))
//

துளசி அம்மா,

நீங்களும் படத்தின் பெயரை கவனமாக தவிர்த்து இருக்கிறீர்கள். :)

நீங்கள் படம் பார்த்த பிறகு விமர்சனம் ஒன்னும் கண்டிப்பாக வரும் என்று சொல்லுங்க. கோபால் ஐயா வெளிநாடு போகும் போது எங்காவது அந்த படம் பார்க்க நேரிட்டால், நீங்கள் அவரிடம் காதால் கேட்ட விமர்சனம் கூட எழுதலாம்.

keyven சொன்னது…

நீங்களுமா ?? எல்லோருக்கும் வேற வேலையே இல்லை போலிருக்கு.

தமிழ் ப்ளோக் களில் தசாவதாரத்தை என்னவோ Ph.D ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட மாதிரி ஒவ்வொரு வலை பதிவாளர்களும் அடிச்சிகுறீங்க.. ஜாதி, மத கருமாந்திரத்தை விட்டுவிட்டு அதை ஜஸ்ட் ஒரு சினிமா என்ற பொழுதுபோக்கு அம்சமாக என் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்..?? ரூம் போட்டு மண்டையை பிச்சி பிச்சி குழப்பிகிட்டு எழுதுறீங்களே ?? எப்படி ??

யார் கேட்டாங்க.. வடகலை நாமமா, தென்கலை நாமமா, எச்சைகலை நாமமா ன்னு ?? கடைசியில் பார்த்த ரசிகனுக்கு தானே பட்டை நாமம் ? கொரங்கு ஹனுமானாம் ??ஐயோ ஐயோ..!! போதும்யா !! தாங்க முடியல.. தயவு செய்து இத்தோட நிறுத்திக்குங்க.. மேலும் மேலும் செத்த கழுதைக்கு ஜாதகம் பாக்க வேண்டாம் .. படம் ரிலீஸ் ஆகி 2 வாரம் கிட்ட ஆயிட்டுது..

கோவி.கண்ணன் சொன்னது…

//keyven said...

10:05 AM, June 25, 2008
//

keyven ஐயா,

நீங்கள் விடுபட்டவையை மட்டும் படித்துவிட்டு கோபம் அடைந்திருக்கிறீர்கள். தொகுப்பை இன்னும் படிக்கவில்லை போலும்.
:) அதையும் 'அங்கு' சென்று படித்துட்டுவாங்கோ ! இது சுவைக்காகச் சேர்த்த சட்னி மட்டும்தான்.

SP.VR. SUBBIAH சொன்னது…

கோபியண்ணா - இன்னிக்கு வேறே நல்ல மேட்டர் எதுவும் கிடைக்கலியா - எழுதுறதுக்கு?

தமிழ்மணத்தில எத்தனை பதிவுடா சாமி?
Blood pressure ஐ ஏத்தி, சும்மா இருக்கிறவனையெல்லம் மருத்துவமனையில படுக்கவச்சிட்டுத்தான் விடுவீங்கபோல இருக்கு!

கடவுளே காப்பாத்து!
(உங்களுக்கும் சேர்த்துத்தான்)

keyven சொன்னது…

கோவி.. இட்லி வடையோட மொத்த மேட்டர் ஐயும் நேத்தே படிச்சிட்டேன்.. ஊசி போன இட்லி அப்படி தான் எழுதும்..வேஸ்ட் மேட்டர் அது.. ஒரு ஆள் ரூம் போட்டு எழுதினதில்ல அது.. சென்னை எக்மோர் நேரு ஸ்டேடியத்தை மொத்தமா வாடகைக்கு எடுத்து உக்கார்ந்து எழுதின உருப்படாத பதிவு..

அதுக்கு போயி மொக்கை மறுமொழி/மறுபதிவு போட்டு..ஐயோ..ஐயோ.. தாங்கலியே ??

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

இறுதிக் காட்சியில், கிருமியைக் கொல்ல சுனாமி பேரலை எழுந்துவருகிறது. கிருமியோடு சேர்த்து ஆயிரமாயிரம் மக்களையும் சுனாமி அழித்துப்போகிறது. அந்தச் சுனாமியால், 12ஆம் நூற்றாண்டில் கடலில் வீசப்பட்ட திருமாள் சிலை மீண்டும் கரைகாண்கிறது. எவராலும் அழிக்க முடியாத கிருமியைக்கூட அழித்துவிடலாம். ஆனால், கடவுளை அழிக்க முடியாது. கிருமியால் வந்த ஆபத்து முடிந்துவிட்டது. ஆனால், கடவுளால் இன்னும் ஆபத்துகள் தொடரவுள்ளன என்ற கருத்தை இக்காட்சிகள் சொல்கின்றன.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
கோபியண்ணா - இன்னிக்கு வேறே நல்ல மேட்டர் எதுவும் கிடைக்கலியா - எழுதுறதுக்கு?

தமிழ்மணத்தில எத்தனை பதிவுடா சாமி?
Blood pressure ஐ ஏத்தி, சும்மா இருக்கிறவனையெல்லம் மருத்துவமனையில படுக்கவச்சிட்டுத்தான் விடுவீங்கபோல இருக்கு!

கடவுளே காப்பாத்து!
(உங்களுக்கும் சேர்த்துத்தான்)
//

சுப்பையா ஐயா,

நகைச்சுவை நையாண்டி என்று வகைப்படுத்தி இருக்கிறேன். நகைச்சுவை ப்ளட் ப்ரசருக்கு அருமருந்தாயிற்றே.

கோவி.கண்ணன் சொன்னது…

//keyven said...
கோவி.. இட்லி வடையோட மொத்த மேட்டர் ஐயும் நேத்தே படிச்சிட்டேன்.. ஊசி போன இட்லி அப்படி தான் எழுதும்..வேஸ்ட் மேட்டர் அது.. ஒரு ஆள் ரூம் போட்டு எழுதினதில்ல அது.. சென்னை எக்மோர் நேரு ஸ்டேடியத்தை மொத்தமா வாடகைக்கு எடுத்து உக்கார்ந்து எழுதின உருப்படாத பதிவு..

அதுக்கு போயி மொக்கை மறுமொழி/மறுபதிவு போட்டு..ஐயோ..ஐயோ.. தாங்கலியே ??
//

கீவென்,

என்னங்க இப்படி சொல்லிட்டிங்க, எவ்வளவு ஆய்'ந்து எடுத்து எழுதி இருக்கிறார்கள். அந்த உழைப்பையாவது பாராட்ட மனமில்லாதா கல்நெஞ்சக்காரரா நீங்கள் ? என்னால முடிந்தது இராமனுக்கு அணில் உதவி செய்தது போல் சிலகுறிப்புகளைக் கொடுத்து உதவி இருக்கிறேன். இதைக் கூட பொருத்துக் கொள்ள முடியவில்லையா ? அய்யகோ...தமிழகம் நாத்திகர்களின் கையில் அகப்பட்டுக் கொண்டு விழிபிதுங்குகிறதே.

Kanchana Radhakrishnan சொன்னது…

கடைசி காட்சியில்(கடவுள்) இருந்தால் நல்லாயிருக்கும்னு சொல்றேன் என கமல் கூறுகிறார்.அப்போது நாத்திகம் பேசுபவர்கள் வாயை அடைக்கத்தான் இப்படி கமல் கூறிகிறார்.என்று கொள்ளலாமா?

Anu_ashok சொன்னது…

நான் படம் இன்னும் பார்க்கவில்லை.

Anu_ashok சொன்னது…

நான் படம் இன்னும் பார்க்கவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Kanchana Radhakrishnan said...
கடைசி காட்சியில்(கடவுள்) இருந்தால் நல்லாயிருக்கும்னு சொல்றேன் என கமல் கூறுகிறார்.அப்போது நாத்திகம் பேசுபவர்கள் வாயை அடைக்கத்தான் இப்படி கமல் கூறிகிறார்.என்று கொள்ளலாமா?
//

Kanchana Radhakrishnan,
காஃபியில் சர்கரை இருந்தால் சுவையாக இருக்கும் என்றால் காஃபியில் சர்கரையே இல்லை என்ற பொருள் தானே. கமல் தன் படத்தின் மூலம் நாத்திகத்தை விதைத்தார், கடவுளின் இருப்பை மறைத்தார் என்று சொல்வதற்கு இதைவிட வேறு உதாரணம் கூற முடியுமா ?
:)

Athisha சொன்னது…

என்னது தசாவதாரம் ரீலீஸ் ஆகிடுச்சா?????

:P

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//Kanchana Radhakrishnan said...
கடைசி காட்சியில்(கடவுள்) இருந்தால் நல்லாயிருக்கும்னு சொல்றேன் என கமல் கூறுகிறார்.அப்போது நாத்திகம் பேசுபவர்கள் வாயை அடைக்கத்தான் இப்படி கமல் கூறிகிறார்.என்று கொள்ளலாமா?//

இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான்....
இறைமைக்கு ஆத்திகம் நாத்திகம் என்ற பேதம் இல்லை என்பது என் வாதம்...

Kanchana Radhakrishnan சொன்னது…

அப்போது சர்க்கரை என்று ஒன்று இருக்கிறது..என்பது உண்மைதானே

கோவி.கண்ணன் சொன்னது…

//Kanchana Radhakrishnan said...
அப்போது சர்க்கரை என்று ஒன்று இருக்கிறது..என்பது உண்மைதானே

11:43 AM, June 25, 2008
//

வெறும் உதாரணத்துக்குச் சொன்னேன்
அதைப் பிடித்து தொங்குவது ஏன் ?

எதுவும் இல்லாத இடத்தை வெற்றிடம் என்று சொல்வது போன்றதுதான்.' எதுவுமே இல்லை என்று வெற்றிடம் இருக்கு என்கிறீர்கள்' என்பது போல் இருக்கிறது உங்கள் மறுகேள்வி.
:)

நான் இங்கு கடவுள் இருக்கிறா / இல்லையா என்றெல்லாம் சொல்லவில்லை. என்பதிவில் அப்படி ஒரு கருத்து எப்போதும் வைத்தது இல்லை.
கடவுளுக்கு கொடுக்கப்படும் விளக்கங்களை அப்படியே ஏற்றதும் இல்லை.

ஒன்று தெரியுமா ? கடவுள் இல்லை என்பவனும் இறக்கிறான். கடவுள் உண்டு என்பவனும் இறக்கிறான்

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
இறுதிக் காட்சியில், கிருமியைக் கொல்ல சுனாமி பேரலை எழுந்துவருகிறது. கிருமியோடு சேர்த்து ஆயிரமாயிரம் மக்களையும் சுனாமி அழித்துப்போகிறது. அந்தச் சுனாமியால், 12ஆம் நூற்றாண்டில் கடலில் வீசப்பட்ட திருமாள் சிலை மீண்டும் கரைகாண்கிறது. எவராலும் அழிக்க முடியாத கிருமியைக்கூட அழித்துவிடலாம். ஆனால், கடவுளை அழிக்க முடியாது. கிருமியால் வந்த ஆபத்து முடிந்துவிட்டது. ஆனால், கடவுளால் இன்னும் ஆபத்துகள் தொடரவுள்ளன என்ற கருத்தை இக்காட்சிகள் சொல்கின்றன.
//

விக்கி,

புதுவிளக்கமாக இருக்கிறது, சட்னியில் இதுவும் சேர்ந்து சுவை சேர்கிறது.
:)

சிலையை தூக்கிப் போட்டவன் நாத்திகன் அல்ல பிறகு ஏன் சுனாமி தொடர்பே இல்லாதவர்களை யெல்லாம் அழிக்கனும். இறை நம்பிக்கையை குழைக்கவே அந்த காட்சி வைக்கப்பட்டது.

:)

Kanchana Radhakrishnan சொன்னது…

கமல் முழு நாத்திகன் இல்லை என்பதே என் கருத்து.அதைத்தான் வலியுறுத்துகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//Kanchana Radhakrishnan said...
கமல் முழு நாத்திகன் இல்லை என்பதே என் கருத்து.அதைத்தான் வலியுறுத்துகிறேன்

11:58 AM, June 25, 2008
//

இருக்கலாம்... ஐ மீன் நீங்கள் சொல்வது படி ::)

ஆனாலும் திரு கி.வீரமணி ஆகியோர்களை அழைத்து வந்து காட்டி பாராட்டிப் பெற்று ஊடகங்களிலும் 'பகுத்தறிவு பிரச்சாரம்' எனச் சொல்லப்பட்ட போது அந்த செய்திகள் வந்திருக்கிறது. அதற்கு கமல் தரப்பில் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

லக்கிலுக் சொன்னது…

கோவி.கண்ணன் வடகலை அய்யங்கார் அய்யா!

உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா அய்யா? நம்மவாவை நோண்டிக்கிட்டே இருப்பீங்களா அய்யா? போயி குழந்தை குட்டிகளை படிக்க வையுங்க அய்யா. விவசாயத்தை பாருங்க அய்யா.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
கோவி.கண்ணன் வடகலை அய்யங்கார் அய்யா!

உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா அய்யா? நம்மவாவை நோண்டிக்கிட்டே இருப்பீங்களா அய்யா? போயி குழந்தை குட்டிகளை படிக்க வையுங்க அய்யா. விவசாயத்தை பாருங்க அய்யா.
//

லக்கிலுக் தென்கலை ஐயங்கார்,

எல்லாம் பகவான் செயல், அவனே எழுதவைக்கிறான்.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

//கமல் முழு நாத்திகன் இல்லை என்பதே என் கருத்து.அதைத்தான் வலியுறுத்துகிறேன்
///

இப்படியே நானும் சந்தேகிக்கிறேன்..

நாத்திக வட்டத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை ஒரு 'சூழலைக் கவரும் உத்தி'யாகவே இவர் பயன்படுத்துகிறார் என்பதும் என் எண்ணம்.ஆயினும் இந்த விதயம் அவர் நடிப்பை ரசிப்பதில் எந்தக் குறுக்கீடுகளையும் என்னைப் பொறுத்தவரை செய்வதில்லையாதலால்,அவரின் ‘கருத்துக் களஞ்சியங்களை'ப் பற்றி கவலையுறுவதும் இல்லை.

அவர் மட்டுமல்ல,திராவிடப் பெயர் கொண்ட அரசியல் கட்சிகளில் பல உயர்மட்டத் தலைவர்கள் கூட இந்தவகை வட்டத்தில் வருவார்கள் என்றே நினைக்கிறேன்...

மற்றபடி கடவுள் தத்துவம் பற்றிய ஆத்திக/நாத்திக வாதம் ரசிக்கும்படி இருந்தது.

மனித உடலில் உயிர் என்பது என்ன என்பதை abstract ஆக நாத்திகர்கள் விளக்கிவிடக் கூடும் எனில் அன்று நானும் நாத்திகனாயிருக்க பெருமிதம் கொள்வேன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவன்#11802717200764379909 said... மனித உடலில் உயிர் என்பது என்ன என்பதை abstract ஆக நாத்திகர்கள் விளக்கிவிடக் கூடும் எனில் அன்று நானும் நாத்திகனாயிருக்க பெருமிதம் கொள்வேன் !//

அறிவன் சார்,

இறை நம்பிக்கையாளர்கள் உயிர் என்பதை தெளிவாக விளக்கிவிட்டார்களா ? விளக்கம் எவர் சொன்னாலும் அது நம்பிக்கை / நம்பு என்ற வகையில் தான் வரும்.

ஆன்மாவுக்கு அழிவில்லை என்று ஆத்திகம் பேசினாலும்ம்..முக்தி (?)அடையும் போது அது முற்றிலும் அழிந்துவிடுவதாக / கரைந்துவிடுவதாகத்தானே சொல்கிறார்கள். அதை நம்புவதற்கு இருக்கும் ஒரே நிர்பந்தம் மரணபயம், இறைவனின் இருப்பை மறுத்தால் இறப்பிற்கு பின்னால் தண்டிக்கப்படுவோமே என்ற அச்சம் தானே.

ஜெகதீசன் சொன்னது…

//
விடுபட்டவை - இட்லி வடைக்குக் கொஞ்சம் சட்னி !
//
சட்னி காரம் கொஞ்சம் கம்மி...
:P

எப்படியோ 10வது பதிவும் போட்டுட்டீங்க.... :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
என்னது தசாவதாரம் ரீலீஸ் ஆகிடுச்சா?????

:P
//

அது ரிலிஸ் ஆகி 30 ஆண்டுகள் ஆகிறது,

அந்த படத்தில்
"திருமால் பெருமைக்கு நிகரேது..." என்று நடிகர் திலகம் (டிஎம் எஸ் குரலால்)பாடுவார் பாருங்கள்...கேட்கும் போதே மெய்சிலிர்க்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
//
விடுபட்டவை - இட்லி வடைக்குக் கொஞ்சம் சட்னி !
//
சட்னி காரம் கொஞ்சம் கம்மி...
:P

எப்படியோ 10வது பதிவும் போட்டுட்டீங்க.... :)))
//

(நகை)சுவைக்காக செய்த சட்னியில் அதுக்கும்மேல் காரம் போட்டால் யாரும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள்.
:)

வெங்க்கி சொன்னது…

////லக்கிலுக் said...
கோவி.கண்ணன் வடகலை அய்யங்கார் அய்யா!

உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா அய்யா? நம்மவாவை நோண்டிக்கிட்டே இருப்பீங்களா அய்யா? போயி குழந்தை குட்டிகளை படிக்க வையுங்க அய்யா. விவசாயத்தை பாருங்க அய்யா.
//

லக்கிலுக் தென்கலை ஐயங்கார்,

எல்லாம் பகவான் செயல், அவனே எழுதவைக்கிறான்.//

ஹலோ, ரெண்டு திசை ஐயங்கார்களும் (கோவி வடகலை, லக்கி லுக் தென்கலை), நன்னா ஒடம்புல இருக்கற ஓட்டைகளை தெறந்து கேளுங்கோ !!

இட்லி வடை எச்சை கலை அய்யங்கார் என்னமோ பிரம்மஹத்தி தோஷம் பிடிச்சிண்டு முனீஸ்வரனுக்கு எழுதி இருக்கார்..லூசுகள் எழுதுறதை பெரிசா எடுத்துண்டு.. இட்லி வடையோட எச்சை எலைக்கு எதிர் எலை போடப்படாது..உம்மாச்சி கண்ணை குத்திடுவான்..அப்பறம் கோவி கண்ணன் கோவி நொல்லை கண்ணனா தான் திரியணும்... :))

எப்படி இருக்கு எங்க பிராமண பாஷை.. !!!

கோவி.கண்ணன் சொன்னது…

//கீ - வென் said...

ஹலோ, ரெண்டு திசை ஐயங்கார்களும் (கோவி வடகலை, லக்கி லுக் தென்கலை), நன்னா ஒடம்புல இருக்கற ஓட்டைகளை தெறந்து கேளுங்கோ !!

இட்லி வடை எச்சை கலை அய்யங்கார் என்னமோ பிரம்மஹத்தி தோஷம் பிடிச்சிண்டு முனீஸ்வரனுக்கு எழுதி இருக்கார்..லூசுகள் எழுதுறதை பெரிசா எடுத்துண்டு.. இட்லி வடையோட எச்சை எலைக்கு எதிர் எலை போடப்படாது..உம்மாச்சி கண்ணை குத்திடுவான்..அப்பறம் கோவி கண்ணன் கோவி நொல்லை கண்ணனா தான் திரியணும்... :))

எப்படி இருக்கு எங்க பிராமண பாஷை.. !!!//

கீ - வென் ஐயா,

இட்லி வடை அய்யரா ? அய்யங்காரா ? என்று சரியாக தெரியவில்லை, உங்களுக்கு ஐயம் இல்லாது அவர் அய்யங்கார் என உறுதியாக தெரிந்தால் சொல்லுங்கள் சும்மா அபாண்டமாக பழிசுமத்தாதீர்கள்.

வெங்க்கி சொன்னது…

//கீ - வென் ஐயா,

இட்லி வடை அய்யரா ? அய்யங்காரா ? என்று சரியாக தெரியவில்லை, உங்களுக்கு ஐயம் இல்லாது அவர் அய்யங்கார் என உறுதியாக தெரிந்தால் சொல்லுங்கள் சும்மா அபாண்டமாக பழிசுமத்தாதீர்கள்.//

இட்லி வடை பதிவு ஒண்ணும் ஒத்தை பிராமணன் கும்பல் கிடையாதே ?? அவா ஒரு குரூப் ஆ இல்ல தொழில் பண்ணறா ?? சாரி, அதாவது அந்த பதிவை நடத்திண்டு வர்றத பத்தி சொல்லறேன்.. எனவே, எனக்கு நோ வோர்ரிஸ் !! உங்களுக்கு எப்படி.?? அங்கே என்னோட ஒண்ணு விட்ட தோப்பனார் (மூப்பனார் இல்ல ) சங்கு மாமா எழுதறார் பாத்தேளா ??

என்னமோ போங்கோ..நான்தான் சொல்லிட்டேன் இல்ல, எச்சை கலை அய்யங்கார் ன்னு.. அப்பறம் என்ன டவுட்டு ?? வேணும்னா என்னோட பின்னூட்டத்துல எத்தன பிழை இருக்கோ அத்தனை மார்க் கொரசிக்கொங்கோ..??

மங்களூர் சிவா சொன்னது…

புளியோதரை , நாஸ்திக மசாலா எல்லாம் சேர்த்து ஒரு கலவையாக மேல்பார்வைக்கு இது வெஜ்ஜா நான் வெஜ்ஜா என்று புரியாத சைவ அசைவக் கடைக் குழம்பு போல கலங்கலாகக் காட்சியளிக்கிறது.. இந்த சட்னி

:)))))))))))

மங்களூர் சிவா சொன்னது…

லேபிள் சூப்பரு!!

மங்களூர் சிவா சொன்னது…

நான் சட்னி நல்லாஇல்லைன்னா சொன்னேன் நல்லாஇருந்திருந்தா நல்லா இருக்கும்னுதானே சொன்னேன்!!

:)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
நான் சட்னி நல்லாஇல்லைன்னா சொன்னேன் நல்லாஇருந்திருந்தா நல்லா இருக்கும்னுதானே சொன்னேன்!!

:)))))
//

சிவா,

எப்படி உங்களால் முடிகிறது, நாளொன்றுக்கு 100 பல்வேறு பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுகிறீர்கள். எங்கு சென்றாலும் 'மங்களூர் சிவா said..."

இருக்கிறது.

எப்படி சிவா எப்படி ?

மங்களூர் சிவா சொன்னது…

/
கோவி.கண்ணன் said...

சிவா,

எப்படி உங்களால் முடிகிறது, நாளொன்றுக்கு 100 பல்வேறு பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுகிறீர்கள். எங்கு சென்றாலும் 'மங்களூர் சிவா said..."

இருக்கிறது.

எப்படி சிவா எப்படி ?
/

இதோ இப்பிடித்தான்

:))))))

rapp சொன்னது…

இப்படியே சூப்பரா விவாதம் தொடர வாழ்த்துக்கள். குறிப்பா keyven பின்னூட்டங்களும் உங்க பதில்களும் சூப்பர்.

//சிவா,
எப்படி உங்களால் முடிகிறது, நாளொன்றுக்கு 100 பல்வேறு பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுகிறீர்கள். எங்கு சென்றாலும்'மங்களூர் சிவா said"
இருக்கிறது.
எப்படி சிவா எப்படி ?
//
மங்களூர் சிவா மாதிரி நாலு கொடைவள்ளல்கள் இருக்கறதாலதான் எங்க பொழப்பெல்லாம் ஓடுது.

பரிசல்காரன் சொன்னது…

யோசிச்சு முடிச்சு ரூமைக் காலி பண்ணீட்டீங்களா இல்லியா?

எல்லரும் எல்லா விதமாவும் எழுதியாச்சுன்னு நெனச்சா.. எப்படி இப்படி புதுசு புதுசா யோசிச்சு கலக்குறிங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
யோசிச்சு முடிச்சு ரூமைக் காலி பண்ணீட்டீங்களா இல்லியா?

எல்லரும் எல்லா விதமாவும் எழுதியாச்சுன்னு நெனச்சா.. எப்படி இப்படி புதுசு புதுசா யோசிச்சு கலக்குறிங்க!
//

கேகே,
இன்னும் ஒரு பதிவிட்டால் நான் மட்டுமே தசவதாரத்திற்கு 10 பதிவுகள் இட்ட மன மகிழ்ச்சி கிடைக்கும் !!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்