பின்பற்றுபவர்கள்

23 ஜூன், 2008

கவனம் ஈர்த்தப் படம் (புகைப்பட போட்டிக்கு அல்ல) !

சென்னை சென்றிருந்த போது இரவு உணவிற்காக அமைந்தகரை - கீழ்பாக்கம் அருகில் இருக்கும் பாலாஜி பவனுக்கு சென்றிருந்தேன். சுவற்றில் இருந்த வள்ளி - முருகன் - தெய்வயானை படம் கவனம் ஈர்த்தது. முருகன் தெய்வயானையை எப்போது மணந்தார் என்பதன் காலம் சரியாக தெரியவில்லை. பக்தியாளர்கள் விளக்கினால் அறிந்து கொள்வேன். அந்த காலத்திலேயே மடிசார் அணியும் பழக்கம் இருந்திருக்குமா ? அறிந்தவர்கள் சொல்லுங்கள்.படம் கவனம் பெற்றதற்கு அதுவே காரணம். படத்தின் மீது அமுக்கி பெரிதாக்கிப் பாருங்கள்.

முருகனுக்கு படத்தில் கொடுக்கப்பட்ட நிறம், பூணூல் ஆகியவற்றைக் கூட சகித்துக் கொள்ளலாம் ஏனெனில் தமிழர்கள் தான் இந்தியாவிலேயே கலப்பு திருமணத்தை சகித்துக் கொண்ட முதல் மக்கள் என பறைசாற்றும் இந்த (தெய்வச்) சான்றுகளுக்கு முன்பு அவை மிகச்சிறிது (துச்சம்).

30 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

பதிவரா ஆனபிறகு இப்படிப்பட்டக் கவன ஈர்ப்புகள் பெருகிப்போச்சு:-)))

VSK சொன்னது…

முருகனருள் முன்னிற்கும்.... ஒரு நல்ல படத்தை அளித்தமைக்கு!:))

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
முருகனருள் முன்னிற்கும்.... ஒரு நல்ல படத்தை அளித்தமைக்கு!:))
//

வீஎஸ்கே ஐயா,
அந்த படம் பார்த்தாவுடன் அடுத்து நினைவுக்கு வந்தது நீங்கள் தான் என்றால் நம்புவீர்களா ?

உண்மை !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
பதிவரா ஆனபிறகு இப்படிப்பட்டக் கவன ஈர்ப்புகள் பெருகிப்போச்சு:-)))
//

துளசி அம்மா,

மிகச் சரியாக சொன்னீர்கள். பதிவர் இல்லை என்றால் அந்த படம் கண்ணில் பட்டி இருந்தாலும் கவனம் பெற்றிருக்காது

பரிசல்காரன் சொன்னது…

//முருகன் தெய்வயானையை எப்போது மணந்தார் என்பதன் காலம் சரியாக தெரியவில்லை. பக்தியாளர்கள் விளக்கினால் அறிந்து கொள்வேன்//

கண்டிப்பாக இந்தப் போட்டோ எடுக்கப்படுமுன்தான்! (முருகா. முருகா.. இவனுக்கு எல்லாமே விளையாட்டாப் போச்சு! இவனை மன்னிச்சுடு!)

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

\\துளசி கோபால் said...
பதிவரா ஆனபிறகு இப்படிப்பட்டக் கவன ஈர்ப்புகள் பெருகிப்போச்சு:-)))//

ஆமாமா... வித்தியாசமா தான் இருக்கு படம்..கவனத்தை ஈர்க்கறமாதிரி..:)

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//பரிசல்காரன் said...

கண்டிப்பாக இந்தப் போட்டோ எடுக்கப்படுமுன்தான்! (முருகா. முருகா.. இவனுக்கு எல்லாமே விளையாட்டாப் போச்சு! இவனை மன்னிச்சுடு!)
//

கேகே,

நீங்கள் சிரிப்பாகச் சொன்னாலும் உண்மை அதுவாகத்தான் இருக்கும் போல. அது போல் (கல(ர்)ப்) படம் பார்த்தது இல்லை.

Samuthra Senthil சொன்னது…

ஒரு நிருபருக்கான தகுதி உங்களுக்கும் வந்து விட்டது என கருதுகிறேன் கோவி.கண்ணன். பத்திரிகையாளர்களுக்குத்தான் (குப்பை, பஸ், தண்ணீர், சினிமா என) எதை பார்த்தாலும் செய்தியாகவே தெரியும். அதேபோல தாங்களும் மாறி விட்டீர்கள் பேல தெரிகிறதே..! நல்ல பதிவு. இதற்கு பதில் சொல்லும் அளவுக்கு என்னிடம் விஷயம் இல்லை. அதனால் வாழ்த்துகளோடு நிறுத்திக் கொள்கிறேன்.

TBCD சொன்னது…

தேவ மொழி பேசும் குடும்பத்துப் பெண், தேவ உடையில் இருக்கிறார்...அதில் என்ன குற்றம் கண்டீர்...

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
தேவ மொழி பேசும் குடும்பத்துப் பெண், தேவ உடையில் இருக்கிறார்...அதில் என்ன குற்றம் கண்டீர்...
//

டிபிசிடி ஐயர்,

குற்றமெல்லாம் இல்லிங்கோ, அப்படி செய்தால் சாமி கண்ணைக் குத்திவிடும். மடிசார் எப்போது புழக்கத்தில் வந்தது என்று அறிந்து கொள்ள முற்படுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கயல்விழி முத்துலெட்சுமி said...

ஆமாமா... வித்தியாசமா தான் இருக்கு படம்..கவனத்தை ஈர்க்கறமாதிரி..:)
//
கயல்விழி அமமா,
ரொம்பவே மாறுபட்ட படமாக இருந்ததால் பார்த்தவுடன் அதன்மீது இட்ட கண்களை ஒரு நிமிடம் எடுக்கவில்லை. நல்லவேளை கையில் புகைப்பட கருவி இருந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//சினிமா நிருபர் said...
ஒரு நிருபருக்கான தகுதி உங்களுக்கும் வந்து விட்டது என கருதுகிறேன் கோவி.கண்ணன். பத்திரிகையாளர்களுக்குத்தான் (குப்பை, பஸ், தண்ணீர், சினிமா என) எதை பார்த்தாலும் செய்தியாகவே தெரியும். அதேபோல தாங்களும் மாறி விட்டீர்கள் பேல தெரிகிறதே..! நல்ல பதிவு. இதற்கு பதில் சொல்லும் அளவுக்கு என்னிடம் விஷயம் இல்லை. அதனால் வாழ்த்துகளோடு நிறுத்திக் கொள்கிறேன்.
//

சினிமா நிருபர்,

அப்படிங்கிறிங்களா ? 'ஞானக்' கண் வந்துவிட்டது என்று சொல்ல வருகிறீர்கள்.
:)

முகவை மைந்தன் சொன்னது…

பத்த வச்சீட்டீங்களே, கோவி.

//மடிசார் எப்போது புழக்கத்தில் வந்தது என்று அறிந்து கொள்ள முற்படுகிறேன்.//

நல்ல ஆராய்ச்சி. ஆனா, மடிசார் மட்டும் ரசிக்கவே முடியாது. ஆமாங்க, கல்யாணம் ஆனவங்க தான் கட்டணுமாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
பத்த வச்சீட்டீங்களே, கோவி.

நல்ல ஆராய்ச்சி. ஆனா, மடிசார் மட்டும் ரசிக்கவே முடியாது. ஆமாங்க, கல்யாணம் ஆனவங்க தான் கட்டணுமாம்.
//

முகவை,

யார் சொன்னது சில 'ஆண்டி' ஹீரோக்கள் திருமணம் ஆனவர்களையும் ரசிப்பார்கள்.

தருமி சொன்னது…

துளசி சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. அந்த "உள்குத்தில்" இருக்கு ஆயிரம் உண்மை.

:)

ஈஷ்வரா ..!

dondu(#11168674346665545885) சொன்னது…

//வீஎஸ்கே ஐயா,
அந்த படம் பார்த்தாவுடன் அடுத்து நினைவுக்கு வந்தது நீங்கள் தான் என்றால் நம்புவீர்களா?//

ஏன் என் நினைவு வரவில்லை? இது ஐயர் கட்டு என்றதாலா, ஐயங்கார் கட்டாக இருந்தால் ஒரு வேளை என் நினைவும் வந்திருக்குமோ? :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

TBR. JOSPEH சொன்னது…

ஆனா கண்ணன் கேட்ட கேள்விக்கி "முருகன் தெய்வயானையை எப்போது மணந்தார்" இதுவரை பதிலேதும் வரலையே.

நான் மும்பையில் ஒரு நிறுவனத்திற்கு ஆய்வுக்கு சென்றிருந்தேன் அதில் சரஸ்வதி புலி மீது அமர்ந்திருப்பதுபோல் ஒரு ஓவியத்தைக் கண்டேன். அதுவரை கேள்விப்படாத ஒன்று என்பதால் என்னுடன் வந்திருந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். அந்த கற்பனை எங்க முதலாளியோடது சார். படிப்பு மட்டும் போறாது தைரியமும் வேணும்னு சொல்வார். அதுக்கு இது ஒரு சாம்பிள்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
துளசி சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. அந்த "உள்குத்தில்" இருக்கு ஆயிரம் உண்மை.

:)

ஈஷ்வரா ..!
//

சோகுவாரா இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...

ஏன் என் நினைவு வரவில்லை? இது ஐயர் கட்டு என்றதாலா, ஐயங்கார் கட்டாக இருந்தால் ஒரு வேளை என் நினைவும் வந்திருக்குமோ? :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

dondu சார்,

ஐயங்கார் மடிசார் கட்டு என்று தனியாக உள்ளதா ? அப்படி இருந்தால் வடகலைக் கட்டு தென் கலைக் கட்டு என்று கூட இருக்குமே ? எனக்கு தெரியாது, நான் மடிசார் என்பது ஒரே வகையாகத்தான் இருக்கும் என்று தற்போதும் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

வீஎஸ்கே ஐயாவின் ஞாபகம் வருவதற்கு காரணம் உண்டு ஏனென்றால் அவரிடம் தான் அதுபற்றி திரைமறைவில் நிறைய பேசி இருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//டி.பி.ஆர் said...
ஆனா கண்ணன் கேட்ட கேள்விக்கி "முருகன் தெய்வயானையை எப்போது மணந்தார்" இதுவரை பதிலேதும் வரலையே.

நான் மும்பையில் ஒரு நிறுவனத்திற்கு ஆய்வுக்கு சென்றிருந்தேன் அதில் சரஸ்வதி புலி மீது அமர்ந்திருப்பதுபோல் ஒரு ஓவியத்தைக் கண்டேன். அதுவரை கேள்விப்படாத ஒன்று என்பதால் என்னுடன் வந்திருந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். அந்த கற்பனை எங்க முதலாளியோடது சார். படிப்பு மட்டும் போறாது தைரியமும் வேணும்னு சொல்வார். அதுக்கு இது ஒரு சாம்பிள்.

1:03 PM, June 23, 2008
//

ஜோசப் ஐயா,

உருவ வழிபாட்டின் பரிணாமம் என்பது அவரவர்களின் மிதமிஞ்சிய கற்பனைகள் பரவியதே காரணம் என்பது நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்களில் இருந்து தெரிகிறது. மிக்க நன்றி !

முகவை மைந்தன் சொன்னது…

//சில 'ஆண்டி' ஹீரோக்கள் //

மாமா(Auntyயோட hero)வைத் தானே சொல்றீங்க ;-)

Kanchana Radhakrishnan சொன்னது…

ஐயோ..கோவி சார்..இதுகூடவா தெரியலை?
வள்ளி கீழ் ஜாதி...குறத்தி
தெய்வானை ? அதை வேறுபடுத்திக்காட்ட வெண்டாமா?
அதனால் தான் அவருக்கு சாதாரணமா புடவை..இவருக்கு மடிசார் கட்டு.
புரிந்துக்கொண்டீர்களா?
நாராயணா....நாராயணா...

மோகன் கந்தசாமி சொன்னது…

பெருமாள் கோயில் குருக்களோட அர்ச்சனைத் தட்டில் சில்லற கொறஞ்சி, முருகன் கோயில் பூசாரி உண்டியல் நிரஞ்சி வழிஞ்ச போது, பொண்ணு கொடுத்து பிசினச கன்சாலிடேட் பண்ணலான்னு, பெரியோர்களால் ஒரு சுபயோக சுபதினத்தில் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
//சில 'ஆண்டி' ஹீரோக்கள் //

மாமா(Auntyயோட hero)வைத் தானே சொல்றீங்க ;-)
//

அப்படியும் 'வச்சிக்கலாம்' :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Kanchana Radhakrishnan said...
ஐயோ..கோவி சார்..இதுகூடவா தெரியலை?
வள்ளி கீழ் ஜாதி...குறத்தி
தெய்வானை ? அதை வேறுபடுத்திக்காட்ட வெண்டாமா?
அதனால் தான் அவருக்கு சாதாரணமா புடவை..இவருக்கு மடிசார் கட்டு.
புரிந்துக்கொண்டீர்களா?
நாராயணா....நாராயணா...
//

சிதம்பரத்தில் நந்தானார் சிலைகள் கால் படிக்கட்டுக்குள் சென்று மறைந்தது போல் வள்ளியை தூக்கி எறியாமல் இருக்கிறார்களே என்று மகிழ்ந்து கொள்ளலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மோகன் கந்தசாமி said...
பெருமாள் கோயில் குருக்களோட அர்ச்சனைத் தட்டில் சில்லற கொறஞ்சி, முருகன் கோயில் பூசாரி உண்டியல் நிரஞ்சி வழிஞ்ச போது, பொண்ணு கொடுத்து பிசினச கன்சாலிடேட் பண்ணலான்னு, பெரியோர்களால் ஒரு சுபயோக சுபதினத்தில் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது.
//

மோகன்,

பெருமா(ல்)ள் முருகனுக்கு மாமன் முறை ஆனால் பெருமாளுக்கு மகள் இல்லாததால் வெறும் மருமகன் தான். ஆக்சுவலி :) தெய்வயானை எனப்படும் தேவசேனதிபதி அம்மையார் தேவர்களின் தலைவன் இந்திரனின் மகளாவார்.

திருச்செந்தூரில் சூரனை அழித்து இந்திர பதவியை இந்திரனுக்கு காத்துக் கொடுத்ததால் மட்டற்ற மகிழ்ச்சியால் தன்மகளை முருகனுக்கு மணம் முடித்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

நானானி சொன்னது…

தானும் பிறரும் தெளிவு பெற ஒரு நல்ல கண்ணோட்டத்தில் கோவி.கண்ணன்
கேட்ட கேள்விக்கு வந்த பின்னோட்டங்கள்...ஒரு பட்டிமன்ற
மட்டத்துக்கு சூடு பிடிக்கிறதே!!!
புலவர்களே சற்று சாந்தமாக உரையாடுங்கள்!!முருகனருளால் தெளிவு
பிறக்கட்டும்.

நானானி சொன்னது…

துள்சி சொன்னது சரிதான். முன்பெல்லாம், "ஹைய்! நல்லாருக்கே!
ஐய்! வித்தியாசமாயிருக்கே!" என்று பார்த்துவிட்டு நகர்ந்துவிடும் நான்...இப்போது "ஹா!இதைப் பதிவிடலாமே1 அதைப் பதிவிடலாமே!" என்று பரபரக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நானானி said...
தானும் பிறரும் தெளிவு பெற ஒரு நல்ல கண்ணோட்டத்தில் கோவி.கண்ணன்
கேட்ட கேள்விக்கு வந்த பின்னோட்டங்கள்...ஒரு பட்டிமன்ற
மட்டத்துக்கு சூடு பிடிக்கிறதே!!!
புலவர்களே சற்று சாந்தமாக உரையாடுங்கள்!!முருகனருளால் தெளிவு
பிறக்கட்டும்.
//

நானானி,

என் கேள்விக்கு எவருமே இன்னும் பதில் கொடுக்கவில்லை. :(

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்