பின்பற்றுபவர்கள்

20 ஜூன், 2008

கூட்டணி ஆட்சி இந்தியாவிற்கு பெரும்பின்னடைவு !

அதிகார மையம் என்ற ஒற்றைப் புள்ளிகள் ( அரசர்கள், சர்வதிகாரிகள்) செய்த கொடுமைகளின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பே அதிகார பகிர்வு என்ற மக்கள் ஆட்சிக்கு வழிவகுத்தது. ஆரம்பத்தில் மக்கள் தொண்டாற்றும் எவரும் அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களிடம் மக்கள் நலம் காக்கும் பொறுப்பு ( அதிகாரம் அல்ல) ஒப்படைக்கடும் என்ற நிலையில் தான் உலகெங்கிலும் ஏறக்குறைய ஒரே காலகட்டங்களில் மக்கள் ஆட்சிகள் ஏற்பட்டன. முதலாளிகள் நாடாக இருந்தாலும் கம்யூனிச நாடுகளாக இருந்தாலும் இன்றைய காலகட்டங்களில் மக்கள் ஆட்சி தத்துவம் தோற்றுவருகிறது அல்லது குழப்பமான சூழலில் உள்ளது என்று சொல்லலாம்.

ஆரம்பகாலத்தில் தனிபெரும்பான்மையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பெரும் கட்சிகள் தற்பொழுது தள்ளாடி வருகின்றன. மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி இதுவே நிலமை. இதற்கு காரணம் புற்றீசல்களாக தோன்றிய மாநில கட்சிகளா ? அதுவும் ஒரு காரணம் என்றாலும். ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சிகள் செய்த அட்டூழியங்கள், ஊழல்கள் அவற்றின் ஓட்டுபலத்தை குறைத்துவிட்டன. இவர்கள் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால் மக்கள் ஏன் இவர்களை தூக்கி அடிக்கப் போகிறார்கள்.

அரசியல் பதவிகள் வெற்றிகரமான தொழில் போல் ஆகிவிட்டதால் பதவியில் அமர்பவர்கள் அதை தங்களுக்கு செல்வம் சேர்க்கவும், வழக்கில் இருந்து தப்பிக்கவும் பயன்படுத்த ஆரம்பித்ததும் இல்லாமல் அரசாங்க உயர்பதிவியில் உள்ளதற்கும் மேல் வசதிகள் செய்து தரப்படுவதால் அந்த பதவியை அடைவது மக்கள் தொண்டு என்ற எண்ணமே சிறிதும் இல்லாமல் பேராசையாகிவிட்டது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பதவி சுகம், பதவி வெறி அதை எப்படியாவது அடைந்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாண்மை கிடைக்காத போது 'கூட்டணி ஆட்சி' என்று உள்ளே நுழைகிறார்கள்.

இந்தியாவில் கூட்டணி ஆட்சி மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி அற்ப வாழ்வு ஆட்சியாகவே இருக்கிறது என்பதற்கு வாஜ்பாயி, சந்திரசேகர், தேவகவுடா, விபிசிங், குமராசாமி ஆகியவர்களின் ஆட்சி பறிபோனதைப் பார்த்திருக்கிறோம்.
தமிழகத்தில் அந்த நிலைவரவில்லை என்றாலும் கூட்டணி கட்சிகளின் மிரட்டல், விலக்கல் எல்லாம் நடந்தே வருகிறது.

கூட்டணி ஆட்சி அல்லது ஆதரவில் ஆட்சி எல்லாம் அற்ப ஆயுசுதான். ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்த கட்சிகளின் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தே வருகிறது. கூட்டணிக் கட்சிகளின் சொற்படி தான் ஒரு அமைச்சரை வைத்திருக்கவோ, நீக்கவோ முடியும் என்ற எழுதப்படாத சட்டமே இருக்கிறது. கட்சிகள் ஒவ்வொன்றும் ஒருவகையான கொள்கைகள் கொண்டவை. இவைகள் தனித்தனியாக இருந்தால் யாருக்கும் ஒன்றும் இல்லை, இவர்கள் கூட்டணி என்று இணையும் போது தனித்தனி கொள்கைகள் என்பது முரண்பட்ட கொள்கைகளாக நின்று கொண்டு பல் இளிக்கின்றன. உதாரணத்திற்கு அணுஆயுதம் குறித்த அமெரிக்க ஒப்பந்தம். இதில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் எந்த காலத்திலும் ஒத்தக் கருத்துக்கள் கொண்டவர்கள் இல்லை. பின்பு எப்படி இவர்களால் சேர்ந்து செயல்பட முடியும் ?

அதுபோலவே மாநகர விரிவாக்கம் தொடர்பாக திமுக அரசு தெரிவு செய்த நிலங்களை எதிர்த்து பாமக திமுக அரசுக்கு கொடுத்த நெருக்கடி. மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான எதிர்ப்பு மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இவைகளில் எல்லாம் முரண்பட்டே இணைகிறார்கள். இதுபோன்ற கூட்டணிகளின் நிலைத் தன்மை என்பது தேன் நிலவு தம்பதிகள் போல் ஆரம்பத்தில் இருந்தாலும் ஆண்டு திரும்புவதற்குள் முரண்பட்ட கொள்கைகளால் விவகரத்து செய்து கொண்டு மறுமணத்திற்கும் உடனே இருபக்கமும் தயாராகிவிடுகிறார்கள். இது தற்காலிக விவாகரத்துதான், திரும்பவும் வேறு சூழல்களில் மீண்டும் இணைவார்கள். எதிர்கூட்டணிகளால் தேர்தலுக்கு தேர்த்தல் பச்சையாக அரசியல் விபச்சாரம் என்று தூற்றப்படும் பாமகவை அடுத்த தேர்த்தலில் தூற்றியவர்களே 'கூப்பிடுகிறார்கள்'.

கூட்டணி என்று கூடும் கட்சிகளுக்கு பொதுக் கொள்கையோ, நேர்மையோ சிரிதும் கிடையாது, எப்படியாவது ஆட்சியையும், இடங்களையும் கைப்பற்ற ஒரு மாற்றுவழியாகத்தான் இணைகிறார்கள். இவை தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி கூட்டணி என்ற பெயரில் கூத்துகளாகவே நடந்துவருகிறது. என்ன எழவாவது நடக்கட்டும் ? இவர்கள் அடித்துக் கொண்டு விலகி ஆட்சியே கவிழ்ந்துவிடுவதால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் வரிப்பணம் தானே. அரசியல் கட்சிகள் தேர்தலை நடத்துவதற்கு என்று எதுவும் செலவு செய்கிறார்களா ?

அரசியல் சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும், கூட்டணி ஆட்சி தவறு அல்ல. அதுவும் அதிகார பகிர்வு என்னும் மக்கள் ஆட்சியின் ஒரு அங்கம் தான். ஆனால் இவர்கள் மக்கள் முன் 'கூட்டணி' என்று அறிவித்து ஓட்டு வாங்கி வென்று ஆட்சி அமைத்துவிட்டு, பின்பு அடித்துக் கொண்டு மறுதேர்தல் நடத்தும் சூழல் உருவானால், அந்த தேர்தலுக்கு ஆகும் செலவுகள் அனைத்தையுமே கூட்டணிக் கட்சிகள் தொகுதியைப் பங்கிட்டுக் கொள்வதைப் போல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

தேர்தலில் வாக்களிப்பவர்கள் 50 விழுக்காட்டினர்தான், அதில் தேர்ந்தெடுக்கப்படும் கட்சி 26 விழுக்காடு வாங்கி இருக்கும். அதாவது 74 விழுக்ககட்டினர் தேர்ந்தெடுக்கப்படாதவர் வெற்றி பெறுகிறார்.... அதிலும் 25 கட்சிகள் சமபலத்துடன் ஒரே தொகுதியில் நின்றால் வெறும் மூன்று விழுக்காட்டு வாக்கு பெற்றவரே வெற்றிபெற்றவராகிறார், அப்படி வெற்றி பெற்றிருந்தாலும் மீதம் 97 பேர்களால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்றே பொருள். அல்லது அந்த தொகுதியில் அதிகம் வாக்கு பெற்றவர் வெற்றிபெற்றவர் ஆகிறார். தனித் தனி தொகுதிக்கு இவ்வாறு தேர்வு நடைபெறும் போது, நாட்டின் முதல்வரையோ, பிரதமரையோ தேர்ந்தெடுப்பதில் மட்டும் ஏன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்றெல்லாம் கூத்து அடிக்கிறார்கள். கூட்டணியே இல்லாமல் 10 கட்சிகள் தனித்தனியாக நின்றாலும் எந்த கட்சிக்கு அதிக இடம் கிடைத்திருக்கிறதோ அவர்கள் ஆட்சி செலுத்தலாம். 101 இடங்களில் 10 கட்சிகள் 9 பேருக்கு தலா 10 இடங்களும் ஒரே ஒரு கட்சிக்கு 11 இடம் கிடைத்தால் அவர்களால் ஆட்சி செய்ய மூடியும் என்ற மாற்றம் தேவை. கூட்டணி ஆட்சிகளின் அற்ப ஆயுள்களை கவனத்தில் கொண்டு அதாவது கூட்டணிகளையோ...கூட்டணி ஆட்சியையோ அரசியல் சட்டமே அனுமதிக்கக் கூடாது.


என்னவோ அரசியலையும், அதன் நிலைத்தன்மையையும் நினைத்தால் எரிச்சலே மிஞ்சுகிறது. அரசியலில் நிலைத்தன்மை உடைய நாடுகளே வேகமாக முன்னேறுகின்றன. இந்தியாவில் வரும் காலத்தில் கூட கூட்டணி ஆட்சிகளே அமைய முடியும் என்ற நிலை உள்ளதால் அரசியல் நிலைத்தன்மை ஏற்படுவதற்கான கூறுகளே இல்லை. ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கு, கொள்கைகள் உடன்பாடு இல்லாமல் தேர்தலுக்கு மட்டுமே என்ற நோக்கில் நேர்மையே இல்லாமல் இணைந்து ஒருவாகும் கூட்டணி ஆட்சிகள் என்றுமே இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தடையாகவே அமையும். ஒன்று முன்பு ஒரே கட்சி அனுபவித்து வந்த பதவி சுகங்களை தற்போது கூட்டணி கட்சிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கின்றன. அதாவது சேர்ந்து திருடுவதில் திறமைக்கு ஏற்ற பங்கீடு என்பது போல்... அப்படியும் அது நீண்ட நாள் நிலைப்பது இல்லை :(


******

4 கருத்துகள்:

முகவை மைந்தன் சொன்னது…

சரியான நேரத்தில், சரியான பொருளில் எழுதி இருக்கிறீர்கள்.

//சேர்ந்து திருடுவதில் திறமைக்கு ஏற்ற பங்கீடு//

பங்கீட்டு முறையில் மாற்றம் தேவை. சற்று அவகாசம் வேண்டும். மற்றவர்கள் கருத்தைக் கேட்டு நாளை மீண்டும் வருகிறேன்.

ஜெகதீசன் சொன்னது…

:(
ஒன்னும் செய்யமுடியாது...

Prasad Raj சொன்னது…

இந்திய அரசியலில், அனுபவமட்ற,படிப்பறிவட்ற அரவேக்காடுகள் அடிக்கும் அட்டகாசத்தை பார்த்து பார்த்து அழத்து போன மக்கள், படித்த சிலரை டில்லிக்கு அனுப்பி வைத்தனர்.
நெச்சு கொதிக்கின்றது, இந்த படித்த ( அறிவாளிகள் என்று சொல்லிக்கொள்ளும்) கூட்டமும், மக்களை ஏமாற்றும் போது...

நெச்சு பொருக்குதில்லையே...இந்த நிலை கெட்ட மாநிடரை பற்றி நினைக்கையில்.....

வேண்டும் ...என்றால்...பணம்..சுருட்டிக்கோ....

மக்களை ஏமாற்றாதே....

நாட்டை...விலை பேசாதே.....

( படித்த அமைச்சர்கள், யார்...என்பது...எல்லோரும்..அறிவர்)

கோவி...நல்ல..தொகுப்பு...

TBR. JOSPEH சொன்னது…

ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கு, கொள்கைகள் உடன்பாடு இல்லாமல் தேர்தலுக்கு மட்டுமே என்ற நோக்கில் நேர்மையே இல்லாமல் இணைந்து ஒருவாகும் கூட்டணி ஆட்சிகள் என்றுமே இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தடையாகவே அமையும்.//

ஆமாங்க. இத கேரளத்தின் கடந்த முப்பதாண்டு கால அனுபவத்தைப் பார்த்தாலே புரியும். அங்கு என்னதான் இல்லை. இருந்தும் மாறி, மாறி வரும் கூட்டணி ஆட்சியால் எதிலுமே முன்னேறாமல் இருக்கிறது.

கூட்டணி ஆட்சி என்ற கருத்தில் தவறில்லை. ஆனால் சம கருத்துள்ள கட்சிகள் அதில் இல்லாமல் போவதுதான் பிரச்சினையே.

தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ம.க தலைவரின் ஈகோதான் சிக்கலை ஏற்படுத்துகிறது. கூட்டணியில் அவர் ஒரு ஜூனியர் பார்ட்னர் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறார். அரசு எதை செய்தாலும் 'தன்னிடம்' (கவனியுங்கள் பா.ம.கவிடம் அல்ல) கலந்தாலோசிக்கவேண்டும் என்று நினைக்கிறார். வெட்ட வெளிச்சமாக கூறவேண்டுமென்றால் He is a pest. அவரை திருப்திப்படுத்துவதென்பது முடியாத காரியம். மு.க.வின் முடிவு சரியான முடிவு. இப்போது தேவைப்படுவது ஜெ.யும் அவரை சேர்த்துக்கொள்ளக் கூடாது. தனியாக நின்று அவருடைய பலத்தை நிரூபிக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்