பின்பற்றுபவர்கள்

10 ஜூன், 2008

மூத்த / மூத்திர பதிவர்கள்... !

சூடான இடுகையில் இடம் பெற கொலைவெறி தலைப்பு வைக்க வேண்டும், நேற்றைய தட்ஸ் தமிழ் செய்திகள் கூட தலைப்பு சூடாக இருந்து இன்று அதை பதிவேற்றினால் சூடாகிவிடும். அப்படி நிறைய பதிவுகளை தமிழ்மணம் சூடான இடுகைகளில் பார்த்து இருக்கிறேன்.

ஐயையோ சொல்ல வந்ததே வேற...

முத்த பதிவர்கள் என்று ஒரு மேட்டரை பதிவர் மோகன் கந்தசாமி கிளப்பிவிட்டு இருக்கிறார். முதலில் மூத்தப்பதிவர்கள் யார் ? பதிவெழுதி பெயர் வாங்கியவர்களா ? நீண்ட நாட்களாக எழுதி வருபவர்களா ? வலைப்பதிவு ஒரு கட்டற்ற, எல்லையற்ற ஊடகம், இதில் எதனையும் வரையறுத்துக் கொண்டு செல்லமுடியாது. படிப்பதற்கு ஏதுவானவற்றை பிறர் முகம் சுழிக்காவண்ணம் எழுதுவோம் என்ற தத்தம் உறுதி மொழித்தவிர்த்து எந்த கட்டுப்பாடும் இல்லை. மொக்கையில் பெயர்போனவர்களும் சிறந்த பதிவர்களே, முன்பு பாலச்சந்தர் கனேசன் என்ற பதிவர் வெறும் 4 வரிகளில் நாள்தோறும் எழுதிவந்தார். அவரும் அன்றைய காலகட்டத்தில் (2 ஆண்டுகளுக்கு முன்பு) எல்லோராலும் அறியப்பட்டார். மாதத்திற்கு ஒருமுறை பதிவெழுதினாலும் பதிவர் ஜெகத் ஒரு சிறந்த பதிவர். இதுபோல் அவரவர் பாணியில் தங்கள் எழுத்துக்களால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

நீண்ட நாள்களாக எழுதுபவர்களுக்கு பின்னுட்டத்திற்கு மறுமொழி அளிப்பதற்கு சோம்பல் இருக்கும், தன்னைப்பற்றி பேசப்படவேண்டும் என்பதற்காக பரபரப்பாக எழுதி வந்தாலும் மறுமொழி இடுவதற்கு சோம்பல் வந்துவிடும். அதற்காக அவர்கள் நீண்ட நாள் எழுதி பிரபலமாகிவிட்டதால் (பிரபலம் - இதெல்லாம் யாராவது கிளப்பிவிடுவதுதான்) பின்னூட்டத்தை மதித்து மறுமொழி இடவில்லை என்றெல்லாம் தவறாக நினைக்கத்தேவையில்லை. நீண்ட நாட்களாக எழுதினாலும் இலவசக் கொத்தனார், பினாத்தல் சுரோஷ், டோண்டு இராகவன் ஆகியோர்கள் பின்னூட்டமிடுபவர்களுக்கு மறுமொழி எழுதுவதில் பதிவை விட மிகுந்ததாகவே எழுதுவார்கள். பதிவைவிட பின்னூட்டத்தில் அடித்து ஆடுவதுதான் அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்து புதிய பதிவர்கள் என்றால் மறக்காமல் அங்கெல்லாம் போய் துளசி கோபால் அம்மா (டீச்சர்) தனக்கு அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு வந்துவிடுவார்கள்.

நீண்ட நாட்கள் எழுதுபவர்களுக்கு மறுமொழி இடுவதில் அலுப்பாக இருக்குமேயின்றி தயக்கம் எதுவும் இருக்காது. மற்ற படி மூத்தபதிவர் என்பதால் பதிவு / தமிழ்மண தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்றெல்லாம் சொல்வதெல்லாம் வெறும் ஊகம் தான். அப்படி யாரும் தாம் மூத்தப்பதிவர், பிரபலம் என்று சொல்லிக் கொண்டால் அவர் பரிதாபத்துக்கு உரியவரே....எந்த ஒரு பதிவரும் தொடர்ந்து 6 மாதம் எழுதவில்லை என்றால் அவர்களின் அடையாளம் பதிவுலகில் இருந்தே மறைந்த்து போகிறது ? பிறகு எங்கே சீனியர் ? ஜூனியர் என்ற நாமகரணமெல்லாம்.

பல்வேறு வயது வகையில் நீண்ட நாள் எழுதிவருபவர்கள் உண்டு.

மூத்தப்பதிவர்கள் என்ற வரையறையில் யாரும் இல்லை. எனக்கு தெரிந்து மூத்திர பதிவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பால் குடி மறக்காமல் இன்னும் படுக்கையில் ஒன்னுக்குப் போகும் குட்டீஸ் கார்னர் பதிவர்கள் தான் அவர்கள். :)

27 கருத்துகள்:

Athisha சொன்னது…

ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீட்டே,,,,,,,

அப்படியே ஒரு நல்ல பதிவரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி

முரளிகண்ணன் சொன்னது…

கலக்கல் விளக்கம்.

நிலா சொன்னது…

குட்டீஸயும் வம்புக்கு இழுக்கும் கோவி மாமாவுக்கு குட்டீஸ்கார்னரின் குட்டீஸ் சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிலா சொன்னது…

இதை கண்டித்து பால் பாட்டிலுடன் குட்டீஸ் ஊர்வலம் தயாராக இருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//
நிலா said...
குட்டீஸயும் வம்புக்கு இழுக்கும் கோவி மாமாவுக்கு குட்டீஸ்கார்னரின் குட்டீஸ் சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

4:33 PM, June 10, 2008
//

பேபி நிலா,

குட்டீஸ் எல்லாம் பள்ளிவிடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு போயிவிட்டார்களா ? இப்போதெல்லாம் பதிவில் லூட்டி அடிப்பதில்லையே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நிலா said...
இதை கண்டித்து பால் பாட்டிலுடன் குட்டீஸ் ஊர்வலம் தயாராக இருக்கிறது

4:34 PM, June 10, 2008
//

நிலா,
பலூன் மாமாவையோ, பஞ்சு மிட்டாய் வண்டியையோ அங்கே அனுப்பினால் கூட்டம் புறப்படாமல் அங்கேயே நின்றுவிடும். போராட்டத்தை முறியடித்துவிடுவேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீட்டே,,,,,,,

அப்படியே ஒரு நல்ல பதிவரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி
//

அதிஷா,

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
கலக்கல் விளக்கம்.

4:24 PM, June 10, 2008
//

முரளிகண்ணன் சார்,

மிக்க நன்றி !

நிலா சொன்னது…

//
பேபி நிலா,

குட்டீஸ் எல்லாம் பள்ளிவிடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு போயிவிட்டார்களா ? இப்போதெல்லாம் பதிவில் லூட்டி அடிப்பதில்லையே ?//

அதுவா மாமா? குட்டீஸ் எல்லாமே டைப்பிஸ்ட்டா அவங்க அப்பாவைத்தான் யூஸ் பண்ணாங்க. இந்த அப்பாக்கள்ளாம் இப்போ டயர்டாயிட்டாங்க.

ரெண்டு கடிய போட்டுத்தான் திரும்ப டைப்ப வைக்கிறோம்.

கொஞ்ச நாள்ளயே வளர்ந்து நாங்களே டைப்ப ஆரம்பிச்சுடுவோம்.

அந்த சமயத்தில நாங்கதான் மூத்த பதிவர்

கோவி.கண்ணன் சொன்னது…

//அதுவா மாமா? குட்டீஸ் எல்லாமே டைப்பிஸ்ட்டா அவங்க அப்பாவைத்தான் யூஸ் பண்ணாங்க. இந்த அப்பாக்கள்ளாம் இப்போ டயர்டாயிட்டாங்க.

ரெண்டு கடிய போட்டுத்தான் திரும்ப டைப்ப வைக்கிறோம்.

கொஞ்ச நாள்ளயே வளர்ந்து நாங்களே டைப்ப ஆரம்பிச்சுடுவோம்.

அந்த சமயத்தில நாங்கதான் மூத்த பதிவர்
//

அதெல்லாம் ச்சும்மா...எல்லாம் சரக்கடிக்கிற அப்பாமார்கள்...சரக்கடிச்சு கவுந்து கிடப்பாங்க....முகத்தில் சூடாக தண்ணீர் (தான்) அடிச்சு எழுப்புங்க.
:)

மங்களூர் சிவா சொன்னது…

/
எனக்கு தெரிந்து மூத்திர பதிவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பால் குடி மறக்காமல் இன்னும் படுக்கையில் ஒன்னுக்குப் போகும் குட்டீஸ் கார்னர் பதிவர்கள் தான் அவர்கள். :)
/

வன்மையாக கண்டிக்கிறேன்!!!!

மங்களூர் சிவா சொன்னது…

/
நிலா said...
இதை கண்டித்து பால் பாட்டிலுடன் குட்டீஸ் ஊர்வலம் தயாராக இருக்கிறது
/

இந்த ஊர்வலத்திற்கு அகில இந்திய நயந்தாரா நற்பணிமறமும், அகில இந்திய ஷ்ரேயா கோஷல் நற்பணி மன்றமும் மங்களூரிலிருந்து ஆதரவு தெரிவிக்கிறது!!!

மங்களூர் சிவா சொன்னது…

/
நிலா said...
இதை கண்டித்து பால் பாட்டிலுடன் குட்டீஸ் ஊர்வலம் தயாராக இருக்கிறது
/

இந்த ஊர்வலத்திற்கு அகில இந்திய நயந்தாரா நற்பணிமறமும், அகில இந்திய ஷ்ரேயா கோஷல் நற்பணி மன்றமும் மங்களூரிலிருந்து ஆதரவு தெரிவிக்கிறது!!!

மங்களூர் சிவா சொன்னது…

மத்தபடி மோகன்கந்தசாமி பதிவுதான் நேற்று ஜூடான இடுகை,

எனவே அவரும் இனி மூத்திர ச்ச மூத்த பதிவர்தான்!!

:))))

துளசி கோபால் சொன்னது…

//எந்த ஒரு பதிவரும் தொடர்ந்து 6 மாதம் எழுதவில்லை என்றால் அவர்களின் அடையாளம் பதிவுலகில் இருந்தே மறைந்து போகிறது ? பிறகு எங்கே சீனியர் ? ஜூனியர் என்ற நாமகரணமெல்லாம்.//

இது......

உண்மை.

TBR. JOSPEH சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க கண்ணன்.

பின்னூட்டங்கள் வருவதில்லை என்கிற ஆதங்கம் எல்லா புதிய பதிவர்களுக்கும் வருவதுதான். எனக்கும் ஒரு காலத்தில் இருந்தது.

ஆனால் அப்போதும் இப்போதும் தான் எழுதும் எல்லா பதிவுகளுக்கும் குறைந்த பட்சம் பத்து பின்னூட்டங்களாவது பெறும் ஒரே பதிவர் நான் அறிந்தவரை துளசி மட்டும்தான். அது அவருடைய எழுத்துக்கும் அவர் மற்ற பதிவர்களுக்கு தரும் ஆதரவுக்கும் கிடைக்கும் பரிசு.

நீங்கள் கூறியதுபோல தொடர்ந்து எழுதாமல் இருந்தால் மற்றவர்களுடைய சிந்தையில் இருந்து மறைந்து போய்விடுவதும் சகஜம்தான்.

ஆனாலும் உங்க பதிவுல வந்த இந்த மாதிரியான தலைப்பு! எதிர்பார்க்கலை.

வடுவூர் குமார் சொன்னது…

நகைச்சுவையாக கூட எழுத வருமா?
கடைசி பத்தி குபுக் என்று சிரிப்பை வரவழைத்தது.

வால்பையன் சொன்னது…

பின்னூட்ட கடமைங்க்கர முறையில
பதிவுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத
பின்னூட்டம் போடறவங்கள பத்தி என்ன நினைகிரிங்க

வால்பையன்

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...


வன்மையாக கண்டிக்கிறேன்!!!!
//

சிவா,

நீங்க 'குட்டி' கார்னர் பதிவர் ஆச்சே...எப்போ குட்டீஸ் கார்னர் பதிவர் ஆனிங்க...முதல் மூன்று எழுத்தப் பார்த்துட்டு அங்கே போய்விட்டீர்களா ?

ஐயோ பாவம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
இந்த ஊர்வலத்திற்கு அகில இந்திய நயந்தாரா நற்பணிமறமும், அகில இந்திய ஷ்ரேயா கோஷல் நற்பணி மன்றமும் மங்களூரிலிருந்து ஆதரவு தெரிவிக்கிறது!!!

4:59 PM, June 10, 2008
//

சிவா,
மேலே நான் இட்ட மறுமொழியை மெய்யாக்கிவிட்டது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
மத்தபடி மோகன்கந்தசாமி பதிவுதான் நேற்று ஜூடான இடுகை,

எனவே அவரும் இனி மூத்திர ச்ச மூத்த பதிவர்தான்!!

:))))
//

அடப்பாவமே மோ.க மீது ஏன் இத்தனை காண்டு ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

இது......

உண்மை.

5:12 PM, June 10, 2008
//

துளசி அம்மா,

முன்னாள் பதிவர்கள் ஆகிவிடுகிறார்கள்.:)

கோவி.கண்ணன் சொன்னது…

//டி.பி.ஆர் said...
ஆனாலும் உங்க பதிவுல வந்த இந்த மாதிரியான தலைப்பு! எதிர்பார்க்கலை.//


ஜோசப் ஐயா,

கடைசி பத்தியைப் படித்ததும் அந்த த(லை)ப்பை ரசித்திருப்பீர்கள் என்று நினைத்தேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
நகைச்சுவையாக கூட எழுத வருமா?
கடைசி பத்தி குபுக் என்று சிரிப்பை வரவழைத்தது.

7:50 PM, June 10, 2008
//

குமார்,
மிக்க மிக்க மிக்க நன்றி !

TBR. JOSPEH சொன்னது…

குட்டீஸ சொன்னீங்களா? மறுபடியும் படிச்சிப்பார்த்ததும் புரிஞ்சிது. :-)))

மோகன் கந்தசாமி சொன்னது…

/////நீண்ட நாள்களாக எழுதுபவர்களுக்கு பின்னுட்டத்திற்கு மறுமொழி அளிப்பதற்கு சோம்பல் இருக்கும், தன்னைப்பற்றி பேசப்படவேண்டும் என்பதற்காக பரபரப்பாக எழுதி வந்தாலும் மறுமொழி இடுவதற்கு சோம்பல் வந்துவிடும். அதற்காக அவர்கள் நீண்ட நாள் எழுதி பிரபலமாகிவிட்டதால் (பிரபலம் - இதெல்லாம் யாராவது கிளப்பிவிடுவதுதான்) பின்னூட்டத்தை மதித்து மறுமொழி இடவில்லை என்றெல்லாம் தவறாக நினைக்கத்தேவையில்லை/////

திரு.கோவி.கண்ணன்,
நான் தவறாக நினைக்கவில்லை, வருத்தம் இல்லை, கோபம் இல்லை, பதிவுலகில் அதற்கெல்லாம் அர்த்தம் இல்லை என்று தெரியும். நான் அந்த பதிவு எழுதிய காரணம் "சூடான இடுகைகளில் இடம் பெற வேண்டி நான் உட்பட பலர் வைக்கும் தலைப்புகள் யாருக்கும் பிரச்சினையை தருவதில்லை, மாறாக ஒரு அந்நியோன்னியத்தை ஒருவேளை தரலாம்" என்ற என் கருத்தை சொல்லவும், "முகம் சுழிக்கும் தலைப்புகள் என்ற பட்டம் சூட்டி அவைகளை தகாத செயல்கள் ஆக்குவது ஏற்கமுடியாது என்று கூறி முடிக்கவும்தான். "பழைய பதிவர்கள் புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிடுவது இல்லை" என்று தவறாக என்னியிருந்ததேன்.


எனது பதிவில் அதிஷா -வின் பின்னூட்டத்திற்கு பதில் சொல்லும் போது கீழ்க்கண்டவாறு கூறியிருந்தேன்.

"////இவ்வகைப் பதிவுகளை நீங்கள் கண்டு கொண்டதில்லை, அதாவது பின்னூட்டமிடுவதில்லை. அதை புரிந்து கொள்கிறோம். வலியச்சென்று கைகுலுக்கினால், முகத்தைத் திருப்பிகொண்டீர்கள், சரி, உங்களை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், இப்போது முகத்தையும் சுழிப்பது எதற்கு? விளக்குவீர்களா?/////"

இப்போது என் கருத்தை மாற்றிக்கொண்டேன்.
நன்றி.

மோகன் கந்தசாமி சொன்னது…

/////எனவே அவரும் இனி மூத்திர ச்ச மூத்த பதிவர்தான்!!////

எந்த டெஸ்ட்டும் வைக்காம சேத்துகிட்டாச்சா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்