பின்பற்றுபவர்கள்

5 ஜூன், 2008

சென்னை விமான நிலையத்தால் மகளுமானவன் !

இந்த முறை சென்னைப் பயணத்தில் எதிர்பார்க்காதெல்லாம் நடந்தது...எதிர்பார்த்தது சில நடக்கவில்லை. குறிப்பாக இந்த முறை அண்ணன் ரத்னேஷை சந்திக்கலாம் என்றிருந்தேன். முன்கூட்டியே வரும் தேதியெல்லாம் 2 மாதத்திற்கு முன்பே சொல்லி இருந்தேன். நாகப்பட்டினத்திற்கே வந்து சந்திப்பதாக சொல்லி இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவருடன் தொடர்பு அறுந்து போனது. வேலையில் மூழ்கி கிடக்கிறாரா தெரியவில்லை. அவருடைய பதிவுகளும் 2 மாதங்களுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் பலரின் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறது. அவருடைய தொலைபேசி எண் வாங்கிவைக்கவில்லை என்பதால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. மீண்டும் விரைவில் பதிவு எழுதுவார் என்று நம்புகிறேன். அவரை சந்திப்பது எனது நோக்கமாகவே இருந்தது, முடியாமல் போனது வருத்தம், ஏமாற்றம் தான். அவ(ரவ)ருக்கு இருக்கும் அலுவலக வேலைகள், மற்ற மற்ற சொந்த வேலைகள் அவ(ரவ)ர் அறிந்து மட்டுமே. அடுத்தமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டுகிறதா பார்ப்போம்.

இன்னுமொரு எதிர்பாராதது......

நமது இந்திய விமானப் பயணங்களில் மட்டும் தான், திரும்பும் முன் பயணச்சீட்டுகளை மறு உறுதிப்படுத்தச் (ரி கன்பர்மேசன்) சொல்கிறார்கள். மற்ற விமானங்களில் பயணச் சீட்டுவாங்கும் போதே திரும்பும் தேதியை உறுதி செய்துவிட்டால் அந்த தேதியில் பயணம் மேற்கொள்ளலாம். எனது மகளுக்கு பள்ளி விடுமுறை முடிய இன்னும் 3 வாரங்கள் இருப்பதால் அவளையும், மனைவியையும் தமிழகத்திலேயே விட்டுவிட்டு, எனது விடுப்பு முடிந்ததால் நான் குறிப்பிட்ட தேதியில் மறு உறுதி படுத்திவிட்டு, மகளின் பயணத்தேதியை மட்டும் தள்ளிப் போட்டு மறு உறுதி படுத்தினேன். மனைவியின் பயணச்சீட்டு தனியாக வாங்கி இருந்ததால் அதில் மாற்றம் செய்யவில்லை. எனது பயணத்தேதியை மாற்றாமல் குறிப்பிட்ட நாளிலேயே கிளம்பினேன். எலக்டாரானிக் பயணச்சீட்டுதான் (e_ticket). விமான நிலையத்தில் உள்நுழைவு சீட்டு (போர்டிங் பாஸ்) கொடுக்கும் பெண் அலுவலர் குளறுபடி செய்துவிட, எனது பயணச்சீட்டிற்கு பதில் எனது மகள் பெயரிலான பயணச்சீட்டை வைத்து உள்நுழைவு சீட்டு கொடுத்துவிட்டார். நான் அதை கவனிக்காது விமானம் ஏறி சிங்கை வந்துவிட்டேன். 7 வயது மகள் பெயரில் நான் பயணம் செய்திருப்பதை சிங்கை வந்துதான் கவனித்தேன்.

அதை கவனித்ததுமே ... எதோ குளறுபடியாகப் போகுது என்று தெரிந்தது. பார்கலாம் என்று...மகளுக்கு பயணச்சீட்டை மீண்டும் மறு உறுதிப்படுத்த எனது நண்பர் சென்னையில் முயன்றபோது, பயணி ஏற்கனவே பயணித்து விட்டதாக சொன்னார்களாம். நிலவரப்படி எனது பயணச்சீட்டு தேதி குறிப்பிடாமல் (ஓபன்) இருப்பதாகவும், அதை இனி பயன்படுத்த முடியாது, பயண நிறுவனத்தை (ட்ராவல் ஏஜென்சி) அனுகி பாதி பணம் கிடைக்கிறதா என்று முயற்ச்சி செய்யுங்கள் என்றார்களாம். மகளுக்கு புதிதாக பயணச்சீட்டு எடுக்க வேண்டுமாம். அதுவும் நிறைந்துவிட்டதாக (Full) அவர்கள் சொல்ல காத்திருப்பு பட்டியலில் ஒரு பயணச்சீட்டு வாங்கி வைத்திருக்கிறேன்.

பொதுவாக பயணச்சீட்டு வாங்கும் போதுதான் பெயரை சரிபார்ப்பது வழக்கம். விமானநிலையத்தில் உள்நுழைவு சீட்டில் (Boarding pass) பெயர் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. இருக்கை எண்னையும், நுழைவாயில் எண்னையும் தான் கவனிப்பேன், கவனக்குறைவாக இருந்தது என் தவறு மட்டுமல்ல என்றே நினைக்கிறேன்.

இதுபோன்ற விமான நிலையத்தில் உள்நுழைவு சீட்டுக் கொடுப்பவர், மெத்தனமாக, சரிபார்காமல் தவறு செய்தால்...அது ஆள்மாறாட்டம் செய்து தப்பிப்பவர்களுக்கு மிக மிக எளிதானதே. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கே இந்த குளறுபடிகளைச் செய்கிறார்கள். உள்நாட்டில் வேறு பெயர்களில் விமானப்பயணம் மேற்கொள்வது இன்னும் எளிதென்றே நினைக்க வைக்கிறது.

போர்டிங்க் பாஸ் எனப்படும் உள்நுழைவு சீட்டையும், கடவுச் சீட்டையும் (பாஸ் போர்ட் - அது என்னுடையது தான்) காட்டித்தான், குடிநுழைவு சோதனை, பாதுகாப்பு சோதனை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன். ஒருவரும் உள்நுழைவு சீட்டில் பெண் பெயர், பெண் பாலினம் இருப்பதை கவனிக்கவில்லை.

விமான நிலைய அலுவலரின் கவனக்குறைவால்....என் மகள் பெயரில் என்னை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆள்மாறட்ட உள்நோக்கம் இல்லாதவர்களையே ஆள் மாற்றிவிடுகிறார்கள். அதே நோக்கத்தில் விமான வழித்தடம் மூலம் தப்பிப்பவர்களுக்கு மிக எளிதென்றே நினைக்க வைக்கிறது.

10 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

ஹிம்... :(

வடுவூர் குமார் சொன்னது…

இப்படி ஒரு ஓட்டை இருப்பதை முதலில் யார் தெரிந்துகொள்ளப்போகிறார்களோ??

கொடுமை தான்.

முரளிகண்ணன் சொன்னது…

நம்ம நாட்டை நினைச்சா :-((

கிரி சொன்னது…

பிரச்சனை இதோட போனதே என்று சந்தோசப்பட்டு கொள்ளுங்கள், மாறி வந்து விட்டீர்கள் என்று உங்களை நொங்கு எடுக்காமல் விட்டார்களே. நம்ம ஆளுங்க பொறுப்பா இருக்க மாட்டாங்க, பொறுப்பா பிடித்து விட்டாங்கன்னு வைங்க அவ்வளோ தான் நமக்கு சனி தான்.

ஆனால் எனக்கு மிக ஆச்சர்யமாக உள்ளது போர்டிங் பாஸ் போடும் இடம், இமிக்ரேசன் முன்பு ஒருவர் மற்றும் இமிக்ரேசன் நபர் இத்தனை பேரும் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்று எனக்கு புரியவில்லை. இமிக்ரேசன் ல் கூட்டமாக போனால் கூட வாய்ப்பு இருக்கிறது, தனியாக சென்றும் இப்படி என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

Thekkikattan|தெகா சொன்னது…

அடக் கொடுமையே!!

ஹய்யோ, ஹய்யோ... என்னது இதெல்லாம் ச்சின்னப் புள்ளைத் தனமால்லே வேலை பார்க்கிறாய்ங்க... போர்டிங் பாஸ் தட்டிக் கொடுத்தவருக்கும் பல யோசனை, வாங்கி பக்காவா பாக்கெட்டில் வைச்சிக்கிட்ட உங்களுக்கும் பல யோசனை, நுழைவுச் சீட்டை கண்ட இடத்திலும் வாங்கி பார்த்து பார்த்து அனுப்பும் பல ஆட்களுக்கும் பல யோசனை...

ஆக எல்லாம் சேர்ந்து உங்க தலையில கையை வைச்சிட்டாய்ங்க, என்ன இன்னொரு 20 ஆயிரம் ரூபா ஆயிருக்குமா புது டிக்கெட்க்கு...

பாதி பணமெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான் கோவி, ஆனா, நீங்க சிங்கை ஏர்லைன்சா இருந்தா கடிதம் ஏதாவது எழுதி ஆக்சுவலா என்ன நடந்துச்சுன்னு சொல்லி போட்டுப் பார்க்கலாம்... ஏர்போர்ட்டை விட்டு வெளியே வருவதற்கு முன்னமே கூட உள்ளேயே ரகளை விட்டுறுக்கலாம், ஏதாவது செஞ்சு கொடுத்திருக்க வாய்ப்புண்டு... கஷ்ட காலம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
ஹிம்... :(
//

சோகத்தை பங்கிட்டு கொண்டதற்கு நன்றி !

டிக்கெட் எடுத்து நட்டமாச்சு...அதுக்கு எதாச்சும் நிவாரணம் கிடைக்குமா ?
அடுத்த முறை சலூனுக்குப் போகும் போது டிப்ஸ் வைக்கனும். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
நம்ம நாட்டை நினைச்சா :-((

7:36 PM, June 05, 2008
//

முரளிகண்ணன் சார்,

அரசு பணியில் இருப்பவர்களுக்கு சம்பளம் ஒழுங்காக கிடைத்துவிடுகிறதே. அது போதாதா அவர்களுக்கு. சேவையெல்லாம் வெறும் கண்துடைப்புதான். :(

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
பிரச்சனை இதோட போனதே என்று சந்தோசப்பட்டு கொள்ளுங்கள், மாறி வந்து விட்டீர்கள் என்று உங்களை நொங்கு எடுக்காமல் விட்டார்களே. நம்ம ஆளுங்க பொறுப்பா இருக்க மாட்டாங்க, பொறுப்பா பிடித்து விட்டாங்கன்னு வைங்க அவ்வளோ தான் நமக்கு சனி தான்.

ஆனால் எனக்கு மிக ஆச்சர்யமாக உள்ளது போர்டிங் பாஸ் போடும் இடம், இமிக்ரேசன் முன்பு ஒருவர் மற்றும் இமிக்ரேசன் நபர் இத்தனை பேரும் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்று எனக்கு புரியவில்லை. இமிக்ரேசன் ல் கூட்டமாக போனால் கூட வாய்ப்பு இருக்கிறது, தனியாக சென்றும் இப்படி என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

8:40 PM, June 05, 2008
//

கிரி,
பாஸ்போர்ட்டை காட்டிதான் சீட்டு வாங்கி இருக்கிறோம். பாஸ்போர்ட் என்னுடையதுதான். எனவே குடிபுகல் பிரச்சனை இல்லை. இப்ப எனக்கு பாதி டிக்கெட் நஷ்டமானதுதான் சோகம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
பிரச்சனை இதோட போனதே என்று சந்தோசப்பட்டு கொள்ளுங்கள், மாறி வந்து விட்டீர்கள் என்று உங்களை நொங்கு எடுக்காமல் விட்டார்களே. நம்ம ஆளுங்க பொறுப்பா இருக்க மாட்டாங்க, பொறுப்பா பிடித்து விட்டாங்கன்னு வைங்க அவ்வளோ தான் நமக்கு சனி தான்.

ஆனால் எனக்கு மிக ஆச்சர்யமாக உள்ளது போர்டிங் பாஸ் போடும் இடம், இமிக்ரேசன் முன்பு ஒருவர் மற்றும் இமிக்ரேசன் நபர் இத்தனை பேரும் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்று எனக்கு புரியவில்லை. இமிக்ரேசன் ல் கூட்டமாக போனால் கூட வாய்ப்பு இருக்கிறது, தனியாக சென்றும் இப்படி என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை
//

கிரி,

அங்குமட்டும் தான் போர்டிங் பாஸை சரியாக பார்க்காமல் விட்டார்கள் என்று நினைக்க முடியவில்லை. இங்கு சிங்கையில் டூயூட்டி ப்ரி கடையில் அதே போர்டிங்க் பாஸைக் காட்டி அலுவலக பார்டிகளுக்கு 2 பாட்டில் வாங்கினேன். சிங்கையிலும் சரிபார்க்கவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
இப்படி ஒரு ஓட்டை இருப்பதை முதலில் யார் தெரிந்துகொள்ளப்போகிறார்களோ??

கொடுமை தான்.

7:14 PM, June 05, 2008
//

குமார்,

அவர்களுக்கெல்லாம் இதைவிட எளிய பின்வாசலே இருக்கும். கவலையை விடுங்க !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்