பின்பற்றுபவர்கள்

2 ஜூன், 2008

போலியும் நானும் !

'நான் தான் கோவி.கண்ணன் பேசுறேன்' என் பெயரில் போலியாக அறிமுகப்படுத்திக் கொண்டு பலரை நம்ப வைத்து ஏமாற்றுபவர் அவர்.

அவர் சென்னை பதிவர் சந்திப்புக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன். 'நாமக்கல்லில் முட்டை வியாபராம் பெருகுவதற்காக ... நான் சென்று சேவல் விற்கப்போகிறேன்' என்று சொல்லிவிட்டு பதிவர் சந்திப்புக்கு வராமல் ஏமாற்றிவிட்டார்.

சென்ற வெள்ளி (30/மே/2008) சென்னையில் தான் இருக்கிறாரா என்று உறுதிபடுத்திக் கொள்ள தொலைபேச, 'இருக்கேன்...நிறைய ஆணி இருக்கு...முடிஞ்சா சாயங்காலம் 6 மணிக்கு மேல் பார்ப்போம்' தனது ஜனாதிபதி வேலையின் பளுவில் அலுத்துக் கொண்டாலும், மறுநாள் அவரே கூப்பிட்டார்... 'சாயங்காலம் 6 மணிக்கு திருமங்கலத்திற்கு வந்துடுங்க பார்ப்போம். அங்குதான் எனக்கு ஆப்பும், ஆணி அடிக்கிறாங்க' என்றார். சரியாக ஆறுமணிக்கு மணிக்கு அண்ணா நகர், புளூஸ்டார் அருகில் 'ஹை ஸ்டெயில்' கடைக்குள் நான் என் நண்பருடன் நின்று கொண்டிருந்த போது அழைத்தார்.

'வாய்யா...இங்கே தான் ஹைஸ்டெயிலில் இருக்கிறேன்' என்று இடம் சுட்டினேன்.

வந்தார்.

"நான் தான் கோவி.கண்ணன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்'

"பித்தானந்த பகவானே .... அது தெரியும் சுவாமி" என்றேன்

வெளியில் வந்து...

"இன்னிக்கு புகையிலை ஒழிப்பு தினம் நாமும் முடிந்தவரை புகையிலை ஒழிக்கலாம் " என்று அவர் சொல்ல...

"நல்ல வேலை நினைவு படுத்தினீர்கள்...செஞ்சிட்டா போவுது..." புகையிலை அழியும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தோம்.

"கோவி, இது என்ன சார்ட்ஸ் போட்டு ஊரெல்லாம் சுத்திவர்றீங்க..."

"என்னை மாதிரி ஏழைகளுக்கு முக்கால் Pant தைத்துக் கொள்ளத்தான் துணி எடுக்க பணம் இருக்கு..."

"அதுசரி... சரியாத்தான் சொல்றிங்க"

"நமீதா, நயந்தாரா என்னைவிட ஏழைங்க...பரம ஏழைங்க ... என்ன தான் பெரிய பட்ஜெட்டில் நடித்தாலும் அவர்களுக்கு துணி எடுக்கும் போது தயாரிப்பாளர்களுக்கு விழும் சிறிய துண்டைத் தான் அவர்களுக்கு உடையாக்க வேண்டி இருக்கிறது"

"காலை காட்டுங்க....." என்றார்

"பித்தானந்த சாமி தரிசனம் கொடுதுட்டிங்க... சாமிக்கு காணிக்கை ?"

"சாமி காணிக்கை என காசை கையால் தொடுவது இல்லை. பக்தர்கள் விரும்பினால்... ஒரு கிளாஸ் தீர்த்தமே போதும்"

அதன் பிறகு அவரை தள்ளிக் கொண்டு தற்காலிக பேச்சிலராக இருக்கும் நண்பர் இல்லத்திற்கு சென்று கிரிக்கெட் பார்த்துக் கொண்டே....

வெறும் ஸ்னாக்ஸ் தான் சாப்பிட்டோம். (நம்பாதவங்களை யாரும் நம்ப வேண்டாம்)

சுவாமி அவரது இல்லத்திற்கு அழைத்தார்...நேரமின்மை காரணமாக செல்ல முடியவில்லை.

சுவாமியை நான் சந்திப்பது 2 ஆவது தடவை. இந்த முறை சாதாரண சாமியாக இருந்தவர் சற்று சுற்று பெறுத்து பிள்ளையார் சாமியாக ஆகி இருக்கிறார்.

என் பெயரில் போலியாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த போலிச்சாமி யார் தெரியுமா ? தெரியாதவங்க தெரிஞ்சவங்களிடம் கேட்டுக் கொள்ளுங்க !

19 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)
மலேசியால இருந்து திரும்பீட்டாரா அவர்?

ஜோ/Joe சொன்னது…

//ஜனாதிபதி வேலையின் பளுவில் //

வேறு உதாரணமே கிடைக்கல்லியா கோவியாரே! நம்ம நாட்டுல ஜனாதிபதி மாதிரி வெட்டியா இருக்குறது யாராவது உண்டா?

இராம்/Raam சொன்னது…

பார்க்க தள தள'ன்னு ஜெகன்மோகினி படத்திலே வர ".." மாதிரி இருந்தாரா??? :) எப்பவும் பிசி'னு வேற உல்டாவா சொல்லியிருப்பாரே??? :)

SP.VR. SUBBIAH சொன்னது…

நாமக்கல், முட்டை, பித்தானந்தா, நயன்தாரா, புகையிலை, தீர்த்தம் என்று எல்லாவற்ரையும் போட்டு உடைத்து விட்டீர்.இனி என்ன பாக்கியிருக்கிறது - அவரைத் தெரியாமல் போக?

ILA (a) இளா சொன்னது…

எங்க ஆளு குண்டுதான், அதுக்காக பெருச்சாளின்னு சொல்றதா(பிள்ளையார்)

//வெறும் ஸ்னாக்ஸ் தான் சாப்பிட்டோம். ///
நம்பிட்டோம்.......

யோசிப்பவர் சொன்னது…

//'நாமக்கல்லில் முட்டை வியாபராம் பெருகுவதற்காக//
//திருமங்கலத்திற்கு வந்துடுங்க பார்ப்போம்//
//நமீதா, நயந்தாரா //
//சுற்று பெறுத்து பிள்ளையார் சாமியாக ஆகி இருக்கிறார்.
//
எனக்கு தெரிஞ்சு போச்சு!;-)

வடுவூர் குமார் சொன்னது…

சரி,கேட்டு தெரிந்துகொள்கிறோம்.
வேறு வழி!!

கப்பி | Kappi சொன்னது…

போன வருசம் நீங்க சிங்கையில் இருந்தபோது சென்னையில் சந்தித்தோமே அப்பவே அவரைத் தெரியும் :))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:)
மலேசியால இருந்து திரும்பீட்டாரா அவர்?
//

ஜெகதீசன்,

என்கிட்ட சொல்லாமல் போவாரா ?

சொல்லிட்டுத்தான் திரும்பினார்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...


வேறு உதாரணமே கிடைக்கல்லியா கோவியாரே! நம்ம நாட்டுல ஜனாதிபதி மாதிரி வெட்டியா இருக்குறது யாராவது உண்டா?
//


நான் ஜனாதிபதி என்று தான் சொன்னேன்.
அமெரிக்க ஜனாதிபதியாக நினைத்துக் கொள்ளுங்கள். திரு கலாம் தானே கனவு காணச் சொன்னார்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...
பார்க்க தள தள'ன்னு ஜெகன்மோகினி படத்திலே வர ".." மாதிரி இருந்தாரா??? :) எப்பவும் பிசி'னு வேற உல்டாவா சொல்லியிருப்பாரே??? :)//

இராம்,
படத்திலே வர (ரீமேக்) நமீதா மாதிரி தான் இருந்தார். தொப்பைக்கு கூட காப்பீட்டு பத்திரம் வாங்கி வச்சிருக்காராம். தொப்பை இளைத்தால் கனிசமான பணம் கிடைக்குமாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
நாமக்கல், முட்டை, பித்தானந்தா, நயன்தாரா, புகையிலை, தீர்த்தம் என்று எல்லாவற்ரையும் போட்டு உடைத்து விட்டீர்.இனி என்ன பாக்கியிருக்கிறது - அவரைத் தெரியாமல் போக?//


சுப்பையா சார்,

அவரோட சாதகம் சகலமும் அறிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களிம் புதிர் போட முடியுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
எங்க ஆளு குண்டுதான், அதுக்காக பெருச்சாளின்னு சொல்றதா(பிள்ளையார்)

//வெறும் ஸ்னாக்ஸ் தான் சாப்பிட்டோம். ///
நம்பிட்டோம்.......
//

என்ன கொடுமை,

அவரை பெருச்சாளின்னு சொல்லிட்டு போங்க...நான் சொன்னதாக ஏன் சொல்லனும். :)

நம்பிட்டிங்களா ? உங்களை யாரோ அப்பாவின்னு சொன்னாங்க...தப்பு தப்பு தப்பு !
:))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//யோசிப்பவர் said...
//'நாமக்கல்லில் முட்டை வியாபராம் பெருகுவதற்காக//
//திருமங்கலத்திற்கு வந்துடுங்க பார்ப்போம்//
//நமீதா, நயந்தாரா //
//சுற்று பெறுத்து பிள்ளையார் சாமியாக ஆகி இருக்கிறார்.
//
எனக்கு தெரிஞ்சு போச்சு!;-)
//

யோசிப்பவர்,

இதவச்சு 2 - 3 புதிர் துணுக்கு எழுத முடியாதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
சரி,கேட்டு தெரிந்துகொள்கிறோம்.
வேறு வழி!!
//

குமார்,

ஊருக்கே தெரிந்த சங்கதி, உங்களுக்கு தெரியாமல் இருக்குமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கப்பி பய said...
போன வருசம் நீங்க சிங்கையில் இருந்தபோது சென்னையில் சந்தித்தோமே அப்பவே அவரைத் தெரியும் :))
//

கப்பி,
இப்ப கூட குசும்பன் திருமணத்தில் கோவி.கண்ணனாகத்தான் சென்று வந்திருக்கிறார்.,


கப்பி,

உங்கள் நட்சத்திர பதிவுகளை இன்னும் படிக்கல..ஊரில் இருந்ததால் படிக்க நேரம் கிட்டவில்லை. இனி படிக்கனும் .

VSK சொன்னது…

நாமக்கல்லாரை கலாய்த்தது நல்லாவே இருக்கு!

வேணும் அவருக்கு!:))

தருமி சொன்னது…

VSK-க்கு நன்றி - முட்டைய உடைச்சதுக்கு...

நிஜமா நல்லவன் சொன்னது…

இன்னைக்கு காலைல கூட பெங்களூர்ல இருந்து உங்க பேர சொல்லித்தான் என்கிட்டே பேசினாரு:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்