பின்பற்றுபவர்கள்

12 ஜூன், 2008

லக்கி லுக் அவர்களுக்கு "நறுக்கென்று 4 கேள்விகள்" !

சுடர் விளையாட்டு என்னும் தொடர் விளையாட்டு தேன் கூடு சார்பில் முன்பு நடந்தது. சுடர் பலர் கைகளுக்கு மாறிக் கொண்டிருக்கும் போதே சுடர் அணைந்துவிட்டது (திரு சாகரனின் மறைவு). சுடர் விளையாட்டில் தனக்கு (தானே அல்ல) கேள்வி கேட்க விருப்பமுள்ள பதிவர்களிடம் கேள்வி எழுப்புவதும், அதற்கு அவர்கள் பதிலாக ஒரு இடுகையை எழுதுவதும், இடுகையின் முடிவில் பதில் சொல்லுபவர் வேறொருவருக்கு கேள்விகளை வைப்பார்... இது (ஒற்றை) சங்கிலியாக தொடர்ந்து செல்லும். தற்பொழுது வலைப்பதிவுகளில் கேள்வி - பதில் பற்றி சீசன் கிளம்பி இருப்பதாக பதிவர் நண்பர் 'சற்றுமுன்' சிறில் அலெக்ஸ் பதிவிட்டு இருந்தார். அவருக்கு அங்கேயே நறுக்கென்று கேள்விகளை கேட்டு வந்திருக்கிறேன். பதில் சொல்லத் திணறுவார் என்றே நினைக்கிறேன். :)

இங்கு நான் கேள்வி கேட்க விரும்பும் பதிவர், வலைப்பூ சுனாமி லக்கி லுக், அவரிடம் நான் கேட்க விரும்பும் எனது 'நறுக்' கேள்விகள்

1. நீங்கள் முதன் முதலில் பார்த்த ஷகீலா படம் பற்றிய சிறுகுறிப்புடன், எந்த வயதில், எந்த திரையிரங்கில் பார்த்தீர்கள் என்று தெளிவாக சொல்ல முடியுமா ?

2. நீங்கள் (சமீபத்தில்) திமுகவின் தீவிர ஆதரவாளன் ஆனபோது உங்கள் வயது என்ன ?

3. உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்கீறார்களே... அது உண்மையா ? வதந்தியா ?

4. வளர்மதி, ஜ்யாவ்ராம் சுந்தர், சுகுணாதிவாகர், பைத்தியக்காரன் மற்றும் உண்மை தமிழன் ஆகிய ஐவரில் யாரைப் பார்த்ததும் உடனே எழுந்து ஓடுவீர்கள் ?

அப்படியே நீங்கள் கேள்விக் கேட்கும் நபரை குறிப்பிட்டு நச்சின்னு நாலு கேள்வி கேளுங்க.

பதில் அளித்த லக்கி லுக் அவர்களுக்கு நன்றி !

9 கருத்துகள்:

முரளிகண்ணன் சொன்னது…

சுனாமிக்கே அலையா?

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

:-)

லக்கிலுக் சொன்னது…

அய்யா! காலையில் தான் ஒரு பதிவு போட்டேன். கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டு பதில் சொல்லலாம்ங்களா? :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
சுனாமிக்கே அலையா?

11:09 AM, June 12, 2008
//

சுனாமியிலும் வல போடுவோம்ல
:)

கோவி.கண்ணன் சொன்னது…

VIKNESHWARAN said...
:-)

-------

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
அய்யா! காலையில் தான் ஒரு பதிவு போட்டேன். கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டு பதில் சொல்லலாம்ங்களா? :-)

1:18 PM, June 12, 2008
//

இன்னும் 24 மணி நேரம் இருக்கு உங்களுக்கு.

:)

மண்வெட்டியான் சொன்னது…

மன்னிக்கவும். லக்கி லுக் வரும் வரை என்னால் பொறுக்க இயலாது. எனவே அவரின் சார்பாக நான் சொல்லிவிடுகிறேன். தயவு செய்து வெளி இடவும்.

//1. நீங்கள் முதன் முதலில் பார்த்த ஷகீலா படம் பற்றிய சிறுகுறிப்புடன், எந்த வயதில், எந்த திரையிரங்கில் பார்த்தீர்கள் என்று தெளிவாக சொல்ல முடியுமா ?//

டிஸ்கோ சாந்தி, அபிலஷா போன்றோர் நடித்த (!!) நான் பார்த்த பழைய மலையாள படங்களுக்கு முன்னால் சகீலா படங்கள் வெறும் குப்பையே. சுமார் பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன், நான் பதினொன்றாம் வகுப்பு இரண்டாம் முறை படிக்கும் பொழுது அவைகளை பார்த்தேன்.

//2. நீங்கள் (சமீபத்தில்) திமுகவின் தீவிர ஆதரவாளன் ஆனபோது உங்கள் வயது என்ன ?//

எனக்கு பெயர் சூட்ட வந்த அறிஞர் அண்ணாவை பார்த்தபொழுது!

//3. உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்கீறார்களே... அது உண்மையா ? வதந்தியா ?//

அது வெறும் தந்தி. எந்த பெண்ணையோ எதிலிருந்தோ காப்பற்ற அடிக்கப்பட்ட தந்தி.

//4. வளர்மதி, ஜ்யாவ்ராம் சுந்தர், சுகுணாதிவாகர், பைத்தியக்காரன் மற்றும் உண்மை தமிழன் ஆகிய ஐவரில் யாரைப் பார்த்ததும் உடனே எழுந்து ஓடுவீர்கள் ?//

இந்த ஐந்து பேரில் இல்லாத நபர் ஒருவரை சொல்லுவேன் என்று எதிபார்த்தீர்கள் தானே... ஹிஹி ...

பரிசல்காரன் சொன்னது…

அருமையான ஐடியா! (அசோகன் ஸ்டைலில் படிக்கவும்) ஆட்டத்துக்கு நான் சேத்தி உண்டா?

லக்கிலுக் சொன்னது…

கோவியாரே!

பதில்கள் ரெடி!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்