பின்பற்றுபவர்கள்

26 அக்டோபர், 2008

கன்னடத்துக்கு செம்மொழி சிறப்பு ஏன் வழங்கக் கூடாது ?

செம்மொழிக்கான சிறப்புத் தகுதியான,

"A classical language, is a language with a literature that is "classical"—ie, "it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own, not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature."[1] (George L. Hart of UC Berkeley)"

மிகவும் பழையதாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும், இலக்கிய வளங்களை உடையதாக இருக்கும் மொழிகளே சொம்மொழிக் கான சிறப்புத் தகுதி வாய்ந்தவை என்றுச் சொல்லப்படுகிறது. தமிழ் செம்மொழி என்று நாம் கண்டுகொள்ளமால் வெளிநாட்டுக்காரர்கள் அறிந்த உண்மைகளின் வழியாகவே அறிந்து பல ஆண்டுகளாகப் போராடி ஞாயமாகக் கிடைக்க வேண்டிய ஒன்றை 'நமது' இந்திய அரசிடம் வேண்டா வெறுப்பாகப் பெற்றோம். அதையும் பழிக்கும் வண்ணமாக செம்மொழி சோறுபோடுமா ? என்று ஒரு கூட்டம் கூறிவருகிறது. செத்துப் போன மொழியே சோறுபோடும் போது செம்மொழி சோறுபோடாதா ? சோறு போட்ட அன்னை உணவுடன் ஊட்டி வளர்த்த மொழி தானே. தூற்றுபவர்களை புறம் தள்ளுவோம்.

இந்திய மொழிகளில் குறிப்பாக தென்னிந்திய மொழிகளில் தமிழைப் போலவே தொன்மையானது கன்னட மொழி, கன்னட மொழியில் இருந்து பிரிந்த மொழியே தெலுங்கு, கன்னடத்தின் எழுத்துவடிவம் கிபி 500க்கு பிறகு முழு தனி வடிவம் பெற்றது. அதற்கும் முன்பு தமிழுக்கும் கன்னடத்திற்கும் பொதுவாக தமிழ் எழுத்துக்களே பயன்பட்டது. வடமொழி ஆதிக்கத்தால் முதலில் சிதைந்தது கன்னடம் தான். கன்னட மொழி தமிழ் மொழியில் இருந்து பிறந்தது என்று சொல்வதை விட தமிழின் உடன்பிறந்தவள் (சகோதரி) என்று சொல்வதே சாலப் பொருத்தம் என்று தேவ நேயப்பாவாணர் முதல் பலர் சொல்லி இருக்கிறார்கள். காரணம் தமிழில் இருந்து கன்னடம் பிரிந்தது என்று சொல்வதைவிட இரண்டு மொழிகளும் எப்போதும் இருந்தது. இரண்டிற்கும் பொதுவாக ஆயிரக்காணக்கான சொற்கள் உண்டு. கிபிக்கு பிறகு வடமொழி ஆதிக்கத்தால் வேறு வழி இன்றி புதிய எழுத்துக்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் கிரந்த எழுத்துக்களில் தமிழில் இல்லாத எழுத்துக்களையும் சேர்ந்து மொத்தம் 51 எழுத்துக்களுடன் புதிய வடிவம் எடுத்தது. கன்னடத்தில் 'ழ' வும், 'ள' வும் இருந்தது வரலாறு. 'ழ' 400 நூற்றாண்டுக்கு முன்பு வழக்கு இழந்தது 1972லிருந்து 'ள' வையும் எடுத்துவிட்டது. கன்னடத்திலிருந்து எழுத்தை உருவாக்கிய தெலுங்கில் 'ள' இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. தெலுங்கு மட்டுமின்றி கொங்கனி மற்றும் துளு ஆகிய மொழிகளை எழுத கன்னட எழுத்துக்களே பயன்படுகின்றன.

கீழே உள்ள பட்டியலைப் பார்த்தால் தெரியும், செம்மொழி எவ்வளவு ஆண்டு பழையதாக இருக்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் எதுவுமில்லை.

The following languages are generally taken to have a "classical" stage.

Classical Sumerian (literary language of Sumer, ca. 26th to 23rd c. BC)
Middle Egyptian (literary language of Ancient Egypt from ca. the 20th century BC to the 4th century AD)
Old Babylonian (The Akkadian language from ca 20th to 16th c. BC, the imitated standard for later literary works)
Classical Hebrew (the language of the Tanakh, in particular of the prophetic books of ca. the 7th and 6th c. BC)
Classical Chinese (based on the literary language of the Zhou Dynasty from ca. the 5th c. BC)
Classical Greek (Attic dialect of the 5th c. BC)
Classical Sanskrit (defined by Panini's grammar, ca. 4th c. BC) [3]
Classical Tamil (the language of Sangam literature[4], 2nd c. BC to 3rd c. AD)[5]
Classical Latin (literary language of the 1st c. BC)
Classical Mandaic (literary Aramaic of Mandaeism, 1st c. AD)
Classical Syriac (literary Aramaic of the Syriac church, 3rd to 5th c.)
Classical Armenian (oldest attested form of Armenian from the 5th c. and literary language until the 18th c.)
Classical Persian (court language of the Sassanid empire, 3rd to 7th c.)
Classical Maya (the language of the mature Maya civilization, 3rd to 9th c.)
Classical Arabic (based the language of the Qur'an, 7th c.)
Classical Kannada (Used in inscriptions from 5th c. and language of the Rashtrakuta literature, 9th to 10th c.)
Classical Japanese (language of Heian period literature, 10th to 12th c.)
Classical Icelandic (the language of the Icelandic sagas, 13th c.)
Classical Gaelic (language of the 13th to 18th c. Scottish Gaelic literature)
Classical Quechua (lingua franca of the 16th c. Inca Empire)
Classical Nahuatl (lingua franca of 16th c. central Mexico)
Classical Quiché (language of 16th c. Guatemala)
Classical Tupi (language of 16th -18th c. Brazil)
Classical Ottoman Turkish (language of poetry and administration of the Ottoman empire, 16th to 19th c.)

இருந்தாலும் ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க அந்த நாட்டு அரசாங்கம் தான் முயற்சிக்க வேண்டும். வடமொழியைத் தவிர்த்து திராவிட மொழிகளின் மீது பாராமுகமாக இருந்த இந்திய அரசு போனால் போகட்டும் என்ற ரீதியில் பழமையான மொழி என்றால் சுமார் 2000 ஆண்டுகள் முந்தையது என்ற விதியை வைத்து தமிழை செம்மொழியாக அறிவித்தது. கன்னட மொழியில் ஏன் பழமையான இலக்கியமே இல்லையா ?

தமிழைப் போலவே கன்னட மொழிக்கும் பழமையான இலக்கியம் வளம் இருந்தது. அன்றைய தமிழி எழுத்துருவில் இருந்ததெல்லாம் அழிக்கப்பட்டு இருக்க வேண்டும், அல்லது அவை தொல் தமிழாக அறியப்பட்டு இருக்க வேண்டும். தற்பொழுது கன்னட மொழியும் பழங்கன்னடமும் முற்றிலும் மாறுபட்டது. பழங்கன்னட மொழி நூல்கள் அழிந்திருக்கலாம், அல்லது தமிழாக அறியப்பட்டு இருக்கலாம். 'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்ற ஆத்திச் சூடியில் 'ஓதாமல்' என்றால் 'படிக்காமல்' என்று பொருள், தமிழில் படிப்பு, வாசித்தல் என்பதை இன்றும் கன்னடத்தில் 'ஓது' என்று தான் சொல்லுவார்கள். அதே ஓது என்ற சொல்லை மந்திரம் ஓதுதல், பாத்தியா ஓதுதல் என்று வழிபாட்டு வாசிப்புக்கு பயன்படுத்தி வருகிறோம். இங்கே ஆத்திச்சூடி கன்னட இலக்கியம் என்று சொல்ல வரவில்லை. எடுத்துக்காட்டு வெறும் எடுத்துக்காட்டு. நாம் 'எச்சரிக்கை' என்ற சொல்லை தமிழில் பயன்படுத்துகிறோம், இந்த 'எச்சரிக்கை' என்ற சொல் கன்னடச் சொல் 'எச்சரிக்கே' என்றதிலிருந்து வந்ததுதான். 'எச்சரிக்கைக்கு' மாற்றான சொல் தமிழில் இல்லை. 'விழிப்புணர்வு' என்று சொல்லலாம் ஆனால் அதில் 'கவனத்துடன் அனுகுங்கள் என்ற பொருளும் சேர்ந்தே வராது. 'கவனம்' என்ற சொல் கூட சரியாக 'எச்சரிக்கை' என்பதன் பொருளை தந்துவிடாது.

தமிழைப் போலவே பல சமய இலங்கியங்கள், அதாவது சமணம், பவுத்தம், ஆசிவகம், வைதீகம், சைவம், வைணவம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் சார்பில் எழுதப்பட்ட நூல்கள் எண்ணற்றவையும் பழமையானவையாகவும் ஏராளம் உண்டு. வடமொழியில் கிறித்துவர்களின் பைபிளோ, இஸ்லாமியர்களின் குரோனோ மொழிப்பெயர்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்க. மதங்களுக்கு அப்பாற்பட்ட மொழிகள் என்ற தகுதியில் தமிழைப் போலவே கன்னடமும் சிறப்பு வாய்ந்தது. அதுமட்டுமல்ல புழக்கத்தில் உள்ள மொழியும் கூட. நான் அறிந்தவகையில் கன்னட மழலைச் சொல் தமிழைவிட இனிமையானது.

தமிழுக்கு செம்மொழி சிறப்புத் தகுதி கிடைத்தது போலவே, மற்றொரு திராவிட மொழியான கன்னடத்திற்கும் செம்மொழி சிறப்புத் தகுதி கொடுக்கப் படவேண்டும், 500 ஆண்டுகளுக்கு குறைவான வரலாறு உள்ள மொழிகளுக்கு இந்த தகுதியை சில நாடுகள் அவர்களின் மொழிக்குக் கொடுக்கும் போது வரலாற்று அளவில் 1500 ஆண்டுகளுக்கும் மேலான கன்னட மொழிக்கு கொடுப்பதில் தவறேதும் இல்லை.

தமிழைப் போலவே போற்றப் படவேண்டிய மற்றொரு மொழி கன்னடம், இந்திய அரசு கன்னடர்களின் கோரிக்கையை ஏற்று கன்னடத்திற்கு செம்மொழி சிறப்புத் தகுதி வழங்க உடனடியாக முன்வரவேண்டும்.
கன்னடத்திற்கு செம்மொழி தகுதி கிடைப்பது திராவிட இனத்திற்கும் பெருமையானதும் கூட.

இணைப்பு : கன்னடத்துக்கு செம்மொழி-பிரதமருக்கு எச்சரிக்கை - தட்ஸ்தமிழ்

26 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தராமல் ஓயப்போவதில்லை - பிரபல பதிவர் கோவி.கண்ணன் எச்சரிக்கை! அப்படின்னு வெகு சன நாளிதழ்களில் செய்தி கொடுத்துவிடுவோம்.

எனது வேண்டுகோள்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் ஓர் இருக்கைக்கு ஏற்பாடு செய்யுங்கள் கோவியாரே! நானும் கன்னடத்தை பழகிக் கொள்கிறேன்.

SurveySan சொன்னது…

குடுத்துட்டப் போலாமே.

இப்படி 'செம்மொழி' ஆக்கினா, அம்புட்டு 'துட்டு' கெடைக்குமா என்ன? இப்படி தொங்கறாங்களே இதுக்கு?

btw, உங்க ஃபேஸ் கட்ட பாத்தா, நல்லா பாடுவீங்கன்னு தோணுது. உருக்கமா ஒரு பாட்டு பாடி அனுப்புங்க
http://neyarviruppam.blogspot.com/2008/10/blog-post_24.html

கோவி.கண்ணன் சொன்னது…

// SurveySan said...
குடுத்துட்டப் போலாமே.

இப்படி 'செம்மொழி' ஆக்கினா, அம்புட்டு 'துட்டு' கெடைக்குமா என்ன? இப்படி தொங்கறாங்களே இதுக்கு?//

SurveySan, மூன்றாம் பத்தியை சரியாக வாசிக்கலையோ :)

//btw, உங்க ஃபேஸ் கட்ட பாத்தா, நல்லா பாடுவீங்கன்னு தோணுது. உருக்கமா ஒரு பாட்டு பாடி அனுப்புங்க
http://neyarviruppam.blogspot.com/2008/10/blog-post_24.html
//

எங்கள் வீட்டு மீது கல் மழை பொழிய வைக்க மாபெரும் சதி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தராமல் ஓயப்போவதில்லை - பிரபல பதிவர் கோவி.கண்ணன் எச்சரிக்கை! அப்படின்னு வெகு சன நாளிதழ்களில் செய்தி கொடுத்துவிடுவோம். //

அம்புட்டு துட்டு இருந்தால் செய்யுங்க, நான் தவறாக ஒன்றும் எழுதவில்லை. தமிழ் மயக்கத்தில் பிற மொழிகள் பற்றி நாம் நினைப்பதே இல்லை. :(

//எனது வேண்டுகோள்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் ஓர் இருக்கைக்கு ஏற்பாடு செய்யுங்கள் கோவியாரே! நானும் கன்னடத்தை பழகிக் கொள்கிறேன்.
//

:) புலமை பெற்ற அளவுக்கெல்லாம் தெரியாது சாரே !

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு கோவி கண்ணன்,

எனக்கு மொழி பற்று எல்லாம் கிடையாது. இருந்தாலும் பாரதியை போல கூற முயற்சி செய்தாலும் “ஞான் சம்சாரிக்குந்த மொழியினூடே...” என்று மலையாளத்தில் தமிழை பற்றி கூறும் அளவுக்கு மொழி குழப்பம் உண்டு.


உங்கள் பதிவு செம்பொழி மற்றும் கருமொழி என பல விஷயங்கள் சொன்னாலும் என்னக்கு அரசியல் அறிவு குறைவு என்பதால் பிறர் உதவியுடன் பிறகு படிக்கிறேன்.

அதற்கு முன் ஒரு செய்தி.

ஸ்ரீ சக்கரத்தில் அமைக்கும் பொழுது அந்த காலம் முதல் தற்காலம் வரை
சக்கரத்தின் மையத்தில் கன்னட எழுத்துக்களைதான் எழுதுவார்கள். கன்னடம் அவ்வளவு தொன்மையானது என்று சொல்லலாம்.

குடுகுடுப்பை சொன்னது…

நீங்கள் சொல்வது சரியெனப்படுகிறது.

RATHNESH சொன்னது…

ஏதோ போனாப் போகுதுன்னு தமிழைச் செம்மொழின்னு சொன்னா, உங்க பழைய பேட்டை ஆளுக்கெல்லாம் அந்தத் தகுதி குடுன்னு கேட்க ஆரம்பிச்சுட்டீங்களே!

பாரதரத்னா, கலைமாமணி மாதிரி ஆகிடப் போகுது CLASSICAL LANGUAGE என்கிற உன்னதமான சிறப்பின் நிலையும். முகம்மது பின் துக்ளக் நாடகத்தில் நான் பிரதமர் எல்லோரும் துணைப் பிரதமர்ங்கறமாதிரி, இந்தி தேசிய மொழி மத்த எல்லாம் செம்மொழின்னு கூட தீர்மானம் கொண்டு வந்திருவாங்க.

உங்கள் பதிவு அறிவு பூர்வமான பொது விஷயம். நான் பின்னூட்டமாக எழுதி இருப்பது இந்திய அரசியல் சமூக நிலை.

Great சொன்னது…

http://ilaikkaran.blogspot.com/2008/08/blog-post_12.html

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

மத்திய அரசை நடத்திச் செல்ல..கன்னட அனைத்து எம்.பி.க்கள் ஆதரவும் அரசுக்கு இருக்குமானால்..கன்னடம் செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு தயார் என்கிறார் பிரதமர்.
விஷ்யத்துக்கு வருவோம்..
நீங்கள் சொல்வது உண்மை..செம்மொழிக்கான தகுதி கண்டிப்பாக கன்னடத்திற்கு உண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
திரு கோவி கண்ணன்,

எனக்கு மொழி பற்று எல்லாம் கிடையாது. இருந்தாலும் பாரதியை போல கூற முயற்சி செய்தாலும் “ஞான் சம்சாரிக்குந்த மொழியினூடே...” என்று மலையாளத்தில் தமிழை பற்றி கூறும் அளவுக்கு மொழி குழப்பம் உண்டு.//

ஸ்வாமி ஓம்கார்,

நான் கன்னடம் பற்றி அறிந்தது அந்த மாநிலத்தில் வேலை பார்த்த ஓர் ஆண்டில் தான். அதற்குன் அப்படி ஒரு மொழி இருப்பது கூட தெரியாது.


//உங்கள் பதிவு செம்பொழி மற்றும் கருமொழி என பல விஷயங்கள் சொன்னாலும் என்னக்கு அரசியல் அறிவு குறைவு என்பதால் பிறர் உதவியுடன் பிறகு படிக்கிறேன்.//

திகம்பர சன்னியாசிகளுக்கு தெற்கன்ன, வடக்கென்ன என்று பழமொழி ஞாபகம் வருகிறது :)

//அதற்கு முன் ஒரு செய்தி.

ஸ்ரீ சக்கரத்தில் அமைக்கும் பொழுது அந்த காலம் முதல் தற்காலம் வரை
சக்கரத்தின் மையத்தில் கன்னட எழுத்துக்களைதான் எழுதுவார்கள். கன்னடம் அவ்வளவு தொன்மையானது என்று சொல்லலாம்.
//


தங்கள் செய்திக் கருத்துக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வருங்கால முதல்வர் said...
நீங்கள் சொல்வது சரியெனப்படுகிறது.

1:01 PM, October 26, 2008
//

வருங்கால முதல்வர்,

நான் ஆ(ரா)ய்ந்து தான் எழுதி இருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
ஏதோ போனாப் போகுதுன்னு தமிழைச் செம்மொழின்னு சொன்னா, உங்க பழைய பேட்டை ஆளுக்கெல்லாம் அந்தத் தகுதி குடுன்னு கேட்க ஆரம்பிச்சுட்டீங்களே!

பாரதரத்னா, கலைமாமணி மாதிரி ஆகிடப் போகுது CLASSICAL LANGUAGE என்கிற உன்னதமான சிறப்பின் நிலையும். முகம்மது பின் துக்ளக் நாடகத்தில் நான் பிரதமர் எல்லோரும் துணைப் பிரதமர்ங்கறமாதிரி, இந்தி தேசிய மொழி மத்த எல்லாம் செம்மொழின்னு கூட தீர்மானம் கொண்டு வந்திருவாங்க. //

ரத்னேஷ்,
உங்கள் பின்னூட்ட நகைச்சுவை அருமை. உங்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

//உங்கள் பதிவு அறிவு பூர்வமான பொது விஷயம். நான் பின்னூட்டமாக எழுதி இருப்பது இந்திய அரசியல் சமூக நிலை.
//

புரிகிறது :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Great said...
http://ilaikkaran.blogspot.com/2008/08/blog-post_12.html
//

அதை ஏற்கனவே படித்து இருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
மத்திய அரசை நடத்திச் செல்ல..கன்னட அனைத்து எம்.பி.க்கள் ஆதரவும் அரசுக்கு இருக்குமானால்..கன்னடம் செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு தயார் என்கிறார் பிரதமர்.//

T.V.Radhakrishnan ஐயா,
இதெல்லாம் மிரட்டல், ஒரு பிரதமருக்கு மாநில மொழி குறித்த அறிதல் புரிதல் இருக்க வேண்டும்.

//விஷ்யத்துக்கு வருவோம்..
நீங்கள் சொல்வது உண்மை..செம்மொழிக்கான தகுதி கண்டிப்பாக கன்னடத்திற்கு உண்டு.
//

கட்டுரையை வலுப்படுத்தும் உங்கள் கருத்துக்கு நன்றி !

Muthu சொன்னது…

அய்யா,

கன்னடகாரங்களே அவங்க மொழி தேவபாடையிலிருந்து (சாரி,சம்சுகிருதத்திலிருந்து) வந்ததுன்னு ஒத்துகிறாங்களே.

அப்படி இருக்க,நீங்க சொன்ன அந்த தனித்துவம் என் கண்ணுக்கு தெரியலீங்களே..இப்படி சொன்னா நான் தமிழ் வெறியனுங்களா?

Matra சொன்னது…

Muthu Thamizhini,

By being born of a Mother, I dont lose my individuality. That being the case, if Kannadigas accept Sanskrit as a Mother language of Kannada, I dont see why it should lose individuality.

Perhaps you are so brainwashed against Sanskrit that you are thinking this way.

Muthu சொன்னது…

போச்சுரா..தெய்வகுத்தம் ஆயிப்போச்சா..தேவபாசை வாழ்க..போதுமா மாத்ரா..

நான் சொல்லவந்தது கன்னடத்திற்கு என்று ஒரு தனிவரலாறோ அல்லது தமிழ் அறிஞர்கள் கூறுவது போல் தமிழிலிருந்து வந்தாலும் ஒரு தனித்துவமோ இருக்கலாம்.

ஆனால் சம்சுகிருதத்திலிருந்து வந்தது என்று ஒத்துக்கொண்டு இத்தனை நாளாக வாளா இருந்தவர்கள் தமிழுக்கு செம்மொழி என்று வந்ததும் ஏட்டிக்கு போட்டியாக கேட்பதைத்தான் நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்து தமிழினி said...
அய்யா,

கன்னடகாரங்களே அவங்க மொழி தேவபாடையிலிருந்து (சாரி,சம்சுகிருதத்திலிருந்து) வந்ததுன்னு ஒத்துகிறாங்களே.

அப்படி இருக்க,நீங்க சொன்ன அந்த தனித்துவம் என் கண்ணுக்கு தெரியலீங்களே..இப்படி சொன்னா நான் தமிழ் வெறியனுங்களா?
//

முத்து தமிழினி ஐயா,

தமிழ் தேவபாடையில் இருந்து பிறந்த சூத்திர பாசை என்று சொல்லுபவர்களே
கன்னடம் தேவபாடையில் இருந்து பிறந்தது என்று சொல்லுவார்கள்.

மற்றவர்கள் அல்ல.

தயவு செய்து, இந்த ஆங்கில விவாதங்களைப் படித்துப் பாருங்கள். சமஸ்கிரதத்திற்கு ஆப்பு வைத்திருப்பதை தெரிந்து கொள்ளுங்கள். கன்னடர்கள் வடமொழியை தேவபாடை என்று நினைத்ததெல்லாம் மலையேறிப் போச்சு. நான் இங்கே இந்த இடுகையை கண்மூடித்தனமாக எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்து தமிழினி said...
போச்சுரா..தெய்வகுத்தம் ஆயிப்போச்சா..தேவபாசை வாழ்க..போதுமா மாத்ரா..

நான் சொல்லவந்தது கன்னடத்திற்கு என்று ஒரு தனிவரலாறோ அல்லது தமிழ் அறிஞர்கள் கூறுவது போல் தமிழிலிருந்து வந்தாலும் ஒரு தனித்துவமோ இருக்கலாம்.

ஆனால் சம்சுகிருதத்திலிருந்து வந்தது என்று ஒத்துக்கொண்டு இத்தனை நாளாக வாளா இருந்தவர்கள் தமிழுக்கு செம்மொழி என்று வந்ததும் ஏட்டிக்கு போட்டியாக கேட்பதைத்தான் நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.

11:11 PM, October 26, 2008
//

ஒரு கன்னடரின் விவாதத்தின் ஒரு பகுதியைத் தருகிறேன்.

quote:
--------------------------------------------------------------------------------


Then why the hell are you supporting another langauge and even insulting such a great langauge of ours which has a history of 2500 years?Again Religious reasons? Am I right?

you don't even know how jainism lost its shine and himduism became famous? It was not because of sanskrit,It was because of dasas,vachanakaras who used kannada to spread religion.It was kannada which brought people near to hinduism not sanskrit

I dont like sanskrit only because it is killing kannada words which has now been accelerated.If i talked about caste does not mean I hate it.Most of my friends are indeed brahmins and I discuss such issues more freely with them than you.

There was a time when Hindusim was ready to change as per the requirements.People like ramanujacharya,madhvacharya and shankaracharya debated to improve their religion.But now due to people like you its loosing shine.now those days are not far away when hinduism be joined along with muslims because of fanatics like you who just dont want to improve their religion.

When a brahmin priest listened to my arguments patiently without abusing me of being a caste hater it showed his willigness to listen and improve on things which clearly lacks in you.This is my last post because I dont consider you worthy arguing.No matter what you personal remarks you make it is not going to affect us.End og the thread.period.

I can see so many false false arguments throughout this arguments

1) Sanskrit is mother of prakrit(a universally rejected concept)
2) Sanskrit was responsible for hindustani music(It was persian not sanskrit)
3) All the old literatures are about hinduism(you did not even knew that old literature of kannada was basically about jainism)
4) Kannada did not have words for sun,etc etc(to which i gave proper equivalents)
5) Asked me to name kannada gods which i have given answers.
6) You even went an extent further to letdown kannada in order to praise sanskrit.
7) Sanskrit is a technically perfect langauge(proofs - nil)


I can list many of such things. Inspite of that you try to keep on changing from topic to topic.


http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=3912&whichpage=4

Muthu சொன்னது…

//தமிழ் தேவபாடையில் இருந்து பிறந்த சூத்திர பாசை என்று சொல்லுபவர்களே
கன்னடம் தேவபாடையில் இருந்து பிறந்தது என்று சொல்லுவார்கள்.

மற்றவர்கள் அல்ல//

உங்களுடன் நான் உடன்படுகிறேன்.கோவி.அய்யா திருமிகு.எடியுரப்பா என்ன சொல்றாராம்?

கோவி.கண்ணன் சொன்னது…

// முத்து தமிழினி said...


உங்களுடன் நான் உடன்படுகிறேன்.கோவி.அய்யா திருமிகு.எடியுரப்பா என்ன சொல்றாராம்?

12:04 AM, October 27, 2008
//

தமிழினி ஐயா,
எடியுரப்பா, பங்காரப்பா நம்ம படையப்பா கூட கன்னடர்களின் பிரதிநிதி கிடையாது !
:)

நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவையும், பின்னூட்டங்களையும் காண மகிழ்கிறது மனது. உங்கள் மீள் வருகை, பழைய பதிவர்களுக்கான தீபாவளி பரிசு :)

அறிவகம் சொன்னது…

மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையர் சந்ததியில் இருந்து வந்திருக்கலாம் என்றார் டார்வீன்.
நடந்தது என்ன? குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என டார்வீன் சொன்னதாக திரித்து பிரபலப்படுத்தி விட்டார்கள்.

அதே போல தான் கால்டுவெல், பாவணார் உட்பட மொழி ஆராய்ச்சியாளர்கள். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உட்பட மொழிகள் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்கலாம். அதற்கு திராவிடம் என பெயரிடலாம் என்றனர்.

ஆனால் தமிழில் இருந்து தான் கன்னடம் மலையாளம் வந்தது என பிரபலப்படுத்தி பலர் குதிக்கிறார்கள். இந்த குதிப்பை சகிக்க முடியாமல் தான் நாங்கள் சமசுகிருதத்தின் ..... என்று மலையாளியரும், கன்னடத்தவரும் இதுக்கு அது மேல் என ஒட்டிக்கொண்டார்கள்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பது மனித ரத்தத்தில் ஊரிய உணர்வாயிற்றே.

சாட்சிக்காரன் காலில் விழுவதற்கு சண்டைகாரன் காலில் விழுவது மேல் என அப்பப்ப தமிழர்கள் ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் தாவுர மாதிரி, அவங்களும் தமிழுக்கும் சமசுகிருதத்துக்கும் தாவுகிறார்கள்.

இதெல்லாம் மொழியை வைத்து அரசியல் பண்ணும் சில பித்தலாட்டவாதிகளின் பொழுது போக்கு. பாரிதாபத்திற்குரிய மொழி உணர்வாளர்கள் தான் அரசியல் விளையாட்டு புரியாமல் அப்படியா இப்படியா என அடித்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் கன்னடம், தெலுங்கு மலையாளம் எல்லாம் ஒரு கூட்டுக்குடும்பம் என வெளிநாட்டு மொழியாராய்ச்சியாளர்கள் சொல்ராங்க.

நாமோ எல்லாம் சரி கூட்டுகுடுபத்தில் யார் சம்பாத்தியம் பெரிசு என அடிச்சுக்குறோம்.

தமிழே சமசுகிருதத்தில் இருந்து தான் வந்நது என்றால் நமக்கு எப்படி சுளீர்னு கோபம் வருது. அது மாதிரி தானே தமிழில் இருந்து கன்னடம் மலையாளம் வந்துச்சுனு சொன்னா அவுங்களுக்கும் நியாயமான கோபம் வரும்.

நாம் எல்லோரும் ஒரு தாயின் சரிசமமான இரட்டை(நான்கு, எட்டு) குழந்தைகள் என்ற எண்ணம் என்று அரசியல்வாதிகளுக்கு வருகிறதோ அன்று அது பிரபலமாகும். அன்று சாமானியனும் சகோதரத்துவத்துக்கு வருவான். ம்ம்... நடக்காததை பேசி பலனுன்டா?

அருமையான பதிவுக்கு நன்றி திரு.கோவி கண்ணன். வேலைநெறுக்கடி காரணமாக பதிவு பக்கம் வழக்கமர் வரமுடியலை.

ஈழக்கொடூரம் நெஞ்சை நொருக்க தீபாவளி வாழ்த்து சொல்ல முடியலை...

ஆ.ஞானசேகரன் சொன்னது…

செம்மொழிக்கு முக்கியமான ஒன்று , ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் பொருள் மற்றும் சான்றுகள். அந்த மொழியிலேயே இருக்கவேண்டும்.. அதன் இலக்கிய சான்றுகள் தேவை என்று படித்த ஞாபகம்... குறைந்த பச்ச எண்ணிகையும் இருப்பதாகவும் அறிந்தேன்...
உங்கள் தேடுதலில் கிடைத்தால் விளக்கவும்...

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவகம் said...
மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையர் சந்ததியில் இருந்து வந்திருக்கலாம் என்றார் டார்வீன்.
நடந்தது என்ன? குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என டார்வீன் சொன்னதாக திரித்து பிரபலப்படுத்தி விட்டார்கள்.
.
.
.
.
.//

அறிவகம்,

வழக்கம் போல் உங்கள் தெளிவான கருத்துடன் உடன்படுகிறேன்.

வடமொழியில் இருந்து இந்திய மொழிகள் தோன்றியது (திரிந்தது என்று சொல்வதே சரியான சொல்) என்று சொல்வது போலவே, தமிழில் இருந்து திராவிட மொழிகள் தோன்றியது என்று சொல்வதும் அபத்தமாகவே படுகிறது. தமிழ் திரியாமல் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம், மற்ற திராவிட மொழிகளில் தாக்கம் இருக்கிறதென்றும் சொல்லாம். ஆனால் அவை தமிழில் இருந்து தோன்றியது என்று சொல்வதில் நமக்கும் எந்த பெருமையும் இல்லை, நீங்கள் சொல்வது போல் அவர்கள் கடுப்படைவார்கள் என்பது உண்மை. அடைகிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் 9:42 PM, October 27, 2008
செம்மொழிக்கு முக்கியமான ஒன்று , ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் பொருள் மற்றும் சான்றுகள். அந்த மொழியிலேயே இருக்கவேண்டும்.. அதன் இலக்கிய சான்றுகள் தேவை என்று படித்த ஞாபகம்... குறைந்த பச்ச எண்ணிகையும் இருப்பதாகவும் அறிந்தேன்...
உங்கள் தேடுதலில் கிடைத்தால் விளக்கவும்...
//

ஆ.ஞானசேகரன்,

கன்னடத்திற்கு அறியப்பட்ட வரலாறாகவே 1500 ஆண்டுகால இலக்கிய வரலாறுகள் இருக்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

WHAT ஆளு திரு. கோவியார்,
உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரே வாரத்தில் சோனியாம்மா நிறைவேத்திட்டாங்க.
கலைஞர் அவர்களுக்கு முப்பத்து ஒன்பது ஆண்டுகள் எடுத்துக்கிட்டது, கோவியாருக்கு வெறும் ஒரே வாரந்தான்.
கோவியாருக்கு நாளை பாராட்டு விழாவும் உண்டு பதிவர் சந்திப்பில்.


http://scssundar.blogspot.com/2008/10/blog-post_2045.html

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்