பின்பற்றுபவர்கள்

24 ஏப்ரல், 2009

யார் வைத்த ஒப்பாரி இனிமையாக இருந்தது ?

ஈழத்தமிழர்களின் வாழ்வாதரத்தில் தலையிட்டு இந்திய அரசு செய்தது மன்னிக்க முடியாது வரலாற்று பிழை. இந்தியா இதில் தலை இடாமல் இருந்தால் அவர்கள் வழியில் அவர்கள் போராடிக் கொண்டு இருப்பார்கள், இருந்த கொஞ்சம் நிலப்பகுதியையும் இலங்கை அரசிடம் இழந்து, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கிறார்கள் தமிழர்கள். ஈழத்தில் இருக்கும் ஒவ்வொரு தமிழனின் உடலில் இருப்பது சிவப்பு ரத்தமா, உயிர் வலி இருக்கிறதா என்று பார்க்காமல் ஓயாது சிங்களவெறி, இதற்கு வயிற்றில் வளரும் கருவும் விதி விலக்கு இல்லை.

கொலையில் வீழும் பிணங்களுக்கு சிறப்பாக ஒப்பாறி வைப்பவர் யார் ?

ஜெ- இராமதாஸ் கூட்டணியின் உண்ணாவிரதமா ? கருணாநிதியின் தந்தி,தபால், மனித சங்கிலி, பந்த் ?


நீதி இன்னும் கிடைக்கவில்லை என்று அழுதுக் கொண்டு அவிழ்ந்த கூந்தலை முடிக்க கணவர் உயிருக்காக தமிழர்கள் உயிரெடுக்கப் போவதாக சபதம் செய்த இத்தாலி அம்மையாரா ?
*****இத்தாலி பெண்ணுக்கு தமிழர் உயிர்பற்றி என்ன கவலை வந்துவிடும் ? மன்மோகன் தான் ஆளுறாரு அந்த அம்மா வெறும் காங்கிரசு தலைவலி தான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை கூவுறானுங்க ? பிறகு எதற்கு அரசை விட்டுவிட்டு தலைவலியிடம் போய் முறையிடனும் ?

உரிமைகளை எடுத்துக் கொள்ளாமல் போய் கெஞ்சுவதும், பாதங்களில் விழுந்து கொண்டு பிச்சை எடுப்பதும் தமிழினத்துக்கே இழுக்கு. இதற்கு பதிலாக செத்து தொலையலாம்.அடிபட்ட பாம்பு சும்மா இருக்காது, இன்றைய தமிழ் சிறுவர்கள் இந்தக் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு நாளைக்கு இதில் தொடர்புடையவர்கள் அனைவரையுமே பலிவாங்க தொடங்கினால் அப்போதும் ஞாயம் தருமம் பேச ஒருத்தனுக்கும் அருகதையே இல்லாமல் போய்விடும். ஈழத்தில் உள்ள தமிழர்களை அழித்துவிடலாம், ஆனால் இன்று உலகமெங்கும் பரவி இருக்கும் அவர்களது சொந்த பந்தம் இவற்றை உன்னிப்புடன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. புஷ்சுக்கு நாடுவிட்டு நாடு வந்த போது கிடைத்த செருப்படிகள் முன்னுதாரணமாக இருக்கிறது என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். 25 ஆண்டுகளுக்குப் பிறகும் சிங் செருபால் அடித்தான் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

56 கருத்துகள்:

முகமூடி சொன்னது…

உரிமைகளை எடுத்துக் கொள்ளாமல் போய் கெஞ்சுவதும், பாதங்களில் விழுந்து கொண்டு பிச்சை எடுப்பதும் தமிழினத்துக்கே இழுக்கு. இதற்கு பதிலாக செத்து தொலையலாம்... யார்? நீங்களும் தமிழினத்துல ஒருத்தர்தானே? மேலும் இது உங்களாலும் செய்யக்கூடிய விஷயம்தானே... அப்புறம் எதுக்கு அப்பப்போ பஞ்ச் டயலாக் மட்டும் அடிச்சிகிட்டு இருக்கீங்க... பொலிடிகல் அரங்கமோ, வலைப்பதிவு அரங்கமோ ”ஓட்டு”ன்னு வந்துட்டா வார்த்தை ஜால பொலிடிகலி வழ வழ கொழ கொழ டயலாக் எல்லாம் அப்படியே சரளமா வர்றதுதான் இல்ல?

கோவி.கண்ணன் சொன்னது…

// முகமூடி said...
உரிமைகளை எடுத்துக் கொள்ளாமல் போய் கெஞ்சுவதும், பாதங்களில் விழுந்து கொண்டு பிச்சை எடுப்பதும் தமிழினத்துக்கே இழுக்கு. இதற்கு பதிலாக செத்து தொலையலாம்... யார்? நீங்களும் தமிழினத்துல ஒருத்தர்தானே? மேலும் இது உங்களாலும் செய்யக்கூடிய விஷயம்தானே... அப்புறம் எதுக்கு அப்பப்போ பஞ்ச் டயலாக் மட்டும் அடிச்சிகிட்டு இருக்கீங்க... //

வாங்க மூடி அண்ணா,

என்னால், எங்களால் செய்ய முடிந்தது எதிர்ப்புகளை பதிய வைப்பது, கருத்தின் தாக்கம் இருந்தால், 100 பேர் படிப்பதாக வைத்துக்கொண்டால் அவர்கள் 400 பேரிடம் இதைச் சொல்லுவார்கள். 500 பேருக்கு விழிப்புணர்வு ஊட்டியதாகும். வதந்திகள் பரவுவது போல் கருத்துகளும் பரவும் கொஞம் நேரம் எடுத்துக் கொள்ளும் அவ்வளவுதான்.

இணையத்தின் வழியாகத் தானே எல்லோருமே அறிந்து கொள்கிறோம்.

நீங்களே சொல்லுங்க, சிதம்பரம் பிரச்சனையில் தமிழ் புறக்கணிக்கப்படவில்லை என்று ஜூவி கட்டுரைக் குறித்து தாங்கள் எழுதியது வெறும் நாலு பேர் படிச்சுட்டு சூப்பர்னு சொல்லவா ? உங்களுக்கு என்ற ஒரு நோக்கம் இருக்கு, மாற்று கருத்தை பதிய வைக்க முயலுகிறீர்கள் அது போல் தான் எல்லோருமே. எதிலும் பலன் உண்டு என்பது நம்பிக்கை, அதே போல் உடனடி பலன் எதிலுமே கிடையாது என்பதும் உண்மை

//பொலிடிகல் அரங்கமோ, வலைப்பதிவு அரங்கமோ ”ஓட்டு”ன்னு வந்துட்டா வார்த்தை ஜால பொலிடிகலி வழ வழ கொழ கொழ டயலாக் எல்லாம் அப்படியே சரளமா வர்றதுதான் இல்ல?
////பொலிடிகல் அரங்கமோ, வலைப்பதிவு அரங்கமோ ”ஓட்டு”ன்னு வந்துட்டா வார்த்தை ஜால பொலிடிகலி வழ வழ கொழ கொழ டயலாக் எல்லாம் அப்படியே சரளமா வர்றதுதான் இல்ல?//

அரசியல் விளையாட்டு, வார்த்தை ஜாலம் இவற்றில் எந்த ஒரு வலைப்பதிவருக்கும் பைசா லாபம் கிடையாது, யாராவது யாரிடமாவது கையூட்டு பெற்று அல்லது கைகூலியாக இருந்து கொண்டு எழுதினால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.

ஒரு தமிழனாக உணர்வுகளைக் கூட பதிய வைக்கக் கூடாது என்பதையும், அவற்றிற்கு உள்நோக்கம் கற்பிப்பவருக்கும் வேறொதோ உள் நோக்கம் உண்டு என்று நான் கொண்டால் அது சரியா ?

சொற்குற்றம் பொருள்குற்றம் பார்ப்பது எளிது, ஒரு தமிழனாகக் கூட வேண்டாம், ஒரு மனிதனாக ஒரு மனிதனுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி உங்களைப் பேசத் தடுப்பது எது ?

கிரி சொன்னது…

என்னமோ போங்க! :-(

ILA (a) இளா சொன்னது…

என்ன கருத்தோ பஞ்ச்சோ.. முகமூடி Welcome Back!

aki சொன்னது…

நயவஞ்சக பீலா விட்டு பிலிம் காட்டி சிங்களவனின் தோலில் செருப்பு தைத்து போடுவோம் என்று இனவாத வீரவசனம் பேசி இருபத்தையாயிரம் பிள்ளைகளை மாவீரர் என்று புதைத்தும் இருபதினாயிரம் தமிழரை துரோகிகள் என்று மண்டையில் போட்டும் நாலாயிரம் மாற்று இயக்க விடுதலை போராளிகளை கொன்று குவித்தும் லட்சக்கணக்கான முஸ்லீம்களை அவர்களின் சொத்துக்களை பறித்து அவர்களின் பூர்வீக பூமியிலிருந்து அகதிகளாக கலைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தவர் ஆமாபோட மறுத்து வித்தியாசமாக கதைத்தால் மண்டையில் போட்டும் எங்கேயாவது போவது என்றால் பிணைக்கு ஒரு ஆளை வைத்து பாஸ் எடுத்து போகவேண்டிய சுதந்திரம் அத்தனையும் பறிபோன நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு தமிழருக்கு வடக்கு கிழக்கு இணைந்த தீர்வை கொண்டு வந்து உதவ வந்த ஆயிரக்கணக்கான இந்தியப் படைகளை கொன்றும், உதவ வந்த ராஜீவ் காந்தியையும் ஆயுதமாகவும் பணமாகவும் அள்ளிக்கொடுத்து உதவிய பிறேமதாசாவையும் கொன்றும் இன்று தமிழ் மக்களை பிள்ளைகளையும் சொத்து சுகங்களையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகி விட்டு முப்பது வருசமாக இவர்கள் நடாத்திய பொய் பீலாக்கள் பிசுபிசுத்து புஸ் வானமாகி முழு புலுடாவாக ஆகி விட்டது.

தமிழருக்கு பிரபாகரன் நல்லாய் கேம் குடுத்திட்டார்-கேம் ஓவர்

Jackiesekar சொன்னது…

அடிபட்ட பாம்பு சும்மா இருக்காது, இன்றைய தமிழ் சிறுவர்கள் இந்தக் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு நாளைக்கு இதில் தொடர்புடையவர்கள் அனைவரையுமே பலிவாங்க தொடங்கினால் அப்போதும் ஞாயம் தருமம் பேச ஒருத்தனுக்கும் அருகதையே இல்லாமல் போய்விடும். ஈழத்தில் உள்ள தமிழர்களை அழித்துவிடலாம், ஆனால் இன்று உலகமெங்கும் பரவி இருக்கும் அவர்களது சொந்த பந்தம் இவற்றை உன்னிப்புடன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.“

இப்படி யோசிக்குமா? இந்திய கவர்மெண்ட் நல்ல கேள்வி கோவி

கோவி.கண்ணன் சொன்னது…

// akilan said...


தமிழருக்கு பிரபாகரன் நல்லாய் கேம் குடுத்திட்டார்-கேம் ஓவர்
//

akilan ,
பிரபாகரனுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமிழினம் கொத்து கொத்தாக அழிக்கப்படுவதை ஆதரிக்கும் மடைமையை விட கொடியது எது ?

கோவி.கண்ணன் சொன்னது…

// ILA said...
என்ன கருத்தோ பஞ்ச்சோ.. முகமூடி Welcome Back!
//

இளா,
ஆகா வரவேற்பெல்லாம் பலமாக இருக்கிறது. அவரு 2007 க்கு பிறகு எதுவுமே எழுதவில்லை போல.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
என்னமோ போங்க! :-(
//

:(

முகமூடி சொன்னது…

கோவி,

என் உள்நோக்கம் கிடக்கட்டும், பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதது.. நம்மோட உரையாடல் உங்கள் டயலாக் பற்றித்தான்.. மாற்று கருத்தை பதிய வைப்பது நல்லதுதான்.. நன்றாக பதிய வையுங்கள். ஆனால் உங்களுடைய மாற்று கருத்து என்பது என்ன?

”என்னால், எங்களால் செய்ய முடிந்தது எதிர்ப்புகளை பதிய வைப்பது (மட்டுமே)” என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே ”தமிழினத்துக்கே இழுக்கு. செத்து தொலையலாம்” என்று சொன்னால் அது யாரை நோக்கி..

இதே போன்ற அர்த்தமற்ற பேச்சை அரசியல் கழிசடைகள் மேடையில் பேசுவதை கேட்டு சுயசிந்தனை இல்லாத எத்தனையோ இளைஞர்கள் ஏற்கனவே செத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்... (உடனே அவர்கள் தமிழினத்துக்காக அடைந்த வீர மரணத்தை கொச்சைப்படுத்துகிறேன் என்று வாதம் வரும்.. ஆம் அவர்களுக்கு சுயசிந்தனை இல்லைதான்.. உண்மையிலேயே செயல்படுத்தும் அதிகாரம் கொண்டவர்களும் பதிவர்களும் வைத்திருப்பது போல “என்னால் முடிந்தது அவ்வளவுதான்” என்ற சுயசிந்தனை..) மேலும் போரில் ஏற்கனவே செத்துக்கொண்டிருப்பவர்களை காப்பாற்றும் நோக்கில்தானே கட்டுரையே எழுதப்படுகிறது, அதிலும் செத்துத்தொலையலாம் என்றால்?

செத்து தொலையலாம் என்பது வெறுமே இயலாமையை பதிவு செய்வதன் குறியீடுதான்.. அதற்கு மேல் அதற்கு அர்த்தம் கிடையாது என்று சொல்வீர்களானால் நோ கமெண்ட்ஸ்...

முகவை மைந்தன் சொன்னது…

கோவியின் சொல் விளையாட்டை நான் கண்டிக்கிறேன். ஆனால் எனக்கும் வேறென்ன செய்யலாம் என்று சொல்லத் தெரியாததால என் கண்டனங்களை திரும்பப் பெறுகிறேன்.

@முகமூடி

நீங்களும் ஒத்த உணர்வினராக இருப்பதில் மகிழ்ச்சி. தமிழராய் நாம் எவ்வாறு பங்களிக்கலாம்னு நல்ல அளப்பு ஒண்ணு சொல்லுங்க. திறந்த மனத்தோடு விவாதிக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முகமூடி 11:13 AM, April 24, 2009
கோவி,

என் உள்நோக்கம் கிடக்கட்டும், பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதது.. நம்மோட உரையாடல் உங்கள் டயலாக் பற்றித்தான்.. மாற்று கருத்தை பதிய வைப்பது நல்லதுதான்.. நன்றாக பதிய வையுங்கள். ஆனால் உங்களுடைய மாற்று கருத்து என்பது என்ன?

”என்னால், எங்களால் செய்ய முடிந்தது எதிர்ப்புகளை பதிய வைப்பது (மட்டுமே)” என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே ”தமிழினத்துக்கே இழுக்கு. செத்து தொலையலாம்” என்று சொன்னால் அது யாரை நோக்கி..

இதே போன்ற அர்த்தமற்ற பேச்சை அரசியல் கழிசடைகள் மேடையில் பேசுவதை கேட்டு சுயசிந்தனை இல்லாத எத்தனையோ இளைஞர்கள் ஏற்கனவே செத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்... (உடனே அவர்கள் தமிழினத்துக்காக அடைந்த வீர மரணத்தை கொச்சைப்படுத்துகிறேன் என்று வாதம் வரும்.. ஆம் அவர்களுக்கு சுயசிந்தனை இல்லைதான்.. உண்மையிலேயே செயல்படுத்தும் அதிகாரம் கொண்டவர்களும் பதிவர்களும் வைத்திருப்பது போல “என்னால் முடிந்தது அவ்வளவுதான்” என்ற சுயசிந்தனை..) மேலும் போரில் ஏற்கனவே செத்துக்கொண்டிருப்பவர்களை காப்பாற்றும் நோக்கில்தானே கட்டுரையே எழுதப்படுகிறது, அதிலும் செத்துத்தொலையலாம் என்றால்?

செத்து தொலையலாம் என்பது வெறுமே இயலாமையை பதிவு செய்வதன் குறியீடுதான்.. அதற்கு மேல் அதற்கு அர்த்தம் கிடையாது என்று சொல்வீர்களானால் நோ கமெண்ட்ஸ்...
//

முகமூடி அண்ணா,

செத்து தொலையலாம் என்பது வெறுமே இயலாமையை பதிவு செய்வதன் குறியீடுதான்.. அதற்கு மேல் அதற்கு அர்த்தம் கிடையாது என்று சொல்வீர்களானால் நோ கமெண்ட்ஸ்...

- இவ்வளவு புரிந்து கொண்ட நீங்கள்,

அதற்கு விளக்கம் கேட்பது ஏன் என்று புரியவில்லை. அவர்களை நம்பி இருப்பதற்கு செத்துத் தொலையலாம் என்பதாக குறியீடுதான். 'எங்கேயாவது போய் செத்து தொலையேன்' வீட்டில் சொல்லும் பேச்சு வழக்கு. எல்லோரும் போய் சாகுங்கடா என்று 'எழுச்சி பேச்செல்லாம்
' நான் நடத்தவில்லை. இயலாமை, வெறுப்பு, சினம், எரிச்சல், கண் எதிரே நடக்கும் கொடுமை, இதையெல்லாம் பார்பதைவிட செத்துத் தொலையலாம் என்பதை குறியீடாகத்தான் பதிய வைத்தேன்.

முகமூடி சொன்னது…

// செத்துத் தொலையலாம் என்பதை குறியீடாகத்தான் பதிய வைத்தேன் //

ஹ்ம்... அப்ப சரி.. விடுங்க.. ரெண்டு குறுங்கருத்து :-

அ) 'எங்கேயாவது போய் செத்து தொலையேன்' என்ற வீட்டில் சொல்லும் இயலாமை கலந்த பேச்சு வழக்கால் சொல் பேச்சு தாங்காத எத்தனையோ உயிர்கள் நிஜமாகவே போயிருக்கின்றன..

ஆ) நல்ல கம்பீரமான உரத்த குரலில் தோளில் கிடக்கும் கருப்பு துண்டை இரு கையாலும் ஆட்டியபடி ஏற்ற இறக்கத்தோடு நீங்கள் சொன்ன கருத்து போலவே ஒரு கருத்தை ஒரு தலைவர் கர்ஜித்த ஒரு கூட்டத்தில் சொல் பேச்சு தாங்காத பலகீனமான இதயங்கள் சிலதோடு கலந்து நானும் இருந்திருக்கிறேன்...

கோவி.கண்ணன் சொன்னது…

//முகமூடி said...

ஹ்ம்... அப்ப சரி.. விடுங்க.. ரெண்டு குறுங்கருத்து :-

அ) 'எங்கேயாவது போய் செத்து தொலையேன்' என்ற வீட்டில் சொல்லும் இயலாமை கலந்த பேச்சு வழக்கால் சொல் பேச்சு தாங்காத எத்தனையோ உயிர்கள் நிஜமாகவே போயிருக்கின்றன..

//

முகமூடி அண்ணன்,
எங்க வீட்டில் எல்லாம் 1000 முறை சொல்லி இருப்பாங்க, அசைந்து கொடுத்தது இல்லை. பிள்ளைகள் பலவீனமானவரா இல்லையா என்பது பெற்றவர்களுக்கு தெரியும், அதற்கேற்றவாறு தான் அவர்கள் கொஞ்சமாவது உறைக்கனும் என்பதாக சொற்களைப் அதற்கேற்றவாறு பயன்படுத்துவார்கள்.

//ஆ) நல்ல கம்பீரமான உரத்த குரலில் தோளில் கிடக்கும் கருப்பு துண்டை இரு கையாலும் ஆட்டியபடி ஏற்ற இறக்கத்தோடு நீங்கள் சொன்ன கருத்து போலவே ஒரு கருத்தை ஒரு தலைவர் கர்ஜித்த ஒரு கூட்டத்தில் சொல் பேச்சு தாங்காத பலகீனமான இதயங்கள் சிலதோடு கலந்து நானும் இருந்திருக்கிறேன்...//

தொண்டர்களைப் பற்றி எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை. தலைவர்கள் விரல் அசைத்தாலும், அதுவே அசைந்தாலும் எதையும் செய்வார்கள். பொதுமக்கள் அப்படி இல்லை. நீங்கள் பொதுமக்களில் ஒருவராகத்தானே கலந்து கொண்டீர்கள். மூன்று மாணவிகள் எரிப்புக்குப் பிறகு கட்சித் தொண்டன் என்றால் அவன் மடையனாகவும், விலங்காகவும் தான் இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

முகவை மைந்தன் சொன்னது…

//மூன்று மாணவிகள் எரிப்புக்குப் பிறகு//

மூன்று உயிர்கள்னு எழுதி இருந்தா பொதுவான கருத்தா இருந்திருக்கும். என்ன இருந்தாலும் கழகங்கள் ஒருத்தொருக்கொருத்தர் சலிச்சது இல்லீங்களே, எண்ணிக்கைல கூட ;-(

கோவி.கண்ணன் சொன்னது…

// முகவை மைந்தன் said...
//மூன்று மாணவிகள் எரிப்புக்குப் பிறகு//

மூன்று உயிர்கள்னு எழுதி இருந்தா பொதுவான கருத்தா இருந்திருக்கும். என்ன இருந்தாலும் கழகங்கள் ஒருத்தொருக்கொருத்தர் சலிச்சது இல்லீங்களே, எண்ணிக்கைல கூட ;-(
//

முகவை, மதுரை எரிப்பு கழக கணக்கில் சரியாக பொருந்தாது. அது அஞ்சானஞ்சனின் தனி ஆவர்தனம். அங்கே தொண்டர்கள் என்பதை விட அடியாள் படை என்பதே பொருந்தும். ஆனால் மாணவிகள் எரிப்பில் இரண்டு கழகங்களுக்குமே சம அளவில் பங்குகள் உண்டு, ஏனென்றால் அந்த கொடைக்கானல் வழக்கே தற்பொழுது அரசால் திரும்ப பெறப்பட்டு இருக்கிறது. அரசியல் நோக்கில் அவ்வளவு விரைவு காட்டி தலைவியை கைது செய்தது தற்பொழுது புஷ்வானம். இப்பொழுது சொல்லுங்கள் யாரெல்லாம் பொறுப்பு ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

:(

லக்கிலுக் சொன்னது…

பக்கத்து வீடு பற்றியெறிந்து விட்டது. நாளை நம் வீடும். :-(

கோவி.கண்ணன் சொன்னது…

சுல்தான் has left a new comment on your post "யார் வைத்த ஒப்பாரி இனிமையாக இருந்தது ?":

//பிரபாகரனுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமிழினம் கொத்து கொத்தாக அழிக்கப்படுவதை ஆதரிக்கும் மடைமையை விட கொடியது எது?//

நான் அகிலன் கருத்தோடு முழுதம் ஒத்துப் போகிறேன். கொத்து கொத்தாக மக்களைக் கொல்லும்போது ஒரு நல்ல தலைவன் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் எங்காவது போய் உயிர் பிழைத்து இருங்கள் என்பதாக இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் நல்வாழ்வுக்காக ஏற்பட்டதுதான் அவர்களின் இலட்சியம் கொள்கை கோட்பாடு என்பது உண்மையானால், அந்த தமிழர்களின் வாழவே கேள்விக்குறியான போது அவர்கள் பிழைக்க அவர்களை பாதுகாப்பான இடத்துக்க வெளித்தள்ளி இருந்திருக்க வேண்டும்.

உங்கள் வாழ்வுக்கானது எமது இலட்சியமும் இன்ன பிறவும் என அதைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும். அப்பாவிகளின் பாதுகாப்பில் சமர் செய்வதா கொள்கைப் பிடிப்பு? ஈழத்தமிழர்களின் தற்போதைய சாவுக்கு முழு காரணமும் புலிகளே.

இந்த இலட்சணத்தில் இந்த புலி ஆதரவாளர்கள் தமிழக முதல்வரைப் பற்றி எழுதும் தரக்குறைவான வார்த்தைகள் அருவெருப்பானவை.

கோவி.கண்ணன் சொன்னது…

சுல்தான் ஐயா,
ஆமாம், அப்படிப்பார்த்தால் காந்திஜி மக்களை துன்புறுத்து உப்பு சத்தியாகிரகத்திற்குக் கூட அழைப்பு விடுத்திருக்கக் கூடாது. காந்திக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீது ஒரு துரும்பும் படாது என்று அவர் வாக்களித்தாரா ? இல்லை காந்திய வாதிகள் கூட வெள்ளைக்காரனிடம் அடியே படவில்லை. அடிபட்டுவிட்டது நீங்களெல்லோரும் போராட்டத்தை கைவிட்டுவிட்டு உயிர் பிழைத்துக் கொள்ளுங்கள் என்றாரா ?

கத்தியின்றி இரத்தமின்றி எந்த போராட்டமும் வெற்றிபெற்றதில்லை. தலைவனை அழிப்பது தானே போராட்டமெல்லாம், அதன் பிறகு அம்மக்களை வீழ்த்துவது ஒன்றும் கடினமான செயல் இல்லை என்பது ஈராக் போரில் இருந்து தெரியவில்லையா ? இன்றைக்கு பாலஸ்தீனத்தில் போராட்டம் வெற்றிபெறாமல் தொடர்வதில் தலைமைகள் கொல்லப்பட்டதன் விழைவுகள். குண்டு வீச்சில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்றே பொதுமக்கள் நினைப்பார்கள் அதுவும் ஈழத்தில் சிங்கள இராணுவத்தை நம்பிச் செல்வதைவிட போராளிகளின் துணையுடன் இருப்பதைத்தான் மக்கள் விரும்பி அதன் படி ஆறுமாதங்களாக ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் 5000 புலிகளின் கட்டுப்பாடுகளில் இருக்கிறதா ? அப்படி என்றால் புலிகளின் திறன் முழுவதுமே மக்களை கட்டுக்குள் வைத்திருப்பதில் தானே வீனாகும், இவ்வளவு நாள் போராடிக் கொண்டு இருக்க முடியுமா ? ஈழ விவகாரத்தில் இஸ்லாமியர் நிலையில் தான் நீங்களும் பதில் சொல்கிறீர்கள், இதையே பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் பொருத்திப் பார்க்க முடியுமா ? ஈராக்கியர்களின் சதாம் எதிர்ப்பாளர்கள் தவிர்த்து சதாமின் மரணத்தைக் கொண்டாடுபவர்கள் எத்தனை பேர் ? சொல்லுங்கள் ஐயா.

இங்கே நடப்பது படுகேவலமான அரசியல், ஈழவிடுதலை என்றால் அது ஈழப்போராளிகளால் நடந்துவிடக் கூடாது என்பதில் முனைப்புக் காட்டி அப்படி ஒன்று நடப்பதாக இருந்தால் தன் முயற்சியால் நடந்தால் நம் பெயர் வரலாற்றில் இடம் பெரும் என்று நினைக்கும் மோசமான இந்திய அரசியல் வியாதிகள் இலங்கை அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கும், எனக்கும் தெரிந்ததைவிட ஈழம், ஈழமக்கள், விடுதலைப் புலிகள் பற்றி இணையங்களில் எழுதும் ஈழவர்களுக்கு தெரியாதா ?

எது அருவெறுப்பானது என்பதை அவரவர் நிலைப்பாடே முடிவு செய்யும், அதை பொதுப்படுத்திவிட முடியாது

***

உங்களை திட்டி வந்த பின்னூட்டத்திற்கு பதிலாக உங்கள் பின்னூட்டம் தவறுதலாக நீக்கப்பட்டது, மீண்டும் மின் அஞ்சலில் இருந்து இணைத்துள்ளேன்

மணிகண்டன் சொன்னது…

*****
காந்திஜி மக்களை துன்புறுத்து உப்பு சத்தியாகிரகத்திற்குக் கூட அழைப்பு விடுத்திருக்கக் கூடாது. காந்திக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீது ஒரு துரும்பும் படாது என்று அவர் வாக்களித்தாரா ? இல்லை காந்திய வாதிகள் கூட வெள்ளைக்காரனிடம் அடியே படவில்லை. அடிபட்டுவிட்டது நீங்களெல்லோரும் போராட்டத்தை கைவிட்டுவிட்டு உயிர் பிழைத்துக் கொள்ளுங்கள் என்றாரா ?
*****

தவறான புரிதல்கள் இருக்கிறது கோவி. ஒரு சில போராட்டங்கள், அளவுக்கு மீறி செல்லும்போது, காந்தி நிச்சயமாக பின்வாங்கினார். பிறகு வேறொரு வடிவத்தில் போராட்டத்தை தொடங்கினார்.

ஈழத்தில் நடக்கும் வன்கொலைகளுக்கு பிரபாகரனை மட்டும் பொறுப்பாக்குவது கண்டிக்கப்படவேண்டியது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதும் கூட.

மக்கள் கொல்லப்படுவதும், குண்டுகளால் இறப்பதும் அருவெறுப்பானது. இதில் நிலைபாடுக்கு அவசியமே இல்லை. ஆயிரக்கணக்காக மக்கள் செத்து கொண்டு இருக்கும்போது , காரணத்தை நோண்டுவது தேவையற்றது. முதலில், இதற்கு ஒரு முடிவு கொண்டுவந்துவிட்டு பிறகு ஏதாவது ஒரு கமிஷன் அமைத்து காரணம் தேடிக்கொள்ளலாம்.

சுல்தான் என்ற பெயர் வந்தால் ஈராக் மற்றும் பாலச்தீனம் பற்றி பேச ஆரம்பிப்பது எரிச்சல் அளிக்கிறது.

வெறுப்பின் மூலம் மக்களை ஒன்றிணைப்பது எளிது. அதை தடுக்கும் விதத்தில் வரும் கருத்துக்களை வரவேற்கவேண்டும். வரவேற்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் என்ற பெயர் வந்தால் ஈராக் மற்றும் பாலச்தீனம் பற்றி பேச ஆரம்பிப்பது எரிச்சல் அளிக்கிறது.
//

சுல்தான் என்கிற பெயர் உங்களுக்கு இப்போது தான் தெரியுமோ ? அவர் என்னுடைய நண்பர் தான்.

பாலஸ்தீனம் இஸ்ரேல் பற்றிப் பேசியது அரசியல் நிலை குறித்து தானே அன்றி, அங்கே நடப்பது சரியா தவறா என்றெல்லலாம நான் சொல்லவில்லை. தெரிந்த விசயத்தை வைத்துதான் ஊகங்களுக்கு ஓரளவு பதில் சொல்ல முடியும். நீங்க நாரதர் வேலைப் பார்ககதிங்க. அதே சமயத்தில் ஈழ விவகாரத்தில் ஒரு இஸ்லாமியருக்கு பதில் சொல்லும் போது மற்ற இஸ்லாமியர்கள் என்ன கருத்து சொல்லி வருகிறார்கள் என்றும்
பார்க்க வேண்டி இருக்கிறது. பெரும்பாலன இஸ்லாமியர்களுக்கு விடுதலைப் புலிகளுக்கும் ஆகாது என்றும் தெரிந்த பின் இஸ்லாமியர் ஒருவரது கருத்தை பொதுவான கருத்தாகக் கொள்வது எப்படி என்று தாங்கள் தான் சொல்லவேண்டும். நிலைப்பாடு உடையவர்களுக்கு வேறு சில நிலைப்பட்டை ஒட்டித்தான் பதில் சொல்ல முடியும்.

நான் அவர் சொல்வது அவதூறு என்று சொல்லவில்லை. எனது கருத்தைச் சொன்னேன்.

மணிகண்டன் சொன்னது…

***
சுல்தான் என்கிற பெயர் உங்களுக்கு இப்போது தான் தெரியுமோ ? அவர் என்னுடைய நண்பர் தான்.
***
oh ok.

மணிகண்டன் சொன்னது…

***
நீங்க நாரதர் வேலைப் பார்ககதிங்க.
***

இப்ப தான் இதை பார்த்தேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக் கரெக்ட் பண்ணுங்க! :)-

Unknown சொன்னது…

அடிபடுவதற்கும் கொத்து கொத்தாக கொல்லப்படுவதற்குமுள்ள வித்தியாசம் உணரப்பட வேண்டியது ஜிகே.

தாமாக முன்வந்து போராளிகளின் துணையுடன் இருப்பதை விரும்பும் மக்கள் பற்றி உங்கள் எண்ணம் சரிதான். ஆனால் அங்கிருந்து வெளியேறும் மக்களுக்கெதிராக தற்கொலைத் தாக்குதல் நடத்தி தம் மக்களையே கொன்று திகிலுள்ளாக்கி பயப்படுத்தி தம்மோடிருக்க நிர்ப்பந்திப்பதை பற்றிய தங்கள் கருத்தென்ன? அது பற்றி ஏதும் தெரியுமா? இனி ஒவ்வொன்றாக வெளி வரும் பாருங்கள்.

ஈழ விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு அவர்கள் இழைத்த கொடுமைகளையம் அதை நியாயப்படுத்திக் கொண்டிருந்ததையும் இன்னும் இருப்பதையும் எம்மால் மன்னிக்க முடியாது என்பது உண்மைதான். எனினும் அதை மறந்து இப்போதிருந்த நிலையில் என்ன செய்திருக்க வேண்டும் என்பதையே நான் எண்ணினேன். போர் நிறுத்தத்திற்கான ஸ்விட்ச்சை புலிகள் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு, தமிழக முதல்வர் கைகளில் ஒளித்து வைத்திருப்பது போல எழுதி அவருக்கெதிரான அரசியல் நடத்துகிறார்களே அன்றி ஈழத்தமிழர்களுக்கென்ன நன்மை செய்து விட்டார்கள் புலி ஆதரவாளர்கள்.

தமிழக முதல்வர் தம் இருப்பை அதாவது ஆட்சியை பலி கொடுத்து ஈழத்தமிழர்களுக்காக முயற்சி செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் தம் இருப்பை விட்டுக் கொடுத்து புலிகளுக்கு அவசியத் தேவையான ஈழத்திற்கு போய் கைகொடுத்திருக்கலாமே. மற்றவர்களுக்காக சொல்லும்போது வெறும் வாய்ச்செலவு. தம்முடையதென வரும் போது வெறும் எழுத்தில் மட்டும். நல்ல நியாயம். தியாகம் என்பது என்ன என்று சொல்லித் தரலாம்.தியாகம் தானாய் வருவது 'நீ தியாகம் செய்' எனக் கேட்டுப் பெறுவதல்ல.

சதாம் நல்ல ஆட்சியாளரில்லை எனினும் அவரை விரும்பாதவர்களும் இப்போது விரும்புவதற்கு, தவறான முறையில் அவரைக் கொன்றது முதல் காரணம். பொருளாதாரத் தடை காலத்திலும் ஈராக் உணவுத் தட்டுப்பாடு இல்லாமல் இப்போதிருப்பதை விடவும் மிக மிக நல்ல நிலையில் இருந்தது மக்கள் நினைவில் வருவது இரண்டாம் காரணம்.
பாலத்தீனத்தில் இதுவரை எத்தனை தலைமைகள் கொல்லப்பட்டுள்ளது தெரியுமா? ஒன்றன் பின் ஒன்றாக தலைமை மாறிக் கொண்டு வந்தாலும் புரட்சி ஓயவில்லை. பாலத்தீன ஈராக் விவகாரங்களைத் தனியாகப் பேசுவோம். ஈழ விவகாரத்தில் அதை பொருத்திப் பார்த்து நான் எழுதவில்லை.

அப்பாவி ஈழத்தமிழ்கள் அநியாயமாக கொல்லப்படுவதைத் தடுக்க வழியே இல்லையா என யோசித்ததின் விளைவாக நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தை எழுதியுள்ளேன் அவ்வளவே. சிலரால் ஏற்க முடியாதுதான்.

மணிகண்டன் சொன்னது…

****
தமிழக முதல்வர் தம் இருப்பை அதாவது ஆட்சியை பலி கொடுத்து ஈழத்தமிழர்களுக்காக முயற்சி செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் தம் இருப்பை விட்டுக் கொடுத்து புலிகளுக்கு அவசியத் தேவையான ஈழத்திற்கு போய் கைகொடுத்திருக்கலாமே. மற்றவர்களுக்காக சொல்லும்போது வெறும் வாய்ச்செலவு. தம்முடையதென வரும் போது வெறும் எழுத்தில் மட்டும். நல்ல நியாயம். தியாகம் என்பது என்ன என்று சொல்லித் தரலாம்.தியாகம் தானாய் வருவது 'நீ தியாகம் செய்' எனக் கேட்டுப் பெறுவதல்ல.
****

இது என்ன புதுசா இருக்கு ? ஆட்சியில் இருப்பவர்கள் diplomatic pressure மூலம் ஈழத்தின் தேவைகளை பூர்த்தி செய்யலாம். மிச்சம் எல்லாரும் எப்படி செய்ய முடியும் அதை. கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஈழத்தில் போர் நிறுத்தம் கொண்டுவருவோம் என்று சொல்லி வேலை வாங்குவதில்லை. தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி தெளிக்கின்றனர் ! ஆதலால் உங்களது வாதம் தேர்தல் வரை ஒருசிலரை நியாயப்படுத்த வேண்டுமானால் பயன் கொடுக்கும். உங்களது மற்ற கருத்துக்களில் தெரிந்த சிறிதளவு நியாயம் கூட இதில் இல்லை.

Unknown சொன்னது…

//இது என்ன புதுசா இருக்கு ? ஆட்சியில் இருப்பவர்கள் diplomatic pressure மூலம் ஈழத்தின் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.// அவர் Diplomatic Pressure கொடுக்கவில்லை என்பதை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? இனி அவர் செய்ய வேண்டியது தம் ஆட்சியை பறி கொடுப்பதுதான். அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா?

NO சொன்னது…

What next in Sri Lanka?
-------------------------

Let’s analyze the SL situation a bit dispassionately!

Four things are required for any group to oppose an established and entrenched order through military means! The strength of the group wax and wane based on strengths in the below four areas.

A. Ideology
B. Support group
C. Resources
D. Leadership

Only A. = Will be of no use. Only sound bites!
A + B = Will have morphed into a political party in a few short years
A+C = Not a possible combination for any group.
A+D = Will dissolve into an existing political formation in the state.
A+B+C – They will be fighting for C with several “D”’s as claimants!
B+C = A+C
B+D = A+B
B+C+D = Will turn into a Mafia gang!
C+D = A+B

The remaining major combination will be:

A+B+C+D (in good strength in each) = They will be ruling a province
That’s precisely what LTTE was doing for so long!
(One exception was Yasser Arafat who had all four but was unable to enter Palestine in his heydays due to the sheer brilliance of Israelis)

This brutal war and the calculated diplomatic offensive of Srilankan government has contained B, curtailed C and possibly will eliminate D in a few days or weeks, based on what we read daily. This leaves us only three combinations.

A+ D (if fully intact) & A+C+ a weak D or at the most A+ a weak D
As it can be seen all three are not enough to sustain the movement.
So the bottom line is clear, one likes it or not!

What then will the Lankan Govt. likely to do on priority?

1. Eliminate remaining D
2. Encourage the remaining weak D’s to fight for the remaining C.
3. Will try to cultivate a section of B to water down A, and the ones that will not comply will face the music from the racist section of the Lanka’s political spectrum.
4. Will try to give more powers to Elam Tamils but will do it very slowly.

Being the case the questions on future are

1. Is it possible for the LTTE or a new Tamil movement to come up again?
The answer is no! Because the SL army and state intelligence have become more professional, vigilant and any new group will not be allowed to start over again.

2. Will SL govt. allow genuine devolution of powers to the Elam Tamils?
They will, provided SL army & the Sinhala Buddhist groups allow!

3. How can India help?
SL will give India respect. Not anything more as they will play the China - Pak card against India.

4. What brought down LTTE in 2009?
Rajiv Gandhi’s killing.

5. What if they would have chosen not to do it?
Rajiv Gandhi would have been still around and maybe we are talking about a 10 year old history.

6. What will BJP or any new government do in this issue if it comes to power?
Same as the answer to question no. 3.

Bottom line:

Bangladesh, East Timor, Eritrea, Balkans, Cyprus and many others have a totally different history to tell and cannot be quoted while talking about Elam. Even the Kurds in Iraq are yet to get independence inspite of a highly supportive west!

In history certain groups suffer for no fault of theirs. It’s terribly sad and unfortunate that Elam Tamil’s are one such!


Thanks

மணிகண்டன் சொன்னது…

சுல்தான்,

முதல் கேள்விக்கு பதில் "போதுமான அளவு" கொடுக்கவில்லை என்ற சந்தேகம்.

இரண்டாவது கேள்விக்கு பதில் தர தயாராக இல்லை.

உங்களிடன் உங்களின் நோக்கம் குறித்த கேள்வியும் என்னிடம் இல்லை.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

///புஷ்சுக்கு நாடுவிட்டு நாடு வந்த போது கிடைத்த செருப்படிகள் முன்னுதாரணமாக இருக்கிறது என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். 25 ஆண்டுகளுக்குப் பிறகும் சிங் செருபால் அடித்தான் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.///

கண்டிபாக.....

பீர் | Peer சொன்னது…

ஐயா, உங்க மின் அஞ்சல் என்ன?

aki சொன்னது…

கோவி அண்ணை,

உலக பத்திரிக்காசிரியர்களை இலங்கை புதுமத்தளானுக்கே கூட்டிச்சென்று புலிகளிடமிருந்து தப்பி வருபவர்களை பேட்டிகாணச்சொல்லிவிட்டது. அதிர்ந்து போகிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.

Civilians expose LTTE treachery: Foreign media stunned with revelations

Foreign media crew and journalists who were provide access this morning (April 24) to the recently liberated Puthumathalan area inside the declared No Fire Zone have expressed their surprise on what were cited as 'startling revelations' made by civilian hostages rescued from LTTE clutches since Monday(20).

The reporters were taken from Kilinochchi to Puthumathalan and provided with necessary assistance to gain first hand information of the unfolding ground situation, with LTTE nearing total defeat after 3 decades.

The group of journalists also witnessed rising smoke in distance caused due to explosions from LTTE mounted heavy mortar bombs further south. According to latest military reports, LTTE terrorists are now boxed inside a 10sq.km swathe land further South of the NFZ at Vellamullivaikkal.

Hostages rescued from LTTE have expressed their disdain over the terrorist outfit, which was earlier proscribed by the EU and many countries including the US for the use of child soldiers, women suicide bombers, village massacres, bus bombings, systemized genocide of both ethnic Muslims and Sinhalese. Civilian escapees have unfolded the bitter truth with the media persons of brutal assaults, torture, forced arms training, child conscription and many more crimes perpetrated by LTTE.

The media crew also confirmed that security forces have exhibited utmost restraint from any indirect fire, heavy artillery or mortar attacks at LTTE now cornered in a 10sq.km swathe of land in the Southern tip of the NFZ.

போர்பிரதேசத்திலிருந்து தப்பித்து வர முயற்சி செய்யும் மக்களை சுடும் புலிகளை வீடியோவில் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=YiK97vdocpk

இப்படித்தான் தனது இயக்கத்தில் சேராத இந்திய மக்களை காந்தியடிகள் சுட்டுக்கொன்றாரா? பேத்துவதற்கும் ஒரு அளவு வேணாம்?

aki சொன்னது…

பட்டும் திருந்தாத இந்தியா இப்போதும் புலிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறது.

புலிகளை இந்தியா காப்பாற்றினால் ஈழத்தவர்களின் சாபம் இந்தியாவை சும்மா விடாது.

http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/04/24/sri.lanka.india/

Indian officials 'read riot act' over Sri Lanka Senior Indian officials meet with the Sri Lankan president


(CNN) -- Two senior Indian officials met with the Sri Lankan president Friday in Colombo to address the humanitarian crisis in the war-torn island nation.

Shiv Shankar Menon, the Indian foreign secretary and M.K. Narayanan, the national security adviser, met with President Mahinda Rajapaksa, according to A.M.J. Sadiq, a foreign ministry official in Sri Lanka.

He did not provide further details.

"The Indian message was just short of reading the riot act," a source told CNN. Significant numbers of people have been killed or wounded in a Sri Lankan offensive against the faltering Tamil Tiger rebel movement, and thousands are trapped by the fighting, the United Nations said Wednesday.

Sri Lankan army renews attack
"Given that the area has shrunk even further, the potential for further significant casualties still remains," the U.N. said in a statement.

The Sri Lankan army launched an operation against the Liberation Tigers of Tamil Elam in the country's northern area Monday, and a deadline for the rebels to surrender passed Tuesday.

Government troops say they have rescued 39,000 civilians trapped in the area, but tens of thousands more remain wedged on the island's northeastern coast.

The area remains controlled by the rebels, the U.S. State Department said Tuesday.

As many as 70,000 people have been killed since the civil war began, and the group has been declared a terrorist organization by 32 countries, including the United States and the European Union.

Thousands of civilians remained threatened, Pranab Mukherjee, India's foreign affairs minister, said in a statement Thursday. He called for an end to hostilities in the area.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஈழ விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு அவர்கள் இழைத்த கொடுமைகளையம் அதை நியாயப்படுத்திக் கொண்டிருந்ததையும் இன்னும் இருப்பதையும் எம்மால் மன்னிக்க முடியாது என்பது உண்மைதான்//

சுல்தான் ஐயா,
நிலைப்பாட்டை ஒப்புக் கொண்டதற்கு நன்றி, நான் ஊகமாகச் சொன்னதாகக் கூறி அதை வன்மையாக கண்டிக்கப் போகிறீர்கள் என்றே தவறாக நினைத்தேன். நேர்மைக்கு பாராட்டுகள்.

இந்த இடுகையைப் பொறுத்து.. மற்றபடி உங்கள் கருத்து உங்கள் நிலைப்பாட்டை ஒட்டியது என்பது தெளிவாகுவதால் விவாதிக்க ஒன்றுமே இல்லை.

ராம்.CM சொன்னது…

கொடூர சம்பவம்...

உதயம் சொன்னது…

ஈழத்தமிழன்.. ஊறுகாய்

தரமானது .தன்னிகரில்லாதது..தொட்டு நக்கிப்பாருங்கள் .. நக்க.. நக்க.. நாவூறும்...
நக்கியவர்களிற்கு .. வாயூறும்.....வாயூறியவர்களிற்கு பதவி போதையூறும்.

இந்திய அரசியல் வியாபாரத்தில் இன்று ஈழத் தமிழனும்.. அவனது அவலவாழ்வும்தான் ஊறுகாய்...எதிர்கிறவன் ஆதரிக்கிறவன்.. உதவ வேண்டும் என்கிறவன்... உதைக்கவேண்டும் என்கிறவன்....ஆயுததத்தை அள்ளிக்கொடுத்து அழி...என்றுவிட்டு அகிம்சை தேசம் என்கிறவன்... அண்ணா நாமம் வாழ்க என்கிறவன்.. சிறுத்தை என்று விட்டு மியாவ்....என்பவன். ..பாட்டாளிகளிற்கு படம் காட்டுபவன்...குண்டு கோமளவல்லிக்கு குடை பிடித்தும் குறைந்த இடம் பிடித்தவன்..எல்லோருமே தொட்டுக்கொள்கிற ஊறுகாய்தான்.. ஈழத்தமிழன் வாழ்வு.... தமிழகத்தில் அரசியல் சாண(ந)க்கியங்களை அழகாகவே அரங்கேறுகின்றன

பீர் | Peer சொன்னது…

உதயம் ஊறுகாய், அசத்திட்டீங்க... போங்க...
அப்படியே வழிமொழிகிறேன்.

Unknown சொன்னது…

//இந்த இடுகையைப் பொறுத்து.. மற்றபடி உங்கள் கருத்து உங்கள் நிலைப்பாட்டை ஒட்டியது என்பது தெளிவாகுவதால்//
இன்னொரு நிலைப்பாட்டையும் சொல்லி விடுகிறேன். இந்த தேர்தலில் நாங்களும் கலைஞருக்கு இதயத்தில் (மட்டும்) இடம் தருவதென (வாக்குகளில் அல்ல) முடிவாய் இருக்கிறோம்.

Sanjai Gandhi சொன்னது…

கோவிஜி இதை பாரும்...

http://ibnlive.in.com/news/cornered-ltte-using-civilians-as-human-shield/91116-2.html

Sanjai Gandhi சொன்னது…

இதையும் பாரும்..

http://ibnlive.in.com/news/tigers-prey-video-shows-ltte-shooting-civilians/91108-2.html

தவறாமல் அந்த செய்திகளுக்குரிய விடியோக்களையும் பாருங்க.

இனி உண்மைகள் எல்லாம் வெளிவெரும். சிங்களர்களை விட ஆபத்தானவர்கள் விடுதலைப் புலிகள் தான் என்பதை எல்லோரும் அறிந்துக் கொள்ளும் ”காலம்” வெகு அருகில்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
கோவிஜி இதை பாரும்...

http://ibnlive.in.com/news/cornered-ltte-using-civilians-as-human-shield/91116-2.html

1:32 PM, April 26, 2009


Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
இதையும் பாரும்..

http://ibnlive.in.com/news/tigers-prey-video-shows-ltte-shooting-civilians/91108-2.html

தவறாமல் அந்த செய்திகளுக்குரிய விடியோக்களையும் பாருங்க.

இனி உண்மைகள் எல்லாம் வெளிவெரும். சிங்களர்களை விட ஆபத்தானவர்கள் விடுதலைப் புலிகள் தான் என்பதை எல்லோரும் அறிந்துக் கொள்ளும் ”காலம்” வெகு அருகில்.

1:35 PM, April 26, 2009
//

வாங்க சஞ்செய்,

அது இராணுவம் வெளியிட்ட வீடியோ என்று சொல்லி இருக்கிறார்கள். அதிலிருக்கும் உண்மை காங்கிரசு காரணுக்கு தெளிவாகத் தெரியும். என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் தெரியாது.

இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு கொல்லப்பட்ட சீக்கியர்களைக் கொன்றது காங்கிரசுகாரர்கள் இல்லை, சிங்குகள் தான் என்று காட்ட எதுவும் வீடியோ இருக்கிறதா ?

போராளிகள் தாங்கள் போராளிகள் என்று முதுகில் ஒட்டிக் கொண்டு தமிழர்களைக் கொன்றார்களா ? கருங்காலிகளும், இலங்கை இரானுவமே கூட போராளிகளைப் போல் உடையணிந்து அதைச் செய்தது என்று நாளை தெரியவந்தால் உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வீர்கள் என்று நான் நம்பவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
//இந்த இடுகையைப் பொறுத்து.. மற்றபடி உங்கள் கருத்து உங்கள் நிலைப்பாட்டை ஒட்டியது என்பது தெளிவாகுவதால்//
இன்னொரு நிலைப்பாட்டையும் சொல்லி விடுகிறேன். இந்த தேர்தலில் நாங்களும் கலைஞருக்கு இதயத்தில் (மட்டும்) இடம் தருவதென (வாக்குகளில் அல்ல) முடிவாய் இருக்கிறோம்.
//

உங்கள் (இஸ்லாமியர் என்ற நிலையில்) நிலைப்பாட்டையே இந்துக்களும் கொண்டு இருந்தால் அதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து கொண்டால் சரி.

Sanjai Gandhi சொன்னது…

அட என்ன கோவிஜி இப்டி டென்ஷன் ஆவறிங்க?

இந்தியா எப்போ என்ன ஆயுதம் இலக்கைக்கு கொடுத்ததுன்னு கேட்டா நீ நீங்க வாயே திறக்க மாட்டேங்கறிங்க. மத்தவங்க எல்லாம் இலங்கை மந்திரிமாருங்க “ இந்தியாவின் அனைத்து உதவிக்கும் இலங்க மக்கள் நன்றி சொல்லனும்” அப்டினு சொல்றதை காட்டி, இந்த ஆதாரம் போதுமான்னு கேக்கறாங்க.

இந்தியாவின் உதவி பத்தி ச்ங்களன் சொன்னா அது நிஜமா இருக்கும் போது அதே சிங்களன் , புலி பயங்கரவாதிகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தறாங்கன்னு சொல்லி விடியோ ஆதாரம் தந்தா கருங்காலிகள் தீவிரவாதிகள் மாதிரி சொக்கா போட்னு தாக்கி இருக்க மாட்டாங்களான்னு கேக்கறிங்க..

என்னா லாஜிக்குபுக்கு இது கோவிஜி? :)

பயங்கரவாதிகளின் தோல்வி உறுதியாகி மக்கள் அவங்க கிட்ட இருந்து தப்பிக்கிறதை ஏன் தான் ஜீரணிக்க முடியலையோ போங்க.


பைதிவே.. அந்த கருங்காலிகள் யாருங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
அட என்ன கோவிஜி இப்டி டென்ஷன் ஆவறிங்க?

இந்தியா எப்போ என்ன ஆயுதம் இலக்கைக்கு கொடுத்ததுன்னு கேட்டா நீ நீங்க வாயே திறக்க மாட்டேங்கறிங்க. மத்தவங்க எல்லாம் இலங்கை மந்திரிமாருங்க “ இந்தியாவின் அனைத்து உதவிக்கும் இலங்க மக்கள் நன்றி சொல்லனும்” அப்டினு சொல்றதை காட்டி, இந்த ஆதாரம் போதுமான்னு கேக்கறாங்க.

இந்தியாவின் உதவி பத்தி ச்ங்களன் சொன்னா அது நிஜமா இருக்கும் போது அதே சிங்களன் , புலி பயங்கரவாதிகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தறாங்கன்னு சொல்லி விடியோ ஆதாரம் தந்தா கருங்காலிகள் தீவிரவாதிகள் மாதிரி சொக்கா போட்னு தாக்கி இருக்க மாட்டாங்களான்னு கேக்கறிங்க..

என்னா லாஜிக்குபுக்கு இது கோவிஜி? :)

பயங்கரவாதிகளின் தோல்வி உறுதியாகி மக்கள் அவங்க கிட்ட இருந்து தப்பிக்கிறதை ஏன் தான் ஜீரணிக்க முடியலையோ போங்க.


பைதிவே.. அந்த கருங்காலிகள் யாருங்க?
//

ஈழம் பொருத்து ஒரு காங்கிரஸ்காரனின் கருத்தை எவரும் காது கொடுத்துக் கேட்பதில்லை என்பதே உண்மை. அக்கரைக் காட்டுவதுபோல் அடிக்கடி காங்கிரசாரின் உளரல்களைக் கேட்டு அலுத்துப்போனது தான் மீதம்.

முதலில் தன் தந்தை மரணத்துக்கு இத்தனை லட்சம் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டும் ஞாயம் கிடைக்கவில்லை என்று புலம்பும் இராசீவ் வாரிசுகளுக்கு எதாவது ஆறுதல் சொல்ல முடியுமா என்று பாருங்கள்.

இந்திரா வாரிசுகளால் என்றைக்குமே இந்தியாவுக்கு தலை இடிதான்.

Sanjai Gandhi சொன்னது…

//ஈழம் பொருத்து ஒரு காங்கிரஸ்காரனின் கருத்தை எவரும் காது கொடுத்துக் கேட்பதில்லை என்பதே உண்மை//

அப்போ தானே இல்லாத பொய்களை எல்லாம் அளந்து விட்டுக் கொண்டே இருக்கலாம். காது கொடுத்து கேட்டால் உங்கள் தலைவர்களின் தவறை எப்படி மறைப்பது?. நீங்கள் ஒரு மிகச் சிறந்த திராவிடக் கட்சி தொண்டர் கோவியாரே. :)

/முதலில் தன் தந்தை மரணத்துக்கு இத்தனை லட்சம் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டும் ஞாயம் கிடைக்கவில்லை என்று புலம்பும் இராசீவ் வாரிசுகளுக்கு எதாவது ஆறுதல் சொல்ல முடியுமா என்று பாருங்கள்.//

இது இட்டுக் கட்டிய பொய். இதற்கு என்ன ஆதாரம்?. உங்களால் இப்படி பொய்யை பரப்புவதைத் தாண்டி ஒன்னும் சொல்ல முடியவில்லை. அதனால் தான் பொய் என்று தெரிந்தும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

சிங்கள ராணுவம் புலிகளை விரட்டி அடித்த போது அப்பாவி மக்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டி காடுகளுக்கு கடத்தி சென்றதால் தான் இவ்வளவு துன்பம். இதை ராஜிவின் மக்கள் தான் புலிகளுக்கு சொல்லிக் கொடுத்தார்களா?

புலிகளின் இந்த அட்டூழியத்தால் தானே அவர்களை அழிப்பதாக சொல்லிக் கொண்டு மக்களையும அழிக்கிறார்கள். ராஜிவ் மக்களுக்கு ஆறுதல் தேவை இல்லை. புலிகளுக்கு அறிவுரை சொல்லி மக்களை காப்பாற்றுங்கள்.

//இந்திரா வாரிசுகளால் என்றைக்குமே இந்தியாவுக்கு தலை இடிதான். //

அட , முதல் முறையாக இந்தியா பற்றியும் கவலைப் படுகிறீர்களே. மிக்க நன்றி கோவிஜி. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//இது இட்டுக் கட்டிய பொய். இதற்கு என்ன ஆதாரம்?. உங்களால் இப்படி பொய்யை பரப்புவதைத் தாண்டி ஒன்னும் சொல்ல முடியவில்லை. அதனால் தான் பொய் என்று தெரிந்தும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். //

சுட்டிக் காட்டினால் மட்டும் என்ன செய்யப் போகிறீர்கள் ?

இதோ இருக்கு அந்த ஒப்பாறி,

ராஜீ்வ் காந்தி படுகொலைக்கு இன்னும் நாங்கள் முழுமையான நீதியைப் பெறவில்லை என்று சகோதரர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் எனக்கும், ராகுலுக்கும் இடையே சிறிய அளவில் வேறுபாடு உள்ளது.

சீக்கியர் கலவரத்தில் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று சீக்கிய சமூகத்தினர் கூறுவது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். அது சரியானதாகவே இருக்கும். அதற்கு மேல் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
//அட , முதல் முறையாக இந்தியா பற்றியும் கவலைப் படுகிறீர்களே. மிக்க நன்றி கோவிஜி. :)//

உங்க தே'சீ'யம் காங்கிரசு என்றால் அந்த தேசியம், பற்றி நான் கவலைப்படவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//சிங்கள ராணுவம் புலிகளை விரட்டி அடித்த போது அப்பாவி மக்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டி காடுகளுக்கு கடத்தி சென்றதால் தான் இவ்வளவு துன்பம். இதை ராஜிவின் மக்கள் தான் புலிகளுக்கு சொல்லிக் கொடுத்தார்களா?//

அதையே இந்திய இராணுவத்துக்கும் சொல்லிக் கொடுங்கள், அண்டை நாட்டுடன் சண்டை நடந்தால், அண்டை நாடு ஆக்கிரமிக்கும் பகுதிகளின் மக்களை அண்டை நாட்டினரின் இராணுவத்தின் பாலியல் பசி ஆற்றிக் கொள்ள அப்படியே விட்டுவிட்டு அப்படியே ஓடிவிடனும் அதுதான் சரியான போர் முறை என்று.

Sanjai Gandhi சொன்னது…

அய்யா சாமி... என்னால் முடியலை.. :(

ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி பிரபாகரன். அவருக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை என்பதற்காகத் தான் அப்படி சொல்லி வருகிறார்கள். சிங்களர்களும் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களை கொல்வதற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு தான் ஆதாரம் இருக்கா என்று கேட்டேன்.

//முதலில் தன் தந்தை மரணத்துக்கு இத்தனை லட்சம் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டும் ஞாயம் கிடைக்கவில்லை என்று புலம்பும் இராசீவ் வாரிசுகளுக்கு//

இதை மறுக்கா பொறுமையா படிங்க. நீங்க சொன்னது தான்.
தன் தந்தை மரணத்துக்கு இத்தனை லட்சம் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

சஞ்செய்,

ஒன்றுக்கு பதில் சொல்லப் போய் மொத்த நாற்றத்தையும் கிளப்பி விட வேண்டி இருக்கு, அந்த நாற்றத்தில் ஒன்று,

சீக்கியர் கலவரத்தில் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று சீக்கிய சமூகத்தினர் கூறுவது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். அது சரியானதாகவே இருக்கும். அதற்கு மேல் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார் பிரியங்கா.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதை மறுக்கா பொறுமையா படிங்க. //

பொறுமையா படிக்க என்ன இருக்கு ?

அது உங்களுக்கு புரிந்தது. எங்களுக்கு செத்துவிழும் மக்கள் தான் தெரிகிறார்கள், இத்தனை பேரை அழித்தும் நீதி பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது ?

Sanjai Gandhi சொன்னது…

//அது உங்களுக்கு புரிந்தது. எங்களுக்கு செத்துவிழும் மக்கள் தான் தெரிகிறார்கள், இத்தனை பேரை அழித்தும் நீதி பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது ? //

பிரியங்கா, தன் தந்தையின் மரணத்தைப் பற்றி பேசுகிறார். நீங்கள் விடுதலைப் புலிகளாலும் சிங்கள ராணுவத்தாலும் கொல்லப் பட்ட அப்பாவி மக்களைப் கணக்குக் காட்டுகிறீர்கள். ஒரு குற்றவாளி மேலும் ஆயிரக் கணக்கான கொலைகளை செய்தால், அந்தக் குற்றவாளியின் குற்றத்தைப் பற்றி பேச அருகதை எதற்கு?

இரண்டும் வேறு வேறு குற்ற சம்பவம். ஒரு குற்றத்திற்கு பிரபாகரனும் இன்னொரு குற்றத்திற்கு பிரபாகரனும், ராஜபக்‌ஷேவும் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.

பிரியங்கா தன் தந்தையின் கொலைக் குற்றவாளிப் பற்றி பேசுகிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியங்கா, தன் தந்தையின் மரணத்தைப் பற்றி பேசுகிறார். நீங்கள் விடுதலைப் புலிகளாலும் சிங்கள ராணுவத்தாலும் கொல்லப் பட்ட அப்பாவி மக்களைப் கணக்குக் காட்டுகிறீர்கள். ஒரு குற்றவாளி மேலும் ஆயிரக் கணக்கான கொலைகளை செய்தால், அந்தக் குற்றவாளியின் குற்றத்தைப் பற்றி பேச அருகதை எதற்கு?

இரண்டும் வேறு வேறு குற்ற சம்பவம். ஒரு குற்றத்திற்கு பிரபாகரனும் இன்னொரு குற்றத்திற்கு பிரபாகரனும், ராஜபக்‌ஷேவும் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.

பிரியங்கா தன் தந்தையின் கொலைக் குற்றவாளிப் பற்றி பேசுகிறார்.//

ஐயோடா சாமி,

வெளி உலகத்திலே என்ன பேசிக்கிறாங்கன்னு கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க, இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ ரீதியான உதவி செய்ததை அந்த நாட்டின் அமைச்சர்களே வெளிப்படையாக 'இந்த வெற்றி இந்தியாவின் உதவி இன்றி சாத்தியமில்லை' என்று கூவி இருக்காங்க.

சும்மா திரும்ப திரும்ப பொய்யையே பேசிக் கொண்டு இருப்பது வீன் தான்.

நான் இதுல ஒரு கேள்வி கேட்டு இருக்கேனே பதிலே இல்லை.

'மன்மோகன் தான் பிரதமர் என்று சொல்லிக் கொண்டு, சோனியாவிடம் சுதர்சனம் நாட்சியப்பன் போர் நிறுத்தம் குறித்து வேண்டுகோள் வைக்கப் போவதாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்களிடம் சொல்லும் மர்மம் என்ன ?'


அதுக்கும் சுட்டி வேண்டுமா ?

சோனியா காங்கிரசு தலைவிதானே ?

பிரதமர் அலுவலகம் பிரதமரால் இயங்குதுன்னு சுதர்சனம் நாட்சியப்பனுக்கு தெரியாதா ? இல்லாட்டி விசுவாசத்துல அப்படி சொல்லிட்டாரா ?


சோனியாதன் இந்திய அரசை வழிநடத்துகிறார் என்று சுதர்சனம் மறைமுகமாக ஒப்புதல் கொடுத்த பிறகும்,
முழுப்பூசனிக்காயை சேத்துல மறைங்க, சோத்துல மறைக்காதிங்க

Sanjai Gandhi சொன்னது…

//'மன்மோகன் தான் பிரதமர் என்று சொல்லிக் கொண்டு, சோனியாவிடம் சுதர்சனம் நாட்சியப்பன் போர் நிறுத்தம் குறித்து வேண்டுகோள் வைக்கப் போவதாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்களிடம் சொல்லும் மர்மம் என்ன ?'


அதுக்கும் சுட்டி வேண்டுமா ?
//

அவசியம் இல்லை.. அவர் சொல்லி இருபப்து படு முட்டாள் தனம். அவர் மட்டுமில்லை. ஈழ விவகாரத்தில் சோனியாவை இழுப்பவர்கள் அனைவருமே வடி கட்டிய முட்டாள்கள் தான். அவர் இந்தியாவின் ஆளும் கூட்டணிக்குத் தான் தலைவர். அரசாங்கத்திற்கு இல்லை. ஆகவே அவரிடம் போர் நிறுத்தம் தொடர்பாக கோரிக்கை வைப்பதே பைத்தியக்காரத் தனம். அவரால் அதிகார பூர்வமாக எந்த நாட்டுடனும் பேச முடியாது.

Sanjai Gandhi சொன்னது…

//வெளி உலகத்திலே என்ன பேசிக்கிறாங்கன்னு கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க, இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ ரீதியான உதவி செய்ததை அந்த நாட்டின் அமைச்சர்களே வெளிப்படையாக 'இந்த வெற்றி இந்தியாவின் உதவி இன்றி சாத்தியமில்லை' என்று கூவி இருக்காங்க.
//

ஸ்ஸபாஆஆஆ.. தாறுமாறா கண்ணைக் கட்டுதே. தீவிரவாதிகள் நடமாட்டம் செயல்பாடுகள் பற்றி தகவல் பரிமாறிக் கொள்ள அதிகாரப் பூர்வ உடன்பாடு இருப்பது தெரியும் தானே. அதைத் தானே சொல்கிறார்கள். நம் கவலை தமிழர்கள் கொல்லப் படுவதைப் பற்றி தான். அதற்கு யார் உதவுகிறார்கள் என்பது தான் பிரச்சனை. தீவிரவாதிகள் ஒழிக்கப் படுவது இல்லை.

முதலில் ஒன்றை தெளிவுபடுத்துங்கள். நீங்கள் புலிகளின் அழிவுக்கு கவலைப் படுகிறீர்களா? தமிழ்மக்கள் கொல்லப் படுவதற்கா? ஏன் இரண்டையும் ஒன்றாக சேர்த்து குழப்புகிறீர்கள்.? :((

புலிகளின் அழிவுக்கு இந்தியா துணை போகிறது என்று சொன்னால், அது பொய்யாகவே இருந்தாலும் ( பொய் இல்லை ) வரவேற்கிறேன். தமிழ்மக்களை கொல்ல துணைபோகிறது என்றால் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஏகப் பட்ட வேலை இருக்கு. ஜூட் விட்டுக்கிறேன் கோவியாரே.

கோவி.கண்ணன் சொன்னது…

சஞ்செய்,

சேலத்தில் தேசபந்து ஐ மீன் தங்க பந்து சாரி தங்கபாலு உண்ணாவிரதம் இருக்கிறாராம், அந்த காமடியை பதிவேற்றுங்கள், பொழுது போகும். கும்முவதற்கு பலர் காத்திருக்கிறார்கள் முதுகுதான் கிடைக்கமாட்டேன்கிதாம்.

Sanjai Gandhi சொன்னது…

கும்மனும்.. அவ்ளோ தானே? ஜெயலலிதா தனி ஈழம் வேண்டும்னு சொன்னதை பதிவேற்றுங்கள். பின்னி
எடுக்கலாம். :))

இருங்க எதுக்கும் நான் ஒரு போன் போட்டு, தங்கபாலு உண்ணாவிரதம் இருக்கிறது தமிழர்களை காக்கவா? பிரபாகரனுக்கு உயிர் பிச்சை போடவான்னு கேட்டுக்கிறேன். கள் இறக்குவதை எதிர்க்க உண்ணாவிரதம் இருந்து காமெடி பண்ண மாதிரி பிரபாகரனை காப்பாத்த உவி இருந்து தொலையப் போறார். பழய பாசம் இருக்கும்ல. :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்