கற்பனைக் கதையை எழுதுபவர்கள் படைப்பாளி என்று சொல்லிக் கொள்கிறார்கள், உண்மையில் கற்பனை என்று எதுவும் இல்லை. கற்பனை செய்வதாகச் சொல்வது வெறும் கற்பனை தான், நாம் கேள்விபடாத ஒன்றை யாருமே கற்பனை செய்துவிட முடியாது, தலையும், கண்ணும், வாயும்,மூக்கு, காது இவை இல்லாத ஒரு உயிரனத்தைக் கற்பனை செய்து பாருங்கள் முடியவே முடியாது, தெரிந்த ஒன்றை வைத்து சற்று அலங்காரமாக கூறுவதைத் தான் கற்பனை என்கிறோம். முற்றிலும் கற்பனையான ஒன்றை எவரும் கற்பனை செய்துவிட முடியாது அப்படியே செய்தாலும் அது யாருக்கும் புரியாது. நாலு கோடுகளைப் போட்டுவிட்டு மாடர்ன் ஆர்ட் என்று சொன்னால் மாடர்ன் ஆர்ட் ரசிகர்களே குழம்பிப் போவார்கள், ஒன்றைப் பற்றி வேறு விதமாகச் சொல்வது அந்த ஒன்றிலிருந்து பிரித்து சொல்லும் முறைதானேயன்றி முழுக்க கற்பனை என்று எதுவுமே இல்லை. சிலநிகழ்வுகளை சற்று மாற்றி சிந்தித்து, 'இப்படி கூட நடக்கலாம்' என்பது போல் சித்தரிப்பது தான் கற்பனை கதைகள், நடக்காத நிகழ்வைப் பற்றி பேசுவது மட்டுமே, நடைபெறவே வாய்பில்லாத ஒன்றைப் பற்றி அல்ல.
இறைவன் படைக்கிறானா ?
ஆன்மிக அபத்தங்களில் இதுவே முக்கியமானது. எந்த ஒரு செயலுக்கும் தூண்டல் அல்லது எதோ ஒரு காரணம் இருக்க வேண்டும், இறைவனுக்கு இவற்றைப் படைக்க என்ன காரணம் ஏற்பட்டு இருக்க வேண்டும்? முன்பு கூட இதே கேள்வியைக் கேட்டு இருக்கிறேன். பிறப்பினால் இறப்பு என்பது காரணம், பிறப்பு ஏன் என்பதற்கு பல காரணம் இருக்கிறது. பிறப்பிற்கான உடலியல் காரணம் எல்லோரும் அறிந்தது தான். நாத்திகர்கள் ஆன்மா என்று ஒன்று இருப்பதையே நம்பாதவர்கள் என்பதால் அவர்கள் பிறப்பிற்கான காரணமாக உடல்களின் சேர்க்கை மற்றும் இயற்கை என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். ஆன்மிக வாதிகள் இம்மை மறுமையிலெல்லாம் நம்பிக்கை உடையவர்கள் வேறு மாதிரிச் சொல்வார்கள்.
எந்த மதமானாலும் எல்லாம் இறைவனின் சித்தம் என்றே சொல்லி முடித்துக் கொள்கின்றன, மதங்களுக்கிடையே உள்ள சித்தாந்த வேறுபாடுகள் மூலம் சில மதங்கள் மறுபிறவி இருப்பதாகவும், சில இல்லை என்பதாகவும் சொல்கின்றன. இந்திய சமயங்களில் மறுபிறவி நம்பிக்கை உண்டு, நாத்திக சமயங்களான சமண பெளத்திலும் இந்த நம்பிக்கை உண்டு. மறுபிறவி உண்டு இல்லை என்பதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை, அவை மதக் கோட்பாடுகள் தான். ஆனால் மதங்கள் காட்டும் இறைவனின் செயலாக படைப்புகள் இருப்பதாக அனைத்து மதங்களும் (பெளத்தம் / சமணம் தவிர்த்து) சொல்கின்றன. ஆனால் படைப்புக்கான காரணம் ? எந்த மதமும் அதைச் சொல்லவில்லை. இறைவன் சூனியத்திலிருந்து இவ்வுலகையும் ஏனையவற்றையும் படைத்தான் என்றே சொல்லி வருகின்றன. விஞ்ஞான விதிகளின் படி ஒரு பொருள் இல்லாமல் எந்த பொருளையும் உருவாகிவிட முடியாது. சூனியம் என்பது பொருளற்ற தன்மை. சூனியத்திலிருந்து பொருள்களை எவ்வாறு படைத்திருக்க முடியும், இதற்கான விடையை எந்த மதமும் சொல்லவில்லை. ஆன்மிக வாதிகளும் நம்பிகை என்ற அளவில் இதுபற்றி தனக்குத்தானே கேள்விகளைக் கூட கேட்டுக் கொள்வதில்லை.
முழுபிரபஞ்சமும் பின்னப்பட்ட ஒரு சக்தியினாலேயே இயங்குகிறது, எளிமையாகச் சொல்லப் போனால் பூமியின் துருவங்களின் காந்த சக்தியும் சூரிய விசையும், பூமி இருக்கும் இடமும் தான் பூமி சூரியனைச் சுற்றிவர தன்னைத் தானே சுற்றி வர காரணமானவைகளாக இருக்கின்றன, சூரிய மண்டலும் பால்வெளித் திரளின் சுழல் சக்தியினால் தான் அதைச் சுற்றி வருகிறது (சூரியன் நிலையானது அல்ல). முழுபால்வெளி திரளும் எண்ணற்ற சுழல் சூரியன்களுடன் சுழல்வதுடன், அப்படியே இடம் பெயர்ந்தும் கொண்டிருக்கிறது. ஆக இருக்கும் எண்ணற்ற கேலக்சிகளின் சுழற்சிக்கும் சேர்த்து மொத்தமான விசை எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த மொத்த விசை கேலக்சிகளுக்கு இடையே இருக்கும் மாறுபட்ட விசைகளின் வேறுபாட்டினால் அல்லது கூட்டுத்தொகையின் இயக்கமாகக் கூட இருக்கும்.
இவை எல்லாவற்றையும் இறைவன் இயக்குகிறான், இறைவன் கட்டுபடுத்துகிறான் என்று சொல்வதெல்லாம் அபத்தமாகவே படுகிறது. தற்சுழற்சியாக சுழலும் இந்த இயக்கத்திற்கான சக்தியை சூனியத்திலிருந்து உருவவாதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. சூனியம் என்பது வெறும் ஜீரோ சக்திதான், அதிலிருந்து அனைத்து கேலக்சிகளையும் இயக்கும் சக்தி கிடைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இல்லாத ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்கிக் காட்ட இறைவன் மாய ஜால வித்தைக் காரணா ? அவர்கள் கூட இல்லாத ஒன்றில் இருந்து உருவாக்க மாட்டார்கள் நம் கண்களுக்கு அவை தெரியாது அவ்வளவு தான்.
இறைவன் படைத்தான் என்று திருப்தி பட்டுக் கொள்வதைவிட, ஏன் படைத்தான் என்ற எதிர்கேள்வி போட்டால் படைப்பு பற்றிய ஐயம் தோன்ற ஆரம்பிக்கும். இறைச் சித்தம் என்ற ஒற்றைச் சொல் திருப்தியை இறைச் சித்தம் ஏன் என்று கேட்டால் எந்த ஆன்மிகவாதிகளும் பதில் சொல்வதில்லை. பிரம்மா தூங்கினார் இரவு (படைப்பின்மை), பிரம்மா விழித்தார் பகல் (படைப்பு) என்றெல்லாம் கூடச் சொல்வார்கள். ஆறுநாளில் உலகை படைக்க நினைத்ததன் தேவை என்ன என்று ஆப்ரகாமிய மதங்களிடம் கேட்டாலும் அவர்களும் பதில் சொல்லமாட்டார்கள். நம்பிக்கை நம்புகிறோம் என்றே எல்லோரும் சொல்வார்கள்.
என்ன சொல்ல வர்றீங்க ? இறைவன் இல்லை என்கிறீர்களா ?
அப்படியெல்லாம் சொல்வதற்கு அனைத்தையும் அறிந்தவன் அல்ல. இறைவன் என்று ஒன்று இருந்தால் அந்த சக்தி வெறும் வழிகாட்டிதான். இயற்கை சக்திகளுக்கு அதுவும் கட்டுபட்டது தான். உங்களுக்கு கடும் துன்பம் ஏற்பட்டால் அதிலிருந்து விடுபட உங்களுக்குத் தேவை மாற்று சக்தி அது போன்ற நேரங்களில் வேண்டுதலால் உங்களுக்கு அந்த சக்தியிடமிருந்து, சக்தி கிடைக்கலாம், மற்றபடி வேப்பில்லை அடித்து நோயை குணப்படுத்துவது, உங்கள் வீட்டு கஜானாவை நிறப்புவது, நீங்கள் மட்டுமே நல்லா இருக்கனும் என்று ஆசிர்வதிப்பது எல்லாம் இறைவனின் வேலை இல்லை என்றே நினைக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் இறைவன் காரணம் என்பவர்கள் சுனாமிக்கு காரணமா என்று கேட்டால் ஓடிவிடுவார்கள், ஒரு சிலர் துணிந்தே (அபத்தமாக) 'ஆம்' என்பார்கள், காரணம் அவர்கள் உறவினர் யாரும் சுனாமியில் சாகவில்லை என்பதால். செயல்கெளெல்லாம் கர்மவினையாக மாறும் என்று நம்பும் இறை நம்பிக்கையாளர்கள், இறைவனின் பங்கு அதனை மாற்றும் என்று சொல்வது கர்மவினைக்கு முற்றிலும் முரணானது தானே. ஒருவரை கொலை செய்து பாவம் செய்கிறோம், மனம் வருந்தினால் இறந்தவன் எழுந்துவிடுவான ? அல்லது இறைவன் இந்த கொலைகாரனை மன்னித்துவிட்டு இறந்தவரை எழுப்பிவிட்டுவிடுவாரா ? பாவமும் அதற்கான தண்டனைகளும், புண்ணியமும் அதற்கான பலன்களும் தனித்தனியாயானவை ஒன்றை வைத்து ஒன்றை ஈடுசெய்யவே முடியாது என்றே நினைக்கிறேன். எல்லாவற்றிக்கும் இறைவன் காரணம், இறைவனே எல்லாவற்றையும் படைத்தான் என்பது அபத்தம். எல்லாவற்றையும் இறைவன் படைத்தான், எல்லாவற்றிற்கும் இறைவன் காரணமென்றால் நாத்திகர்களின் பிறப்பிற்கும், அவர்களின் சிந்தனைக்கும் இறைவனே காரணம் என்று அமைதிகாப்போர் எத்தனைபேர் ?
இறைநம்பிக்கை மனரீதியான ஒன்று அது மனரீதியான பலன்களை மட்டுமே தரும். மற்றபடி இறைவன் எல்லாவற்றையும் படைத்தான், அவனே எல்லாவற்றையும் அசைக்கிறான் என்பதெல்லாம் முற்றிலும் கற்பனையானது தான். இறைவன் படைப்பதும் இல்லை நாம் படையலைப் போட்டால் சாப்பிடுவதும் இல்லை.
பின்குறிப்பு : இந்த கட்டுரையை இறைவன் என்னை எழுதத்தூண்டவில்லை, இந்த நிமிடங்களின் காலநிகழ்வாக இயற்கையின் சுழல் விசையே என்னை எழுத வைத்தது :)) அடுத்து பிரம்ம ஞானம், அனைத்துமே இறைவன் என்கிற பிதற்ல்களைப் பற்றி பார்ப்போம்.
பின்பற்றுபவர்கள்
2 அக்டோபர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
87 கருத்துகள்:
//இறைநம்பிக்கை மனரீதியான ஒன்று அது மனரீதியான பலன்களை மட்டுமே தரும். //
இது சரி.ஆனால் ..
//இறைவன் என்று ஒன்று இருந்தால் அந்த சக்தி வெறும் வழிகாட்டிதான். இயற்கை சக்திகளுக்கு அதுவும் கட்டுபட்டது தான்..//
இங்கு கொஞ்சம் குழப்புகிறீர்கள் அல்லது குழம்பி விட்டீர்கள் என நினைக்கிறேன்.
//தருமி said...
//இறைநம்பிக்கை மனரீதியான ஒன்று அது மனரீதியான பலன்களை மட்டுமே தரும். //
இது சரி.ஆனால் ..
//இறைவன் என்று ஒன்று இருந்தால் அந்த சக்தி வெறும் வழிகாட்டிதான். இயற்கை சக்திகளுக்கு அதுவும் கட்டுபட்டது தான்..//
இங்கு கொஞ்சம் குழப்புகிறீர்கள் அல்லது குழம்பி விட்டீர்கள் என நினைக்கிறேன்.
//
நீங்கள் அந்த பாயிண்டை பிடிப்பீர்கள் என்று தெரியும். நான் தயங்காமல் தான் எழுதினேன். 99 விழுக்காடு மனங்களின் நம்பிக்கை வெறும் கற்பனை என்று ஒதுக்கிவிடவும் முடியாது. இயக்கம் பெளதீக ரீதியான ஒன்று, அதற்கு காரணம் இறைவன் அல்ல என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். கடவுள் நம்பிக்கை மன ரீதியான ஒன்று என்றே எழுதி இருக்கிறேன்.
//தருமி said...
//இறைநம்பிக்கை மனரீதியான ஒன்று அது மனரீதியான பலன்களை மட்டுமே தரும். //
இது சரி.ஆனால் ..
//இறைவன் என்று ஒன்று இருந்தால் அந்த சக்தி வெறும் வழிகாட்டிதான். இயற்கை சக்திகளுக்கு அதுவும் கட்டுபட்டது தான்..//
இங்கு கொஞ்சம் குழப்புகிறீர்கள் அல்லது குழம்பி விட்டீர்கள் என நினைக்கிறேன்.
//
தருமி ஐயா,
இறைவன் என்றால் அனைத்துயுமே ஆட்டிப்படைக்கும் சக்தி என்று ஆன்மிக வாதிகள் சொல்லும் அளவை எடுத்துக் கொண்டு நான் சொல்வதை ஒப்பிட்டால் உங்களுக்கு குழப்பமாக எழுதி இருப்பதாகவே தோன்றும்.
//எல்லாவற்றையும் இறைவன் படைத்தான், எல்லாவற்றிற்கும் இறைவன் காரணமென்றால் நாத்திகர்களின் பிறப்பிற்கும், அவர்களின் சிந்தனைக்கும் இறைவனே காரணம் என்று அமைதிகாப்போர் எத்தனைபேர் ?//
//இறைவன் எல்லாவற்றையும் படைத்தான், அவனே எல்லாவற்றையும் அசைக்கிறான் என்பதெல்லாம் முற்றிலும் கற்பனையானது தான். இறைவன் படைப்பதும் இல்லை நாம் படையலைப் போட்டால் சாப்பிடுவதும் இல்லை//
நல்லாச் சொன்னீங்க..
எல்லாம் வல்லவன் என்று எவனும் இல்லை. அப்படி அவன் இருந்து, படைத்திருந்தால் அவனுடைய படைப்புகளை நெறிப் படுத்தவோ, கட்டுப் படுத்தவோ இயலாதவனாக இருக்கிறான்.
உதாரணமாக தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார். ஆனால் இப்போது உலகில் இருக்கும் மின்சார உற்பத்தி, பயன்பாடு, தன்மை, தட்டுப்பாடு போன்ற எதையும் கட்டுப் படுத்த உயிரோடு இருந்திருந்தால் கூட அவரால் முடியாது. செத்துப் போனதால் அவருடைய வாரிசுகளையோ அல்லது தூதர்களையோ அனுப்பியும் இதனை செய்ய இயலாது.
இதேபோல மேற்படி இறைவனாலோ அல்லது இறைவன்களாலோ இந்த உலகம் -படைக்கப் பட்டிருக்க அல்ல- கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளதோ?
கண்டுபிடித்துவிட்டு கட்டுப் படுத்த இயலாமல் இறைவன் செத்துப் போனதால் ஆற்காடு வீராசாமி போன்ற தூதர்கள் காற்று வந்தால் கரண்ட் வரும், மழை பெஞ்சால், அணை நிறைஞ்சால் மின் உற்பத்தி செய்வோம். அப்போது மின் தட்டுப்பாடு நீங்கும் எனக் கதைவிட்டு மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்களோ?
ஆகுக என்று ஒற்றைச் சொல்லில் உலகத்தைப் படைத்திருந்தால் அதே போல ஆகுக என்று சொல்லி உலகை உய்வித்திருக்கலாமே?
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக (அல்லாஹ்வாகிய) அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 67:2)
படைப்புத் தொழிலைப் பற்றிப் பேசுறீங்க...!
நாங்கள் கவனிக்கிறோம்.
கருத்து சொல்ல வார்த்தையில்லை.
நிராயுத பாணியாக நிற்கிறோம்.
******* இறைவன் படைக்கிறானா ? ********நாம் கேள்விபடாத ஒன்றை யாருமே கற்பனை செய்துவிட முடியாது**************
நான் கேள்விப்படாத ஒன்றை என்னால் கற்பனை செய்ய முடியாது என்று இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து இந்த உங்கள் கட்டுரையை படியுங்கள் !!
***** குரங்கினால் count செய்ய முடியும் ****** ஆனால் அது எப்படி count செய்யும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாது. ஏன் என்றால் எனது கற்பனை whole number, real number, decimalsஐ தாண்டி போகாது.
//Jafar Safamarva said...
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக (அல்லாஹ்வாகிய) அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 67:2)
//
அப்படியா ?
பிறந்த உடனேயே எதோ காரணங்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோராகவே பிறப்பதுவும் இறைவனின் லீலைகள் தானா ? ரொம்ப காஸ்ட்லியான அருவெறுப்பான சோதனையாக தெரியவில்லையா ? நாம ஊன முற்றோர்களிடம் காட்டும் இரக்கம் கூட படைபவர் என்று நம்பப்படுபவருக்கு இருக்காதா ?
எல்லாவற்றிற்கும் இறைவனைக் காரணம் காட்டுவது கூட இறைத் தன்மையை இழிவு படுத்துவது என்று எவருமே உணர்வதில்லை என்பது வியப்பாகவே இருக்கிறது.
// மணிகண்டன் said...
நான் கேள்விப்படாத ஒன்றை என்னால் கற்பனை செய்ய முடியாது என்று இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து இந்த உங்கள் கட்டுரையை படியுங்கள் !!
//
நான் என்றாலும் நாம் என்றாலும் அவரவருக்கு தோன்றும் கற்பனைகள் வேறு என்றாலும் கற்பனையின் தன்மை ஒன்று தான்.
//***** குரங்கினால் count செய்ய முடியும் ****** ஆனால் அது எப்படி count செய்யும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாது. ஏன் என்றால் எனது கற்பனை whole number, real number, decimalsஐ தாண்டி போகாது.
// அது என்னவோ சரிதான்.
//ஜோதிபாரதி said...
படைப்புத் தொழிலைப் பற்றிப் பேசுறீங்க...!
நாங்கள் கவனிக்கிறோம்.
கருத்து சொல்ல வார்த்தையில்லை.
நிராயுத பாணியாக நிற்கிறோம்.
7:31 PM, October 02, 2008
//
:)) 'கவனிக்க' ஆயுதம் தேவை இல்லையா ?
இறைவன் இருக்கின்றானா..
மனிதன் கேட்கிறான்
இருந்தால் அவன் உலகில்
எங்கே வாழ்கிறான்
நான் ஆத்திகனானேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன்
அவன் பயப்படவில்லை
Jafar Safamarva ,
//உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக//
a very playful god??!!
//மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்//
இதன் பொருள் புரியவில்லை.
//ஆன்மிக அபத்தங்களில் இதுவே முக்கியமானது. எந்த ஒரு செயலுக்கும் தூண்டல் அல்லது எதோ ஒரு காரணம் இருக்க வேண்டும், இறைவனுக்கு இவற்றைப் படைக்க என்ன காரணம் ஏற்பட்டு இருக்க வேண்டும்? முன்பு கூட இதே கேள்வியைக் கேட்டு இருக்கிறேன்.//
நம் மனம் எல்லா நிகழ்விற்கும் நாம் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு வகையிலான ஒரு காரணத்தை தேடி அலைகிறது.
யாரேனும் ஒரு காரணம் கூறினாலும் அது நமக்கு பொருந்தாதவரை "it doesn't make sense" என்று தள்ளிவிடுவோம். இதை ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தைகளிடம் நாம் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளிலேயே காணமுடியும்.
இப்போது நினைத்துப்பார்ப்போம், இந்த ப்ரபஞ்சம், அதன் உயிர்கள் தோற்றம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள எத்துணை அறிவும், விடா முயற்சியும் தேவை? அதை நீங்களாகவே உணரமட்டுமே முடியும். பிறர் சொல்வது உண்மையாக இருந்தபோதிலும் உங்களுடைய reaction, "It doesn't make sense" என்பதாகவே இருக்கப்போகிறது.
திரைப்படம் "அறை எண் 302-ல் கடவுள்" பார்த்தீர்களா? அதில் சுவற்றில் இருக்கும் பல்லிக்கு switch போட்டதும் light எரியும் தத்துவத்தை எவ்வளவு சொன்னாலும் புரியப்போவதில்லை என்ற ப்ரகாஷ்ராஜ்-ன் dialog-ல் உண்மையும் உண்டு.
உடலுறவின் இன்பம் எப்படிப்பட்டது என்பதை பருவத்தை அடையும் வரை எத்தனை பேர் சொன்னலும், எத்துணை புத்தகங்கள் படித்தாலும், அறிவால் விளங்கிகொள்ளக்கூடிய விஷயம் அது அல்லவே, உணரக்கூடியது மட்டுமே. நீங்கள் உணர்ந்தாலும் அதை பருவம் எட்டாத இன்னொருவருக்கு புரியவைத்தல் உங்களால் இயலாது. ஆனால் உங்களை போன்றெ உணர்ந்தவரிடம் அதைப்பற்றி பகிர்ந்துகொள்ள முடியும். ப்ரபஞ்ச ரகசியங்களும் இது போன்றதே.
உங்களுக்குள் எழும் இந்த கேள்விகள் மிக ஆரோக்கியமானவை, மிக உன்னதமானவை. ஆனால் பதிலை உங்களுக்குள் தேடுங்கள்.
"Path of Ramana - Part I" is an excellant book. Pls give a try.
*********** நான் என்றாலும் நாம் என்றாலும் அவரவருக்கு தோன்றும் கற்பனைகள் வேறு என்றாலும் கற்பனையின் தன்மை ஒன்று தான் **********
இது போங்கு !
//நம் மனம் எல்லா நிகழ்விற்கும் நாம் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு வகையிலான ஒரு காரணத்தை தேடி அலைகிறது. //
காரணத்தை தேடாமல் திருப்தி அடைந்து விடுவது ஆன்மிகம் ? முற்றிலும் நிராகரிப்பது நாத்திகம் ?
:)
//உடலுறவின் இன்பம் எப்படிப்பட்டது என்பதை பருவத்தை அடையும் வரை எத்தனை பேர் சொன்னலும், எத்துணை புத்தகங்கள் படித்தாலும், அறிவால் விளங்கிகொள்ளக்கூடிய விஷயம் அது அல்லவே, உணரக்கூடியது மட்டுமே. நீங்கள் உணர்ந்தாலும் அதை பருவம் எட்டாத இன்னொருவருக்கு புரியவைத்தல் உங்களால் இயலாது. ஆனால் உங்களை போன்றெ உணர்ந்தவரிடம் அதைப்பற்றி பகிர்ந்துகொள்ள முடியும். ப்ரபஞ்ச ரகசியங்களும் இது போன்றதே. //
இதைவிட எளிமையாக 'சோமாலியாவில் சுவைத்துப் பார்த்த ஒரு இனிப்பு வகைப் பற்றி எவ்வளவு விளக்கினாலும், விளங்க வைக்க முடியாது, தின்று பார்பவர்களுக்கு மட்டுமே சுவை தெரியும் என்று சொல்லலாம். அழுத்தமாக சொல்லவேண்டும் என்பதற்காக அந்த உதாரணத்தை எடுத்துக் கொண்டீர்கள் என நினைக்கிறேன். :))
நன்றாக எழுது இருக்கிறீர்கள். இறைவனை வழிபடுவதோடு நின்று விட்டால் சரிதான். ஆத்திகன், நாத்திகனை கொலைவெறியோடு பார்ப்பதும் ,நாத்திகன், ஆத்திகனை கொலைவெறியோடு பார்ப்பதும் ,
ஆத்திகன் தன் கடவுளை நம்பாதா மற்ற ஆத்திகனை கொலைவெறியோடு பார்ப்பதையும் நிறுத்தினால் போதும். ஏற்கனவே நான் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கேன் பார்ப்போம் என்ன பண்றார்னு.
கோவி,
குடுகுடுப்பை எழுதிய கடிதம் எனக்கு இன்னும் வரவில்லையே!!
:-)
குடுகுடுப்பை,
என்னிலும் கடவுள் இருக்கிறான்; உன்னிலும் இருக்கிறான் என்கிறார்கள். அதனால்தான் இப்படிச் சொன்னேன்.
:-)
//காரணத்தை தேடாமல் திருப்தி அடைந்து விடுவது ஆன்மிகம் ? முற்றிலும் நிராகரிப்பது நாத்திகம் ?//
"தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்" - என்ற பாடல் வரி நினைவுக்கு வருகிறது.
ஆத்திகமா ? நாத்திகமா? இதில் எது பற்றியும் நமக்கு கவலை இல்லை. அவை வெறும் சொற்களும், அவற்றுடன் அவரவர் இஷ்ட்டப்படி இணைத்துக்கொணட கருத்தாக்கங்களும் மட்டுமே. அதற்கு ஏன் நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?
சத்சங்கம் என்பதில் கேள்விகள் கேட்பது வரவேற்கப்படுகிறது. It is the only way to breake into it.
ஆனால் once it becomes entertaining, we tend to be in there for the pleasure it gives to us.
கொளதம புத்தர் சொன்னதுபோல், be open for experiments. Experiance is the only way to reach the destination. He said, "We all made of the same hardware (body) and all have the potential to realize what I did"
Budhdhaa's saying is enough quarentee to start the experiment with oneself, not outside.
Q&A will help for beginners to gain enough motivation/momentum to start doing sadhana. Q&A have no other purpose. If looking forward to reach the ultimate goal via Q&A, still it is possible but the way is "Path of Ramana - PART - I". Please read it.
//அழுத்தமாக சொல்லவேண்டும் என்பதற்காக அந்த உதாரணத்தை எடுத்துக் கொண்டீர்கள் என நினைக்கிறேன். :))//
அதுமட்டுமல்ல காரணம்.
"உங்களுக்குள்ளேயே உள்ள இன்பத்தை உணர்வதற்கும் காலமும், பக்குவமும், சூழ்நிலையும் உருவாகும் வரை காத்திருக்க வேண்டும்" என்ற ஒரு காரணத்துக்காகவும் அந்த எடுத்துக்காட்டை கூறியிருந்தேன்.
கோவி.கண்ணன்.
//அப்படியா ?
பிறந்த உடனேயே எதோ காரணங்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோராகவே பிறப்பதுவும் இறைவனின் லீலைகள் தானா ? ரொம்ப காஸ்ட்லியான அருவெறுப்பான சோதனையாக தெரியவில்லையா ? நாம ஊன முற்றோர்களிடம் காட்டும் இரக்கம் கூட படைபவர் என்று நம்பப்படுபவருக்கு இருக்காதா ?
எல்லாவற்றிற்கும் இறைவனைக் காரணம் காட்டுவது கூட இறைத் தன்மையை இழிவு படுத்துவது என்று எவருமே உணர்வதில்லை என்பது வியப்பாகவே இருக்கிறது.//
(அல்லாஹ்வாகிய) அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன்: 21:23)
//(அல்லாஹ்வாகிய) அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன்: 21:23)
//
இப்படி சொன்னா நாங்க என்னதான் செய்றது?
உண்மை கண்டரியும் பாதையில் மிகவும் சோர்வடைச்செய்யும் மார்கமாகவே இஸ்லாத்தை கருதவேண்டியுள்ளது.
இதுக்குத்தான் கோவியாரிடம் முன்னமே சொன்னேன், ஒரு புத்தகத்தை மட்டும் வைத்துக்கொண்டு யாரும் சம்சாரத்தை கடந்துவிட முடியாது என்று.
Jafar Safamarva அவர்களின் நம்பிக்கையை மதிக்கும் அதே வேளையில், இது போன்ற விளக்கங்கள் யாருக்கும் (பிற இஸ்லாமியர் உட்பட) புரியவோ பயன்படப்போவதோ இல்லை.
தருமி சார்!
அஜீஸ் என்ற அரபுச் சொல்லுக்கு தமிழில் மிகைத்தவன் என்று பொருள் வரும். உலகில் உள்ள அனைத்து சக்தியை விட மிகுந்த சக்தியை தன்னகத்தே பெற்றவன் என்ற பொருளில் வரும். இது இறைவனின் பல தன்மைகளில் ஒன்று. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், மறைவானவற்றை அறிபவன், தேவையற்றவன், இது போன்று பல தன்மைகளை இஸ்லாம் இறைவனுக்கு வழங்குகிறது.
கோவிக் கண்ணன்!
இத்தனை கோள்களும் பூமியும் சூரியனும் எந்த ஒரு கட்டளையும் இல்லாமல் தானாகவே சுற்றி வருகிறது என்ற வாதமே பகுத்தறிவுக்கு எதிரானதல்லவா! உங்கள் உடம்பையே நீங்கள் ஆராய்ந்து பாருங்களேன். இத்தகைய ஒழுங்கான உடல் அமைப்பு நமக்கு மேல் ஒரு சன்தி இருப்பதை உணர்த்தவில்லையா!
'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், இறைவன் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
குர்ஆன்: 2:164
இறைவனைப் பற்றி நீங்கள் வைக்கும் கேள்விகள் விரிவாக விளக்கப்பட வேண்டியவை. நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.
// சுவனப்பிரியன் said...
தருமி சார்!
அஜீஸ் என்ற அரபுச் சொல்லுக்கு தமிழில் மிகைத்தவன் என்று பொருள் வரும். உலகில் உள்ள அனைத்து சக்தியை விட மிகுந்த சக்தியை தன்னகத்தே பெற்றவன் என்ற பொருளில் வரும். இது இறைவனின் பல தன்மைகளில் ஒன்று. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், மறைவானவற்றை அறிபவன், தேவையற்றவன், இது போன்று பல தன்மைகளை இஸ்லாம் இறைவனுக்கு வழங்குகிறது.//
சகோதரர் சுவனப்பிரியன்,
எல்லா மதத்திலும் இப்படித்தான் இறைத்தன்மை இருப்பதாகச் சொல்கிறார்கள், இஸ்லாம் மட்டுமே இப்படி சொல்வதாக பிற மதத்தைப் பற்றிய அறியாமையால் சொல்கிறீர்கள்.
//கோவிக் கண்ணன்!
இத்தனை கோள்களும் பூமியும் சூரியனும் எந்த ஒரு கட்டளையும் இல்லாமல் தானாகவே சுற்றி வருகிறது என்ற வாதமே பகுத்தறிவுக்கு எதிரானதல்லவா! உங்கள் உடம்பையே நீங்கள் ஆராய்ந்து பாருங்களேன். இத்தகைய ஒழுங்கான உடல் அமைப்பு நமக்கு மேல் ஒரு சன்தி இருப்பதை உணர்த்தவில்லையா!//
தேவைப்பட்டால் எரிகற்களை வைத்தும் தாக்குவாரா கடவுள் ? அவையெல்லாம் சுழற்சியில் இருந்து கழண்டு வந்து பூமியின் தலையை பதம் பார்பது ஏன் ? என் உடம்பை ஆராய்ந்து பார்பது இருக்கட்டும், எனக்கு கண்களுக்கு தெரிவதெல்லாம் ஊன முற்றோர்களின் உடல் தான், பிறவியிலேயே கண் இல்லாமல், கால் இல்லாமல், ஏன் சிலசமயம் இரு தலைகளை மட்டும், முதுகு மட்டும், இடுப்பு மட்டும் ஒன்று சேர்ந்து ஒட்டிய இரட்டையர்களாக பிறப்பதெல்லாம் ஏன் ? இவையும் ஒழுங்கான அமைப்பு என்று வாதிடும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா ?
//'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், இறைவன் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
குர்ஆன்: 2:164//
குரான் வசனத்தைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை, அது நம்பிக்கை என்பதால் அதில் விவாதிக்க விருப்பமும் இல்லை, நானே அனைத்தையும் படைத்தேன் என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்வதாகக் கூடத்தான் சொல்கிறார்கள், அதையெல்லாம் நீங்கள் நம்புவீர்களா ?
//இறைவனைப் பற்றி நீங்கள் வைக்கும் கேள்விகள் விரிவாக விளக்கப்பட வேண்டியவை. நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.//
விளக்குங்கள், ஆனால் உங்கள் விளக்கம் குரானைத் தாண்டி, மதத்தைத் தாண்டி இருக்கவே இருக்காது என்பதும் என்னால் ஊகிக்க முடியும்.
// KARMA said...
உண்மை கண்டரியும் பாதையில் மிகவும் சோர்வடைச்செய்யும் மார்கமாகவே இஸ்லாத்தை கருதவேண்டியுள்ளது. //
தனிப்பட்டவர்களின் நம்பிக்கை விமர்சனம் செய்வதைத் தவிர்கலாம், நான் இங்கு எடுத்துக் கொண்டது கூட பொதுவானவைதான்.
//Jafar Safamarva அவர்களின் நம்பிக்கையை மதிக்கும் அதே வேளையில், இது போன்ற விளக்கங்கள் யாருக்கும் (பிற இஸ்லாமியர் உட்பட) புரியவோ பயன்படப்போவதோ இல்லை.
// இது ஓரளவுக்குச் சரிதான்.
மதநூல்களெல்லாம் அந்தந்த மதத்துக்காரர்களுக்கு மட்டுமே, உலகம் முழுவதற்கானது அல்ல.
கோவி கண்ணன்,
//புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே!//
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. மத நம்பிக்கைகளைப் பற்றிய விவாதங்களுக்கு உங்களின் இக்கருத்து மிக நன்றாகவே பொருந்தும்.
நம் கண்ணுக்குத் தெரியாத விஷயங்களான, இறைவன், மறுமை, சொர்க்கம், நரகம், வானவர்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்வதுதான் இஸ்லாமின் அடிப்படை. ஒரு முஸ்லிம் இவற்றின் மீது நம்பிக்கை கொள்கிறார் என்றால் இவற்றை விளக்கும் இறைவேதம் குர்ஆனை அவர் நம்புகிறார், அந்த இறைவேதத்தை இறக்கியவன் இறைவனே என்பதையும் அதை அவன் தனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக இறக்கினான் என்பதையும் நம்புகிறார். அந்த இறைத்தூதர் நம்பகத்தன்மை மிகுந்தவர் என்பதற்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன.
இப்படியான நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு முஸ்லிம், 'இறைவன் மட்டுமே படைக்கிறான்' என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்வதில்லை. ஆனால் இதே நம்பிக்கைகளை இன்னொருவருக்கு புரிய வைப்பது சுலபமான ஒன்றல்ல.
நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத அல்லது புரிந்து கொள்ள முடியாத விஷயங்களெல்லாம் அபத்தமானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மிகக்குறைந்த அல்லது மிக அதிக டெசிபல் கொண்ட ஓசைகளை நம் காதுகளால் உணர முடியாது. அதற்காக அவையெல்லாம் இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியுமா?
//சலாஹுத்தீன் said...
கோவி கண்ணன்,
//புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே!//
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. மத நம்பிக்கைகளைப் பற்றிய விவாதங்களுக்கு உங்களின் இக்கருத்து மிக நன்றாகவே பொருந்தும்.
நம் கண்ணுக்குத் தெரியாத விஷயங்களான, இறைவன், மறுமை, சொர்க்கம், நரகம், வானவர்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்வதுதான் இஸ்லாமின் அடிப்படை. ஒரு முஸ்லிம் இவற்றின் மீது நம்பிக்கை கொள்கிறார் என்றால் இவற்றை விளக்கும் இறைவேதம் குர்ஆனை அவர் நம்புகிறார், அந்த இறைவேதத்தை இறக்கியவன் இறைவனே என்பதையும் அதை அவன் தனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக இறக்கினான் என்பதையும் நம்புகிறார். அந்த இறைத்தூதர் நம்பகத்தன்மை மிகுந்தவர் என்பதற்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன.
இப்படியான நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு முஸ்லிம், 'இறைவன் மட்டுமே படைக்கிறான்' என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்வதில்லை. ஆனால் இதே நம்பிக்கைகளை இன்னொருவருக்கு புரிய வைப்பது சுலபமான ஒன்றல்ல.
நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத அல்லது புரிந்து கொள்ள முடியாத விஷயங்களெல்லாம் அபத்தமானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மிகக்குறைந்த அல்லது மிக அதிக டெசிபல் கொண்ட ஓசைகளை நம் காதுகளால் உணர முடியாது. அதற்காக அவையெல்லாம் இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியுமா?
11:40 AM, October 03, 2008
//
நீங்கள் காட்டியிருக்கும் 'டெசிபல்' உதாரணம் நானும் நாத்திக நண்பர்களிடம் கேட்டு இருக்கிறேன்.
நான் இங்கு மத நம்பிக்கைக் குறித்து கேள்விகள் எழுப்பவில்லை. இறைவன் என்பது ஒரு தத்துவம், அதைப்பற்றி இஸ்லாமோ, கிறித்துவமோ பேசுவதில்லை, எனவே எனது விவாதங்களில் குரானைக் கொண்டு வந்து விளக்காதீர்கள் என்று தான் சொல்லி வருகிறேன்.
மதநம்பிக்கை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களின் கேள்விக்கு அப்பாற்பட்டது என்பது நன்றாகவே தெரியும்.
நான் பேசுவது மதம் பற்றியல்ல, மதத்தில் சொல்லப்பட்டு இருக்கிற செய்திகளை விவாதத்ததிற்கு எடுத்துக் கொண்டு இறை தன்மை, இறைவன் பற்றிய எனக்குள் எழும் கேள்விகளையும் சிந்தனைகளையும் எழுதுகிறேன். இறைவன் எந்த மதத்தையும் சேர்ந்தவன் இல்லை, மனிதர்களுக்குத்தான் மதம், உங்களுக்கெல்லாம் அவை ஒன்றாக தெரிவதில் எனக்கு வியப்பு இல்லை. நான் ஒன்றாக கருதவில்லை.
உங்களுக்கு எப்படி இஸ்லாம் மீதும் குரான் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறதோ அது போல் தான் பிற மதத்தினரும் அவர்களின் மதத்தில் நம்பிக்கை கொண்டு இருப்பார்கள், உங்களைப் பொருத்து உங்கள் மதம் உண்மை என்பது போல் அவர்களைப் பொருத்து அவர்கள் மதமும் உண்மை.
///என்ன சொல்ல வர்றீங்க ? இறைவன் இல்லை என்கிறீர்களா ?///
கடவுள் பத்தின கேள்விக்கு நம்ம பதில் கமலஹாசன் மாதிரி தான்...
"கடவுள் இல்லைன்னு நான் எப்பங்க சொன்னேன்?? இருந்தா நல்லா இருக்கும்ன்னு தானே சொன்னேன் " என்ற தசாவதாரம் வசனத்தை நினைவில் கொள்க.
ஒரு மனிதன் இன்னொருவனிடம் "கடவுள் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?? " என்று கேட்டுகொண்டிருக்கும் போது, ஒரு கடவுள் இன்னொரு கடவுளிடம் கேட்டாராம் "உங்களுக்கு மனிதன் மேல நம்பிக்கை இருக்கா???"
கற்பனை பத்தி நிறைய கற்பனை(உண்மையில் அது கற்பனை தானா??) பண்ணி எழுதியிருகீங்க.
கடவுளின் படைப்பை நீல அகலங்களோடு அலசுகிற யோசிக்க வைக்கும் கட்டுரை.
கற்பனை குறித்த விளக்கங்கள் அருமை.
இறைவன் எனபவரை தனிப்பட்ட ஒரு நபராக அல்லது ஒரு அமைப்பாக பார்ப்பதால் தான் படைப்பு கொள்கை ஜீரணிக்கமுடியாதததாகுகிறது.
கடவுள் படைப்பு என்பதை விட படைப்பு கடவுள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள். படைப்புக்கான ரகசியம் புரியும்.
இந்த பிரபஞ்சம் தனாக தோன்றி, தான்தோன்றித்தனமாக இயங்கவில்லை. இதற்கு ஒரே ஆதாரம் இரட்டை தத்துவம் அல்லது ஆண்&பெண் கவர்ச்சி.
கடவுள் என்பவரை தனிமனிதானாக அல்லது தனிமுதலாக பார்க்க தான் மனத மனம் ஏங்குகிறது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடு தான் கடவுள்கள். அதுவும் தவறானது அல்ல. கடவுள் இந்த பிரபஞ்சத்தை திட்டமிட்டு படைத்தார், படைக்கிறார் என்பது மிகசரியான வாதமே தவிர மூட நம்பிக்கை அல்ல. இதை புரிந்து கொள்ள முதலில் பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த பிரபஞ்சம் என்பது நமது எதார்த்த பார்வை மற்றும் அறிவியல் பார்வையில் காணகிடப்பது போல பொதுவான ஒன்று அல்ல. பிரபஞ்சம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும், உயிருக்கும் தனிப்பட்டது. அதே போல தான் கடவுளும். இந்த தத்துவத்தில் மேற்சொன்ன இறைவன் படைக்கிறாரா? கேள்வியை மீண்டும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.
நன்றி.
//எனவே எனது விவாதங்களில் குரானைக் கொண்டு வந்து விளக்காதீர்கள் என்று தான் சொல்லி வருகிறேன்//.
நீங்கள் பதிவுக்கு வைத்திருக்கும் தலைப்புக்கும் மேலே சொல்வதற்கும் சம்பந்தமே இல்லையே. நாம் இப்போது விவாதிப்பது 'இறைவன் படைக்கிறானா' என்பது பற்றிதான். அது சம்பந்தமான வேத ஆதாரங்களை கொடுக்கும் போது சிந்திக்க மறுத்து குர்ஆனிலிருந்து விளக்காதீர்கள் என்றால் நான் என்ன செய்வது. வேண்டுமென்றால் வேதங்களை நம்பிக்கைக் கொண்டவர்கள் இதில் கலந்து கொள்ளாதீர்கள் என்று முன்னறிவிப்பு செய்து விடுங்கள்.
இறைவன் படைக்கிறானா ? - மனிதனுள் இறைவனைத் தேடாமல், மதம் பிடித்து அழிந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில் இப்பதிவு ஒரு வரமே.
ஒரு வாரகாலம் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில், ஒரு செத்துபோன எலியை வைத்துவிட்டு, பின்பு அதனை எடுத்துப் பார்ததால் அதில் புழுக்கள் இருக்கத்தான் செய்யும். அந்தப் புழுக்கள் எப்படி எங்கிருந்து வந்தன?? இதற்கும் இறைவனுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா??
சில நாட்களுக்கு முன், நண்பன் ஒருவன் விபூதி கொடுத்துவிட்டு, எடுத்துக்கோ இது ரொம்ப பவரான சாமி பிரசாதம் என்றான். எனக்கு குபீரென்று சிரிப்புதான் வந்தது. அதென்ன சாமிகளில் ரொம்ப பவரான சாமி, பவர் குறைந்த சாமி. அவனிடம் கேட்டதிற்கு அவனிடமிருந்து சிரிப்புதான் பதிலாக வந்தது.
இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்வியின் பக்கத்தில்கூட செல்லாதீர்கள். அதற்குமாறாக, மற்ற உயிரினங்களின் மனங்களை அறிய முயலுவோம்.
விலங்கினங்கள், பூச்சிகள், ஊர்வன, பறப்பன... இப்படி "உடலின் எடைகள் வேறுபடலாம் - ஆனால் உயிரின் எடை ஒன்றுதான்"
அறிவியலால் விளக்க முடியாத பல ரகசியங்கள் உண்டு. உதாரணமாக உயிர் என்றால் என்ன? நாம் ஏன் மரணமடைகிறோம்? இன்னும் பல. பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதற்கு அறிவியல் கொடுக்கும் விளக்கங்கள் கூட நம்பக்கூடியதாக இல்லை. இந்த மாதிரி விஷயங்களுக்கு அறிவியல் கொடுக்கும் விளக்கங்கள் எப்படி 'நம்பப்படுகிறதோ' அப்படியே மதங்கள் கொடுக்கும் விளக்கங்களும் நம்பப்படுகின்றன. எது உண்மை? கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
என்னை பொறுத்தவரை கடவுள் இயற்கையில் உள்ள ஒவ்வொரு பொருளையும் படைத்து அவற்றுக்கு சில சக்திகளையும் கொடுத்து அதனத்தின் இஷ்டப்படி விட்டுவிட்டார். ஒரு சில நேரங்களில் அவரது தலையீடு இருக்கும். மற்றபடி கடவுள் ஒவ்வொரு செயலையும் கட்டுபடுத்தினால் மனிதன் ஒரு இயந்திர மனிதனை போல தான் இருப்பான்.
//இறைவன் என்பது ஒரு தத்துவம், அதைப்பற்றி இஸ்லாமோ, கிறித்துவமோ பேசுவதில்லை, எனவே எனது விவாதங்களில் குரானைக் கொண்டு வந்து விளக்காதீர்கள் என்று தான் சொல்லி வருகிறேன்.//
இறைவனின் தன்மைகளைப் பற்றி இஸ்லாம் நிறைய பேசுகிறது. அவனது படைப்புகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்படி தூண்டுகிறது.
//விஞ்ஞான விதிகளின் படி ஒரு பொருள் இல்லாமல் எந்த பொருளையும் உருவாகிவிட முடியாது. சூனியம் என்பது பொருளற்ற தன்மை. சூனியத்திலிருந்து பொருள்களை எவ்வாறு படைத்திருக்க முடியும்,//
மனிதர்களுக்கான இந்த நியதிகளை படைத்தவனுக்கும் பொருத்திப் பார்ப்பது சரியல்ல. எதுவுமே இல்லாத சூனியத்திலிருந்து பொருள்களை படைப்பவன்தான் படைப்பாளன் (creator). ஏற்கனவே படைக்கப்பட்டு மறைந்திருந்த ஒரு பொருளை வெளிக் கொணர்பவர் கண்டுபிடிப்பாளர் (inventor).
//நான் பேசுவது மதம் பற்றியல்ல, மதத்தில் சொல்லப்பட்டு இருக்கிற செய்திகளை விவாதத்ததிற்கு எடுத்துக் கொண்டு இறை தன்மை, இறைவன் பற்றிய எனக்குள் எழும் கேள்விகளையும் சிந்தனைகளையும் எழுதுகிறேன். //
'மதங்கள் மனிதனை பக்குவப் படுத்துமா?' 'இறைவன் படைக்கிறானா?' போன்ற உங்கள் கேள்விகள் மிகச் சிறந்தவை. மதத்தில் சொல்லப் பட்டிருக்கும் செய்திகளை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கும் நீங்கள் 'குர்ஆனைக் கொண்டு விளக்காதீர்கள்' என்று தடை போடுவது ஏன் என்று புரியவில்லை. உங்கள் கேள்விகளுக்கு அதில் விளக்கங்கள் இருக்கலாமல்லவா? உங்கள் கேள்விகளைத் தொடருங்கள். வரும் பதில்களை சிந்தித்துப் பாருங்கள். போதிய விளக்கம் கிடைக்கவில்லை என்பதற்காக 'அவையெல்லாம் அபத்தம்' என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
//மிகக்குறைந்த அல்லது மிக அதிக டெசிபல் கொண்ட ஓசைகளை நம் காதுகளால் உணர முடியாது. அதற்காக அவையெல்லாம் இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியுமா?
நீங்கள் காட்டியிருக்கும் 'டெசிபல்' உதாரணம் நானும் நாத்திக நண்பர்களிடம் கேட்டு இருக்கிறேன்.//
இது ஒரு ஆறிப்போன கஞ்சி..
நீங்கள் குறிப்பிட்ட மீயொலிகளை வவ்வால்களால் உணரவும் முடியும். உருவாக்கவும் முடியும். மனிதனால் அவன் உருவாக்கிய கருவிகளால் உணரவும் உருவாக்கவும் முடியும். மீயொலிகளை உணர முடிவதற்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்.
ஒலிக்கு ஒலி எனப் பெயரிட்டவன் மனிதன். அதற்கு அலகுகளை நிர்ணயித்தவன் மனிதன்.
அப்படி ஒருவேளை மீயொலிகள் உண்மையிலேயே மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டவை என வைத்துக் கொண்டால் கூட நாம் மீயொலிகளை வேளை தவறாமல் நினைத்துக் கொண்டோ, தொழுது கொண்டோ, வணங்கிக் கொண்டோ இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அனைத்தும் இருந்துவிட்டுப் போகிறது. காலப் போக்கில் எப்படி மீயொலிகளை மனிதன் கட்டுப் படுத்தினானோ, தனது ஆற்றலுக்குக் கீழே கொண்டு வந்தானோ அது போல மிச்சமுள்ள அப்பாற் பட்டவைகளையும் கொண்டு வந்து விட்டுப் போகிறான்!
அல்லது அதை விடுத்து அகச் சிவப்பு கதிர்களை மனிதனால் காண முடியாது, புற ஊதாக் கதிர்களின் அலை நீளம் மனிதனால் உண்ர முடியாது. ஆகவே, அகச் சிவப்பு மதம் ஒன்றை உருவாக்கி அகச் சிவப்பு இறைவனையோ, புற ஊதா இறைவனையோ,மீயொலி இறைவனையோ அல்லது இவை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே இறைவனையோ வணங்கியே தீருவோம் என்றால் அதையே தொடரலாம், இதை ஏற்காதவர்களை எல்லாம் நாத்திகர்கள் என்று சொல்லி விடலாம்.
பின்னூட்ட விளம்பரம்:
http://kaiyedu.blogspot.com/2008/08/iii.html
//எதுவுமே இல்லாத சூனியத்திலிருந்து பொருள்களை படைப்பவன்தான் படைப்பாளன் (creator). ஏற்கனவே படைக்கப்பட்டு மறைந்திருந்த ஒரு பொருளை வெளிக் கொணர்பவர் கண்டுபிடிப்பாளர் (inventor). // சரியாக சொன்னீர்கள். மனிதனால் ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளை படைக்க முடியும். ஆனால் அந்த மூல பொருளை படைத்தது யார்? அவரை தான் ஆத்திகர்கள் இறைவன் என்கின்றனர்.
//நீங்கள் குறிப்பிட்ட மீயொலிகளை வவ்வால்களால் உணரவும் முடியும். உருவாக்கவும் முடியும். மனிதனால் அவன் உருவாக்கிய கருவிகளால் உணரவும் உருவாக்கவும் முடியும். மீயொலிகளை உணர முடிவதற்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும். //
மீயொலியை ஒரு உதாரணமாகத்தான் பயன்படுத்தியிருக்கிறேன். வவ்வால்களும் சில கருவிகளும் உணர முடிந்த மீயொலிகளை என்னால் தன்னிச்சையாக உணர முடியவில்லை என்பதற்காக 'அப்படியொன்று இல்லவே இல்லை' என்று நான் சொல்ல முடியாது அல்லவா? அதுபோலவே, இறைவனின் தன்மைகளை என்னால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக 'இறைவன் படைக்கிறான் என்பது அபத்தம்' என்றும் நான் சொல்ல முடியாது.
// அறிவகம் said...
கற்பனை குறித்த விளக்கங்கள் அருமை.
//
அறிவகம் மேடம்,
பாராட்டுக்கு நன்றி
//இறைவன் எனபவரை தனிப்பட்ட ஒரு நபராக அல்லது ஒரு அமைப்பாக பார்ப்பதால் தான் படைப்பு கொள்கை ஜீரணிக்கமுடியாதததாகுகிறது. கடவுள் படைப்பு என்பதை விட படைப்பு கடவுள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள். படைப்புக்கான ரகசியம் புரியும்.////
இறைவன் வேறு இயற்கை வேறு என்றே பார்பவன் நான். இயற்கையும் நிகழ்வுகளும் விதிகளுக்குட்பட்டது, மாற்றத்திற்கு உட்பட்டது, நான் ஓரளவு சரியாக ஜீரணிப்பதாகதான் நினைக்கிறேன். இயற்கையை கடவுள் ஆட்டிப்படைக்கிறான் என்பதைத் தான் அபத்தம் என்கிறேன். செயல் அதன் தொடரான பின்னப்பட்ட நிகழ்வுகள் இயற்கையில் நடப்பது இது தான், இந்த இயற்கை இயக்கத்தில் கடவுளைப் பொருத்திப் பார்க்க எனது அறிவு நிலை இடம் கொடுக்கவில்லை
//இந்த பிரபஞ்சம் தனாக தோன்றி, தான்தோன்றித்தனமாக இயங்கவில்லை. இதற்கு ஒரே ஆதாரம் இரட்டை தத்துவம் அல்லது ஆண்&பெண் கவர்ச்சி.
//
தானாக தோன்றியது என்று நானும் கருதவில்லை, தோன்றவே இல்லை, எப்போது இருப்பது, எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும், மனித இனத்தின் வாழ்நாள் அதன் மாற்றத்தை அளவிட முடியாததால் பிரபஞ்சம் தோன்றி இருக்கும் என்று நம்புகிறோம்.
ஆண்பெண் இனக்கவர்ச்சி என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்றே தெரியவில்லை. ஆண் பெண் மட்டுமே இனக்கவர்சி இல்லை, ஒரே பாலின இனக்கவர்சியும் கூட உலகில் இருக்கிறது, எனவே உங்கள் உதாரணம் முற்றிலும் தவறானதாகவே தெரிகிறது
//கடவுள் என்பவரை தனிமனிதானாக அல்லது தனிமுதலாக பார்க்க தான் மனத மனம் ஏங்குகிறது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடு தான் கடவுள்கள். அதுவும் தவறானது அல்ல. கடவுள் இந்த பிரபஞ்சத்தை திட்டமிட்டு படைத்தார், படைக்கிறார் என்பது மிகசரியான வாதமே தவிர மூட நம்பிக்கை அல்ல. இதை புரிந்து கொள்ள முதலில் பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த பிரபஞ்சம் என்பது நமது எதார்த்த பார்வை மற்றும் அறிவியல் பார்வையில் காணகிடப்பது போல பொதுவான ஒன்று அல்ல. பிரபஞ்சம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும், உயிருக்கும் தனிப்பட்டது. அதே போல தான் கடவுளும். இந்த தத்துவத்தில் மேற்சொன்ன இறைவன் படைக்கிறாரா? கேள்வியை மீண்டும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.
நன்றி.//
சூரியனைப் போன்று ஆனால் உருவமில்லாதா தனியான ஒன்றாக இருக்க முடியாது என்று ஏன் நம்புகிறீர்கள் ? காரணம் இறைவனும் இயற்கையும் காலமும் ஒன்றே என்று கற்பனைதான், இயற்கைப் பற்றிய ஓரளவு அறிவு உண்டு, காலம் பற்றியும் ஓரளவு ஊகிக்க முடியும், இறைவன் ?
இறைவன் = funtion(காலம், இயற்கை) என்று எளிதாக நினைக்கிறார்கள், ஏனென்றால் இவை மூன்றுமே முற்றிலும் அறிவதற்கு அரியது. ஊகங்களாக இருப்பவற்றில் ஓரளவு ஊகிக்க முடிந்ததை (இயற்கை மற்றும் காலம்) வைத்து ஊகம் செய்ய முடியாத ஒன்றிற்கு வடிவம் கொடுப்பதே, இறைவன் காலமும் அதன் இயக்கமாக இருக்குமோ என்கிற கற்பனை. இறைவன் படைக்கிறார் என்பது என்னைப் பொருத்து கற்பனைதான். நிறைய பேசலாம். அடுத்து ஏதாவது பதிவில் தொடர்வோம்.
உண்மையான ஆத்திகருக்கும் உண்மையான நாத்திகருக்கும் எந்த சண்டையோ, சச்சரவோ வரப்போவதில்லை. அவர்கள் இருவரும் உண்மையின் பக்கங்களை புரிந்தவர்கள்.
நாம் இங்கு நடத்திக்கொண்டிருக்கும் விவாதம் காலகாலமாய், பல்லாயிரக்கணக்கானோரால் செய்யப்பட்டதுதான். விவாதத்தில் சிக்கி மாண்டுபோனவர்களே அதிகம்.
கடவுள் உண்டு அல்லது இல்லை என்று நிருபிக்கவே(objectively) முடியாத, முடிவில்லாத விவாதம் என்று தெரிந்தும் கோவி இதை தொடங்கிய காரணம் என்ன?
கோவிக்கும், விவாதத்தில் பங்கேற்ற அன்பர்களுக்குமான எனது கேள்வி இது.
//இறைநம்பிக்கை மனரீதியான ஒன்று அது மனரீதியான பலன்களை மட்டுமே தரும். மற்றபடி இறைவன் எல்லாவற்றையும் படைத்தான், அவனே எல்லாவற்றையும் அசைக்கிறான் என்பதெல்லாம் முற்றிலும் கற்பனையானது தான். இறைவன் படைப்பதும் இல்லை நாம் படையலைப் போட்டால் சாப்பிடுவதும் இல்லை.
//
Super
சுவனப் பிரியன்,
மிகுத்தவன் சொல்லுக்குப் பொருள் தந்தமைக்கு நன்றி.
குர்ஆன்: 2:164 - இதில் பத்துப் பனிரெண்டு வயது புவியியல் மாணவனுக்குத் தெரியாத உண்மையேதும் உள்ளதா? அதோடு நீங்கள் சொன்னதையே கடுகுபோல் சிறிதாகக் கூறியிருக்கிறார்களே - அவனன்றி அணுவும் அசையாது. அதானே நீங்கள் சொல்வது?
//KARMA said...
உண்மையான ஆத்திகருக்கும் உண்மையான நாத்திகருக்கும் எந்த சண்டையோ, சச்சரவோ வரப்போவதில்லை. அவர்கள் இருவரும் உண்மையின் பக்கங்களை புரிந்தவர்கள்.
நாம் இங்கு நடத்திக்கொண்டிருக்கும் விவாதம் காலகாலமாய், பல்லாயிரக்கணக்கானோரால் செய்யப்பட்டதுதான். விவாதத்தில் சிக்கி மாண்டுபோனவர்களே அதிகம்.
கடவுள் உண்டு அல்லது இல்லை என்று நிருபிக்கவே(objectively) முடியாத, முடிவில்லாத விவாதம் என்று தெரிந்தும் கோவி இதை தொடங்கிய காரணம் என்ன?
கோவிக்கும், விவாதத்தில் பங்கேற்ற அன்பர்களுக்குமான எனது கேள்வி இது.
10:14 PM, October 03, 2008//
கர்மா,
நல்ல கேள்வி, உங்களுக்கு மரணம் பற்றிய அறிய வரும் பருவத்தில் எல்லோரும் ஒருநாள் இறக்கத்தான் போகிறார்கள் இன்றோ இறந்து போவோம், வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்று நினைத்தது உண்டா ? :)
பிறப்பும் வாழ்கையும், அதன் பின் மரணமும் ஒவ்வொருவருக்கும் நடப்பது தான், முன்பு இருந்தவர்கள் தேடி அலுத்துவிட்டார்கள் என்பது போலவே அவர்கள் சாப்பிட்டும், மடிந்தும் விட்டார்கள் என்று புரிந்து கொள்கிறோமா ?
//உண்மையான ஆத்திகருக்கும் உண்மையான நாத்திகருக்கும் எந்த சண்டையோ, சச்சரவோ வரப்போவதில்லை. அவர்கள் இருவரும் உண்மையின் பக்கங்களை புரிந்தவர்கள். //
ஆத்திகம் நாத்திகம் இரண்டும் கடவுளை சித்தாந்தத்தைச் சுற்றித்தான் பின்னப்பட்டு இருக்கிறது, ஒன்று நிறைந்திருப்பதாகச் சொல்லும் மற்றொன்று வெற்றிடம் என்று சொல்லும் :)
//Robin said...
//எதுவுமே இல்லாத சூனியத்திலிருந்து பொருள்களை படைப்பவன்தான் படைப்பாளன் (creator). ஏற்கனவே படைக்கப்பட்டு மறைந்திருந்த ஒரு பொருளை வெளிக் கொணர்பவர் கண்டுபிடிப்பாளர் (inventor). // சரியாக சொன்னீர்கள். மனிதனால் ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளை படைக்க முடியும். ஆனால் அந்த மூல பொருளை படைத்தது யார்? அவரை தான் ஆத்திகர்கள் இறைவன் என்கின்றனர்.
4:11 PM, October 03, 2008
//
ஆக மூலப் பொருள் இருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறீர்கள். அந்த மூலப் பொருள் தான் தோன்றியாக சூனியத்திலிருந்து வந்திருக்குமா ? மழைக்கு மூலப் பொருள் - நீராவி, நீராவிக்கு மூலப் பொருள் மழை. நீங்கள் நீராவி மட்டுமே மூலப் பொருளாகவும் அதைக் கடவுள் படைத்தான் என்றும் நம்புகிறீர்கள். நான் அவ்வாறு கருதவில்லை
//கையேடு said...
பின்னூட்ட விளம்பரம்:
http://kaiyedu.blogspot.com/2008/08/iii.html
//
நிறைய எழுதி இருக்கிறீர்கள் பொருமையாக படிக்கிறேன்
//Jafar Safamarva said...
நீங்கள் பதிவுக்கு வைத்திருக்கும் தலைப்புக்கும் மேலே சொல்வதற்கும் சம்பந்தமே இல்லையே. நாம் இப்போது விவாதிப்பது 'இறைவன் படைக்கிறானா' என்பது பற்றிதான். அது சம்பந்தமான வேத ஆதாரங்களை கொடுக்கும் போது சிந்திக்க மறுத்து குர்ஆனிலிருந்து விளக்காதீர்கள் என்றால் நான் என்ன செய்வது. வேண்டுமென்றால் வேதங்களை நம்பிக்கைக் கொண்டவர்கள் இதில் கலந்து கொள்ளாதீர்கள் என்று முன்னறிவிப்பு செய்து விடுங்கள்.
//
Jafar Safamarva,
நான் ஆப்ரகாமிய மதங்களை வாழ்வியல் நெறியாகத்தான் பார்க்கிறேன். WELL DEFINED Religion என்றே கிறித்துவத்தையும், இஸ்லாமையும் சொல்ல முடியும், ஏனென்றால் பிறப்பு முதல் இறப்பு வரை செய்யக் கூடியது எது செய்யக் கூடாதது எது என்றெல்லாம் நன்னறிவிளக்கமாகச் சொல்லி இருக்கிறார்கள். அதைப் பின்பற்றுபவர்களுக்கு அது நல்ல வழியாகவே கூட இருக்கும்.
நான் இங்கு எடுத்து கொண்டது இறைத்தன்மை, படைப்புக்கான காரணம் பற்றியவைகள் இந்திய சமயத்தில் வாழ்வியல் நெறியோடு முடித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் அறிவுறுத்தல் எதுவும் கிடையாது. இறைவன் யார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னால் இந்திய சமயத்தில் எவரும் ஏற்கமாட்டார்கள், அறிந்து கொள்ளத்தான் முற்படுவார்கள். அறிந்து கொள்ள முற்படும் ஒன்றில் புனித புத்தங்களில் சொல்லப்படும் தகவல்கள் போதாது, இறைவன் பற்றிய கேள்வியே அனுமதிக்கபடாத மதங்களில் இறைவன் பற்றி விவாதம் செய்ய ஒன்றுமே இல்லை என்பதால் குரானையோ, பைபிளையோ கொண்டுவந்து விவாதம் செய்ய வேண்டாம் என்றேன். மற்றபடி உங்களை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. தவறாக புரிந்து கொண்டு இருந்தால் மன்னிக்கவும்.
கோவியாரே! இறைவன் படைப்பிற்கு முடிவே கிடையாதா? அப்படிதான் தெரியுது............!
//சலாஹுத்தீன் said...
இறைவனின் தன்மைகளைப் பற்றி இஸ்லாம் நிறைய பேசுகிறது. அவனது படைப்புகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்படி தூண்டுகிறது. //
படைப்பு ஏன் என்ற கேள்வியைத்தான் கேட்டு இருக்கிறேன், அதற்கான காரணம் என்ன என்று தான் கேட்டு இருக்கிறேன், இறைவன் படைத்தான் என்கிற நம்பிக்கைக்கு மேல் படைப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை, என்பதால் நான் படைப்புகளைப் பற்றியே கேட்கவில்லை. அதைப் பற்றி சிந்தித்துப் பார்பதற்கும் ஒன்றும் இல்லை. நம்பிக்கை இருந்தால் அற்புதம் அற்புதம் என்று சொல்லிக் கொள்ள முடியும் அவ்வளவுதான். இறைவன் படைத்தான் என்று சொல்வதைத் தான் ஏன் படைத்தான் கேள்வியாக்கி வைத்திருக்கிறேன்.
//மனிதர்களுக்கான இந்த நியதிகளை படைத்தவனுக்கும் பொருத்திப் பார்ப்பது சரியல்ல. எதுவுமே இல்லாத சூனியத்திலிருந்து பொருள்களை படைப்பவன்தான் படைப்பாளன் (creator). ஏற்கனவே படைக்கப்பட்டு மறைந்திருந்த ஒரு பொருளை வெளிக் கொணர்பவர் கண்டுபிடிப்பாளர் (inventor). //
பெளதீக விதிகளின் படி எதையும் ஆக்கவோ முற்றிலும் அழிக்கவோ முடியாது. விதை மரமாகும், மரம் சாம்பலாகும் முற்றிலும் அழிந்து போகவே போகாது, உருமாறி இருக்கும். கிரியேசன் என்ற ஒன்று இருக்கவே முடியாது. பிரபஞ்சம் முழுவதும் இருப்பது அனைத்தும் பெளதீகப் பொருள்கள் தான். மில்லியன் கேலக்சிகளையும் ஓவ்வொன்றிலூம் மில்லியன் நட்சத்திர சூரியன்களைப் படைத்து ஒரே ஒரு சிறிய பூமியைப் படைத்து அதில் மட்டுமே வாழ்வதற்கான தகுதியைப் படைத்து அதில் மனிதர்களைப் படைத்தான் என்றால் ? பூமியையும் சூரியனையும் தவிர்த்து அனைத்துமே வேஸ்ட் கிரியேசன் என்பதாகக் கூட நினைக்க முடிகிறதே. அதற்கெல்லாம் என்ன ஞாயமான காரணம் இருக்க முடியும் ?
//'மதங்கள் மனிதனை பக்குவப் படுத்துமா?' 'இறைவன் படைக்கிறானா?' போன்ற உங்கள் கேள்விகள் மிகச் சிறந்தவை. மதத்தில் சொல்லப் பட்டிருக்கும் செய்திகளை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கும் நீங்கள் 'குர்ஆனைக் கொண்டு விளக்காதீர்கள்' என்று தடை போடுவது ஏன் என்று புரியவில்லை. உங்கள் கேள்விகளுக்கு அதில் விளக்கங்கள் இருக்கலாமல்லவா? உங்கள் கேள்விகளைத் தொடருங்கள். வரும் பதில்களை சிந்தித்துப் பாருங்கள். போதிய விளக்கம் கிடைக்கவில்லை என்பதற்காக 'அவையெல்லாம் அபத்தம்' என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
//
நான் ஆப்ரகாமிய மதங்களை வாழ்வியல் நெறியாகத்தான் பார்க்கிறேன். WELL DEFINED Religion என்றே கிறித்துவத்தையும், இஸ்லாமையும் சொல்ல முடியும், ஏனென்றால் பிறப்பு முதல் இறப்பு வரை செய்யக் கூடியது எது செய்யக் கூடாதது எது என்றெல்லாம் நன்னறிவிளக்கமாகச் சொல்லி இருக்கிறார்கள். அதைப் பின்பற்றுபவர்களுக்கு அது நல்ல வழியாகவே கூட இருக்கும்.
நான் இங்கு எடுத்து கொண்டது இறைத்தன்மை, படைப்புக்கான காரணம் பற்றியவைகள் இந்திய சமயத்தில் வாழ்வியல் நெறியோடு முடித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் அறிவுறுத்தல் எதுவும் கிடையாது. இறைவன் யார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னால் இந்திய சமயத்தில் எவரும் ஏற்கமாட்டார்கள், அறிந்து கொள்ளத்தான் முற்படுவார்கள். அறிந்து கொள்ள முற்படும் ஒன்றில் புனித புத்தங்களில் சொல்லப்படும் தகவல்கள் போதாது, இறைவன் பற்றிய கேள்வியே அனுமதிக்கபடாத மதங்களில் இறைவன் பற்றி விவாதம் செய்ய ஒன்றுமே இல்லை என்பதால் குரானையோ, பைபிளையோ கொண்டுவந்து விவாதம் செய்ய வேண்டாம் என்றேன். மற்றபடி உங்களை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. தவறாக புரிந்து கொண்டு இருந்தால் மன்னிக்கவும்.
//ஜோதிபாரதி said...
கோவியாரே! இறைவன் படைப்பிற்கு முடிவே கிடையாதா? அப்படிதான் தெரியுது............!
11:13 PM, October 03, 2008
//
ஜோதிபாரதி,
கருத்தடைச் சாதனங்கள் தான் இறைவனின் படைப்புக்கு தடையாக இருக்கிறதே
:)
மனிதன் கண்டுபிடித்து அதிகம் பயன்படுத்தும் ஒன்று கடவுள்,அதிகம் பயன்படுத்த்ப்படும் தேவையில்லாத கண்டுபிடிப்போ இது என எண்ணத்தோன்றுகிறது.
//தேவையில்லாத கண்டுபிடிப்போ இது என எண்ணத்தோன்றுகிறது.//
தேவையில்லாதது என்று சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்தப் போய், அது இப்போ நம்மை தூக்கிச் 'சாப்பிட்டு விட்டது'!!
திரு தருமி!
//குர்ஆன்: 2:164 - இதில் பத்துப் பனிரெண்டு வயது புவியியல் மாணவனுக்குத் தெரியாத உண்மையேதும் உள்ளதா?//
இந்த நூற்றாண்டில் வாழும் மாணவனுக்கு வேண்டுமானால் இந்த உண்மைகள் பாலர் பாடமாகத் தெரியலாம். குர்ஆன் இறங்கிய 14 ஆம் நூற்றாண்டை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குர்ஆன் பிரபஞ்சம் சம்பந்தமாகவும் மனித தோற்றம் சம்பந்தமாகவும் பல நூறு வசனங்களைப் பட்டியலிடுகிறது. இது ஒன்று கூட இன்றைய அறிவியலுக்கு முரணாகவில்லை என்பதிலிருந்து இந்த குர்ஆன் மனிதனின் வார்த்தை அல்ல என்ற முடிவுக்குத்தான் என்னால் வர முடிகிறது.
இந்த குர்ஆனுக்கு சில காலம் முன்பு வந்த நம் வள்ளுவர் பிரபஞ்சத்தைப் பற்றி சொல்லும் போது 'திங்களை பாம்பு கொண்டற்று' என்று கூறி அறிவியலுக்கு முரண்படுகிறார். இது போன்று ஒரு வசனத்தை குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டுங்கள். குர்ஆனை நான் மேற் கோள் காட்டுவதை விட்டு விடுகிறேன்.
'இவர்கள் இந்த குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
குர்ஆன் 4:82
கோவிக்கண்ணன்!
//பிறவியிலேயே கண் இல்லாமல், கால் இல்லாமல், ஏன் சிலசமயம் இரு தலைகளை மட்டும், முதுகு மட்டும், இடுப்பு மட்டும் ஒன்று சேர்ந்து ஒட்டிய இரட்டையர்களாக பிறப்பதெல்லாம் ஏன் ? இவையும் ஒழுங்கான அமைப்பு என்று வாதிடும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா ?//
குறைகளுடன் பிறக்கும் குழந்தைகள் தாய்மார்கள் பிரசவ காலத்திலும், உடலுறவின் போதும் கண்ட மருந்துகளையும் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளே! அதே போல் சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் அனைத்தும் மனிதனாகவே தேடிக் கொண்டவை. இந்தோனேஷியாவில் சுனாமி வர காரணம் அதிகமாக மரங்களை வெட்டியதும், அளவுக்கதிகமாக மணலை வெட்டியதும் என்றும் படித்துள்ளேன். எனவே இது போன்று மனிதன் செய்யும் தவறுக்கு இறைவனை எப்படி பொறுப்பாக்க முடியும்?
'இவ்வுலக வாழ்க்கையில் அவர்கள் செலவிடுவதற்கு உதாரணம் வெப்பக் காற்றாகும். தமக்குத் தாமே தீங்கு இழைத்த கூட்டத்தின் பயிர்களில் அக்காற்று பட்டு அவற்றை அழித்து விடுகிறது. இறைவன் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தனர்.'
குர்ஆன்; 3: 117
//குறைகளுடன் பிறக்கும் குழந்தைகள் தாய்மார்கள் பிரசவ காலத்திலும், உடலுறவின் போதும் கண்ட மருந்துகளையும் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளே! அதே போல் சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் அனைத்தும் மனிதனாகவே தேடிக் கொண்டவை. இந்தோனேஷியாவில் சுனாமி வர காரணம் அதிகமாக மரங்களை வெட்டியதும், அளவுக்கதிகமாக மணலை வெட்டியதும் என்றும் படித்துள்ளேன். எனவே இது போன்று மனிதன் செய்யும் தவறுக்கு இறைவனை எப்படி பொறுப்பாக்க முடியும்?
//
சுவனப்பிரியன்,
நல்லதுக்கெல்லாம் கடவுள் மற்றதெல்லாம் மனிதனாக தேடிக் கொண்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கே, மீதமாகும் இகழ் மனிதனுக்கே !
நல்ல கருத்து எப்போதும் கடைபிடியுங்கள்
:)
உங்கள் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் பெற்றோர்கள் தவறான மருந்தை குடித்ததற்காக குழந்தைக்கு இறைவன் கொடுக்கும் தண்டனை கொடுரம். இதுக்கு மேல் இதில் விவாதம் செய்ய ஒன்றுமே இல்லை, மேலெ சலாவுதினுக்குச் சொல்லி இருக்கும் பதிலையும் படிங்க. மெய்பொருள் காண விழைய முனைவதில் வேதப்புத்தகம் எல்லாவற்றிற்கும் தடையே விதிக்கும் என்பதால் நான் அவைகளை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை.
//படைப்பு ஏன் என்ற கேள்வியைத்தான் கேட்டு இருக்கிறேன், அதற்கான காரணம் என்ன என்று தான் கேட்டு இருக்கிறேன்,//
இதற்குமுன் "படைப்பாளன் ஒருவன் இருக்கிறானா?" என்ற அடிப்படையான கேள்விக்கு நீங்கள் பதில் காண முயலலாம்.
//மில்லியன் கேலக்சிகளையும் ஓவ்வொன்றிலூம் மில்லியன் நட்சத்திர சூரியன்களைப் படைத்து ஒரே ஒரு சிறிய பூமியைப் படைத்து அதில் மட்டுமே வாழ்வதற்கான தகுதியைப் படைத்து அதில் மனிதர்களைப் படைத்தான் என்றால் ? பூமியையும் சூரியனையும் தவிர்த்து அனைத்துமே வேஸ்ட் கிரியேசன் என்பதாகக் கூட நினைக்க முடிகிறதே. அதற்கெல்லாம் என்ன ஞாயமான காரணம் இருக்க முடியும் ?//
வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை (அல்குர்ஆன்: 38:27) என்று படைத்தவன் சொல்கிறான். அப்படியென்றால் அவை படைக்கப் பட்டதற்கு நிச்சயமாக காரணங்கள் இருக்கத்தான் வேண்டும். நமக்குத் தெரியவில்லை என்பதால் காரணங்களே இல்லை என்றாகாது.
//நான் ஆப்ரகாமிய மதங்களை வாழ்வியல் நெறியாகத்தான் பார்க்கிறேன். WELL DEFINED Religion என்றே கிறித்துவத்தையும், இஸ்லாமையும் சொல்ல முடியும், ஏனென்றால் பிறப்பு முதல் இறப்பு வரை செய்யக் கூடியது எது செய்யக் கூடாதது எது என்றெல்லாம் நன்னறிவிளக்கமாகச் சொல்லி இருக்கிறார்கள். அதைப் பின்பற்றுபவர்களுக்கு அது நல்ல வழியாகவே கூட இருக்கும்.//
இஸ்லாம் ஒரு well defined religion ஆக இன்றளவும் இருப்பதற்குக் காரணம், மனிதர்களை படைத்தவனே இந்த மார்க்கத்தையும் define செய்தான் என்பது இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று. மாறாக இதை define செய்வதில் மனிதர்களின் பங்களிப்பும் இருந்ததென்றால், கடந்த 14 நூற்றாண்டுகளில் இம்மார்க்கம் பலவிதமான மாறுதல்களை சந்தித்திருக்கும்.
உங்கள் கேள்விகளை தொடருங்கள். எனக்குத் தெரிந்ததை நான் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.
//இதற்குமுன் "படைப்பாளன் ஒருவன் இருக்கிறானா?" என்ற அடிப்படையான கேள்விக்கு நீங்கள் பதில் காண முயலலாம்.
//
சகோதரர் சலாவுதீன்,
நான் ஏற்கனவே ஒரளவு தெளிவாக எனது கருத்தைச் சொல்லிவிட்டேன் பிரபஞ்சம் முழுவது திடப் பொருள்களாக, திரவமாக வாயுவாக இருப்பது பெளதீகப் பொருள்கள்தான், பெளதீக பொருளை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஒன்று மற்றொன்றாய் சேர்கையினால் மாறும், மீண்டும் என்றாவது பழைய நிலையை அடையும் இவற்றைத்தான் மழை - மேகம் - நீராவி சுழற்சியிலும் பார்க்கிறோம். என்னைப் பொருத்து படைப்பு ஒன்று கிடையாது பின்பு எப்படி படைத்தவனைப் பற்றி பேச முடியும் ? படைப்பிற்கான தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு விதை முளைக்க அதற்கான தேவை என்னவாக இருக்கும் ? ஒன்றுமே இல்லை, சரியான சூழல் இருந்தால் முளைக்கும்.
//வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை (அல்குர்ஆன்: 38:27) என்று படைத்தவன் சொல்கிறான். அப்படியென்றால் அவை படைக்கப் பட்டதற்கு நிச்சயமாக காரணங்கள் இருக்கத்தான் வேண்டும். நமக்குத் தெரியவில்லை என்பதால் காரணங்களே இல்லை என்றாகாது.//
முகமது நபி காலத்தில் குரானில் சொல்லி இருப்பதை அப்படியே நம்பிக் கொள்பவர்கள் இருந்திருப்பார்கள். அந்த காலத்தில் நமக்கு இருப்பது போல் கேள்வி ஞானம் இருப்பதற்கும் வாய்ப்புகள் இருந்திருக்காது. அறிவின் வளர்ச்சி அந்த காலத்துடன் ஒப்பிட முடியாது, எனவே எதாவது காரணம் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.
//இஸ்லாம் ஒரு well defined religion ஆக இன்றளவும் இருப்பதற்குக் காரணம், மனிதர்களை படைத்தவனே இந்த மார்க்கத்தையும் define செய்தான் என்பது இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று. மாறாக இதை define செய்வதில் மனிதர்களின் பங்களிப்பும் இருந்ததென்றால், கடந்த 14 நூற்றாண்டுகளில் இம்மார்க்கம் பலவிதமான மாறுதல்களை சந்தித்திருக்கும்.//
உலகம் தோன்றியது என்று என்றே சரியாக அறியப்படாத நிலையில் 1400 ஆண்டுகளுக்கு முன்பு மட்டும் தான் இறைவன் படைப்பை சரிசெய்ய நினைத்தான், அதற்கு முன்பு அவன் அனுப்பிய தூதர்கள் திறம்பட நடந்து கொள்ளவில்லை, இறைவன் சரியான நபரை தூதராக தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்லுவீர்களா ? சரி குரானில் அரேபிய நாடுகளைத் தவிர பிற நாடுகளைப் பற்றி எதும் செய்தி இருக்கிறதா ? 'நம்பிக்கை' என்று சென்றுவிட்டால் இது போன்ற கேள்விகள் எழுந்தாலும் அப்படியே அடக்கிக் கொள்வீர்களா ? கேள்வியே எழாதா ?
தத்துவ ரீதியான கேள்விகளுக்கு மத நூல்கள் ஒருக்காலமும் விடை சொல்ல முடியாது, அதனால் நான் அவற்றை கணக்கில் கொள்வதில்லை, நான் மட்டுமல்ல 'இறைவன்' என்ற ஒன்றைப் பற்றி அறிய முற்படுபவர்கள், உணர முற்படுபவர்கள் எல்லோருக்கும் இருக்கும் கேள்விதான் இவைகள். நீங்கள் மதம் அதைச் சார்ந்த நம்பிக்கை என்று சொன்றிவிடுவதால் உங்களுக்கு இவை தோன்றாமல் இருக்கும்.
//ஓசைகளை நம் காதுகளால் உணர முடியாது. அதற்காக அவையெல்லாம் இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியுமா//
மனிதனால் உணரமுடியாத ஒன்றை எதற்கு தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடவேண்டும்.இருக்கிறதா இல்லையா என்பதுதான் உங்கள் கேள்வி என்றால், உங்கள் காதுகளால் உணரமுடியாத ஒலிகளின் அளவை ஆதாரத்தோடு நாங்கள் சொன்ன பிறகுதானேஉங்களுக்கு தெரிந்தது, நம் காதுகளால் உணரமுடியாத ஒலி ஒன்று இருக்கிறது என்று.
பகுத்தறிவாளன் அனைத்தையும் நிருபிக்காவது முயல்கிறான் ஆனால் மற்றவர்கள்????
பிராமணர்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறித்தூவ குழந்தைகளின் மூளைகளில் கடவுள் என்கிற விசயம் PRE-RECORDED விடயமாக சிறு வயதிலேயே பதிப்பிக்கப்பட்டு விடுவதினால் மூளையின் சிந்தனை பெரும்பாலும் கடவுள் என்கிற விசயத்தை ஆராய முயலுவதில்லை.
//ஓசைகளை நம் காதுகளால் உணர முடியாது. அதற்காக அவையெல்லாம் இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியுமா//
மனிதனால் உணரமுடியாத ஒன்றை எதற்கு தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடவேண்டும்.இருக்கிறதா இல்லையா என்பதுதான் உங்கள் கேள்வி என்றால், உங்கள் காதுகளால் உணரமுடியாத ஒலிகளின் அளவை ஆதாரத்தோடு நாங்கள் சொன்ன பிறகுதானேஉங்களுக்கு தெரிந்தது, நம் காதுகளால் உணரமுடியாத ஒலி ஒன்று இருக்கிறது என்று.
பகுத்தறிவாளன் அனைத்தையும் நிருபிக்காவது முயல்கிறான் ஆனால் மற்றவர்கள்????
பிராமணர்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறித்தூவ குழந்தைகளின் மூளைகளில் கடவுள் என்கிற விசயம் PRE-RECORDED விடயமாக சிறு வயதிலேயே பதிப்பிக்கப்பட்டு விடுவதினால் மூளையின் சிந்தனை பெரும்பாலும் கடவுள் என்கிற விசயத்தை ஆராய முயலுவதில்லை.
//இந்த நூற்றாண்டில் வாழும் மாணவனுக்கு வேண்டுமானால் இந்த உண்மைகள் பாலர் பாடமாகத் தெரியலாம். குர்ஆன் இறங்கிய 14 ஆம் நூற்றாண்டை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். //
குர்ஆன்: 2:164 - இதில் சொல்லப்பட்டவைகள் மிகவும் கவித்துவத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் அது எந்த நூற்றாண்டு மக்களுக்கும் தெரிந்த சாதாரண நடைமுறைகள்தானே. பெரிய அறிவியல் தொடர்பான பெரிய உண்மைகள் ஏதுமில்லையே.14-ம் நூற்றாண்டு மட்டுமல்ல அதற்கு முந்திய காலத்திலும் இது ஒரு எளிய நடைமுறைதானே ஒழிய அறிய அரிதான பேருணை அல்லவே.
அதோடு இதை இந்த மண்ணிலும் "அவனன்றி அணுவும் அசையாது" என்றுதான் அழகாக சுருக்கமாகச் சொல்லியுள்ளனரே.......
//அறிய அரிதான பேருணை அல்லவே//
அறிய அரிதான பேருண்மை அல்லவே - என்று வாசித்துக் கொள்ளவும்.
//சூனியத்திலிருந்து பொருள்களை எவ்வாறு படைத்திருக்க முடியும், இதற்கான விடையை எந்த மதமும் சொல்லவில்லை.//
சூனியம் என்பதை vacuum என்று எடுத்துக்கொள்வதாக இருந்தால், தற்கால இயற்பியல் சூனியத்திலிருந்தும் பொருள் உருவாகும் என்கிறது. இதையே ஸ்டீவன் ஹாக்கிங், அவரது கருந்துளைக் கதிர்வீச்சுக்கு ஆதாரமாக எடுத்திருக்கிறார். இதன்படி, கருந்துளையின் அருகில் இருக்கும் சூனியத்தில் இருந்து ஒரு பொருளும் எதிப்பொருளும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், எதிர்பொருள் கருந்துளையால் ஈர்க்கப்படும் போது, பொருள் கதிர்வீச்சாக வெளிப்படுகிறது என்றும் கூறுகிறார். இத்தத்துவத்திற்காகவே அவருக்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.
//Thiruthondan 8:27 AM, October 06, 2008
சூனியம் என்பதை vacuum என்று எடுத்துக்கொள்வதாக இருந்தால், தற்கால இயற்பியல் சூனியத்திலிருந்தும் பொருள் உருவாகும் என்கிறது. இதையே ஸ்டீவன் ஹாக்கிங், அவரது கருந்துளைக் கதிர்வீச்சுக்கு ஆதாரமாக எடுத்திருக்கிறார். இதன்படி, கருந்துளையின் அருகில் இருக்கும் சூனியத்தில் இருந்து ஒரு பொருளும் எதிப்பொருளும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், எதிர்பொருள் கருந்துளையால் ஈர்க்கப்படும் போது, பொருள் கதிர்வீச்சாக வெளிப்படுகிறது என்றும் கூறுகிறார். இத்தத்துவத்திற்காகவே அவருக்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.//
சூனியம் என்பது ஏதுமற்ற தன்மை, நீங்கள் சொல்லும் ப்ளாக் ஹோலும் அதற்கு எதிர்பொருளும் இல்லாத தன்மை. எதிர்பொருள் இல்லாமல் ப்ளாக் ஹோலாளும் எதையும் உருவாக்க முடியாது என்றே உங்கள் வாக்கியமும் பொருள் படுகிறது.
//சூனியம் என்பது ஏதுமற்ற தன்மை, நீங்கள் சொல்லும் ப்ளாக் ஹோலும் அதற்கு எதிர்பொருளும் இல்லாத தன்மை. //
ஏதுமில்லா வெற்றிடத்தில் இருந்தே அவ்வப்போது பொருளும் எதிர்ப்பொருளும் தோன்றிமறைகின்றன; சில சமயங்களில் ஆற்றலாகவும் வெளிப்பட்டு மறைகின்றன என்று Quantum Theory சொல்கிறது. இதனையே சூனிய ஆற்றல் (vacuum energy) என்கிறார்கள். ஹாக்கிங் இக்கருத்தை அவரது தத்துவத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். மற்றபடி கருந்துளையும் எதிர்ப்பொருளும் இருந்தால்தான் பொருள் உருவாகும் என்று ஹாக்கிங் கதிர்வீச்சுக்கு அர்த்தமில்லை.
//Thiruthondan said...
ஏதுமில்லா வெற்றிடத்தில் இருந்தே அவ்வப்போது பொருளும் எதிர்ப்பொருளும் தோன்றிமறைகின்றன; சில சமயங்களில் ஆற்றலாகவும் வெளிப்பட்டு மறைகின்றன என்று Quantum Theory சொல்கிறது. இதனையே சூனிய ஆற்றல் (vacuum energy) என்கிறார்கள். ஹாக்கிங் இக்கருத்தை அவரது தத்துவத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். மற்றபடி கருந்துளையும் எதிர்ப்பொருளும் இருந்தால்தான் பொருள் உருவாகும் என்று ஹாக்கிங் கதிர்வீச்சுக்கு அர்த்தமில்லை.
9:52 AM, October 06, 2008
//
பிரபஞ்சம் பற்றிய கருத்து காலத்திற்கு அப்பாற்பட்டது, உறுதியாக எதையும் சொல்லிவிடமுடியாது. ஆனால்
நமது கண்களுக்கு தெரிந்த அல்லது நம் பிறப்புகள் எதுவுமே சூனியத்தில் இருந்து வரவில்லையே, சேர்க்கை மற்றும் ஐம்பூதக் கலப்பு தானே பிறப்புகள் அனைத்துமே.
//என்னைப் பொருத்து படைப்பு ஒன்று கிடையாது பின்பு எப்படி படைத்தவனைப் பற்றி பேச முடியும் ?//
உங்களின் இந்தக் கருத்து ஒரு தீர்மானமான முடிவு என்பதைவிட ஒரு அனுமானம் என்பதாகவே நான் நினைக்கிறேன். அதனால்தான் 'படைப்பு ஏன்? அதற்கான காரணம் என்ன?' என்ற கேள்வி உங்களுக்கு தோன்றியிருக்கிறது. படைப்பாளன் என ஒருவன் இல்லவே இல்லை என்றால், படைப்பிற்கான காரணம் பற்றிய கேள்வியே எழாதே?
//ஒரு விதை முளைக்க அதற்கான தேவை என்னவாக இருக்கும் ? ஒன்றுமே இல்லை, சரியான சூழல் இருந்தால் முளைக்கும்.//
ஒரு விதை முளைக்க சரியான சூழல் மட்டும்தான் காரணமா? ஒரே விதமான சூழலில் ஒரே குழியில் மாங்கொட்டையும் பனங்கொட்டையும் விதைத்தால், பனை மரத்தில் மாங்காய் காய்ப்பதில்லை. பிரபஞ்சம் தோன்றி கோடானுகோடி ஆண்டுகள் ஆன போதிலும் பூமி தன் பாதையைவிட்டு ஒரு நாளேனும் விலகிச் சென்றதாகவோ, சந்திரன் 14 நாட்கள் விடுப்பு எடுத்து வேறொரு கிரகத்திற்கு சென்றதாகவோ நாம் அறிந்திருக்கவில்லை. இவற்றிற்கான விதிகளை நிர்ணயித்தது யார்? இந்தப் படைப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஆராய்ந்தால் படைப்பாளனைப் பற்றி அறியலாம் என்பதைத்தான் குர்ஆன் சொல்கிறது.
//முகமது நபி காலத்தில் குரானில் சொல்லி இருப்பதை அப்படியே நம்பிக் கொள்பவர்கள் இருந்திருப்பார்கள். அந்த காலத்தில் நமக்கு இருப்பது போல் கேள்வி ஞானம் இருப்பதற்கும் வாய்ப்புகள் இருந்திருக்காது. அறிவின் வளர்ச்சி அந்த காலத்துடன் ஒப்பிட முடியாது, எனவே எதாவது காரணம் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.//
"பரிட்சைக்கு படிக்க முக்கியமான கேள்விகளை குறித்துக் கொடுங்கள் சார்" என்று பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை தொந்தரவு செய்திருக்கிறோம். 'அவர் சொன்னா பெரும்பாலும் சரியாத்தான் இருக்கும்' என்று சில ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்போம். காரணம் அவரது அனுபவம் அப்படி. அந்தக் கேள்வித்தாளே அவர் கைவசம் இருக்கிறது என்று நமக்கு நிச்சயமாகத் தெரிந்தால், அவரது ஒவ்வொரு வார்த்தையையும் மறு கேள்வி கேட்காது மிக கவனமாகக் குறித்துக் கொள்வோம். அக்கேள்விகளில் எதையும் விட்டுவிடாமல் படிப்போம். குர்ஆன் விஷயத்தில் முஸ்லிம்களின் நிலையும் இதுதான். அதன் Origin-ஐப் பற்றி சந்தேகமில்லை என்பதால் அது சொல்லும் விஷயங்களில் மறு கேள்வி கேட்கத் தேவை ஏற்படாது. ஆனால், கேள்விகள் கேட்கக் கூடாது என்பதல்ல.
//உலகம் தோன்றியது என்று என்றே சரியாக அறியப்படாத நிலையில் 1400 ஆண்டுகளுக்கு முன்பு மட்டும் தான் இறைவன் படைப்பை சரிசெய்ய நினைத்தான், அதற்கு முன்பு அவன் அனுப்பிய தூதர்கள் திறம்பட நடந்து கொள்ளவில்லை, இறைவன் சரியான நபரை தூதராக தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்லுவீர்களா ? சரி குரானில் அரேபிய நாடுகளைத் தவிர பிற நாடுகளைப் பற்றி எதும் செய்தி இருக்கிறதா ? 'நம்பிக்கை' என்று சென்றுவிட்டால் இது போன்ற கேள்விகள் எழுந்தாலும் அப்படியே அடக்கிக் கொள்வீர்களா ? கேள்வியே எழாதா ? //
உலகத்தில் தோன்றிய முதல் மனிதர் ஆதம் ஒரு இறைத்தூதரும் கூட. அவருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் இலட்சக் கணக்கான இறைத்தூதர்கள் தோன்றியிருப்பதாக இஸ்லாம் சொல்கிறது. இவர்கள் அனைவரும் போதித்த அடிப்படை விஷயம் ஒன்றுதான்.. 'வணங்கத் தகுதியான இறைவன் ஒரே ஒருவன்தான்' என்பதுதான் அது. ஆனால் வாழ்க்கை வழிகாட்டல்கள் அந்தந்த காலக் கட்டத்திற்கேற்ப மாறுதலடைந்து வந்திருக்கின்றன. ஆதம் (அலை) அவர்களின் காலத்தில் உலகில் வசித்தவர்கள் அவரும் அவரது குடும்பத்தினர் மட்டும்தான். அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது. மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க அவ்வப்போது தோன்றிய இறைத்தூதர்கள் மூலமாக வழிகாட்டுதல்களும் மாறுதலடைந்து வந்திருக்கின்றன. அதில் இறுதியாக வந்தவர் முஹம்மது நபி (ஸல்).
//தத்துவ ரீதியான கேள்விகளுக்கு மத நூல்கள் ஒருக்காலமும் விடை சொல்ல முடியாது, அதனால் நான் அவற்றை கணக்கில் கொள்வதில்லை, நான் மட்டுமல்ல 'இறைவன்' என்ற ஒன்றைப் பற்றி அறிய முற்படுபவர்கள், உணர முற்படுபவர்கள் எல்லோருக்கும் இருக்கும் கேள்விதான் இவைகள். நீங்கள் மதம் அதைச் சார்ந்த நம்பிக்கை என்று சொன்றிவிடுவதால் உங்களுக்கு இவை தோன்றாமல் இருக்கும். //
நம்பிக்கை ஏற்பட்ட பிறகு சில உபரியான கேள்விகள் தோன்றுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கேள்விகளைக் கேட்பவர்களுக்கு குர்ஆனில் பதில் இருக்கிறது என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவற்றை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா இல்லையா என்பது வேறு விஷயம்.
சலாஹுத்தீன்,
விடாது அலுப்பில்லாது தொடர்ந்து கருத்துச் சொல்லுவதற்கு முதலில் நன்றி.
//உங்களின் இந்தக் கருத்து ஒரு தீர்மானமான முடிவு என்பதைவிட ஒரு அனுமானம் என்பதாகவே நான் நினைக்கிறேன். அதனால்தான் 'படைப்பு ஏன்? அதற்கான காரணம் என்ன?' என்ற கேள்வி உங்களுக்கு தோன்றியிருக்கிறது. படைப்பாளன் என ஒருவன் இல்லவே இல்லை என்றால், படைப்பிற்கான காரணம் பற்றிய கேள்வியே எழாதே?//
நீங்கள் சொல்வதாக வைத்துக் கொண்டாலும், படைப்பிற்கு முன்பு இறைவன் வேலையற்றவனாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தானா ? எவ்வளவு காலம் அப்படியே இருந்தான் ? ஏன் பூமியைப் படைப்போம், அதில் மனிதர்களையும் விலங்குகளையும் படைப்போம், அவர்களின் விருப்பத்திற்கு விடுவோம், எதாவது தப்பு செய்தால் நரகம் கொடுப்போம், நல்லது செய்தால் சொர்கம் கொடுப்போம் என்றெல்லாம் சிந்தித்து முடிவெடுத்தானா ? என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறதே ? - என்னால் கண்மூடித்தனமாக இவற்றை நம்ப முடியவில்லை. பிரபஞ்சத்திற்கு தோற்றமோ முடிவோ இருக்க முடியாது, தொடர் இயக்கத்தில் எதோ ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம் என்று மட்டுமே நினைக்க முடிகிறது.
பதிவர் கையேட்டிற்கு ஒரு மறுமொழி போட்டு இருந்தேன்.
பிரபஞ்சப் பொருள்களில் ஒரு ஒழுங்கு இருப்பதாக நினைப்பது நம் மனம் தான், எதையும் ஒழுங்கான வடிவமாக இருந்தால் மட்டுமே நம்மால் அதை புரிந்து கொள்ள முடியும், ஒழுங்கற்றதாக இருந்தாலும் அதற்கு ஒழுங்கை கற்பித்துக் கொள்வது தான் நம் மனம். எல்லாம் சரியான பாதையில் சுற்றுகிறது என்றால் புளோட்ட்டோ விலகிப் போனது, எரிகற்கள் பூமியின் சுற்றுப்பாதைக்குள் வந்து பூமியின் அல்லது சந்திரன் மீது விழுவது ஏன் ?
//ஒரு விதை முளைக்க சரியான சூழல் மட்டும்தான் காரணமா? ஒரே விதமான சூழலில் ஒரே குழியில் மாங்கொட்டையும் பனங்கொட்டையும் விதைத்தால், பனை மரத்தில் மாங்காய் காய்ப்பதில்லை. //
தவறாகவே புரிந்து கொண்டு விளக்கி இருக்கிறீர்கள், ஒரு மதத்தின் முழுவிரிவும் விதைக்குள் ஒடுங்கி இருக்கிறது, மரத்தின் பெருக்கம் இலைகள் கனிகள் இவை சுற்றுப் புறச்சூழலைப் பொருத்தது. ஒரு மரத்தின் தன்மை முழுவதும் விதையுனுள் அடக்கம், சரியான சூழல் இல்லாதவரை விதை ஒடுங்கியே இருக்கும், சூழல் அமையும் போது முளைத்து மரமாகும், இது எந்த விதைக்கும் பொருத்தம்.
பனைமரத்தன்மை பனங்கொட்டையிலும், மாமரம் மாவிதையிலும் தான் இருக்கும், மாற்றி இருக்க வாய்பில்லாவிட்டாலும் ஒட்டுமாங்காயை இலுப்பை மற்றும் மாகிளை மூலம் உருவாக்குகிறார்கள். அம்மரம் விளைந்து அதன் மாங்கொட்டை மாமரத்தைத் தான் தருமேயன்றி இலுப்பை வேரைத் தராது. நானும் மாமரத்தில் பனங்காய் காய்க்கும் என்று சொல்லவில்லை. இப்போதெல்லாம் வீரியமற்ற முட்டைகளை இடும் ஒயிட்லகான் கோழிகளெல்லாம் வந்துவிட்டது. படைப்புக் கருத்து என்பதைவிட பெளதீக மாற்றத்தினால் பொருளுக்கு புதிய வடிவம் கொடுக்க முடியும் என்கிற கருத்து வலுத்துவிட்டதை ஒப்புக் கொள்கிறீர்களா ?
//பிரபஞ்சம் தோன்றி கோடானுகோடி ஆண்டுகள் ஆன போதிலும் பூமி தன் பாதையைவிட்டு ஒரு நாளேனும் விலகிச் சென்றதாகவோ, சந்திரன் 14 நாட்கள் விடுப்பு எடுத்து வேறொரு கிரகத்திற்கு சென்றதாகவோ நாம் அறிந்திருக்கவில்லை. இவற்றிற்கான விதிகளை நிர்ணயித்தது யார்? இந்தப் படைப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஆராய்ந்தால் படைப்பாளனைப் பற்றி அறியலாம் என்பதைத்தான் குர்ஆன் சொல்கிறது.//
புளூட்டோ எஸ்கேப் ஆகிவிட்டது நண்பரே, பூமி ஏன் 22.5 கோணம் சாய்தே சுற்றிவருகிறது.
//"பரிட்சைக்கு படிக்க முக்கியமான கேள்விகளை குறித்துக் கொடுங்கள் சார்" என்று பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை தொந்தரவு செய்திருக்கிறோம். 'அவர் சொன்னா பெரும்பாலும் சரியாத்தான் இருக்கும்' என்று சில ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்போம். காரணம் அவரது அனுபவம் அப்படி. அந்தக் கேள்வித்தாளே அவர் கைவசம் இருக்கிறது என்று நமக்கு நிச்சயமாகத் தெரிந்தால், அவரது ஒவ்வொரு வார்த்தையையும் மறு கேள்வி கேட்காது மிக கவனமாகக் குறித்துக் கொள்வோம். அக்கேள்விகளில் எதையும் விட்டுவிடாமல் படிப்போம். குர்ஆன் விஷயத்தில் முஸ்லிம்களின் நிலையும் இதுதான். அதன் Origin-ஐப் பற்றி சந்தேகமில்லை என்பதால் அது சொல்லும் விஷயங்களில் மறு கேள்வி கேட்கத் தேவை ஏற்படாது. ஆனால், கேள்விகள் கேட்கக் கூடாது என்பதல்ல. //
உங்களுக்கு இருப்பது நம்பிக்கை, குழந்தையாக இருந்த போது வயித்தை கிழித்து பிறந்தாகத்தான் நம்பிவருவோம், பருவம் அடைந்தவுடம் அதுபற்றி ஏன் எப்படி என்றெல்லாம் கேள்வி எழும், சேர்ந்தால் - குழந்தை பிறக்கும் அதுபற்றி கேள்வியே கேட்கக் கூடாது அது புனிதம் என்று சொல்வதை என்னாலும் பலராலும் ஏற்கமுடியாது.
//உலகத்தில் தோன்றிய முதல் மனிதர் ஆதம் ஒரு இறைத்தூதரும் கூட. அவருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் இலட்சக் கணக்கான இறைத்தூதர்கள் தோன்றியிருப்பதாக இஸ்லாம் சொல்கிறது. இவர்கள் அனைவரும் போதித்த அடிப்படை விஷயம் ஒன்றுதான்.. 'வணங்கத் தகுதியான இறைவன் ஒரே ஒருவன்தான்' என்பதுதான் அது. ஆனால் வாழ்க்கை வழிகாட்டல்கள் அந்தந்த காலக் கட்டத்திற்கேற்ப மாறுதலடைந்து வந்திருக்கின்றன. ஆதம் (அலை) அவர்களின் காலத்தில் உலகில் வசித்தவர்கள் அவரும் அவரது குடும்பத்தினர் மட்டும்தான். அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது. மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க அவ்வப்போது தோன்றிய இறைத்தூதர்கள் மூலமாக வழிகாட்டுதல்களும் மாறுதலடைந்து வந்திருக்கின்றன. அதில் இறுதியாக வந்தவர் முஹம்மது நபி (ஸல்).//
உலகம் தோன்றியது என்பதற்கு ஆண்டுக்கணக்கில் சுமார் இவ்வளவு ஆண்டுகள் என எதாவது ஆதாரம் இருக்கிறதா ? நமக்குத் தெரிந்து எகிப்தியர்கள், சுமேரியர்கள், சிந்துசமவெளியினர் தான் மூத்த குடிகளாக இருக்கிறார்கள். பல்வேறு கண்டங்களில் கடல் போக்குவரத்தே இல்லாத காலங்களில் இருந்து காட்டுவாசிகள் வசித்து வருகின்றனர், அவர்களெல்லாம் ஆதாமின் மக்களா ?
//நம்பிக்கை ஏற்பட்ட பிறகு சில உபரியான கேள்விகள் தோன்றுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கேள்விகளைக் கேட்பவர்களுக்கு குர்ஆனில் பதில் இருக்கிறது என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவற்றை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா இல்லையா என்பது வேறு விஷயம். //
நேர்மையாகச் சொல்லிவிட்டீர்கள். அதனால் தான் நம்பிக்கை கொண்டவர்களிடம் கேள்வி கேட்க எதுவுமே இல்லை என்று நான் நினைக்கிறேன்
// Dharan said...
மனிதனால் உணரமுடியாத ஒன்றை எதற்கு தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடவேண்டும்.இருக்கிறதா இல்லையா என்பதுதான் உங்கள் கேள்வி என்றால், உங்கள் காதுகளால் உணரமுடியாத ஒலிகளின் அளவை ஆதாரத்தோடு நாங்கள் சொன்ன பிறகுதானேஉங்களுக்கு தெரிந்தது, நம் காதுகளால் உணரமுடியாத ஒலி ஒன்று இருக்கிறது என்று.
பகுத்தறிவாளன் அனைத்தையும் நிருபிக்காவது முயல்கிறான் ஆனால் மற்றவர்கள்????//
நமது புலனுணர்வுகள் சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டவை. ஐந்தறிவு படைத்த ஒரு வவ்வாலினால் உணர்ந்து கொள்ள முடிந்த ஒலியைக்கூட தன்னிச்சையாக உணர்ந்து கொள்ள முடியாத குறைபாடுகளைக் கொண்டவை நம் காதுகள். ஆனால் நாம் நமது ஆறாவது அறிவைப் பயன்படுத்தி இக்குறைபாடுகளை களைகிறோம். கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் விட தீர விசாரித்து பெறும் அறிவு மதிப்பு மிக்கது. குறைபாடுடைய நம் புலன்களையும் உணர்வுகளையும் மட்டுமே நம்பியிராமல் 'உண்மை எது?' என பகுத்து ஆராய்ந்து அறிவதுதானே பகுத்தறிவு?
//பிராமணர்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறித்தூவ குழந்தைகளின் மூளைகளில் கடவுள் என்கிற விசயம் PRE-RECORDED விடயமாக சிறு வயதிலேயே பதிப்பிக்கப்பட்டு விடுவதினால் மூளையின் சிந்தனை பெரும்பாலும் கடவுள் என்கிற விசயத்தை ஆராய முயலுவதில்லை.//
உண்மைதான். பிறக்கும் குழந்தைகள் அனைவரும் இது போன்ற நிறைய pre-recorded விஷயங்களுடன்தான் பிறக்கிறார்கள். தாயிடம் பாலருந்துவது, குப்புறப் புரள்வது, தவழ்வது போன்ற புறச் செயல்களும், 'பொய் சொல்வது, திருடுவது தப்பு' போன்ற உள்ளுணர்வுகளும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே pre-recorded செய்யப் பட்டுத்தான் குழந்தைகள் பிறக்கிறார்கள். அதுபோலத்தான் கடவுள் விஷயமும் என்கிறது இஸ்லாம். ஆனால் 'குர்ஆனில் சொல்லி விட்டதால் அது பற்றி கேள்வி கேட்க கூடாது!' என்று எந்தத் தடையும் இல்லை. குர்ஆனில் பல வசனங்கள் "இது பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா?" என்றுதான் வினவுகிறது.
//சலாஹுத்தீன் said...
நம் புலன்களையும் உணர்வுகளையும் மட்டுமே நம்பியிராமல் 'உண்மை எது?' என பகுத்து ஆராய்ந்து அறிவதுதானே பகுத்தறிவு? //
உண்மை. இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர் சொல்லியிருந்ததற்கான(நம் புலன்களால் உணரமுடியவில்லை என்றால் இல்லை என்று அர்த்தமா என்று கேட்டிருந்தார்) பதிலைத்தான் நான் அவ்வாறாக சொல்லியிருந்தேன்.
//பிறக்கும் குழந்தைகள் அனைவரும் இது போன்ற நிறைய pre-recorded விஷயங்களுடன்தான் பிறக்கிறார்கள். தாயிடம் பாலருந்துவது, குப்புறப் புரள்வது, தவழ்வது போன்ற புறச் செயல்களும், '//
இதை வேண்டுமானல் சற்று ஆய்விற்கு பிறகு ஒப்புக்கொள்ளும் வாய்பிருக்கிறது.
//ய் சொல்வது, திருடுவது தப்பு' போன்ற உள்ளுணர்வுகளும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே pre-recorded செய்யப் பட்டுத்தான் குழந்தைகள் பிறக்கிறார்கள்//
இது சூழ்நிலையைப் பொறுத்த விடயமாக இருக்கத்தான் வாய்ப்பு.
PRE-RECORDED ஆக இருக்க வாய்ப்பில்லை.
//போலத்தான் கடவுள் விஷயமும் என்கிறது இஸ்லாம்//
கடவுள் என்கிற விடயம் பிறக்கும் போதே pre-recorded ஆக வருவது என்பதை ஒரு போதும் ஒப்புக்கொள்ள முடியாது. இஸ்லாமியருக்கு பிறந்த குழந்தையை பிராமனர் வீட்டில் வளர்க்கும் போது பிராமணக் கடவுள் பற்றுள்ளதாகவும், கிறித்துவர் வீட்டில் வளர்ந்தால் கிறித்துவ கடவுள் சிந்தனையுடனும் வளரும், ஏனென்றால் குழந்தைகளின் மூளைகளில் கடவுள் என்கிற விசயம் அவர்கள் மூளை சிந்திக்கும் முன்னரே திணிக்கப்படுகிறது( MIND RAPE). பெற்றோரால் குழந்தையின் கடவுள் சிந்தனையும் கடவுளும் தேர்ந்தேடுக்கப்படுகிறதே ஒழிய குழந்தையின் மூளையால் அல்ல.
பகுத்தறிவாளன் வீட்டில் வளரும் குழந்தை சுய சிந்தனையுடன் வளருகிறது.
//ல் 'குர்ஆனில் சொல்லி விட்டதால் அது பற்றி கேள்வி கேட்க கூடாது!' என்று எந்தத் தடையும் இல்லை. குர்ஆனில் பல வசனங்கள் "இது பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா?" என்றுதான் வினவுகிறது//
நேர்மையான பதில். சிந்தனை என்பது வரையறைக்குள் வரக்கூடாது. மத நூல்கள் அனைத்தும் சிந்தனையை ஒரு வரையறைக்கிள் கட்டுப்படுத்துகிறது.
பெரியார் சொல்லுவார்,
அறிவியலை பற்றித் அலச அறிவியல் நூல்களில் தேடுங்கள் அதை விடுத்து அறிவியலை மத நூல்களில் தேடுவது என்பது மலத்தில் அரிசி பொறுக்குவது போன்றது என்று.
பெரியார் சொல்லிவிட்டால் கேட்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல அவர் அப்படி வற்புறுத்துவது கிடையாது. நம் மூளையை கொண்டு சிந்தித்து செயல்படுவதே பகுத்தறிவு. பெரியார் சொல்வதை அப்படியே ஆமாம் போடுவதல்ல பகுத்தறிவு.
//படைப்பிற்கு முன்பு இறைவன் வேலையற்றவனாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தானா ? எவ்வளவு காலம் அப்படியே இருந்தான் ? ஏன் பூமியைப் படைப்போம், அதில் மனிதர்களையும் விலங்குகளையும் படைப்போம், அவர்களின் விருப்பத்திற்கு விடுவோம், எதாவது தப்பு செய்தால் நரகம் கொடுப்போம், நல்லது செய்தால் சொர்கம் கொடுப்போம் என்றெல்லாம் சிந்தித்து முடிவெடுத்தானா ? என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறதே ? //
உங்களின் இந்தக் கேள்விக்கும் குர்ஆன் துணை கொண்டு பதில் சொல்ல முயல்கிறேன்.
ஆதி மனிதர் ஆதமை படைக்குமுன் இறைவன் வானவர்களை நோக்கி பூமியில் மனித வர்க்கத்தை தனது பிரதிநிதியாக படைக்கப் போவதாக அறிவித்தான். அதற்கு அவர்கள் 'பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா படைக்கப் போகிறாய்?' என்று கேட்டார்கள் (குர்ஆன் 2:30)
ஆதம் இன்னும் படைக்கப்படவேயில்லை. அதற்குள்ளாகவே, மனித வர்க்கம் என்றால் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக்கூடியவர்கள் என்று வானவர்களுக்கு எப்படி தெரிந்திருந்தது? அப்படியானால், ஆதமுக்கு முன்பாகவே ஒரு மனித குலம் தோன்றி வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் என்று பொருள் படுகிறது. இந்த உலகம் முற்றிலும் அழிந்து போன பிறகும் இன்னொரு பூமி படைக்கப்பட்டு இன்னொரு மனித குலம் கூட தோற்றுவிக்கப் படலாம். நீங்கள் சொன்னதுபோலவே 'தொடர் இயக்கத்தில் எதோ ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம்' என்பதும் உண்மையாக இருக்கலாம்.
இதையெல்லாம் இறைவன் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கும் குர்ஆனில் பதில் இருக்கலாம்.
"அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (குர்ஆன் 10:5)
என்னைப் பொறுத்தவரை, 'இறைவன் ஏன் படைக்கிறான்?' என்ற கேள்வியை நான் கேட்டுக் கொண்டதில்லை. அதற்குப்பதிலாக, 'நான் ஏன் படைக்கப் பட்டேன்? எனது வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கும்?' போன்ற கேள்விகள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது. இந்தக் கேள்விகளுக்கான தேடல்கள், அதற்குக் கிடைக்கும் விளக்கங்கள் என் வாழ்வை சீர்படுத்திக் கொள்ள உதவும் என்ற 'சுயநலம்'தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
//புளோட்ட்டோ விலகிப் போனது, எரிகற்கள் பூமியின் சுற்றுப்பாதைக்குள் வந்து பூமியின் அல்லது சந்திரன் மீது விழுவது ஏன் ?//
புளூட்டோ விலகிப்போனதும் எரிகற்கள் பூமியின் சந்திரனின் மீது விழுவதும் அவற்றிற்கான நியதிகளாக கூட இருக்கலாம். நான் சொல்ல வந்தது, கோளங்களின் செயல்பாட்டில் ஒரு system இருக்கிறது என்பதைத்தான்.
//ஒரு மதத்தின் முழுவிரிவும் விதைக்குள் ஒடுங்கி இருக்கிறது, மரத்தின் பெருக்கம் இலைகள் கனிகள் இவை சுற்றுப் புறச்சூழலைப் பொருத்தது. ஒரு மரத்தின் தன்மை முழுவதும் விதையுனுள் அடக்கம், சரியான சூழல் இல்லாதவரை விதை ஒடுங்கியே இருக்கும், சூழல் அமையும் போது முளைத்து மரமாகும், இது எந்த விதைக்கும் பொருத்தம்.//
இங்கும் நான் சொல்ல வந்தது system பற்றித்தான். ஒரு மரத்தின் தன்மை முழுவதும் ஒரு சிறிய விதைக்குள் அடைக்கப் பட்டிருப்பது தற்செயலாகவோ தானாகவோ நிகழும் ஒன்று என்பதைவிட, இது மாபெரும் சக்தி கொண்ட படைப்பாளனின் செயல் என்று நம்புவதே எனது அறிவுக்கு பொருத்தமானதாக தோன்றுகிறது.
//உங்களுக்கு இருப்பது நம்பிக்கை, குழந்தையாக இருந்த போது வயித்தை கிழித்து பிறந்தாகத்தான் நம்பிவருவோம், பருவம் அடைந்தவுடம் அதுபற்றி ஏன் எப்படி என்றெல்லாம் கேள்வி எழும், சேர்ந்தால் - குழந்தை பிறக்கும் அதுபற்றி கேள்வியே கேட்கக் கூடாது அது புனிதம் என்று சொல்வதை என்னாலும் பலராலும் ஏற்கமுடியாது.//
கேள்விகள் தாராளமாகக் கேட்கலாம். கர்ப்பத்தில் என்ன நடக்கிறது என்று கேள்விகள் எழுப்பப்பட வாய்ப்பே இல்லாத, எக்ஸ்ரே, சிஸேரியன் போன்ற தொழில்நுட்பங்கள் தோன்றியிருக்காத காலத்திலேயே குர்ஆன் கரு வளர்ச்சி பற்றி விளக்குகிறது. (23:14). இவையெல்லாம் கேள்வி கேட்கப்படக்கூடாத புனிதங்கள் அல்ல.
//உலகம் தோன்றியது என்பதற்கு ஆண்டுக்கணக்கில் சுமார் இவ்வளவு ஆண்டுகள் என எதாவது ஆதாரம் இருக்கிறதா ? நமக்குத் தெரிந்து எகிப்தியர்கள், சுமேரியர்கள், சிந்துசமவெளியினர் தான் மூத்த குடிகளாக இருக்கிறார்கள். பல்வேறு கண்டங்களில் கடல் போக்குவரத்தே இல்லாத காலங்களில் இருந்து காட்டுவாசிகள் வசித்து வருகின்றனர், அவர்களெல்லாம் ஆதாமின் மக்களா ? //
மனிதர்கள் அனைவருமே ஆதமின் மக்கள்தான் என்கிறது இஸ்லாம். மனிதர்கள் ஆதியில் நூற்றாண்டுக் கணக்கில் வாழ்நாள் உடையவர்களாக இருந்தார்கள். கடல் போக்குவரத்து இல்லாத காலங்களில் இணைந்திருந்த நிலப்பரப்பின் பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் கால்நடையாகவே பயணித்து குடியிருப்புகளை அமைத்திருக்கலாம்.
இறைத்தூதர் நூஹ் (அலை) (நோவா) கப்பல் கட்டியதும், பிரளயம் ஏற்பட்டு அக்கப்பலில் இருந்தவர்களைத் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் அழிந்து போனதையும் பைபிளும் குர்ஆனும் விளக்குகின்றன. அதன் பிறகு பல்கிப் பெருகிய சந்ததியினர் கப்பல் போக்குவரத்தையும் பயன்படுத்தியிருப்பார்கள்.
//நேர்மையாகச் சொல்லிவிட்டீர்கள். அதனால் தான் நம்பிக்கை கொண்டவர்களிடம் கேள்வி கேட்க எதுவுமே இல்லை என்று நான் நினைக்கிறேன்//
ஒரு தரப்பில் 'படைப்பாளன் இருக்கிறான்' என்ற நம்பிக்கை. இன்னொரு தரப்பில் 'படைப்பாளன் என யாரும் இல்லை' என்ற நம்பிக்கை. இரண்டுமே நம்பிக்கைகள்தானே? மறு தரப்பினரின் நம்பிக்கைகளைப் பற்றி கேள்விகள் கேட்டு அறிந்து கொள்வது தவறு ஒன்றுமில்லையே!
சலாஹுத்தீன்,
//மீண்டும் நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி !
உங்களின் இந்தக் கேள்விக்கும் குர்ஆன் துணை கொண்டு பதில் சொல்ல முயல்கிறேன்.
ஆதி மனிதர் ஆதமை படைக்குமுன் இறைவன் வானவர்களை நோக்கி பூமியில் மனித வர்க்கத்தை தனது பிரதிநிதியாக படைக்கப் போவதாக அறிவித்தான். அதற்கு அவர்கள் 'பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா படைக்கப் போகிறாய்?' என்று கேட்டார்கள் (குர்ஆன் 2:30)
ஆதம் இன்னும் படைக்கப்படவேயில்லை. அதற்குள்ளாகவே, மனித வர்க்கம் என்றால் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக்கூடியவர்கள் என்று வானவர்களுக்கு எப்படி தெரிந்திருந்தது? அப்படியானால், ஆதமுக்கு முன்பாகவே ஒரு மனித குலம் தோன்றி வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் என்று பொருள் படுகிறது. இந்த உலகம் முற்றிலும் அழிந்து போன பிறகும் இன்னொரு பூமி படைக்கப்பட்டு இன்னொரு மனித குலம் கூட தோற்றுவிக்கப் படலாம். நீங்கள் சொன்னதுபோலவே 'தொடர் இயக்கத்தில் எதோ ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம்' என்பதும் உண்மையாக இருக்கலாம். //
புதிய செய்திதான் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, இதில் இன்னொன்றையும் விட்டுச் செல்கிறீர்கள், இதே போன்று படைப்பின் தேவை மீண்டும் ஒரு முறை (தீர்ப்பு நாளுக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும்) ஏற்படலாம் என்ற கருத்தையும் மறைமுகமாகச் சொல்கிறது, நிரந்தர சொர்கம் என்ற கருத்தும் அடிப்பட்டு போய்விடுகிறது.
//இதையெல்லாம் இறைவன் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கும் குர்ஆனில் பதில் இருக்கலாம்.
"அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (குர்ஆன் 10:5)//
மனிதனே இல்லாதா மற்ற கோள்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் உண்டு. :)
//என்னைப் பொறுத்தவரை, 'இறைவன் ஏன் படைக்கிறான்?' என்ற கேள்வியை நான் கேட்டுக் கொண்டதில்லை. அதற்குப்பதிலாக, 'நான் ஏன் படைக்கப் பட்டேன்? எனது வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கும்?' போன்ற கேள்விகள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது. இந்தக் கேள்விகளுக்கான தேடல்கள், அதற்குக் கிடைக்கும் விளக்கங்கள் என் வாழ்வை சீர்படுத்திக் கொள்ள உதவும் என்ற 'சுயநலம்'தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.//
அப்படியா ? ஏன் படைக்கப்பட்டேன் என்ற கேள்வியில் உங்களுக்கு குழப்பமே வரவில்லையா ? 'அப்பாவின் சோதனைகளையெல்லாம் பக்தர்களோடு நிறுத்துக் கொள்ளக் கூடாதா ? என்னிடமும் காட்ட வேண்டுமா ?' என்ற திருவிளையாடல் வசனம் போல் ஆயாசமாக இல்லையா ? நம்மை ஏன் படைக்கனும், கூண்டில் அடைத்தது போல் கட்டுப்பாடுகளை விதிக்கனும், சொர்கம் என்ற ஆசையைக் காட்டனும் ? பிறக்காமல் கண்களுக்கு முன் காட்டி இதையெல்லாம் செய்யாதே என்று கட்டுபாடு விதித்து, அதை நாம் மீற அதற்கு தண்டனை, இதற்கு பதிலாக படைக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்திருக்கிறீர்களா ?
சுவனப்பிரியன் கண் இல்லாமல் குழந்தைகள் ஊனமாக பிறப்பதற்கு பெற்றோர்கள் தவறான மருந்தை உட்கொண்டது தான் என்று (ப்ளைண்டாக!!!) சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா ? சுனாமிக்கு காரணம் மரத்தை வெட்டியது என்றும் சொல்கிறார். சுனாமி ஏற்பட்டது எதோ 4 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமல்ல, எங்கும் காடுகளாக இருந்த போதும் சுனாமியால் குமரிகண்டம், துவாரகை மற்றும் காவெரிபூம்பட்டினமெல்லாம் அழிந்திருக்கிறது. அனைத்தும் அவன் செயல் என்பதை முழுமையாக நம்பும் நீங்கள், இயற்கைச் சீரழிவுகளின் போது இரக்கப்படுவதே இல்லையா ?
//புளூட்டோ விலகிப்போனதும் எரிகற்கள் பூமியின் சந்திரனின் மீது விழுவதும் அவற்றிற்கான நியதிகளாக கூட இருக்கலாம். நான் சொல்ல வந்தது, கோளங்களின் செயல்பாட்டில் ஒரு system இருக்கிறது என்பதைத்தான். //
சிஸ்டம் என்பது, நம் நம்பர் சிஸ்டத்தை வகுத்ததால் தான் தெரிகிறது, இல்லை என்றால் அப்படி ஒன்றும் இல்லை என்றே சொல்லுவோம், காலத்தை அளக்க நம்மால் முடியவில்லை என்றால் சிஸ்டம் இருப்பதெல்லாம் தெரியாது. மிகவும் குழப்பமான கணக்கு முறைகள் நம்மிடம் இருந்தால் மேகங்களின் ஒவ்வொரு வடிவமும் கூட சிஸ்டமாக இருப்பதாகத்தான் தெரியும். முன்பே சொன்னது போல் ஒழுங்கே இல்லாவிட்டாலும் ஒழுங்குமுறைக்கு மாற்றிக் கொள்வோம், பூமி முழுச்சூரியனைச் சுற்ற 365 1/2 நாள் என்பது என்ன கணக்கு ? ஆனால் அதை ஒரு ஆண்டு கணக்காக ஒழுங்குபடுத்திக் கொண்டுள்ளோம். எல்லாவற்றிலும் சிஸ்டம் இருக்கிறது என்று சொல்வது சரிதான என்றும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
//இங்கும் நான் சொல்ல வந்தது system பற்றித்தான். ஒரு மரத்தின் தன்மை முழுவதும் ஒரு சிறிய விதைக்குள் அடைக்கப் பட்டிருப்பது தற்செயலாகவோ தானாகவோ நிகழும் ஒன்று என்பதைவிட, இது மாபெரும் சக்தி கொண்ட படைப்பாளனின் செயல் என்று நம்புவதே எனது அறிவுக்கு பொருத்தமானதாக தோன்றுகிறது.//
அப்படி பார்த்தால் கூட முதலில் விதையைப் போட்டார்களா ? மரத்தையே நட்டார்களா என்ற கேள்வியெல்லாம் எழுமே :) சின்னப்புள்ளைக்குச் சொல்வது போல் கடைசிநாள் அல்லது படைப்பின் முதல் நாள் புறாவில் இரண்டு மனிதர்களில் இருவர் என ஒவ்வொரு விலங்கிலும் ஒரு ஜோடி என்று சொல்லப்படுவதை நம்பமுடியவில்லை. ஏனென்றால் சிங்கத்திற்கு உணவே மான் தான், இரண்டு சிங்கத்தையும், இரண்டு மானையும் மட்டும் படைத்திருந்தால் அன்றே மான்களை சிங்கம் சுவாக செய்திருக்கும். :)
//கேள்விகள் தாராளமாகக் கேட்கலாம். கர்ப்பத்தில் என்ன நடக்கிறது என்று கேள்விகள் எழுப்பப்பட வாய்ப்பே இல்லாத, எக்ஸ்ரே, சிஸேரியன் போன்ற தொழில்நுட்பங்கள் தோன்றியிருக்காத காலத்திலேயே குர்ஆன் கரு வளர்ச்சி பற்றி விளக்குகிறது. (23:14). இவையெல்லாம் கேள்வி கேட்கப்படக்கூடாத புனிதங்கள் அல்ல.//
நான் நிராகரிக்கவில்லை, அதே போன்ற தகவல்கள் தமிழில் திருமந்திரம், கந்தபுராணத்திலும், சித்தர் பாடல்களிலும் உண்டு.
//மனிதர்கள் அனைவருமே ஆதமின் மக்கள்தான் என்கிறது இஸ்லாம். மனிதர்கள் ஆதியில் நூற்றாண்டுக் கணக்கில் வாழ்நாள் உடையவர்களாக இருந்தார்கள். கடல் போக்குவரத்து இல்லாத காலங்களில் இணைந்திருந்த நிலப்பரப்பின் பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் கால்நடையாகவே பயணித்து குடியிருப்புகளை அமைத்திருக்கலாம். //
மனித இனம் 5 வகையாக இருக்கிறது ஒவ்வொருவரும் நிறம் மட்டும் தோற்றம் முற்றிலும் மாறுபட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவில் மக்கள் தோற்றம் வரலாற்றுக்கு முந்தயை நிகழ்வாகவே கருதப்படுகிறது, நீங்கள் சொல்லும் அனைவரும் ஆதாம் மக்கள் ஒரு தியரி என்ற அளவில் தான் கொள்ள முடியும்.
//இறைத்தூதர் நூஹ் (அலை) (நோவா) கப்பல் கட்டியதும், பிரளயம் ஏற்பட்டு அக்கப்பலில் இருந்தவர்களைத் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் அழிந்து போனதையும் பைபிளும் குர்ஆனும் விளக்குகின்றன. அதன் பிறகு பல்கிப் பெருகிய சந்ததியினர் கப்பல் போக்குவரத்தையும் பயன்படுத்தியிருப்பார்கள்.//
மேலே நான் குறிப்பிட்டுள்ள இரு ஜோடிகள் சேர்ப்பு கதை பற்றி தானே சொல்கிறீர்கள்?
//ஒரு தரப்பில் 'படைப்பாளன் இருக்கிறான்' என்ற நம்பிக்கை. இன்னொரு தரப்பில் 'படைப்பாளன் என யாரும் இல்லை' என்ற நம்பிக்கை. இரண்டுமே நம்பிக்கைகள்தானே? மறு தரப்பினரின் நம்பிக்கைகளைப் பற்றி கேள்விகள் கேட்டு அறிந்து கொள்வது தவறு ஒன்றுமில்லையே! //
தவறாக எண்ணாதீர்கள், நான் இறைமறுப்புக்காக இதனை எழுதவில்லை, படைப்பு என்கிற சித்தாந்த மறுப்புக்காகத்தான் எழுதி இருக்கிறேன். நம்பிக்கை உடையவர்களை யாராலும் அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது என்பதை அனைவருமே அறிவோம். எனது கருத்துக்கு எதிர்கருத்துக்கள் சொல்வதையெல்லாம் மறுத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் உங்களுடன் விவாதம் செய்யவில்லை.
முதல் பாராவில் நீங்கள் சொல்லி இருப்பது புதிய செய்திதான் மிக்க நன்றி
சலாஹுத்தீன்,
//இறைத்தூதர்கள் மூலமாக வழிகாட்டுதல்களும் மாறுதலடைந்து வந்திருக்கின்றன.//
மாறுதலடைவதற்கு கடவுளின் கட்டளைகளுக்கு என்ன தேவை? ஏன் பல்லுக்குப் பல் (பழைய ஏற்பாடு), அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு (புதிய ஏற்பாடு),
குழப்பம் விளைவிப்பவனையும், கொலைக்குப் பழியாகவும் தவிர்த்து கொலை செய்யாதே (குரான்) என்பது போன்ற மாற்றங்கள் ஏன்?
சகோதரர் சலாஹுத்தீன்,
//உலகத்தில் தோன்றிய முதல் மனிதர் ஆதம் ஒரு இறைத்தூதரும் கூட. அவருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் இலட்சக் கணக்கான இறைத்தூதர்கள் தோன்றியிருப்பதாக இஸ்லாம் சொல்கிறது.
ஆனால் வாழ்க்கை வழிகாட்டல்கள் அந்தந்த காலக் கட்டத்திற்கேற்ப மாறுதலடைந்து வந்திருக்கின்றன. ஆதம் (அலை) அவர்களின் காலத்தில் உலகில் வசித்தவர்கள் அவரும் அவரது குடும்பத்தினர் மட்டும்தான். அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது.
மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க அவ்வப்போது தோன்றிய இறைத்தூதர்கள் மூலமாக வழிகாட்டுதல்களும் மாறுதலடைந்து வந்திருக்கின்றன. அதில் இறுதியாக வந்தவர் முஹம்மது நபி (ஸல்).
//
உங்கள் கருத்துப்படி
மக்கள் தொகை அதிகரிப்பு, மற்றும் அந்தந்த காலக் கட்டத்திற்கேற்ப வாழ்க்கை வழிகாட்டல்கள் மாறுதலாகவேண்டும் என்று இறைவன் கருதியே பல நபிமார்களும், வேதப்புத்தகங்களையும் அனுப்பி வைத்துள்ளான்.
மக்கள் தொகை இன்னும் அதிகரித்து கொண்டுதானுள்ளது, காலக் கட்டத்திற்கேற்ப வாழ்க்கையும் மாறிக்கொண்டேயுள்ளது.
இதன்படி பார்த்தால் நபி(ஸ்ல்) இறுதி தூதர் மற்றும் குரான் இறுதி வேதம் என்பதிலேயே பெரிய முரண்பாடு தோன்றுகிறதே?
//KARMA said... உங்கள் கருத்துப்படி
மக்கள் தொகை அதிகரிப்பு, மற்றும் அந்தந்த காலக் கட்டத்திற்கேற்ப வாழ்க்கை வழிகாட்டல்கள் மாறுதலாகவேண்டும் என்று இறைவன் கருதியே பல நபிமார்களும், வேதப்புத்தகங்களையும் அனுப்பி வைத்துள்ளான்.
மக்கள் தொகை இன்னும் அதிகரித்து கொண்டுதானுள்ளது, காலக் கட்டத்திற்கேற்ப வாழ்க்கையும் மாறிக்கொண்டேயுள்ளது.
இதன்படி பார்த்தால் நபி(ஸ்ல்) இறுதி தூதர் மற்றும் குரான் இறுதி வேதம் என்பதிலேயே பெரிய முரண்பாடு தோன்றுகிறதே? //
கர்மா,
சலாஹூதின் சொல்வது குரான் வசனங்களை வைத்துதான், தனிப்பட்டக் கருத்தாகச் சொல்லவில்லை.
இஸ்லாமுக்கு பிறகு உலக அளவில் பெரிய மதங்கள் தோன்றவில்லை என்பதால், மதங்களை இறைவன் தோற்றுவித்தான் என்று நம்பும் ஆன்மிகவாதிகள் அந்தக் கூற்றை ஏன் சரி என்று கொள்ளக் கூடாது ?
//இதில் இன்னொன்றையும் விட்டுச் செல்கிறீர்கள், இதே போன்று படைப்பின் தேவை மீண்டும் ஒரு முறை (தீர்ப்பு நாளுக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும்) ஏற்படலாம் என்ற கருத்தையும் மறைமுகமாகச் சொல்கிறது, நிரந்தர சொர்கம் என்ற கருத்தும் அடிப்பட்டு போய்விடுகிறது. - கோவி.கண்ணன் //
இல்லை. நிரந்தர மறுமை வாழ்வு என்பது அடிபட்டுப் போகவில்லை. இந்த உலகம் முற்றிலும் அழிந்து போன பிறகு இன்னொரு பூமி படைக்கப்பட்டால் இந்த முறை பூமியில் வாழ்ந்து மரணித்தவர்கள் மற்றொருமுறை பூமிக்கு அனுப்பப்பட மாட்டார்கள். அவர்களின் நிரந்தர மறுமை வாழ்வு தொடரவே செய்யும்.
//மனிதனே இல்லாதா மற்ற கோள்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் உண்டு. :)//
உண்மைதான். ஆனால் நம் கண்களுக்கு புலப்படுவதை மட்டுமே அத்தாட்சிகளாக குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.
//நான் ஏன் படைக்கப்பட்டேன் என்ற கேள்வியில் உங்களுக்கு குழப்பமே வரவில்லையா ?//
'நான் ஏன் படைக்கப் பட்டேன்? எனது வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கும்?' போன்ற கேள்விகள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் 'இறைவன் என்னை ஏன் படைத்தான்?' என்ற கேள்வியை, அதாவது 'இறைவனின் நோக்கம் என்னவாக இருக்கும்?' என்ற கேள்வியை நான் கேட்டுக் கொண்டதில்லை.
//சுவனப்பிரியன் கண் இல்லாமல் குழந்தைகள் ஊனமாக பிறப்பதற்கு பெற்றோர்கள் தவறான மருந்தை உட்கொண்டது தான் என்று (ப்ளைண்டாக!!!) சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா ? சுனாமிக்கு காரணம் மரத்தை வெட்டியது என்றும் சொல்கிறார். சுனாமி ஏற்பட்டது எதோ 4 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமல்ல, எங்கும் காடுகளாக இருந்த போதும் சுனாமியால் குமரிகண்டம், துவாரகை மற்றும் காவெரிபூம்பட்டினமெல்லாம் அழிந்திருக்கிறது. அனைத்தும் அவன் செயல் என்பதை முழுமையாக நம்பும் நீங்கள், இயற்கைச் சீரழிவுகளின் போது இரக்கப்படுவதே இல்லையா ?//
சுவனப்பிரியன் சரியான கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார். பொருள்களையும் அவற்றின் தன்மைகளையும் படைத்தவன் இறைவன். நெருப்பு ஒளியாகவும் இருக்கும், எரிக்கவும் செய்யும். கத்தி பழத்தையும் அறுக்கும், கழுத்தையும் அறுக்கும். அது போல சில மருந்துகளை உட்கொண்டால் அவற்றிற்கான பக்க விளைவுகள் ஏற்படவே செய்யும். இவையெல்லாம் நியதிகள். தக்க சூழல் இருந்தால் விதை மரமாகும் என்று சொன்னீர்கள். அந்த சூழலிலோ விதையிலோ குறைபாடு இருந்தால் அது அந்த மரம் வளரும்போது வெளிப்படும் அல்லவா? சுனாமி ஏற்பட்டதற்கு காடுகள் அழிக்கப்பட்டது ஒரு காரணம்.. அதற்கு மற்ற காரணங்களும் இருக்கலாம். அனைத்தும் அவன் செயல் என்றால், பொருள்களின் தன்மைகளையும் நியதிகளையும் ஏற்படுத்தியவன் அவன் என்றே பொருள்படும். ஆற்றுப் பாதைகளை ஆக்ரமித்து குடியிருப்புகளை அமைத்துக் கொண்டால் வெள்ளம் ஊருக்குள் வரத்தானே செய்யும்? இந்த நியதிகளை படைத்த அதே இறைவன்தான் மனிதர்கள் மனதில் இரக்க உணர்வையும், சக மனிதர்களுக்கு உதவி புரியும் மனப்பான்மையும் விதைத்திருக்கிறான்.
//ஒழுங்கே இல்லாவிட்டாலும் ஒழுங்குமுறைக்கு மாற்றிக் கொள்வோம், பூமி முழுச்சூரியனைச் சுற்ற 365 1/2 நாள் என்பது என்ன கணக்கு ? ஆனால் அதை ஒரு ஆண்டு கணக்காக ஒழுங்குபடுத்திக் கொண்டுள்ளோம். எல்லாவற்றிலும் சிஸ்டம் இருக்கிறது என்று சொல்வது சரிதான என்றும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.//
ஒவ்வொரு முறையும் ஆண்டிற்கு 365 1/2 நாட்கள் மட்டுமே என்பதுதான் ஒழுங்குமுறை. அப்படி இல்லாமல் ஒரு வருடம் 365, அடுத்த வருடம் 212, அதற்கடுத்த வருடம் 486 நாட்கள் என்று கணிக்கவே முடியாத அளவிற்கு எண்ணிக்கை மாறிக் கொண்டே இருந்தால் அதை ஒழுங்குமுறை என்று சொல்ல முடியாதே?
//நான் இறைமறுப்புக்காக இதனை எழுதவில்லை, படைப்பு என்கிற சித்தாந்த மறுப்புக்காகத்தான் எழுதி இருக்கிறேன். நம்பிக்கை உடையவர்களை யாராலும் அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது என்பதை அனைவருமே அறிவோம். எனது கருத்துக்கு எதிர்கருத்துக்கள் சொல்வதையெல்லாம் மறுத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் உங்களுடன் விவாதம் செய்யவில்லை.//
நானும் இதை ஒரு கருத்துப் பரிமாற்றமாகத்தான் பார்க்கிறேன். விவாதமாக அல்ல. இது போன்ற மனம் திறந்த கருத்துப் பரிமாற்றத்திற்கு உங்கள் பதிவில் தளம் அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி.
//இல்லை. நிரந்தர மறுமை வாழ்வு என்பது அடிபட்டுப் போகவில்லை. இந்த உலகம் முற்றிலும் அழிந்து போன பிறகு இன்னொரு பூமி படைக்கப்பட்டால் இந்த முறை பூமியில் வாழ்ந்து மரணித்தவர்கள் மற்றொருமுறை பூமிக்கு அனுப்பப்பட மாட்டார்கள். அவர்களின் நிரந்தர மறுமை வாழ்வு தொடரவே செய்யும்.//
சலாஹுதீன்,
இதையும் சற்று ஆழமாக யோசித்துப் பாருங்கள், எல்லாம் நிரந்தரம் என்றால் அலுப்புதான் வரும். தானே நிரந்தர முதல்மந்திரி ஆகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அது மகிழ்ச்சியானதாகவே இருக்க முடியாது. அயற்சி அலுப்பு எல்லாமும் இருந்துவிடும், அது தொடராது என்னும் பொழுது தான் அது அவசியம் என்றே மனம் உணரும். ஆயுள் முழுவதும் கைதியாக இல்லாவிட்டாலும் ஜெயில் வார்டனாகவே இருப்பவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லிவிடமுடியுமா ?
சொர்கத்தில் மனிதராக பிறப்பெடுத்தவர்களின் வயது நிலை பற்றி தெளிவு இல்லை, குழந்தையாகவே இறந்தவன் குழந்தையாகவே சொர்கத்திலும் தொடர்ந்தால் அது சொர்கம் என்று சொல்லமுடியாது.
மகிழ்ச்சிக்கான காரணமே நாம் ஒன்றை தேடி அடைவது தான். எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கும் ஒன்றை நினைத்து மகிழ்வு ஏற்படும், அது மகிழ்சியான வாழ்கை என்றால் அது உளவியல் ரீதியான சரியான கருத்தும் இல்லை. சொர்கத்தில் உடலுறவு, குழந்தை பெறுவதெல்லாம் இஸ்லாம் நம்பிக்கைப்படி இருக்கிறதா ? மற்றதையெல்லாம் பிறகு கேட்கிறேன்.
//இந்த நியதிகளை படைத்த அதே இறைவன்தான் மனிதர்கள் மனதில் இரக்க உணர்வையும், சக மனிதர்களுக்கு உதவி புரியும் மனப்பான்மையும் விதைத்திருக்கிறான். //
சகமனிதருக்கு இரக்க உணர்வு வரவேண்டும் என்பதற்க்காக ஒருவரை பிறவி குருடராக படைத்து அவர் பிறரிடம் உதவி பெற்றே வாழவேண்டும் என்பது என்ன நியதி ? அவர்கள் கண்ணில்லாமல் இருப்பதை மகிழ்ச்சியாகவே ஏற்று கொள்கிறாரர்களா ? தனக்கு எல்லாமே சரியாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி கூறும் வேளையில் இன்னொருவர் பிறரை நம்பித்தான் வாழ்கையை ஓட்டவேண்டும் என்பதைப் பார்க்கும் போது இரக்கம் மட்டும் போதாது. மூளை வளர்ச்சியற்ற ஒருவர் ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தால் அதை யாரும் கடவுளின் வரம் என்று நினைக்கமாட்டார்கள், மாறாக எனக்கும் இந்த குழந்தைக்கு ஏன் இந்த நரக வேதனை என்றே நினைப்பர். கணவன் மனைவி இருவருமே நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருந்து, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளும் சரியாக பிறந்து ஒரு குழந்தை மட்டும் மூளை வளர்ச்சி குறைவாக பிறந்தால் அதையெல்லாம் பெற்றவர்கள் தவறான மருந்தை உட்கொண்டதால் பிறக்க நேரிட்டது என்று சொன்னால் மருத்துவ உலகம் கூட அதை நிராகரிக்கும். எதோ ஒரு இயற்கைக் காரணம் தான். கண்டிப்பாக பெற்றோர்களின் தவறே அல்ல.
//ஒவ்வொரு முறையும் ஆண்டிற்கு 365 1/2 நாட்கள் மட்டுமே என்பதுதான் ஒழுங்குமுறை. அப்படி இல்லாமல் ஒரு வருடம் 365, அடுத்த வருடம் 212, அதற்கடுத்த வருடம் 486 நாட்கள் என்று கணிக்கவே முடியாத அளவிற்கு எண்ணிக்கை மாறிக் கொண்டே இருந்தால் அதை ஒழுங்குமுறை என்று சொல்ல முடியாதே?//
:) மைக்ரோ செகண்ட் துல்லியத்தில் அப்படி நிகழ்கிறதா என்று யாரும் சொல்ல முடியாதே என்றே நினைக்கிறேன். ஒரு நாள் காலை சூரியன் அடுத்த நாளும் அதே நேரத்தில் இல்லை. மேலும் நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால் சுழற்சியின் வேகத்திலும் கூட மாறுதல்கள் இருக்கும் நமக்குத் தெரிவதில்லை. 365 1/2 நாளே பூமி மறையும் வரை இருக்குமா என்று சொல்ல முடியாது, சுழற்சியின் விசை தளர்ந்ததால் புளோட்டோ விலகிச் சென்றி இருக்கிறது.
// Dharan said...
//பொய் சொல்வது, திருடுவது தப்பு' போன்ற உள்ளுணர்வுகளும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே pre-recorded செய்யப் பட்டுத்தான் குழந்தைகள் பிறக்கிறார்கள்//
இது சூழ்நிலையைப் பொறுத்த விடயமாக இருக்கத்தான் வாய்ப்பு.
PRE-RECORDED ஆக இருக்க வாய்ப்பில்லை.//
உதாரணமாக, ஒரு விளையாட்டு சாமானை கீழே போட்டு உடைத்து விட்ட இரண்டு வயது குழந்தையிடம் 'இதை யார் உடைத்தது?' என்று கேட்டால், 'எனக்குத் தெரியாது' என்று சொல்லும்போதே அக்குழந்தையின் கண்களில் ஒரு குற்ற உணர்வு தெரியும். அதன் மனதில் கள்ளம் கபடம் ஏதும் இல்லாமல் 'பொய் சொல்வது தப்பு' என்ற உள்ளுணர்வு மட்டுமே இருக்கும் சூழலில்தான் இது நிகழும். அதைத்தான் pre-recorded message என்றேன்.
//கடவுள் என்கிற விடயம் பிறக்கும் போதே pre-recorded ஆக வருவது என்பதை ஒரு போதும் ஒப்புக்கொள்ள முடியாது. இஸ்லாமியருக்கு பிறந்த குழந்தையை பிராமனர் வீட்டில் வளர்க்கும் போது பிராமணக் கடவுள் பற்றுள்ளதாகவும், கிறித்துவர் வீட்டில் வளர்ந்தால் கிறித்துவ கடவுள் சிந்தனையுடனும் வளரும்,//
பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே 'படைத்தவன் ஒருவன் இருக்கிறான்' என்ற உள்ளுணர்வுடனே பிறக்கிறார்கள் என்று இஸ்லாம் சொல்கிறது. அவர்களுக்கு படைத்தவன் யார் என்பதையோ அல்லது அப்படி யாரும் இல்லை என்றோ கற்பிப்பது பெற்றோரும் அவர்கள் வளரும் சூழ்நிலையும்.
//சிந்தனை என்பது வரையறைக்குள் வரக்கூடாது. மத நூல்கள் அனைத்தும் சிந்தனையை ஒரு வரையறைக்கிள் கட்டுப்படுத்துகிறது.//
சிந்தனை என்பது வரையறைக்குள் வரக்கூடாது என்பது சரிதான். வரையறையாக இல்லாமல் வழிகாட்டலாக இருக்கும் கருத்துக்களை, சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளலாம்தானே?
//தருமி said...
சலாஹுத்தீன்,
//இறைத்தூதர்கள் மூலமாக வழிகாட்டுதல்களும் மாறுதலடைந்து வந்திருக்கின்றன.//
மாறுதலடைவதற்கு கடவுளின் கட்டளைகளுக்கு என்ன தேவை? ஏன் பல்லுக்குப் பல் (பழைய ஏற்பாடு), அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு (புதிய ஏற்பாடு),
குழப்பம் விளைவிப்பவனையும், கொலைக்குப் பழியாகவும் தவிர்த்து கொலை செய்யாதே (குரான்) என்பது போன்ற மாற்றங்கள் ஏன்?//
தருமி அய்யா, பிற மதக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு கருத்து சொல்லும் அளவிற்கு நான் அறிந்தவன் அல்ல என்றாலும் முயல்கிறேன்.
'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ' - மத்தேயு 5:39-41
பைபிளின் மேற்கண்ட வசனம் 'உன்னை தாக்குபவர்களைக் கூட நீ எதிர்க்காதே. மாறாக அவர்கள் உன்னை மேலும் தாக்கும் வகையில் அடிபணிந்து போ!' என்கிறது. நியாயவானாகிய இயேசுபிரான் இவ்வாறு போதித்திருப்பாரா என்ற சந்தேகத்தையே இது எழுப்புகிறது. தவிர, இது நடைமுறையில் சாத்தியமில்லாததாகவும், கிருஸ்துவ நாடுகளால் கூட செயல்படுத்தப்படாத ஒன்றாகவும் இருக்கிறது. நடைமுறைப் படுத்தப்பட்டால் கூட அது நியாயமாக இருக்காது.
இயேசுவின் காலத்திற்கு பல ஆண்டுகளுக்கு பிறகே தொகுக்கப்பட்ட பைபிளில் இறை போதனைகளுடன் தீர்க்கதரிசிகளின் உபதேசங்கள் தொகுப்பாளர்களின் அபிப்ராயங்கள் ஆகியவையும் கலந்திருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இயேசுபிரானின் உண்மையான போதனை ஒன்று இவ்வாறு திரிந்து போய் இருக்கலாம் என்பது என் கருத்து.
குழப்பம் விளைவிப்பவனையும், கொலைக்குப் பழியாகவும் தவிர்த்து கொலை செய்யாதே என்பது இஸ்லாமிய அரசாங்கங்களுக்கான கட்டளை. இந்தச் சட்டத்தை தனிநபர்கள் கையிலெடுத்துக் கொண்டு தீர்ப்பளிக்கக் கூடாது.
அக்கிரமத்திற்கு எதிராக பழிதீர்ப்பது அனுமதிக்கப் பட்டிருந்தாலும் மன்னித்து விடுவதே சிறந்தது என்று குர்ஆன் சொல்கிறது:
அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (42:37)
அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (42:39)
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (42:40)
எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. (42:41)
ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43)
// KARMA said...
உங்கள் கருத்துப்படி
மக்கள் தொகை அதிகரிப்பு, மற்றும் அந்தந்த காலக் கட்டத்திற்கேற்ப வாழ்க்கை வழிகாட்டல்கள் மாறுதலாகவேண்டும் என்று இறைவன் கருதியே பல நபிமார்களும், வேதப்புத்தகங்களையும் அனுப்பி வைத்துள்ளான்.
மக்கள் தொகை இன்னும் அதிகரித்து கொண்டுதானுள்ளது, காலக் கட்டத்திற்கேற்ப வாழ்க்கையும் மாறிக்கொண்டேயுள்ளது.
இதன்படி பார்த்தால் நபி(ஸ்ல்) இறுதி தூதர் மற்றும் குரான் இறுதி வேதம் என்பதிலேயே பெரிய முரண்பாடு தோன்றுகிறதே?//
14 நூற்றாண்டுகள் ஆன போதிலும் இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் இன்றைய சூழ்நிலையிலும் பொருந்துவனவாகவே இருக்கின்றன. இஸ்லாமின் எந்த ஒரு கொள்கையும் இன்று சாத்தியமில்லாமல் போய்விட்டதாக நாம் அறியவில்லை. இன்னும் சொல்லப் போனால், இஸ்லாமிய கோட்பாடுகளின் முழுப்பரிமாணமும் இன்னும் வெளிப்படவில்லை என்றே நான் கருதுகிறேன். இஸ்லாமிய வங்கியியல், இஸ்லாமியப் பொருளியல் போன்ற துறைகள் இப்போதுதான் வளர்ச்சி பெற்று வருகின்றன.
தவிர, சகோதரர் கோவி.கண்ணன் சொன்னது போல, இஸ்லாமுக்குப் பிறகு இன்னொரு தூதரோ இன்னொரு வேதமோ வரவில்லை என்பதால் இறுதித் தூதர், இறுதி வேதம் என்பதில் முரண்பாடு எதுவும் இல்லையே!
//எந்த ஒரு செயலுக்கும் தூண்டல் அல்லது எதோ ஒரு காரணம் இருக்க வேண்டும், இறைவனுக்கு இவற்றைப் படைக்க என்ன காரணம் ஏற்பட்டு இருக்க வேண்டும்?//
காரணமின்றி தான் எதையும் படைக்கவில்லை என்றுதான் இறைவனும் சொல்கிறான். உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற உலகைப்படைத்த இறைவனே அவ்வுயிரினங்களுக்குத் தீங்கு செய்யும் ஜீவராசிகளையும் படைத்துள்ளான். என்ன சார் இது அநியாயம்? உலகில் குறிப்பிட்டக் காலம் வாழ்ந்து என்னைப் பற்றி அறிந்து கொண்டு மீண்டும் என்னிடம் வா, வினைகளுக்கேற்ப சுவர்க்கம்/நரகம் தருகிறேன் என்று சொல்லி மனிதர்களைப் படைத்ததோடு தேள்,பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்களையும் சேர்த்தே படைத்திருக்கும் இறைவன், பிறர் துன்பத்தில் இன்பம் காணும் சாடிஸ்டா? அறிவற்ற படைப்பாளனா? என்ற கேள்விகளும் நியாயமானதே!
அதேபோல், மனிதன் உயிர்வாழ பூமியும் பகலிரவிற்கு சூரியனும் சந்திரனும் போதுமானதாயிருக்க இன்னபிற கோள்களும், நட்சத்திரங்களும் ஏன் தேவையற்று படைக்கப்பட்டிருக்கின்றன? அவற்றைப் படைத்து பயனற்று?! இருப்பதற்குப் பதிலாக பூமியை இன்னும் சிறப்பாக படைத்திருக்கலாமே? என்று சாதாரண மனிதனுக்கிருக்கும் அறிவுகூட இறைவனுக்கு இல்லையே? பிறகு எப்படி படைப்பாளர்களில் எல்லாம் மிகச்சிறந்த படைப்பாளனாகத் தன்னைச் சொல்லிக் கொள்கிறான்?
சரி, படைத்ததுதான் படைத்தான் மனிதர்களிலாவது ஊனமின்றி, அங்க குறைபாடின்றி, ஒழுங்கற்ற உருவமைப்பின்றி எல்லோரையும் ஆரோக்கியமாகப் படைத்துத் தொலைத்திருக்கலாமே. சிலருக்கு எல்லா வசதிகளையும் கொடுத்தும்,சிலரைப் பஞ்சப்பரதேசியாக,ஊனமுற்றவராக,பிறவிக் கோளாறுடன் தப்பும் தவறுமாகப் படைத்து விட்டு, அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன் என்பது 'லொள்ளு'தானே என்றுக் கேட்கலாம்!
ஆக, ஒழுங்காகவோ ஊனமாகவோ, பயனுடனோ பயனின்றியோ அனைத்தும் படைக்கப்பட்டு உள்ளன என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது என்று நினைக்கிறேன்.சரி, இவை/இவர்கள் ஏன் படைக்கப்பட வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? என்று பார்ப்போம்.
எல்லாம் அவன் செயல் என்று இறைநம்பிக்கையாளர்களும், எல்லாம் இயற்கை/அறிவியல் என்று இறை மறுப்பாளர்களும் சொல்லிக் கொள்கிறார்கள். இதில் யார் சொல்வது உண்மையாக இருக்கும்? எல்லாம் அவன் செயலென்றால் நரகத்திற்கு இட்டுச் செல்லும் கெட்டவனாக என்னைப் படைத்ததும் அவன் செயல்தானே? அதற்கு ஏன் என்னைப் பொறுப்பாக்க வேண்டும் என்றும் கேட்கலாம்!அதே போல், எல்லாமே இயற்கை/அறிவியல் நிகழ்தகவு என்றாலும் இதுபோன்ற எதிர்கேள்விகள் எழும்!
எல்லாமே இயற்கை என்பவர்கள்கூட இயற்கைக்கு முரணாக உடலை ஆடையிட்டு மறைக்கிறார்கள்! இயற்கையான வாய் துர்?நாற்றத்தை டூத் பேஸ்ட் கொண்டு அழிக்கிறார்கள்! இயற்கையான உணவை நெருப்பிலிட்டு வேக வைத்துப் புசிக்கிறார்கள்! இயற்கையாக ஏற்பட்ட சுனாமிக்கு இறைவனை நொந்து கொள்கிறார்கள்! இயற்கையாக எதற்கு சுனாமி ஏற்பட வேண்டும்? ஏன் டிசம்பர் 26,2004 அன்று ஏற்பட வேண்டும் என்றெல்லாம் எதிர் கேள்விகளும் எழும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வியாக்கியானங்களைச் சொல்வார்கள். கடவுள் நம்பிக்கையாளர்கள் இதுவும் அவன் செயல் என்பார்கள்! நாத்திகர்கள் அறிவியல் தியரியை துணைக்கழைத்துக் கொண்டு பூமியின் டெக்டானிக் தட்டுகள் இடம்பெயர்ந்ததால் சுனாமி ஏற்பட்டது என்று சொல்லி நழுவுவார்கள்! ஏன்சார் அந்த ஆட்டம் கண்ட டெக்டானிக் பிளேட்டை ஆடாமல் நிறுத்துவதற்கு உங்கள் விஞ்ஞானிகள் முயற்சி செய்யக்கூடாதா? என்றும் கேட்கலாம்!
மொத்தத்தில், நல்லவை நடந்து கொண்டிருக்கும்போது இறைவனைப் பற்றி சிந்திக்காதவர்கள்கூட கெட்டது நடக்கும்போது இறைவனைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.மனிதர்களில் இப்படியும் இருப்பார்கள் என்பதை அறிந்திருப்பதானோ என்னவோ இத்தகையச் சமநிலையற்ற படைப்புகளும், படைப்பினங்களின் சுழற்சியும் தற்காலிகமானவையே; நீண்ட நெடிய வாழ்க்கைக்குத் தயார் செய்யவே இவ்வுலகில் சொற்பகாலம் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்கிறான். இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்ற நம்பிக்கை வலுப்பெறும்போது இறைவனைப் பற்றிய அனாவசியக் கேள்விகள் எழாது.
இறைநம்பிக்கை விசயத்தில் தர்க்க ரீதியிலான கேள்விகளுக்குப் பெரும்பாலும் மனிதர்களிடம் பதில் இருக்காது. ஏனென்றால் சொல்லப்பட்டவை குறித்து மட்டுமே விளக்க முடியும். அறிவியல் குறித்து பேசுபவர்களுக்கும் இது பொருந்தும். அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் விடைகளிருப்பதாக யாரேனும் சொல்லி விட்டு, இறைவனைப் பற்றிய கேள்விகளை வைத்தால் நியாயமிருக்கும்.
நட்புடன்,
நல்லடியார்
//சலாஹுதீன்,
இதையும் சற்று ஆழமாக யோசித்துப் பாருங்கள், எல்லாம் நிரந்தரம் என்றால் அலுப்புதான் வரும். தானே நிரந்தர முதல்மந்திரி ஆகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அது மகிழ்ச்சியானதாகவே இருக்க முடியாது. அயற்சி அலுப்பு எல்லாமும் இருந்துவிடும், அது தொடராது என்னும் பொழுது தான் அது அவசியம் என்றே மனம் உணரும். ஆயுள் முழுவதும் கைதியாக இல்லாவிட்டாலும் ஜெயில் வார்டனாகவே இருப்பவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லிவிடமுடியுமா ?//
நல்ல காரியங்களைச் செய்தவர்கள் சுவர்க்கத்தில் மகிழ்விக்கப் படுவார்கள் என்றும் அவர்கள் மனம் விரும்பியதெல்லாம் அங்கு இருக்கும் என்றும் சொல்கிறது குர்ஆன். ஆக, என்ன மாதிரி சூழலும் வசதிகளும் இருந்தால் நம் மனம் மகிழ்ச்சியடையுமோ அவ்வகையான வசதிகள் சுவர்க்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதில் ஒருவேளை நாம் சலிப்படைந்து வேறோரு மாறுதலை விரும்பினால் அதுவும் கூட அங்கு நாம் பெற்றுக் கொள்ளக்கூடும். யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து வகையான நல்லவைகளும் அங்கு உண்டு என்றும் குர்ஆன் சொல்கிறது.
அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர். (அல்-குர்ஆன் 76:20)
அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (அல்-குர்ஆன் 32:17)
//சொர்கத்தில் மனிதராக பிறப்பெடுத்தவர்களின் வயது நிலை பற்றி தெளிவு இல்லை, குழந்தையாகவே இறந்தவன் குழந்தையாகவே சொர்கத்திலும் தொடர்ந்தால் அது சொர்கம் என்று சொல்லமுடியாது.//
சொர்க்கத்தில் பிரவேசிப்பவர்கள் இளம் வயதுடையவராக இருப்பார்கள் என்ற நபிமொழி ஒன்று இருக்கிறது.
//சொர்கத்தில் உடலுறவு, குழந்தை பெறுவதெல்லாம் இஸ்லாம் நம்பிக்கைப்படி இருக்கிறதா ? மற்றதையெல்லாம் பிறகு கேட்கிறேன்.//
குழந்தை பிறப்பு இருக்காது என்று நினைக்கிறேன். உடலுறவு ??? தெரியவில்லை.
//சகமனிதருக்கு இரக்க உணர்வு வரவேண்டும் என்பதற்க்காக ஒருவரை பிறவி குருடராக படைத்து அவர் பிறரிடம் உதவி பெற்றே வாழவேண்டும் என்பது என்ன நியதி ? அவர்கள் கண்ணில்லாமல் இருப்பதை மகிழ்ச்சியாகவே ஏற்று கொள்கிறாரர்களா ? //
//அக்கிரமத்திற்கு எதிராக பழிதீர்ப்பது அனுமதிக்கப் பட்டிருந்தாலும் மன்னித்து விடுவதே சிறந்தது என்று குர்ஆன் சொல்கிறது://
இந்த வாக்கியத்தின் முதல் பகுதியைத் தான் நான் கேள்விக்குட்படுத்துகிறேன். எந்த ஒரு மதத்திலும் பழிதீர்ப்பதையோ, கொலை செய்வதையோ நியாயப்படுத்துதல் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.
//இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்;//
இன்னா செய்தாரையும் ஒறுத்தல் பற்றிப் பேசினால்தானே அது நல்வழிப்படுத்தும் வழியாக இருக்க முடியும். பழிக்குப் பழி என்று போதிப்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும்?
//அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (42:39)
எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. (42:41)//
மேற்கண்ட இரு வாசகங்களும் தனிமனித நீதிபற்றிதான் கூறுகிறதாகத் தெரிகிறதேயொழிய நீங்கள் கீழ்க்கண்டவாறு சொல்வதுபோல்- //
குழப்பம் விளைவிப்பவனையும், கொலைக்குப் பழியாகவும் தவிர்த்து கொலை செய்யாதே என்பது இஸ்லாமிய அரசாங்கங்களுக்கான கட்டளை.// அரசாங்களுக்கு உரிய கட்டளைகளாகத் தெரியவில்லையே ..
//குழந்தை பிறப்பு இருக்காது என்று நினைக்கிறேன். உடலுறவு ??? தெரியவில்லை.//
எனக்குத் தெரிந்தது; அது சரியா என்று நீங்கள்தான் சொல்லணும்:
//இஸ்லாமிய மோட்சத்தில் தேன் பாயும்; பச்சைப்பசேல் என்றிருக்கும் என்பதெல்லாம் சரி. ஆனால் இது என்ன ? ஒவ்வொருவருக்கும் 'houris' எனப்படும் (perpetual virgins) 'நித்திய கன்னிகைகள்'? முகமதுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைவிடவும் இரண்டு மடங்கு எண்ணிகையில் கிடைக்கும் என்பது எந்த வகையில் ஒரு கடவுள் தரும் 'பரிசாக' இருக்கும். It is not definitely in good taste. (நரகத்தில் பெண்களே அதிகமாயிருப்பார்கள் என முகமதுவே ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.) ஆயினும் ஆண்களுக்குக் கிடைக்கும் இந்தப் பரிசிற்குச் சமமாக மோட்சம் செல்லும் பெண்களுக்குக் கிடைக்க என்னவெல்லாம் காத்திருக்கப் போகிறது என்பதைப் பற்றி 'நல்ல வேளை' எதுவும் சொல்லப்படவில்லை!//
//14 நூற்றாண்டுகள் ஆன போதிலும் இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் இன்றைய சூழ்நிலையிலும் பொருந்துவனவாகவே இருக்கின்றன.//
இதை மறுத்து ஏற்கெனவே நான் சொன்னதை மீண்டும் இங்கு தருகிறேன்" அதோடு சிறுநீர் கழிப்பதைப் பற்றிக்கூட நபிகள் மூலமாகக் கடவுள் நிபந்தனைகள் விதித்துள்ளார் என்பதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உட்கார்ந்துதான் சிறு நீர் கழிக்க வேண்டும் என்பதுவும், ஒரே ஒரு முறை நபிகள் நின்று கொண்டே சிறுநீர் கழித்து ஒரு exceptional clause ஏற்படுத்தியதையும் கேள்விப்பட்டதுண்டு. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: அன்றைய அராபியர் அணிந்திருந்த லூசான ஆடை, அங்கே திறந்த வெளியில் அடிக்கக் கூடிய வலுவான காற்று - இவையெல்லாமே உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதை புத்திசாலித்தனமான ஒரு விஷயமாக ஆக்கியிருக்கும். ஆனால் இன்று இருக்கும் public water closet-களில் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க அமைக்கப் பட்டிருக்கும் கழிப்பறைகளில், நாம் அணியும் இறுக்கமான உள்ளாடையும், அதற்கு மேலணியும் ஜீன்ஸும் நம்மை உட்கார அனுமதிக்குமா என்று யோசியுங்கள். இப்படி அந்தக் காலத்துக்குப் பொருந்திய அப்போதைய நடைமுறைகளைக் காலாகாலத்துக்கும் பொருத்தமானதாகவும் எங்கள் புத்தகங்களில் சொல்லப்பட்டு விட்டதால் அதைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பதும் முறையா என்ற கேள்வி எனக்கு. அதோடு ஏதோ ஒரு காலகட்டத்துக்கும், ஒரு நாட்டின் அப்போதைய பழக்க வழக்கங்களுக்கும் சரியாக இருந்த விஷயங்களை பொதுவாக எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஆக்குவதாலுமே no religion is universal என்ற விவாதத்தை என் பதிவு 68; பத்தி: 9-ல் வைத்துள்ளேன்.
பின்னூட்டங்கள் மிக நீளமாகச் சென்று விட்டன. கோவி.கண்ணன் பொறுத்துக் கொள்வாராக :)
தருமி அவர்களின் கேள்விகளுக்கு என் பதிவிலேயே விரைவில் பதில் அளிக்கிறேன்.
தருமி ஐயா, நண்பர்கள் ஜலாலுதின், நல்லடியார் மற்றும் பின்னூட்டமிட்ட அனைவர்களுக்கும்,
நான் இதை மதவிவாதம் செய்ய எழுதவில்லை, நான் தொட்டு இருப்பது பெளதீகப் பொருள்கள் சூனியத்திலிருந்து தோன்ற சாத்தியமா இல்லையா என்பது பற்றிதான். ஆனால் விவாதம் மத நம்பிக்கையைக் குறித்த (குறிப்பாக இஸ்லாம் தொடர்பான) கேள்வியாகவும் பதிலாகவும் செல்வதால் மேலும் இதைப் பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை. மதம் தொடர்புடன் கூறப்பட்டுள்ளவைகள் முழுக்க முழுக்க நம்பிக்கைச் சார்ந்தவைகள். சொல்லப்படுபவை நம்பிக்கை என்ற அளவில் எடுத்துக் கொண்டு செல்லவேண்டி இருக்கிறது. நம்பிக்கை குறித்து விவாதம் செய்யும் போது அவை முடிவுக்கு வராது.
இதுவரை நடந்த விவாதங்கள் கருத்துப்பரிமாற்றம் என்ற அளவில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அனைவரும் உணருவோம்.
புரிந்துணர்வோடு அடுத்த சிந்தனை பதிவுகளில் தொடர்வோம்.
கோவியாரே! இந்த பதிவின் பின்னூட்டத்தொடரும்... படைப்புத் தொழிலும் ஒன்று என்று நினைத்துதான் ஆணுறையின் அவசியத்தைப் பற்றி எழுதினீர்களா?
தருமி அவர்களின் கேள்விக்கான பதில்..பழிதீர்த்தலும் மன்னித்தலும்
கருத்துரையிடுக