பெயர் : அ.நட. செயச்சந்திரன் B.Sc., A.M.I.E.R.E.(LOND).,
புனைப் பெயர் : ஞானவெட்டியான், வாழும் சித்தர்
வயது : சித்தர்களுக்கு வயது இல்லையாம் :)
வசிக்கும் இடம் : கதவுகளுக்கு உறுதியை உறுதி செய்யும் தரும் ஊர் திண்டுக்கல், தற்பொழுது வசிப்பது கோவை
தொழில் : வங்கி உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்
துணைத் தொழில் : கல்வி உதவி சேவை அமைப்பு மற்றும் சித்தர் தத்துவங்களை எளிமை படுத்துதல்
அண்மைய சாதனை : கோவைக்கு இடம் பெயர்ந்து ஓய்வு எடுத்துவருவது
நீண்ட நாளைய சாதனை : பெரிய அளவில் சித்தர் பாடல்கள், மற்றும் பல ஆன்மிகம் தொடர்புடையவற்றை பதிவில் தொகுத்து வைத்திருக்கிறார்
வாழ்நாள் சாதனை : 95 வயது தந்தைக்கு இன்றும், அடக்கமான மகனாகவே வாழ்ந்து தனக்கு பணிவிடை செய்ய ஆள் தேடும் வயதில் அவருக்கு பணிவிடை செய்துவருவது ( அவரது தந்தை - திரு.அ.நடராசன். B.A (Hons). ஓய்வுபெற்ற மாவட்டத் தண்டல் நாயகம், 95 வயது முதியவர், திருச்சியில் வசிக்கிறார்)
பிடித்த பதிவர்கள் : எல்லோரையும்
பிடித்தது : விரலிடுக்கில் வெண் குழல்
அண்மைய எரிச்சல் : விரல் வலி, அதனால் பதிவு எழுத முடியாமல் இருப்பது, (அப்படியும் விரல் வலியை பொருட்படுத்தாது அவ்வப்போது எழுதி வருகிறார்)
பதிவுகள்:
ஞானவெட்டியானின் ஞானவேள்வி
குறவஞ்சி
சித்தன் (புதியது)
(100 விழுக்காடு ஆன்மீகம், கொஞ்சம் தத்துவ பாடல்கள் !
வாழ்நாள் சாதனை : அநுமன் துதி, அம்மை ஆயிரம், அரன் ஆயிரம், ஆன்மிகம், கட்டுரைகள், கந்தர் கலிவெண்பா, சித்தர் இலக்கியம், சிவ வாக்கியர் பாடல், ஞான முத்துக்கள், ஞான ரத்தினக் குறவஞ்சி, ஞானக் குறள், ஞானம் எட்டி, ஞானவேள்வி, தமிழமுது, தாகி பிரபம், திருவாசகம், பிரபுலிங்க லீலை, மாலியம், விவேக சிந்தாமணி, வேண்டல் 108, தமிழ் இணையம், தமிழ் இணையம் இன்னும் பல வரும்காலத்தினரின் பயன்பாட்டுக்காக எழுதி தொகுத்தது
அடையாளம் : ம.பொ.சி மீசை
பின்குறிப்பு : இத்துடன் பயோடேட்டா தொகுப்பு தற்காலிகமாக நிறைவுறுகிறது !
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
7 கருத்துகள்:
அவ்வளவு தானா நீங்கள் சந்தித்தப் பெரியார்கள்?! அடுத்து நீங்கள் சந்தித்த இளையார்களைப் பற்றி எழுதுவீர்கள் என்று எண்ணினேன். :-)
ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டீங்க போல இருக்கே
//குமரன் (Kumaran) said...
அவ்வளவு தானா நீங்கள் சந்தித்தப் பெரியார்கள்?! அடுத்து நீங்கள் சந்தித்த இளையார்களைப் பற்றி எழுதுவீர்கள் என்று எண்ணினேன். :-)
//
நல்ல வேளை வந்தீர்கள் குமரன், தனி மின் அஞ்சல் தான் அனுப்பலாம் என்றிருந்தேன். கீதா அம்மா மற்றும் வல்லி அம்மா இன்னும் பல பெரியவர்களைப் பற்றி எனக்கு மிகுந்து தெரியாது, அவர்களைப் பற்றிய பயோடேட்டாவை நீங்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ள இருந்தேன், செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
//'டொன்' லீ said...
ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டீங்க போல இருக்கே
11:48 AM, October 05, 2008
//
தெரிந்த வரையில் தான் இன்னும் டிபிஆர் ஜோசப் ஐயா பற்றி எழுதவில்லை, ஓரளவு அவரைப் பற்றி தெரியும் என்றாலும் அவரை சந்தித்தப் பிறகு எழுதுவேன். டிவி இராதாகிருஷ்ணன் ஐயாவை சந்திக்கவில்லை என்றாலும் அவரது இலக்கிய பணிகளை எடுத்துச் சொல்ல வேண்டியது மிகத் தேவையான ஒன்றாக நினைத்தே அவரது அனுமதி இல்லாமல் கேட்காமல் எழுதினேன். அவரை சந்தித்தப் பிறகு விவரமாகவே எழுதுவேன்.
//புதிய வார்ப்பு உரு(ப்ளாக்கர் டெம்ப்ளேட்
) மாற்றி இருக்கிறேன்.//
நன்றாக உள்ளது, இன்னும் மெருகேற்றுங்கள். மன்னிக்கவும் இந்த பதிவிற்கு சம்மந்தம் இல்லை
இவர் பதிவுகள் என்னறிவுக்கு கொஞ்சம் அதிகம் என்பதால்,புரிந்தாலும் புரியாவிட்டாலும் படிப்பேன்.
பலர் இவர் பதிவுகளை படிக்கவில்லையோ என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.
வணங்குவதற்குரிய அய்யா திரு.செயச்சந்திரன் அவர்களுக்கு பணிவான வணக்கம். தங்கள் நூல்கள் அனைத்தும் எமக்கு வேண்டும். குறிப்பாக திருவாசகம் மற்றும் சித்தர் இலக்கியம், சிவ வாக்கியர் பாடல், ஞான முத்துக்கள், ஞான ரத்தினக் குறவஞ்சி, ஞானக் குறள், ஞானம் எட்டி, ஞானவேள்வி, தமிழமுது, திருவாசகம், விவேக சிந்தாமணி, வேண்டல் 108. உங்களை எப்படி அய்யா சந்திப்பது? அலைபேசி எண் தருவீர்களா? அடியேன் பண்டிட் பரமேசுவரன், காவல் உதவி ஆய்வாளர், சேலம். 9786463737.
கருத்துரையிடுக