பின்பற்றுபவர்கள்

19 ஜூன், 2008

சந்திரமுகி துர்காஷ்டமி மலேசியா மாரியாத்தா .... காப்பாத்துங்க...!

ஐயையோ......காப்பாத்துங்க...... ஒரு சின்ன பொண்ணு சந்திரமுகியாக மாறி சிங்கையில் பலரைப் பார்த்து 'லக்க...லக்க' சொல்லுது.

பல்லுக்கு ஆப்புரேசன் செய்யப் போகுதாம். ஏம்மா ? யாராவது பார்த்து பயந்துட்டாங்களான்னு கேட்டேன்.

'அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு பல்லு கண்ணா பின்னான்னு கடவாய்க்கு பின்னால இருந்து தொல்லைக் கொடுக்குது...அதுக்குதான் ஆப்புரேசன்' என்றது

"இதையெல்லாம் என்னமோ சடங்கு மாதிரி ஊரெல்லாம் சொல்லி ஏன் இம்சை படுத்துறே ? எதாவது மொய் வைக்கனுமா"



"இது இம்சையா ? என் மேல அன்பே இல்லை...எனக்கு கஷ்டம்னு சொன்னா...நீங்களெல்லாம் கண்ணீர் வடிப்பிங்கன்னு சொன்னேன்....பாருங்க என்னைய சொல்லனும்" அலுத்துக் 'கொல்கிறது'

இந்த கொடுமையை காது கொடுத்து கேட்டவர்கள் யார் யார் தெரியுமா ? ஜெகதீசன், பாரி.அரசு, கே.ஆர்.எஸ் இன்னும் எத்தனை பேருன்னு தெரியவில்லை. டிபிசிடி இந்தியா போய் இருப்பதால் அவன் மட்டும் தப்பிச்சிருக்கான்.

இதவிட கொடுமை என்ன வென்றால்...பல்லு ஆப்புரேசனக்கு அந்த அம்மாவுக்கு எல்லோரும் ட்ரீட் கொடுக்கனுமாம்....ரவா தோசை வேண்டுமாம்.....வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு பக்கத்தில் வந்து சத்தமாக வீணை வாசிப்பேன் என்று பயமுறுத்துகிறது

கேள்விப்பட்ட பல நண்பர்கள் சாட்டில் இருந்து ஒளிந்து கொண்டு ஆன் லைனில் இருக்கிறதா என்று பயந்தே வெளியில் வருகிறார்கள் .... இன்விசிபில் மோடில் இருந்து அவ்வப்போது சந்திரமுகியாக வந்து பயமுறுத்து.

யார் யாருக்கு துர்காஷ்டமி எப்ப ஆரம்பிக்கும்னு தெரியலை......சந்திரமுகியிடம் இருந்து காப்பாற்ற சரவணனால் (குசும்பன்) தான் முடியும் போல இருக்கு.

என்ன கொடுமை சரவணா.......காப்பாத்து !

இந்த பதிவுக்கு கும்மி வரவேற்கப்படுகின்றன......... :)

51 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

வடுவூர் குமார் அண்ணன் தான் ரொம்ப நல்லவராம் - சந்திரமுகி சர்டிபிகேட்

:)

வடுவூர் குமார் சொன்னது…

ஹா! ஹா!
வாம்மா! மலேசிய மாரியாத்தா.
அங்கு ரவா தோசையா??

வடுவூர் குமார் சொன்னது…

போச்சுடா, சான்றிதழ் வேறா? எங்கிட்ட சொல்லவேயில்லையே!! :-)

லக்கிலுக் சொன்னது…

//இந்த பதிவுக்கு கும்மி வரவேற்கப்படுகின்றன......... :)//

அனானி-அதர் ஆப்ஷன்களை இழுத்து மூடிட்டு கும்மிக்கு ஆளு கூப்பிட்டீங்கன்னா எப்படி? பின்னூட்ட பாலா கூட வரமாட்டாரு :-)

மங்களூர் சிவா சொன்னது…

/
எனக்கு கஷ்டம்னு சொன்னா...நீங்களெல்லாம் கண்ணீர் வடிப்பிங்கன்னு சொன்னேன்....பாருங்க என்னைய சொல்லனும்" அலுத்துக் 'கொல்கிறது'
/

ஆமாம்ணே அலுத்து 'கொல்லுகிறது'. பாதிக்கப்பட்டவங்க இந்தியாவுலயும் இருக்கோம்.

மங்களூர் சிவா சொன்னது…

குசும்பன் அண்ணாத்த நீங்கதான் இதுக்கு எதாச்சும் செஞ்சு காப்பாத்தணும் எங்களை எல்லாம்.

:)))

கோவி.கண்ணன் சொன்னது…

லக்கி,

உங்க விருப்பத்தை நிறைவேற்றீயாச்சு
:)

நாமக்கல் சிபி சொன்னது…

ஐயய்யோ!

எப்படி வலிக்கப் போகுதோ?
குழந்தை எப்படி அழப்போகுதோ தெரியலையே?


இறைவா! வீணை வாசிப்பில் இருந்து எங்களைக் காப்பாற்று!

எதிரிகளை நாங்கள் பார்த்துக் கொல்கிறோம்!

பெயரில்லா சொன்னது…

என் ஸ்டூடண்டு நல்லாவே வாசிப்பா!

வீ...ணை.. அப்படின்னு எழுத்துக் கூட்டி அழகா வாசிப்பா!

பெயரில்லா சொன்னது…

எங்க ஹவுஸ் ஓனர் பாட்டுப் பாடி தொல்லை தரான்!

எங்க வீட்டுக்கு ஒரு நாள் வந்து வீணை வாசிக்க முடியுமா குழந்தே!

பெயரில்லா சொன்னது…

மே ஐ கம் இன்?

பெயரில்லா சொன்னது…

அப்போ அக்கா இனிமே பல் பிடுங்கப் பட்ட பாம்புன்னு சொல்லுங்க!

பரிசல்காரன் சொன்னது…

என்னங்க நடக்குது இங்கே.. துண்டு போட்டுக்கறேன்.. அப்பால வாரேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...


ஆமாம்ணே அலுத்து 'கொல்லுகிறது'. பாதிக்கப்பட்டவங்க இந்தியாவுலயும் இருக்கோம்.

8:24 PM, June 19, 2008
//

சிவா,

இதுதான் எல்லை தாண்டிய பயங்கரவாதம். முறியடிக்கனும்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
குசும்பன் அண்ணாத்த நீங்கதான் இதுக்கு எதாச்சும் செஞ்சு காப்பாத்தணும் எங்களை எல்லாம்.

:)))
//


ஒரு பல்லு புடுங்குற செய்தியைச் சொல்லி ஆத்தா...நம்மிடம் வாழ்வே மாயம் படம் பார்க்கும் எபெக்ட்டு வரனும்னு எதிர்பார்க்குது. கொடுமைதானே

பெயரில்லா சொன்னது…

என்ன மொத்தமா புடுங்கிடலாமா?

அபி அப்பா சொன்னது…

கோவி! வர வர உங்க உள்குத்துக்கு அளவே இல்லாம போச்சு!! டாக்டருக்கே பல்பிடுங்கின கதை ஓடிகிட்டு இருக்கு தமிழ்நாட்டிலே!! அது சம்மந்தமா நேரிடையா பதில் போடாம இப்படி போட்டா என்ன அர்த்தம்!!

குழந்தைக்கு பல் பிடுங்கினா அப்பாவுக்கு ரொம்ப வலிக்கும் அதனால பார்த்து(அன்பா) மெதுவா பிடுங்கறோம் சரியா!!!

(சிபி ஓக்கே!!!)

நிஜமா நல்லவன் சொன்னது…

உள்ளே வரலாமா?

நிஜமா நல்லவன் சொன்னது…

///இந்த பதிவுக்கு கும்மி வரவேற்கப்படுகின்றன......... :)///



///Your comment has been saved and will be visible after blog owner approval. ///

எப்படி?

நிஜமா நல்லவன் சொன்னது…

அப்பாவிய பகைச்சுக்காதீங்கப்பா!

நிஜமா நல்லவன் சொன்னது…

///பல்லுக்கு ஆப்புரேசன் செய்யப் போகுதாம். ஏம்மா ? யாராவது பார்த்து பயந்துட்டாங்களான்னு கேட்டேன்.//

குட் கொஸ்டின்.

நிஜமா நல்லவன் சொன்னது…

//'அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு பல்லு கண்ணா பின்னான்னு கடவாய்க்கு பின்னால இருந்து தொல்லைக் கொடுக்குது...அதுக்குதான் ஆப்புரேசன்' என்றது///


நாங்கெல்லாம் கையாலேயே பல்லை பிடுங்குவோம். இதுக்கு ஆப்புரேஷன் வேறயா? என்ன கொடும அப்பாவி இது?

நிஜமா நல்லவன் சொன்னது…

///"இதையெல்லாம் என்னமோ சடங்கு மாதிரி ஊரெல்லாம் சொல்லி ஏன் இம்சை படுத்துறே ? எதாவது மொய் வைக்கனுமா"///



என்ன இது சின்னபுள்ள தனமா கேள்வி கேட்டுகிட்டு. தங்கச்சிக்கு ஒண்ணுன்னா எல்லா செலவும் அண்ணன் தானே செய்யணும்:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நிஜமா நல்லவன் said...

நாங்கெல்லாம் கையாலேயே பல்லை பிடுங்குவோம். இதுக்கு ஆப்புரேஷன் வேறயா? என்ன கொடும அப்பாவி இது?

9:32 AM, June 20, 2008
//

நிந,
மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு போவது போல பெரிய பில்டப் கொடுக்குது.... கொடுமை தானே.

கோவி.கண்ணன் சொன்னது…

//நிஜமா நல்லவன் said...


என்ன இது சின்னபுள்ள தனமா கேள்வி கேட்டுகிட்டு. தங்கச்சிக்கு ஒண்ணுன்னா எல்லா செலவும் அண்ணன் தானே செய்யணும்:)

9:33 AM, June 20, 2008
//

சொத்தையே கூட எழுதி வையுங்க...ஒரு பய கேட்பானா ?

நிஜமா நல்லவன் சொன்னது…

///"இது இம்சையா ? என் மேல அன்பே இல்லை...எனக்கு கஷ்டம்னு சொன்னா...நீங்களெல்லாம் கண்ணீர் வடிப்பிங்கன்னு சொன்னேன்....பாருங்க என்னைய சொல்லனும்" அலுத்துக் 'கொல்கிறது'///


ரெண்டுநாளா இங்க பெய்த மழையைவிட நாங்க வடிச்ச கண்ணீர் தான் அதிகம்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நிஜமா நல்லவன் said...


///Your comment has been saved and will be visible after blog owner approval. ///

எப்படி?
///

மாடுரேசன் வைக்கவில்லை என்றால் சில மாடுகள் மேஞ்சிட்டு போய்டும்.

நிஜமா நல்லவன் சொன்னது…

///இந்த கொடுமையை காது கொடுத்து கேட்டவர்கள் யார் யார் தெரியுமா ? ஜெகதீசன், பாரி.அரசு, கே.ஆர்.எஸ் இன்னும் எத்தனை பேருன்னு தெரியவில்லை.///


நல்லவேளை என்னோட காது பத்திரமா இருக்குபா.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரெண்டுநாளா இங்க பெய்த மழையைவிட நாங்க வடிச்ச கண்ணீர் தான் அதிகம்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

9:35 AM, June 20, 2008
//

எல்லோரும் நல்லா வேண்டிக் கொள்ளுங்க...இன்னிக்குதான் ஆப்ரேசனாம்.....

நிஜமா நல்லவன் சொன்னது…

//டிபிசிடி இந்தியா போய் இருப்பதால் அவன் மட்டும் தப்பிச்சிருக்கான்.///

நீங்களே ஐ டி டி போட்டு கான்பிரன்ஸ் கொடுத்துடுங்க. அவரு மட்டும் தப்பிச்சா நல்லாவா இருக்கும்?

நிஜமா நல்லவன் சொன்னது…

///இதவிட கொடுமை என்ன வென்றால்...பல்லு ஆப்புரேசனக்கு அந்த அம்மாவுக்கு எல்லோரும் ட்ரீட் கொடுக்கனுமாம்....ரவா தோசை வேண்டுமாம்.....///


முதல்ல வாய திறக்க முடியுதான்னு கேளுங்க. அப்புறம் ரவா தோசை வாங்கலாம்.

நிஜமா நல்லவன் சொன்னது…

///வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு பக்கத்தில் வந்து சத்தமாக வீணை வாசிப்பேன் என்று பயமுறுத்துகிறது///



அய்யய்யோ என்ன கொடும இது? இதுக்கு ரவா தோசையே வாங்கி கொடுத்திடலாம்.

நிஜமா நல்லவன் சொன்னது…

///கேள்விப்பட்ட பல நண்பர்கள் சாட்டில் இருந்து ஒளிந்து கொண்டு ஆன் லைனில் இருக்கிறதா என்று பயந்தே வெளியில் வருகிறார்கள் .... ///

அடடா இதான் காரணமா? என்ன எல்லோரும் ஒளிஞ்சி இருக்காங்களேன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.

நிஜமா நல்லவன் சொன்னது…

///இன்விசிபில் மோடில் இருந்து அவ்வப்போது சந்திரமுகியாக வந்து பயமுறுத்து///

அதென்ன அவ்வப்போது? எப்போதுமே அப்படி தானே?

நிஜமா நல்லவன் சொன்னது…

//யார் யாருக்கு துர்காஷ்டமி எப்ப ஆரம்பிக்கும்னு தெரியலை......//


நான் இங்க கும்மி அடிச்சதால எனக்கு தான் முதல்ல ஆரம்பிக்கு போல. எதுக்கும் நான் கொஞ்ச நாள் தலைமறைவு ஆகிடுறேன்:)

நிஜமா நல்லவன் சொன்னது…

///சந்திரமுகியிடம் இருந்து காப்பாற்ற சரவணனால் (குசும்பன்) தான் முடியும் போல இருக்கு.///



குசும்பனே ரொம்ப குழப்பத்திலும் வருத்தத்திலும் இருக்காரு. வேற யாராவது தான் காப்பாத்தனும்:)

நிஜமா நல்லவன் சொன்னது…

///இந்த பதிவுக்கு கும்மி வரவேற்கப்படுகின்றன......... :)///


அப்ப வேற பதிவுல கும்மி அடிக்க கூடாதா?

நாமக்கல் சிபி சொன்னது…

//ரெண்டுநாளா இங்க பெய்த மழையைவிட நாங்க வடிச்ச கண்ணீர் தான் அதிகம்னு மட்டும் சொல்லிக்கிறேன்.//

ஆமாம்!

நிஜமா நல்லவன் சொன்னது…

///கோவி.கண்ணன் said...
வடுவூர் குமார் அண்ணன் தான் ரொம்ப நல்லவராம் - சந்திரமுகி சர்டிபிகேட்

:)///

சந்திரமுகி சொன்னா சரியாதான் இருக்கும்.

நிஜமா நல்லவன் சொன்னது…

///மங்களூர் சிவா said...
/
எனக்கு கஷ்டம்னு சொன்னா...நீங்களெல்லாம் கண்ணீர் வடிப்பிங்கன்னு சொன்னேன்....பாருங்க என்னைய சொல்லனும்" அலுத்துக் 'கொல்கிறது'
/

ஆமாம்ணே அலுத்து 'கொல்லுகிறது'. பாதிக்கப்பட்டவங்க இந்தியாவுலயும் இருக்கோம்.///


:))

நிஜமா நல்லவன் சொன்னது…

///மங்களூர் சிவா said...
குசும்பன் அண்ணாத்த நீங்கதான் இதுக்கு எதாச்சும் செஞ்சு காப்பாத்தணும் எங்களை எல்லாம்.

:)))///



அண்ணே உங்களோட கொலைவெறி கவுஜைல இருந்து எங்களை காப்பாத்தினவங்க கிட்ட சொல்லலாமா?

நிஜமா நல்லவன் சொன்னது…

///நாமக்கல் சிபி said...
ஐயய்யோ!

எப்படி வலிக்கப் போகுதோ?
குழந்தை எப்படி அழப்போகுதோ தெரியலையே?


இறைவா! வீணை வாசிப்பில் இருந்து எங்களைக் காப்பாற்று!

எதிரிகளை நாங்கள் பார்த்துக் கொல்கிறோம்!///

ஓராயிரம் தடவை வழிமொழிகிறேன்.

நிஜமா நல்லவன் சொன்னது…

///பரிசல்காரன் said...
என்னங்க நடக்குது இங்கே.. துண்டு போட்டுக்கறேன்.. அப்பால வாரேன்..///



எல்லா பதிவிலும் துண்டு போட்டுட்டு போறீங்க. நீங்க என்ன துணிக்கடை வச்சி இருக்கீங்களா?

நிஜமா நல்லவன் சொன்னது…

////கோவி.கண்ணன் said...
//மங்களூர் சிவா said...
குசும்பன் அண்ணாத்த நீங்கதான் இதுக்கு எதாச்சும் செஞ்சு காப்பாத்தணும் எங்களை எல்லாம்.

:)))
//


ஒரு பல்லு புடுங்குற செய்தியைச் சொல்லி ஆத்தா...நம்மிடம் வாழ்வே மாயம் படம் பார்க்கும் எபெக்ட்டு வரனும்னு எதிர்பார்க்குது. கொடுமைதானே///


:))

நிஜமா நல்லவன் சொன்னது…

///அபி அப்பா said...
கோவி! வர வர உங்க உள்குத்துக்கு அளவே இல்லாம போச்சு!! டாக்டருக்கே பல்பிடுங்கின கதை ஓடிகிட்டு இருக்கு தமிழ்நாட்டிலே!! அது சம்மந்தமா நேரிடையா பதில் போடாம இப்படி போட்டா என்ன அர்த்தம்!!///



எப்படி எல்லாம் யோசிக்குறாங்க?

நிஜமா நல்லவன் சொன்னது…

ம்ம் ஒருத்தரோட வேதனை உங்களுக்கு பதிவு போட்டு கும்மி அடிக்கிற அளவுக்கு சந்தோஷமா இருக்கா? நல்லா இருங்கப்பா. பதிவ படிச்சி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் கிளம்புறேன். அப்படியே நல்ல விதமா ஆப்புரேஷன் பண்ணி குணமடைய ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நிஜமா நல்லவன் said...
ம்ம் ஒருத்தரோட வேதனை உங்களுக்கு பதிவு போட்டு கும்மி அடிக்கிற அளவுக்கு சந்தோஷமா இருக்கா? நல்லா இருங்கப்பா. பதிவ படிச்சி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் கிளம்புறேன். அப்படியே நல்ல விதமா ஆப்புரேஷன் பண்ணி குணமடைய ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன்.
//

நிஜமா நல்லவன்,

கும்மிக்கு நன்றி, உங்கள் சேவையை நினச்சாலே கண்ணுல தாரை தாரையா வருது. அப்படியே நம்ம அரசு அண்ணா பதிவுல போய் தொடருவோம். இங்ஙன போதும் !

:)

பெயரில்லா சொன்னது…

label:நகைச்சுவை ,மொக்கை//

என் பல்லு வலி உங்களுக்கு எல்லாம் காமெடியா போச்சு இல்ல :((
நான் ஒரு 3 பேருக்கிட்ட மட்டும் சொன்னால்,நீங்க மூனு பேரும் 3000 பேருக்கு போஸ்ட் போட்டு சொல்லியாச்சு.நல்ல கும்மி எடுத்துட்டீங்க இல்ல..போதும் நிறுத்திக்லாம்..ரொம்ப வலிக்குது..என் பல்லும் மனசும் :((

ஜெகதீசன் சொன்னது…

:(
இதைப்பத்தி யார் பதிவு போட்டாலும் ஆத்தா எனக்கு கால் பண்ணித் திட்டுறாங்க... உங்க பங்குக்கு நீங்களும் திட்டு வாங்கித் தரீங்க
:(

இந்தப் பதிவுக்கு என் கடும் கண்டனங்கள்!!

TBR. JOSPEH சொன்னது…

யார்ங்க இந்த நிஜமா நல்லவன்? உண்மை தமிழனுக்கு போட்டியா?

பெயரில்லா சொன்னது…

என்ன இங்க ஒரே ரணகளமா இருக்குது! :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்