பின்பற்றுபவர்கள்

5 ஜூன், 2008

அன்றாடம் காய்ச்சும் அர்சகர்களுக்கு சென்னை அண்ணா நகரில் 50 லட்சம் மதிப்புள்ள வீடு... !

முகச்சவரத்திற்கு சென்று ரூபாய் 1000/- கொடுத்ததையும், மேலும் டிப்ஸ் கொடுத்ததைப் பற்றியும் ஒரு இடுகை எழுதி இருந்தேன். அதற்கு எதிர்வினை போல பதிவர் டோண்டு இராகவன் ஒரு பதிவிட்டு இருந்தார். டிப்ஸ் கொடுப்பது பிச்சைக்காரர்கள் ஆக்குகிறதாம்.. அவர் சொன்னது ஓரளவுக்குச் சரிதான் என்றாலும், எனது கேள்வியாக 'கோவிலுக்கு உள்ளே கெஞ்சாத குறையாக வாங்கப்படும் தட்டுகளில் பெறப்படும் டிப்ஸ் பற்றி என்ன நினனக்கிறீர்கள் ?' என்றேன். அதற்கு மழுப்பலான பதிலே வந்திருக்கிறது. அர்சகர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுக்கிறார்களாம். அரசு பிச்சைக்காரனாக ஆகிவிட்டதாம், புள்ளி விபரமெல்லாம் சொல்லி இருக்கிறார்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் எந்த அர்சகரும் குடிசையில் வசிக்கவில்லை. மொபட்டில்லாத அர்சகரே சென்னையில் இல்லை. சிறு நகரங்களில் தான் சைக்கிளில் வந்து போகும் அர்சகர்களை பார்த்து இருக்கிறேன். மேலே முகச் சவரம் சென்று வந்த தகவலுடன் கூடுதலாக ஒரு தகவல், முகச்சவரம் செய்துவிட்டு அதே அண்ணா நகரில் பைக்கில் வந்த போது என் நண்பர் ஒரு ப்ளாட் வீட்டைக்காட்டினான், 'இதோ பார்...இந்த வீட்டில் தான் எங்க வீட்டுக்கு புதுமனை புதுவிழாவுக்கு பூஜை செய்ய வந்த அர்சகர் வசிக்கிறார், சொந்த வீடாம்.. ஒரு விசிட்டுக்கு 2000 முதல் 5 ஆயிரம் வாங்குவார்...அடுத்த இடத்தில் அப்பாய்ன்மெண்ட் இருக்குன்னு சட்டுன்னு கிளம்புவார்...மாசத்துக்கு எப்படியும் 20 வீட்டிலாவது அவரை கூப்பிடுவார்கள், எதோ ஒரு கோவிலில் வேறு அர்சகராக இருக்கிறாராம்', எனக்கு சட்டென்று 'பேசமல் இதுநம்மாளு படத்தில் வருவது போல் ஒரு பூணூல் தயார் செய்து தொழிலை மாற்றிக் கொள்ளலாமா ?' என்று சலனம் கூட ஏற்பட்டது.

அதில் எனதருமை வீஎஸ்கே ஐயா, போட்டிருக்கும் பின்னூட்டம் உண்மையிலேயே சிரிப்பை வரவழைக்கிறது,

*************
"தட்டில் காசு போடவில்லையென்று எந்த அர்ச்சகரும் விபூதி குங்குமம் கொடுக்க மறுப்பதில்லை.

இது ஒரு திசை திருப்பும் முயற்சி.

இந்த அழகில் ஆதரவு ஓட்டு வேறு.

அநியாயமாகப் பணம் பிடுங்கும் சவரக்கடைத் தொழிலாளியும், அன்றாடங்காய்ச்சி அர்ச்சகரும் ஒன்றா?"

*************

- என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஐயா, அர்சகரும் நாவிதரும் ஒன்று இல்லை என்று தானே காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்,

எடுப்பது பிச்சை என்றாலும், பெருமாள் கோவில் எடுத்தால் அதற்கு பெயர் ஈகையா ?

தட்டில் காசு போடாவிட்டாலும் விபூதி கொடுப்பார்கள், 1000 ரூபாய் நோட்டைப் போடுங்கள், கருவரைக்கே அழைத்துச் சென்று மாலை போட்டு, பரிவட்டம் கட்டி அனுப்புவார்கள். காசுக்கு தகுந்த வேலை என்று நாவிதர்களும் அதே போன்று தரமான சேவை செய்கிறார்கள். இதில் அர்சகர் என்ன ? நாவிதன் என்ன ?

சென்னை மாநகரில் ப்ளாட்பாரம் பக்கத்தில், பாலத்திற்கு அடியில், கூவம் நதிக்கரையில் வசிக்கும் ஏழை அர்சகர் எவரும் இருந்தால் காட்டுங்கள் அன்றாடம் 'காய்ச்சும்' அர்சகரை தெரிந்து கொள்கிறேன். அன்றாடம் காய்ச்சும் அர்சகர்கள் எனக்கு தெரிந்து மடப்பள்ளியில் புளியோதரைக்கு புளிக்காய்ச்சுபவர்களாகத்தான் இருக்கிறார்களே அன்றி வேறு எதைக் காய்ச்சுகிறார்கள் என்று தெரியவில்லை. அர்சகர்வீட்டில் கஞ்சு காய்ச்சுக் குடித்ததாகக் கூட நான் கேள்விப்பட்டதில்லை.

ஒரு பழமொழி உண்டு....

'பறையர்களில் பரம்பரை பணக்காரர்கள் இல்லை...பார்பனர்களில் பரம ஏழைகள் இல்லை'

கொஞ்சம் கொஞ்சம் தவறினாலும் பழமொழியில் 90 விழுக்காடு சரிதான்

அர்சகருக்கு கொடுப்பது காணிக்கையாம்...நாவிதருக்கு கொடுப்பது டிப்ஸாம்...பிச்சையாம்.. கேட்பதற்கு ஆண்டவன் இல்லை என்ற நாத்திக அவ நம்பிக்கைதான் போலும் !
:)

அதே முகச்சவரம் மற்றும் உடம்பு பிடி ... லேசாக தலைமுடி வெட்டல் ... முகத்துக்கு பவுடர் எல்லாம் போட்டு வெறும் 13 ரூபாய் தான் எங்கள் ஊர் சலூனில் வாங்கினார்கள். நானே விரும்பி கூடுதலாகவே அங்கும் கொடுத்தேன்.

46 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

//எங்க வீட்டுக்கு புதுமனை புதுவிழாவுக்கு பூஜை செய்ய வந்த அர்சகர் வசிக்கிறார், //

எல்லாத்தையும் விடுங்க. முதல்ல உங்க நண்பருக்கு கொஞ்சம் வேப்பிலை அடிங்க. இது போன்ற ஆட்களால்தான் அர்ச்சகர்கள் மாடி வீடும் , மோட்டாருமாக அலைகிறார்கள். இவர் வந்து மணியாட்டினால்தான் வீடு நல்லா இருக்குமா? கொடுமை.

முனியாண்டி கோவிலில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனப் பூசாரியைக் கொண்டு மணியட்டச் சொல்லி அவருக்கு காணிக்கை வழங்கலாம்.

***

தன்னை விட எளியோருக்கு உதவுவதில் தவறு இல்லை. டிப்ஸ், காணிக்கை எதுவாக இருந்தாலும். பாத்திரம் அறிந்து இட வேண்டும்.

Subbu சொன்னது…

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

Unknown சொன்னது…

கவுண்டமணி ஒரு படத்துல மரத்துக்கு மரம் உண்டியல் வச்சிட்டு காச எடுக்க முதல்ல நடந்தும் அப்புறம் சைக்கிள்லயும் அப்புறம் கார்லயும் வருவாரே அதே மாதிரி ஒரு ஐயர இங்கே சென்னை முகப்பேர்ல பாத்திருக்கேன். முதல்ல நடந்தே வந்தவன் 3 வருஷத்துக்குள்ள சைக்கிள் அப்புறம் டி.வி.எஸ் 50 அப்புறம் டி.வி.எஸ் சுசுக்கி சொந்த வீடு அப்படீன்னு வந்தான். இந்த வளர்ச்சி உழைக்கும் அந்த நாவிதனுக்கு சாத்தியமில்லை.
அந்த ஐயரு வரும்போது சிம்ரன் மாதிரி வந்தான். 3 வருசத்துல சகீலா மாதிரி ஆயிட்டான். அது வேற.

Unknown சொன்னது…

ஆமா நானும் சென்னைல பாக்கிறேன் இந்த குடுமி கோஷ்டி எல்லாம் சொல்லி வச்ச மாதிரி டி.வி.எஸ் product வண்டி தான் வாங்குறானுங்க ரொம்ப ரேஷ் ஆகத்தான் வண்டி ஓட்டுறானுங்க. அதான் என்னன்னு புரியல.

லக்கிலுக் சொன்னது…

கோவி கண்ணன் ஐயா,

இப்போவெல்லாம் கார்ப்பரேட் சாமியார் மாதிரி கார்ப்பரேட் அர்ச்சகர்களும் சென்னையில் பெருகிவிட்டார்கள் அய்யா. வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அலுவலகங்களுக்கு பூஜை செய்வதற்கு மட்டும் மாதத்துக்கு ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை அவர்களுக்கு மாதச்சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அய்யரும் பத்து கம்பெனிக்காவது வெள்ளிக்கிழமை பூஜை செய்கிறார்கள். அசால்ட்டாக ஐம்பது முதல் அறுபது ஆயிரம் வரை மாசத்துக்கு மந்திரம் சொல்லியே சம்பாதிக்கிறார்கள். இவ்வளவு சம்பாதிப்பவர்கள் ஏன் வீஎஸ்கே அய்யா சொன்னது மாதிரி அன்றாடம் காய்ச்சுகிறார்களோ தெரியவில்லை.

குசும்பன் சொன்னது…

//எங்கள் ஊர் சலூனில் வாங்கினார்கள். நானே விரும்பி கூடுதலாகவே அங்கும் கொடுத்தேன்.//

அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் ஊருக்கு 15 நாள் லீவில் போனீங்க, அதுல பாதி நாள் சலூன் கடையிலேயே போச்சு போல இருக்கே, இரண்டு கடை மட்டும்தானா? இல்லை இன்னும் இருக்கிறதா?

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நான் எழுதிய 'வேதம் புதிதல்ல' நாடகத்தில் ஒரு வசனம்.கோவில் அர்ச்சகரிடம் ஒரு நண்பர் கூறுவார்
"தட்டில காசு போடலேன்னா..வெறு
ம் விபூதி..கையில் தூக்கி எறியப்படும்.
5 ரூபாய் போட்டால் சிறிது பூவுடன் விபூதி,குங்குமம்
அதிகம் போட்டால்..சாமி கழுத்தில் இருக்கும் மாலை..ஆசாமி கழுத்துக்கு வந்திடும்.
நாட்டில அர்ச்சகர் தொழில் மாதிரி வேற தொழில் இல்ல..இங்கதான் எப்பேர்ப்பட்ட பணக்காரன் கையும்
பிரசாதம் வாங்க தாழ்ந்திருக்கும்..அர்ச்சகர் கை உயர இருக்கும்.
அப்பேர்ப்பட்ட தொழில் செய்யற நீங்க ஏன் உயர்ந்தவர்,தாழ்ந்தவர்னு பேதம் பார்க்கறீங்க?"
டிப்ஸ் என வாங்கப்படுவது கொடுக்கப்படுவதால்தானே.ஆதலினால் இதை ஒழிக்க வேண்டியது

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

மிக அருமையான பதிவு.

வீஎஸ்கே ஐயாவின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் எனக்கு திக்கென்றது, என்னதிது, இப்படியெல்லாம் எழுதுகிறாரே என்று.

சொல்லப் போனால், உழைப்பவர்களுக்கு கொடுக்கும் டிப்ஸ் தவறேயில்லை. தட்டில் போடும் பிச்சை தான் ஒழிக்கப்பட வேண்டும் !

Venkatesh சொன்னது…

--------------
"தட்டில் காசு போடவில்லையென்று எந்த அர்ச்சகரும் விபூதி குங்குமம் கொடுக்க மறுப்பதில்லை.
---------------

ஒரு முறை திருத்தனி சென்று வாருங்கள் அங்கு ரூ.10 போட்டால் தான் பாக்கட் விபூதி - குங்குமம் இல்லையென்றால் அடுத்த ஆளிடம் கேட்கச்சொல்கிறார்கள் இது என் சொந்த அனுபவம்.

வெங்கடேஷ்

dondu(#11168674346665545885) சொன்னது…

//அநியாயமாகப் பணம் பிடுங்கும் சவரக்கடைத் தொழிலாளியும், அன்றாடங்காய்ச்சி அர்ச்சகரும் ஒன்றா?"//

சவரக்கடை தொழிலாளி கூட உங்கள் விஷயத்தில் அனியாயமாக பணம் பிடுங்கியதாக நான் ஒப்பு கொள்ளவில்லை. இதில் உங்கள் ஏமாளித்தனம்தான் வெளிப்பட்டது. சவரத் தொழிலாளி புத்திசாலி.

கோவில் அர்ச்சகர் விஷயத்தில் நீங்கள் தட்டில் ஏதும் போடாமலேயே கூட வரலாம். ஒருவரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் மற்ற இடங்களில் உங்களை போன்றவர்கள் யோசியாது டிப்ஸ்களை அள்ளிவிடுவதால் அதை எதிர்ப்பர்க்கும் கலாசாரமும் வந்து விட்டது. அதே போல கோவில் விஷயத்தில் அர்ச்சகர்களை தட்டு தூக்கும் நிர்ப்பந்தத்தை செய்த அரசைத்தான் நான் குற்றம் சாட்டினேன்.

மற்றப்படி நீங்கள் குறிப்பிட்ட 50 லட்ச ரூபாய் பிளாட் சம்பந்தப்பட்ட புரோகிதர் (சாதாரணமாக அவர்கள் முழுநேர அர்ச்சகர்கள் இல்லை) வாங்குவது ரைட் ராயலாக பெறும் ஃபீஸ். டிப்ஸ் அதில் காலணாகூட இல்லை. அவர்கள் சர்வீசுக்கு டிமாண்ட் இருக்கிறது வாங்குகிறார்கள். பேசிய தொகைக்கு மேல் அவர்கள் வாங்க மாட்டார்கள். தொகை படியவில்லையென்றால் நீங்கள் கூப்பிடப் போவதில்லை, அவர்களும் வரப்போவதில்லை. தீர்ந்தது விஷயம்.

இப்போதெல்லாம் அர்ச்சகர் வேலையை விட்டு பெருமளவில் வெளிநடப்புகள் நடக்கின்றன. ஏனெனில் பணம் கட்டவில்லை அவ்வளவுதான். சந்தர்ப்பம் கிடைத்தால் கல்யாண, திவச காரியங்களுக்கு புரோகிதராகவோ, தலைமை புரோகிதருக்கு துணையாளராகவோ சென்று விடுகிறார்கள். இல்லாவிட்டால் சமையற்கார வேலை எடுத்து கேட்டரிங் என்றெல்லாம் முன்னேறுகிறார்கள். ஆகவே நிலைமை தேங்கிய குட்டைபோல இல்லாது, ஓடும் நதி நீரைப்போலத்தான் உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

பூணூல் போட்டு டிப்ஸ் வாங்குவது தட்சணை!
பூணூல் போடாதவன் வாங்குவது பிச்சை!

ஜெகதீசன் சொன்னது…

அவாள்லாம் தலைல இருந்து பிறந்தவா... அவா எது செஞ்சாலும் தப்பே இல்லை..
இந்த லோகத்துல இருக்குற எல்லாமே அவாளுக்குச் சொந்தமானது.. நம்ம தட்டுல காணிக்கை போடுறப்ப, அவா துட்ட அவாளுக்கே தரோம்... இதெப்படி பிச்சையாகும்?

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவில் அர்ச்சகர் விஷயத்தில் நீங்கள் தட்டில் ஏதும் போடாமலேயே கூட வரலாம். ஒருவரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் மற்ற இடங்களில் உங்களை போன்றவர்கள் யோசியாது டிப்ஸ்களை அள்ளிவிடுவதால் அதை எதிர்ப்பர்க்கும் கலாசாரமும் வந்து விட்டது. //

டோண்டு சார்,

உங்கள் பதிவிலேயே மறுமொழி இட நினைத்தேன்.

நீங்கள் சலூன் கடைக்குச் சென்று கண்ணாடியைப் பார்த்து தலைவாரி வந்தால் சலூன் காரர்கள் பணம் கேட்கமாட்டிங்க, அதற்கெல்லாம் யாரும் டிப்ஸ் கொடுக்க மாட்டாங்க. அவர்களும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

அது போல் தான் நீங்கள் சொல்லும் எதும் போடாமலேயே சென்று சாமி கும்பிட்டுவரும் சங்கதி. காசே இல்லாது போனால் அர்சனை செய்து தருவார்களா ? அர்சனை செய்பவர்களில் எத்தனை பேர் 10 ரூபாயாவது தட்டில் போடாமல் இருக்கிறார்கள் ?

'ஆண்டவனுக்கு சேவை செய்கிறோம், அதற்கான ஊதியம் அறநிலைத்தருகிறது, உங்கள் (பாவ?)பணம் வேண்டாம்...!' என்று எத்தனை அர்சகர்கள் மறுக்கிறார்கள் ?
:)

ஜெகதீசன் சொன்னது…

//
ஆண்டவனுக்கு சேவை செய்கிறோம், அதற்கான ஊதியம் அறநிலைத்தருகிறது
//
ஆண்டவனுக்கு சேவை செய்றதுக்கு ஊதியம் வாங்கலாமா? அப்புறம் எப்படி அது
சேவையாகும்?

கோவி.கண்ணன் சொன்னது…

//கல்வெட்டு said...
//எங்க வீட்டுக்கு புதுமனை புதுவிழாவுக்கு பூஜை செய்ய வந்த அர்சகர் வசிக்கிறார், //

எல்லாத்தையும் விடுங்க. முதல்ல உங்க நண்பருக்கு கொஞ்சம் வேப்பிலை அடிங்க. இது போன்ற ஆட்களால்தான் அர்ச்சகர்கள் மாடி வீடும் , மோட்டாருமாக அலைகிறார்கள். இவர் வந்து மணியாட்டினால்தான் வீடு நல்லா இருக்குமா? கொடுமை.

முனியாண்டி கோவிலில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனப் பூசாரியைக் கொண்டு மணியட்டச் சொல்லி அவருக்கு காணிக்கை வழங்கலாம்.

***

தன்னை விட எளியோருக்கு உதவுவதில் தவறு இல்லை. டிப்ஸ், காணிக்கை எதுவாக இருந்தாலும். பாத்திரம் அறிந்து இட வேண்டும்.

6:17 PM, June 05, 2008
//

கல்வெட்டு சார்,

நீண்ட நாள்கள் சென்று பின்னூட்டி இருக்கிறீர்கள். கிரகபிரவேசம் புதுமனை புதுவிழாவாக மொழி மாற்றி அழைப்பிதழ் அடித்தாலும், சமஸ்கிரத மந்திரத்தில் அவாளே வந்து பூஜைசெய்தால் தான் 'நல்லது' என்று பலர் நினைக்கிறார்கள். நண்பர் விதிவிலக்கு அல்ல.

சிங்கையில் எங்காத்துக்கு, எங்க ஆத்துகாரி ஆசைப்படி கணபதி ஹோமம் அய்யர் தான் பண்ணினார். :)

பிரச்சனை அதுவல்ல... நாவிதருக்கு போவது டிப்ஸ்...அர்சகருக்கு போவது காணிக்கையாம் அர்சகர்கள் பரம ஏழையாம். :))

கோவி.கண்ணன் சொன்னது…

//subbu said...
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

6:25 PM, June 05, 2008
//

சுப்பு நன்றி !

நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத்தவிர வேறெதும் இல்லை.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//Pisasu said...
ஆமா நானும் சென்னைல பாக்கிறேன் இந்த குடுமி கோஷ்டி எல்லாம் சொல்லி வச்ச மாதிரி டி.வி.எஸ் product வண்டி தான் வாங்குறானுங்க ரொம்ப ரேஷ் ஆகத்தான் வண்டி ஓட்டுறானுங்க. அதான் என்னன்னு புரியல.

6:40 PM, June 05, 2008
//

Pisasu,

நம்பிக்கை 'நா' நயம்...கைராசி இன்னும் மற்ற மற்றதெல்லாம் இருப்பதால் வாங்குகிறார்கள் போல.

அவா விருப்பம்...அவா காசு பேஷா வாங்கட்டுமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//Pisasu said...
கவுண்டமணி ஒரு படத்துல மரத்துக்கு மரம் உண்டியல் வச்சிட்டு காச எடுக்க முதல்ல நடந்தும் அப்புறம் சைக்கிள்லயும் அப்புறம் கார்லயும் வருவாரே அதே மாதிரி ஒரு ஐயர இங்கே சென்னை முகப்பேர்ல பாத்திருக்கேன். முதல்ல நடந்தே வந்தவன் 3 வருஷத்துக்குள்ள சைக்கிள் அப்புறம் டி.வி.எஸ் 50 அப்புறம் டி.வி.எஸ் சுசுக்கி சொந்த வீடு அப்படீன்னு வந்தான். இந்த வளர்ச்சி உழைக்கும் அந்த நாவிதனுக்கு சாத்தியமில்லை.
அந்த ஐயரு வரும்போது சிம்ரன் மாதிரி வந்தான். 3 வருசத்துல சகீலா மாதிரி ஆயிட்டான். அது வேற.
//
பிசாசு,
வேதம் கத்துக் கொண்டு தொழிலை மாற்றுங்கள், யாருக்கு தெரியப்போறது.
:)

அரைகுறையாக தெரிந்தாலும் போதும், திருமணத்திற்கு ஈமக்கிரியைக்குச் சொல்லும் மந்திரங்களைச் சொல்லும் அர்சகர்களும் உண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
கோவி கண்ணன் ஐயா,

இப்போவெல்லாம் கார்ப்பரேட் சாமியார் மாதிரி கார்ப்பரேட் அர்ச்சகர்களும் சென்னையில் பெருகிவிட்டார்கள் அய்யா. வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அலுவலகங்களுக்கு பூஜை செய்வதற்கு மட்டும் மாதத்துக்கு ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை அவர்களுக்கு மாதச்சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அய்யரும் பத்து கம்பெனிக்காவது வெள்ளிக்கிழமை பூஜை செய்கிறார்கள். அசால்ட்டாக ஐம்பது முதல் அறுபது ஆயிரம் வரை மாசத்துக்கு மந்திரம் சொல்லியே சம்பாதிக்கிறார்கள். இவ்வளவு சம்பாதிப்பவர்கள் ஏன் வீஎஸ்கே அய்யா சொன்னது மாதிரி அன்றாடம் காய்ச்சுகிறார்களோ தெரியவில்லை.
//

லக்கி,

நீங்க பேசும் போது சென்னை பாஷை வாடை அடிக்குது. மயிலாப்பூர் பாஷைக்கு மாறிட்டேள்னா நீங்களும் கார்ப்ரேட் அர்சகர் ஆகிடலாம்.
:)

Unknown சொன்னது…

'விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்தவர்' என்று சர்க்காரியா
கமிஷனால் 'பாரட்டப்பட்ட'
கலைஞரின் சீடர் லக்கிலுக்
அவர்களே இன்று எல்லோரும்
ஏதோ தொழில் செய்து சம்பாதிக்கிறார்கள். சப்ளை,
டிமாண்ட்க்குத் தக்கபடி சாமர்த்தியமாக
பிழைக்கத் தெரிந்திருக்க
வேண்டும், அவ்வளவுதான்.
மாடலிங் செய்து, தொலைக்காட்சியில்
தோன்றி லட்சக்கணக்கில்
சிலர் 20/21 வயதில் சம்பாதிப்பதில்லையா.விளம்பரத்
துறையில் சில முகங்களுக்கு
பல லட்சம் தருவதில்லையா.
உங்களுக்கு இதெல்லாம்
நியாயமென்றால் ஒரு சாதி
குறித்து ஏன் வயிறு எரிகிறீர்.

டாகடர்கள், வக்கீல்கள்
ஏராளமாக சம்பாதிப்பதில்லையா.
ஒரு கையெழுத்துப் போட நோட்டரிக்
பப்ளிக் என்ற அங்கீகாரம் கொண்ட
வழக்கறிஞர்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பது உங்களுக்குத்
தெரியுமா.அர்ச்சகர்கள், ஐயர்க்ள்
குறித்து வயிறு எரிகிறீர்களே,
நீங்கள் சோதிடர்கள்,குறி சொல்பவர்கள், பார்பனரல்லாத
சாமியார்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை
கொஞ்சம் விசாரியுங்கள்.

எந்த புரோகிதரும், ஐயரும்
யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை.
கோயில்களில் பூசாரியை விட அதிக
சம்பளம் அலுவலர்களுக்கு.

உங்களுக்கெல்லாம் பிரச்சினை
நீங்கள் வெறுக்கும் சாதியைச்
சேர்ந்தவன் ஏதோ சம்பாதிப்பது.
அரசியல்வாதியும், அதிகாரியும்
கொள்ளையடிப்பது உங்களுக்கு
பிரச்சினையில்லை. பெரியாரின்
சீடர்களிடம் வேறு எதை எதிர்ப்பார்க
முடியும். ஆனாலும் பாருங்கள்
இந்தப் பார்பனர்கள் உலகமெங்கும்
சென்று கற்கிறார்கள், பிழைக்கிறார்கள்.கழக அரசியல்வாதிகள்
போல் கொள்ளையடிப்பதில்லை.

இன்றைக்கும் தமிழ் நாட்டில்
பார்பனர்களுக்கு வீடு கொடுக்க
பெரும்பாலோனோர் தயங்குவதில்லை.
ஏன் என்று யோசித்ததுண்டா.

எல்லாக் கோயில்களிலும் பார்பனர்கள்
அர்ச்சகர்கள் கிடையாது.பல கோயில்களில் பார்பனரல்லதோர்தான்
பூசாரிகள்/அர்சசகர்கள்.பூனூல் போட்டிருப்பதை வைத்து பார்பனர்
என்று முடிவு கட்ட முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//i criticize periyar said...
இன்றைக்கும் தமிழ் நாட்டில்
பார்பனர்களுக்கு வீடு கொடுக்க
பெரும்பாலோனோர் தயங்குவதில்லை.
ஏன் என்று யோசித்ததுண்டா.//

நான் கேள்விப்பட்டது இல்லை. புதிய தகவல். வஞ்சமில்லாமல் வருமானம் வருவதால் கொடுப்பார்களோ என்னவோ.

விஎஸ்கே ஐயா 'அர்சகர் அன்றாடம் காய்ச்சிகள்' என்றதற்கு மறுப்பாக, நீங்கள் அர்சகர்கள் வளமையாகத்தான் இருக்கிறார்கள், அவர்களின் செல்வ வளம் கண்டு பிறர் பொறாமை படுகிறார்கள் என்று ஒப்புதல் தந்ததற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பாரி.அரசு said...
பூணூல் போட்டு டிப்ஸ் வாங்குவது தட்சணை!
பூணூல் போடாதவன் வாங்குவது பிச்சை!
//

பாரி.அரசு ஐயர்,

நாமலும் உஜாலாவுக்கு மாறிடலாம் !

:)

ஜெகதீசன் சொன்னது…

//
எல்லாக் கோயில்களிலும் பார்பனர்கள்
அர்ச்சகர்கள் கிடையாது.பல கோயில்களில் பார்பனரல்லதோர்தான்
பூசாரிகள்/அர்சசகர்கள்.பூனூல் போட்டிருப்பதை வைத்து பார்பனர்
என்று முடிவு கட்ட முடியாது.
//
ஐயா பெரியாரை விமர்ச்சிப்பவரே,
பதிவை நல்லாப் படிச்சிட்டு தான் வந்தீங்களா?
பதிவில் எங்கயாவது "பார்ப்பன அர்ச்சகர்கள்" மட்டும் துட்டு வாங்குவதாக சொல்லியிருக்கா? அர்ச்சக்கர்கள்ன்னு பொதுவாத் தான சொல்லீருக்கார்?
நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் தரேளே.. :P

K.R.அதியமான் சொன்னது…

நண்பர் கோவி,

உங்க‌ வீட்டு கிர‌க‌ப்பிர‌வேச‌த்திற்க்கு நீங்க‌ளே ஒரு குருக்க‌ளை அழைத்து,
ச‌ட‌ங்கு செய்ய‌ ப‌ண‌ம் கொடுத்துவிட்டு, இப்ப‌ இப்ப‌டி எழுதுவ‌து முர‌ணாயிருக்கே.

எதோ வ‌ருமான‌ம் வ‌ருது. கொடுக்கிற‌வ‌ர்க‌ள் கொடுக்கிறாங்க‌. விடுவீங்க‌ளா.
கோவில் அர்ச்ச‌க‌ர்க‌ள் பெரும்பாலோனோர் லோய‌ர் மிடில் கிளாஸ் வாழ்க்கைதான்.
த‌னியாக வீடுக‌ள், ஆபிஸ்க‌ளில் புரோகித‌ம் செய்ப‌வ‌ர்க‌ளில் சில‌ர் ந‌ல்ல‌ வ‌ருமான‌த்தில் உள்ள‌ன‌ர். அது என்ன‌ குற்றமா என்ன‌ ? நீங்க‌ கூட‌த்தான் வ‌ரவ‌ழைத்தீர்கள்...

ஆனா த‌ட்ட‌ல‌ காசு போட்டாலும் போட‌லீன்னாலும் ஒரே மாதுரிதான் ப‌க்த‌ர்க‌ளை ந‌ட‌த்த‌ வேண்டும். அதுவே அர்ச‌க‌ர்க‌ளின் க‌ட‌மை ம‌ற்றும் த‌ர்ம‌ம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//K.R.அதியமான் said...

K.R.அதியமான் சார்,

இங்கே பிரச்சனை நான் என்வீட்டுக்கு குருக்களை கூப்பிட்டேனா, நம்பூதிரியை கூப்பிட்டேனா என்பது அல்ல.

அர்சகர்கள் அன்றாடம் காய்சுகளா ? அவர்கள் வாங்கும் பணம் டிப்ஸ் இல்லையா ? என்பது தான்.

//அதுவே அர்ச‌க‌ர்க‌ளின் க‌ட‌மை ம‌ற்றும் த‌ர்ம‌ம்.//

திருத்தனிக் கோவிலுக்குச் சென்று அந்த தர்மத்தை நிலைநாட்ட போராடுவோமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...

அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் ஊருக்கு 15 நாள் லீவில் போனீங்க, அதுல பாதி நாள் சலூன் கடையிலேயே போச்சு போல இருக்கே, இரண்டு கடை மட்டும்தானா? இல்லை இன்னும் இருக்கிறதா?
//

யோவ் ...! மற்ற செய்திகளை விட்டுவிட்டு அடுத்தப்படத்துக்கு திரைகதையை ஆராய்ந்து வெச்சிருக்கியளே. நல்லாவா இருக்கு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
நான் எழுதிய 'வேதம் புதிதல்ல' நாடகத்தில் ஒரு வசனம்.கோவில் அர்ச்சகரிடம் ஒரு நண்பர் கூறுவார்
"தட்டில காசு போடலேன்னா..வெறு
ம் விபூதி..கையில் தூக்கி எறியப்படும்.
5 ரூபாய் போட்டால் சிறிது பூவுடன் விபூதி,குங்குமம்
அதிகம் போட்டால்..சாமி கழுத்தில் இருக்கும் மாலை..ஆசாமி கழுத்துக்கு வந்திடும்.
நாட்டில அர்ச்சகர் தொழில் மாதிரி வேற தொழில் இல்ல..இங்கதான் எப்பேர்ப்பட்ட பணக்காரன் கையும்
பிரசாதம் வாங்க தாழ்ந்திருக்கும்..அர்ச்சகர் கை உயர இருக்கும்.
அப்பேர்ப்பட்ட தொழில் செய்யற நீங்க ஏன் உயர்ந்தவர்,தாழ்ந்தவர்னு பேதம் பார்க்கறீங்க?"
டிப்ஸ் என வாங்கப்படுவது கொடுக்கப்படுவதால்தானே.ஆதலினால் இதை ஒழிக்க வேண்டியது

6:49 PM, June 05, 2008
//

T.V.Radhakrishnan ஐயா,

உங்கள் கருத்துகளையும், தோற்றத்தையும் வைத்துப் பார்க்கும் போது நீண்ட நாளாக எழுதிவருபவர் போல் புரிகிறது. உங்கள் இடுகையையும் இனி தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ளேன். பின்னூட்ட கருத்துக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
மிக அருமையான பதிவு.

வீஎஸ்கே ஐயாவின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் எனக்கு திக்கென்றது, என்னதிது, இப்படியெல்லாம் எழுதுகிறாரே என்று.

சொல்லப் போனால், உழைப்பவர்களுக்கு கொடுக்கும் டிப்ஸ் தவறேயில்லை. தட்டில் போடும் பிச்சை தான் ஒழிக்கப்பட வேண்டும் !
//

சுந்தர் அண்ணா,

விஎஸ்கே ஐயா அவ்வப்போது அதிர்ச்சி கொடுப்பார். நீண்ட நாட்களாக அமெரிக்காவில் இருப்பதால் அவருக்கு நாட்டு நடப்பு அவ்வளாவாக தெரியாது என்றே நினைத்து அமைதி ஆகிவிடுவேன்.

Athisha சொன்னது…

// இப்போவெல்லாம் கார்ப்பரேட் சாமியார் மாதிரி கார்ப்பரேட் அர்ச்சகர்களும் சென்னையில் பெருகிவிட்டார்கள் //

லக்கி அப்பட்டமான உண்மை , சென்னையில் நிறைய மென்பொருள் நிறுவனங்களில் வெள்ளி கிழமைகளில் இவர்களது அலப்பறை சொல்லி மாலாது.

மந்திரம்னு இவர்களுக்கு மட்டும் கேட்கும் படி எதையாவது கக்கி விட்டு தேங்காவ குடுத்துட்டு வேகமாக ஒடிவிடுவார்கள் . என்னடா பூஜைனு கேட்டா 4 இடம் அட்டெண்ட் பண்ணனும்பாங்க .

software companiesஆல நோகம நோம்பி கும்டுறவங்க...

கலி முத்திடுத்து ஓய்

கோவி.கண்ணன் சொன்னது…

// திரட்டி.காம் said...
--------------
"தட்டில் காசு போடவில்லையென்று எந்த அர்ச்சகரும் விபூதி குங்குமம் கொடுக்க மறுப்பதில்லை.
---------------

ஒரு முறை திருத்தனி சென்று வாருங்கள் அங்கு ரூ.10 போட்டால் தான் பாக்கட் விபூதி - குங்குமம் இல்லையென்றால் அடுத்த ஆளிடம் கேட்கச்சொல்கிறார்கள் இது என் சொந்த அனுபவம்.

வெங்கடேஷ்
//

வெங்கடேஷ்,

திருப்பதி போனால் திருப்பம் வளைவுகள் ? :) வரும் னு சொல்லுவாங்க. ஒருமுறை திரூத்தனிக்குப் போனால் திரும்ப வரமாட்டாங்க போல !
:)

களப்பிரர் - jp சொன்னது…

அருமையான பதிவு, நண்பரே .. நான் சொல்ல நினைத்ததை எல்லோரும் சொல்லிட்டாங்க...

இருந்தாலும் டோண்டு சார் 'இப்போதெல்லாம் சில சலூன்களில் சேவைகளுக்கான விலை விவரங்கள் இல்லை. இது சட்டப்படி குற்றம்" என்று சட்டத்தை - சட்டம் தன் கடமையை செவ்வனே செய்து செங்கோல் ஆட்சி நடத்தும் நமது நாட்டில் கேட்டுள்ளார்.

அதே மாதிரி எந்த அர்ச்சனைக்கு - பூஜை - கோமம் - இன்னபிற 'சேவைகளுக்கு' எம்புட்டு துட்டு வெட்டணும் னு ஒரு விலை விவரம் இல்லாதது சட்டப்படி செல்லுமா என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும் ...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் சார்..வணக்கம்
நான் சில மாதங்களாகத்தான் எழுதி வருகிறேன்.அடிப்படையில் நான் ஒரு நாடக ஆசிரியன்.என் நாடகங்கள்
தமிழ் நாடக மேடையில் நடைப்பெற்று வருகின்றன.எனது நாடக குழுவின் பெயர் 'சௌம்யா'
கீழ் கண்ட வலைப்பக்கங்களைப் பார்க்கவும்.
tvrk.blogspot.com
radhakrishnantv.blogspot.com
tvradkrish.blogspot.com
நன்றி

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

அறுபடை வீடுகளிலும் திரு வெங்கடேஷ் சொன்ன மாதிரி தான் .
அவர் போய் நிறைய நாள் இருக்கும் என்று நினைக்கிறேன் .இப்பொழுதெல்லாம் ஐம்பது ரூபாய் கொடுத்தால் தான் விபூதி குங்கும பிரசாதம் .
தோல் கலர் வெள்ளையாக இருந்தால் ஆண்டவன் அருகினில் சென்று தரிசனம் பெற வைப்பார்கள் .
திருசெந்தூரிலும் பழனியிலும் அவர்களின் அட்டூழியம் சொல்லி மாளாது !
திருச்செந்தூரில் காலை விஸ்வரூப தரிசனம் பார்க்க நூறு ரூபாய் . அபிஷேகம் பார்க்க முன்னூறு ரூபாய் .ஆனால் ஐயர்களிடம் நூறு ரூபாய் கொடுத்து கள்ளத்தனமாக இவ்விரண்டையும் பார்ப்பவர்கள் தான் அதிகம் .
உண்மையாக தேவஸ்தானம் டிக்கெட் எடுத்தவர்களுக்கு முன்னாலே இவர்களை (ஐயர்களிடம் டோக்கன் கட்டியவர்களை )அமர வைப்பார்கள் !
நானூறு ரூபாய் டிக்கெட் எடுத்தவர்கள் அவர்களின் பின்னே தான் அமர வேண்டும் !!!
அன்புடன்
அருவை பாஸ்கர்

nedun சொன்னது…

பார்பனர்களைத்தான் அர்சகர்கள் என்று அழைப்பார்கள். மற்றவர்கள் பூசாரிகள்.
கோயில்களில் அதிக வருமானம் வந்தால் அது இந்து அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும். அதன்பின் இந்து ஆகம விதியின் படி பூசாரிகள் வெளியேற்றப்பட்டு அர்ச்சகர்கள் உள்ளே நுழைந்து கொள்வார்கள்.
இன்னமும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பார்பனர்கள்தான் அர்ச்சகர்கள்
//
//
எல்லாக் கோயில்களிலும் பார்பனர்கள்
அர்ச்சகர்கள் கிடையாது.பல கோயில்களில் பார்பனரல்லதோர்தான்
பூசாரிகள்/அர்சசகர்கள்.பூனூல் போட்டிருப்பதை வைத்து பார்பனர்
என்று முடிவு கட்ட முடியாது.
//
ஐயா பெரியாரை விமர்ச்சிப்பவரே,
பதிவை நல்லாப் படிச்சிட்டு தான் வந்தீங்களா?
பதிவில் எங்கயாவது "பார்ப்பன அர்ச்சகர்கள்" மட்டும் துட்டு வாங்குவதாக சொல்லியிருக்கா? அர்ச்சக்கர்கள்ன்னு பொதுவாத் தான சொல்லீருக்கார்?
நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் தரேளே.. ://

dondu(#11168674346665545885) சொன்னது…

//அதே மாதிரி எந்த அர்ச்சனைக்கு - பூஜை - கோமம் - இன்னபிற 'சேவைகளுக்கு' எம்புட்டு துட்டு வெட்டணும் னு ஒரு விலை விவரம் இல்லாதது சட்டப்படி செல்லுமா என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும் ...//
ஹிந்து அறநிலைய சட்டத்தின்படி எல்லா கோவில்களிலும் வெவ்வேறு சேவைகள், தரிசனங்கள், பூஜைகள் ஆகியவற்றுக்கும் கட்டணவிவர பலகை வைத்தாக வேண்டும். நான் பார்த்த எல்லா கோவில்களிலும் அது உண்டு. நீங்கள் பார்த்ததில் அப்படி இல்லையென்றால், அதை அறநிலையத்துறைக்கு தெரிவிக்கலாம், தெரிவிக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

// அதிஷா said...
// இப்போவெல்லாம் கார்ப்பரேட் சாமியார் மாதிரி கார்ப்பரேட் அர்ச்சகர்களும் சென்னையில் பெருகிவிட்டார்கள் //

லக்கி அப்பட்டமான உண்மை , சென்னையில் நிறைய மென்பொருள் நிறுவனங்களில் வெள்ளி கிழமைகளில் இவர்களது அலப்பறை சொல்லி மாலாது.

மந்திரம்னு இவர்களுக்கு மட்டும் கேட்கும் படி எதையாவது கக்கி விட்டு தேங்காவ குடுத்துட்டு வேகமாக ஒடிவிடுவார்கள் . என்னடா பூஜைனு கேட்டா 4 இடம் அட்டெண்ட் பண்ணனும்பாங்க .

software companiesஆல நோகம நோம்பி கும்டுறவங்க...

கலி முத்திடுத்து ஓய்

//

அதிஷா,

அப்ப லக்கியார் பொய் சொல்லவில்லையா ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அவாள்லாம் தலைல இருந்து பிறந்தவா... அவா எது செஞ்சாலும் தப்பே இல்லை..
இந்த லோகத்துல இருக்குற எல்லாமே அவாளுக்குச் சொந்தமானது.. நம்ம தட்டுல காணிக்கை போடுறப்ப, அவா துட்ட அவாளுக்கே தரோம்... இதெப்படி பிச்சையாகும்?

9:38 PM, June 05, 2008
//

ஜெகதீசன் ஐயர்,

அவா கொடுப்பதை அவாளுக்கே கொடுக்கிறோம் என்று சொல்லவர்ரிறா ? நன்னா சொன்னேள் போங்கோ !

கோவி.கண்ணன் சொன்னது…

// களப்பிரர் said...
அருமையான பதிவு, நண்பரே .. நான் சொல்ல நினைத்ததை எல்லோரும் சொல்லிட்டாங்க...

இருந்தாலும் டோண்டு சார் 'இப்போதெல்லாம் சில சலூன்களில் சேவைகளுக்கான விலை விவரங்கள் இல்லை. இது சட்டப்படி குற்றம்" என்று சட்டத்தை - சட்டம் தன் கடமையை செவ்வனே செய்து செங்கோல் ஆட்சி நடத்தும் நமது நாட்டில் கேட்டுள்ளார்.

அதே மாதிரி எந்த அர்ச்சனைக்கு - பூஜை - கோமம் - இன்னபிற 'சேவைகளுக்கு' எம்புட்டு துட்டு வெட்டணும் னு ஒரு விலை விவரம் இல்லாதது சட்டப்படி செல்லுமா என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும் ...

11:30 PM, June 05, 2008
//

களப்பிரர்,

நான் விலைப்ப்பட்டியல் பார்த்திருக்கிறேன்

லட்டு 20ரூபாய்
தட்டை 15 ரூபாய்
அதிரசம் 28 ரூபாய்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ARUVAI BASKAR said...
அறுபடை வீடுகளிலும் திரு வெங்கடேஷ் சொன்ன மாதிரி தான் .
அவர் போய் நிறைய நாள் இருக்கும் என்று நினைக்கிறேன் .இப்பொழுதெல்லாம் ஐம்பது ரூபாய் கொடுத்தால் தான் விபூதி குங்கும பிரசாதம் .
தோல் கலர் வெள்ளையாக இருந்தால் ஆண்டவன் அருகினில் சென்று தரிசனம் பெற வைப்பார்கள் .
திருசெந்தூரிலும் பழனியிலும் அவர்களின் அட்டூழியம் சொல்லி மாளாது !
திருச்செந்தூரில் காலை விஸ்வரூப தரிசனம் பார்க்க நூறு ரூபாய் . அபிஷேகம் பார்க்க முன்னூறு ரூபாய் .ஆனால் ஐயர்களிடம் நூறு ரூபாய் கொடுத்து கள்ளத்தனமாக இவ்விரண்டையும் பார்ப்பவர்கள் தான் அதிகம் .
உண்மையாக தேவஸ்தானம் டிக்கெட் எடுத்தவர்களுக்கு முன்னாலே இவர்களை (ஐயர்களிடம் டோக்கன் கட்டியவர்களை )அமர வைப்பார்கள் !
நானூறு ரூபாய் டிக்கெட் எடுத்தவர்கள் அவர்களின் பின்னே தான் அமர வேண்டும் !!!
அன்புடன்
அருவை பாஸ்கர்

1:53 AM, June 06, 2008
//

ARUVAI BASKAR,

காசே கொடுக்காமல் அதற்கும் முன்பு சிலைக்கு வெகு அருகில் ஒரு கூட்டம் பிள்ளைக் குட்டியோடு வந்து போகுமே அதைப் பார்த்தது இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
ஐயா பெரியாரை விமர்ச்சிப்பவரே,
பதிவை நல்லாப் படிச்சிட்டு தான் வந்தீங்களா?
பதிவில் எங்கயாவது "பார்ப்பன அர்ச்சகர்கள்" மட்டும் துட்டு வாங்குவதாக சொல்லியிருக்கா? அர்ச்சக்கர்கள்ன்னு பொதுவாத் தான சொல்லீருக்கார்?
நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் தரேளே.. :P
//

ஜெகதீசன்,

அனைத்து சாதியினரும் அர்சகர் ஆகி இருக்கிறார்கள். அர்சகர் என்றாலே அவாளைத்தான் சொல்கிறோம் என்று முண்டியடித்து ஓடிவந்து ஒப்புதல் தருகிறார் அவர். விடுங்கள்.

லக்கிலுக் சொன்னது…

கோவி மாமோய், தமிழ்நாடு வந்தபோது சோமபானம் / சுராபானம் ஏதாவது அடிச்சேளா?

நாலு நாளாய் சிக்ஸரும், ஃபோருமாய் அடிச்சி ஆடுறேளே? :-)))

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
கோவி மாமோய், தமிழ்நாடு வந்தபோது சோமபானம் / சுராபானம் ஏதாவது அடிச்சேளா?

நாலு நாளாய் சிக்ஸரும், ஃபோருமாய் அடிச்சி ஆடுறேளே? :-)))

1:17 PM, June 06, 2008
//

லக்கிலுக் அண்ணாத்தே,

அதெல்லாம் வெளியே சொன்னால் என் இமேஜ் என்னாவது. :))

ஏற்கனவே போலி புகழ் ஐ மீன் போலியான புகழ் என் மீது ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மேலும் தேவையா, அப்பறம் புதுப்பதிவர்கள் மிரளுவார்கள்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

//காசே கொடுக்காமல் அதற்கும் முன்பு சிலைக்கு வெகு அருகில் ஒரு கூட்டம் பிள்ளைக் குட்டியோடு வந்து போகுமே அதைப் பார்த்தது இல்லையா ?//

ஆமாம் அதை எழுத மறந்து விட்டேன் .
அர்ச்சகர்களின் உறவினர்கள் ( அதாவது அவர்களின் மனைவி மற்றும் குழந்தை கள் )
அந்த நூறு ரூபாய் கூட இல்லாமல் அனைவருக்கும் முன் வந்து நின்று கொள்வார்கள் .
இதை எல்லாம் தாண்டி தான் அற நிலையத்திற்கு காசு கொடுத்து பார்ப்பவன் நின்று பார்க்க வேண்டும் . என்ன கொடும சரவணன் பார்த்தீர்களா ?
அன்புடன்
அருவை பாஸ்கர்

manikandan சொன்னது…

progitharukkum, archargarukkum difference irukkunga.

spa salon nadatharavan upper middle class aalu. yenga ooru cauverila mudi vettivudaravan lower middle class aalu. Sila exceptions irukalaam but it is mostly true.

adhae madhiri dhaan progitharukkum, archargarukkum ulla difference. Even within the brahmin community (for those people who still have that superiority complex, they treat archargars in the lower echleons)

But to me, tipping a server and giving some money to archargar is all and the same. Both are personal choices and if this creates a social friction, let it be. For the people who does not want to tip, they just need to be assertive and say so. (just like dondu)

But i have seen archagars taking the money from the plate and putting it in temple Hundiyal. Have you seen this ? I come from srirangam and in most of the sannidhis, i have seen this happenning. But these guys are not archargars by profession but they just come and do their duty (murai)(to maintain their status quo !)

And in lots of european countries, they do not tip. So, we don't need to blame this on them

ILA (a) இளா சொன்னது…

யாருக்கு PROXY நீங்க? இல்லாட்டி லக்கி வேற வேலைய பார்க்க போயிட்டாரா??

லக்கிலுக் சொன்னது…

//////கோவி.கண்ணன் சார்..வணக்கம்
நான் சில மாதங்களாகத்தான் எழுதி வருகிறேன்.அடிப்படையில் நான் ஒரு நாடக ஆசிரியன்.என் நாடகங்கள்
தமிழ் நாடக மேடையில் நடைப்பெற்று வருகின்றன.எனது நாடக குழுவின் பெயர் 'சௌம்யா'
கீழ் கண்ட வலைப்பக்கங்களைப் பார்க்கவும்.
tvrk.blogspot.com
radhakrishnantv.blogspot.com
tvradkrish.blogspot.com
நன்றி////

டி.வி.ஆர் அவர்களே!

தங்களது நாடகங்களை பார்க்க நான் உட்பட சில வலைப்பதிவர்கள் ஆவலோடு இருக்கிறோம். வார இறுதிகளில் நாடகம் நடக்கும்போது luckylook32@gmail.com முகவரிக்கு சிரமம் பாராமல் ஒரு மின்னஞ்சல் தட்டமுடியுமா?

அன்புடன்
லக்கிலுக்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்