திருநங்கைகள் பற்றி பல செய்தி கட்டுரைகள், கதைகள் படித்து இருந்தாலும் பதிவர் நண்பரின் பார்வையில் எழுதப்பட்ட அவன் - அது = அவள் எப்படி இருக்கும் ஆவல் பொங்கும் நீண்ட நாள் விருப்பாக இருந்தது, அன்மையில் தம்பி ஜெகதீசன் சென்னை சென்று திரும்பியதால் நிறைவேறியது, மற்றொரு தம்பி பால்ராஜின் ஏற்பாட்டில் ஜெகதீசன் நண்பர் எஸ்.பாலபாரதியிடம் இருந்து 20 நூல்களை சிங்கைப் பதிவர்களுக்காக பெற்று வந்தார்.
புதினமாக எழுதப்பட்ட திருநங்கைகள் பற்றிய தொகுப்பே அந்த நாவல். 3 மணி நேர தொடர் வண்டி பயணத்தின் போதே படித்து முடித்துவிட்டேன். திருநங்கைகளின் தோற்றமும் வாழ்க்கை முறைகளை பற்றியும், கோபி என்ற கோமதி(ஆகிய) என்கிற திருநங்கையை மையமாக வைத்து கதையை எழுதி இருக்கிறார். திருநங்கைகள் பற்றி, இந்தியா தழுவிய ஒரு நாவல் எழுதவேண்டுமென்றால் தமிழ் தவிர்த்து பிற மொழியும் அறிந்திருப்பதன் தேவை கதையின் ஓட்டத்தில் உணரப்படுகிறது. திருநங்கைகள் அனைவருமே ஹிந்தி கலந்து பேசுவதால், அவர்கள் பேசுவது இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே ஹிந்தி வசனங்கள் வந்திருப்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆண் குழந்தையாக வளர்க்கப்படும் ஒரு குழந்தை பருவ வயதில் எப்படி திருநங்கையாக மாறுகிறது என்பதையும், அதனால் அவர்கள் அந்த வயதில் இல்லத்தினரின் கொடுமைகளுக்கு ஆளாகுவதும், அதிலிருந்து தப்பித்து ஒரு பெண்ணாக வாழவிரும்பி வீட்டில் இருந்து வெளியேறி...அவர்கள் தங்களைப் போன்ற திருநங்கைகளை சேர்க்கிறார்கள், அதன் பிறகு ஆண் உறுப்பை அகற்றிக் கொண்டு முழுப்பெண்ணாக தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள் என்பதை கதையின் ஓட்டத்துடன் சொல்லி இருக்கிறார். திருநங்கைகளுக்கு இடையே புழங்கும் சொற்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கதை ஓட்டத்துடன் அழகாக சேர்த்து இருக்கிறார்.
திருநங்கை ஆண்குறி அறுத்துக் கொள்ளும் தாயம்மா சடங்கை ஏற்கனவே சு.சமுத்திரம் எழுதிய வாடமல்லியில் படித்து இருக்கிறேன். அந்த பகுதியை எஸ்.பா எழுதியதைப் படிக்கும் போது அதற்கும் சற்றும் குறைவில்லாத திகிலாகவே காட்சி அமைப்பு விவரிக்கப்பட்டு இருந்தது. தனக்கு இருக்கும் 'ஆண் குறி' ஆணவத்துடன் (Penis Pride) நடந்து கொள்ளும் ஆண்களின் எண்ணங்களை தூக்கியெறியும்படி பெண்ணாக மாறும் ஒரு திருநங்கை அதை வினாடிக்குள் அறுத்து எரிவதைப் படித்தால் எந்த ஆணுக்கும் ஆண் குறி என்பது பெருமையான ஒன்றல்ல என்றே உணர்வார்கள்.
கூவாகத்தில் ஆரம்பிக்கும் கதை என்றாலும் கூவாக நிகழ்வுகளை பலரும் எழுதிவிட்டதால் அதை கவனத்துடன் தவிர்த்து இருக்கிறார். மற்றபடி எல்லா திருநங்கைகளுக்கும் நடக்கும் ரவுடிகள் மற்றும் போலிஸ் கொடுமைகளை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது பொய்யா மெய்யா என்பது தெரியாது, திக்கற்ற திருநங்கையாக வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு அவர்களைப் போல் உள்ளவர்களே ஆறுதலாகவும், உறவாகவும் இருக்கிறார்கள் என்பதை நன்றாக பதிய வைத்திருக்கிறார். கதையில் வரும் அனைத்து திருநங்கைகளும் ஒருவரை ஒருவர் பெண் பால் உறவு முறையில் அழைத்துக் கொள்வதும், பெண்ணாகவே உணர்ந்து அவர்களுக்குள் 'டி' போட்டு பேசுவதை பிசிறில்லாமல் எழுதி இருக்கிறார். ராமேஷ்வரத்தில் நடந்தவைகளைச் சொல்லும் போது அங்கு பேசும் வட்டாரவழக்குகள் வசனங்களிலும், கூவாகம் பகுதியில் கதை செல்லும் போது அங்கு பேசுபவர்கள் பன்ருட்டி வட்டார வழக்குகளில் பேசுவது இயல்பாக இருக்கிறது.பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து வேளைகளில் முதலில் உதவுபவர்களாக திருநங்கைகளைச் சொல்லி இருப்பது அவர்களை பெருமை படுத்தும் எழுத்து. அதற்காக (மும்பையில்) தொடர் வெடிகுண்டு விபத்துகளை செல்லி அதனை பதிய வைத்திருக்கிறார்.
திருநங்கையாக மாறி வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் வாழ்க்கை எத்தகையது என்பது கதையின் முடிவில் உணரப்படுகிறது.
*****
இந்த கதையில் சில சொதப்பல்களும் இருக்கிறது, பத்திரிக்கை செய்தியாளராக வரும் அன்பு என்பவர் கதையின் நாயகியான கோமதியை விரும்பும் முன் ஒரு முற்போக்காளராகச் அவரை கதைக்குள் கொண்டு வரும் போது சொல்லி இருப்பார், அன்பு தனது உதவியாளரிடம் திருநங்கை பற்றிய உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவார், அதே அன்பு கோமதியின் அழகில் மயங்கி அவளை காதலிக்கவும் தொடங்குவார், தனக்கு ஓரினசேர்க்கை பழக்கம்
இருப்பதையெல்லாம் கோமதியிடம் சொல்லிவிட்டு தான் அவளை காதலிப்பார், ஆனால் முதல் உறவுக்காக இருவரும் கூடும் போது, கோமதி நிர்வாணம் செய்யாமல் (ஆண்குறி அகற்றிக் கொள்ளாமல்) இருப்பதை அறிந்து அதையே, காரணமாகச் சொல்லி, விலகி அவளுடன் அப்போது கூடவில்லை என்பதாக சொல்லி இருவரும் தற்காலிகமாக பிரிவது பொருத்தமாக இல்லை, அந்த ஒரே காரணத்துக்காக கோமதி நிர்வாணத்துக்கு தயாராகுவது போல் சொல்லப்படுகிறது. ஓரின புணர்சியாளரான அன்பு ஏன் கோமதியை நிர்வாணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார் என்பது புரியவில்லை. ஓரின புணர்ச்சியாளார்களுக்கு ஆண்குறி தடையே அல்ல என்றே நினைக்கிறேன்.
ஆரம்பம் முதலே கோமதி வளர்ந்த குடும்ப சூழலை வைத்து அவள் கடை கேட்கவே (பிச்சை எடுக்க) தயங்குவதாகச் சொல்லிவிட்டு, கடைசியில் படிப்பறிவு இல்லாத ஒரு சாராசரி திருநங்கை, தன்னை விரும்பும் ஒரு ஆணை சேர்த்துக் கொண்டு திருப்தி அடைவது போலவே கோமதியும் செய்துவிடுகிறாள். ஆரம்பத்தில் அழகில் மயங்கி, பெண்ணாகவே ஏற்றுக் கொண்ட முற்போக்கு சிந்தனையுடைய அன்பு என்பவன், அவளை சேர்ந்த ஆறுமாதத்தில், அவளை மீண்டும் கடை கேட்க அனுப்புவதாக சொல்வது பொருத்தமாக இல்லை. அவன் திருநங்கையுடன் வெறும் உடல் இன்பத்தைத்தான் நாடுகிறான், குடிகாரனாக முடிவில் புரியவைக்கப் போவதாக இருந்தால் அவனை ஏன் திருநங்கைகள் பற்றிய அக்கரை உள்ளவனாக அறிமுக காட்சிகளில் சொல்ல வேண்டும் என்ற காரணமும் தெரியவில்லை. படிப்பு ஆர்வமும், நல்ல வேலைக்குச் செல்லவேண்டும் என்று அவ்வப்போது பேசும் கோமதி கடைசில் பிற திருநங்கைகள் போலவே ஒருவனுக்கு மனைவியாக அடி உதைகளை வாங்கிக் கொண்டு வாழ்வதாகவும், கொடுமை மிகுதியாகும் போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொள்வேன் என்று சொல்லி கதையை முடித்து இருப்பது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. படிப்பை பாதியில் விட்டுவிட்டு பின்பு அதனை லட்சியமாகக் கொண்டு முன்னேறிய பல திருநங்கைகள் இருக்கிறார்கள். அப்படி சொல்லிவிட்டால் 'வாடமல்லி' கதை சாயல் வந்துவிடும் என்று நினைத்திருப்பாரோ ?
கதையைப் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக திருநங்கைகளைப் பற்றிய நல்ல எண்ணம் வரும். ஆனால் ஒரு திருநங்கை அந்த கதையைப் படித்தால் நம் தலையெழுத்து இப்படித்தானோ என்று நினைக்க வைத்துவிடும், அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க லிவிங் ஸ்மைல், ரோஸ் மற்றும் நர்தகி நடராஜ் போன்ற பாத்திரம் ஒன்றை கதையின் இடையில் எங்காவது கொண்டுவந்திருக்கலாம். இவைகளே எனக்கு கதையின் குறையாக தெரிகிறது.
இவைகளைத் தவிர்த்து கதையின் ஓட்டத்திலும், காட்சிகளை கண் முன் விரிப்பதற்கான விவரிப்புகளும் படிக்கும் போது ஒரு கதையாசிரியரின் முதல் நாவல் போன்று சிறிதும் தெரியவில்லை. அந்தவகையில் எஸ்.பா சிறந்த எழுத்தாளராக வியப்பூட்டுகிறார். இந்த கட்டுரை இந்த நூலின் மீதான என்னுடைய தனிப்பட்ட மதிப்பீடு மட்டுமே, இதனை பொதுக்கருத்தாக கொள்ளவேண்டாம்.

27 கருத்துகள்:
உடனடியாக விமர்சனம் எழுதியமைக்கு நன்றிகள். நான் இன்னும் புத்தகத்தை படித்து முடிக்கவில்லை. முடித்துவிட்டு இதே பதிவில் என் எண்ணங்களையும் தெரிவிக்கிறேன். புத்தகம் படித்த மற்றவர்களும் இதில் தங்களது கருத்துக்களை சொல்லி விவாதித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். வாங்க விவாதிப்போம்.
Good one.. இதேப்போல் Gay/Lesbians பற்றி ஓரு புத்தகத்தை யாராவது எழுதி உங்கள் கண்களை சாரி மனதை திறக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..
நடுநிலையான விமர்சனம்.
//Bharath said...
Good one.. இதேப்போல் Gay/Lesbians பற்றி ஓரு புத்தகத்தை யாராவது எழுதி உங்கள் கண்களை சாரி மனதை திறக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..
//
Bharath, அதுபற்றி எனக்கு உயர்ந்த எண்ணம் வராது, திருநங்கைகள் தங்களை மனதால் பெண்ணாக உணர்ந்து கொண்டு பிறகு உடலை மாற்றிக் கொள்பவர்கள், GAY/LESBIANS அப்படி அல்ல. மனதால் அவர்கள் பாலினம் மாறுபடாது. வெறும் இச்சை அளவில் தான் அவர்களது செயல்பாடுகள்.
//Bharath, அதுபற்றி எனக்கு உயர்ந்த எண்ணம் வராது, திருநங்கைகள் தங்களை மனதால் பெண்ணாக உணர்ந்து கொண்டு பிறகு உடலை மாற்றிக் கொள்பவர்கள், GAY/LESBIANS அப்படி அல்ல. மனதால் அவர்கள் பாலினம் மாறுபடாது. வெறும் இச்சை அளவில் தான் அவர்களது செயல்பாடுகள். //
இதுவும் மனம் சம்பந்தப்பட்டது என்பது என் கருத்து.. Anyways i don't want to hijack this Good blog into a different discussion. we can have that later..
//இதுவும் மனம் சம்பந்தப்பட்டது என்பது என் கருத்து.. Anyways i don't want to hijack this Good blog into a different discussion. we can have that later..//
பரத்,
இதை முற்றிலும் மனம் தொடர்புடையது என்று சொல்லிவிட முடியாது அப்படி பால் மாற்றம் அடையும் சிறுவர்கள் சிலருக்கு மார்பு வளர்ச்சியும் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள், குரல் கூட மாறிவிடுகிறது.
எப்படியோ விவாதத்தை முடித்துக் கொண்டதற்கும், கருத்துரைத்தலுக்கும் மிக்க மிக்க நன்றி
//வால்பையன் 1:01 PM, November 25, 2008
நடுநிலையான விமர்சனம்.
//
VP நன்றி !
//ஜோசப் பால்ராஜ் said...
உடனடியாக விமர்சனம் எழுதியமைக்கு நன்றிகள். நான் இன்னும் புத்தகத்தை படித்து முடிக்கவில்லை. // விரைவாக படித்து முடிங்க.
/முடித்துவிட்டு இதே பதிவில் என் எண்ணங்களையும் தெரிவிக்கிறேன். புத்தகம் படித்த மற்றவர்களும் இதில் தங்களது கருத்துக்களை சொல்லி விவாதித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். வாங்க விவாதிப்போம்.
11:07 AM, November 25, 2008
//
அதே அதே அதைச் செய்தால் எனது விமர்சனம் சரிதானா என்று நானும் தெரிந்து கொள்ள முடியும்
அந்த நாவலை படித்ததும் எனக்கு தோன்றியது அத்தனையும் உங்கள் பதிவில் ... கலக்கல் அண்ணா..
//அதிஷா said...
அந்த நாவலை படித்ததும் எனக்கு தோன்றியது அத்தனையும் உங்கள் பதிவில் ... கலக்கல் அண்ணா..
//
:) பாலபாரதி பக்கத்தில் இருக்கார், தோலை உறித்துவிடுவார் என்று அதையெல்லாம் எழுதாமல் விட்டுவிட்டீர்களா ?
தல அதையெல்லாம் கண்டுகிற மாட்டார் என்பதற்குத்தான், 'தல போல வருமான்னு' நாம அவரை கொண்டாடுறோம். சரியா ?
நான் இந்த நாவலைப் படிக்கவில்லை.. இருப்பினும் உங்களது விமர்சனத்தை படிக்கும் போது நாவலை படித்த ஒரு பிரம்மை..
சரி..
அன்பு என்ற கதாபாத்திரம் முதலில் ஒரு முற்போக்கு எண்ணம் உள்ளவனாகவும், திருநங்கைகள் பற்றிய அக்கரை உள்ளவனாகவும் அறிமுகப்படுத்திவிட்டு பின்னர் அவனே ஒரு சராசரி மனிதனாக, ஒரு குடிகாரனாக சித்தரிக்கபட்டுருப்பதாக கூறியுள்ளீர்..
ஒரு வேளை, இந்த சமூகத்தில் முற்போக்கு சிந்தணாவாதிகளின் லட்சணம் இது தான் என்று தோலுரித்துகாட்டவே பாலா அப்படி சொல்லி இருப்பாரோ?? இன்று முற்போக்கு சிந்தணாவாதி என்று சொல்லிக்கொள்ளும் வியாதிகள் ஊருக்கு உபதேசம் செய்யும் வீரர்கள் தானே..
கோமதி .. படிப்பு, நல்ல வேலை பற்றி பேசி வந்ததும் பின்னர் பிற திருநங்கள் போலவே அவதியுறுவதுமாக சொல்லப்பட்டிருப்பது.. ஒரு வேளை திருநங்கைகளின் அவல நிலையை அப்படியே சொல்லி இருப்பாரோ???
பொதுவாக, நண்பர்களின் படைப்புகளை விமர்சிக்கும் போது அந்த படைப்பில் உள்ள புகழும் அம்சங்களை மட்டுமே முன் வைப்பார்கள் அல்லது வலுக்கட்டாயமாக சொதப்பல்களையும் புகழ வேண்டியதாக ஆக்கி அதுக்கு சொதப்பலான காரணங்களையும் கண்டுபிடித்து எழுதுவார்கள். விமர்சங்களால் நட்பு கெடக் கூடாதாம். நண்பனின் பலவீனக்களை சொல்லி அதை சரி செய்வதை விட ஜால்றா போடுவது மட்டுமே நட்பு என்று நினைக்கிறார்கள் போல.
அப்படி இல்லாமல் சொதப்பல்கள் என்று சொல்லி அதைப் பற்றியும் எழுதி இருபப்தற்கு கோவிஜிக்கு ஒரு சல்யூட்.. நல்ல விமர்சனம்.. இதை பாலா படித்து அடுத்த படைப்பில் சரி செய்வார் என எதிர்பார்க்கிறேன்.
//ஓரின புணர்ச்சியாளார்களுக்கு ஆண்குறி தடையே அல்ல என்றே நினைக்கிறேன்.//
ஹிஹி.. வெக்கப் படாதிங்க பஸு.. சும்மா உங்க அனுபவதை எடுத்து விடுங்க பாஸு :))
//ஹிஹி.. வெக்கப் படாதிங்க பஸு.. சும்மா உங்க அனுபவதை எடுத்து விடுங்க பாஸு :))//
சஞ்செய்,
நாலுவரி பாராட்டிவிட்டு அதை ஈடு செய்ய இப்படி ஒரு கேள்வியும் வைக்கனுமா ?
அதில் நாட்டமுள்ளவர்கள் யாராவது இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், ஓரின புணர்ச்சியாளர்கள் உறுப்புகளை அகற்றிக் கொள்வதில்லை என்பதால் அந்த கருத்தைச் சொன்னேன்.
//அதில் நாட்டமுள்ளவர்கள் யாராவது இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், /
அட நீங்க வேற.. சும்மா டமாசுக்கு கேட்டேன்.. நான் அதை எதிர்க்கைலைனாலும் அதை பத்தி தெர்ஞ்சிக்க கூட விரும்பல.. என்னை பொறுத்த்வரையில் அது அருவெருபபான சமாச்சாரம்.
//Ŝ₤Ω..™ 2:21 PM, November 25, 2008
நான் இந்த நாவலைப் படிக்கவில்லை.. இருப்பினும் உங்களது விமர்சனத்தை படிக்கும் போது நாவலை படித்த ஒரு பிரம்மை..
சரி..
//
இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகிவிடக்கூடாது. புத்தகத்தை வாங்கி படித்து நண்பர் பாலபாரதியை ஊக்கப்படுத்துங்கள்.
//பொடியன்-|-SanJai said...
அட நீங்க வேற.. சும்மா டமாசுக்கு கேட்டேன்.. //
கேட்டதையும் கேட்டுவிட்டு, பிறகு என்ன தமாஷ் ? பொழச்சு போங்க !
:)
//நான் அதை எதிர்க்கைலைனாலும் அதை பத்தி தெர்ஞ்சிக்க கூட விரும்பல.. என்னை பொறுத்த்வரையில் அது அருவெருபபான சமாச்சாரம்.
//
தெரிஞ்சிக்க விரும்பலை என்றால் அப்பறம் ஏன் இங்கே நோண்டுதல் நோண்டாமை ? மீன் சாப்பிடப் பிடிக்காது, மீன் வருவல் வாசனை நுகருவது மட்டும் பிடிக்கும் என்று சொல்வது போல் இருக்கு.
மீன் சாப்பிட பிடிக்காது தான்.. அதுக்காக மீன் கடை அருகில் வாழ்ந்தால் மீன் வாசனை வரத்தானே செய்யும்.. மூச்சுக்காற்று வாங்கும் போது அதுவும் உள்ளே போகத் தானே செய்யும்.. நாம் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும்.. அதுக்காக அதை விரும்பி தான் நுகர்கிறோம் என்று சொன்னால் எப்படி சாரே.. :)

Email follow-up comments - பாலோ அப்புல போட்டு வச்சிட்டு உடனுக்கு உடன் மறுமொழியா ?
:)
//அதுக்காக அதை விரும்பி தான் நுகர்கிறோம் என்று சொன்னால் எப்படி சாரே.. :)
மூச்சுக்காற்று வாங்கும் போது அதுவும் உள்ளே போகத் தானே செய்யும்.. நாம் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும்.. //
பெட்ரோல் வாசனை கூட சிலருக்கு பிடிக்கும் விரும்பியே நுகர்வார்கள், அதுக்காக குடித்துவிட முடியாமா ? - இந்த பொருளில் தான் கேட்டேன். நீலப்படம் பார்க்கிறவனெல்லாம் வக்ரம் பிடித்தவங்கன்னு சொல்ல முடியாது இல்லையா ?
தெரிந்து கொள்ள விரும்பினேன்
உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள், உங்கள் முதல் பின்னூட்டம் அதைத்தான் சொல்லுது. ஆனால் என்கிட்ட அதற்கு பதிலே கிடையாது
//Email follow-up comments - பாலோ அப்புல போட்டு வச்சிட்டு உடனுக்கு உடன் மறுமொழியா ?
:)//
ஹிஹி.. உங்க கிட்ட சாட்ல சொன்னேன்.. நினைவிருக்கிறதா? இந்த மின்னஞ்சல் முகவரியை வலைப்பூ உபயோகத்திற்காக மட்டுமே வைத்திருக்கிறேன்.. பின்னூட்டம் போடும் பெரும்பாலான இடங்களில் ( சில வலைப்பூக்கள் தவிர) Email follow up டிக் பண்ணிடுவேன்.. :)
வலைப்பூ நண்பர்கள் தவிர வெறு யாருக்கும் இந்த ஐடி தெரியாது.. மற்ற நண்பர்களுக்கு இந்த ஐடி தெரியாது.. :))
ஜிமெயில் ஆரம்பித்த நட்களில் இருந்து ஒரு ஐடியை உபயோகித்து வருகிறேன்.. :))
நாவல் படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வை அப்படியே உங்க விமர்சனத்தில் கண்டேன். நம்ப தல எழுதுனதுனாலும் கூட நடுநிலை மாறாத உங்க விமர்சனத்தில் மகிழ்ந்தேன்
நல்ல நடுநிலையான விமர்சனம் கோவி.
அப்துல்லா தம்பி,
ஒத்தக் கருத்தொற்றுமைக்கு மகிழ்ச்சி !
நடுநிலை என்ன நேர்மை ?, நண்பர்கள் மீது நம்பிக்கை இருந்தால் விமர்சனங்கள் செய்யலாம். 'அப்படியா சொல்லிட்டான் அவன்?' என்று கொதித்து எழ நம் நண்பர்கள் யாரும் குறுகிய மனப்பாண்மை கொண்டவர்கள் இல்லையே. :)
//வடகரை வேலன் said...
நல்ல நடுநிலையான விமர்சனம் கோவி.
//
மிக்க நன்றி அண்ணாச்சி !
நான் இன்னும் நூலைப் படிக்கவில்லை, படித்தவுடன் எனது கருத்தைப் பதிவு செய்கிறேன். எனக்கு நூலைத் தருவித்துத் தந்த அருமைச் சகோதரர்கள் பாலு(ஜோசப் பால்ராஜ்) செகு (ஜெகதீசன்) ஆகியோருக்கு நன்றி!
//ஜோதிபாரதி said...
நான் இன்னும் நூலைப் படிக்கவில்லை, படித்தவுடன் எனது கருத்தைப் பதிவு செய்கிறேன். //
பாரதி, மிக்க நன்றி !
//எனக்கு நூலைத் தருவித்துத் தந்த அருமைச் சகோதரர்கள் பாலு(ஜோசப் பால்ராஜ்) செகு (ஜெகதீசன்) ஆகியோருக்கு நன்றி!
//
அவ்வண்ணமே கோருகிறேன்.
நல்லா எழுதியிருக்கீங்க. அனேக எண்ணங்களுடன் ஒத்துப் போகிறேன். நன்றி!
திருநங்கை ஆண்குறி அறுத்துக் கொள்ளும் தாயம்மா சடங்கை ஏற்கனவே சு.சமுத்திரம் எழுதிய வாடமல்லியில் படித்து இருக்கிறேன். அந்த பகுதியை எஸ்.பா எழுதியதைப் படிக்கும் போது அதற்கும் சற்றும் குறைவில்லாத திகிலாகவே காட்சி அமைப்பு விவரிக்கப்பட்டு இருந்தது. தனக்கு இருக்கும் 'ஆண் குறி' ஆணவத்துடன் (Penis Pride) நடந்து கொள்ளும் ஆண்களின் எண்ணங்களை தூக்கியெறியும்படி பெண்ணாக மாறும் ஒரு திருநங்கை அதை வினாடிக்குள் அறுத்து எரிவதைப் படித்தால் எந்த ஆணுக்கும் ஆண் குறி என்பது பெருமையான ஒன்றல்ல என்றே உணர்வார்கள்.
////
ஆமாம் படிக்கும் போதே திகிலா இருந்தது
அப்படியொரு செயலை செய்ய துணிந்துள்ளார்கள் எனும் போதே அவர்களின் பெண் என்ற உணர்வு எவ்வளவு ஆழமது என்று புரிகிறது
இதை சிலர் கேலி பேசுவது அறியாமையே
கருத்துரையிடுக