பின்பற்றுபவர்கள்

25 நவம்பர், 2008

Spontaneous Human Combustion - அடியார்கள் இறைவனுடன் ஜோதியானாது இப்படித்தானாம் !

Spontaneous Human Combustion (SHC) - இதுபற்றி டிஸ்கவரி சேனலில் செய்திப்படங்களை (டாக்குமென்டரி) பார்த்திருப்பீர்கள். வெவ்வேறு காலகட்டங்களில் அந்த நிகழ்ச்சியை நானும் டிஸ்கவரி சேனலில் பார்த்து இருக்கிறேன். திடிரென்று எந்த ஒரு தூண்டுதல், உராய்வு இல்லாமலேயே சிலரின் உடம்பு பற்றி எரிந்து கருகி இறந்துவிடுவார்களாம்.

இதுபற்றிய படங்களைப் பார்க்க இங்கே கிளிக்குங்கள்.

அண்மைய காலங்களில் அதனால் இறந்தவர்கள் பற்றிய ஆவணங்கள் விபரங்கள் சேகரித்து இருக்கிறார்கள். ஆனால் அறிவியல் கூற்றுப்படி அதற்கான மிகச் சரியான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கூறுகளாக சொல்லப்படுபவை, மனித கொழுப்பை உறிஞ்சு உலர்ந்த ஆடைகள் எளிதில் தீப்பற்றும், அல்லது உடைகளில் உள்ள static electricity யால் தீப்பிடித்து இருக்கலாம். மனித கொழுப்பு சட்டையில் எப்படி சேர்ந்து உலர்ந்தது என்று சரியாக விளக்கப்படவில்லை. அதாவது,

"Many theories and hypotheses have attempted to explain how SHC might occur, but those which rely on current scientific understanding say that with instances mistaken for spontaneous combustion, there was actually was a source of ignition. One such hypothesis is the "wick effect", in which the clothing of the victim soaks up melted human fat and acts like the wick of a candle. Another possibility is that the clothing is caused to burn by a discharge of static electricity. The likelihood that truly spontaneous human combustion actually takes place within the body is quite low.[1] மேலும் படிக்க..."

தானாக எரிந்து போகும் எதிர்பாராத இந்த நிகழ்வுகளில் இருந்து சிலர் கால் கருகியதுடன் தப்பி இருக்கிறார்கள்.மேலே இருக்கும் சுட்டியில் அந்த தகவல்களும் இருக்கிறது.

சைவ அடியார்கள் பலரும், வைணவ அடியார்கள் சிலரும் இறைவனடி சேர்ந்ததாக சேக்கிழார் புராணம் உட்பட பல இறை இலக்க்கியங்களில் குறிப்புகள், கதைகள் வருகின்றன. இதுபோன்ற இறைவனடி சேர்ந்ததாக கதைகள் சைவம் மறுமலர்ச்சிக்கு முன்பு ஏற்பட்டதே இல்லை. 13 ஆம் நூற்றாண்டில் நடந்தாக மட்டுமே இவை சொல்லப்படுகின்றன, ஆண்டாள் , திருப்பணந்தாள் ஆழ்வார் ஆகிய வைணவர்களும், சைவத்தில் நந்தனார் மற்றும் ஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடன் சுற்றத்துடன் 'ஜோதி'யில் ஐக்கியமானார்கள் என்பதாக கதைகள் கூறப்படுகின்றன.

இதுகுறித்து பகுத்தறிவு பகலவன்கள் இறைவனடி சேர்ந்தார்களா ? புனிதமாக காட்டுவதற்கென்றே எரிக்கப்பட்டார்களா ? என்று அவ்வப்போது கேட்டு வருகின்றனர்.

இதற்கு விளக்கமாக சைவ அன்பர்கள் சார்பில் சொல்லப்படுவது தான் மேற்கண்ட Spontaneous Human Combustion , அதாவது அவர்களாகே எரிந்து சாம்பலனார்களாம்.

சம்பந்தரும் ஆண்டாளும் மாயமாக மறைந்தது எப்படி?

"பாரதத்தில் ஆதி சங்கரர் குகைக்குள் சென்று மறந்தார். (சர்வக்ஞபீடம் ஏறி மறைந்தது), இராமலிங்க வள்ளலார் ஒரு அறைக்குள் சென்று ஜோதி வடிவாகப் போனார், ஆண்டாள் ஸ்ரீ ரங்கநாதருடன் ஐக்கியமாகி மறைந்தார். ஞானசம்பந்தர் தனது சீடர்களுடன் திருமணப் பந்தலில் (இதைப் பகுத்தறிவு வாதிகள் தீ விபத்து என்று வருணிப்பர்) ஜோதியில் ஐக்கியமானார்.


மாணிக்கவாசகருடன் இருந்த அடியார்கள் அவரை மட்டும் விட்டு ஜோதிக்குள் புகுந்தனர். பின்னர் மாணிக்கவாசகரும் ஜோதியில் ஐக்கியமானார். நந்தனார் மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர் ஜோதியில் கலந்தார்கள். இவை எல்லாவற்றையும் SPONTANEOUS COMBUSTION என்று கூறலாம்.

தானாக எரியும் நிகழ்ச்சியில் சில அதிசய ஒற்றுமைகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர்.
(1) இந்தத் தீ அவர்களின் உடலிலிருந்து உற்பத்தியாகிறது.
(2) அருகில் எளிதில் தீப்பிடிக்கும் பெட்ரோல், பஞ்சு ஆகியன இருந்தாலும் அவைகளை எரிப்பதில்லை.
(3) பெரும்பாலான நிகழ்ச்சிகளில் உடை முதலியன கூடக் கருகாமல் அப்படியே குளிக்கும் முன் 'கழற்றி வைத்த' உடைகள் போல உள்ளன.
மேலும் படிக்க.... (நன்றி ! துவாரகை இணைய இதழ்)"

****

நந்தனார் வரலாற்றில் தெளிவாக தீ புகுந்தார் என்றே குறிப்பிடப்பட்டு ஜோதியில் கலந்தார் என்று சொல்லப்படுகிறது, தானாகவே எரிந்து மறைந்தார் என்று சொல்லப்படவில்லை. மேலும் Spontaneous Human Combustion ஆல் எரிபவர்களின் எலும்புகளும் முற்றிலும் எரிந்துவிடாது கூடவே சாம்பல்கள் தேறும். ஆனால் இறைவனடி சேர்ந்தவர்கள் அனைவருமே கருவறையில் மறைந்தார்கள் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கிறதா ? இறைவனடி சேர்ந்ததாக சொல்லப்பட்டு நம்ப வைக்கும் நிகழ்வுகளை Spontaneous Human Combustion என்ற எதிர்பாராத நிகழ்வாக சொல்லிவிடமுடியுமா ?

எனெனில் Spontaneous Human Combustion எரிந்த வெளிநாட்டினர் யாருமே சங்கரரை, ஞானசம்பந்தரை, ஆண்டாளைப் போல் ஞானிக்கள் கிடையாது, சாதாரண மனிதர்களே. இவர்கள் கூற்றுப்படி யோக / ஞான சக்திகளால் உயர்ந்த ஆன்மிகவாதிகளுக்கு கிடைக்கும் Spontaneous Human Combustion என்கிற தானாகவே எரிந்து போகும் பேறு / சக்தி, அதாவது இறைவனடி சேறுதல், வெளிநாட்டில் சாதாரண மனிதர்களுக்கும் கிடைத்திருக்கிறதென்றால் அதில் அற்புதம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதற்கு மேலும் விளக்கம் சொல்ல மைக்ரோவேவ் சமையலையெல்லாம் கூடச் சொல்கிறார்கள்.

எனக்கு கேள்வியாக எழுவது ஒன்று தான். வள்ளலாரும் இறைவனடி சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பிறகு நல் ஆன்மிகவாதிகள் இறைவன் அருள் பெற்றவர்கள் எவருமே தோன்றவே இல்லையா ? அவர்களையெல்லாம் இறைவன் ஏன் ஆட்கொள்ளவில்லை, ஆனால் இறைவனருகில் ஆட்(களால்)கொல்லப்பட்டவர் உண்டு .அவர் தான் 'சங்கர ராமன்' வரலாறுகள் சரியாக பதியப்பட்டால், அல்லது பதிந்தது அழிக்கப்பட்டால் காஞ்சிபுரத்தில் கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் கூட நாளைக்கு ஆழ்வார் வரிசையில் கடைசியாக இடம் பிடித்து அவருக்கென்றே தனி புராணம் கூட எழுதப்பட்டு இருக்கும்.

*******

இறை என்பது ஒரு உணர்வே. மனமாற்றத்திற்கான சக்தியைத் தந்து அதன் முலம் வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தியே இறைவனுக்கு இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம், அதையெல்லாம் விட்டுவிட்டு இறைவன் ஆட்கொண்டான், அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.
:(

29 கருத்துகள்:

வண்ணான் சொன்னது…

http://jeeno.blogspot.com/2007/03/blog-post.html

//


இங்கேயும் சென்று பார்க்கவும் :)

கிருஷ்ணா சொன்னது…

//இறை என்பது ஒரு உணர்வே. மனமாற்றத்திற்கான சக்தியைத் தந்து அதன் முலம் வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தியே இறைவனுக்கு இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம், அதையெல்லாம் விட்டுவிட்டு இறைவன் ஆட்கொண்டான், அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.
//

Fine..

ராஜேஷ், திருச்சி சொன்னது…

பட்டுப்போகும் , பழிக்கப்படும் என்றெல்லாம் உளற வேண்டாம்..

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மீகம் இந்த நிலையிலேயே தழைத்தோங்கி வளர்ந்துள்ளது.. எங்கும் பட்டுப்போகவில்லை..
உங்கள் நாத்திகம் தான் இன்னும் 3% - 5% கூட்டமாக வளராது இருக்கிறது என்பதை நியாபகம் வைக்கவும்..

ஆன்மிகம் அனுபவிக்கப்படவேண்டியது, அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அதனருமை தெரியும்.. இப்படி ஆராய்ந்து அழுக்கு தேட நினைக்கும் உங்களை போன்ற நாத்திகர்களுக்கு புரிய வாய்ப்பில்லை..

இந்த கண்ணனுக்கு எல்லாம் வல்ல அந்த இறைவன், கிருஷ்ண பரமாத்மா நல்ல புத்தி தரட்டும்..

கோவி.கண்ணன் சொன்னது…

// ராஜேஷ், திருச்சி said...
பட்டுப்போகும் , பழிக்கப்படும் என்றெல்லாம் உளற வேண்டாம்..//

இறைப் பயிரில் முளைத்திருக்கும் போலிப் புல்லுறுவிகளை களையெடுப்பதைத் தான் நான் செய்துவருகிறேன். பிடிங்கி எரியப்படும் புல்லுறுவிகளின் மரண ஓலம் எப்போதும் கேட்கவே செய்கிறது, உயிர்வலி அனைவருக்கும் பொதுவன்றோ.

//இந்த கண்ணனுக்கு எல்லாம் வல்ல அந்த இறைவன், கிருஷ்ண பரமாத்மா நல்ல புத்தி தரட்டும்..//

இறைபற்றி சரியான புரிதல் உங்களுக்கும் கிட்ட வேண்டும் என்று நானும் எண்ணம் வைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜேஷ், திருச்சி said...

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மீகம் இந்த நிலையிலேயே தழைத்தோங்கி வளர்ந்துள்ளது.. எங்கும் பட்டுப்போகவில்லை..
உங்கள் நாத்திகம் தான் இன்னும் 3% - 5% கூட்டமாக வளராது இருக்கிறது என்பதை நியாபகம் வைக்கவும்..//

வருணாசிரமம், சாதியக் கூறுகள் இவை காரணமாக அன்னிய மதங்களின் ஊடுறுவல் என இந்திய ஆன்மிகம் தலைதொங்கிதான் இருக்கிறது. நாத்திகர்கள் இல்லை என்றால் இன்னும் கூட அடிப்படை வாத மூதேவிகள் பெண்களை உடன்கட்டை ஏறச் சொல்லியும்,கோவில்களில் பெண்களை ஆடவிடுவதும் இல்லாமல் அவர்களை வைப்பாட்டியாக்கி இறைவனின் பெயரில் அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள், மறுமணம் என்பதே பெண்களுக்கு மறுக்கப்பட்டு இருக்கும்.

கருத்தியல் ரீதியாக எதாவது சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். சும்மா 1000 - 2000 ஆண்டு பீலாவெல்லாம் இங்கு வேண்டாம்

//ஆன்மிகம் அனுபவிக்கப்படவேண்டியது, அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அதனருமை தெரியும்.. இப்படி ஆராய்ந்து அழுக்கு தேட நினைக்கும் உங்களை போன்ற நாத்திகர்களுக்கு புரிய வாய்ப்பில்லை..
//

ஆன்மிகம் நல்லாவே அனுபவிச்சிட்டுதான் 'திருச்சி' சாமியார் பிரேம்ஸ் சிறைக்கம்பிக்குள் இருக்கார், சிக்காதவர்களெல்லாம் வெளியே இருக்கிறார்கள்.

ராஜேஷ், திருச்சி சொன்னது…

//வாத மூதேவிகள் பெண்களை உடன்கட்டை ஏறச் சொல்லியும்,கோவில்களில் பெண்களை ஆடவிடுவதும் இல்லாமல் அவர்களை வைப்பாட்டியாக்கி இறைவனின் பெயரில் அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள், மறுமணம் என்பதே பெண்களுக்கு மறுக்கப்பட்டு //

இதையெல்லாம் ஆன்மீகம், கடவுள் பக்தி என்று நீங்கள் குழம்பியிருப்பது நன்றாக தெரிகிறது.
மறுமனம் மறுக்கப்படுவதும், உடன்கட்டை ஏறுவதும் ஆன்மீகத்தின் வெளிப்பாடு என்று நீங்கள் நினைத்து கொன்டிருப்பதை நினைத்தால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. உங்களுக்கு புரிந்த ஆன்மீகம் அது.


//கருத்தியல் ரீதியாக எதாவது சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். சும்மா 1000 - 2000 ஆண்டு பீலாவெல்லாம் இங்கு வேண்டாம் //

இதில் என்ன பீலா கன்டீர்?? யதார்த்த உண்மையை சொன்னேன்.. இல்லாத ஒரு விஷயம், பொய் என்று சொல்லப்படும் ஒரு விஷயம் இத்துனை ஆண்டு காலம் தழைத்தோங்க இயலாது , ஆரம்பத்தில் பளிச்சிட்டாலும்,விரைவில் பட்டுவிடும்.. ஆனால் இந்த ஆன்மீக சிந்தனை , ஈடுபாடு காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்க காரணம் அதில் இருக்கும் உண்மை என்று கோடிட்டு காட்டவே இந்த யதார்த்தை சொன்னேன். உங்களால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை.

//'திருச்சி' சாமியார் பிரேம்ஸ் சிறைக்கம்பிக்குள் இருக்கார்//

இது தான் ஆன்மீகம், அந்த சாமியார் தான் ஆன்மீகவாதி என்று நீங்கள் நினைத்து இருப்பதால் தான் இந்த மாதிரி பதிவுகள் , கருத்துக்கள் உங்களிடமிருந்து வருகிறது.. போலி சாமியார்களை விட்டு வெளியே வாருங்கள்..

இறுதியாக, ஆன்மீகம் , மூட சம்பிரதாயம், போலி சாமியார் என்று எல்லாத்தையும் போட்டு குழம்பிக்கொள்ளவேண்டாம்.,

நையாண்டி நைனா சொன்னது…

ஒரு தொழில் இருக்கிறது... அது கூட.... 1000, 2000 வருடமாக அழியாமல் தான் இருக்கிறது....அப்படியானால் அது ????

மாட்டினா போலி சாமி... மாட்டாட்டி.. லோக குரு... நல்ல இருக்கு உங்க கதை....

நையாண்டி நைனா சொன்னது…

"யூ வில் கெட் மோர் பிறாஸ்பரஸ்" என்று சொல்லி இருப்பாங்க அதை அவர்கள் தப்பா புரிந்து கொண்டு "பாஸ்பெரஸ்" -ஐ எடுத் திருப்பார்கள்....

வால்பையன் சொன்னது…

ஆன்மீகவாதிகளுக்கு கொழுப்பு அதிகம் போல, ஒருவேளை அதனால் ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறார்களோ!

ராஜேஷ், திருச்சி சொன்னது…

//..ஆன்மீகவாதிகளுக்கு கொழுப்பு அதிகம் போல..//

நாத்திகவாதிக்கு கொழுபு இல்லை என்று சொல்லமுடியுமா?
ஆன்மீகத்துக்கும் கொழுப்புக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.
குதர்க்க பேச்சு இந்த நாத்திகர்களுக்கு கை வந்த கலை போல..

வால்பையன் சொன்னது…

எனக்கும் கொழுப்பு இருக்கு,
ஆனா தானா எரிஞ்சி சாம்பாலாகர அளவுக்கு இல்லை,
அதனால் தான் அதிகமோ என்று கேட்டிருந்தேன்.
இதில் குதர்க்கம் எங்கிருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//இதையெல்லாம் ஆன்மீகம், கடவுள் பக்தி என்று நீங்கள் குழம்பியிருப்பது நன்றாக தெரிகிறது.
மறுமனம் மறுக்கப்படுவதும், உடன்கட்டை ஏறுவதும் ஆன்மீகத்தின் வெளிப்பாடு என்று நீங்கள் நினைத்து கொன்டிருப்பதை நினைத்தால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. உங்களுக்கு புரிந்த ஆன்மீகம் அது.//

எல்லா இனப்பெண்களுக்கும் மதத்தின் வழியாகவே கடவுளின் பெயராலேயே அநீதி இழைக்கப்படுகிறது, இயற்கையாக மாதம் தோறும் வெளியேறும் இரத்தம் தீட்டு, புனிதமற்றவள் என்று சொல்வது ஆன்மீகமா ? பெண்மீகமா ?

அதே தீட்டுப் பெண்கள் தாரளமாக உள்ளே பூசை செய்ய மேல்மருவத்தூர் போன்ற கோவில்களில் அனுமதிக்கிறார்கள்,அங்கே பூஜைசெய்யும் மாதவிலக்கு பெண்களெல்லாம் வயிறு வெடித்து செத்தா போய்விட்டார்கள் ?

12 வயது ஐயப்பனுக்கு பருவமடைந்த பெண்கள் அக்கா முறைதான், பிறகு ஏன் அவர்களை கோவிலுக்கு மற்ற ஆண்களைப் போல் விரதத்துடன் செல்ல அனுமதிப்பது இல்லை ?

அதுக்கு சூப்பர் காரணம் ஒரு ஐயப்பன் படத்தில் சொல்லி இருப்பாங்க, அப்படி பருவப் பெண் அந்த கோவிலுக்கு போனால் மாலை போட்டிருக்கும் சாமிகள் மனது கெட்டு அவளை மானபங்கப்படுத்திவிடுவார்களாம். ஐயோஓஓஓஓஓஓஓ

அட எனக்கு புரிந்த ஆன்மிகம் வேண்டாம் உங்களுக்கு தெரிந்த அக்மார்க் தூய புனித ஆன்மிகத்தைதான் இங்கே சொல்லுங்களேன், உங்கள் பதிவில் எழுதுங்களேன் நான் என்ன உங்களை கையை அழுதிப்பிடித்து இருக்கேனா ?


//இதில் என்ன பீலா கன்டீர்?? யதார்த்த உண்மையை சொன்னேன்.. இல்லாத ஒரு விஷயம், பொய் என்று சொல்லப்படும் ஒரு விஷயம் இத்துனை ஆண்டு காலம் தழைத்தோங்க இயலாது , ஆரம்பத்தில் பளிச்சிட்டாலும்,விரைவில் பட்டுவிடும்.. ஆனால் இந்த ஆன்மீக சிந்தனை , ஈடுபாடு காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்க காரணம் அதில் இருக்கும் உண்மை என்று கோடிட்டு காட்டவே இந்த யதார்த்தை சொன்னேன். உங்களால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை.//

பொய் என்ற விசயம் இத்தனை காலம் தழைத்தோங்காதா ? யார் சொன்னது ? இன்றும் காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன், மூக்கு சளியில் இருந்து பிறந்தவன் பார்பனன் என்று என்று சொல்வதெல்லாம் பொய் என்றே தெரிந்தே தலைத்தொங்கலையே ?

சாதிகள் என்பதும் பொய்தானே ? அவைகள் 2000 ஆண்டுகளாக தலைத்தோங்கவில்லையா ?

எதுவும் தலைத்தோங்க சிறந்த கொள்கை என்று காரணம் மட்டுமே போதாது, கூடவே அடிப்படை வாதிகளின் சப்போர்ட்டும் இருக்கவேண்டும். அதுதான் நடப்பது எல்லாமே.

1400 ஆண்டுகளாக இஸ்லாம் மற்றும் கிறித்துவம் கூடத்தான் இருக்கிறது, அவைகளும் உயர்ந்தவையே, அவைகளின் இறைவனும் ஒன்றே என்று உங்களால் சொல்ல முடியுமா ?

அப்படி சொல்ல முடிந்தால் முதலில் நீங்கள் சென்று கருத்துரைக்க வேண்டிய இடம் எனது பதிவு அல்ல, இந்துத்துவ வாதிகளின் பதிவே.

//இது தான் ஆன்மீகம், அந்த சாமியார் தான் ஆன்மீகவாதி என்று நீங்கள் நினைத்து இருப்பதால் தான் இந்த மாதிரி பதிவுகள் , கருத்துக்கள் உங்களிடமிருந்து வருகிறது.. போலி சாமியார்களை விட்டு வெளியே வாருங்கள்..

இறுதியாக, ஆன்மீகம் , மூட சம்பிரதாயம், போலி சாமியார் என்று எல்லாத்தையும் போட்டு குழம்பிக்கொள்ளவேண்டாம்.,//


ஆன்மிகத்திலிருந்து மூடநம்பிக்கையையும், போலி சாமியார்களையும் அடையாளம் காட்டுபவனே நாத்திகன் தான், ஆக்சுவலி கோவிலில் முதல்மரியாதையாக பூரணகும்ப மரியாதைக் கொடுக்க வேண்டுமென்றால் அவற்றை நாத்திகனுக்குத்தான் கொடுக்கவேண்டும். அவன் தான் ஆன்மிகத்தில் இருக்கும் குப்பைகளை, சாக்கடை புழுக்களையும் அடையாளம் காட்டுவதுமின்றி அழிக்கவும் செய்கிறான்

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...
ஆன்மீகவாதிகளுக்கு கொழுப்பு அதிகம் போல, ஒருவேளை அதனால் ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறார்களோ!
//

அடியார்கள் ஒருவேளை சாரி சாரி மூன்று வேளையும் நெய் பண்டமாக சாப்பிட்டு சாப்பிட்டு கொழுப்பு கூடிப்போச்சோ என்னவோ. இருக்கலாம் நந்தனும் பன்றி இறைச்சு உண்ணும் மக்களைச் சார்ந்தவன் என்பதால் Spontaneous Human Combustion சாத்தியமாகி இருக்கும்.

:)

Dr.Rudhran சொன்னது…

வால்பையன் 6:23 PM, November 25, 2008

ஆன்மீகவாதிகளுக்கு கொழுப்பு அதிகம் போல, ஒருவேளை அதனால் ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறார்களோ!

thank god!!! i dont have that kozhuppu!!!!

வால்பையன் சொன்னது…

// Dr.Rudhran said...

வால்பையன் 6:23 PM, November 25, 2008

ஆன்மீகவாதிகளுக்கு கொழுப்பு அதிகம் போல, ஒருவேளை அதனால் ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறார்களோ!

thank god!!! i dont have that kozhuppu!!!!//


சார், அது விளையாட்டாக சொன்னது,
சீரியசாக எடுத்து கொள்ளாதீர்கள்.
மதனின் ”மனிதர்களும், மர்மங்களும்” புத்தகத்தில் இதை பற்றி படித்திருக்கிறேன், இவ்வாறு நடப்பதற்க்கு உடம்பில் இருக்கும் கொழுப்பு வகைகளே காரணம் என்று அறிவியல் சொல்வதாக எழுதியிருந்தார்,
அதனால் அவ்வாறு குறிப்பிட்டேன்.

மணிகண்டன் சொன்னது…

கோவி :- ஆன்மீகத்துக்கும் மதத்திற்கும் உள்ள வேற்றுமையை நன்கு புரிந்து எழுதி வந்தவர் தானே நீங்கள் ? அப்படி இருக்கும் பொழுது இப்பதிவிற்கான பின்னூட்டத்தில் அவ்விரண்டையும் கலந்து ஒரே மஜா செய்து இருக்கிறீர்கள் !

ஒரு பத்து நாட்களுக்கு ஆன்மிகம் / மதம் / நாத்திகம் / ஈழம் ஆகியவை இன்றி பதிவு எழுதுங்களேன் ! உங்களால் முடியாதது அல்ல !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் 10:09 PM, November 25, 2008
கோவி :- ஆன்மீகத்துக்கும் மதத்திற்கும் உள்ள வேற்றுமையை நன்கு புரிந்து எழுதி வந்தவர் தானே நீங்கள் ? அப்படி இருக்கும் பொழுது இப்பதிவிற்கான பின்னூட்டத்தில் அவ்விரண்டையும் கலந்து ஒரே மஜா செய்து இருக்கிறீர்கள் !//

மதிப்பிற்கு குரிய மணிகண்டன், நான் எங்கே ஆன்மிகத்தை கொச்சைப்படுத்தி எழுதி இருக்கிறேன் என்று சுட்டிக்காடுங்கள். இங்கே ஆன்மிகம் என்று சொல்லபடுவது அனைத்தும் மதவாதமாக இருக்கும் போது அப்படி பட்ட புரிதல் கூட சாத்தியமானதே. ஆன்மிகத்தை பழிப்பது என் நோக்கமல்ல, ஆனால் ஆன்மிகம் என்ற பெயரில் மதவாதம் செய்பவர்களுக்கு அதே பெயரில் பதில் சொன்னால் தான் புரியும். எனது பதிவுகளில் இறை மறுப்பு எப்போதும் இருக்காது. மூட நம்பிக்கையை சாடி மட்டுமே எழுதி வருகிறேன்.

//ஒரு பத்து நாட்களுக்கு ஆன்மிகம் / மதம் / நாத்திகம் / ஈழம் ஆகியவை இன்றி பதிவு எழுதுங்களேன் ! உங்களால் முடியாதது அல்ல !
//

கஷ்டம் தான். ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் இவை அனைத்துமே எதோ ஒரு வழியில் நம்முடைய தாக்கத்துக்கு உள்ளாகிறது, 'உளவியல்' என்ற குறிசொற்களில் நீங்கள் கேட்கும் பதிவுகள் நிறைய எழுதி இருக்கிறேன். இருந்தாலும் நீங்கள் சொல்வதை முயற்சி செய்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
கோவி :- ஆன்மீகத்துக்கும் மதத்திற்கும் உள்ள வேற்றுமையை நன்கு புரிந்து எழுதி வந்தவர் தானே நீங்கள் ?
//

எப்போதும் அப்படியே ஆன்மிகம் மற்றும் மதத்தின் வேறுபாடு தெரிந்தே தான் எழுதுவருகிறேன், ஆன்மிகத்தில் பேருண்மைகள் உண்டு அதுவே மெய்ஞானம் எனப்படும், ஆன்மிகத்தில் அற்புதங்கள் எதுவும் கிடையாது. அற்புதங்கள் இருப்பதாக நம்புபவர்கள் பக்தியாளர்கள். அற்புதம் நிகழ்த்தி பக்தர்களை ஏமாற்றுபவர்கள் போலி சாமியார்கள் மற்றும் போலி ஆன்மிகவாதிகள்.

மணிகண்டன் சொன்னது…

***** ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் இவை அனைத்துமே எதோ ஒரு வழியில் நம்முடைய தாக்கத்துக்கு உள்ளாகிறது *****

என்னோட அன்றாட வாழ்க்கை சாப்பாடு, வேலை, பணம் என்று ஓடுகிறது. அதனால தான் கேட்டேன் !

மணிகண்டன் சொன்னது…

*********** இங்கே ஆன்மிகம் என்று சொல்லபடுவது அனைத்தும் மதவாதமாக இருக்கும் போது அப்படி பட்ட புரிதல் கூட சாத்தியமானதே. ஆன்மிகத்தை பழிப்பது என் நோக்கமல்ல, ஆனால் ஆன்மிகம் என்ற பெயரில் மதவாதம் செய்பவர்களுக்கு அதே பெயரில் பதில் சொன்னால் தான் புரியும். எனது பதிவுகளில் இறை மறுப்பு எப்போதும் இருக்காது. மூட நம்பிக்கையை சாடி மட்டுமே எழுதி வருகிறேன் ******

உங்களுடைய ஒன்றிரண்டு பதிவுகளை படிப்பவர்களுக்கு புரிதல் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அதுனால நீங்க எல்லாரையும் மதவாதம் செய்பவர்களாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் 1:07 AM, November 26, 2008
*********** இங்கே ஆன்மிகம் என்று சொல்லபடுவது அனைத்தும் மதவாதமாக இருக்கும் போது அப்படி பட்ட புரிதல் கூட சாத்தியமானதே. ஆன்மிகத்தை பழிப்பது என் நோக்கமல்ல, ஆனால் ஆன்மிகம் என்ற பெயரில் மதவாதம் செய்பவர்களுக்கு அதே பெயரில் பதில் சொன்னால் தான் புரியும். எனது பதிவுகளில் இறை மறுப்பு எப்போதும் இருக்காது. மூட நம்பிக்கையை சாடி மட்டுமே எழுதி வருகிறேன் ******

உங்களுடைய ஒன்றிரண்டு பதிவுகளை படிப்பவர்களுக்கு புரிதல் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அதுனால நீங்க எல்லாரையும் மதவாதம் செய்பவர்களாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.
//

ஒன்றிரண்டு பதிவுகளைப் படிப்பவர்களுக்கு புரியாது என்பது சரிதான். ஆரம்பத்தில் அப்படி பட்ட புரிதலுடன் என்னை நாத்திகனாக பார்த்தவர்கள் பிறகு மாற்றிக் கொண்டார்கள். நான் எல்லோரையும் மதவாதம் செய்பவராக நினைத்து இருந்தால் ஆன்மிகம் எழுதும் சில பதிவர்களுடன் நெருக்கமாக கருத்துப்பரிமாற்றம் செய்ய முடியாது. மதவாதத்திற்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள நெருக்கமும், இவற்றிற்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும். கூடவே யார் மதவாதம் பேசுகிறார்கள், யார் ஆன்மிகம் பேசுகிறார்கள் என்பதும் ஓரளவுக்குத் தெரியும். நீங்கள் சொல்வதை எண்ணத்திலும் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...

என்னோட அன்றாட வாழ்க்கை சாப்பாடு, வேலை, பணம் என்று ஓடுகிறது. அதனால தான் கேட்டேன் !
//

இன்றைக்கு அரசு விடுமுறை வீட்டில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் எதாவது ஒரு மதப்பண்டிக்கை இன்று வந்திருக்கலாம். வேலைக்குச் செல்லும் போது திடீர் போக்குவரத்து தடை எதாவது இடத்தில் மதத்தீவிரவாதிகளால் குண்டுவெடிப்பு அதனால் அடுத்த 10 நாள் பதட்டம். இப்படி அன்றாடம் இல்லாவிட்டாலும் எதோ ஒரு வழியில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் மறைமுகமாக சிறிய / பெரிய அளவில் மதத்தீவிரவாதங்கள், மூடநம்பிக்கைகள், மத நம்பிக்கைகள், இறை நம்பிக்கைகள் பாதிப்பை / தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ?

SurveySan சொன்னது…

////அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.
////

பழிக்கப்படும் - yes
பட்டுப்போகும் - no

The concept of GOD is much much bigger than any of us. It will survive until the last survivor on earth :)

கோவி.கண்ணன் சொன்னது…

// SurveySan said...
////அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.
////

பழிக்கப்படும் - yes
பட்டுப்போகும் - no

The concept of GOD is much much bigger than any of us. It will survive until the last survivor on earth :)
//

இறை நம்பிக்கை பட்டுப் போகும் என்று சொல்ல வரவில்லை, ஆன்மிகம் என்ற பெயரில் சொல்லப்படும் அபத்தங்களைத் தான் குறிப்பிட்டேன்.

மாஜி கடவுள்கள் பற்றி கேள்விப்பட்டது இல்லையா ? வேதகாலத்தில் போற்றப்பட்ட இந்திரன் கூட மாஜி கடவுள் தான். ஏனென்றால் அதற்கு பிறகு இந்திரன் பற்றி வந்த கதைகள் யாவும் அவனை பெண் பித்தனாகவே காட்டியது, அப்போதெல்லாம் பெண் பித்து என்பது பெருமையான ஒன்றாம், பிறகு கருத்துமாறவே இந்திரனை பலரும் மறந்துவிட்டனர். தேவலோக இந்திரனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பூலோகத்தில் கோவில்கள் கிடையாது.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இறை என்பது ஒரு உணர்வே. மனமாற்றத்திற்கான சக்தியைத் தந்து அதன் முலம் வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தியே இறைவனுக்கு இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம், அதையெல்லாம் விட்டுவிட்டு இறைவன் ஆட்கொண்டான், அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.
:(\\

nice

நட்புடன் ஜமால் சொன்னது…

\\ SurveySan said...
////அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.
////

பழிக்கப்படும் - yes
பட்டுப்போகும் - no

The concept of GOD is much much bigger than any of us. It will survive until the last survivor on earth :)\\

சர்வேசன் உங்கள் அனுமதியோடு...

The concept of GOD is much much bigger than any of us.
HE will survive EVEN AFTER the last survivor on earth.

HE WILL SURVIVE FOR-EVER

SurveySan சொன்னது…

ஜமால்,

///HE WILL SURVIVE FOR-EVER///

interesting. He might, but we may never know, if He really existed, when we were around :)

கோவி.கண்ணன் சொன்னது…

//HE WILL SURVIVE FOR-EVER//

Survesan and Jamal,

Both you are totally wrong

"IT" is not He / She

IT Will Servive for-ever !

is 'it' ok ?
:)

மணிகண்டன் சொன்னது…

*************** இன்றைக்கு அரசு விடுமுறை வீட்டில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் எதாவது ஒரு மதப்பண்டிக்கை இன்று வந்திருக்கலாம். ***********

நீங்க விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி எல்லாம் பாக்கறது இல்லையா ?

நான் விடுமுறை மட்டும் தான் பாக்கறேன். எதுக்குன்னு புரியறது இல்ல. நான் ! ஒரு தடவைக்கு மேல இங்க உள்ள மக்கள் கிட்ட காரணம் கேட்டு இருக்கேன். பாதி பேருக்கு மேல அவங்களுக்கும் தெரியல !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்