பின்பற்றுபவர்கள்

24 நவம்பர், 2008

முதியோர் இல்லங்கள் இனி பெருகுமா ?

தன் விருப்பம் போன்ற வாழ்க்கை என்னும் தன்னல வாழ்வின் எச்சமாக திகழ்பவை முதியோர் இல்லங்கள் என்று சொன்னால் அது மிகச் சரிதான் என்றே நினைக்கிறேன். மேலை நாடுகளில் பிள்ளைகளுக்கும் பெற்றேர்களுக்கும் கடமை என்ற ஓர் உணர்வைத் தவிர்த்து எந்த பற்றுதலும் இல்லை. வாரிசுகள் கவனித்துக் கொள்ளும் என்ற நப்பாசையில் வாரிசுகளை உருவாக்கிக் கொள்ளும் எண்ணத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. சமூகத் தொடர்ச்சிக்கான ஒரு கடமை என்ற அளவில் பெற்றுக் கொண்டு அந்த குழந்தைக்கு தேவையானதைச் செய்து வயது வந்த பிறகு விருப்படி படிப்பையும் வாழ்க்கை துணையை அமைத்துக் கொள்ள பெற்றோர்கள் தடையாக நிற்பதில்லை. மாறாக அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்துவிடுவார்கள். பழம் பழுத்துவிட்டால் மரம் அதனை உரிமை கொண்டாடுவதில்லை, கோழிக் குஞ்சு வளர்ந்துவிட்டால் கோழிகள் அதனை அதன் போக்கில் விட்டுவிடும் என்பதாகவே வெளிநாட்டினரின் இல்ல அமைப்புகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் முதியோர் இல்லங்கள் இருக்கின்றன, பெற்றோர்களே நோய்வாய்ப்படும் போது அங்கே சேர்த்துவிட சொல்லுவார்கள். மிகச் சிலரே சொத்துக்களை இழந்து முதியோர் இல்ல அரவணைப்பில் வாழ்வின் கடைசி பகுதியை கழிக்கிறார்கள்.

ஆனால் இந்திய இல்ல அமைப்பில் அனைத்தும் பெற்றோர்களின் கட்டுப்பாட்டினால் தான் நடக்கிறது, என்ன படிக்க வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இன்றும் 90 விழுக்காடு பெற்றோர்களே முடிவு செய்கிறார்கள். இன்றைய வாழ்க்கை முறையில் ஏற்பட்ட உலகளாவிய பண்பாட்டின் தாக்கம் திருமணத்திற்கு பிறகு பெற்றோர்களையும் வாரிசுகளையும் முற்றிலும் விலக்கிவிடுக்கிறது. பெற்றோர்களால் இதை இசைந்து கொள்வது கடினம் என்ற நிலையில், கிட்டதட்ட சமூக மாற்றத்தில் சிக்கிக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். வரும் காலத்தில் பெற்றோர்கள் இந்த அளவுக்கு வாரிசுகளின் மீது பற்றுதல் கொண்டிருந்தால் இதே நிலைதான் தொடர்ந்தும் இருக்கும். ஏனென்றால் ஆண்வாரிசு என்பதே இன்றும் பலரது விருப்பமாக இருக்கிறது. முதியோர் இல்லங்கள் பெருகியதோ இல்லையோ, அதில் சேரும் முதியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைய தேதியில் ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகாள் கூட 3 வயதிலிருந்தே பாலர் பள்ளிகளில் முழுநாளும் கழிக்கின்றன. பிள்ளைகளையே அப்படி விடும் போது முதியவர்களை பாதுகாப்பு கருதி முதியோர் இல்லங்களில் விருப்பமின்றி விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் முதியோர் இல்லங்களுக்குச் செல்லும் எல்லா முதியவர்களும் நிலையும் அப்படி அல்ல சிலர் வலுக்கட்டாயமாகவும், சிலர் வழியின்றியும் அங்கே வருகிறார்கள்

*****

இலவச அன்னச் சத்திரங்களை தொழில் முறை ஹோட்டல்களாக மாற்றிய பெருமை 'சோ' கால்ட் முற்பட்ட வகுப்பினருக்கே உண்டு. வழிப்போக்கர்க்களுக்கு உணவு அளிப்பதற்கென்றே ஒருகாலத்தில் இலவச உணவு சத்திரங்கள் இயங்கிவந்தன. பல்வேறு சாதி அமைப்புகளும் தனித்தனியாக உணவு சத்திரங்கள் வைத்து உணவை இலவசமாக அளித்து இளைப்பாரும் வசதிகளெல்லாம் செய்துவந்தனர். ஆங்கில ஆதிக்கத்திற்கு பிறகே இலவச உணவு சத்திரங்கள் மறைய ஆரம்பித்து, வியாபாரமாக நரசூஸ் காஃபியுடன் ஆரிய பவன்கள் தோன்றியது. இன்று எல்லா சமூகத்தினருமே ஓட்டல் தொழில் ஈடு(லாபம்) உள்ளதாக கருதி அதனைச் செய்கின்றனர். எதையும் லாப நோக்காகவும் தொழிலாகவும் கொண்டு செல்லும் போது அதனை நல்ல செயல், சேவை என்றெல்லாம் புனிதம் கற்பித்துவிட முடியாது, வெறும் வயிற்றுப்பாட்டிற்கான பிழைப்பு அவ்வளவுதான்.

லாப நோக்கங்களுக்கு மனதில் முதன்மைத்துவம் கொடுக்க கொடுக்க, நாளடைவில் நம் குடும்பம் என்று கூட்டுக் குடும்பமாக இருந்த இல்வாழ்க்கை, என் குடும்பம் என்று சுறுங்கியது, அதில் பெற்றோர்களை மட்டும் சேர்த்துக் கொண்டனர், அதன் பிறகு அதற்கும் பங்கம் ஏற்பட்டு, 'கிழடுகளைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதா ? நம் வாழ்க்கை முதியோர்களுக்கு பணிவிடை செய்து கழிந்துவிடக் கூடாது' என்ற மேற்கத்திய சித்தாந்ததில் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களுக்கு துறத்தப்பட்டனர். அடிப்படைவாதம் தவிர்த்து பிற சமூக மாற்றம் எதையும் ( மன முறிவு, மறுமணம் போன்றவற்றை) வாழ்க்கையில் விரைவாக உள்வாங்கிக் கொள்ளூம் முற்பட்ட சமூகமே குறிப்பாக பார்பன சமூகத்தினரிடையே (எல்லோரும் அல்ல) பிற சமூகத்தினரைவிட இந்த மாற்றம் விரைவாகவே ஏற்பட்டு இருக்கிறது. பார்பன முதியோர்களுக்கென்றே விஷ்ராந்தி என்கிற முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது.

உறவுகளின் துரோகம்: முதியோர் (விஷ்ராந்தி) இல்லத்தில் ஒரு மூத்த எழுத்தாளர்!

இராஜம் கிருஷ்ணன் வாரிசுகளால் கொண்டுவந்துவிடப் படவில்லை என்பது ஆறுதலான ஒன்று, காரணம் அவருக்கு வாரிசுகளே இல்லை.

விஷ்ராந்தி பார்பன முதியோர்களுக்கு என்றே அறிகிறேன். முதியோர்களாக இருந்தாலும் அங்கும் தீட்டுப்படமால் ஆச்சாரத்துடன் தான் இருப்பதற்கான ஏற்பாடும் போலும். சாகிற வரை சாதியைக் கட்டிக் கொண்டு :(

பிற்காலத்தில் அனைத்து சாதி சமூகங்களும் தங்களின் அன்னச் சத்திரங்களுக்கு மாற்றாக ஓட்டல்கள் தொழில் தொடங்கியது போல் இதனைப் பார்த்து பல்வேறு சாதிகளும் தங்களுக்கான சாதிய அடிப்படையில் முதியோர் இல்லங்களை கட்டிக் கொண்டு அதில் பெற்றோர்களை தள்ளிவிட்டாலும் வியப்பொன்றும் இல்லை.

பிற சமூகத்தினரும் முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை தள்ளிவிடுகின்றன என்ற போதிலும் விழுக்காட்டு அளவில் முற்பட்ட சமூகத்தினரை விட அது மிகக் குறைவுதான்.

முதியோர் இல்லங்கள் தவறு அல்ல, சூழ்நிலை எதுவுமே இல்லாமல், வெறும் பெரும் சுமை என்று கொண்டு வந்து தள்ளப்படும் முதியோர் இல்லங்களும், அவற்றை வைத்து பணம் பண்ணுவதும் தவறுதான்.

17 கருத்துகள்:

தமிழ் ஓவியா சொன்னது…

//விஷ்ராந்தி பார்பன முதியோர்களுக்கு என்றே அறிகிறேன். முதியோர்களாக இருந்தாலும் அங்கும் தீட்டுப்படமால் ஆச்சாரத்துடன் தான் இருப்பதற்கான ஏற்பாடும் போலும். சாகிற வரை சாதியைக் கட்டிக் கொண்டு :(

பிற்காலத்தில் அனைத்து சாதி சமூகங்களின் அன்னச் சத்திரங்களை ஓட்டல்கள் ஆகியது போல் இதனைப் பார்த்து பல்வேறு சாதிகளும் தங்களுக்கான சாதிய அடிப்படையில் முதியோர் இல்லங்களை கட்டிக் கொண்டு அதில் பெற்றோர்களை தள்ளிவிட்டாலும் வியப்பொன்றும் இல்லை.//

இப்ப எல்லாம் பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்கள், ஜாதி பார்ப்பதில்லை என்று ஒரு சில சூத்திர முண்டங்களே பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கி வருகின்றனர். அவர்களின் கண்களைத் திறக்குமா இந்தப் பதிவு?.

இந்தமாதிரி விசங்களை பார்ப்பான் ஆரம்பிப்பான் தமிழன் வனைப்பார்த்து காப்பியடித்து கெட்டியாக பிடித்துக் கொள்வான்
எனவே அதைச் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார்களான பார்ப்பனர்களைச் சரிப்படுத்தினாலே தமிழன் சரியாகிவிடுவான் என்று பெரியார் சொல்லுவார்.

கீழ்பாக்கம் மனநோய் மருத்துவனையில் பார்ப்பனர்களுக்கு தனி வார்டு இருந்தது பெரியார் இயக்கம் தோன்றுவதற்கு முன். அதை ஒழித்து அனைவரும் ஒன்று பொதுவான வார்டே போதுமானது தனிவார்டு தேவையில்லை என்று அதை ஒழித்தது பெரியார் இயக்கம்.

பைத்தியத்தில்கூட பார்ப்பனப் பைத்தியம் என்று பிரிவினைப்படுத்திய பார்ப்பனர்கள் என்றுதான் திருந்துவார்களோ?.

அது போல் சேரன்மா தேவி குருகுலத்தில் பார்ப்பனப் பிள்ளைகளுக்கு தனி உணவு , பார்ப்பனரல்லாதவர்களுக்கு தனி உணவு என்று பேதப்படித்திய பார்ப்பனர்களும் பார்ப்பன அடிவருடிகளும் இன்றுவரை நம்மைப் பார்த்து சொல்கிறார்கள் ஜாதி வெறிபிடித்தவர்கள் நாமாம்.

இப்படிப்பட்டவர்களை
மக்கள் முன் அம்பலப்படுத்துவோம்.
நல்லபதிவு தோழர். உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த்தற்காக பாராட்டுக்கள் தோழர்.

நையாண்டி நைனா சொன்னது…

Present Sir.

பரிசல்காரன் சொன்னது…

சாதி குறித்த உங்கள் சாடலை மழிமொழிகிறேன். சில ஜென்மங்கள் என்றுமே திருந்தப் போவதே இல்லை.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//பழம் பழுத்துவிட்டால் மரம் அதனை உரிமை கொண்டாடுவதில்லை, கோழிக் குஞ்சு வளர்ந்துவிட்டால் கோழிகள் அதனை அதன் போக்கில் விட்டுவிடும் என்பதாகவே வெளிநாட்டினரின் இல்ல அமைப்புகள் இருக்கின்றன. //

மரத்தை விட்டு விடுவோம். கோழி என்னசெய்யும் தெரியுமா? தனது குஞ்சை தன்னுடன் சேரவிடாமல் கொத்தி விரட்டும். அடுத்த இனப்பெருக்கத்துக்கு தயாராகிவிடும். வெளிநாட்டில் குழந்தைகள் பேசிக்கொண்டார்களாம் "எங்கம்மாவும் உங்கப்பாவும் நம்ப அம்மா அப்பா" அப்படின்னு.

//இலவச அன்னச் சத்திரங்களை தொழில் முறை ஹோட்டல்களாக மாற்றிய பெருமை 'சோ' கால்ட் முற்பட்ட வகுப்பினருக்கே உண்டு. //

இதுக்கும் சோ தானா? அய்யகோ!(ஐயகோ!)

//ஆங்கில ஆதிக்கத்திற்கு பிறகே இலவச உணவு சத்திரங்கள் மறைய ஆரம்பித்து, வியாபாரமாக நரசூஸ் காஃபியுடன் ஆரிய பவன்கள் தோன்றியது. இன்று எல்லா சமூகத்தினருமே ஓட்டல் தொழில் ஈடு(லாபம்) உள்ளதாக கருதி அதனைச் செய்கின்றனர். //

நான் பள்ளிப் பருவத்தில் இருக்கும் போது எனது தலைமை ஆசிரியர், ஆரியபவனில் ஆனியன் தோசை சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று அடிக்கடி சொல்லுவார். (இந்த ஆசிரியர் தான், இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தைப் பற்றி அப்போது எங்களுக்கு விளக்கிக் கூறி இராஜீவ்-ஜெயவர்த்தனா கலர் படங்கள் போட்ட கையேடுகளை அளித்தார், அப்போதும் நல்ல விடயம் என்றுதான் நம்பினேன்,அவரும் கூட நம்பி இருக்கக் கூடும், பின்னர் தான் இவர்களது களியாட்டம் தெரிந்தது.) எனக்கு அப்போது இந்த சூட்சுமம் எல்லாம் தெரியாது. பின்னாளில் ஐயர் கடை என்று சொல்வதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

பொதுவாக ஆதிக்க சாதியினர் என்றில்லை. அதிகமாக சம்பதிக்கிரவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுவதைப் பார்த்திருக்கிறோம். ஒன்று கவனிக்க நேரமில்லாமல் இருக்கலாம் அல்லது தனக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று நினைத்திருக்கலாம். எப்படி இருந்தாலும், வன்மையாக கண்டிக்கத் தக்க விடயம்.

Bharath சொன்னது…

//விஷ்ராந்தி பார்பன முதியோர்களுக்கு என்றே அறிகிறேன். முதியோர்களாக இருந்தாலும் அங்கும் தீட்டுப்படமால் ஆச்சாரத்துடன் தான் இருப்பதற்கான ஏற்பாடும் போலும். சாகிற வரை சாதியைக் கட்டிக் கொண்டு :(
//

இதற்கு ஆதாரம் இருக்கிறதா?? ஒரு முதியோர் இல்லதித்தின் மீது தேவையில்லாத சாதி அடயாளம் புகுத்துவது கண்டிக்கத்தக்கது.. கலாச்சார மாற்றத்தை(fall out of joint family system) ஜாதி புகுத்தி சொல்வது வருந்ததக்கது..

அரசே சாதிவாரியாக விடுதி நடத்துவதை விட்டுவிட்டு ஒரு சேவை மையத்தை குறை சொல்வது காழ்ப்புணர்ச்சியே..

கோவி.கண்ணன் சொன்னது…

//இதற்கு ஆதாரம் இருக்கிறதா?? ஒரு முதியோர் இல்லதித்தின் மீது தேவையில்லாத சாதி அடயாளம் புகுத்துவது கண்டிக்கத்தக்கது.. ///

முதியோர் இல்லமாவது ஜாதிய அடையாளம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே விருப்பம்.

//கலாச்சார மாற்றத்தை(fall out of joint family system) ஜாதி புகுத்தி சொல்வது வருந்ததக்கது.. //

வருந்துங்கள், அதற்குத்தான் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன்

//அரசே சாதிவாரியாக விடுதி நடத்துவதை விட்டுவிட்டு ஒரு சேவை மையத்தை குறை சொல்வது காழ்ப்புணர்ச்சியே..//

விஷ்ராந்தியில் விடப்படும் முதியவர்களின் சாதிகள் குறித்தும் அவற்றின் விழுக்காடு குறித்தும் சரியான தகவலைச் சொல்லுங்கள், நான் கட்டுரையையே எடுத்துவிடுகிறேன்.

Bharath சொன்னது…

//விஷ்ராந்தியில் விடப்படும் முதியவர்களின் சாதிகள் குறித்தும் அவற்றின் விழுக்காடு குறித்தும் சரியான தகவலைச் சொல்லுங்கள், நான் கட்டுரையையே எடுத்துவிடுகிறேன்.//

என்ன உங்கள் நியாயம்.. Guilty until Proven.. குற்றம் சுமத்துபவர்தான் ஆதாரம் கொடுக்கவேண்டும்.. நீதிமான் கோவி வாழ்க..

ஞானவெட்டியான் சொன்னது…

அன்பு கண்ணன்,

//எதையும் லாப நோக்காகவும் தொழிலாகவும் கொண்டு செல்லும் போது அதனை நல்ல செயல், சேவை என்றெல்லாம் புனிதம் கற்பித்துவிட முடியாது, வெறும் வயிற்றுப்பாட்டிற்கான பிழைப்பு அவ்வளவுதான்.//

ஆயினும் புற்றீசல்போல் பெருகி வரும் "முதியோர் இல்லங்களில் 90 விழுக்காடு பசுத்தோல் பொத்திய புலிகளே. படிப்பது வேதம்; இடிப்பது கோயில். முதியோர் இல்லங்களில் வசிப்போரில் 99 விழுக்காடு சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் நடுவில் உள்ளனர். காசு கொடுத்தும் வயிற்றுக்கு உணவில்லை(ருசி அவ்வளவு!).அவர்களை விரைவில் இரண்டில் ஒன்றுக்கு அனுப்புவதே முதியோர் இல்லங்கள் நடத்துபவர்களின் நோக்கம்.
'எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம்' என்பது அங்கு வேலைபார்ப்பவர்களின் சித்தாந்தம்."

- முதியோர் இல்லத்திலிருந்து தப்பி வந்தவரின் வாக்குமூலம்.

ஞானவெட்டியான்
திண்டுக்கல்

தமிழ் ஓவியா சொன்னது…

//குற்றம் சுமத்துபவர்தான் ஆதாரம் கொடுக்கவேண்டும்.. நீதிமான் கோவி வாழ்க..//

கோவி. கண்ணன் அவருக்குகிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை பதிவேற்றி யிருக்கிறார். தகவக் தவறானது என்று சொன்னால் கட்டுரையை எடுத்துவிடுகிரேன் என்ரு சொல்லுகிறார்.

இதுதானே நியாயம்.

பாரத் மறுக்கிறார். மறுப்பதற்கான ஆதாரத்தைக் காண்பிப்பதுதானே நியாயம்?
அதைவிட்டுவிட்டு விளக்கெண்ணை (எங்கள் ஊர் பழமொழி) நியாயம் பேசுவது சரியா?

////அரசே சாதிவாரியாக விடுதி நடத்துவதை விட்டுவிட்டு ஒரு சேவை மையத்தை குறை சொல்வது காழ்ப்புணர்ச்சியே..//

அரசு ஜாதியை வளர்ப்பதற்காக விடுதி நடத்தவில்லை. ஜாதிவாரியாக விடுதி என்பதே தவறு.


பிற்படுத்தவட்டவர் விடுதி, தாழ்த்தப்பட்டவர் விடுதி என்று நடத்துகிறது.

இதுநடத்தக் காரணமாக இருந்ததுகூட ஜாதிவெறி படித்த பார்ப்பனர்களால்தான்.
பார்ப்பனரல்லாதவர்கலை படிக்கக் கூடாது என்ர மனுதர்மபுத்தியின் விளைவாக பார்ப்பனர்கள் கல்வியை மறுத்துவந்தனர். இந்தச்சூழலில் ஆங்கிலேயர்களால் கல்வி கற்பிக்கப்பட்ட பொழுது பார்ப்பனரல்லாதவர்கள் படிக்க வந்த போது தங்குவதற்கு இடம் கொடுக்க மறுத்ததின் விளைவே டாக்டர் சி.நடேசன் போன்றோரால் "திராவிடர் இல்லங்கள்" சொந்தச் செலவில் உருவாக்கப்பட்டு அனைத்துச் ஜாதி மாணவர்களும் தங்கிப் படிக்க வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. பின்னாலில்
அதுவே பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளாக உருவாக்கப்பட்டது.
இந்த விடுதிகளில் குறிப்பிட்ட ஒரு ஜாதி மாணவர்கள் மட்டும் படிக்கவில்லை.
அணைத்து பிற்படுத்தப்பட்ட மானவர்களும் சேர்ந்து படித்து வருகின்றனர்.

பார்ப்பனரல்லாத மாணவர்கள் படிப்பது பொறுக்காமல் ஜாதி காப்பாற்றுவதாக குறை சொல்லும் பாரத்துக்கள் ஜாதி ஒழிக்க என்ன செய்தார்கள்?

காஞ்சி சங்கராச்சாரி நடத்தும் கல்லூரிகளில் பார்ப்பனர் மாணவர்களுக்கு தனி விடுதியும், மற்ற மாணவர்களுக்கு தனி விடுதியும்
கடைபிடிக்கப்பட்ட போது அனைத்துக் கட்சியினரும் கண்டித்து போராட்டம் நடத்திய போது இந்த பாராத்துக்கள் ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டார்களா?


//ஒரு சேவை மையத்தை குறை சொல்வது காழ்ப்புணர்ச்சியே..

சேவை மையம் என்பது அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட ஜாதிக்கு என்று இருக்கக் கூடாது. அதற்கு பெயர் சேவை மையம் அல்ல. ஜாதி மையம்.

தமிழ் ஓவியா சொன்னது…

ஜாதி அடுக்குமுறை உருவாகியது என்பதைவிட்ட உருவாக்கியதின் நோக்கம் பற்றி அறிந்து கொண்டால் ஜாதிக் கலவரம் ஏற்படுவது ஏன்? அதற்கு மூல காரணமாக இருப்பவர்கள் யார்? என்பது புலப்படும்.

ஊண்றிப்படித்து உண்மையை அறிக.

ஜாதி அடுக்குமுறையின் நோக்கம் என்ன?



நம் நாட்டின் சமூகக் கொடுமைகளிலேயே மிகவும் கோரமானது, அக்கிரமமானது வர்ணாசிரம - ஜாதி அடுக்குமுறையாகும்!

பிறவி அடிப்படையில் ஜாதிகளைப் பிரித்த சூழ்ச்சியைவிட அதனை ஒன்றன்பின் ஒன்று என்று கீழான அடுக்குகளாக்கியது தான் வெறுக்கத்தகுந்த கொடுமையாகும்!

பார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறை

மேல்ஜாதி என்று ஆக்கிக் கொண்ட ஜாதியினரான பார்ப்பனர் அதற்கு அடுத்து கீழ் என்று ஏணிப் படிக்கட்டுகளைப் போல ஜாதிமுறை அடுக்கு பேத முறையாக ஆக்கியதன் உள்நோக்கம் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டே இருப்பதோடு, மிகவும் கீழான படிக்கட்டில் நிற்பவருக்குத்தான் ஆத்திரம் பொங்கும் அதிகமாக என்றாலும், அது மேல்தட்டில் உள்ள பார்ப்பனர்களோடு மோதலாக வெடிக்கக் கூடாது என்பதற்காகவே 1, 2, 3, 4 என்று பிரித்து 5 என்ற பஞ்சமர்களை - தாழ்த்தப்பட்ட மக்களை அய்ந்தாம் ஜாதியாக்கி விட்டதோடு, பெண்களை அதற்கும் கீழே 6 ஆவது இடத்தில் மனுதர்மம் வகுத்தது. சமுதாயத்தில் பேத நிலை பெரு நிலையாகவே ஆனதற்கு இதுவே அடிப்படையாகும்.

இதைத்தான் அண்ணல் அம்பேத்கர் (Graded inequality) அடுக்குமுறை பேதமுறை - ஜாதி முறை என்றார்!

இதில் 5 ஆம் ஜாதி என்ற தாழ்த்தப்பட்ட நமது ஆதிதிராவிட சகோதரர்களைக்கூட ஒரு பிரிவாக இருக்கவிடாமல், பறையர், பள்ளர், அருந்ததியினர் (சக்கிலியர்) என்று பிரித்து அவர்களுக்குள்ளேகூட ஒருவர் இன்னொருவரோடு இணையவிடாத பிரித்தாண்ட சூழ்ச்சியை ஆரியம் செய்தது!

வர்க்கப் பிரிவில் இப்படி அடுக்குமுறை அமைப்பு கிடையாது. முதலாளி - தொழிலாளி, ஆண்டான் - அடிமை என்ற அளவில் மட்டுமே - வருணப் பிரிவில் மட்டும் இந்தப் பெருங்கொடுமை!

இந்த ஒடுக்கப்பட்ட சகோதரர்கள்தான் அதிகமான உழைப்பைச் சமூகத்திற்குத் தந்துவிட்டு, தாங்கள் குந்தக் குடிசையின்றி, குடிக்கக் கூழின்றி, படுக்கப் பாயின்றி, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களாக மண் புழுக்களைவிட கேவலமாக, பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர் நமது பாரத புண்ணிய பூமியில்

----------- தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையிலிருந்து "விடுதலை" 24-11-2008.

இப்போது புரிகிறாதா? பார்ப்பனர்களின் நயவஞ்சகமான நரித்தனம்.
தோழர்களே எப்போதும் பார்ப்பனர்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள்.

நன்றி தோழர்.

மங்களூர் சிவா சொன்னது…

நல்ல பதிவு.

நாமக்கல் சிபி சொன்னது…

நல்ல பதிவு!

தமிழ் ஓவியா பகிர்ந்த தகவல்களுக்கும் நன்றி!

தமிழ் ஓவியா சொன்னது…

நன்றி!
நாமக்கல் சிபி.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//விஷ்ராந்தி பார்பன முதியோர்களுக்கு என்றே அறிகிறேன்.//
தவறான தகவல்...

நடத்துபவர்..பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவரே தவிர..அனைத்து சாதியினரும் அங்கே உள்ளனர்.

தமிழ் ஓவியா சொன்னது…

வாங்க டி.வி. ஆர். எங்கே உங்களைக் காணோமேன்னு நினைச்சேன். வந்துவிட்டீர்கள்.

நடத்துபவர் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர் என்பதையாவது சுட்டிக் காட்டியமைக்கு (ஒத்துக் கொண்டதற்கு)மிக்க நன்றி.

தருமி சொன்னது…

http://dharumi.blogspot.com/2006/12/192-for-eyes-of-senior-citizens-only.html

.........just an advt.

அடடா .. ஞானவெட்டியான் சொன்னதைப் பார்த்ததும் ரொம்ப சோகமா போச்சே.. நல்ல இடம் இருக்காதோன்னு ஒரு வருத்தம்.

Bharath சொன்னது…

Mr.தமிழ் ஓவியா,

எங்கடா பார்ப்பன எதிர்ப்ப்பு/ஆதரவு பதிவு வருதுன்னு பார்த்து அங்க போய் ஓரு std. template comment போடும் உங்களின் சேவை தொடரட்டும். ஓண்ணா நீ அந்தப்பக்கம் இல்லாட்டி இந்தப்பக்கம் என்ற conceptல் எனக்கு நம்பிக்கை கிடையாது.. so i have no business with u.. BTW thanks for branding me!!!

ஓரு கலாச்சார மாறுதலை சாதி புகுத்தி பார்ப்பது மிகத் தவறு. தருமி சார் சொல்வது போல் இது அவரவர் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். இதில் சாதியை புகுத்தி குளிர் காய்வது தான் சகிக்க முடியவில்லை..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்